கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் SSR 2027 - வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு (DLOs) உரிய அறிவுரை - மாவட்ட ஆட்சியரின் கடிதம்



 வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2027 - வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு (DLOs) உரிய அறிவுரை - கரூர் மாவட்ட ஆட்சியரின் கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



அனுப்புநர்:


திரு.ச.பிரசன்னா ராமசாமி இ.ஆ.ப 

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர். கரூர்.


பெறுநர்:


1 மண்டல இணை இயக்குநர். கல்லூரி கல்வி இயக்குநரகம், திருச்சிராப்பள்ளி-620002


2 முதன்மை கல்வி அலுவலர், கரூர் மாவட்டம்.


3. மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை கல்வி), கரூர்.


மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி), கரூர், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்). கரூர்.


ந.க.எண்.அ4/15417/2026 நாள்: 19.112026


அய்யா/அம்மையீர்,


பொருள்: தேர்தல்கள் கரூர் மாவட்டம் - சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2027 01012027 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் ஆகியவை தொடர்பாக அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுதல்- தொடர்பாக.


பார்வை தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலர். சென்னை அவர்களின் கடிதம், எண்.23500/தேர்தல்கள்-1/2026-11 நாள்.11.11.2026


பார்வையில் காணும் தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலர் அவர்களின் கடிதத்தில் 01.01.2027 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்(Form6), நீக்கல்(Form7) மற்றும் திருத்தம் (Forms) ஆகியவை தொடர்பாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2027க்கான சிறப்பு முகாம்கள் கீழ்க்கண்ட நாட்களில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


வ.எண்


நாள்.


கிழமை.


1


21.11.2026


சனிக்கிழமை


2.


22.11 2026


ஞாயிற்றுக்கிழமை


3


29.11.2026


ஞாயிற்றுக்கிழமை


எனவே சிறப்பு முகாம் நடைபெற உள்ள வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் (Designated Location Officer) முதல்வர்/துணை முதல்வர் தலைமை ஆசிரியர் /உதவி தலைமை ஆசிரியர்/ பிற ஆசிரியர்களை சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளை காலை 8.30 மணிக்கு திறந்து வைத்திடவும். வாக்குச்சாவடி மையங்களில் உரிய நேரத்தில் ஆஜரில் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேற்படி முகாம் நடக்கும் நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாமில் வரும் மனுக்களை (படிவம் 6, 6A, 6B 7, மற்றும் 8) பெற்றும், அதன் விபரங்களை படிவம் 9, 10, 11, 11A மற்றும் 11B-ல் பூர்த்தி செய்து அறிக்கையாக சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலருக்கு(ERO) அனுப்ப வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு (DLOs) உரிய அறிவுரை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.


ஒம்/ ச.பிரசன்னா ராமசாமி


மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்,


//உண்மைநகல் உத்தரவுபடி//


மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்

மாவட்ட ஆட்சித்தலைவருக்காக,

கரூர்.


நகல்


1 வாக்காளர் பதிவு அலுவலர், 137 குளித்தலை சட்டமன்றத் தொகுதி மற்றும்


வருவாய் கோட்டாட்சியர், குளித்தலை.


2 வாக்காளர் பதிவு அலுவலர், 135 கரூர் சட்டமன்றத் தொகுதி


மற்றும் வருவாய் கோட்டாட்சியர் கரூர்.


3. வாக்காளர் பதிவு அலுவலர், 134-அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி


மற்றும் உதவி ஆணையர்(கலால்), கரூர்


வாக்காளர் பதிவு அலுவலர், 135-கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், கரூர்.


5. உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர்,கரூர்.


6. உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வட்டாட்சியர், கரூர்/ அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம்/ குளித்தலை/மண்மங்கலம்/ கடவூர்/புகழூர்.


7. உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் தனி வட்டாட்சியர்கள்(ச.பா.தி) கரூர்/அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம்/ குளித்தலை/மண்மங்கலம்/கடவூர்/புகழூர்


8. உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் நகராட்சி ஆணையர், குளித்தலை



Hi-Tech Lab Assessment நடத்தும் பொழுது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் - காணொளி

 


உயர் தொழில் நுட்ப ஆய்வக மதிப்பீடு Hi-Tech Lab Assessment நடத்தும் பொழுது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் - காணொளி


Procedures to be followed during the assessment of Hi-Tech Labs - Video



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




Key Points - High-Tech Lab Assessments - Cycle 2 (November 2026)



Key Points - High-Tech Lab Assessments - Cycle 2 (November 2026) 


Dear Team,


Please find the details of *Cycle 2 – High-Tech Lab Assessments (November 2026)* for the academic year 2026–27.


