கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் பயிற்சி - தமிழ் - PowerPoint Slides 2 (Ennum Ezhuthum Training - Tamil - PowerPoint Slides 2)...



>>> எண்ணும் எழுத்தும் பயிற்சி - தமிழ் - PowerPoint Slides 2 (Ennum Ezhuthum Training - Tamil - PowerPoint Slides 2)...

ITK Reading Marathon District & Block Leading Status...



>>> ITK Reading Marathon Block Leading Status...


>>> ITK Reading Marathon District & Block Rank...


>>> ITK Reading Marathon District Leading Status...



எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான வருகையினை கருத்தாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் (Attendance Registration Procedures for Resource Persons and Participants in Ennum Ezhuthum Training)...



>>> எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான வருகையினை கருத்தாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் (Attendance Registration Procedures for Resource Persons and Participants in Ennum Ezhuthum Training)...




எண்ணும் எழுத்தும் பயிற்சி செயலிவழியாக எவ்வாறு வருகை பதிவு  மேற்கொள்வது...?

1.TNSED APP(EMIS APP) update செய்யப்பட வேண்டும்.
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis

2. கருத்தாளர்கள் முதலில் வருகைப் பதிவு செய்ய வேண்டும்.
செயலியை 8 இலக்க username password கொண்டு login செய்யப்பட வேண்டும்.
Training Attendance பகுதியை select செய்து I am Trainer என்பதை தேர்ந்தெடுத்தால் 3 வினாக்கள் வரும்.
1.Training type என்பதற்கு எண்ணும் எழுத்தும் என்றும்
2. Udise code of location என்பதற்கு பயிற்சி மையம் நடைபெறும் UDISE CODE பதிவு செய்ய வேண்டும் ‌
3. Training time பதிவு செய்து save செய்ய வேண்டும்.
பதிவு செய்தபின் UNIQUE CODE வரும். இந்த UNIQUE CODE ஐ பங்கேற்பாளருக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த UNIQUE CODE ஐ பங்கேற்பாளர்கள் தங்கள் வருகைப் பதிவில் குறிப்பிட வேண்டும்.


பங்கேற்பாளர்கள் வருகைப் பதிவு


1. TNSEDசெயலியை update  செய்ய வேண்டும்.
2. தங்கள் 8 இலக்க username and password  மூலமாக Login செய்ய வேண்டும்.
3. Training Attendance ஐ select செய்து
I am attending training என பதிவு செய்ய வேண்டும்
4. கருத்தாளர் மூலம் வழங்கப்பட்ட UNIQUE CODE உள்ளீடு செய்ய வேண்டும்.
வருகை பதிவு நிறைவடைந்தது.


36 இந்திய காவல் பணி அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு (36 Indian Police Service Officers Transferred - Police Note No. SC/ 14/ 2022, Dated: 05-06-2022 Released)...



>>> 36 இந்திய காவல் பணி அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு (36 Indian Police Service Officers Transferred - Police Note No. SC/ 14/ 2022, Dated: 05-06-2022 Released)...

விபத்தை ஏற்படுத்திய பள்ளி வாகனம் - தட்டிக் கேட்ட தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய காவலர் கைது (School vehicle caused the accident - Police arrested for assaulting a private company employee who asked)...





>>> Traffic Police hit Swiggy Delivery boy at Fun Mall Signal in Coimbatore (Video)...


விபத்தை ஏற்படுத்திய பள்ளி வாகனம்;தட்டிக் கேட்ட ஸ்விக்கி ஊழியரை தாக்கிய காவலர் கைது...


கோவையின் பீளமேட்டில் உள்ள ஃபன்மால்(FUN MALL) அருகே,ஸ்விகியில் உணவு டெலிவிரி செய்யும் இளைஞர் ஒருவரை போக்குவரத்து காவலர் ஒருவர் தாக்கும் வீடியா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Coimbatore: Swiggy delivery boy attacked by policeman after he allegedly tried to stop a van that knocked down a woman

A policeman attached to the traffic wing of the Coimbatore City Police was caught on camera slapping a Swiggy delivery partner after he allegedly tried to stop a school van that knocked down a pedestrian woman. It happened at a busy traffic junction on Avinashi Road on Friday, visuals of which went viral on social media.

