கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தரம் உயர்த்தப்படும், விரிவாக்கம் செய்யப்படும் பேரூராட்சிகள்(Town Panchayat), நகராட்சிகள்(Municipality), மாநகராட்சிகள்(City) - அமைச்சர் அறிவிப்பு (முழு விவரம்)...



தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் அறிவிப்பு...


>>> தரம் உயர்த்தப்படும், விரிவாக்கம் செய்யப்படும் பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் - அமைச்சர் அறிவிப்பு (முழு விவரம்)...



தாம்பரத்தை மாநகராட்சியாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் அறிவித்தார். தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைந்து ஒரு மாநகராட்சியாக அமைக்கப்படும். மேலும் காஞ்சிபுரம். கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனைச் சுற்றி வளர்ச்சி அடைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைந்து மாநகராட்சிகளாக உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது.



புதிய மாநகராட்சிகள்:

பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூர், சோழிங்கர், இடங்கனசாலை, தாராமங்கலம், திருமுருகன்பூண்டி, கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதினாம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லன்கோடு, முசிறி, இலால்குடி ஆகிய பேரூராட்சிகள் அதன் அருகே வளர்ச்சியடைந்துள்ள ஊராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புஞ்சை புகளூர் மற்றும் TNPL புகளூர் ஆகிய 2 பேரூராட்சிகளையும் இணைத்து புகளூர் நகராட்சியாக அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


விரிவாக்கம்:

திருச்சிராப்பள்ளி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளும், செங்கல்பட்டு, பூவிரந்தவல்லி, மன்னார்குடி ஆகிய நகராட்சிகளும் அவற்றைச் கூற்றியுள்ள வளர்ச்சியடைந்துள்ள பேரூராட்சிகளையும், ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

“தடுப்பூசி போடாத பேராசிரியர்கள், பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர்” – கல்லூரிக் கல்வி இயக்ககம் வழிகாட்டு நெறிமுறைகளில் அறிவிப்பு...



 தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டது.




தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் அல்லாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால் வருகின்ற 1ம் தேதி முதல் 9 ,10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகள், அனைத்து கல்லூரிகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளை பொருத்தவரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டுமெனவும் தமிழக அரசு அறிவுறுத்தியது.




இந்நிலையில் செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுவதால், மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதோர் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர் என்றும் அத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருகை தர அவசியமில்லை எனவும் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.


ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அரசாணை (G.O.Ms.No:128, Dated: 23-08-2021 - Extension of Validity Period of Teacher Eligibility Test Certificate - Orders issued ) வெளியீடு...



 ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அரசாணை (G.O.Ms.No:128, Dated: 23-08-2021) வெளியீடு...


>>> Click here to Download G.O.Ms.No:128, Dated: 23-08-2021...




இன்றைய (25-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 25, 2021



குடும்ப உறுப்பினர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகளும், கீர்த்தியும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அஸ்வினி : வசதிகள் மேம்படும்.


பரணி : அனுபவம் கிடைக்கும்.


கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 25, 2021



நெருக்கமானவர்களின் சந்திப்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தந்தை வழி உறவுகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். பங்குதாரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


ரோகிணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.


மிருகசீரிஷம் : தடைகளை அறிவீர்கள்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 25, 2021



உத்தியோக பணிகளில் ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். புதுவிதமான அனுபவத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பழைய பாக்கிகள் மற்றும் தனவரவுகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.


திருவாதிரை : மாற்றங்கள் ஏற்படும்.


புனர்பூசம் : சாதகமான நாள்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 25, 2021



புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் நட்புகள் கிடைக்கும். குழந்தைகளின் முயற்சிகளுக்கு சாதகமாக செயல்படுவீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நிதானம் வேண்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.


பூசம் : ஆதரவான நாள்.


ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 25, 2021



மனதில் கடன் தொடர்பான சிந்தனைகளும், அதை சார்ந்த பிரச்சனைகளும் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை குறைத்துக்கொள்ளவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வாகனப் பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்து செல்வது நல்லது.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


பூரம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


உத்திரம் : விவாதங்களை குறைக்கவும்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 25, 2021



புதுவிதமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் அமையும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்களும், ஆசைகளும் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இழந்த பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.


அஸ்தம் : ஆசைகள் உண்டாகும்.


சித்திரை : பொறுப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 25, 2021



போட்டிகள் தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு தேவையான பணிகளை செய்து கொடுப்பீர்கள். பூர்வீக சொத்துக்களின் மீதான வழக்குகள் விஷயத்தில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத பயணங்களின் மூலம் மாற்றங்களும், அனுபவங்களும் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



சித்திரை : மகிழ்ச்சியான நாள்.


சுவாதி : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.


விசாகம் : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 25, 2021



மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் நினைத்த எண்ணங்களை செயல்வடிவில் மாற்றுவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்



விசாகம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


அனுஷம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


கேட்டை : இழுபறிகள் அகலும்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 25, 2021



குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். பயணங்கள் தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மூலம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


பூராடம் : சாதகமான நாள்.


உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 25, 2021



குடும்ப உறுப்பினர்களிடம் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் லாபம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : தெளிவான நாள்.


திருவோணம் : திறமைகள் வெளிப்படும்.


அவிட்டம் : லாபம் உண்டாகும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 25, 2021



குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் உழைப்புகள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மறைமுகமாக இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.


சதயம் : உழைப்புகள் அதிகரிக்கும்.


பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 25, 2021



மனதில் ஒருவிதமான கவலைகள் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



பூரட்டாதி : கவலைகள் நீங்கும்.


உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.


ரேவதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------


இன்று(24-08-2021) திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து குறித்து பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதில்...

 இன்று(24-08-2021) திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து குறித்து பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதில்...




>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...


அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஒருங்கிணைந்த பள்ளி மானியம்(Composite School Grant 2021-2022) விடுவிப்பு - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர்(SPD) அவர்களின் செயல்முறைகள்(Proceedings) ந.க.எண்:8/ஒபக/SCG/2021, நாள்: 21-08-2021 & நிதியைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்...



 அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஒருங்கிணைந்த பள்ளி மானியம்(Composite School Grant 2021-2022) விடுவிப்பு - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர்(SPD) அவர்களின் செயல்முறைகள்(Proceedings) ந.க.எண்:8/ஒபக/SCG/2021, நாள்: 21-08-2021 & நிதியைப்  பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்...


>>> ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (Samagra Shiksha) மாநில திட்ட இயக்குநர்(SPD) அவர்களின் செயல்முறைகள் (Proceedings) ந.க.எண்:8/ஒபக/SCG/2021, நாள்: 21-08-2021 & நிதியைப்  பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்...


கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 23-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு(I - V Standard) வரையிலான தமிழ் பாடக் காணொளிகள்(Tamil Videos)...



 கல்வித் தொலைக்காட்சியில் 23-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தமிழ் பாடக் காணொளிகள்...



💥 முதலாம் வகுப்பு - அலகு 3 & 4 - மகிழ்வோடு கற்போம் - பகுதி 5 மற்றும் வந்த பாதை - https://youtu.be/eCTWuttuSmM?t=2281



💥 இரண்டாம் வகுப்பு - அலகு 6 - என் கற்பனையில் - https://youtu.be/RvHhTKeRJzY



💥 மூன்றாம் வகுப்பு - அலகு 1 - தமிழ் அமுது - https://youtu.be/4eQnlj82S8w



💥 நான்காம் வகுப்பு - அலகு 8 - விடியும் வேளை - பகுதி 2 - https://youtu.be/N9qHMdgIO8M?t=2336



💥 ஐந்தாம் வகுப்பு - அலகு 2 - செய்யுள் - மூதுரை - https://youtu.be/yHfg55GAnlI


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings

+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...