As per the assessment schedule, Cycle 2 will commence on class-wise assessments scheduled from *23 November  to 1 December  2026*.


The circular has already been shared with all CEOs, DEOs and SS offices through the respective departments, and is re-shared here for your reference.


📌 *Key Points:*

1. The assessment can be conducted in the *High-Tech Labs* and on the listed internet-connected devices – desktop computers, laptops, tablets and mobile phones.


2. As mentioned in *Annexure 2* of the circular, please ensure that all administrators are informed about their respective roles and responsibilities.


3. A demo video explaining the assessment process will be shared shortly.




Event IDs for Cycle 2 - High-Tech Lab Assessment (November 2026)

 


Dear Team,

Please find the event IDs for *Cycle 2 – High-Tech Lab Assessment (November 2026)* for Classes 6–9.


📋 *Event IDs and Assessment Schedule:*


*Class 6* – Start Date: 23/11/2026 (Monday)

• T.M – *492044*

• E.M – *492045*


*Class 7* – Start Date: 24/11/2026 (Tuesday)

• T.M – *492046*

• E.M – *492047*


*Class 8* – Start Date: 25/11/2026 (Wednesday)

• T.M – *492048*

• E.M – *492049*


*Class 9* – Start Date: 26/11/2026 (Thursday)

• T.M – *492050*

• E.M – *492051*


📅 *End Date for all classes: 01/12/2026*


_Note: Absent or not-completed students may attend the assessment on the next working day._


Question Paper Allocation Instructions

 



வினாத்தாள் ஒதுக்கீடு குறித்த அறிவுறுத்தல்கள்


Dear Team,

✅  Question Paper Allocation Instructions:


Please inform the teachers to allocate the question papers *only for the respective event IDs* mentioned in the previous message, following the circular and the Assessment Manual video.


1. *Questions:* 5 questions per subject – 25 questions in total.

2. *Duration:* Set the time limit to 30 minutes.

3. *Question Paper:* Select 2 sets and 2 versions.


Thank you.


Website links for Allocating QP and conducting assessment



 வினாத்தாள் ஒதுக்கீடு மற்றும் மதிப்பீடு செய்வதற்கான வலைதள முகவரிகள் 


Dear team,


Please find the links for Allocating QP and conducting assessment below. Please note that the older Exe. software for assessment will not work. Make sure schools are only attending through the new web link.


🌐 Websites:

To allocate the Question Paper: https://exam.tnschools.gov.in


To attend the Assessment: https://assessment.tnschools.gov.in


Competency-based assessment - ​​Conducting quizzes using higher-order thinking questions - Guidelines - DEE, DSE & SPD Joint Proceedings



 திறன் சார்ந்த மதீப்பீடு - உயர்திறன் வினாக்கள் மூலம் மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்க்கும் பொருட்டு வினாடி வினா நடத்துதல் - வழிகாட்டி நெறிமுறைகள் - மாநில திட்ட இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்


Assessment based quiz for Class 6 to 9 - Guidelines


Competency-based assessment - ​​Conducting quizzes using higher-order thinking questions to foster students' thinking skills - Guidelines - Joint proceedings of the State Project Director, the Director of School Education, and the Director of Elementary Education.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




மாநில திட்ட இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள், சென்னை-06


ந.க. எண்.76896/PD1/S3/2026, நாள். 02.09.2026


பொருள்:


பள்ளிக் கல்வி - திறன் சார்ந்த மதீப்பீடு - உயர்திறன் வினாக்கள் மூலம் மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்க்கும் பொருட்டு மாவட்டம் தோறும் 6 முதல் 9 வகுப்பு வரை மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல், வழிகாட்டி நெறிமுறைகள் சார்ந்து.