இதனையடுத்து,இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஸ்விக்கி ஊழியர் மோகனசுந்தரம் என்பவர் கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:


"நான் ஒரு பட்டதாரி,எனக்கு பிசினஸ் செய்ய விருப்பம்.எனவே ஸ்விக்கியில் வேலை பார்த்துக் கொண்டே சுய தொழில் செய்து வருகிறேன்.மேலும்,சுய தொழிலால் ஏற்பட்ட கடனை உணவு டெலிவரி வேலை செய்து கொண்டே அடைத்து வருகிறேன். 


இந்த சூழலில்,நேஷனல் மாடல் பள்ளி வாகனம் ஒன்று ஃபன்மால் அருகே ஒரு பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதன்பின்னர்,நான் அந்த வண்டியை நிறுத்த முயன்று நியாயம் கேட்டேன்.


ஆனால்,உடனே அங்கிருந்த போக்குவரத்து காவலர் சதீஷ் என்னை அடித்து,அதனை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம், நீ யார்?,மேலும் அந்த பள்ளி வாகனம் யாருடையது என தெரியுமா? என்று கேட்டு,சம்மந்தப்பட்ட பள்ளி வாகனத்தை அனுப்பி வைத்து விட்டு,என் செல்போன்,ஹெட்போன் உள்ளிட்டவற்றை பிடிங்கி சென்று விட்டார்.எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.இந்நிலையில்,உணவு டெலிவரி செய்யும் ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.



உணவு டெலிவரி ஊழியர் மோகனசுந்தரம் அளித்த புகாரின் பேரில் காவல்துறை இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும்,மேலும்,காவலர் சதீஸ் கைது செய்யப்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கோவை மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்றைய (05-06-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஜூன் 05, 2022



எண்ணிய சில பணிகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். பயனற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். சிந்தனை மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




அஸ்வினி : அலைச்சல் உண்டாகும்.


பரணி : பொறுமையுடன் செயல்படவும்.


கிருத்திகை : மனஅமைதி கிடைக்கும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூன் 05, 2022



உத்தியோக பணிகளில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்




கிருத்திகை : உற்சாகமான நாள்.


ரோகிணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.


மிருகசீரிஷம் : வெற்றிகரமான நாள்.

---------------------------------------





மிதுனம்

ஜூன் 05, 2022



சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் துரிதமும், விவேகமும் வெளிப்படும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். தாமதங்கள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.


திருவாதிரை : பயணங்கள் கைகூடும்.


புனர்பூசம் : நம்பிக்கை ஏற்படும். 

---------------------------------------





கடகம்

ஜூன் 05, 2022



எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் அதிகரிக்கும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும்.  பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் பொறுமையை கையாளவும். செலவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




புனர்பூசம் : அனுபவம் கிடைக்கும்.


பூசம் : தேடல் அதிகரிக்கும்.


ஆயில்யம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------





சிம்மம்

ஜூன் 05, 2022



எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உணவு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான வர்த்தகத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு  


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




மகம் : சேமிப்பு குறையும்.


பூரம் : கவனம் வேண்டும்.


உத்திரம் : கட்டுப்பாடுகள் குறையும்.

---------------------------------------





கன்னி

ஜூன் 05, 2022



வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு சார்ந்த உதவி சாதகமாக அமையும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். முயற்சிகள் ஈடேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




உத்திரம் : முன்னேற்றமான நாள்.


அஸ்தம் : தெளிவு பிறக்கும்.


சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------





துலாம்

ஜூன் 05, 2022



வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். பயணங்களின் போது புதிய அனுபவம் உண்டாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். புதிய துறை சார்ந்த தேடல் மற்றும் அதை சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




சித்திரை : மந்தமான நாள்.


சுவாதி : அனுபவம் உண்டாகும்.


விசாகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூன் 05, 2022



நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். குணநலன்களில் மாற்றம் ஏற்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் எண்ணிய செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கைகூடும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




விசாகம் : தடைகள் குறையும்.


