கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மருத்துவர் மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் - அறிக்கை சமர்ப்பிக்க நீதியரசர் ஏ.கே இராஜன் தலைமையில் குழு - தமிழக அரசு உத்தரவு...


Committee for analysing the impact of the NEET

 தமிழ்நாட்டில் மருத்துவர் மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே இராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு...


>>> செய்தி வெளியீடு எண்: 256, நாள்: 10-06-2021...


கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் உள்ள நகைக்கடன் விரைவில் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு...



 கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் உள்ள நகைக்கடன் விரைவில் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு...


கடந்த  ஆட்சியில் விவசாயிகள் அல்லாத நபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்திருப்பதாக நிறைய புகார்கள் வந்து கொண்டிருப்பதாகவும், அது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.


தென் மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குதல், உர விநியோகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார்.


இந்த கூட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கூட்டுறவுத்துறை பதிவாளர் சுப்ரமணியன், ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் தென் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


பொதுமக்களுக்கு கரோனா நிவாரண நிதி, மளிகைப் பொருட்கள் தொகுப்பு ஆகியவை தடையின்றி விரைவாக சென்றடைவதற்கு தேவையான ஆலோசனைகளை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.


ஆய்வுக்குகூட்டத்திற்கு பிறகு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:


விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன்கள் வழங்க ரூ.11,500 கோடிக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு குறைபாடு இல்லாமல் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள 2.10 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்குவது தொடர்பாகவும் விவாதித்தோம். இந்த அரசு எல்லா துறைகளில் சிறப்பாக செயல்படுகிறது.


 கரோனாவை கட்டுப்படுத்துவதோடு இந்த நெருக்கடியான காலத்திலும் ஏழை எளிய மக்களுக்கு முழுமையாக அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறோம். மழையால் சேதமடையும் விளை பொருட்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு உடனே உரிய நிவாரணம் வழங்கப்படும்.


கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும். கடந்த ஆட்சியில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு தள்ளுபடி கொடுத்து உள்ளதாக நிறைய புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து ஆய்வு செய்து, தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


கூட்டுறவுப் பணிகளில் சேர்வதற்கான கடந்த ஆட்சியில் நேர்காணல் முடிந்தவர்கள் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும்.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பள்ளி செயல்பாடுகள் தொடங்குதல் தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்...



 பள்ளிக்கல்வி-அரசு/அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியளார்கள் "அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 14.06.2021 முதல் பள்ளிக்கு வருகை புரிதல் - சார்ந்து...


பார்வை: 

1. அரசாணை நிலை எண் 613, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நாள் : 08.06.2021


2. சென்னை தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் 344622/பிடி 1/இ 1/2021 நாள் : 08.06.2021 


பார்வையில் கண்ட அரசனின் படி, நாடு முழுவதும் கொரனோ பெருந்தொற்று காரணமாக மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது


இந்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது, உயர்கல்வி பயிலுவதற்க்கான சான்றிதழகள் வழங்குவது சார்ந்த பணிகள் நடைபெறவுள்ளதாலும் மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளதாலும் மற்றும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள் வழங்க வேண்டி உள்ளதாலும்,பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்வது சார்ந்தும் மற்றும் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது சார்ந்தும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை) பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) பின்பற்றி 14.06.2021 முதல் பணிக்கு வருகை புரிய வேண்டும் . இதன் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


எனவே மேற்கண்ட அறிவுரைகளை தவறாது பின்பற்றிடுமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள்வட்டராக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


முதன்மைக்கல்வி அலுவலர் திருப்பூர்

_______

சேலம் முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்...



>>> தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அனைத்துப்பள்ளிகளிலும் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் 14.06.2021 முதல் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு...


பெற்றோருக்கு கொரானா பாதிப்பு இருந்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 15 நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு...

 பெற்றோருக்கு கொரானா பாதிப்பு இருந்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 15 நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு...




>>> கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுப்புகள் குறித்த தெளிவுரைகள் - மத்திய பணியாளர், பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை வெளியீடு - நாள்: 07.06.2021...


தடுப்பூசி சான்றிதழில் பிழை இருந்தால் COWIN APPல் திருத்தம் செய்யலாம் - அரசு அறிவிப்பு...

 


ஆடம்பர ஏற்பாடுகள் வேண்டாம் - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை...

 இரண்டு காய்கறிகளுடன் எளிமையான உணவு போதும், ஆடம்பர ஏற்பாடுகள் வேண்டாம்

- அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு வேண்டுகோள்...




5 மாநகராட்சி கமிஷனர்கள் உள்ளிட்ட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்...

 


5 மாநகராட்சி கமிஷனர்கள் உள்ளிட்ட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்


மதுரை, கோவை, சேலம், திருப்பூர், திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.


இது தொடர்பாக தலைமைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:


மதுரை மாநகராட்சி கமிஷனராக கே.பி.கார்த்திகேயனும்


சேலம் மாநகராட்சி கமிஷனராக கிறிஸ்துராஜூம்


திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனராக விஷ்ணு சந்திரனும்


கோவை மாநகராட்சி கமிஷனராக ராஜகோபால் சுங்கராவும்


திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக கிராந்திகுமாரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


மேலும், சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்(பணிகள்) ஆக - பிரசாந்த்தும்


சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்(சுகாதாரம்) ஆக நர்னவாரே மணிஷ் சங்கராவும்


சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்(கல்வி) ஆக - டி.சினேகாவும் நியமிக்கப்படுகின்றனர்.


>>> Click here to Download G.O.Rt.No.2333, Dated: 09-06-2021...


>>> Click here to Download G.O.Rt.No.2334, Dated: 09-06-2021...







இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Sastra University B.Ed., degree Eligible to Incentive : G.O. Ms. No: 112, DEE Proceedings & High Court Judgment

    தஞ்சை  சாஸ்த்ரா பல்கலைக்கழக பி.எட்., பட்டம் ஊக்க ஊதிய உயர்விற்கு செல்லும் என்கிற அரசாணை எண் : 112,  தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்...