கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்: மகள்களை அரசுப் பள்ளியில் சேர்த்த ஐஆர்எஸ் அதிகாரி ஷெரின்...

 


மாற்றம் நம்மில் இருந்தே தொடங்க வேண்டும் என்கிறார், தன் மகள்களை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ள ஐஆர்எஸ் அதிகாரி ஷெரின் சோமிதரன். அரசு ஊழியர்கள், சமுதாயத்தில் உயர் நிலையில் இருப்பவர்கள், அதிகாரமிக்க பதவியில் இருப்பவர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுக்கிறா.


மதுரை அருகே திருப்பாலை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஷெரின் சோமிதரன். ஐஆர்எஸ் அதிகாரியான இவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்திய வருவாய்த் துறையில் ஜிஎஸ்டி இணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அவர் தனது குழந்தைகளான ஆதிரை, ரெனி ஆகிய இருவரையும் அரும்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துள்ளார். ஆதிரை இரண்டாம் வகுப்பிலும் ரெனி எல்கேஜி வகுப்பிலும் சேர்ந்துள்ளனர்.


மகள்களை அரசுப் பள்ளியில் சேர்த்தது ஏன் என்பது குறித்து ஷெரின் ஐஆர்எஸ் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் விரிவாகப் பேசினார்.


''நான் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்ததால் அத்தகைய பள்ளிச் சூழலை உணர்ந்திருக்கிறேன். அது என் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன். பொதுவாகவே நானும் ஆவணப்பட இயக்குநராகிய கணவரும் மாற்றுச் சிந்தனை கொண்டவர்கள்தான். இருவரும் இயற்கை விவசாயப் பண்ணையில்தான் எந்தவித ஆடம்பரச் செலவும் இல்லாமல் கழிவுகளை உருவாக்காமல் திருமணம் செய்துகொண்டோம். நம்மாழ்வாருடன் இணைந்து பயணித்திருக்கிறோம். இயற்கை, சூழலியல், மண் சார்ந்த விருப்பங்கள் உண்டு.


மகள்கள் பிறந்ததில் இருந்தே அவர்களை அரசுப் பள்ளியில் சேர்ப்பது குறித்து யோசித்தோம். பாடங்கள், மதிப்பெண்கள், வேலை சார்ந்து மட்டுமே அவர்களை இயங்க வைக்காமல் வாழ்க்கையின் மீது தன்னம்பிக்கையை, பிடிப்பை ஏற்படுத்த ஆசைப்பட்டோம்.


அதேபோலப் பல தரப்பட்ட மக்களுடன் அவர்கள் பழக வேண்டும் என்று விரும்பினோம். கல்வி வணிகமயமாகி வரும் சூழலில், பள்ளி என்பது அனைத்துத் தரப்பு மக்களுக்குமானதாக இருக்க வேண்டும். அதற்கு அரசுப்பள்ளி சரியானதாக இருக்கும் என்று முடிவு செய்தோம். மற்ற பள்ளிகளைக் காட்டிலும் அரசுப் பள்ளி மாணவர்கள், எந்த ஒரு சூழலையும் தைரியத்துடனும் நேர்மறைச் சிந்தனையுடனும் அணுகுவார்கள்'' என்கிறார் ஷெரின்.


அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்துத் தொடர்ந்து பொதுச் சமூகத்தில் ஐயங்கள் எழுப்பப்படுவது குறித்துக் கேட்டபோது, ''ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், சமுதாயத்தில் உயர் நிலையில் இருப்பவர்கள், அதிகாரமிக்க பதவியில் இருப்பவர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அதன்மூலம் இயல்பாகவே பள்ளிகளின் உள் கட்டமைப்பு, வசதிகள், கல்வித் தரம் குறித்த கேள்விகள் எழுப்பப்படும். அவற்றை அமைப்பதற்கான கட்டாயம் அரசுக்கு ஏற்படும்.