அனுஷம் : கவனம் வேண்டும்.


கேட்டை : இடமாற்றம் கைகூடும்.

---------------------------------------






தனுசு

ஜூன் 05, 2022



வாழ்க்கை துணைவரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். அரசு சார்ந்த துறைகளில் நிதானம் வேண்டும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களையும், வாக்குறுதிகளையும் குறைத்துக் கொள்வது நல்லது. நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




மூலம் : அனுசரித்து செல்லவும்.


பூராடம் : நிதானம் வேண்டும்.


உத்திராடம் : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.

---------------------------------------






மகரம்

ஜூன் 05, 2022



உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். எதிர்பாராத உதவியின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அசதி குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


திருவோணம் : முன்னேற்றமான நாள்.


அவிட்டம் : உதவி கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

ஜூன் 05, 2022



குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். தனவரவை மேம்படுத்துவதற்கான உதவி கிடைக்கும். கலை சார்ந்த துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தெளிவு பிறக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.


சதயம் : உதவி கிடைக்கும்.


பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும். 

---------------------------------------





மீனம்

ஜூன் 05, 2022



வாழ்க்கை துணைவர் வழியில் பொருட்சேர்க்கை உண்டாகும். மனை சார்ந்த விஷயங்களில் லாபம் மேம்படும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். தவறிப்போன பொருட்கள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். நேர்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




பூரட்டாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.


உத்திரட்டாதி : தெளிவு ஏற்படும். 


ரேவதி : அங்கீகாரம் கிடைக்கும்.

---------------------------------------


2022-2023ஆம் கல்வி ஆண்டு - அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் - தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கடமைகள், பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் பங்கு தொடர்பான தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Tamil Nadu Elementary Education Regarding, 2022-2023 Academic Year - Student Admission in Government Schools - Duties of Headmaster and Teachers, The role of the School Management Committee and Illam Thedi Kalvi Scheme Volunteers) ந.க.எண்.010886 / ஜெ2 / 2022, நாள்: 30.05.2022...



>>> 2022-2023ஆம் கல்வி ஆண்டு - அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் - தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கடமைகள், பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் பங்கு தொடர்பான தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Tamil Nadu Elementary Education Regarding, 2022-2023 Academic Year - Student Admission in Government Schools - Duties of Headmaster and Teachers, The role of the School Management Committee and Illam Thedi Kalvi Scheme Volunteers) ந.க.எண்.010886 / ஜெ2 / 2022, நாள்: 30.05.2022... 


ந.க.எண்.010886 / ஜெ2 / 2022, நாள்: 30.05.2022


பொருள் : தொடக்கக் கல்வி - 2022-23ஆம் கல்வி ஆண்டு - அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் - தொடர்பாக,


தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 202223ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பின்வருமாறு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.



 

தமிழ்நாட்டில் பள்ளிகளில் சேராத மாணவர்கள் எவரும் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். 86வது சட்டத் திருத்தத்தின்படி தொடக்கக் கல்வி, அடிப்படை உரிமையாக்கப்பட்டு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே, மாணவர்களை அரசு பள்ளியை நோக்கி ஈர்க்கும் வண்ணம் செயல்பட வேண்டியது பெற்றோர், ஆசிரியர் மற்றும் தொடக்கக் கல்வி நிர்வாகம் என்ற முக்கூட்டின் தலையாய கடமையாகும். எனவே, 5 வயது பூர்த்தியடைந்த அனைத்து குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கு கீழ்க்கண்ட முயற்சிகளை மேற்கொள்ளலாம். * மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கூட்டம்


- ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, அதில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களையும் பங்கு பெறச் செய்து அரசு பள்ளிகளில் கட்டணமே பெறப்படாமல் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகின்றது என்பதை எடுத்துரைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்களை (PRO) அணுகி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக் குறித்து செய்தித்தாட்களில் செய்திகள் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இப்பணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் விரைந்து முடிக்க வேண்டும்.



