கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Attendance App - Version 6.0 பயன்படுத்துவது எப்படி? -State EMIS Team - User Manual - Exclusive App For Attendance - Tamil Nadu School Education Department - App Version 6.0 - Manual Version 3.0...

 


>>> TNSED Attendance App - User Manual - Exclusive App For Attendance -  Tamil Nadu School Education Department -  App Version 6.0 - Manual Version 3.0...




பழைய ஓய்வூதியத் திட்டம் மாநிலங்களின் நிதி நிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் - ரிசர்வ் வங்கி எச்சரிக்கை (Old Pension Scheme will cause major strain on states' finances - RBI warns)...


 பழைய ஓய்வூதியத் திட்டம் மாநிலங்களின் நிதி நிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் - ரிசர்வ் வங்கி எச்சரிக்கை (Old Pension Scheme will cause major strain on states' finances - RBI warns)...


பழைய ஓய்வூதிய திட்டம் மாநிலங்களின் நிதிநிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்: ஆா்பிஐ எச்சரிக்கை


ரிசா்வ் வங்கி வெளியிட்ட மாநிலங்களின் 2022-23 நிதிநிலை குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


சில மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும்போது, அவற்றின் நிதிநிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம், இயற்கை பேரிடா் உள்ளிட்டவற்றுக்கு மாநிலங்கள் ஒதுக்கீடு செய்யும் நிதியானது குறைந்துள்ளது.


கடன்களுக்கான வட்டி, நிா்வாக பணிகள் மற்றும் ஓய்வூதியங்களுக்காக பட்ஜெட்டின்போது நிதி ஒதுக்கீடு செய்வது ‘மாநிலங்களின் 2021-22 நிதிநிலை குறித்த அறிக்கை’யுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது.


தற்போதைய செலவுகளை எதிா்காலத்துக்குத் தள்ளிப்போடுவது, வரும் காலங்களில் மாநிலங்களின் வருவாய் இல்லாத ஓய்வூதிய செலவின பொறுப்புகளை அதிகரிக்கச் செய்யும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



புதிய மனை பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களில் பட்டா மாற்றம் - புதிய மென்பொருள் - செய்தி வெளியீடு எண்: 112, நாள்: 18-01-2023 (Change of Patta within minutes of new plot registration - New Software - News Release No: 112, Dated: 18-01-2023)...


>>> புதிய மனை பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களில் பட்டா மாற்றம் - புதிய மென்பொருள் - செய்தி வெளியீடு எண்: 112, நாள்: 18-01-2023 (Change of Patta within minutes of new plot registration - New Software - News Release No: 112, Dated: 18-01-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2023 - School Morning Prayer Activities...

 

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2023 - School Morning Prayer Activities...

    

திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


 இயல்:இல்லறவியல்


 அதிகாரம்: செய்நன்றி அறிதல்


குறள் : 107

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு.


பொருள்:

ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.


பழமொழி :

Be slow to promise but quick to perform


ஆலோசித்து வாக்கு கொடு விரைந்து நிறைவேற்று



இரண்டொழுக்க பண்புகள் :


1. புத்தகம் மனித குலத்தின் குல சொத்து வாசிப்பேன். 


2. மனிதன் இறைவனின் அற்புத படைப்பு. நேசிப்பேன்.


பொன்மொழி :


வாழ்க்கை ஒரு சங்கீதம்.  அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட திட்டங்களால் அல்ல.


பொது அறிவு :


1. மனிதனுக்கு எத்தனை ஜோடி விலா எலும்புகள் உள்ளன? 


 12 ஜோடிகள் .


 2.அரண்மனை நகரம் என்று அழைக்கப்படுவது எது? 


 கொல்கத்தா.


English words & meanings :


lessen - make smaller. verb. குறைப்பது. வினைச் சொல். lesson - learning materials or things.noun பாடம். பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


மொச்சை பயிறில் உள்ள எல் டோபா பார்கின்சன் நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.


மனச்சோர்வு மற்றும் மனப்பிறழ்வு போன்ற பிரச்சினைகளை எதிர்த்து போராடவும் உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்துக்கள் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. எடை இழப்புக்கு உதவுகிறது.


NMMS Q


தனிம வரிசை அட்டவணையில் 118 வது தனிமமாக நவ 28, 2016 இல் சேர்க்கப்பட்ட தனிமம் ___________ 


a) Oganesson b) Tennessine c) Livermorium.


 விடை: Oganesson


ஜனவரி 19


1986 – முதற் கணினி நச்சுநிரலான (Computer Virus) பிரெயின் பரவத் தொடங்கியது.





