கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அடுத்த வாரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் - சுகாதாரத் துறை...

 


நாட்டில் அடுத்த வாரம் முதல் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.


ரஷிய நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி ஜூலை மாதம் முதல் இந்தியாவில் தொடக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு...



தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.


"ஆக்ஸிஜன்" உற்பத்தி செய்ய தமிழகத்தில் முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30 சதவீத மூலதன மானியம் - தமிழக அரசு அறிவிப்பு.


மானிய சலுகை பெற இந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் உற்பத்தியை தொடங்க வேண்டும்.


முன்னுரிமை அடிப்படையில் சிப்காட், சிட்கோ மூலம் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்படும் - தமிழக அரசு.


ரேஷனில் கொரோனா நிவாரணப் பொருட்களாக 13 மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்க தமிழக அரசு திட்டம் எனத் தகவல்

 





உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை - துறை கட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் தொடர்பான நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு...

 


அரசாணை எண் 2014 , நாள்: 12-05-2021 - உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை (CM in your Constituency)  - துறை கட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் தொடர்பான நிர்வாக ஒப்புதல் வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது...


>>> அரசாணை எண் 2014, நாள்: 12-05-2021...



புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழையவே முடியாது: அமைச்சர் பொன்முடி உறுதி...

 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழையவே முடியாது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  உறுதிபடத் தெரிவித்துள்ளார்.



ஆன்லைன் பொறியியல் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்துள்ளதாகக் கூறியிருந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இதுதொடர்பாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். சென்னை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித்துறை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


இதையடுத்து நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ''அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட மதிப்பெண் குறைந்துள்ளதாகப் புகார் அளித்துள்ளனர். அவர்கள் உள்ளிட்ட 4 லட்சம் மாணவர்களும் விருப்பப்பட்டால் தேர்வை எழுதலாம். முன்பு ஆன்லைன் தேர்வு ஒரு மணி நேரமாக இருந்தது. தற்போது மூன்று மணி நேரம் தேர்வு நடத்தப்பட உள்ளது. மற்ற பல்கலைக்கழகங்களில் தேர்வு நடத்தப்படுவது போல அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும். எனினும் இத்தேர்வை எழுதுவதற்கு தேர்வு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை



தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்டு, மாணவர்கள் மேற்படிப்புக்கு அல்லது வேலைக்குச் செல்லலாம். இந்த மறு தேர்வுகள் நடந்து முடிந்த பிறகு, வழக்கமான தேர்வுகளும் விரைவில் நடைபெறும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். நீதிமன்றம் அறிவித்தது போல நாங்கள் தேர்வை முறையாக நடத்துகிறோம். தேர்வைப் புறக்கணிக்கவில்லை.



எனினும் ஏற்கெனவே தேர்வு கட்டணம் செலுத்தாதவர்கள் இந்த முறை தேர்வுக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு தேர்வை எழுத வேண்டும். மீண்டும் தேர்வு எழுதினாலும் எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதுவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.



உயர் கல்வித்துறைச் செயலாளர் புதிய கல்விக் கொள்கை, அதில் உள்ள குறைகள் பற்றியும் புதிய கல்விக் கொள்கையை எப்படிச் செயல்படுத்த முடியும் என்பது குறித்தும் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் அவை அனைத்தையும் நாங்கள் ஆலோசித்து, நிச்சயமாக மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் செயல்படுவோம். புதிய கல்விக்கொள்கை நிச்சயம் தமிழ்நாட்டில் நுழையவே முடியாது  என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது'' என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சாலைகள் போடுவது குறித்து நெடுஞ்சாலைத் துறைக்கு தலைமைச் செயலாளர் புதிய அறிவுறுத்தல்...

 

நெடுஞ்சாலை துறைக்கு தலைமைச் செயலாளர் புதிய அறிவுறுத்தல். 

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளரின் கடித எண்: 5916/ எச்.என்.2/ 2021-1, நாள்:12-05-2021...

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் சாலைகளின் மேற்பரப்பை சுரண்டி எடுத்த பின்னரே புதிய சாலைகள் போட வேண்டும்.



>>> தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளரின் கடித எண்: 5916/ எச்.என்.2/ 2021-1, நாள்:12-05-2021...




சிறுசேமிப்பு பணம் ரூ.10,135ஐ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய அரசுப் பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவன்...

 கொரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளுடைய வாழ்க்கை வீடு எனும் சிறு கூட்டிற்குள் அடங்கிவிட்டது. பள்ளி பாடங்களைத் தொடர்வதற்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு பிரதானமாக ஐபோன், Tab, கணினி ஆகியவை அவசியமாகிவிட்டது. குறிப்பாகக் கிராமப்புற பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு இணைய வசதியுடன் கூடிய தொழில்நுட்பங்கள் அத்தியாவசிய தேவையாகும்.


இந்நிலையில் வேதாரண்யம் அடுத்த தகட்டூர் பகுதியை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவர் சுஹாஷன் தன்னுடைய ஆன்லைன் படிப்பிற்காக சஞ்சாய்கா திட்டத்தின் கீழ் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து பல மாதங்களாக சிறுக சிறுக பணம் சேர்த்து வைத்துள்ளார்.


சிறுவனின் சிறுசேமிப்பு

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதி வழங்க அனைவரும் முன்வரவேண்டும் எனப் பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்தார்.



முதல்வரின் இந்த கோரிக்கை வசதிபடைத்தவர்களிடம் சென்றடைந்ததை விட சுஹாஷன் போன்ற சாதாரண ஏழை குழந்தைகளிடம் மனதில் இடம்பிடித்துள்ளது.


நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தகட்டூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் - கீதா தம்பதியரின் மகன் சுஹாஷன். ராம கோவிந்தன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவரான இவர் டேப் வாங்குவதற்காகத் தந்தையிடம் பணம் வாங்கி, சஞ்சாய்கா திட்டத்தில் சிறுக சிறுக சேர்த்து வந்துள்ளார்.


இந்நிலையில் கொரோனா நிவாரண நிதி வழங்க அனைவரும் முன்வரவேண்டும், என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து, தனது பள்ளி ஆசிரியர் அறிவுரைப்படி தான் சேர்த்து வைத்திருந்த ரூபாய் 10 ஆயிரத்து 135 பணத்தை கொரோனா நிதியாக வழங்கியுள்ளார்.


பெற்றோருடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சிறுவன் சுஹாசன் 3 ஆண்டுகளாக சிறுகச் சிறுக சேர்த்த 10 ஆயிரத்து 135 ரூபாய்க்கான காசோலையை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயரிடம் வழங்கினார்.


சென்னை போன்ற நகர பகுதியில் Tab போன்ற தொழில்நுட்ப எளிதில் கிடைத்துவிடும். ஒரே வீட்டில் தனித்தனியாகப் பலர் இந்த சாதனத்தைப் பயன்படுத்துவார்கள். ஆனால் கிராமப்புறத்தைச் சேர்ந்த சுஹாஷன் தன்னுடைய ஆன்லைன் வகுப்பிற்காக ஆசை ஆசையாக tab வாங்க சேர்த்துவைத்த பணத்தை முதல்வர் கொரோனா நிதிக்கு வழங்கியுள்ளார்.


தான் சேர்த்துவைத்த தொகையைக் கொடுப்பதால் தனக்கு tab வாங்க இன்னும் பல நாட்கள் ஆகும் என்பது சுஹாஷனுக்கு தெரியும். ஆனால் இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிர் காக்க உதவிக்கரம் நீட்டிய சிறுவனின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...