 * தொடக்கக் கல்வி பதிவேடு

பள்ளிவாரியாக 5+ மாணவர்கள் ஏற்கனவே எடுத்துள்ள கணக்கெடுப்பை உறுதி செய்தல் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மக்கள்தொகை கணக்கெடுப்பை வீடுகள்தோறும் சென்று சரியாகவும் துல்லியமாகவும் எடுத்து தொடக்கக் கல்வி பதிவேடானது (EER) ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் புதுப்பிக்கப்படுகிறது. இந்த பதிவேட்டில் ஐந்து வயது நிரம்பிய அனைத்து மாணவர்களையும் முதல் வகுப்பில் சேர்த்தல் வேண்டும். 



* பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்துதல்


அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக் கல்வி வழங்கப்படுவதை பொது மக்கள் அனைவரும் அறியும் வண்ணம் பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க செய்ய வேண்டும்.



* விழிப்புணர்வு மற்றும் சேர்க்கை பேரணி நடத்துதல்


அரசுப் பள்ளிகளில் காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தமிழ் வழிப் பிரிவுகளுடன் துவங்கப்பட்டுள்ள ஆங்கில வழி பிரிவுகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பதனையும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் சார்ந்தும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பின் படி 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளதையும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு பேரணி நடத்திட வேண்டும்.

விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சாரமானது பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புகள் அதிகம் உள்ள இடங்கள் இவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.


அனைத்து ஆசிரியர்களையும் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை கோடை விடுமுறை இறுதியில் பள்ளிகள் திறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே நடைபெறச் செய்யுமாறு பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி மாணவர் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திற்கு கட்டாயமாக உயர்த்த அறிவுறுத்த வேண்டும். 


* விழிப்புணர்வு பேரணி நடத்துவதற்கான முன்னேற்பாடுகள்


பேரணிக்கான முன்னேற்பாடு சார்பான கூட்டம் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடத்தப்பட வேண்டும். பேரணி நடத்துவதற்கான இடம், நேரம், நிகழ்வுகள், விளம்பரம் போன்ற விவரங்களை விரிவாக கலந்துரையாடி தமிழகம் முழுவதும் மிகச் சிறப்பாக பேரணி நடத்திடவும் கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றிடவும், இந்தியாவிலேயே தமிழகம் பள்ளி வயது அனைத்து குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்த்துவிட்டது என்று பெருமை அடையும் வகையிலும் விரிவான ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.


பள்ளி அளவிலும், ஊராட்சி அளவிலும், வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் ஒரே நேரத்தில் இந்நிகழ்வுகள் நடைபெற வேண்டும். பள்ளி செல்லாக் குழந்தைகளின் பெற்றோர்களை இனம் கண்டு, அவர்களையும் அழைத்து அறிவுரைகள் வழங்கிப் பேரணியில் இடம் பெறச் செய்திட வேண்டும். இப்பேரணிக்காகக் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. > கல்வி தொலைக்காட்சி, TAC TV மற்றும் அனைத்து தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம் விழிப்புணர்வு விளம்பரம் செய்தல்


பேரணி பற்றிய சுவரொட்டிகள். > வரவேற்பு வளைவுகள்  - துணி / Flex board விளம்பரங்கள். > ஆட்டோ / வேன் மூலம் ஒலிபெருக்கி விளம்பரம்.



>>> 2022-2023ஆம் கல்வி ஆண்டு - அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் - தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கடமைகள், பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் பங்கு தொடர்பான தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Tamil Nadu Elementary Education Regarding, 2022-2023 Academic Year - Student Admission in Government Schools - Duties of Headmaster and Teachers, The role of the School Management Committee and Illam Thedi Kalvi Scheme Volunteers) ந.க.எண்.010886 / ஜெ2 / 2022, நாள்: 30.05.2022... 

எண்ணும் எழுத்தும் பயிற்சி (Ennum Ezhuthum Training) - Teaching Learning Materials - Module...

 


>>> எண்ணும் எழுத்தும் பயிற்சி (Ennum Ezhuthum Training) - Teaching Learning Materials - Module...


