கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...


 தமிழ்நாட்டிலுள்ள அனைத்துவகைப் பள்ளிகளிலும் 2024-2025 ஆம் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படுமென பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தகவல் - செய்தி வெளியீடு எண்: 460, நாள்: 04-03-2024...



>>> செய்தி வெளியீடு எண்: 460, நாள்: 04-03-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




IFHRMS Kalanjiyam செயலியில் 2024-2025 நிதியாண்டில் Income Tax பிடித்தம் செய்ய New Tax Regime/ Old Tax Regime தேர்வு செய்யும் முறை...



 IFHRMS Kalanjiyam செயலியில் 2024-2025 நிதியாண்டில் Income Tax பிடித்தம் செய்ய New Tax Regime/ Old Tax Regime தேர்வு செய்யும் முறை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04-03-2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04-03-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை.


குறள் 77:


என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்.


விளக்கம்:


அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.


பழமொழி : 


Union is strength


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 



பொன்மொழி:


There is no great success without great commitment. 


 பெரிய பொறுப்புகள் இல்லாமல் பெரிய வெற்றிகள் இல்லை.


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 பூச்சிகளில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்

முதலாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - பாம்பு

இரண்டாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - கழுகு

பறவை முட்டையின் கரு உணவில் காணப்படும் முக்கிய புரதங்கள் - பாஸ்விடின், லிப்போ விட்டலின்

மனிதனின் கருவுறுகாலம் - 280 நாள்கள்



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Finanace - நிதி 

Fine - நலம் 

Garbage - குப்பை 

Garden - தோட்டம் 

Garlic - பூண்டு


ஆரோக்கியம்


காய்ச்சல்


300 மில்லி தண்ணீரில் 10 நிலவேம்பு இலைகள், இரண்டு துண்டு அதிமதுரம், இரண்டு துண்டு சிற்றரத்தை இவைகளை தட்டி போட்டு அடுப்பிலேற்றி 100 மில்லி ஆக வற்றவைத்து தினம் இருவேளை குடிக்கவும்.

அகத்தி மரப்பட்டையை கஷாயம் செய்து குடிக்க காய்ச்சல் குணமாகும்.


இன்றைய சிறப்புகள்


மார்ச் 4


1980 – தேசியவாதி ராபர்ட் முகாபே சிம்பாப்வேயின் முதலாவது கருப்பின பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1985 – அமெரிக்காவில் தரப்படும் குருதிக் கொடைகள் அனைத்துக்கும் எயிட்சுக்கான குருதிப் பரிசோதனை நடத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகாரம் அளித்தது.

1986 – சோவியத் வேகா 1 விண்கலம் ஏலியின் வாள்வெள்ளியின் கருவின் படிமங்களை முதன் முதலாக புவிக்கு அனுப்பியது.

1994 – கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.



பிறந்த நாள் 

1980 – ரோகன் போபண்ணா, இந்திய டென்னிசு வீரர்


1986 – மைக் கிரிகேர், பிரேசில்-அமெரிக்கத் தொழிலதிபர், இன்ஸ்டகிராமை அமைத்தவர்.



நினைவு நாள் 

2022 – சேன் வார்ன், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1969)



சிறப்பு நாட்கள்


தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் (இந்தியா)


நீதிக்கதை



ஒட்டகமும் நரியும் 


லம்பா என்னும் ஒட்டகமும் சோட்டு என்னும் நரியும் மிக நெருங்கிய நண்பர்கள். அவை ஒரு அழகான நதிக்கரையில் வாழ்ந்து வந்தனர். நதியின் எதிர்க்கரையில் ஒரு கிராமமும் ஒரு கரும்புத் தோட்டம் இருந்தன. ஒரு நாள் சோட்டுவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.


சோட்டு சொன்னது, “ஹே லம்பா அந்த தோட்டத்தில் உள்ள கரும்பு ருசியா இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், இன்று இரவு ஆற்றை கடந்து  தோட்டத்துக்கு போய் விடலாமா” என்று கேட்டது. “ஆனா கிராமத்தில் உள்ள மக்கள் பாத்துட்டா நம்மள அடிக்க மாட்டாங்களா?” என்று ஒட்டகம் கவலையுடன் சொன்னது. 



