கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சீராய்வு மனு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீராய்வு மனு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

TET Review Petitions மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - முழுமையான விவரம்

 


ஆசிரியர் தகுதித் தேர்வு சீராய்வு மனுக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு


TET Review Petitions Supreme court Judgment 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




ஆசிரியர் தகுதித் தேர்வு சீராய்வு மனு மீது தீர்ப்பு


TET Review Petitions Supreme Court Judgment



ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் மாற்றம் இல்லை


ஆசிரியர்கள் (55வயதிற்குட்பட்டவர்கள்) கட்டாயம் TET தேர்வில்  தேர்ச்சி பெற வேண்டும்


ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி அடைய 3 ஆண்டுகளாக காலக்கெடு நீட்டிப்பு


ஆசிரியர் தகுதி தேர்வு மறுசீராய்வு மனுக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - முழுமையான விவரம்


1) ஏற்கனவே கொடுத்த தீர்ப்பே தொடரும். முந்தைய தீர்ப்பில் எவ்வித மாற்றமும் இல்லை.


2) TET தேர்வெழுதி தேர்ச்சி பெறுவதற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட இரண்டாண்டு கால அவகாசம் தற்போது மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்யப்பட்டு மூன்றாண்டு காலமாக உயர்த்தப்படுகிறது. அதாவது அனைவரும் 31-08-2028ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


யாரெல்லாம் TET தேர்வு எழுத வேண்டியதில்லை? 

தீர்ப்பு வெளியான 31-08-2025 ஆம் தேதியில் இருந்து ஐந்தாண்டுக்குள் பணிக்காலம் உள்ளவர்கள் தேர்வு எழுத வேண்டியதில்லை. 


அதாவது 31-08-2030ஆம் தேதிக்குள் பணி ஓய்வு பெறக்கூடிய அனைவரும் தேர்வு எழுத வேண்டியதில்லை. TET தேர்ச்சி இல்லாமலே தங்கள் பணியில் தொடர்ந்து இருந்து கொள்ளலாம்.


யாரெல்லாம் TET தேர்ச்சி பெற வேண்டும்? 

1) ஐந்தாண்டுகளைக் காட்டிலும் கூடுதலான பணிக்காலம் உள்ள அனைவரும் பணியில் தொடர்ந்து இருப்பதற்கே TET தேர்ச்சி அவசியம். 

அதாவது 31-08-2030க்குப் பிறகு பணிஓய்வு பெறுபவர் அனைவரும் தற்போது உள்ள பதவியில் தொடர்ந்து பணிபுரியவே TET தேர்ச்சி அவசியம். 

2) ஐந்தாண்டுகளுக்கு உள்ளே பணிக்காலம் இருப்பவர்கள் அடுத்த பதவி உயர்வு வேண்டுமென்று விரும்பினால் அவர்களும் கண்டிப்பாக TET தேர்ச்சி பெற்றாக வேண்டும். 


Judgment- Appreciating that the TET examination must be conducted by the relevant authorities expeditiously as well as the time and resources required for the same are limited, we alter and extend the timeline granted in paragraph 217 of Anjuman (supra) for in-service teachers to acquire the TET qualification from 2 (two) to 3 (three) years, i.e., the qualification has to be obtained by 31st August, 2028 instead of 31st August, 2027, as originally directed.


34. Needless to observe, it shall also be the endeavour of the respective States and the competent authorities to conduct the TET periodically, and preferably twice every year, interspersed with an approximate period of six months between the successive examinations, so as to afford eligible teachers a reasonable opportunity to comply with the statutory requirement.


35. We make it abundantly clear that no further prayer for extension of time shall be entertained.


CONCLUSION


36. With the aforesaid modification of the order under review, all the petitions stand dismissed.



 இதன் சுருக்கம் தமிழில் 



​உச்ச நீதிமன்றத்தின் இந்த முக்கியத் தீர்ப்பின் (State of U.P. v. Anjuman Ishaat-E-Taleem Trust & Ors.) சுருக்கம் கீழே தமிழில் வழங்கப்பட்டுள்ளது:

​1. கட்டாயத் தகுதி (Core Requirement)

​TET தேர்வு கட்டாயம்: கல்வி உரிமைச் சட்டத்தின்படி (RTE Act, 2009) தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாக (வகுப்புகள் 1 முதல் 8 வரை) பணியில் இருக்கும் அனைவரும்—அவர்கள் இந்தச் சட்டம் வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்திருந்தாலும்—ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது கட்டாயமான தகுதி என்றும், இது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-A இன் கீழ் தரமான கல்வி வழங்குவதற்கான "அரசியலமைப்புத் தேவை" என்றும் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.  

