கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.08.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.08.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: பண்புடைமை


குறள் : 1000

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலந்தீமை யால்திரிந் தற்று.



பொருள்:

நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.


பழமொழி :

Dogs that pursue many hares kill none.


பல பறவைகளுக்கு குறி வைப்பவர் ஒன்றையும் வீழ்த்த மாட்டார்.



இரண்டொழுக்க பண்புகள் :



1. கடவுள் எல்லோருக்கும் சமமாக வழங்கிய பொதுவான செல்வம் நேரம் அதை வீண் அடித்தவன் ஏழை பயன் படுத்தியவன் பணக்காரன். 


2. நம்மை அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்க்காமல் நான் கடவுளால் தனித் தன்மையோடு அற்புதமாக படைக்க பட்டவன் என்று எண்ணி வாழுங்கள். வாழ்க்கை சிறக்கும்


பொன்மொழி :


வலிமை இல்லாதவர்கள்

அதிஷ்டத்தின் மீது நம்பிக்கை

வைக்கிறார்கள்.. வலிமை

உள்ளவர்கள் தன் மீது

நம்பிக்கை வைக்கிறார்கள்..!


பொது அறிவு :


1.புரோட்டீனின் முக்கிய பொருள் எது ? 


அமினோ ஆசிட். 


2. நியூரான் என்றால் என்ன ? 


நரம்பு செல்.


English words & meanings :


identification - I ·den·ti·fi·ca·tion - the act of finding out who someone is or what something is. Noun. அடையாளம் குறி அல்லது அடையாளம் காணுதல். பெயர் சொல்


ஆரோக்ய வாழ்வு :


சிறுநீரக செயல்பாடு மேம்பட அதிகமாக தண்ணீர் குடிப்பது அவசியம். இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. தினசரி தண்ணீரின் அளவு ஆண்களுக்கு 4 லிட்டர் மற்றும் பெண்களுக்கு 3.1 லிட்டர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.


NMMS Q 36:


ஒரு குறிப்பிட்ட அசலானது 8% வட்டி வீதத்தில் _________ ஆண்டுகளில் மூன்று மடங்காகும்.


 விடை: 25 ஆண்டுகள்


ஆகஸ்ட்  01


பால கங்காதர திலகர் அவர்களின் நினைவுநாள்


பால கங்காதர திலகர் (Bal Gangadhar Tilak, மராத்தி: बाळ गंगाधर टिळक, பாள கங்காதர டிளக்) சூலை 23, 1856 –1 ஆகத்து 1920 (அகவை 64), ஒரு இந்தியத் "தேசியவாதியும்", "சமூக சீர்திருத்தவாதியும்", விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது. முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆவார். மக்களிடையே அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் திலக் மகராஜ் என்றும் அழைக்கப்பட்டார்.


நீதிக்கதை


நூலும் பட்டமும்


அப்பாவும், பிள்ளையும் சேர்ந்து பட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், கண்ணா! நூலினுடைய வேலை என்ன என்று சொல்லு பார்க்கலாம்? பையன் கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னான் நூல்தாம்ப்பா பட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு. அப்பா சொன்னார், இல்லை மகனே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு. பையன் சிரித்தான். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது. ஒழுக்கம் இப்படியானதுதான் மகனே! 


அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால் அந்த சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய். ஒழுக்கம்தான் உன்னைக் கொடி கட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே என்றார்


இன்றைய செய்திகள்


01.08.22


 💫வானிலை முன்னறிவிப்பு: 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்  அறிவிப்பு.


 💫தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.


 💫சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


 💫ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்.


 💫ரூ.5,200 கோடி மதிப்பில் பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் - சோலார் பேனல் தொடர்பான இணையதளமும் அறிமுகம்.


 💫சுத்தமான சூழலில் வாழ்வது ஓர் அடிப்படை உரிமை என்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்மானம் ஒன்று ஐ.நா பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


 💫காமல்வெல்த் போட்டியின் பளுதூக்குதலில் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பிந்த்யாராணி தேவி சொரோகைபம் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.


 💫செஸ் ஒலிம்பியாட்: 3-வது சுற்றில் இந்திய வீரர் ரவுனக் சத்வானி வெற்றி.


 💫காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி : இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


 💫Weather Forecast: Chance of sudden downpour in 5 districts: Chennai Meteorological Department Notification.


  💫There is no incidence of monkey measles in Tamil Nadu: Minister M. Subramanian informed.


  💫Various schemes for education development have been approved in the Chennai Municipal Council meeting.


  💫India ranks 3rd in the list of countries that spend the most on the military.


  💫Prime Minister's foundation for green energy projects worth Rs.5,200 crore - Solar panel-related website also launched.


  💫 A historic resolution has been passed in the UN General Assembly that living in a clean environment is a fundamental right.


 💫 India's Pindyarani Devi Sorokaipam won a silver medal in the 55 kg weightlifting category at the Commonwealth Games.


💫Chess Olympiad: Indian player Raunak Sathwani wins the 3rd round.


