கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வெற்றி பெற நினைப்பவர்கள் ஊக்கத்தை தகர்க்கும் சொற்களை கவனிக்கக்கூடாது (இன்று ஒரு சிறு கதை)...



 "வெற்றி"


ஒரு பெரிய கோபுரத்தில் பல பல்லிகள் வசித்து வந்தன. ஒரு நாள் அவை ஒரு பந்தயம் நடத்தின.


யார் முதலில் கோபுரத்தின் உச்சியை அடைவது என்று போட்டி.


நூற்றுக்கணக்கான பல்லிகள் மடமடவென்று ஏறத் தொடங்கின.


கொஞ்ச தூரம் போனதுமே பல்லிகளுக்கு தெரிந்துவிட்டது. இது தங்கள் சக்திக்கு இயலாத காரியமென்று.


“முடியாது. முடியவே முடியாது” பல்லிகளில் ஒரு கூட்டம் பந்தயம் தொடங்கி சில நிமிடங்களுக்கு உள்ளாகவே விலகிக் கொண்டது.


இன்னும் கொஞ்ச தூரம் போனதும் மீதியிருந்த பல்லிகளில் கணிசமானவை விலகிக் கொண்டன. *“உயரத்தை அடையும் போது நமக்கு உயிர் இருக்காது”* என்று கத்தின.


ஒரே ஒரு பல்லி மட்டும் மூச்சைப் பிடித்துக்கொண்டு முன்னேறிக் கொண்டே இருந்தது.


கீழே இருந்த பல்லிகள் எல்லாம் பெருங்குரல் எடுத்து கத்தின.


“தற்கொலை முயற்சிடா ”


எந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் மேலும் சில நிமிடங்களில் உச்சியை அடைந்தது அந்த குட்டிப் பல்லி.


எல்லாப் பல்லிகளுக்கும் ஆச்சரியம். எப்படி இவனால் மட்டும் ஜெயிக்க முடிந்தது.


அந்த குட்டிப் பல்லியின் அண்ணன் ரகசியத்தை போட்டு உடைத்தது.


*“அவனுக்கு காது கேட்காது”.*


*நாமும் சில நேரங்களில் இப்படி தான் இருக்க வேண்டும்.*


*வெற்றி பெற நினைப்பவர்கள் ஊக்கத்தை தகர்க்கும் சொற்களை காதில் போட்டுக் கொள்ளக்கூடாது.*


நம்மை சிதைக்க எப்பேர்ப்பட்ட மோசமான கருத்துக்கள் கூறப்பட்டாலும் நாம் எதையும் பொருட்படுத்தக் கூடாது.


*முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.*


*பொறுமையைவிட மேலான தவமுமில்லை. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*


*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை.🤝


பள்ளிகளில் CCTV கேமரா பொருத்தப்படும் -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...


பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.


பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும், மாணவிகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.


தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிக்கூடங்களில், சி சி டி வி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.



- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி...






பாதிப்பு குறைவான மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு...









 பாதிப்பு குறைவான மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு...


#தமிழகத்தில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி


தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்கலாம்


தேநீர் கடைகளில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி


நாளை (14-06-2021) முதல் காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரை தேநீர் கடைகள் செயல்படலாம்


தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி இல்லை



#நாளை (14-06-2021) முதல் இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி


#அரசு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்களுக்கு அனுமதி




#பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல இனிப்பு, காரம் விற்கும் கடைகளுக்கும் அனுமதி.


#காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இனிப்பு, கார வகை கடைகள் இயங்கலாம்


இனிப்பு, கார வகைகளை பார்சலில் மட்டுமே விற்க அனுமதி...



>>> செய்தி வெளியீடு எண்: 269, நாள்: 13-06-2021...


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க முதலமைச்சர் மற்றும் VIPக்கள் வருகையின் பொழுது பாதுகாப்பு பணிகளிலிருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்து DGP உத்தரவு...

 முதலமைச்சர் உள்ளிட்ட வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு - டிஜிபி திரிபாதி உத்தரவு...


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவையடுத்து டிஜிபி உத்தரவு...




அரசுப் பள்ளிகளில் நாளை(14-06-2021) முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...

 📚 அரசுப் பள்ளிகளில் நாளை(14-06-2021) முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...


📚 நாளை முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை...




20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு...



 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு...


நாகை ஆட்சியராக உள்ள பிரவீன் நாயர் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநராக நியமனம்.


சமக்ர சிக்சா அபியான் மாநில திட்ட இயக்குநராக சுதன் நியமனம்.


ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக லதா நியமனம்


விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை வேளாண் துறை இயக்குநராகவும், வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும் நியமனம்.


கோவை ஆட்சியர் நாகராஜன் நில நிர்வாகத்துறை ஆணையராகவும், திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள் பதிவுத்துறை ஐ.ஜி.யாகவும் நியமனம்.


திருவண்ணாமலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி சுற்றுலாத்துறை இயக்குநராகவும்,  அரியலூர் ஆட்சியர் ரத்னா சமூக நலத்துறை இயக்குநராகவும் நியமனம்.


>>> Click here to Download G.O.Rt.No.: 2378, Dated: 13-06-2021...


உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் தகுதித்தேர்வில் தேர்ச்சி கட்டாயம் - யுஜிசி அறிவிப்பு...

 உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் தகுதித்தேர்வில் தேர்ச்சி கட்டாயம் - UGC அறிவிப்பு...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...