நீதிக்கதை


செய்நன்றி மறவேல்


ஒருநாள் மான் ஒன்று புல் மேய்ந்துக் கொண்டிருக்கையில், வேடன் ஒருவன் கண்களில் சிக்கியது. அவன் மானைக் கொல்ல, அம்பெய்தப் குறி பார்த்தான்.


மான் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடியது. சிறிது தூரம் சென்றதும், ஒரு புதரைப்பார்த்து அதன் பின் ஓடி ஒளிந்தது. மானைத் துரத்தி வந்த வேடன் அதைக் காணாது சுற்றும் முற்றும் தேட ஆரம்பித்தான்.


அவனிடமிருந்து தப்பித்துவிட்டோம் என்ற எண்ணத்தில் புதரில் வளர்ந்திருந்த செடியின் இலைகளை மான் தின்ன ஆரம்பித்தது. அப்போது அச்செடி, மானே! நான் உன்னை வேடனிடமிருந்து காப்பாற்றியுள்ளேன்! ஆனால், நீ எனது செல்வங்களான இலைகளை உண்ணுகிறாய். தயவு செய்து சில நாட்களாவது அவை தாயான என்னிடம் இருக்கட்டும் என கெஞ்சியது.


ஆனால், அதைக் கேட்காத மான் செடியின் இலைகளை உண்ணத் தொடங்கியது. அப்போது, அதனால் சிறு சலசலப்பு உண்டாக, வேடன் மான் அங்கு ஒளிந்திருப்பதைப் பார்த்துவிட்டான். அதன் மீது அம்பை எய்திக் கொன்றான்.


தன்னைக் காத்த செடியின் செய்நன்றியை மான் மறந்ததால் மான் உயிரையே இழக்க நேர்ந்தது. நாமும் நமக்கு ஒருவர் சிறிய உதவியைச் செய்தாலும் அதை மறக்காது, உதவி புரிந்தோர்க்கு நம்மாலான நன்மைகளையே செய்ய வேண்டும்.


இன்றைய செய்திகள்


19.01.2023


* மத்திய அரசுப் பணிகளில் 2.1% பேர் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகின்றனர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்.


* சென்னையில் 3 கடைகளில் 1500 பொம்மைகள் பறிமுதல்: ஐஎஸ்ஐ முத்திரை இல்லாததால் நடவடிக்கை.


* விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையும் பருவத்தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


* சிறுபான்மையினரை அடையாளம் காண்பதில் சுணக்கம்: 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி.


* உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிரிஸ்கி, மூத்த அதிகாரிகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.


* டாடா ஸ்டீல் செஸ் போட்டி: உலகின் நம்பர் 2 வீரரை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தல் வெற்றி.


* 150 நாட்களாக தினமும் ஒரு மாரத்தான் ஓடி ஆஸ்திரேலிய பெண் உலக சாதனை.


* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், முர்ரே, ஜாபியர் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* Only 2.1% of Tamilians have been selected for central government jobs : Minister Udayanidhi Stalin informs.


 * 1500 toys seized from 3 shops in Chennai: Action for lack of ISI stamp


 * Anna University said that the term exam will be conducted on Sunday as well.  Students are dissatisfied with the announcement.


 * Reluctance to identify minorities: Supreme Court disapproves of 6 states and UT governments.


*  16 people, including Minister of Home affairs Denis Monastrisky, died in a helicopter crash in the capital of Ukraine, Kiev.


 * TATA STEEL CHESS MATCH: Pragnananda beats World No. 2 with stunning victory.


 * An Australian woman has run a marathon every day for 150 days, a world record.


 * Australian Open tennis: Djokovic, Murray, Japier advance to 2nd round.


இன்றைய (19-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 


இன்றைய (19-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 19, 2023



மனதளவில் இருந்துவந்த குழப்பம் குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒத்துழைப்பு அதிகரிக்கும். தள்ளிப்போன சில விஷயங்கள் சாதகமாக முடியும். கடன் தொடர்பான இன்னல்கள் குறையும். திட்டமிட்ட பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வியாபாரம் சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் ஆதரவான சூழ்நிலைகள் அமையும். செல்வாக்கு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : குழப்பம் குறையும்.


பரணி : சாதகமான நாள்.


கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஜனவரி 19, 2023



குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பார்த்த சில பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்படும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் விழிப்புணர்வு வேண்டும். சிந்தனையின் போக்கில் குழப்பம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



கிருத்திகை : தாமதம் ஏற்படும். 


ரோகிணி : குழப்பம் உண்டாகும்.


மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




மிதுனம்

ஜனவரி 19, 2023



புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். மனை தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். குழந்தைகளின் தனித்தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். உறவினர்களின் வருகையால் புத்துணர்ச்சி அடைவீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


திருவாதிரை : ஆதாயம் உண்டாகும்.


புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------



கடகம்

ஜனவரி 19, 2023



மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். மனதளவில் மாற்றம் ஏற்படும். சகோதரர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் சாதகமாக அமையும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். நட்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



புனர்பூசம் : உதவி கிடைக்கும்.


பூசம் : கவனம் வேண்டும்.


ஆயில்யம் : பயணங்கள் கைகூடும்.

---------------------------------------



சிம்மம்

ஜனவரி 19, 2023



மனதில் எதையும் சமாளிக்க முடியும் என்ற தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு புதிய மாற்றத்தை உண்டாக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். உத்தியோகப் பணிகளில் ஆர்வமின்மையான சூழ்நிலைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மகம் : தன்னம்பிக்கை பிறக்கும். 


பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------



கன்னி

ஜனவரி 19, 2023



தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான அறிமுகம் கிடைக்கும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதுவிதமான பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை அமைத்துக் கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.


அஸ்தம் : நம்பிக்கை அதிகரிக்கும். 


சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும். 

---------------------------------------



துலாம்


ஜனவரி 19, 2023



உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வேலையாட்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிலும் துரிதத்துடன் செயல்படுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். புதிய தொழில்நுட்ப கருவிகளை பற்றிய புரிதல் உண்டாகும். விளையாட்டு சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை: கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



சித்திரை : புரிதல் உண்டாகும்.


சுவாதி : துரிதமான நாள்.


விசாகம் : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------



விருச்சிகம்

ஜனவரி 19, 2023



குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் தனவரவு கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். மனதை உறுத்திய சில கவலைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான தடைகள் விலகும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



விசாகம் : தனவரவு கிடைக்கும்.


அனுஷம் : கவலைகள் குறையும்.


கேட்டை : சாதகமான நாள்.

---------------------------------------




தனுசு


ஜனவரி 19, 2023



கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். மற்றவர்களின் மீதான கருத்துக்களில் கவனம் வேண்டும். வியாபாரம் சார்ந்த பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செயல்படவும். இணையம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். செயல்பாடுகளில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். அரசு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மூலம் : கவனம் வேண்டும். 


பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

ஜனவரி 19, 2023



உத்தியோக பணிகளில் அனுசரித்து செல்லவும். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். எதிர்பாலின மக்களின் வழியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிலும் நேர்மறை சிந்தனையுடன் செயல்பட வேண்டும். அவசரமின்றி பொறுமையுடன் செயல்பட்டு முடிவு எடுக்கவும். பூர்வீக சொத்துக்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.


திருவோணம் : முதலீடுகள் மேம்படும்.


அவிட்டம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------



கும்பம்

ஜனவரி 19, 2023



மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். சமூகப் பணிகளில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். கௌரவ பொறுப்புகளின் மூலம் மதிப்பு மேம்படும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். குழந்தைகளைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




அவிட்டம் : இழுபறிகள் நீங்கும்.


சதயம் : லாபம் உண்டாகும்.


பூரட்டாதி : புரிதல் அதிகரிக்கும். 

---------------------------------------



மீனம்

ஜனவரி 19, 2023



காப்பீடு சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வீடு, மனை தொடர்பான முயற்சிகள் கைகூடும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உண்டாக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும். மனதிற்கு நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம் 



பூரட்டாதி : முயற்சிகள் கைகூடும்.


உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும். 


ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும். 

---------------------------------------


எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – ஜனவரி மூன்றாவது வாரம் - 2023 (Ennum Ezhuthum Lesson Plan - January 3rd Week)...

 

           


>>> எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – ஜனவரி மூன்றாவது வாரம் - 2023 (Ennum Ezhuthum Lesson Plan - January 3rd Week)...



>>> எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – ஜனவரி மூன்றாவது வாரம் - 2023 - மாதிரி 2 (Ennum Ezhuthum Lesson Plan - January 3rd Week - Model 2)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இன்றைய (18-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 


இன்றைய (18-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 18, 2023



வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். புதிய முதலீடுகள் தொடர்பான எண்ணங்களில் தகுந்த ஆலோசனை பெறவும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 



அஸ்வினி : பொறுமை வேண்டும்.


பரணி : கவனமுடன் செயல்படவும்.


கிருத்திகை : நெருக்கடியான நாள்.

---------------------------------------




ரிஷபம்

ஜனவரி 18, 2023



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கற்பனைத்திறன் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். நிதானம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : தீர்வு கிடைக்கும்.


ரோகிணி : லாபம் உண்டாகும்.


மிருகசீரிஷம் : கற்பனை மேம்படும்.