💫 Commonwealth Table Tennis Tournament: Indian men's team advances to semi-finals.







டிட்டோஜாக் பேரமைப்பு சார்பில் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தும் கோரிக்கைத் தீர்மானங்கள் (Resolutions requested on behalf of the TETOJAC Federation to the Tamil Nadu Government)...

 டிட்டோஜாக் பேரமைப்பு சார்பில் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தும் கோரிக்கைத் தீர்மானங்கள் (Resolutions requested on behalf of the TETOJAC Federation to the Tamil Nadu Government)...









நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் ஆகிய 1089 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியீடு (TNPSC has released notification to fill 1089 posts of Land Surveyor, Draftsman, Assistant Draftsman)...



>>> நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் ஆகிய 1089 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவிப்பு...


தகுதியுடையோர் www.tnpsc.gov.in எனும் இணையளத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


வரும் நவம்பர் 6ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.






சட்டம் ஒழுங்கு, குற்ற தடுப்பு உள்ளிட்ட பல அடிப்படைகளை கொண்டு குடியரசுத் தலைவரின் கொடி வழங்குதல் நிகழ்ச்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடியை ஒப்படைத்தார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு (President's flag presentation program with many principles including law and order, crime prevention - Vice President Venkaiah Naidu handed over the flag to Chief Minister M.K.Stalin)...

 


குடியரசுத் தலைவரின் கொடி வழங்குதல் நிகழ்ச்சி: 


தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது குடியரசுத் தலைவரின் கொடி;


சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடியை ஒப்படைத்தார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு.


ராணுவம், காவல் துறைக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமே குடியரசு தலைவர் கொடி


இதுவரை 10 மாநில போலீசாருக்கு மட்டுமே குடியரசு தலைவரின் கொடி


தென்மாநிலங்களில் தமிழகமே இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம்


சட்டம் ஒழுங்கு, குற்ற தடுப்பு உள்ளிட்ட பல அடிப்படைகளை கொண்டு கொடி கெளரவம்...



தமிழக காவல்துறைக்கு மிக உயரிய குடியரசு தலைவர் சிறப்பு கொடியை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வழங்கி கவுரவித்தார். 


சிறப்பான சட்டம் - ஒழுங்கு, குற்றங்கள் தடுப்பு உள்ளிட்ட பல அளவுகோலை அடிப்படையாகக் கொண்டு மாநில காவல்துறைக்கு குடியரசு தலைவரின் கொடி அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக காவல்துறைக்கு குடியரசு தலைவர் கொடி அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று அதனை ஒப்படைக்கும் விழா நடைபெற்றது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதேபோன்று இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் வெங்கையா நாயுடு குடியரசு தலைவர் கொடியை ஒப்படைத்தார்.


அப்போது வானத்தில் வண்ண நிற பலூன்கள் பறக்கவிடப்பட்டன.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக காவல்துறைக்கு குடியரசு தலைவர் கொடி கிடைத்தது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே கிடைத்த பெருமை என்றார். உயிரை பொருட்படுத்தாமல் காவல்துறை ஆற்றிய சேவைக்கான அங்கீகாரம் என்றும் பாராட்டு தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த ஓராண்டில் சாதி, மதக் கலவரங்கள், துப்பாக்கிச் சூடுகள் இல்லை என்று கூறிய முதலமைச்சர், சிறை மரணங்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


தமிழ்நாட்டு காவல்துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இது, மிக உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது;


தமிழ்நாடு காவல்துறை தனக்கு தானெ சல்யூட் அடித்துக் கொள்ளக்கூடிய சிறப்பு இது; தமிழ்நாடுக்கே வரலாற்று சிறப்புமிக்க பெருமை இது.


தமிழ்நாடு காவல்துறைக்கு ஜனாதிபதி கொடி வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.


தமிழ்நாடு காவல்துறை இந்தியாவின் பல மாநிலங்களின் காவல்துறைக்கு முன்மாதிரியானது.


தமிழ்நாடு காவல்துறையில் ஒரு டிஜிபி, 2  ஏடிஜிபி, 14 ஐஜி, 20,000 காவலர்கள் பெண்களாக உள்ளனர்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.





Chess Olympiad - சதுரங்கம் - ஒரு நடன சித்தரிப்பு (Chaturangam - A Dance Depiction)...



>>> Chess Olympiad - சதுரங்கம் - ஒரு நடன சித்தரிப்பு (Chaturangam - A Dance Depiction)...




சுய மரியாதை பாதிக்காத வகையில் ஏழைகளுக்கு உதவுதல் - ஈரானிய ஒரு நிமிட குறும்படம் (Helping the poor without affecting their self-respect - an Iranian one-minute short film)...

 ஈரானிய ஒரு நிமிட குறும்படம் (தமிழ் மொழி பெயர்ப்பு)...



இந்த வீடியோ க்ளிப்பை பார்ப்பதற்கு முன், இதை படியுங்கள்.