​பதவி உயர்வுக்குக் கட்டாயம்: ஒரு ஆசிரியர் எத்தனை ஆண்டுகள் பணியாற்றியிருந்தாலும், அவர் பதவி உயர்வு பெற விரும்பினால் கண்டிப்பாக TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  

​2. தேர்வு எழுதக் கால அவகாசம் நீட்டிப்பு (Extension of Deadline)

​2 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக உயர்வு: தகுதி பெறாத ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் பணியில் இருந்து நீக்கப்பட்டால், அது மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் மற்றும் ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றம் தனது சிறப்புப் பிரிவு 142 அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த அவகாசத்தை நீட்டித்துள்ளது.  

​புதிய காலக்கெடு: பணியில் இருக்கும் ஆசிரியர்கள் TET தேர்ச்சி பெற, முன்பு வழங்கப்பட்ட ஆகஸ்ட் 31, 2027-க்கு பதிலாக, இப்போது ஆகஸ்ட் 31, 2028 வரை (3 ஆண்டுகள்) கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தேதிக்குள் தேர்ச்சி பெறத் தவறினால், அவர்கள் பணியில் தொடர தகுதியற்றவர்கள் ஆவார்கள்.  

​இறுதி எச்சரிக்கை: இதற்கு மேல் எக்காரணம் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.  

​3. "பழைய ஆசிரியர்களுக்குப் பாதிப்பு" என்ற வாதம் நிராகரிப்பு

​ஏற்கனவே வழங்கப்பட்ட அவகாசம்: இந்தச் சட்டம் தங்களுக்குப் பின்னோக்கிப் பொருந்தாது (Retrospective) என்ற ஆசிரியர்களின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. 2009-ஆம் ஆண்டின் அசல் சட்டமும், 2017-ஆம் ஆண்டின் திருத்தச் சட்டமும் ஏற்கனவே தகுதியை வளர்த்துக் கொள்ளப் பல ஆண்டுகள் அவகாசம் வழங்கியிருந்ததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து ஆசிரியர்களுக்குக் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் போதுமான நேரம் கிடைத்துள்ளது.  

​குழந்தைகளை மையமாகக் கொண்ட சட்டம்: கல்வி உரிமைச் சட்டம் என்பது குழந்தைகளை மையமாகக் கொண்ட ஒரு சட்டம். தகுதியற்ற ஆசிரியர்களின் வேலைப் பாதுகாப்பிற்காகக் குழந்தைகளின் எதிர்காலக் கல்வியைப் பலியிட முடியாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.  

​4. மாநில அரசுகளுக்கான உத்தரவுகள்

​தேர்வுகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும்: ஆசிரியர்கள் தகுதி பெறுவதற்குப் போதிய வாய்ப்புகளை வழங்கும் வகையில், அந்தந்த மாநில அரசுகளும் தகுதிவாய்ந்த அதிகாரிகளும் TET தேர்வை ஆண்டிற்கு இருமுறை (6 மாத இடைவெளியில்) நடத்த முயற்சி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

​இறுதித் தீர்ப்பு

​தேர்வு எழுதுவதற்கான கால அவகாசத்தை 2 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக மாற்றியதைத் தவிர, நீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பில் எந்தத் தவறும் இல்லை எனக் கூறி, தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மறுஆய்வு மனுக்களையும் (Review Petitions) தள்ளுபடி செய்தது.


TET - ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம்


பதவி உயர்வுக்கு டெட் கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுசீராய்வு மனு மீதான தீர்ப்பிலும் உறுதி செய்ததுள்ளது உச்சநீதிமன்றம்...


தேர்ச்சி அவகாசம் நீட்டித்து சீராய்வு மனு மீது உச்ச நீதிமன்றம் உத்தரவு.


ஒரே ஒரு விலக்காக இரண்டு வருடத்திற்குள் தேர்வு பெற வேண்டும் என்பதை மூன்று வருடங்களாக உயர்த்தியுள்ளது...


