கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசின் புதிய உடல்நலக் காப்பீடு திட்டம் - NHIS 2021 முக்கிய அம்சங்கள்...

 


தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், 01-07-2021 முதல் அமலுக்கு வந்தது. இத்திட்டம் நான்கு ஆண்டுகள் அமலில் இருக்கும்.


தமிழகத்தில், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்' நிறுவனத்துடன் இணைந்து, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. 


இந்த திட்டம், 2025 ஜூன் 30 வரை, நான்கு ஆண்டுகள் அமலில் இருக்கும். மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான மாத சந்தா 180 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்தொகை ஊழியர்களின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். கணவன், மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்தால், ஒருவரிடம் மட்டுமே சந்தா வசூலிக்கப்படும். காப்பீடு தொகை 4 லட்சம் ரூபாய் என்பது, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.


புற்றுநோய், உறுப்பு மாற்று சிகிச்சை போன்ற வற்றுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட 7.50 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாயாகவும்; கண்புரை அறுவை சிகிச்சைக்கு வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாய், 30 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. அரசு அலுவலகங்களில் மதிப்பூதியம், தொகுப்பூதியம், தினக்கூலி பெறுவோர், தற்காலிக பணியாளர்கள் போன்றோருக்கு, இத்திட்டம் பொருந்தாது.


புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், 203 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கு 1,163 மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். இத்திட்டத்தின் கீழ், குடும்ப உறுப்பினர்கள் பயன்பெற முடியும். திருமணமாகாத ஊழியர்களாக இருந்தால், அவர்களின் பெற்றோர் பயன்பெறலாம்.

 

>>> NHIS மாத சந்தா 01-07-2021 முதல் ரூ.300ஆக உயர்வு - 31-06-2025வரை ரூ.5இலட்சம் வரையிலான சிகிச்சைக்கு அனுமதி - அனுமதிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் பட்டியல் - அரசாணை (G.O.Ms.No.: 160, Dated: 29-06-2021) வெளியீடு...


SAMAGRA SHIKSHA & SCERT - All India Radio - Audio Lesson Schedule for Classes X and XII (July 2021)...



 SAMAGRA SHIKSHA AND 

STATE COUNCIL OF EDUCATIONAL RESEARCH AND TRAINING, CHENNAI - 06

All India Radio - Audio Lesson Schedule for Classes X and XII (30 Days).


>>> Click here to Download  SAMAGRA SHIKSHA & SCERT - All India Radio - Audio Lesson Schedule for Classes X and XII (July 2021)...


கல்வியியல் மேலாண்மை தகவல் முறைமை தரவுகள் (EMIS) புதுப்பித்தல், 2021-2022 -ஆம் கல்வியாண்டிற்கு 1-7 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ பாடப்புத்தகம் தேவைப்பட்டியல் கோரி பள்ளிக்கல்வி ஆணையர் கடிதம்...

 


கல்வியியல்  மேலாண்மை தகவல் முறைமை தரவுகள் (EMIS) புதுப்பித்தல்,  2021-2022 -ஆம் கல்வியாண்டிற்கு 1-7 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ பாடப்புத்தகம் தேவைப்பட்டியல் கோரி பள்ளிக்கல்வி ஆணையர் கடிதம் ந.க.எண்: 30821/ இ/ இ3/ 2021, நாள்: 25-06-2021...


>>> பள்ளிக்கல்வி ஆணையர் கடிதம் ந.க.எண்: 30821/ இ/ இ3/ 2021, நாள்: 25-06-2021...



மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?

 


ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி அகவிலைப்படி உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். கொரோனா காரணமாக 2020 ஜன., 1 முதல், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் வரை, மூன்று தவணை அகவிலைப்படி நிலுவையில் உள்ளது. இந்நிலையில், 'ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும்; ஓய்வூதியர் விதிமுறைகள் தளர்த்தப்படும்' என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை, மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது.