ஈரானிய சினிமா தயாரிப்பாளர் ஒருவர் எடுத்த, ஒரு நிமிடம் மட்டுமே ஒடக்கூடிய இந்தக் குறும்படம், உலகெங்கும் இருக்கக்கூடிய ஏழை மக்கள் சந்திக்கும் கடும் பசியை புரிந்துக் கொள்ள உதவுகிறது.


தன் மகளுடன் மளிகைக் கடைக்குச் செல்லும் ஒரு ஏழைத்தந்தை, அங்கே  ரொட்டியை திருடி விடுகிறார். திருடி விட்டு திரும்ப எத்தனிக்கும் வேளையில், அந்த கடைக்காரர் அவரை கூப்பிட்டு நிற்கச் சொல்கிறார். இதை ஏக்கத்துடன் பார்த்த மகள், ஒன்றும் புரியாத நிலையில், தன் தந்தையைப் பார்த்து, "என்ன நடக்கிறது?" என்று கேட்கிறாள்.


இதைப் புரிந்துக் கொண்ட தந்தை, கவலைப்பட்டு, மனம் கலங்கி, மன்னிப்புக் கேட்க  எத்தனிக்கிறார். அதற்கிடையே, அந்த கடைக்காரர் தன் மகளிடம் பேசுவதை கேட்கிறார். "எனதருமை குழந்தையே, உன் தந்தை பணம் கொடுத்து விட்டு, மிச்சம் வாங்க மறந்து விட்டார்". அப்படி சொல்லி விட்டு, எதுவுமே நடக்காதது போல, கொஞ்சம் பணத்தை எண்ணி அந்த ஏழைத்தந்தையின் கைகளில் தருகிறார். குற்ற உணர்வில் மூழ்கி, ஒன்றும் செய்ய இயலாதவராக, தன் தலையைக் குனிந்தவாறே அந்த ஏழைத்தந்தை கடையை விட்டு வெளியேற ஒரு அடி எடுத்து வைப்பதை பார்த்து, அந்த கடையில் நின்றுக்கொண்டு, நடப்பதை எல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர் ஒருவர்,  ஏழ்மையில் உணவுக்காக திருடியவரை கூப்பிட்டு சொல்கிறார்.

"சகோதரரே! நீங்கள் வாங்கிய இந்த அரிசிப்பையை மறந்து விட்டுப் போகிறீர்களே, தயவு செய்து, எடுத்து செல்லுங்கள்." என்று அரிசிப்பையை அவரிடம் கொடுக்கிறார். அதை, கனத்த மனதுடன் பெற்றுக்கொண்டு விடைபெறுகிறார், அந்த ஏழைத்தந்தை.


"ஒருவருடைய தன்மானம் மற்றும் சுய மரியாதை பாதிக்காத வகையில், பசித்தவருக்கு உணவளிப்பதும், தேவையுள்ளோருக்கும், ஏழைக்களுக்கும் உதவுவது என்பது இறைவனின் பார்வையில் பெரிய நன்மையான காரியமாக பார்க்கப்படுகிறது. மேலும், இறைவனின் ஆசீர்வாதங்களையும், கருணையையும் இந்த உலக வாழ்க்கையிலும், வர இருக்கின்ற மறுமை வாழ்க்கையிலும் பெற்றுத்தர தகுதி வாய்ந்ததாக இருக்கிறது."


800 மில்லியன் மக்களுக்கும் அதிகமானவர்களில், கிட்டத்தட்ட உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் பசியுடனே படுக்கைக்கு செல்வதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன.( ஐ.நா வின் உலக உணவுத் திட்ட அறிக்கை-2022).


 உலகத்தில் பசிக்கொடுமை அதிகரிக்கின்ற மொத்தமுள்ள 116 நாடுகளில், இந்தியா 101வது இடத்தை பிடிக்கிறது... (உலக பசி குறியீட்டு அறிக்கை - 2021)


"இது தான் வழிபாடு, இது தான் வாழ்க்கை நெறி - இறை நம்பிக்கை. ஏன் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் - இந்த உலகத்தில், உதவி செய்கிறான் எனில், இது தான் காரணம்." 


"இது தான் தர்மம். இது தான் பக்தி. இது தான் பூஜை." 


இது தான், எல்லா மதங்களும் வலியுறுத்துகின்ற சாராம்சமும், முக்கியமான அம்சமும் ஆகும்...


>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...






பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை (01-08-2022) முதல் TNSED செயலியில் வருகைப்பதிவு - தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை (From tomorrow (01-08-2022) School students and Teachers will have to register their attendance on the TNSED App - Teachers will have to do Casual Leave, Medical Leave & Permission through the App - Department of School Education)...






 பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை (01-08-2022) முதல் TNSED செயலியில் வருகைப்பதிவு...


பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை...


நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும்.


விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை.


>>> 15.07.2022 மற்றும் 16.07.2022 ஆகிய நாட்களில் நடைபெற்ற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்...





நெப்போலியன் போனபார்ட் (Napoleon Bonaparte) - வாழ்க்கை வரலாறு (Biography)...