ஆசிரியர் தகுதித் தேர்வு சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றம் இன்று 


தீர்ப்பு பட்டியல் வழக்குகள்


2 ஆண்டுகளுக்கு பதிலாக 3 ஆண்டுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என தீர்ப்பு


ஆகஸ்ட் 31, 2028க்குள் தேர்ச்சி பெற வேண்டும் என மறு சீராய்வு மனுவில் தீர்ப்பு


Timeline for acquiring TET has been extended from 2 years to 3 years i.e. instead of 31.08.2027 the same has been extended till 31.08.2028. With these modification the Review Petition stands dismissed.




TET தீர்ப்பு - 35வது மறுசீராய்வு மனு தாக்கல்

 

TET தீர்ப்பு - 35வது மறுசீராய்வு மனு தாக்கல்


ஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கான 35வது மறுசீராய்வு மனு கடந்த 15.1.2026 அன்று கர்நாடக மாநில அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.




TET தொடர்பாக கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யும் - அமைச்சர்

 

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் மாநில அரசு நிலைப்பாட்டிற்கு மாறான அம்சங்கள் உள்ளன. அதனால் இந்த விவகாரம் தொடர்பாக கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யும்

- - கேரளா அமைச்சர் வி.சிவன் குட்டி 




The Supreme Court's order on teacher eligibility test has aspects that are contrary to the state government's stand. The Kerala government has filed an appeal against this in the Supreme Court.


- Kerala minister V Sivankutty.



Boat Airdopes 163 in Ear Wireless Earbuds with 40 HRS Battery, Fast Charge, 13mm Drivers, IPX5, Quick Touch Response Control (Active Black)



Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47uAvPb




பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்னும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு - தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுசீராய்வு மனுக்களின் விவரம்

 


பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்னும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு - தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுசீராய்வு மனுக்களின் விவரம்


Details of review petitions filed in Supreme Court verdict makes Teacher Eligibility Test (TET) mandatory for continuation in service and promotion



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Sunfeast Dark Fantasy - Dark Fantasy Choco Fills, 300g




Actual Price: Rs. 150

Offer Price : Rs. 87

Benefit : Rs. 63


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/3Jnm1sm


Way to Buy Option ல் Amazon Fresh தேர்வு செய்து கொள்ளவும் 


விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க, ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் - துரை வைகோ MP

 


இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க, ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் - துரை வைகோ MP


இந்தியாவில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தகுதித் தேர்வு அவசியமா?' என்பது குறித்து மூன்று உயர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுகள் செய்யப்பட்டன.


வழக்கின் விசாரணையில், 'கட்டாய கல்வி உரிமைச் சட்டப் பிரிவு 23, துணைப் பிரிவு 1ன்கீழ் 2011, ஜூலை 29 அன்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பாக புதிதாக சேர்க்கப்பட்ட விதிமுறையின்படி ஆசிரியர் பதவி உயர்வுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா?' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.


இந்த வழக்கில்  செப்டம்பர் 1 ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபான்கர் தத்தா மற்றும் மன்மோகன் அமர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) நடத்துவதற்கான காரணம் குறித்து தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) 2011, பிப்ரவரி 11 அன்று வெளியிட்ட அறிவிப்பை மேற்கோள் காட்டியுள்ளது.


கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களை நியமிப்பதற்கு டெட் தேர்ச்சி பெறுவது கட்டாய நிபந்தனை எனக் கூறப்பட்டுள்ளது.


டெட் தேர்வு குறைந்தபட்ச தகுதி அளவுகோல்களின் முக்கிய பகுதியாக உள்ளது.


டெட் தேர்வின் மூலம் தேசிய தரநிலைகள் மற்றும் ஆசிரியர் தரத்துக்கான அளவுகோல் கொண்டு வரப்படுகிறது.


மாணவர்களின் செயல் திறனின் தரத்தை மேலும் மேம்படுத்துவதை ஊக்குவிக்கும். ஆசிரியருக்கான தரத்தில் அரசு சிறப்பு கவனம் செலுத்தும்போது அது அனைத்து தரப்பிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.


இதனைக் குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், 'தொடக்கக் கல்வியை வழங்கும் நிறுவனங்களுக்கு, சீரான கற்பித்தல் தரத்தை உறுதி செய்வது நோக்கமாக உள்ளது. தகுதித் தேர்வு என்பது கட்டாய கல்வித் தகுதி மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21ஏ படி தரமான கல்வி உரிமைக்கான தேவையும் ஆகும்' எனத் தெரிவித்துள்ளது.