எண்ணும் எழுத்தும் பயிற்சி - தமிழ் - (Ennum Ezhuthum Training - Tamil ) PowerPoint Slides...

 


>>> எண்ணும் எழுத்தும் பயிற்சி - தமிழ் - (Ennum Ezhuthum Training - Tamil ) PowerPoint Slides...



இன்றைய (04-06-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஜூன் 04, 2022



ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில் அபிவிருத்தி தொடர்பான எண்ணங்கள் மேம்படும். நண்பர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாமதம் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




அஸ்வினி : பிரச்சனைகள் குறையும்.


பரணி : எண்ணங்கள் மேம்படும்.


கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூன் 04, 2022



வருமானத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். எந்தவொரு செயலையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபாரம் நிமிர்த்தமான அரசு சார்ந்த உதவி சாதகமாக அமையும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




கிருத்திகை : முயற்சிகள் அதிகரிக்கும்.


ரோகிணி : விருப்பம் நிறைவேறும்.


மிருகசீரிஷம் : சாதகமான நாள்.

---------------------------------------





மிதுனம்

ஜூன் 04, 2022



புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். வரவுக்கேற்ப செலவுகள் ஏற்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் சிந்தித்து செயல்படவும். காப்பீடு சார்ந்த துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.


திருவாதிரை : தாமதமான நாள்.


புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------





கடகம்

ஜூன் 04, 2022



நண்பர்களை பற்றிய புரிதல் உண்டாகும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்படும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். எதிர்ப்புகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.


பூசம் : மாற்றமான நாள்.


ஆயில்யம் : தெளிவு பிறக்கும்.

---------------------------------------





சிம்மம்

ஜூன் 04, 2022



குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமான முடிவினை ஏற்படுத்தும். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




மகம் : மகிழ்ச்சியான நாள்.


பூரம் : மாற்றம் ஏற்படும்.


உத்திரம் : சாதகமான நாள்.

---------------------------------------





கன்னி

ஜூன் 04, 2022



பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். பாராட்டுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திரம் : அனுகூலமான நாள்.


அஸ்தம் : வாய்ப்புகள் உண்டாகும்.


சித்திரை : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------





துலாம்

ஜூன் 04, 2022



உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். உறவினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் புதுவிதமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




சித்திரை : முன்னேற்றம் ஏற்படும்.


சுவாதி : போட்டிகள் குறையும்.


விசாகம் : புதுமையான நாள்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூன் 04, 2022



செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபாரம் தொடர்பான பணிகளில் சோர்வின்றி செயல்படவும். புதிய முதலீடு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆதாயகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




விசாகம் : வரவு கிடைக்கும். 


அனுஷம் : முயற்சிகள் கைகூடும். 


கேட்டை : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------





தனுசு

ஜூன் 04, 2022



பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எண்ணிய சில பணிகளை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நிலம்




மூலம் : ஏற்ற, இறக்கமான நாள்.


பூராடம் : காலதாமதம் உண்டாகும். 


உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





மகரம்

ஜூன் 04, 2022



கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபார பணிகளில் புதிய கூட்டாளிகளை இணைப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5 


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும் 


திருவோணம் : திறமைகள் வெளிப்படும்.


அவிட்டம் : பேச்சுவார்த்தைகள் கைகூடும்.

---------------------------------------





கும்பம்

ஜூன் 04, 2022



கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பம் படிப்படியாக குறையும். மனதை உறுத்திய விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் முடிவுகள் சாதகமாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




அவிட்டம் : பிரச்சனைகள் நீங்கும்.


சதயம் : தெளிவு கிடைக்கும்.


பூரட்டாதி : கவனம் வேண்டும்.

---------------------------------------





மீனம்

ஜூன் 04, 2022



செலவுகளின் தன்மையை அறிந்து செயல்படுவதன் மூலம் சேமிப்பு மேம்படும். முதலீடு தொடர்பான விஷயங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு




பூரட்டாதி : சேமிப்பு மேம்படும்.


உத்திரட்டாதி : புரிதல் உண்டாகும்.


ரேவதி : மந்தத்தன்மை குறையும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்