 மனிதகுல வரலாற்றில் மிகச் சிறந்த ராணுவத் தலைவர்களில் ஒருவராக பிரெஞ்சு மன்னர் நெப்போலியன் போனபார்ட் (Napoleon Bonaparte) (1769-1821) கருதப்படுகிறார்.


பிரெஞ்சுப் புரட்சி (1787-1799) நடந்த காலத்தில் முக்கியத்துவம் பெறும் நிலைக்கு உயர்ந்த நெப்போலியன், 1804 முதல் 1814 வரை பிரான்சின் பேரரசராக இருந்தார்.


1814இல் ஆட்சியை இழந்த பின் மீண்டும் 1815இல் பிரான்சின் பேரரசராக அவர் இருந்தார்.


1803 மற்றும் 1815 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலகட்டங்களில் நடைபெற்ற நெப்போலியப் போர்கள் மூலம் அவர் நினைவுகூரப்படுகிறார்.


பிரிட்டன் உடனான வாட்டர்லூ போரில் ஜூன் 18, 1815 அன்று நெப்போலியன் போனபார்ட் தோல்வி அடைந்ததும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


சரி.. நெப்போலியன் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்?


நெப்போலியன் எங்கு எப்போது பிறந்தார் ?

ஆகஸ்ட் 15, 1769 அன்று மத்திய தரைக்கடலில் உள்ள கோர்சிகா தீவில் பிறந்தார் நெப்போலியன். இந்தத் தீவு பிரான்சின் ஓர் அங்கம்.


நெப்போலியன் வரலாற்றில் எதற்காக நினைவுகூரப்படுகிறார்?

அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நெப்போலியப் போர்கள் நடந்த காலகட்டத்தில் பிரான்சின் பேரரசராக இருந்ததற்கும், வாட்டர்லூ போரில் தோல்வி அடைந்ததற்கு அவர் நினைவுகூரப்படுகிறார்.


நெப்போலியனின் குடும்ப பின்புலம் என்ன?


கோர்சிகா தீவில் கார்லோ மரியா போனபார்ட் எனும் வழக்கறிஞருக்கும், அவரது மனைவி லெடிசியா ரமோலினா போனபார்ட்டுக்கும் பிறந்த குழந்தைகளில் எட்டு குழந்தைகள் உயிர் பிழைத்தனர். அவர்களில் இரண்டாவது குழந்தை நெப்போலியன் ஆவர்.


'போனபார்ட்' என்போர் கார்சிகா தீவில் வாழ்ந்த ஒரு சிறிய மேட்டுக்குடி சமூகத்தினர் ஆவர்.


நெப்போலியன் இருமுறை திருமணம் செய்து கொண்டவர். அவரது முதல் மனைவியின் பெயர் ஜோசஃபைன் டீ புஹார்னே (1796 - 1810). இரண்டாவது மனைவியின் பெயர் மேரி லூயி, பார்மாவின் கோமாட்டி (1810 - 1821). மேரி மூலமாகத்தான் இரண்டாம் நெப்போலியன் பிறந்தார்.


தனக்கு 1806ஆம் ஆண்டில் முறையின்றி பிறந்த, சார்லஸ் லியான் என வேறொரு மகன் இருப்பதாக முதலில் ஒப்புக் கொண்ட நெப்போலியன், காலப்போக்கில் அதை மறுத்தார்.


நெப்போலியனின் உயரம் என்ன?

நெப்போலியன் தாம் உயரம் குறைவாக இருப்பது குறித்து அதிகம் வருத்தப்பட்டிருக்கிறார். அவர் ஐந்து அடி இரண்டு அங்குலம் உயரம் என அவர் மரணத்தின் போது எழுதப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டிருக்கிறது. ஆங்கில அளவீட்டு முறைப்படி பார்த்தால் ஐந்து அடி ஆறு அங்குல உயரமிருப்பார்.


நெப்போலியனின் இளமைக்காலம் எப்படி இருந்தது?

நெப்போலியனின் தாய் தந்தையர் கார்சிகா தீவில் வாழ்ந்த ஒரு சிறிய மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்கள் குடும்பம் அத்தனை செல்வாக்கானது அல்ல. நெப்போலியன் பிரான்சின் ராணுவ அகாடமிகளில் ஊக்கத் தொகையில் படித்தார்.


தன் வகுப்பறை சகாக்களை ஒப்பிடும் போது நெப்போலியன் ஏழை. கார்சியா தீவில் வளர்ந்த போது அவரது முதல் மொழி பிரெஞ்சு அல்ல, இத்தாலி மொழி. அவர் பேசுவது பாமரத்தனமாக இருக்கிறது என அவரது வகுப்பறை சகாக்கள் விமர்சித்திருக்கிறார்கள்.


நெப்போலியன் எப்போது ராணுவத்தில் சேர்ந்தார்?


தனது 15ஆவது வயதில் பிரான்சின் முக்கிய படைகளில் ஒன்றான 'இகோல் மிலிடைர்' பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனால், சேர்ந்த உடன் இரு ஆண்டுகளில் படித்து முடிக்க வேண்டிய படிப்பை ஓராண்டு காலத்தில் படித்து முடிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்.