'ஆசிரியர்களின் சூழலைக் கருத்தில் கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 142ன்கீழ் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவான பணிக்காலம் உள்ள ஆசிரியர்கள் டெட் தகுதி பெறாமல் ஓய்வு பெறும் வயதை அடையும் வரை பணியில் தொடரலாம்' எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


ஆனால், அவர்கள் பதவி உயர்வுக்கு விரும்பினால் டெட் தேர்ச்சி பெறாமல் தகுதி உடையவராக கருதப்பட மாட்டார் எனத் தெளிவுபடுத்துவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


அந்தவகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்த தீர்ப்பின்படி,

1 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நடைமுறையில் உள்ளதால் தொடக்கப்பள்ளிகள் மற்றும் உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், பணியில் தொடர்வதற்கு டெட் தேர்வு கட்டாயம்.


டெட் தேர்வு எழுத விருப்பம் இல்லாத ஆசிரியர்கள், பணியில் இருந்து விலகிக் கொள்ளலாம் அல்லது ஓய்வுகால சலுகைகளைப் பெற்றுக்கொண்டு கட்டாய ஓய்வு வழங்கலாம் .


தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளிகளில் அரசின் கணக்குப்படி 62,979 ஆசிரியர்களும் நடுநிலைப்பள்ளிகளில் 49,547 ஆசிரியர்களும் உயர்நிலைப் பள்ளிகளில் 31,531 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். மேல்நிலைப்பள்ளிகளில் சுமார் 82 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.


இவர்களில் ஐந்தாண்டுகளில் ஓய்வு பெறும் ஆசிரியர்களைத் தவிர்த்துப் பார்த்தால் சுமார் 1 லட்சம் ஆசிரியர்களுக்கு மேல் டெட் தேர்வு எழுத வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.


இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 'ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரத்தை பொறுத்தவரை அது மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு உட்பட்டது.'அதுமட்டுமில்லாமல் பல ஆண்டுகளாக ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் இந்தியா முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிப்படைவதால் ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் இந்த உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.


இந்தியாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி 8-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்க ஒன்றிய அரசு நிதியுதவி வழங்குவதால், எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கக் கூடிய இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றிய ,மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவது கட்டாயம் ஆகும். தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் 2011-12ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, 2012-ம் ஆண்டு முதல் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.


தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் போனால், அரசு பள்ளி ஆசிரியர்கள் 1,38,000 பேரும், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் 38 ஆயிரம் பேரும் என மொத்தம் 1,76,000 ஆசிரியர்கள் பாதிப்படைவார்கள்.


தேசிய கல்வி ஆசிரியர் கவுன்சிலின் (NCTE) 2011 அறிவிப்பு, கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமைச் சட்டம் (RTE Act, 2009) பிரிவு 23-ஐ அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச தகுதிகளை நிர்ணயித்தது தவறில்லை. ஆனால், அதை முன் தேதியிட்டு அமல்படுத்துவதும், தொடர்ந்து தகுதியை நிரூபிக்க தேர்வு கட்டாயமாக்கபடுவதும் ஏற்புடையதல்ல.


உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு இலவச கல்வி உரிமைச் சட்டம் -2009, பிரிவு 23 இல் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.


எதிர்காலம் பற்றிய கவலை சூழ்ந்த நிலையில்  கற்பித்தல் பணியை மேற்கொள்ளும் இலட்சக்கணக்கான ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க ஒன்றிய அரசு உடனடியாக தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.


துரை வைகோ MP

முதன்மைச் செயலாளர் 

மறுமலர்ச்சி திமுக 

18.10.2025


 #MDMK #Vaiko #trichymp #DuraiVaiko


TET தமிழ்நாடு அரசு சீராய்வு மனு Diary No 56647/2025


TET தமிழ்நாடு அரசு சீராய்வு மனு Review Petition Diary No 56647/2025


ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதற்கு Diary No 56647/2025 கொடுக்கப்பட்டுள்ளது




TET தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பு : சீராய்வு மனு தாக்கல் செய்ய உத்தர பிரதேச அரசு முடிவு



TET தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய உத்தர பிரதேச அரசு முடிவு


* டெட் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாட்டை தொடர்ந்து உத்தர பிரதேச அரசும் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிப்பு


* ஆசிரியர்கள் பணியில் தொடர டெட் தேர்வு கட்டாயம் என செப். 1ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது


ஆசிரியர் தகுதித் தேர்வு சீராய்வு review உச்ச நீதிமன்ற வழக்கு

 
UP மாநில அரசு Diary No 53434/2025 மூன்று IA File செய்துள்ளது .


