கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களுக்கு வருமானச் சான்றிதழ் (Income Certificate), சாதிசான்றிதழ் (Community Certificate) காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் : அமைச்சர் இராமச்சந்திரன் உத்தரவு - செய்தி வெளியீடு எண்: 516, நாள்: 29-07-2021......

 பள்ளி மற்றும் கல்லூரி  மாணவ / மாணவியர்களுக்கு வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிசான்றிதழ் காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.


செய்தி வெளியீடு எண்: 516, நாள்: 29-07-2021...


மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுடமிருந்து, வருமான சான்றிதழ் / சாkதி சான்றிதழ் கோரி பெறப்படும் மனுக்கள் மீது எவ்வித கால தாமதமின்றி உடனடியாக பரிசீலித்து, அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க வட்டாட்சியர்கள் மற்றும் கோட்டாட்சியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தற்போது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு இருப்பதால் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து இ-சேவை  மையங்களிலும் மாணவர்கள் சான்றுகளை  கூட்ட நெரிசல் இன்றி பெற்று செல்ல ஏதுவாக குறிப்பிட்ட நாட்களை அதற்கென ஒதுக்கி, எவ்வித இடையூறு இன்றி சான்றிதழ்கள் வழங்கபட வேண்டும்.


சான்றுகளை வழங்குவதில் தேவையற்ற கால தாமதத்தினை தவிர்த்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தவறாது சான்றுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், தேவையின்றி மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது எனவும் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.



தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை நீட்டிப்பு...


தமிழகத்தில் கிராமப்புற பெண் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்குவது 10ம் வகுப்பு வரை நீட்டிக்க அரசு பரிசீலனை செய்துள்ளது. இதன் மூலம் பெண் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி கல்வி கற்பது உறுதி செய்யப்படும்.


கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு உதவும் வகையில் அரசு சார்பில் 3 முதல் ஆறாம் வகுப்பு வரை ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இதனை நீட்டிக்க அரசு திட்டமிட்டு உள்ளது.


3 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளை சார்ந்த பெண் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 500 ரூபாயும், 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியருக்கு ஆண்டுக்கு தலா 1000 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அரசு கிராமப்புற பெண் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்குவதை 6ம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை நீட்டிக்க பரிசீலனை செய்து வருகிறது. இதன் மூலம் பெண் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி கல்வி கற்பது உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.


அனைத்து பள்ளிகளிலும் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு (Awareness to Girls) ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு 10 மாணவிகளுக்கும் Incharge ஆக ஒரு ஆசிரியை வீதம் நியமனம் செய்ய உத்தரவு...



Awareness to Girls

     அனைத்து பள்ளிகளிலும்  8 ஆம்  வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும்  மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு  10 மாணவிகளுக்கு  Incharge  ஆக ஒரு  ஆசிரியை  வீதம் நியமனம் செய்து கீழ் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து karurc3ceo@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு  அனுப்புமாறும் தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்ட copy ஐ முதன்மை கல்வி அலுவலகத்தில்   ஒப்படைக்குமாறும்   தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்  கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.


குறிப்புகள்:

1. ஒருவர் கூட விடுபடாமல் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியைகளையும் incharge ஆக நியமனம் செய்ய வேண்டும்.

2. ஒவ்வொரு 10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை வீதம் incharge நியமனம் செய்யும் போது மாணவிகள் பயிலும் வகுப்பு incharge ஆசிரியை கற்பிக்கும் வகுப்பு எனவும் மேல் நிலை வகுப்பு , உயர் நிலை வகுப்பு,  நடுநிலை வகுப்பு, தொடக்க நிலை வகுப்பு எனவும்  பேதம் பிரித்து  பார்க்க வேண்டியதில்லை.

3. ஒவ்வொரு 10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை வீதம் incharge நியமனம் செய்ய வேண்டி  இருப்பினும் மாணவிகளின் எண்ணிக்கை ஆசிரியைகளின் எண்ணிக்கை  ஆகியவற்றைக்  கணக்கிட்டு சமமாக பிரித்தல் வேண்டும். 

4.ஒரே படிவத்தில் அனைத்து மாணவிகளின் பெயர்களையும் வகுப்பு வாரியாக type செய்து incharge ஆசிரியைகளின்  பெயருடன்  அனுப்பவும்.