நெப்போலியனின் தந்தை வயிற்றுப் புற்றுநோய் காரணமாக மரணமடைந்ததால், நெப்போலியன் ஒருவரே மொத்த குடும்பத்தின் முக்கிய பொருள் ஈட்டுபவர் ஆனார். தன் 16ஆவது பிறந்தநாள் நிறைவடைந்து சில காலங்களுக்குள்ளேயே ராணுவத்தில் உயர் அதிகாரி ஆனார்.


ஐரோப்பாவில் போர் வெடிக்கும் சூழல் இருந்த போது நெப்போலியன் இரண்டாம் லெப்டினன்டாக கேரிசன் என்கிற நகரத்தில் இருந்தார். அந்த காலகட்டத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு கார்சியாவில் வாழ்ந்து வந்த தன் குடும்பத்தைப் பார்க்கச் சென்றார்.


நெப்போலியனின் ஆரம்ப கால சாதனைகள் என்ன?

1792ஆம் ஆண்டு, நெப்போலியன் ராணுவத்தில் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். 1796-ல் பாரிஸில் ஆட்சி புரிந்து வந்த புரட்சிகர படைக்கும் எதிராக எழுந்த கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தியதால், அவர் இத்தாலியில் இருக்கும் பிரெஞ்சு ராணுவத்தில் கமாண்டராக்கப்பட்டார்.


ஆஸ்திரியாவுக்கு எதிரான பல முக்கிய வெற்றிகள், ஜோசஃபைன் டீ புஹார்னேவை மணந்து கொண்டது நெப்போலியனின் பெயரையும் புகழையும் தேசிய அளவில் உயர்த்தியது.


1799 நவம்பரில் நெப்போலியன் முதல் கன்சுலானார். தன் ராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் ஓர் ஐரோப்பிய சாம்ராஜ்யத்தை நிறுவ வேலை செய்தார்.


நெப்போலியன் ஆட்சியை மத்திய அரசாக்கினார். மீண்டும் ரோமன் கத்தோலிக்கத்தை நாட்டின் மதமாக்கினார். பல கல்வி சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். பேங்க் ஆஃப் பிரான்ஸ் என்கிற பிரான்ஸின் மத்திய வங்கியை நிறுவினார்.


நெப்போலியன் ஏன் பிரான்ஸின் பேரரசர் ஆனார்?

1800ஆம் ஆண்டில் மாரெங்கோவில் வைத்து ஆஸ்திரியர்களை வென்றார் நெப்போலியன். அதன் பிறகு ஒரு பொது ஐரோப்பிய அமைதி ஒப்பந்தத்தைக் குறித்துப் பேசினார். அது ஐரோப்பிய கண்டத்தில் பிரான்சின் ஆதிக்கத்தை நிறுவியது. 1802ஆம் ஆண்டு நெப்போலியன் தன்னைத் தானே நிரந்தர கன்சுலாக நியமித்துக் கொண்டார், இரண்டாண்டுகளுக்குப் பிறகு பிரான்சின் பேரரசரானார்.


ஐரோப்பாவின் மீது நெப்போலியன் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது எப்படி?


நெப்போலியன் முன் வைத்த அமைதி ஒப்பந்தத்தை மீறி 1803ஆம் ஆண்டு பிரிட்டன், பிரான்சின் மீது போர் தொடுத்தது. பிறகு ரஷ்யாவும், ஆஸ்திரியாவும் பிரிட்டனோடு இணைந்து கொண்டன.


பிரிட்டனின் கடற்படை 'ட்ராஃபல்கர் போரில்' வென்ற பிறகு, பிரிட்டன் மீது படையெடுக்கும் திட்டத்தை கைவிட்டு, ரஷ்யா மற்றும் ஆஸ்திரிய படைகள் மீது கவனத்தைச் செலுத்தினார். 'ஆஸ்டெர்லிட்ஸ் போரில்' அவ்விரு படைகளையும் வென்றார். அது அவர் வாழ்நாளில் கண்ட மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்று.


அந்த ஆண்டில் அவர் மேலும் பல நிலப் பகுதிகளைக் கைப்பற்றினார். அது அவருக்கு ஐரோப்பிய கண்டத்தில் ஆதிக்கம் செலுத்த வழிவகுத்தது. ஹோலி ரோமன் சாம்ராஜ்யம் கலைக்கப்பட்டு, நெப்போலியனின் உறவினர்கள் மற்றும் விசுவாசிகள் இத்தாலி, நேபிள், ஸ்பெயின், ஸ்வீடன், ஹாலந்து, வெஸ்ட்ஃபெலியா போன்ற பகுதிகளுக்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.


நெப்போலியனின் முதல் திருமணம் எப்படி முறிந்தது?

ஜோசஃபைன் டீ புஹார்னேவுக்கும் தனக்கும் குழந்தை பிறக்கவில்லை என்பதால், ஜோசஃபைனை 1810ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பிறகு ஆஸ்திரிய பேரரசரின் 18 வயது இளவரசியான மேரி லூயியை திருமணம் செய்து கொண்டார். அடுத்த ஆண்டு மேரி இரண்டாம் நெப்போலியனைப் பெற்றெடுத்தார்.