“கவலைப்படாதே நீ எனக்கு உதவி பண்ணு அதே மாதிரி நான் உனக்கு உதவி பண்ணுகிறேன்” என்று நரி உற்சாகமாக கூறியது. ஒட்டகத்திற்கு அதில் விருப்பமில்லை, ஆனாலும் அதற்கு சம்மதித்தது.


அன்றிரவு ஒட்டகம் நரியை முதுகில் சுமந்துகொண்டு நதியை கடந்து சென்றது. அவை கரும்பு தோட்டத்திற்கு சென்று சுவையான கரும்புகளை சாப்பிடத் தொடங்கின. நிறைய சாப்பிட்டு அவற்றின் வயிறும் நிறைந்தன. 


“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, சந்தோசமா இருக்கும்  போதெல்லாம் எனக்கு பாட்டு பாட தோனும்” என்றது நரி. ஒட்டகம் பதில் சொல்வதற்கு முன்பே நரி சத்தமாக ஊளையிடத் தொடங்கியது. ஒட்டகம் நரியை ஊளை இடாமல் இருக்கும்படி சொன்னது. ஆனால் நரி ஊளை இட்டு கொண்டே இருந்தது. 


இதை கேட்ட கிராம மக்கள் வெளியே ஓடி வந்தார்கள். ஒட்டகம் மிகவும் பயந்து போயிற்று, அது சுற்றும் முற்றும் பார்த்தது நரியை எங்கேயும் காணவில்லை. நரி புதருக்கு பின்னால் போய் ஒளிந்து கொண்டிருந்தது.


கிராம மக்கள் ஒட்டகத்தை தடியால் அடித்து விரட்டினார்கள். கிராம மக்கள் அனைவரும் சென்ற பிறகு வெளியே வந்த நரி “ஹா ஹா ஹா நல்லா மாட்டிகிட்டியா?, பாத்தியா உன்னால எங்கேயும் ஒளிஞ்சிக்க  முடியல”என்று கேலி செய்தது.



“சுயநலகார  நரியே உனக்கு நான் பாடம் சொல்லித்தரேன் பாரு” என்று முனுமுனுத்தது ஒட்டகம். பின்னர் ஒட்டகமும்  நரியும் நதியை கடந்து வர ஆரம்பித்தன. நதியின் மையப் பகுதிக்கு வந்தபோது ஒட்டகம் ஒன்றும் செல்லாமல் நின்றது.



“உனக்கு பாட்டு பாட தோனுற மாதிரி எனக்கு இப்போ கால நீட்ட தோணுது” என்றது ஒட்டகம். “நான் விழுந்திடுவேன் அப்படி பண்ணாதே” என்று கெஞ்சியுது நரி. “சுயநலம் புடிச்ச உன்ன பத்தி நான் எதுக்கு கவலை படனும்” என்று காலை நீட்டியது ஒட்டகம், நரி கீழே விழுந்தது. 


நீதி :தீய செயல்களால் தீமையே விளையும். 




இன்றைய முக்கிய செய்திகள் 


04-03-2024 


தமிழ்நாட்டில் 56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது: சுகாதாரத்துறை தகவல்...


மாமல்லபுரம் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்கள் 4 பேரில் 3 பேரின் உடல்கள் மீட்பு...


ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்வு அமலுக்கு வந்தது...


கூகுள் நிறுவனத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றிய தமிழர் ஸ்ரீதர் ராமசாமி, SnowFlake நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக நியமனம்...




Today's Headlines:

04-03-2024


56.34 lakh children given polio drops in Tamil Nadu: Health Department information... 


Bodies of 3 out of 4 students washed away in Mamallapuram sea waves have been recovered... 


The price of ice creams sold by Aavin Company has been hiked from Rs.2 to Rs.5...


Sridhar Ramasamy, a Tamil who worked at Google for 15 years, has been appointed as the CEO of SnowFlake...