இதன் மூலம் கிராமங்களில் உள்ள ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் அடுத்தகட்டத்துக்கு வளர்ச்சி அடையும். எனினும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிறப்பாகச் செயல்படும் அரசுப் பள்ளிகளைத் தேடி அங்கு சேர்க்க பல்வேறு வாய்ப்புகள் உள்ளன'' என்று ஷெரின் கூறுகிறார்.


அரசுப் பள்ளியில் மகள்களைச் சேர்த்தது குறித்து சக அலுவலக நண்பர்கள் கருத்து என்னவாக இருந்தது என்று கேட்டதற்கு, ''பெரும்பாலானோர் தைரியமான, வரவேற்கத்தகுந்த, முன்மாதிரியான முடிவு என்றுதான் கூறினர். அரசுப் பள்ளிகள் குறித்த பிம்பம் மாறியதன் அடையாளமாகத்தான் இதை நினைக்கிறேன். அதேவேளையில் சில ஆண்டுகளுக்கு முன்னால் இத்தகைய நிலை இல்லை'' என்று புன்னகைக்கிறார்.


பெருந்தொற்றுக் காலகட்டத்தில் பள்ளிகள் ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள சூழலில் அரசுப் பள்ளியில் சேர்த்தது குறித்தும் பேசுகிறார் ஷெரின். ''கற்றல் என்பது வாழ்க்கை முழுமைக்குமான நிகழ்வு. குழந்தைகள் பள்ளியில் மட்டுமே கற்பதில்லை. அது ஒரு பகுதிதான். இந்த ஊரடங்கு காலகட்டத்தில் என்னென்ன முறைகளில் அவர்களுக்குப் படிக்க வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வகையில் படிக்கட்டும். இதனால் அவர்கள் படிப்பதற்கான வேகம் வேண்டுமானால் குறைந்திருக்கலாம். அதை மதிப்பெண்கள், தேர்வுகள் என்று மட்டுமே பார்க்க வேண்டியதில்லை என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


ஒவ்வொரு குழந்தைக்கும் எந்த வகையிலாவது கற்றல் நிகழ்ந்துகொண்டே இருக்கும் என்று நம்புகிறேன். படிப்பு மட்டுமல்லாமல், இயற்கை விவசாயம், நெசவு, தையல், தச்சு வேலை என கலைகள் சார்ந்தும் மகள்களை வளர்த்தெடுக்க ஆசை. அரசுப் பள்ளிகளில் இத்தகைய ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.


அரசு அதிகாரிகள் மட்டுமல்லாமல் அதிகாரமிக்க பதவியில் இருப்போர், தொழிலதிபர்கள் என சமுதாயத்தில் உயர் நிலையில் இருப்பவர்கள், தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்தால் இவை அனைத்தும் சாத்தியமாகும்'' என்று விடைகொடுக்கிறார் ஷெரின் ஐஆர்எஸ்.


க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in


நன்றி: இந்து தமிழ் திசை நாளிதழ்

தமிழ்நாடு அரசின் புதிய உடல்நலக் காப்பீடு திட்டம் - NHIS 2021 முக்கிய அம்சங்கள்...

 


தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், 01-07-2021 முதல் அமலுக்கு வந்தது. இத்திட்டம் நான்கு ஆண்டுகள் அமலில் இருக்கும்.


தமிழகத்தில், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்' நிறுவனத்துடன் இணைந்து, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. 


இந்த திட்டம், 2025 ஜூன் 30 வரை, நான்கு ஆண்டுகள் அமலில் இருக்கும். மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான மாத சந்தா 180 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்தொகை ஊழியர்களின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். கணவன், மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்தால், ஒருவரிடம் மட்டுமே சந்தா வசூலிக்கப்படும். காப்பீடு தொகை 4 லட்சம் ரூபாய் என்பது, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.