5. சந்தேகங்களுக்கு 7373003103 என்ற எண்ணில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரைத் தொடர்பு கொள்ளலாம்.

பள்ளியின் பெயர் மற்றும் முகவரியை படிவத்தின்  முதல் பக்கத்தின் மேலும்  கடைசி பக்கத்தின் அடியிலும் ( Top & Bottom ) type செய்து அனுப்பவும்.

 மாணவிகளுக்கு ஆண் ஆசிரியர்களை incharge ஆக நியமனம் செய்யக் கூடாது.

பள்ளியின் பெயர் மற்றும் முகவரியை படிவத்தின்  முதல் பக்கத்தின் மேலும்  கடைசி பக்கத்தின் அடியிலும் ( Top & Bottom ) type செய்து அனுப்பவும்.

நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்


படிவம்👇👇

https://drive.google.com/file/d/1LrNsp0cUAbG7fxfYno1tkBBXdFFi9GDj/view?usp=drivesdk




ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் (Samagra Shiksha) மற்றும் மாநில ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) மூலம் ஆசிரியர்களின் புதுமையான (Innovative Teachers Forum)படைப்புகளைப் பதிவிட Google Sheet இணைப்பு (Link) வழங்கப்பட்டுள்ளது...



ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் (Samagra Shiksha) மற்றும் மாநில ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) மூலம் ஆசிரியர்களின் புதுமையான படைப்புகளைப் பதிவிட Google Sheet இணைப்பு (Link) வழங்கப்பட்டுள்ளது...


         ஆசிரியர்களின் புதுமையான படைப்புகளை கீழ்காணும் Linkல் பதிவிடலாம். இப்பதிவுகள் மூலம் சிறந்த ஆசிரியர்களை இனம் காண இயலும் என இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட பாடம் அல்லது குறிப்பிட்ட தலைப்பில் தான் பதிவிட வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை. ஆகவே சிறந்த படைப்புகளை பதிவிட தடையேதும் இல்லை. அனைத்து ஆசிரியர்களுக்கும் Link ஐ அனுப்புமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.


Link...

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScdEclzovxH2GTUjLxzNiW9XmE2MSkwvUoIV1iPye4CVt-_9g/viewform?usp=sf_link



முன்னதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் பட்டியல்...

Samagra Shiksha and SCERT - Tamil Nadu are jointly inviting all teachers to showcase their teaching talent through YouTube videos for compensating the learning loss of Tamil Nadu students during COVID-19 lockdown.


The list of teachers who are selected for this exercise is attached herewith.

https://docs.google.com/spreadsheets/d/1U7IaSKsXym4yta-0fHE4KdzN6wpLaoWokz4XLwFOhhk/edit?usp=sharing

But, those who are interested to join their hands with this Government initiative are most welcome to participate by submitting their own subject-relevant YouTube videos.

 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் இணை இயக்குனர் நிலையில் பணியிட மாறுதல் அரசாணை (வா) எண்: 188, நாள்: 27-07-2021 வெளியீடு...


JD Transfer - G.O.No.188 RD & PR dt.27.07.2021...


 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் இணை இயக்குனர் நிலையில் பணியிட மாறுதல் அரசாணை (வா) எண்: 188, நாள்: 27-07-2021 வெளியீடு...


>>> அரசாணை (வா) எண்: 188, நாள்: 27-07-2021...


கொரோனா விதிமுறைகளை மீறும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு...

 கொரோனா விதிமுறைகளை மீறும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு...



அரசுப்பள்ளிகள் 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உறுதி...



 தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை அடுத்த கள்ளபெரம்பூர் செங்கழுநீர் ஏரியை  நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: 

9வது முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவு செய்வார். 

பள்ளிகளில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நிரவல் செய்யப்பட்ட பின்னர் தான் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும். 

அரசுப்பள்ளிகள் இன்னும் 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும். அரசு பள்ளிகளில் சேர சிபாரிசு வரும் நிலையும் ஏற்படும். 

அரசு பள்ளிகளில் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை கற்றுத்தர முயற்சிக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Procedure to Apply for Leave through Kalanjiyam Mobile App

  KALANJIYAM - APPLY LEAVE ♻️ 01-01-2025 முதல் அனைத்துவகை ஆசிரியர்களும் ▪️CL ▪️RL ▪️EL ▪️ML போன்ற விடுப்புகளை களஞ்சியம் கைபேசி செயலி வழியாக ...