கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O.(Ms) No.458, Dated:02.08.2024 - Smart Identity Card to the Police Personnel up to the rank of inspector of Police while travelling in Government Transport Buses on official duties with in the district jurisdiction


 "காவலர் முதல் ஆய்வாளர் "வரை அவர்கள் பணிபுரியும் மாவட்டத்திற்குள் பேருந்தில் பயணம் செய்ய புதிய அடையாள அட்டை - தமிழ்நாடு அரசு அரசாணை G.O. Ms. No.458, Dated: 02-08-2024 வெளியீடு


Home Department - Issuance of Smart Identity Card to the Police Personnel up to the rank of inspector of Police while travelling in Government Transport Buses on official duties with in the district jurisdiction - Announcement made by the Hon'ble Chief Minister on the Floor of Assembly on 13.09.2021 - sanction of funds for a sum of Rs.29,96,80,800 -Orders- Issued.

Home (Pollce XI ) Department

G.O.(Ms) No.458, Dated:02.08.2024


From the Director General of Police / Head of Police Force,Tamll Nadu, Chennal, letter. Rc.No.C.Bil-3/8490/2021, dated 28.05.2024.


ORDER

The Hon'ble Chief Minister of Tamil Nadu during the Police Demand has made among others the following announcement.on the floor of the Legislative Assembly on 13.09.2021.

Announcement No. 20





கடந்த 2021 ஆம் ஆண்டு காவல்துறை மானிய கோரிக்கையின் போது, முதல்வர் ஸ்டாலின், ‘போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்’ வரை தங்கள் அடையாள அட்டையை காட்டி, அரசு பஸ்களில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள்,கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்ட திட்டம் நடைமுறைப்படுத்தாமல் இருந்ததை அடுத்து, தற்பொழுது அரசு பஸ்சில் போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை உள்ளவர்களுக்கு, கட்டணமின்றி பயணம் செய்வதற்கான, ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்திற்கான அரசாணை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது வரை எந்த முன்னேற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை, அரசு பஸ்களில் கட்டணமின்றி பயணம் செய்வதற்கு, ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க, மாவட்ட எஸ்.பி.,க்கள், மாநகர போலீஸ் கமிஷனர்கள், நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

போலீஸாருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவது தொடர்பாக டிசம்பர் 16-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அரசு பேருந்தில் போலீஸார் அலுவல் ரீதியாக பயணம் செய்வதற்கு எந்தவொரு அடையாள அட்டையும் வழங்கப்படாமல் இருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. முக்கியமாக, அரசு பேருந்து நடத்துநர்களுக்கும்,போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம், மோதல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.


இதை கருத்தில் கொண்டு, அரசு பேருந்துகளில் மாவட்டத்துக்குள் பயணம் செய்யும் வகையில் காவலர் முதல் ஆய்வாளர் வரை நவீன அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி, மாநிலம் முழுவதும் 3,191 ஆய்வாளர்கள், 8,245 உதவி ஆய்வாளர்கள், 1,13,251 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், இரண்டாம் நிலைக் காவலர்கள் என மொத்தம் 1,24,867 பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.29.96 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதில் ஒரு மாதத்துக்கு ரூ.2.49 கோடி செலவிடப்படுகிறது. காவலர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டு மூலம் நகர பேருந்துகள், புறநகர் பேருந்துகள் ஆகியவற்றில் பயணம் செய்யலாம். ஏசி பேருந்துகளிலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் ஸ்மார்ட் கார்டு மூலம் பயணம் செய்ய அனுமதி கிடையாது.


சொந்த மாவட்டத்துக்குள் மட்டும் ஸ்மார்ட் கார்டு மூலம் காவலர் பயணிக்கலாம். வாரன்ட் உத்தரவு நடவடிக்கைக்கு செல்லும் போலீஸார், மாநிலம் முழுவதும் பயணம் செய்யலாம். இந்த திட்டத்தின்படி ஒரு காவலருக்கு மாதத்துக்கு ரூ.200 ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மேலும், திட்டம் தொடர்பான விவரங்களை அறிக்கை மூலம் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அறிவுறுத்தி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

காவல்துறையினர் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது தங்களுடைய அடையாள அட்டைகளை காட்டிய இதுவரை பயணித்து வந்த நிலையில் தற்பொழுது இவர்களுக்காக ஸ்மார்ட் கார்டு திட்டம் 2021 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டமானது செயல்படாமல் இருந்த நிலையில் அதனை தற்போது செயல்படுத்த டி ஜி பி அவர்கள் உத்தரவிட்டிருப்பது காவல்துறையினரிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு தகுதியானவர்களை கண்டறிந்து டிசம்பர் 16-ம் தேதிக்குள் நிலை அறிக்கையை அனுப்பும்படி அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அரசு வாகனங்களை வைத்திருக்கும் போலீஸார், ஸ்மார்ட் கார்டு திட்டத்துக்கு தகுதியானவர்கள் கிடையாது என்றும் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.

TNSED Schools App New Version: 0.2.6 - Updated on 30-11-2024 - OOSC Module Changes

 

 

TNSED schools App


What's is new..?


*🎯  OOSC Module Changes...


*🎯Bug Fixes and Performance Improvement....


*_UPDATED ON  30 November 2024


*_Version: Now 0.2.6


Link:

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis



Official app for the teachers by State School Education Department, Tamil Nadu


The app will be used by the teachers, Heads of schools, and other administrative staff to enter student, staff and school data and track the same. The app currently has modules for entering students and staff attendance, modules for screening the health of the students and referring them to the doctors, module for identifying and tracking the out of school students and module for teachers to register for teacher training.