தலா ரூ.10 இலட்சம் ஊக்கத்தொகை, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் - சிறந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ள 100 தலைமை ஆசிரியர்கள் பட்டியல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 031660 / ஐ / இ1/ 2022, நாள்: 01-03-2024...



 பள்ளிக்கல்வி - அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது 2023-2024 - மாநில தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட 2022-2023ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கும் விழா நடைபெறுதல் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 031660 / ஐ / இ1/ 2022, நாள்: 01-03-2024...



 தலா ரூ.10 இலட்சம் ஊக்கத்தொகை, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் - சிறந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ள 100 தலைமை ஆசிரியர்கள் பட்டியல்...



>>> தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 031660 / ஐ / இ1/ 2022, நாள்: 01-03-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


உயர் தொழில்‌ நுட்ப ஆய்வக மதிப்பீடு அறிக்கை அட்டை மாணவர்களுக்கு வழங்குதல்‌ - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம்...



உயர் தொழில்‌நுட்ப ஆய்வக மதிப்பீடு அறிக்கை அட்டை மாணவர்களுக்கு வழங்குதல்‌ - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம்... 


Assessment - Student Report Card - Fund released for class 6-9 students - Hi-Tech Lab - Report Card- Instructions to HMs & Teachers...




>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை - 6.


ந.க.எண்‌.76896/பிடி1/53/2017, நாள்‌ 15.02.2024


பொருள்‌: பள்ளிக்கல்வி - உயர்‌ தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள்‌ (Hi-Tech Labs) - உயர்தொழில்‌ நுட்ப ஆய்வக மதிப்பீடு அறிக்கை அட்டை வழங்குதல்‌ - மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு மற்றும்‌ நடைமுறை வழிகாட்டுதல்கள்‌ வழங்கப்பட்டது - சார்பு


பார்வை : சென்னை-6, ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி மாநில திட்ட இயக்குநரின்‌ கடிதம்‌ ந.க.எண்‌.4648/A4/Student Report Card/ SS/2023, நாள்‌.29.01.2024


பார்வையில்‌ காணும்‌ ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி மாநில திட்ட இயக்குநரின்‌ கடிதத்தின்படி, உயர்‌ தொழில்‌ நுட்ப கணினி ஆய்வகங்கள்‌ செயல்படும்‌ (HI-TECH LABS) அரசு உயர்நிலை / மேல்நிலைப்‌ பள்ளி மாணவர்களுக்கு உயர்தொழில்‌ நுட்ப ஆய்வக மதிப்பீடு அறிக்கை அட்டை வழங்குவது சார்ந்து நிதி ஒதுக்கீடு, மற்றும்‌ நடைமுறை வழிகாட்டுதல்கள்‌ வழங்கப்பட்டுள்ளது.


மேற்கண்ட கடித நகல்‌ இத்துடன்‌ இணைத்து அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ அனுப்பப்படுகிறது. இதனை உரிய பள்ளிகளுக்கு அனுப்பி இக்கடிதத்தில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறை வழிகாட்டுதல்களின்படி செயல்பட பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

பள்ளிக்கல்வி இயக்குனர்

இணைப்பு :

பார்வையில்‌ காணும்‌ கடித நகல்‌


பெறுநர்‌

அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌. 

நகல்‌:

மாநில திட்ட இயக்குநர்‌, ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி,

(பேராசிரியர்‌ அன்பழகன்‌ கல்வி வளாகம்‌, சென்னை-6

(பணிந்தனுப்பப்படுகிறது)


சிவில் நீதிபதிகள் பணி நியமன தேர்வுப் பட்டியல் இட ஒதுக்கீட்டில் தவறு நேர்ந்தது எப்படி?



