கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உங்கள் ஆதார் அட்டையின் தகவல்கள் மூலம் எத்தனை சிம் கார்டுகள் (SIM Card's) வாங்கப்பட்டுள்ளன என அறிவது எப்படி? தேவையற்ற சிம் கார்டுகள் (SIM Card's) Block செய்வது எப்படி?

 


How to know how many SIM cards have been purchased with your Aadhar card information? How To Block Unwanted SIM Card's?


ஒரு நபரின் ஆதார் அட்டையை வைத்து எத்தனை சிம் கார்டுகள் பெற முடியும் மற்றும் நமது அனுமதி இன்றி ஏதேனும் சிம்கள் வாங்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளும் முறையை பற்றி காண்போம்.


26.09.2018 தேதியிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, சந்தாதாரர்களுக்கு புதிய மொபைல் இணைப்புகளை வழங்குவதற்கும், ஏற்கனவே உள்ள மொபைல் சந்தாதாரர்களை மீண்டும் சரிபார்ப்பதற்கும் ஆதார் அடிப்படையிலான E-KYC சேவை UIDAI ஐப் பயன்படுத்துவதை DoT நிறுத்தியுள்ளது. இருப்பினும் உச்சநீதிமன்றமே மீண்டும் தானாக முன்வந்து இந்த முறையை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.


>>> உங்கள் ஆதார் அட்டையின் தகவல்கள் மூலம் எத்தனை சிம் கார்டுகள் (SIM Card's) வாங்கப்பட்டுள்ளன என அறிவது எப்படி? தேவையற்ற சிம் கார்டுகள் (SIM Card's) Block செய்வது எப்படி?



தமிழ்நாட்டில் ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிப்பு - தொற்று பரவல் குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி - வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து உத்தரவு...

 


தமிழ்நாட்டில் ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிப்பு - தொற்று பரவல் குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி  உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொது  போக்குவரத்துக்கு அனுமதி - வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து உத்தரவு...


செய்தி வெளியீடு எண்: 325, நாள்: 25-06-2021..


 தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.


பள்ளி,  கல்லூரிகளில் நிர்வாகப் பணிகள் மட்டும் மேற்கொள்ளலாம்.


23 மாவட்டங்களில் போக்குவரத்துக்கு அனுமதி.


4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி.


அனைத்து மாவட்ட கடற்கடைகளும் காலை 5 மணி முதல் 9 மணி வரை திறப்பு.


>>> செய்தி வெளியீடு எண்: 325, நாள்: 25-06-2021...


வெளிநாடு செல்பவர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் தகவலை இணைப்பதற்கான வழிமுறைகள் (Guidelines to Link Passport to Covid Vaccination Certificate for Foreign Traveller's)...


Guidelines to Link Passport to Covid Vaccination Certificate for Foreign Traveller's...


>>> வெளிநாடு செல்பவர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் தகவலை இணைப்பதற்கான   வழிமுறைகள்...



பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் தொடர்புடைய கட்டமைப்புகளில் மழையுடன் கூடிய மின்னல் மற்றும் இடி தாக்குவதில் இருந்து பாதுகாத்திட விழிப்புணர்வு ஏற்படுத்துதல் - விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு...


 பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் தொடர்புடைய கட்டமைப்புகளில் மழையுடன் கூடிய மின்னல் மற்றும் இடி தாக்குவதில் இருந்து பாதுகாத்திட விழிப்புணர்வு ஏற்படுத்துதல் - விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 21979/ எம்/ இ1/2021, 18-06-2021...


வழிகாட்டுதல்கள் :


1. உயரம் அதிகமுள்ள அல்லது தனியாக உள்ள பள்ளி கட்டடங்கள் மற்றும் தொடர்புடைய கட்டடமைப்புகளில் மின்னல் மற்றும் இடி தாங்கியின் தேவை உள்ளதை ஆய்வு செய்தல் வேண்டும்.


2. கட்டட வடிவமைப்பாளர் ( architect ) , கட்டட அமைப்பாளர் ( the builder ) , மின்னல் மற்றும் இடி தாங்கி பொறியாளர் ( the lightning protective system engineer ) , மற்றும் சார்ந்த மின்னல் மற்றும் இடி தாங்கி அமைத்திடும் அதிகாரிகளுக்கிடையே கட்டட வடிவமைப்புகளின் போது தொடர்பு வைத்திருத்தல் வேண்டும்.