December 2024 - School Calendar



2024 டிசம்பர் மாதம் - ஆசிரியர் டைரி 


 டிசம்பர் 2024 - பள்ளி நாட்காட்டி -  December 2024 - School Calendar


👉 03.12.2024 - செவ்வாய்க்கிழமை - உலக மாற்றுத்திறனாளிகள் தினம்


👉 04.12.2024 - புதன்கிழமை

தேசிய அடைவுத்தேர்வு

NAS Exam - 3, 6 & 9 வகுப்பு தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு மட்டும்


👉06.12.2024 வெள்ளிக்கிழமை

மாநில அளவிலான கலைத்திருவிழா - 1 முதல் 8 வகுப்பு


👉07.12.2024 - சனிக்கிழமை

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்_

BEO அலுவலகம்


👉09.12.2024 - திங்கள்கிழமை

6 -12 வகுப்பு இரண்டாம் பருவத் தேர்வு தொடக்கம்.


👉13.12.2024 - வெள்ளிக்கிழமை_

திரு கார்த்திகை தீபம்-RL.


👉14.12.2024 - சனிக்கிழமை_

பள்ளி வேலை நாள்&

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

DEO அலுவலகம்


👉16.12.2024 - திங்கள் கிழமை 1-5 வகுப்பு இரண்டாம் பருவத் தேர்வு தொடக்கம்


👉21.12.2024 - சனிக்கிழமை

பள்ளி வேலை நாள்&

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

CEO அலுவலகம்


👉24.12.2024 - செவ்வாய்க்கிழமை

இரண்டாம் பருவ தேர்வு விடுமுறை தொடக்கம்


👉01.01.2025 - புதன்கிழமை 

ஆங்கில புத்தாண்டு

அரசு விடுமுறை


👉02.01.2025 - வியாழக்கிழமை

மூன்றாம் பருவம்

பள்ளிகள் திறப்பு.


Wild animal rescue - Contact number Tamilnadu



 சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வன விலங்கு மீட்பு தொடர்பான உதவிகளுக்கு தொடர்பு எண் அறிவிப்பு


Notification of contact number for assistance related to wild animal rescue in Chennai and surrounding areas


Press Release

Chennai Wildlife Division

In this monsoon season, for any wildlife rescue related assistance in and around Chennai, public may reach, Chennai Wildlife Division, Head Quarters Range, in the following helpline no 044-22200335.

The Wildlife Warden

Chennai Wildlife Division

30.11.2024

Chennai




CBDT Extends Due Date for furnishing Return of Income for Assessment Year 2024-25


மத்திய நேரடி வரிகள் வாரியம் 2024-25 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் காலக்கெடுவை நீட்டித்துள்ளது.


Income Tax - CBDT Extends Due Date for furnishing Return of Income for Assessment Year 2024-25


➡️The due date for the assessees referred to in clause (aa) of Explanation 2 to Sub Section (1) of Section 139 has been extended from 30th November, 2024, to 15th December, 2024


➡️ Circular No. 18/2024 dated 30.11.2024 issued


The Circular is available below:

https://drive.google.com/file/d/1rpZJpRxQho25c0FiQ1WHV3Cm2CkRN-U0/view?usp=drivesdk


Department of Medicine and People Welfare - Storm Precautionary Measures






 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தமிழ்நாடு - 

ஃபெங்கள் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 


1. குறுகிய காலத்தில் பிரசவ தேதி எதிர்பார்க்கப்படும் தாய்மார்கள் (EDD Mother's) முன்னரே மருத்துவமனையில் தாமதமின்றி அனுமதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது 

2. தகுந்த மருந்து மாத்திரைகள் பாம்பு கடி விஷமுறிவு ஊசி ASV மற்றும் ப்ளீச்சிங் பவுடர் ஆகிவற்ற இருப்பு வைக்க உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. 

3. மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள சுகாதார நிலையங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது 

4. தகுந்த மருத்துவ நிவாரண முகாம்கள் தேவைப்படின் அமைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது 

5. மேலும் தற்பொழுது நடைபெற்று வரும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை தேவைக்கேற்ப அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது 

6. அரசின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு அவசர மருத்துவ சேவைகளுக்காக எண் 108 தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.



Policeman involved in chain snatching arrested

 


செயின் பறிப்பில் ஈடுபட்ட காவலர் கைது


Policeman involved in chain snatching arrested


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தெங்கியாநத்தம் கிராமத்தை சேர்ந்த செல்வராணி என்பவர் கூகையூர் கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் வழக்கம்போல் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் தோட்டப்பாடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் கழுத்தில் அணிந்து இருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்றதாக கூறி அருகில் உள்ள கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.


இதேபோல் கடலூர் மாவட்டம் கொரக்கவாடி கிராமத்தைச்சேர்ந்த தீபா தனியார் பள்ளியில் பெற்றோர் சந்திப்பு கூட்டத்திற்காக குரால் கூட்ரோடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மர்ம நபர்கள் தீபா அணிந்திருந்த 7பவுன் தாலி செயினை பறித்துச் சென்றுள்ளனர், இதுகுறித்து, அருகில் உள்ள கீழ்குப்பம் காவல் நிலையத்தில் தீபா புகார் அளித்து இருந்தார். இரு வழக்கு சம்பந்தமாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை செய்ததில் கள்ளக்குறிச்சி எஸ்பி அலுவலகத்தில் ஆயுதப்படையில் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த காவலர் விஜயன் என்பவர்தான் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரியவந்தது, இதனையடுத்து கள்ளக்குறிச்சி டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான போலீசார் விஜயனை கைது செய்து கீழ்குப்பம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்ற சம்பவம் காவல்துறையினர் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் வேலியே பயிரை மேய்வது போன்று பொது மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய காவலரே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு பெண்களின் செயின்களை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders

 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு ₹ 1.1 lakh compensation for insect bite while traveling...