 சிவில் நீதிபதிகள் பணி நியமன தேர்வுப் பட்டியல் இட ஒதுக்கீட்டில் தவறு நேர்ந்தது எப்படி?

~~~~~~~~~~~~~~~~~~~~~~

சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தால் வெளியிடப்பட்ட  சிவில் நீதிபதிகள் தேர்வுப் பட்டியலில் இட ஒதுக்கீடு சரியாக கடைபிடிக்கப்பட வில்லையெனக் கூறி, புதிய பட்டியலை வெளியிடும்படி சொல்லியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.


இதில் தவறு நடந்தது எங்கே?


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 245 சிவில் நீதிபதி காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2023-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி வெளியிட்டது. 


இதில் நடப்புப் பணியிடங்கள் 153, பின்னடைவுப் பணியிடங்கள் 92 ஆகியவை இடம்பெற்றிருந்தன. 


இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, தற்காலிக தேர்வு பட்டியல் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது.


இந்தத் தேர்வுப் பட்டியல் வெளியான பிறகு, இந்தத் தேர்வை எழுதிய தேர்வர்கள் சிலர் பணியிடங்களை நிரப்பும்போது இட ஒதுக்கீட்டு முறை சரியாக பின்பற்றப்படவில்லை யெனக் கூறி வழக்குத் தொடர்ந்தனர்.


"இந்தப் பட்டியலில் இடஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றப் படவில்லை. அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள், பொதுப் பட்டியலில் இடம் பெறுவதற்குப் பதிலாக, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். 


இதனால், வேறு சிலர் இட ஒதுக்கீடு பெறுவது பாதிக்கப்பட்டுள்ளது," என்று கூறி, பாதிக்கப்பட்ட ஒன்பது தேர்வர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.


இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.


இதில் (பிப்ரவரி 29) வியாழக்கிழமையன்று  தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், "அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் பொதுப் பிரிவிலும் இடம் பெற்றுள்ளனர். 


இது இட ஒதுக்கீட்டுத் தத்துவத்திற்கே மாறானது. ஆகவே அந்த பட்டியலை ரத்து செய்கிறோம். 


அதிக மதிப்பெண் பெற்றவர்களை பொதுப் பிரிவில் சேர்த்தும் மற்றவர்களை உரிய இடஒதுக்கீட்டு இடங்களில் சேர்த்தும் திருத்தி அமைக்கப்பட்ட தேர்வுப் பட்டியலை அரசுப் பணியாளர் தேர்வாணையம் இரண்டு வாரங்களில் வெளியிட வேண்டும்," என உத்தரவிட்டுள்ளது.


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இதுபோல எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க, சமூக நீதியில் அக்கறை கொண்ட அதிகாரி ஒருவரை நியமித்து இட ஒதுக்கீடு தேர்வாணையங்களில் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.


"இதற்கு முன் 2019-ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளுக்கு 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் போதும் இதே குளறுபடிகள் நிகழ்ந்தன. 


இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அமர்வும், இரு நீதிபதிகள் அமர்வும் ஆசிரியர் தேர்வு வாரியம் கடைபிடித்த அளவுகோல் தவறு என்று தீர்ப்பளித்தன.


"ஆனாலும், அதை ஏற்காத ஆசிரியர் தேர்வு வாரியம் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 


அம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், 27-ஆம் விதிப்படி இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என ஆணை பிறப்பித்தது. 


தமிழ்நாடு அரசு (எதிர்) சோபனா வழக்கு என்றழைக்கப்படும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அப்போது வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தான் சென்னை உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.