அதனால், நடப்பு ஜூலையில் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என, மத்திய அரசின் 52 லட்சம் ஊழியர்களும், 60 லட்சம் ஓய்வூதியர்களும் எதிர்பார்த்தனர். இது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், மத்திய அரசு அறிவிப்பில் உள்ள முக்கிய ஐந்து அம்சங்கள் குறித்து டில்லி வட்டாரங்கள் கூறியதாவது:


* ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து, 28 சதவீதமாக உயர்த்தப்படலாம். இது குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம்


* மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வசதி கடன் திட்டம், 2020 ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் மேலும் நீட்டிக்கப்படலாம். இந்த திட்டத்தில், 7.9 சதவீத வட்டியில் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டம் தொடர்பான விதிமுறைகளை சமீபத்தில் மத்திய அரசு மேம்படுத்தியுள்ளது


* கடந்த ஜூன் 15 முதல், ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களின் பயணப் படி கோரிக்கைக்கான கால வரம்பு, 60 நாட்களில் இருந்து, 180 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது


* ஓய்வூதியம் குறித்த விபரங்கள் அனைத்தையும் ஓய்வூதியதாரருக்கு மின்னஞ்சல், குறுந்தகவல், 'வாட்ஸ் ஆப்' ஆகியவற்றில் அனுப்ப, வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநடைமுறை, 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது


* குடும்ப ஓய்வூதிய விதிமுறைகளை மத்திய அரசு மாற்றி அமைத்து உள்ளது. இதன்படி, மத்திய அரசு ஊழியர் இறந்தால், இறப்பு சான்றிதழுடன்விண்ணப்பிக்கும் குடும்ப வாரிசுக்கு, உடனடியாக பகுதி ஓய்வூதியம் வழங்கப்படும்


* உரிய விதிமுறைகளை பூர்த்தி செய்த பின், குடும்ப ஓய்வூதியம் நிலுவையுடன் முழுதுமாக வழங்கப்படும். இதனால், வாரிசுதாரர்கள் குடும்ப ஓய்வூதிய நடைமுறைகள் முடியும் வரை ஓய்வூதியம் பெற முடியாத நிலை தவிர்க்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாததால் அரசு பள்ளிகளில் TC இன்றி மாணவர் சேர்க்கை அதிகரிப்பு...



மாற்றுச் சான்றிதழ் இன்றி மாணவர்களை சேர்க்க, அரசு அனுமதித்து உள்ளதால், தனியார்பள்ளி மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர்வது அதிகரித்துள்ளது.


அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, கடந்த கல்வி ஆண்டுக்கான கட்டணப் பாக்கியை வசூலித்து, அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாணவர்களை தரம் உயர்த்தும் பணிகளை மேற்கொண்டு உள்ளன.இதில், கடந்த ஆண்டு கட்டணம் செலுத்தாமல், பாக்கி உள்ளவர்களில் பலர், கட்டணத்தை செலுத்துவதற்கு பதில், வேறு பள்ளிகளுக்கு மாறி வருகின்றனர்.


பல மாவட்டங்களில், தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோர், அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர். 'கட்டணப் பாக்கி செலுத்தினால் மட்டுமே, மாற்றுச் சான்றிதழ்களை வழங்குவோம்' என, தனியார் பள்ளி நிர்வாகத்தினர் கெடுபிடி காட்டுவதால், மாற்றுச் சான்றிதழ் வாங்காமலேயே, மாணவர்கள் பிற பள்ளிகளுக்கு மாறுகின்றனர்.


தமிழக அரசின் சார்பில், 2010ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளில் சேர்வதற்கு மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை என, கூறப்பட்டுள்ளது. இதை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என, பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவை பயன்படுத்தி, தற்போது மாற்று சான்றிதழ் இன்றி, அரசு பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.


இதனால், பல ஆயிரம் கட்டணப் பாக்கியில் இருந்து, பெற்றோர் தப்பித்துள்ளனர். அதேநேரம், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளோ, மாணவர்களிடம் கட்டணம் பெற முடியாமல், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளைப் பொதுமக்கள் கவனமுடன் கையாள முதலமைச்சர் அவர்கள் விழிப்புணர்வு செய்தி அறிக்கை வெளியீடு...

 


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளைப் பொதுமக்கள் கவனமுடன் கையாள முதலமைச்சர் அவர்கள் விழிப்புணர்வு செய்தி அறிக்கை வெளியீடு...


>>> செய்திக்குறிப்பு எண்: 27, நாள்: 04-07-2021...