பார்வை :  G.O. (Ms) No.155, School Education (ERT) Department, dated 16.11.2021


அரசுப் பள்ளி மாணவர்கள் சிந்தித்து சாதிக்கும் தலைமுறைகளாக மாறும் வகையில் அவர்களின் கருத்தியல் புரிதல், பகுப்பாய்வு சிந்தனை மற்றும் மதிப்பீட்டு நடைமுறைகளை வலுப்படுத்தும் வகையில் உயர்தொழில்நுட்ப ஆய்வகத்தில் வினாடி வினா நடத்தப்பட உள்ளது. மாணவர்களின் உயர்திறன் வினாக்களுக்கு பதிலளிக்க பழக்கும் விதமாகவும், சிந்தனைத் திறனை வளர்க்கும் விதமாகவும், மாணவர்களை கணினி வழி போட்டித்தேர்வுகளுக்குத் தயார்படுத்தும் விதமாகவும், உயர்தொழில்நுட்ப ஆய்வகத்தினை சிறப்பாக பயன்படுத்தும் நோக்கத்திலும் இந்த மதிப்பீடானது மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.


இது தொடர்பாக புதிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி வழி வினாடி வினா நடத்துதல் தொடர்பாக பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.


1. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணைப்பு 1 இல் உள்ளவாறு 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்வுகளை நடத்த வேண்டும்.


2. இந்த வினாடி வினா நிகழ்வை உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் நடத்த வேண்டும்.


3. உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் ஏற்படும் தொழில்நுட்பக் குறைபாடுகள், வினாத்தாள்களை உருவாக்கும்போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.


4. ஒரு பாடத்திற்கு 4 வினாக்கள் வீதம் 5 பாடத்திற்கு மொத்தம் 20 வினாக்கள் கொண்ட வினாத்தாளை உருவாக்க வேண்டும். மாணவர்களுக்கு 30 நிமிடம் கால அளவாக நிர்ணயிக்க வேண்டும்.


5. உயர்தொழில் நுட்ப ஆய்வகம் அமைந்துள்ள பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் இணைப்பு 2 இல் உள்ள வழிமுறைகளில் புலமை பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


6. உயர்தொழில்நுட்ப ஆய்வகம் வழியாக தொடர்ச்சியாக வினாடி வினா நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்.


மேற்குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளை செயல்படுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) அவர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


இணைப்பு:


1. வினாடி வினா மதிப்பீடு நடத்துவதற்கான அட்டவணை


2. வழிகாட்டு நெறிமுறைகள்


இயக்குநர்

தொடக்கக்கல்வி இயக்கம்


இயக்குநர் 

பள்ளிக் கல்வி இயக்ககம்


மாநில திட்ட இயக்குநர் 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி


பெறுநர்:


1. அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்


2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி)


3. அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள்


நகல்

1. இயக்குனர், மாநில ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அவர்களுக்குத் தகவலுக்காகப் பணிந்தனுப்பப்படுகிறது.





ஆண்டு வாரியான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு 4 வார கால தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு



ஆண்டு வாரியான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு 4 வார கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> முழுமையான தகவல்கள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


5 days Residential training for B.T. Assistants - SCERT Director Proceedings



தெரிவு செய்யப்பட்ட கணித, அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சென்னையில் 5 நாட்கள் (23.11.2026 முதல் 27.11.2026 வரை) உண்டு, உறைவிடப் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்


Residential training for selected Graduate Teachers of Mathematics and Science in Chennai for 5 days (from 23.11.2026 to 27.11.2026) - Proceedings of the Director, SCERT



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு EMIS வழியாக வெளிப்படையான மாறுதல் கலந்தாய்வு - அரசாணை G.O.Ms.No. 190, Dated : 18-11-2026 வெளியீடு



பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு EMIS வழியாக வெளிப்படையான மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் தொடர்பாக அரசாணை வெளியீடு


Tamilnadu School Education department Non-Teaching Staff Transfer Counselling G.O. No. 190


* பள்ளிக்கல்வித் துறை அமைச்சுப் பணியாளர்களுக்கான 2026-27 பொது மாறுதல் கலந்தாய்வு வழிகாட்டுதல்கள் - EMIS தளம் மூலம் வெளிப்படையாக நடத்த அரசாணை வெளியீடு


G.O.(Ms)No.190 - Non Teaching Staff- General Transfer Counselling Guidelines


* இயக்குநரகப் பிரிவுகள் முதல் CEO, DEO, BEO அலுவலகப் பணியாளர்கள் வரை பொது மாறுதல் கலந்தாய்வு விதிமுறைகள் வெளியீடு


G.O.Ms.No. 190, Dated : 18-11-2026 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> தமிழாக்கம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

RAC டிக்கெட்டை காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றி ரத்து செய்த ரயில்வே : ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவு

 ஆர்ஏசி டிக்கெட்டை காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றி ரத்து செய்த ரயில்வே: ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவு ஆர்ஏசி 44 நிலையில் இருந்த டிக்கெ...