"தேர்வாணையத்தின் 27-ஆம் விதிப்படி இட ஒதுக்கீட்டை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து அனைத்து தேர்வாணையங்களுக்கும் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும்.


"அனைத்துத் தேர்வாணையங்களிலும் இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிக்க சமூகநீதியில் அக்கறை கொண்ட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்," என்று அவர் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.


TNPSC யில் இந்தத் தவறு எப்படி நடந்தது என்பது குறித்து டி.என்.பி.எஸ்.சி வட்டாரங்களில் விசாரித்தபோது, இது விதியைத் தவறாகப் புரிந்துகொண்டதால் நேர்ந்த தவறு எனத் தெரிவித்தனர்.


அதாவது, மொத்தம் 245 நீதிபதிகளைத் தேர்வுசெய்வதற்கு தேர்வு நடத்தப்பட்டது. 


அதில் 92 பணியிடங்கள் ஏற்கனவே நிரப்பப்படாமல் இருந்தவை. 


153 பணியிடங்கள் புதிதாக நிரப்பப்பட வேண்டியவை. இதில் ஏற்கனவே நிரப்பப்படாத பின்னடைவுப் பணியிடங்களைப் பொறுத்தவரை, அவைதான் முதலில் நிரப்பப்பட வேண்டும். 


மேலும், எந்தெந்த இட ஒதுக்கீட்டுப் பிரிவில் அந்தப் பணியிடங்கள் இருக்கின்றனவோ, அதைச் சரியாக பார்த்து அந்தந்த ஒதுக்கீட்டிற்கு ஏற்றபடி நிரப்ப வேண்டும்.


அதைச் செய்யும்போது, அதிக மதிப்பெண்களைப் பெற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோரை வைத்து அந்த இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. 


ஆனால், விதிமுறைப்படி பொதுப் பிரிவினருக்கான இடங்களை நிரப்பிவிட்டு, மீதமுள்ள இடஒதுக்கீட்டுப் பிரிவினரை வைத்துக் கொண்டு இந்தப் பட்டியலை நிரப்பியிருக்க வேண்டும். 


பின்னடைவுப் பட்டியலை முதலில் நிரப்ப வேண்டும் என்பதை சரியாகப் புரிந்துகொள்ளாததால் நேர்ந்த தவறு இது. விரைவிலேயே நீதிமன்றம் கூறியபடி புதிய பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவித்தனர்.


அங்கன்வாடி மையங்களில்‌ பயிலும்‌ 5+ வயதினை நிறைவு செய்யும்‌ குழந்தைகளை 01.03.2024 முதல் அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ சேர்க்கை செய்தல்‌ - சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - தொடர்பாக - தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌. 003845 / ஜெ2 / 2024, நாள்‌. 01.03.2024...

 

அங்கன்வாடி மையங்களில்‌ பயிலும்‌ 5+ வயதினை நிறைவு செய்யும்‌ குழந்தைகளை 01.03.2024 முதல் அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ சேர்க்கை செய்தல்‌ - சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - தொடர்பாக - தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌. 003845 / ஜெ2 / 2024, நாள்‌. 01.03.2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை - 6,

ந.க.எண்‌. 003845 / ஜெ2 / 2024, நாள்‌. 01.03.2024


பொருள்‌: தொடக்கக்‌ கல்வி- 2024-2025ஆம்‌ கல்வி ஆண்டு மாணவர்‌ சேர்க்கை - 01.03.2024 முதல்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கை நடைபெறுதல்‌ - அங்கன்வாடி மையங்களில்‌ பயிலும்‌ குழந்தைகளில்‌ 5+ வயதினை நிறைவு செய்யும்‌ குழந்தைகளை அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ சேர்க்கை செய்தல்‌ - சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - தொடர்பாக

பார்வை: 1. சென்னை - 6, தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌ மற்றும்‌ தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ இணை செயல்முறைகள்‌,

ந.௧.எண்‌.079119/எம்‌/இ1/2023, நாள்‌.26.02.2024.

2. சென்னை - 6, தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, நக.எண்‌. 003845 / ஜெ2 / 2024, நாள்‌.29.02.2024