இன்றைய (05-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 05, 2021



சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். சொத்துப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை



அஸ்வினி : மாற்றங்கள் உண்டாகும்.


பரணி : ஒற்றுமை ஏற்படும்.


கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூலை 05, 2021



பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வீர்கள். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் சாதகமாகும். காதில் இருந்துவந்த இன்னல்கள் மற்றும் வலிகள் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மைக்கான சிந்தனைகள் மேம்படும். விளையாட்டு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : புரிதல் உண்டாகும்.


ரோகிணி : வெற்றிகள் சாதகமாகும்.


மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 05, 2021



மற்றவர்களின் உள்ளத்தில் இருக்கக்கூடிய எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பத்திரம் தொடர்பான பணிகளில் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். வித்தியாசமான கற்பனைகளின் மூலம் தூக்கமின்மை சிலருக்கு ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.


திருவாதிரை : பொறுமை வேண்டும்.


புனர்பூசம் : லாபம் அதிகரிக்கும்.

---------------------------------------




கடகம்

ஜூலை 05, 2021



கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். பேச்சுத்திறமைகளின் மூலம் லாபம் அடைவீர்கள். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில யோகங்களின் மூலம் லாபம் உண்டாகும். பரந்த மனப்பான்மை மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் மூலம் வருமானம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



புனர்பூசம் : சாதகமான நாள்.


பூசம் : அறிமுகம் கிடைக்கும்.


ஆயில்யம் : இலக்குகள் பிறக்கும்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 05, 2021



வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றி பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். தந்திரமான செயல்பாடுகளின் மூலம் எண்ணிய செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், பதவிகளும் சிலருக்கு உண்டாகும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். இளைய சகோதரர்களுக்கு லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மகம் : புரிதல் ஏற்படும்.


பூரம் : முன்னேற்றமான நாள்.


உத்திரம் : லாபம் உண்டாகும்.

---------------------------------------




கன்னி

ஜூலை 05, 2021



ரகசிய செயல்பாடுகளின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கால்நடைகள் வளர்ப்பு தொடர்பான விஷயங்களில் லாபம் மேம்படும். புதிய இடங்களுக்கு செல்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் ஆதாயமான சூழ்நிலைகள் ஏற்படும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படுவது அவசியமாகும். மனதில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


அஸ்தம் : ஆதாயமான நாள்.


சித்திரை : தெளிவு பிறக்கும்.

---------------------------------------




துலாம்

ஜூலை 05, 2021



எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நல்லது. அஞ்ஞான சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பங்கள் உண்டாகும். குடும்ப பெரியவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட அனுபவமும், அலைச்சல்களும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சித்திரை : சேமிப்புகள் குறையும்.


சுவாதி : அனுசரித்து செல்லவும்.


விசாகம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 05, 2021



வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். அரசு சார்ந்த உதவிகள் மற்றும் அதை சார்ந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத்துணைவரின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



விசாகம் : சாதகமான நாள்.


அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.


கேட்டை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




தனுசு

ஜூலை 05, 2021



உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கூட்டாளிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் விரயங்கள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



மூலம் : ஆதரவான நாள்.


பூராடம் : புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.


உத்திராடம் : விரயங்கள் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

ஜூலை 05, 2021



எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். புத்திக்கூர்மையான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். மறைமுகமாக இருக்கக்கூடிய சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். இயந்திரம் தொடர்பான கலை பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திராடம் : பாராட்டுகள் கிடைக்கும்.


திருவோணம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


அவிட்டம் : லாபகரமான நாள்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 05, 2021



கல்வி கற்கும் மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனதில் புதுவிதமான ஆசைகள் தோன்றும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்



அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.


சதயம் : தடைகள் குறையும்.


பூரட்டாதி : விருப்பங்கள் நிறைவேறும்.

---------------------------------------





மீனம்

ஜூலை 05, 2021



வீட்டில் மனதிற்கு பிடித்தவாறு சில மாற்றங்களை செய்வீர்கள். செய்யும் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



பூரட்டாதி : அங்கீகாரம் கிடைக்கும்.


உத்திரட்டாதி : தெளிவான நாள்.


ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...