3. பள்ளிகளை பொருத்தமட்டில் பொருட்கள் வைப்பறை ( Stores Room ) மற்றும் வெடி பொருட்கள் பயன்படுத்தும் இடங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகள் இவற்றில் அதிக பாதிப்பிற்குள்ளாகும் டங்களை ஆய்வு செய்தல் வேண்டும்.


4. மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழையின் போது அதிகமான நபர்கள் கூடும் இடங்கள் மற்றும் அடிக்கடி மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை வரும் இடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

 

5. பள்ளி வேலை நேரங்களில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல் வேண்டும் .


6 , பள்ளி வளாகத்தில் மின்னல் மற்றும் இடியின் காரணமாக சேதம் அடைந்த பள்ளி கட்டமைப்புகள் அல்லது மரங்கள் இருப்பின் இது குறித்த விவரங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தெரிவித்திட வேண்டும்.


7. பள்ளி வேலை நேரங்களில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை ஏற்படின் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாதிக்காத வகையில் உறுதியான கான்கிரீட் கூரை அமைக்கப்பட்ட வகுப்பறை / கட்டடத்தில் அமர்த்தப்பட வேண்டும்.


8. இடிதாங்கி அமைக்கப்பட தேவை இருப்பின் அதனை அமைத்திட நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தினை சார்ந்த மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலரிடம் தெரிவித்திட வேண்டும்.


மேலும் மேற்கூறியவற்றை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அனைத்து பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வினை வழங்கிட மாவட்ட அளவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . இப்பொருள் தொடர்பான விவரங்களை தொகுத்து இயற்கை பேரிடர் மேலாண்மைக்கான ( NDMA ) காலாண்டு அறிக்கையுடன் கீழ்க்கண்ட படிவத்தை பூர்த்தி செய்து இணை இயக்குநர் ( நாட்டு நலப்பணித்திட்டம் ) அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு ( jdnsed@nic.in ) இணைத்து அனுப்பிவைக்குமாறும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


>>> பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 21979/ எம்/ இ1/2021, 18-06-2021...




உத்தர பிரதேச மாநிலத்தின் 2 அரசுப் பள்ளிகளில் 4,000 போலி மாணவர் சேர்க்கை கண்டுபிடிப்பு...

 உத்தர பிரதேச மாநிலத்தின் 2 அரசுப் பள்ளிகளில் 4,000 போலி மாணவர் சேர்க்கை கண்டுபிடிப்பு: இலவச சீருடை, காலணி உள்ளிட்டவற்றுக்கான நிதியில் ஊழல் 


💢உத்தர பிரதேச அரசுப் பள்ளிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக பல ஆண்டுகளாக புகார் உள்ளது. இதை சீர்செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான  அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


💢எனினும், அரசுப் பள்ளிகளில் ஊழல் தொடர்கின்றன. சமீபத்தில், மாநிலத்தின் பல அரசுப் பள்ளிகளில் ஒரே ஆசிரியர் பணியாற்றுவது போல் கணக்கு காட்டி பல லட்சம் ரூபாய் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


💢இந்நிலையில், தலைநகர் லக்னோவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


💢இதில், அவர்களது ஆதார் அட்டையை சரி பார்த்த போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.


💢வழக்கமாகவே, உ.பி. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் குறைவு என்பதால் அதன் சேர்க்கைக்கு என உச்சவரம்பு நிர்ணயிக்கப் படவில்லை. இதன் பலனால், பெரும்பாலான பள்ளிகளில் போலியாக மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இவர்களுக்காக அரசு இலவசமாக அளிக்கும் சீருடை, குளிருடை, காலுறை மற்றும் காலணி, புத்தகப் பை ஆகியவை ஒரு மாணவனுக்கு ரூ.1,200 மதிப்பிலான இப்பொருட்களால் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்தது தெரிய வந்துள்ளது.


💢இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் உ.பி. அரசின் தொடக்க நிலைக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால் அதன் ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்படுகிறார்கள். இதற்கு அஞ்சி, ஆசிரியர்கள் போலியாக மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கிறார்கள். இது கடந்த ஆட்சிகளில் உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் நடை பெற்றதால் அதை ஆளும் அரசுகள் கண்டுகொள்ளவில்லை’’ எனத் தெரிவித்தனர்.