பார்வை (1)ல்‌ காணும்‌ செயல்முறைகளில்‌ 2024-2025ஆம்‌ கல்வியாண்டில்‌, தமிழ்நாடு அரசு பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ கட்டுப்பாட்டில்‌ செயல்படும்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கைப்‌ பணிகளை 01.03.2024 முதல்‌ தொடங்கிட விரிவான அறிவுரைகள்‌ வழங்கப்பட்டது.


பார்வை (2ல்‌ காணும்‌ செயல்முறைகளில்‌ 2024-2025ஆம்‌ கல்வி ஆண்டில்‌ அரசுப்‌ பள்ளிகளில் மேற்படி மாணவர் சேர்க்கை பணிகளுக்கான விழிப்புணர்வு சேர்க்கைப் பேரணி நடத்தும்போது ஏற்படும்‌ செலவினங்களுக்காக ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி மாநிலத்‌ திட்ட இயக்ககத்தில்‌ இருந்து ஒவ்வவாரு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிக்கும்‌ SNA A/c ல்‌ ரூ.2,000/- நிதி விடுவிக்கப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ சீரிய முயற்சியால்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ கல்வித்‌ தரம்‌ உயரும்‌ பொருட்டு பல்வேறு முன்னோடித்‌ திட்டங்கள்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


வரும்‌ கல்வி ஆண்டில்‌ அனைத்து அரசு தொடக்கப்‌ பள்ளிகளிலும்‌ திறன் வகுப்பறைகள்‌ (Smart Class Rooms), அனைத்து அரசு நடுநிலைப்‌ பள்ளிகளிலும்‌ உயர்‌ கொழில்‌ நுட்ப கணிணி ஆய்வகங்கள்‌ (Hi-Tech Labs) அதற்குத்‌ தேவையான இணையதள (Broadband Connectivity) வசதியுடன்‌ அமைக்கப்பட உள்ளன. மேலும்‌, அரசுப்‌ பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக்‌ கணினியும்‌ (TAB) வழங்கப்பட உள்ளது.


அரசுப்‌ பள்ளிகளில்‌ 2024-2025ஆம்‌ கல்வி ஆண்டிற்கான மாணவர்‌ சேர்க்கையை சென்னை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை நடுநிலைப்‌ பள்ளியில்‌ 01.03.2024 அன்று மாண்புமிகு பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ தொடங்கி வைத்துள்ளார்கள்‌.


பள்ளிகள்‌ அமைந்துள்ள குடியிருப்புப்‌ பகுதிகளில்‌ (Habitation and Catchment Area) இருந்து 5+ வயதுடைய குழந்தைகளை அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்க்கை செய்வதற்கும்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ கிடைக்கும்‌ கற்றல்‌ வாய்ப்புகள்‌, பல்வேறு நலத்திட்டங்கள்‌ மற்றும்‌ மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு உதவித்தொகை குறித்தும் அறியும் வகையில்‌ விழிப்புணர்வு பிரச்சாரத்தினை அனைத்து பொது மக்கள்‌ மற்றும்‌ அனைத்து பள்ளி வயது குழந்தைகளின்‌ பெற்றோர்கள்‌ மத்தியில்‌ ஏற்படுத்தித்‌ தேவையான நடவடிக்கைகளை பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ இருபால்‌ ஆசிரியர்கள்‌ மேற்கொள்வதற்கு உரிய அறிவுரைகளை வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ மூலமாக வழங்கிட அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்களும்‌ (தொடக்கக்‌ கல்வி) கேட்டுக்கொள்ளப்‌படுகிறார்கள்‌.


தமிழ்நாட்டில்‌ பெரும்பான்மையான அரசுப்‌ பள்ளிகள்‌ ஊரகப்‌ பகுதிகளில்‌ தான்‌ அமைந்து உள்ளது. ஊரகப்‌ பகுதிகளில்‌ அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில்‌ 3 முதல்‌ 5 வயதுடைய குழந்தைகள்‌ பள்ளி முன்பருவக்‌ கல்வியைக்‌ கற்று வருகின்றனர்‌. இம்மையங்களில்‌ முன்பருவக்‌ கல்வியை நிறைவு செய்யும்‌ 5+ வயதுடைய குழந்தைகளின்‌ எண்ணிக்கை விவரம்‌ RevenueDistrict / Project-ன்படி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள்‌ இயக்ககத்தில்‌ இருந்து பின்வருமாறு பெறப்பட்டு உள்ளது. (மையங்கள் வாரியாக 5+ வயதுடைய மாணவர்‌ எண்ணிக்கை மாவட்டவாரியாக இணைப்பில்‌ கண்டுள்ளபடி இணைக்கப்பட்டு உள்ளது).



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்: பழ...