கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் முதலமைச்சர் உரை...

 செய்தி வெளியீடு எண்:274, நாள்: 15.06.2021


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (15.6.2021) தலைமைச் செயலகத்தில், புதியதாக பொறுப்பேற்கவுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 


இந்தக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கொரோனா பெருந்தொற்றுப் பரவல் என்ற நெருக்கடியான காலக்கட்டத்தில், நோய்த் தொற்று பரவாமல் தடுத்திட மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நோய்த் தொற்றுப் பரவல் எண்ணிக்கையை மேலும் குறைத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். 


அரசு சார்பாக மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை ஏராளமாக உருவாக்கி உள்ளதையும், படுக்கைகள் இல்லை என்ற புகாருக்கு முற்றுப்புள்ளி வைத்தும், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை மாறி உள்ளதையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுத்துக் கூறினார்கள். மேலும், ஏராளமான தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்கி உள்ளதையும், ஆக்சிஜனை உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் பெற்றுத் தட்டுப்பாடு இல்லாத நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளதையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது உரையில் சுட்டிக்காட்டினார்கள். 


மேலும் வேலைவாய்ப்பில் , கல்வியில் அனைவருக்கும் அனைத்தும் சமூகப் பொறுப்புகளில் ஆட்சித் தலைவர்கள் கிடைக்க மாவட்ட அதிகாரத்தை, பதவியைப் பயன்படுத்தித் தங்களது கடமையை ஆற்ற வேண்டும் என்று தெரிவித்தார்கள். 


வளரும் வாய்ப்புகள் வளமான தமிழ்நாடு! 

மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி! 

குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்! 

அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்! 

எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்! 

 உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்! 

அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்!

 


ஆகிய 7 இலக்குகளைப் பத்தாண்டுகாலத்தில் எட்டிட மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஒத்துழைப்பு அரசுக்கு அவசியம் என்று தெரிவித்தார்கள். 


பொதுவிநியோகத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்திட வேண்டும் என்றும், அனைவருக்கும் குடும்ப அட்டைகள் கிடைத்திடவும், போலி அட்டைகளை ஒழித்திடவும், வழங்கப்படும் உணவுப் பொருட்கள் சுத்தமானதாக தரமானதாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். 


மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளைக் கவனச்சிதறல்கள் இல்லாமல் நடைமுறைப்படுத்திடவும், அரசின் இலக்குகளைத் தங்களது இலக்குகளாகக் கொள்ள வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். 


நகர்ப்புற வளர்ச்சியும் ஊரக வளர்ச்சியும்தான் நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளங்கள் என்று தெரிவித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், காலிப் பணியிடங்களைத் தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பிடவும், மாநில அரசும் ஒன்றிய அரசும் ஒதுக்கும் நிதியை முறையாகச் செலவு செய்து திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். 


மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியவர்களோடு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இணைந்து பணியாற்றி, சிறப்பான ஆட்சியை மக்களுக்கு அளித்து, அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். 


தனது அரசு உத்தரவு போடும் அரசு மட்டுமல்ல, மாவட்ட ஆட்சியர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் காது கொடுத்துக் கேட்கும் அரசு என்றும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி வளம் மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள். 


இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் திரு. பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை...


செய்தி வெளியீடு எண்:274, நாள்: 15.06.2021...




இன்றைய (16-06-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூன் 16, 2021



 

மனதில் பழைய நினைவுகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு



அஸ்வினி : மாற்றங்கள் ஏற்படும்.


பரணி : பொறுமை வேண்டும்.


கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூன் 16, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வேலையாட்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : ஆதரவான நாள்.


ரோகிணி : தாமதங்கள் குறையும்.


மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஜூன் 16, 2021



பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடன்பிறந்தவர்களின் மூலம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய வேலை மற்றும் அதை சார்ந்த முயற்சிகளுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும்.


திருவாதிரை : ஒற்றுமை அதிகரிக்கும்.


புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




கடகம்

ஜூன் 16, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வாகனம் தொடர்பான பயணங்களில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சில விரயங்கள் நேரிடும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.


பூசம் : முன்னேற்றமான நாள்.


ஆயில்யம் : விரயங்கள் நேரிடும்.

---------------------------------------




சிம்மம்

ஜூன் 16, 2021



வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த இடமாற்றங்கள் சிலருக்கு சாதகமாக அமையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். முயற்சிக்கான பலன்களும், அதற்கான அங்கீகாரமும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மகம் : இடமாற்றங்கள் உண்டாகும்.


பூரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


உத்திரம் : முயற்சிகள் ஈடேறும்.

---------------------------------------




கன்னி

ஜூன் 16, 2021



உறவினர்களின் வழியில் கிடைக்கும் சுபச்செய்திகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.