புற்றுநோய், உறுப்பு மாற்று சிகிச்சை போன்ற வற்றுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட 7.50 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாயாகவும்; கண்புரை அறுவை சிகிச்சைக்கு வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாய், 30 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. அரசு அலுவலகங்களில் மதிப்பூதியம், தொகுப்பூதியம், தினக்கூலி பெறுவோர், தற்காலிக பணியாளர்கள் போன்றோருக்கு, இத்திட்டம் பொருந்தாது.


புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், 203 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கு 1,163 மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். இத்திட்டத்தின் கீழ், குடும்ப உறுப்பினர்கள் பயன்பெற முடியும். திருமணமாகாத ஊழியர்களாக இருந்தால், அவர்களின் பெற்றோர் பயன்பெறலாம்.

 

>>> NHIS மாத சந்தா 01-07-2021 முதல் ரூ.300ஆக உயர்வு - 31-06-2025வரை ரூ.5இலட்சம் வரையிலான சிகிச்சைக்கு அனுமதி - அனுமதிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் பட்டியல் - அரசாணை (G.O.Ms.No.: 160, Dated: 29-06-2021) வெளியீடு...


SAMAGRA SHIKSHA & SCERT - All India Radio - Audio Lesson Schedule for Classes X and XII (July 2021)...



 SAMAGRA SHIKSHA AND 

STATE COUNCIL OF EDUCATIONAL RESEARCH AND TRAINING, CHENNAI - 06

All India Radio - Audio Lesson Schedule for Classes X and XII (30 Days).


>>> Click here to Download  SAMAGRA SHIKSHA & SCERT - All India Radio - Audio Lesson Schedule for Classes X and XII (July 2021)...


கல்வியியல் மேலாண்மை தகவல் முறைமை தரவுகள் (EMIS) புதுப்பித்தல், 2021-2022 -ஆம் கல்வியாண்டிற்கு 1-7 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ பாடப்புத்தகம் தேவைப்பட்டியல் கோரி பள்ளிக்கல்வி ஆணையர் கடிதம்...

 


கல்வியியல்  மேலாண்மை தகவல் முறைமை தரவுகள் (EMIS) புதுப்பித்தல்,  2021-2022 -ஆம் கல்வியாண்டிற்கு 1-7 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ பாடப்புத்தகம் தேவைப்பட்டியல் கோரி பள்ளிக்கல்வி ஆணையர் கடிதம் ந.க.எண்: 30821/ இ/ இ3/ 2021, நாள்: 25-06-2021...


>>> பள்ளிக்கல்வி ஆணையர் கடிதம் ந.க.எண்: 30821/ இ/ இ3/ 2021, நாள்: 25-06-2021...



மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?

 


ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி அகவிலைப்படி உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். கொரோனா காரணமாக 2020 ஜன., 1 முதல், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் வரை, மூன்று தவணை அகவிலைப்படி நிலுவையில் உள்ளது. இந்நிலையில், 'ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும்; ஓய்வூதியர் விதிமுறைகள் தளர்த்தப்படும்' என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை, மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது.


அதனால், நடப்பு ஜூலையில் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என, மத்திய அரசின் 52 லட்சம் ஊழியர்களும், 60 லட்சம் ஓய்வூதியர்களும் எதிர்பார்த்தனர். இது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், மத்திய அரசு அறிவிப்பில் உள்ள முக்கிய ஐந்து அம்சங்கள் குறித்து டில்லி வட்டாரங்கள் கூறியதாவது:


* ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து, 28 சதவீதமாக உயர்த்தப்படலாம். இது குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம்


* மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வசதி கடன் திட்டம், 2020 ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் மேலும் நீட்டிக்கப்படலாம். இந்த திட்டத்தில், 7.9 சதவீத வட்டியில் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டம் தொடர்பான விதிமுறைகளை சமீபத்தில் மத்திய அரசு மேம்படுத்தியுள்ளது