நெப்போலியன் ஏன் நாடுகடத்தப்பட்டார்?

1810ஆம் ஆண்டிலிருந்து நெப்போலியனுக்கு எதிரான அலைகள் வீசத் தொடங்கின. பிரெஞ்சு ராணுவம் சில பெரிய தோல்விகளைச் சந்தித்தது. அது பிரான்ஸ் நாட்டின் வளத்தை காலி செய்தது. 1812ஆம் ஆண்டு ரஷ்யா மீது படையெடுத்து தோல்வியடைந்தது. நான்கு லட்சம் பேராக சென்ற படை வெறும் 40,000 பேராக சுருங்கி பிரான்ஸ் வந்து சேர்ந்தது.


1814-ல் பாரிஸ் வீழ்ந்தது. நெப்போலியன் எல்பா தீவுக்கு நாடுகடத்தப்பட்டார். அவரது மனைவி மேரி மற்றும் மகன் இரண்டாம் நெப்போலியன் ஆஸ்திரியா சென்றனர்.


மீண்டும் அதிகாரத்துக்கு வந்த நெப்போலியன்

ஓராண்டுக்கும் குறைவான காலத்துக்குப் பிறகு, 1815 பிப்ரவரியில் நெப்போலியன் எல்பா தீவிலிருந்து தப்பித்து பிரான்ஸ் தலைநகரத்துக்குள் நுழைந்து வெற்றிகரமாக அதிகாரத்தைக் கைப்பற்றினார்.


பிரிட்டன், ப்ருஷ்யா, ரஷ்யா, ஆஸ்திரியா அனைவரும் ஒன்று திரண்டு நெப்போலியன் மீது போர் தொடுத்தனர். இத தான் வரலாற்று புகழ் பெற்ற வாட்டர்லூ யுத்தம் என்றழைக்கப்படுகிறது. இதில் நெப்போலியன் தோல்வியுற்று 100 நாட்களில் மீண்டும் தன் ஆட்சியை இழந்தார் மீண்டும் புனித ஹெலெனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.



நெப்போலியன் மரணம்

1821ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவான செயின்ட் ஹெலனாவில் நெப்போலியன் மரணமடைந்தார்.


அத்தீவில் தன் 51ஆவது வயதில், வயிற்றுப் புற்றுநோயால் இறந்ததாக கூறப்படுகிறது. நெப்போலியன் மரணத்துக்கான காரணம் நீண்ட காலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது.


நெப்போலியன் எங்கு புதைக்கப்பட்டார்

நெப்போலியன் அதே தீவில்தான் புதைக்கப்பட்டார். 1840ஆம் ஆண்டு வரை அவரது எச்சங்கள் பிரான்ஸுக்கு கொண்டு செல்லப்படவில்லை. அதன் பிறகு பிரான்சின் ராணுவத் தலைவர்கள் அடக்கம் செய்யப்படும் பாரிஸில் இருக்கும் லெஸ் இன்வெலிட்ஸ் பகுதியில் நெப்போலியனின் எச்சம் புதைக்கப்பட்டது.






15.07.2022 மற்றும் 16.07.2022 ஆகிய நாட்களில் நடைபெற்ற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education regarding taking appropriate action on the subject matter discussed in the review meeting for all District Chief Educational Officers and District Educational Officers held on 15.07.2022 and 16.07.2022) ந.க.எண்: 0433443/ பிடி1/ இ2/ 2022, நாள்: 29-07-2022...



>>> 15.07.2022 மற்றும் 16.07.2022 ஆகிய நாட்களில் நடைபெற்ற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education regarding taking appropriate action on the subject matter discussed in the review meeting for all District Chief Educational Officers and District Educational Officers held on 15.07.2022 and 16.07.2022) ந.க.எண்: 0433443/ பிடி1/ இ2/ 2022, நாள்: 29-07-2022...






ஆசிரியர்களின் இதயம் என்ன இரும்பா? - குமுதம் சிநேகிதி இதழ் கட்டுரை (Do teachers have iron hearts? - Kumutham Snehithi Magazine Article)...



>>> ஆசிரியர்களின் இதயம் என்ன இரும்பா? - குமுதம் சிநேகிதி இதழ் கட்டுரை (Do teachers have iron hearts? - Kumutham Snehithi Magazine Article)...





ஈரோடு புத்தகத் திருவிழா - 2022 - ஆகஸ்ட் 5 முதல் 16வரை [Erode Book Fair - 2022 (05-08-2022 to 16-08-2022)]...

 ஈரோடு புத்தகத் திருவிழா - 2022 - ஆகஸ்ட் 5 முதல் 16வரை [Erode Book Fair - 2022 (05-08-2022 to 16-08-2022)]...







Today's (31-07-2022) Wordle Answer...

                        

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (31-07-2022) Wordle Answer: CRAMP










இன்றைய (31-07-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 31, 2022



குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் புதிய மாற்றத்தினை ஏற்படுத்துவீர்கள். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பேச்சு திறமைகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள். 