அஸ்தம் : நிதானம் வேண்டும்.


சித்திரை : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




துலாம்

ஜூன் 16, 2021



மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் தனவரவுகளும், ஆதரவும் மேம்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தன, தான்ய விருத்திக்கான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



சித்திரை : வெற்றி கிடைக்கும்.


சுவாதி : தனவரவுகள் மேம்படும்.


விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூன் 16, 2021



மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



விசாகம் : மாற்றங்கள் ஏற்படும்.


அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.


கேட்டை : பொறுமை வேண்டும்.

---------------------------------------




தனுசு

ஜூன் 16, 2021



பெரிய மனிதர்களின் அறிமுகத்தின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்களும், புதுவிதமான அனுபவங்களும் உண்டாகும். குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மூலம் : அறிமுகம் உண்டாகும்.


பூராடம் : அனுபவம் ஏற்படும்.


உத்திராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மகரம்

ஜூன் 16, 2021



குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில செய்திகளின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். எந்தவொரு செயலிலும் விவேகத்துடன் செயல்பட்டு முடிவு எடுப்பது நன்மையளிக்கும். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின்பே சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திராடம் : விவாதங்களை தவிர்க்கவும்.


திருவோணம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


அவிட்டம் : விவேகம் வேண்டும்.

---------------------------------------




கும்பம்

ஜூன் 16, 2021



தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



அவிட்டம் : லாபம் அதிகரிக்கும்.


சதயம் : திறமைகள் வெளிப்படும்.


பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




மீனம்

ஜூன் 16, 2021



உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் பற்றிய தன்மைகளை அறிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உங்களின் மீது இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.


உத்திரட்டாதி : புரிதல் உண்டாகும்.


ரேவதி : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------



EMIS Portalல் தேர்ச்சி விவரங்களை உள்ளீடு செய்தல் - திண்டுக்கல் மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

 EMIS Portalல் தேர்ச்சி விவரங்களை உள்ளீடு செய்தல் - திண்டுக்கல் மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...



பெருந்தொற்று குறையாத காரணத்தினால் பணியாளர்களை பள்ளிக்கு வர வற்புறுத்தவேண்டாம் - மாவட்டக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை...

 பெருந்தொற்று குறையாத காரணத்தினால் பணியாளர்களை பள்ளிக்கு வர வற்புறுத்தவேண்டாம் - மாவட்டக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை...


தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரானா பெருந்தொற்று குறையாத காரணத்தினால் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கல்வி மாவட்டத்திற்குட்டப்பட்ட அனைத்து அரசு , அரசு உதவிபெறும் , சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் அரசின் வழிக்காட்டுதல் நெறிமுறைகள் வரும் வரை மாணவர் சேர்க்கை மேற்கொள்ளவேண்டாம் எனவும் , பணியாளர்களை பள்ளிக்கு வர வற்புறுத்தவேண்டாம் எனவும் அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் முதல்வர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


- மாவட்டக்கல்வி அலுவலர், கும்பகோணம்




தமிழ்நாட்டில் மேலும் 39 இ.ஆ.ப. அலுவலர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு...

 


தமிழ்நாட்டில் மேலும் 39 IAS அலுவலர்களைப் பணியிட மாற்றம் செய்து  தமிழ்நாடு அரசு உத்தரவு...


மனித உரிமை ஆணைய செயலாளராக விஜயகார்த்திகேயன் நியமனம்.


பதிவுத்துறை ஐ.ஜியாக இருந்த சங்கர் காதி கைவினைப்பொருள் ஆணைய சி.இ.ஓ.வாக நியமனம், நாமக்கல் முன்னாள் ஆட்சியர் மேக்ராஜ் நகராட்சி நிர்வாகத்துறை இணை செயலாளராக நியமனம்.


கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநராக டி.பி.ராஜேஷ், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை இணைச்செயலாளராக எஸ்.பழனிசாமி, அறிவியல் நகர துணைத்தலைவராக மலர்விழி நியமனம்.


எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநராக ஹரிஹரன், நிதித்துறை இணை செயலாள்ராக அருண் சுந்தர் தயாளன், பட்டுப்புழு வளர்ச்சி இயக்குநராக சாந்தி நியமனம்.


>>> Click here to Download G.O.Rt.No.:2396, Dated: 14-06-2021...


2020-2021ஆம் நிதியாண்டின் ஆசிரியர் / பொது சேமநல நிதி கணக்கீட்டு தாள் (TPF / GPF Account Slip ) வெளியீடு - சந்தாதாரர்கள் அலைபேசி எண்ணை இணைக்க வேண்டுகோள்...