* கடந்த ஜூன் 15 முதல், ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களின் பயணப் படி கோரிக்கைக்கான கால வரம்பு, 60 நாட்களில் இருந்து, 180 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது


* ஓய்வூதியம் குறித்த விபரங்கள் அனைத்தையும் ஓய்வூதியதாரருக்கு மின்னஞ்சல், குறுந்தகவல், 'வாட்ஸ் ஆப்' ஆகியவற்றில் அனுப்ப, வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநடைமுறை, 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது


* குடும்ப ஓய்வூதிய விதிமுறைகளை மத்திய அரசு மாற்றி அமைத்து உள்ளது. இதன்படி, மத்திய அரசு ஊழியர் இறந்தால், இறப்பு சான்றிதழுடன்விண்ணப்பிக்கும் குடும்ப வாரிசுக்கு, உடனடியாக பகுதி ஓய்வூதியம் வழங்கப்படும்


* உரிய விதிமுறைகளை பூர்த்தி செய்த பின், குடும்ப ஓய்வூதியம் நிலுவையுடன் முழுதுமாக வழங்கப்படும். இதனால், வாரிசுதாரர்கள் குடும்ப ஓய்வூதிய நடைமுறைகள் முடியும் வரை ஓய்வூதியம் பெற முடியாத நிலை தவிர்க்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாததால் அரசு பள்ளிகளில் TC இன்றி மாணவர் சேர்க்கை அதிகரிப்பு...



மாற்றுச் சான்றிதழ் இன்றி மாணவர்களை சேர்க்க, அரசு அனுமதித்து உள்ளதால், தனியார்பள்ளி மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர்வது அதிகரித்துள்ளது.


அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, கடந்த கல்வி ஆண்டுக்கான கட்டணப் பாக்கியை வசூலித்து, அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாணவர்களை தரம் உயர்த்தும் பணிகளை மேற்கொண்டு உள்ளன.இதில், கடந்த ஆண்டு கட்டணம் செலுத்தாமல், பாக்கி உள்ளவர்களில் பலர், கட்டணத்தை செலுத்துவதற்கு பதில், வேறு பள்ளிகளுக்கு மாறி வருகின்றனர்.


பல மாவட்டங்களில், தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோர், அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர். 'கட்டணப் பாக்கி செலுத்தினால் மட்டுமே, மாற்றுச் சான்றிதழ்களை வழங்குவோம்' என, தனியார் பள்ளி நிர்வாகத்தினர் கெடுபிடி காட்டுவதால், மாற்றுச் சான்றிதழ் வாங்காமலேயே, மாணவர்கள் பிற பள்ளிகளுக்கு மாறுகின்றனர்.


தமிழக அரசின் சார்பில், 2010ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளில் சேர்வதற்கு மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை என, கூறப்பட்டுள்ளது. இதை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என, பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவை பயன்படுத்தி, தற்போது மாற்று சான்றிதழ் இன்றி, அரசு பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.


இதனால், பல ஆயிரம் கட்டணப் பாக்கியில் இருந்து, பெற்றோர் தப்பித்துள்ளனர். அதேநேரம், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளோ, மாணவர்களிடம் கட்டணம் பெற முடியாமல், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளைப் பொதுமக்கள் கவனமுடன் கையாள முதலமைச்சர் அவர்கள் விழிப்புணர்வு செய்தி அறிக்கை வெளியீடு...

 


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளைப் பொதுமக்கள் கவனமுடன் கையாள முதலமைச்சர் அவர்கள் விழிப்புணர்வு செய்தி அறிக்கை வெளியீடு...


>>> செய்திக்குறிப்பு எண்: 27, நாள்: 04-07-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEE Proceedings to select and send 40 teachers from each block who have made the best contribution to the learning progress of the students through TNSED Manarkeni App

  ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் சிறந்த 40 ஆசிரியர்கள் தேர்வு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... மணற்கேணி செயலி மூலம் மாணவர்களின் ...