💢இந்த ஊழல் தெரிய வந்த பின்னர், உத்தரபிரதேச தொடக்கப் பள்ளிகள் இணையதளத்தில், லக்னோ மாவட்டத்தில் மட்டும் 22.95 லட்சம் என இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 15.8 லட்சம் எனக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த எல்லைக்கு உட்பட்ட குறிப்பிட்ட இரண்டு பள்ளிகளில் தான் 4,000 போலி மாணவர் சேர்க்கைகள் நடைபெற்றுள்ளன. மீதமுள்ள பல பள்ளிகளில் போலி மாணவர் சேர்க்கை சில ஆயிரங்களாக உள்ளன. 1 முதல் 5-ம் வகுப்பு வரை கொண்ட இவை பிராத்மிக் (தொடக்கம்) பள்ளிகள் என்றழைக்கப்படுகின்றன.


💢இதுபோன்ற நிலையில், உத்தரபிரதேச அரசு பள்ளிகளில் வகுப்புகள் சரியாக நடத்தப்படுவதில்லை. ஆசிரியர்களும் அன்றாடம் பள்ளிக்கு வருவதில்லை. இதை தடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆசிரியர்களுக்கு செல்பி மூலம் மாநிலத் தலைமையகத்திற்கு வருகைப் பதிவு முறையை கொண்டு வந்தும் பலனில்லாமல் உள்ளது.


💢இதுபோன்ற காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர விரும்புவதில்லை. இன்னும் பல மாவட்டங்களின் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கையும் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதிலும் பல கோடி ஊழல் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.




தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 30.06.2021 வரை விண்ணப்பிக்கலாம் - பள்ளிக் கல்வித் துறை தகவல்...



 தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 30.06.2021 வரை விண்ணப்பிக்கலாம் - பள்ளிக் கல்வித் துறை தகவல்...


அனைத்து வகை அரசு/நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,


2020ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் நேரிடையாக http://nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க 30.06.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


எனவே, புதுடெல்லி மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை  பின்பற்றி தேசிய நல்லாசிரியர் விருதிற்கு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரிடையாக இணையதளத்தில் 30.06.2021க்குள் பதிவு செய்யப்பட வேண்டுமென அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

>>>CLICK HERE TO DOWNLOAD THE LETTER

முதன்மைக்கல்வி அலுவலர்வேலூர்.

JEE & NEET நுழைவுத்தேர்வு எப்போது ? தேசிய தேர்வு முகமை அதிகாரி தகவல்...

 JEE & NEET நுழைவுத்தேர்வு எப்போது ? தேசிய தேர்வு முகமை அதிகாரி தகவல்...

நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடத்த திட்டமிட்டு வருவதாக என்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




நாடுமுழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, ஜேஇஇ பிரதானத் தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். இதில்தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில் நடப்பாண்டு முதல் ஜேஇஇ தேர்வானது ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படவுள்ளது. அதன்படி கடந்த பிப்ரவரி, மார்ச்மாதங்களில் 2 கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.


அதன்பின் கரோனா பரவல்காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த ஜேஇஇ 3, 4-ம் கட்ட முதல்நிலைத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டன. அதேபோல், ஜூலை 3-ம் தேதி நடத்தப்படவிருந்த ஜேஇஇ பிரதானத் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.


அதேநேரம் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்து இதுவரை எந்த தகவலையும் மத்திய அரசு வெளியிடவில்லை. இந்நிலையில் நீட், ஜேஇஇதேர்வுகளை நடத்துவதுதொடர்பான ஆலோசனைகளில் என்டிஏ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி நீட் தேர்வை செப்டம்பர் மாதமும், ஜேஇஇ தேர்வை ஆகஸ்ட் மாதமும் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


இதுதொடர்பாக என்டிஏ அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுகளை ஆகஸ்ட் மாதமும், நீட் நுழைவுத்தேர்வை செப்டம்பரிலும் நடத்துவது குறித்து பரிசீலனை செய்துவருகிறாம். இதற்காக நாடு முழுவதும் கரோனா பரவல் நிலைமையை பகுப்பாய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்த பின்னரே தேர்வுகள் நடத்தப்படும்’’ என்றனர்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Local Holiday in Kanyakumari on 03.12.2024 - Notification of District Collector

03.12.2024 அன்று கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2...