 2020-2021ஆம் நிதியாண்டின் ஆசிரியர் / பொது சேமநல நிதி கணக்கீட்டு தாள் (TPF / GPF Account Slip ) வெளியீடு - சந்தாதாரர்கள் அலைபேசி எண்ணை (Cell Number) இணைக்க வேண்டுகோள்...


TPF / GPF Account Slip Download Procedure...


2020-2021ஆம் நிதியாண்டின் ஆசிரியர் சேமநல நிதி கணக்கீட்டு தாள் (TPF account slip )/ பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தற்போது வெளியாகி உள்ளது.


கணக்கீட்டுத்தாள் பதிவிறக்கம் செய்ய agae.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தங்களது GPF/TPF எண் மற்றும் suffix, மற்றும் கடவுச்சொல்லாக தங்களது பிறந்த தேதியை (Date of birth) உள்ளீடு செய்தால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு நான்கு இலக்க OTP  எண் வரும். அதனை உள்ளீடு செய்தால் கணக்கீட்டு தாளை பதிவிறக்கம் (download) செய்யலாம்.


>>> Click here to Download Sr. Deputy Accountant General (Funds) Letter...


FM 1 / 1 / AAS / 2021-2022 Dated: 14/06/2021

WEBSITE RELEASE

Annual Accounts Statement for the year 2020-2021 in respect of AIS Officers (IAS/IPS/IFS) borne on Tamil Nadu cadre (AISPF), Tamil Nadu State Govt. Employees(GPF), Tamil Nadu Panchayat Union and Municipal Elementary and Middle School, High and  Higher Secondary School Teachers (TPF/GPF) and the Teaching and non-Teaching Staff of  Chennai and Madurai Corporation Schools (GPF / MTPF) have been uploaded. The Officers / Subscribers can download their account slip as they view the Account status.

For any discrepancies / missing debits / missing credits in the Account Slip or any , grievance the Officers / Subscribers can contact AG office through the following modes of 

COMMUNICATION:

Telephone: 1. 044-24324503 (for AIS Officers)

 2. 044-24324647 (for GPF/TPF Subscribers) 

 

E-mail : aggpf.tn@nic.in

Postal address: Sr.Deputy Accountant General (Funds) 

 O/o the Accountant General (A&E),

 361, Anna Salai, Teynampet, Chennai 600 018.


HELP US TO HELP YOU 

The AIS Officers / Subscribers are requested to update  their mobile number in this office website for receiving the  following information.

❖Monthly SMS on balance / credits / debit in AISPF /  GPF/ TPF account

❖Quarterly SMS on missing credits in AISPF / GPF / 

TPF account

❖Reminder SMS for furnishing the details for missing credits

❖SMS on uploading of Annual Account Statement in 

this office website

❖Acknowledgement of receipt of final withdrawal 

application

❖Information regarding despatch of final withdrawal 

authorization and facility to download the subscriber 

intimation

 

 Sr. Deputy Accountant General (Funds)


வருங்கால வைப்புநிதி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பணம் எடுக்க முடியாது: புதிய நடைமுறை இம்மாதம் முதல் அமல்...

 


ஊழியர்கள் தங்களது வருங்கால வைப்புநிதி கணக்குடன், ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும். இல்லையெனில் பணம் எடுக்க முடியாது. இந்த புதிய நடைமுறை இம்மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து வருங்கால வைப்புநிதி அதிகாரிகள் கூறியதாவது: கரோனா நோய் பரவல் காரணமாக பொதுமக்கள் வருமானமின்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


இதனால், நிதிச் சிக்கலில் தவிக்கும் நபர்கள், தங்களது வருங்கால வைப்புநிதி கணக்கில் இருந்து ஒரு தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதன்படி, தற்போது பி.எஃப். கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில், சமூகப் பாதுகாப்புக் குறியீடு 2020 சட்டத்தின்142-வது பிரிவில், அண்மையில்ஒரு புதிய விதி கொண்டுவரப்பட்டது. இதன்படி, ஊழியர்களின் பி.எஃப். கணக்குடன் ஆதார்எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இந்த இணைப்பை மேற்கொள்ளவில்லை எனில், ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிறுவனத்தின் சார்பில் செலுத்தப்படும் தொகை, இந்த மாதம் முதல் பி.எஃப். கணக்கில் சேராது. இதனால், ஊழியர்களின் கணக்கில் நிறுவனம் சார்பில், அவர்களது பங்குத் தொகையை பி.எஃப். கணக்கில் சேர்க்க இயலாத நிலை ஏற்படும். அத்துடன், பி.எஃப். கணக்கில் இருந்து கரோனா முன் தொகையும் எடுக்க இயலாது.


எனவே, இதுவரை பி.எஃப். கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள், உடனடியாக www.epfindia.gov.in என்ற இணையதளத்தில் ஆதார் எண்ணை, ஆன்லைன் மூலமாகவே இணைத்து விடலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...