கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாநிலங்களவை எம்.பி பதவியை கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா செய்தனர்...


மாநிலங்களவை எம்.பி பதவியிலிருந்து கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா. சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர்.




தமிழகத்தில் 9 IPS அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவு...

 


கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை - அரசாணை வெளியீடு....



 கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை - அரசாணை வெளியீடு - அரசாணை (நிலை) எண்:231  நாள்: 07.05.2021 - தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் - ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து வகையான கோவிட்-19 தொற்று சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்க ஆணை வெளியிடப்படுகிறது...


>>> அரசாணை (நிலை) எண்:231,  நாள்: 07-05-2021...



பொறியியல் மாணவர்களுக்கு மறு தேர்வு - தமிழக அரசு...

 💥பொறியியல் மாணவர்களுக்கு மறு தேர்வு.


💥கடந்த நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டருக்கு மறு தேர்வு.


💥முறைகேடுகள் நடைபெற்றதன் காரணமாக மறு தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவிப்பு.


செய்தி வெளியீடு எண் : 028, நாள் : 10.05.2021 


செய்திக் குறிப்பு 


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நவம்பர் | டிசம்பர் 2020 க்குண்டான பருவத் தேர்வுகள் ஒழுங்கு நிகழ்நிலைத் தேர்வாக ( Proctored Online Examination ) 2021 பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் மாணாக்கர்கள் தங்களுக்கு அதிக முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அதனால் தங்களுக்கு அதிக சிரமங்கள் ஏற்பட்டதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது கவனத்துக்கு கொண்டு வந்தனர் . இதில் மாணாக்கர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களது வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத்தைக் கருதியும் , நன்குப் படிக்கும் சில மாணாக்கர்கள் தங்களுக்கு மதிப்பெண்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக தெரிவித்ததையும் கருத்தில் கொண்டு , மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் , மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் , உயர்கல்வித்துறைச் செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாணாக்கர்களின் நலன் கருதி கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்துள்ளார்கள் . 




1 பிப்ரவரி 2021 - இல் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதைக் கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும் . 


2. இம்மாணக்கர்கள் இத்தேர்வுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை . 


3 . பிப்ரவரி மாதம் நடந்த தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணாக்கர்கள் விரும்பினால் அவர்களும் இத்தேர்வினை எழுதலாம் . 


4 . தேர்வு 3 மணிநேரம் நிகழ்நிலைத் தேர்வாக ( Online Examination ) நடைபெறும் . பல்கலைக்கழகம் கொரோனாவிற்கு முன்பு பின்பற்றிய பழைய வினாத்தாட்கள் முறையே கடைபிடிக்கப்படும் . இத்தேர்வுகள் , தமிழகத்திலுள்ள மற்ற பல்கலைக்கழகங்கள் நடத்தியது போலவே நடத்தப்படும் .


 5 . எதிர்வரும் ஏப்ரல் / மே 2021 பருவநிலைத் தேர்வுகளும் மேற்கண்ட முறையிலேயே நடத்தப்படும் . பிற பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் தற்போது ஊரடங்குக் காரணமாக் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் மே 25 முதல் தொடர்ந்து நடத்தப்படும் . அதற்கான அறிவுப்புகளை அந்தந்தப் பல்கலைக்கழகங்களே வெளியிடும் . மாணாக்கர்கள் ஊரடங்குக் காலத்தைப் பயன்படுத்தி தேர்வுக்குத் தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9






கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தானியங்கி முக கவசம் வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது...

 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தானியங்கி முக கவசம் வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது...



>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...

நீட் தேர்வில் சமூக, பொருளாதார நிலையில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களால் மட்டுமே வெற்றி பெற முடியும் - தமிழ்நாடு நிதியமைச்சர் மாண்புமிகு பழனிவேல் தியாகராஜன் அவர்களின் பேட்டி...

நீட் தேர்வின் பிரச்சனைகள் குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் மாண்புமிகு பழனிவேல் தியாகராஜன் அவர்களின் பேட்டி...



>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...

மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teacher stabbed to death in government school near Thanjavur - what is the reason..?

தஞ்சாவூர் : அரசுப் பள்ளியில் ஆசிரியை குத்திக் கொலை - காரணம் என்ன..? மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை ரமணி என்பவர் கத்தியால் குத்திக்...