பரணி : மாற்றம் உண்டாகும்.


கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 31, 2022



தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். சொத்துச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வாகன மாற்றம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். கல்வி சார்ந்த துறைகளில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



கிருத்திகை : ஆதாயம் உண்டாகும். 


ரோகிணி : முயற்சிகள் மேம்படும்.


மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 31, 2022



தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். சுற்றுலா செல்வது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். நண்பர்களின் மூலம் மறைமுகமான ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். கனிவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள். 


திருவாதிரை : ஆர்வம் மேம்படும். 


புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

ஜூலை 31, 2022



உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த உதவி சாதகமாகும். உணவு சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதிலிருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். அடிப்படை கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தணிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை



புனர்பூசம் : உதவி சாதகமாகும். 


பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.


ஆயில்யம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 31, 2022



புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடமிருந்து சிறிது விலகி செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். திறமைகளை வெளிப்படுத்தும் போது பொறுமை அவசியம். வியாபாரம் சார்ந்த செயல்பாடுகளில் சுய கணிப்புகள் சற்று காலதாமதமாக நிறைவேறும். ஆதரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


 

மகம் : தேடல் அதிகரிக்கும். 


பூரம் : சோர்வு நீங்கும். 


உத்திரம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------




கன்னி

ஜூலை 31, 2022



உறவினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அலங்காரம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்து கொள்ளவும்.  செயல்பாடுகளில் இருக்கக்கூடிய நன்மை, தீமையை அறிந்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



உத்திரம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


அஸ்தம் : லாபகரமான நாள். 


சித்திரை : அனுகூலம் உண்டாகும். 

---------------------------------------




துலாம்

ஜூலை 31, 2022



எதிர்காலம் தொடர்பான முதலீடுகளால் ஆதாயம் உண்டாகும். சங்கம் தொடர்பான பணிகளில் புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வயதில் மூத்தவர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். விரயம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை 



சித்திரை : ஆதாயம் உண்டாகும். 


சுவாதி : புதுமையான நாள்.


விசாகம் : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 31, 2022



மருத்துவம் தொடர்பான துறைகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இறை நம்பிக்கை சார்ந்த சிந்தனைகளின் மூலம் தெளிவு பிறக்கும். இளைய சகோதரர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். புதுமையான உணவின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.


அனுஷம் : அலைச்சல்கள் உண்டாகும். 


கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும். 

---------------------------------------




தனுசு

ஜூலை 31, 2022



சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு புதிய நம்பிக்கையை உருவாக்கும். மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் தேவைகளை புரிந்து செயல்படுவீர்கள். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் உள்ள நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். புதுமை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் 



மூலம் : சாதகமான நாள்.


பூராடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


உத்திராடம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------




மகரம்

ஜூலை 31, 2022



உற்பத்தி சார்ந்த வியாபார முதலீடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றமான தருணங்கள் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய தெளிவு பிறக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திராடம் : கவனம் வேண்டும். 


திருவோணம் : தடுமாற்றம் உண்டாகும். 


அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 31, 2022



உறவினர்களின் வழியில் சுபகாரியம் தொடர்பான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவதன் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் முன்னேற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் ஆதரவையும், அறிமுகத்தையும் பெறுவீர்கள். ஆக்கம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



அவிட்டம் : சாதகமான நாள்.


சதயம் : முன்னேற்றம் உண்டாகும். 


பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------




மீனம்

ஜூலை 31, 2022



மனதில் இருக்கும் கவலைகள் குறையும். வழக்குகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். வாழ்க்கை துணைவரின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பழமொழிகளின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். விவாதங்களில் தேவையான ஆவணங்களை கையாளுவது மேன்மையை உண்டாக்கும். வாகன பயணங்களில் மிதவேகம் அவசியம். அனுகூலம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



பூரட்டாதி : கவலைகள் குறையும். 


உத்திரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும். 


ரேவதி : மேன்மையான நாள்.

---------------------------------------


Today's (30-07-2022) Wordle Answer...

                       

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (30-07-2022) Wordle Answer: BLUFF










இன்றைய (30-07-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஜூலை 30, 2022



குழந்தைகளின் கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய பதவியின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். கலை சார்ந்த துறையில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




அஸ்வினி : சிந்தனைகள் மேம்படும்.


பரணி : வாய்ப்புகள் ஏற்படும்.


கிருத்திகை : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூலை 30, 2022



வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பார்த்த சில கடன் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வாழ்க்கை துணைவரின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக பணிகளில் உழைப்பு அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




கிருத்திகை : உதவி கிடைக்கும்.


ரோகிணி : ஆர்வமின்மை குறையும்.


மிருகசீரிஷம் : உழைப்பு அதிகரிக்கும்.

---------------------------------------





மிதுனம்

ஜூலை 30, 2022



பயணங்கள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். நுணுக்கமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும். 


திருவாதிரை : சிந்தனைகள் மேம்படும்.


புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





கடகம்

ஜூலை 30, 2022



மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றமான சூழல் அமையும். பத்திரிக்கை தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். செல்வச்சேர்க்கையை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1 


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




புனர்பூசம் : தெளிவு பிறக்கும். 


பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


ஆயில்யம் : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------





சிம்மம்

ஜூலை 30, 2022



எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். பற்கள் தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் கல்வி சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். எதிர்ப்புகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்




மகம் : நெருக்கடியான நாள்.


பூரம் : புரிதல் உண்டாகும்.


உத்திரம் : கவனத்துடன் செயல்படவும்.

---------------------------------------





கன்னி

ஜூலை 30, 2022



எண்ணிய சில பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் தனவரவு அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை




உத்திரம் : காலதாமதம் உண்டாகும். 


அஸ்தம் : விவாதங்களை தவிர்க்கவும்.


சித்திரை : வரவு அதிகரிக்கும். 

---------------------------------------





துலாம்

ஜூலை 30, 2022



புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். அரசு தொடர்பான எதிர்பார்த்த பணிகள் நிறைவுபெறும். இறை நம்பிக்கை மனதில் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




சித்திரை : எண்ணங்கள் அதிகரிக்கும்.


சுவாதி : செல்வாக்கு மேம்படும். 


விசாகம் : பணிகள் நிறைவுபெறும். 

---------------------------------------





விருச்சிகம்

ஜூலை 30, 2022



அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். கௌரவ பொறுப்புகளின் மூலம் வெளிவட்டாரங்களில் மதிப்பு மேம்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் புதிய தேடலை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். ஆக்கப்பூர்வமான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




விசாகம் : காலதாமதம் குறையும். 


அனுஷம் : மேன்மை உண்டாகும்.


கேட்டை : கவனம் வேண்டும்.

---------------------------------------





தனுசு

ஜூலை 30, 2022



நேர்மைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். தோற்றப்பொலிவு மற்றும் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்




மூலம் : அங்கீகாரம் கிடைக்கும்.


பூராடம் : முன்னேற்றமான நாள்.


உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------





மகரம்

ஜூலை 30, 2022



ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு காலதாமதமாக கிடைக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ளவும். அபிவிருத்திக்கான முயற்சிகளில் பொறுமையை கடைபிடிக்கவும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். வாழ்க்கை துணைவருடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். குழப்பம் அகலும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




உத்திராடம் : முடிவு கிடைக்கும்.


திருவோணம் : பொறுமையை கடைபிடிக்கவும். 


அவிட்டம் : குழப்பம் உண்டாகும். 

---------------------------------------





கும்பம்

ஜூலை 30, 2022



உறவினர்களின் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒப்பந்தம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நிர்வாக திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 


சதயம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


பூரட்டாதி : திறமை வெளிப்படும்.

---------------------------------------





மீனம்

ஜூலை 30, 2022



சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பயணங்களில் புதிய அனுபவம் உண்டாகும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து செயல்படுவீர்கள். அமைதி வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




பூரட்டாதி : முயற்சிகள் கைகூடும். 


உத்திரட்டாதி : அனுபவம் உண்டாகும். 


ரேவதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------


பதவி உயர்வு மூலம் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் நிரப்புதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Recruitment of Block Educational Officer by Promotion - Proceedings of Director of Elementary Education) ந.க.எண்: 014884/ ஐ1/ 2022, நாள்: 29-07-2022...



>>> பதவி உயர்வு மூலம் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் நிரப்புதல் -  தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Recruitment of Block Educational Officer by Promotion - Proceedings of Director of Elementary Education) ந.க.எண்: 014884/ ஐ1/ 2022, நாள்: 29-07-2022...






TNSED (SMC) Parents Mobile App - பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி? (Download Link and Usage Method)...

 


TNSED (SMC) Parents Mobile App - பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி?


SMC- Mobile App- ஐ download / update செய்ய
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼


SMC - உறுப்பினர்களின் வருகை பதிவு செய்ய புதிய செயலி

TNSED- PARENTS - MOBILE APP- Direct Link
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து புதிய App- ஐ டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்...
👇👇👇👇👇👇👇

Click to download TNSED- Parents App...

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent




SMC கூட்டம் - 29.07.2022

🔊SMC கூட்டத்தில் பங்குபெறும் உறுப்பினர்களின் வருகையை TNSED parent App-ல் பதிவு செய்வதற்கான வழிமுறை...


🔊USER NAME:
▪️HM or SMC தலைவர் Mobile Number


🔒PASSWORD:

▪️Smc@Last 4 digit of HM or SMC தலைவர் Mobile number

S only Capital letter




Now

TN EMIS Parent app

Updation is available 


Update it 

All SMC members can 

Login this app.


*Username: Registered HM mobile number 


*Password: Smc@last four digits of the mobile number.


*App Link


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Union Education Minister Mr. Dharmendra Pradhan launched The Teacher App - Press Release

   டீச்சர் ஆப் (The Teacher App) என்ற செயலியைத்  தொடங்கி வைத்தார் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் - செய்தி வெளியீடு Union Educ...