---------------------------------------



மிதுனம்

ஜனவரி 18, 2023



குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவினை ஏற்படுத்தும். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை: கிழக்கு 


அதிர்ஷ்ட எண்:  5


அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் 



மிருகசீரிஷம் : சுபமான நாள்.


திருவாதிரை : ஆதாயம் உண்டாகும்.


புனர்பூசம் : தெளிவு ஏற்படும்.

---------------------------------------



கடகம்

ஜனவரி 18, 2023



மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். நிலுவையில் இருந்துவந்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள். மாற்றமான சிந்தனைகளின் மூலம் புதுவிதமான அனுபவங்களும், சூழ்நிலைகளும் உண்டாகும். சொத்துப் பிரச்சனைக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். உங்கள் மீதான அவப்பெயர்கள் அகலும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். பத்திரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். போட்டிகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை



புனர்பூசம் : தைரியம் மேம்படும். 


பூசம் : அனுபவம் உண்டாகும்.


ஆயில்யம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




சிம்மம்

ஜனவரி 18, 2023



புதியவரின் நட்பால் ஆதாயம் அடைவீர்கள். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். மனை தொடர்பான பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபார பணிகளில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வும், அதற்கான உதவியும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதங்கள் குறையும். ஜெயம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு 



மகம் : செல்வாக்கு அதிகரிக்கும். 


பூரம் : வாய்ப்புகள் உண்டாகும்.


உத்திரம் : உதவி கிடைக்கும்.

---------------------------------------



கன்னி

ஜனவரி 18, 2023



சுறுசுறுப்புடன் செயல்பட்டு இழுபறியான வேலைகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்துகொள்வீர்கள். உடன்பிறந்தவர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். மறைமுகமாக இருக்கக்கூடிய திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்



உத்திரம் : சுறுசுறுப்பான நாள்.


அஸ்தம் : சிந்தனைகள் மேம்படும். 


சித்திரை : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------



துலாம்

ஜனவரி 18, 2023



வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிகம் சார்ந்த பயணம் மற்றும் சிந்தனைகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும். நண்பர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பகைகள் விலகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



சித்திரை : லாபம் அதிகரிக்கும்.


சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும். 


விசாகம் : கவனம் வேண்டும். 

---------------------------------------


 


விருச்சிகம்

ஜனவரி 18, 2023



வாகன மாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். எண்ணிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் நீங்கும். வீட்டை விரிவுபடுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த தடைகளை அறிந்துகொள்வீர்கள். இன்பம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை



விசாகம் : சிந்தனை அதிகரிக்கும்.


அனுஷம் : நெருக்கடிகள் நீங்கும்.


கேட்டை : தடைகளை அறிவீர்கள்.

---------------------------------------




தனுசு

ஜனவரி 18, 2023



தொழில் சார்ந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். உங்களைப் பற்றிய புதுவிதமான புரிதல் ஏற்படும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



மூலம் : திறமைகள் வெளிப்படும்.


பூராடம் : அலைச்சலான நாள். 


உத்திராடம் : லாபம் உண்டாகும்.

---------------------------------------



மகரம்

ஜனவரி 18, 2023



நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவர்களின் சந்திப்பு மனதிற்கு ஒருவித மாற்றத்தை உண்டாக்கும். வியாபார பணிகளில் இழுபறிகள் குறைந்து லாபம் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் பேசும் பொழுது கருத்துக்களில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். ஆரோக்கியம் தொடர்பான செயல்களில் விழிப்புணர்வு வேண்டும். பெருமை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



உத்திராடம் : மாற்றமான நாள்.


திருவோணம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும். 


அவிட்டம் : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------




கும்பம்

ஜனவரி 18, 2023



வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும்.  குழந்தைகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார்கள். மூலிகை சார்ந்த வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் நிதானம் வேண்டும். விவசாய பணிகளில் இருப்பவர்களுக்கு பாசனம் தொடர்பான வசதிகள் மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு



அவிட்டம் : லாபம் உண்டாகும். 


சதயம் : முன்னேற்றமான நாள்.


பூரட்டாதி : வசதிகள் மேம்படும்.

---------------------------------------




மீனம்

ஜனவரி 18, 2023



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆசைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களை அறிந்து செயல்படுவீர்கள். பிரபலமான நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்ப்புகள் விலகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்  



பூரட்டாதி : விரயங்கள் உண்டாகும்.


உத்திரட்டாதி : ஆசைகள் அதிகரிக்கும். 


ரேவதி : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SLAS Model QP regarding - State SLAS team information

 மாநில அடைவு தேர்வு மாதிரி வினாத்தாள் தொடர்பாக மாநில SLAS குழுவின் தகவல்  SLAS  Model  Question Paper regarding - State SLAS team informatio...