சீராய்வு மனுவை அனுமதிக்கவும், விசாரணைக்கு எடுத்து கொள்வதற்க்கும் , நீதிமன்ற சான்று பெற்ற 1.9.2025 நீதிமன்ற ஆணை சமர்பிக்க விலக்கு கோரியும் மனு செய்துள்ளது.


* புதிதாக ஒரு வழக்கு File செய்யப்பட்டுள்ளது . IA 247739/2025 இன்று File செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு வரும் போது கூடுதல் தகவல் தெரிய கூடும் .


* ஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்து உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசின் சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் . வழக்கு எண் வழங்கப்பட்டால் கூடுதல் தகவல் தெரிய கூடும்.



TET தேர்வு மறுசீராய்வு மனு : பிற மாநிலங்களை ஒருங்கிணைக்க பள்ளிக் கல்வித் துறை திட்டம்



 TET தேர்வு மறுசீராய்வு மனு விவகாரம் : பிற மாநிலங்களை ஒருங்கிணைக்க பள்ளிக் கல்வித் துறை திட்டம் - நாளிதழ் செய்தி



TET தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு (Review Petition) தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு


 

TET தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு


பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான 'டெட்' தேர்ச்சி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.


இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து விதமான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் (டெட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நடைமுறை தமிழகத்தில் 2011-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. அதன் பின்னர் தமிழகத்தில் டெட் தேர்ச்சி அடிப்படையிலேயே ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்நிலையில், பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் சுமார் 1.5 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.


இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் பள்ளிக் கல்வித் துறை தீவிர ஆலோசனை மேற்கொண்டது. தொடர்ந்து ஆசிரியர் சங்கங்களின் கருத்துகளும் கேட்டுப்பெறப்பட்டன. அதன்படி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'டெட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். ஆசிரியர் தரம் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும். எதிர்கால நியமனங்களுக்கு 'டெட்' ஒரு கட்டாயத் தேவையாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை தமிழக அரசு ஆதரிக்கிறது


அதேநேரம் ஏற்கெனவே பணியில் இருந்த ஆசிரியர்களுக்கு இந்த தேவையை பின்னோக்கிப் பயன்படுத்துவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நடைமுறையில் இருந்த சட்டங்கள், விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். பல ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் மீது புதிய தகுதியை விதித்து, அவர்கள் தகுதிபெறவில்லை எனில் கட்டாய ஓய்வு அளிப்பது நியாயமானது அல்ல.


இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டால், பெருமளவிலான ஆசிரியர்கள் கட்டாய ஓய்வு பெற வழிவகுக்கும், இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும். வழங்கப்பட்ட குறுகிய காலத்தில் 'டெட்' தகுதி பெற்ற ஆசிரியர்களை சமமான எண்ணிக்கையில் பணியமர்த்தி பயிற்சி அளிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. இத்தகைய சூழலை தவிர்க்காவிட்டால் அது லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும்.


குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 புதிய நியமனங்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச தகுதிகளை ஒழுங்குபடுத்துகிறது. இது ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களின் கட்டாய ஓய்வுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை. மேலும், 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய ஆசிரியர் கல்வி குழமம் டெட் தேர்வை அறிமுகப்படுத்திய போது, அந்த தேதிக்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அதன் விதிகள் பொருந்தாது என்று தெளிவாகக் கூறியது. டெட் தேர்வை பின்னோக்கிப் பயன்படுத்துவது சட்டப்பூர்வமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. இந்த காரணங்களுக்காக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது.


பணியில் உள்ள ஆசிரியர்களின் உரிமைகளை பாதுகாப்பதுடன், எதிர்கால நியமனங்களுக்கு டெட் தேர்வை கண்டிப்பாக பின்பற்றுவதன் மூலம் கல்வியின் தரம் மற்றும் ஆசிரியர்களுக்கான நீதி இரண்டையும் உறுதிசெய்வதில் தமிழகம் உறுதியாக உள்ளது. சீராய்வு மனு இந்த சமநிலையை அடைய முயல்கிறது.


உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய இப்போது அணுகுவோம். இந்த பிரச்சினை சட்டம் மற்றும் அரசியலமைப்பு கொள்கைகளை மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தையும் உள்ளடக்கியது என்பதை அரசு வலுவாக முன்வைக்கும். ஆசிரியர்களி ன் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கும், ஒவ்வொரு குழந்தையின் தரமான கல்வியைப் பெறுவதற்கான உரிமையும் பாதுகாப்பதற்கும் இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி, நியாயமான முடிவுக்கும் கொண்டு செல்வோம்' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.



🍁 TET உச்சநீதிமன்றத் தீர்ப்பு : தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு & Press Release...


TET உச்சநீதிமன்றத் தீர்ப்பு : தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு & Press Release

 

TET Judgement: TN Govt has Decided to file Review Petition in Supreme Court 


TET உச்சநீதிமன்றத் தீர்ப்பு : தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு & Press Release


ஆசிரியர் தகுதித் தேர்வு - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - சீராய்வு மனு தாக்கல் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு - Google Translate தமிழாக்கம்


TET தேர்வு


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin  அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.



>>> செய்தி வெளியீடு (ஆங்கிலத்தில்) - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> TET தேர்வு சீராய்வு மனு தாக்கல் செய்தி வெளியீடு தமிழாக்கம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Press Release

Government of Tamil Nadu - School Education Department

Chennai, [11/09/2025]

The Government of Tamil Nadu has decided to file a Review Petition before the Hon'ble Supreme Court of India against the judgment delivered on 01 September 2025 in Anjuman Ishaat-e-Talim Trust vs State of Maharashtra &Others.

In this judgment, the Hon'ble Court directed that all in-service teachers who do not possess the Teacher Eligibility Test (TET) qualification must acquire it within two years. If they fail to do so, they would face compulsory retirement with terminal benefits. Teachers with less than five years of service remaining have been allowed to continue till retirement, but without eligibility for promotion.

While the Government of Tamil Nadu fully supports the principle that teacher quality must be continuously improved and that TET should remain a compulsory requirement for future appointments, the retrospective application of this requirement to teachers who were already in service has created grave concern. Thousands of teachers were recruited in full compliance with the laws,rules, and procedures in force at the time of their appointment. To now impose a new qualification on them decades later, and compulsorily retire them, if they do not qualify is neither fair nor sustainable.

If implemented in its present form, the ruling will cause mass compulsory retirements, leaving schools across Tamil Nadu with crippling teacher shortages. It will be practically impossible to recruit or train an equivalent number of TET-qualified teachers in the short timeframe provided. Such a situation will inevitably affect the education of lakhs of students, disrupt classroom teaching, and create instability in the school system.

The Review Petition is being filed on the following key grounds:

. The Right of Children to Free and Compulsory Education Act, 2009(RTE Act) under Section 23 regulates minimum qualifications only for new appointments. It does not authorise compulsory retirement of teachers already in service.

The NCTE Notification dated 23 August 2010 - which first introduced TET - clearly stated that its provisions would not apply to teachers already appointed prior to that date.

Retrospective application of TET unsettles vested rights of lawfully appointed teachers, causes disproportionate hardship, and threatens the stability of the education system.

The Government of Tamil Nadu is committed to ensuring both quality in education and justice for teachers. The Review Petition seeks to strike this balance - by protecting the livelihoods and service rights of in-service teachers, while maintaining strict compliance with TET for all future appointments.

The Hon'ble Supreme Court will now be approached to reconsider its judgment, and the Government will strongly present the case that this issue involves not only legal and constitutional principles but also the future of students across the State.

The Government of Tamil Nadu reassures the teaching community that it stands firmly with them. The State will pursue this matter vigorously and take it forward to its logical and fair conclusion, so that the interests of teachers are protected, and the right of every child to receive quality education remains secure.


செய்திக் குறிப்பின் சுருக்கம் – 


தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித் துறை (11/09/2025)


தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் மறுபரிசீலனை மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. (01.09.2025 அன்று Anjuman Ishaat-e-Talim Trust vs State of Maharashtra & Others வழக்கில் வந்த தீர்ப்புக்கு எதிராக).


TET தகுதி இல்லாத பணியில் உள்ள ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுக்குள் அதை பெற வேண்டும்; பெறவில்லை என்றால் கட்டாய ஓய்வு மற்றும் ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


5 ஆண்டுகளுக்கு குறைவான சேவைக்காலம் உள்ள ஆசிரியர்கள் ஓய்வு வரை தொடரலாம், ஆனால் பதவி உயர்வு கிடையாது.


தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு:


எதிர்கால புதிய நியமனங்களுக்கு TET அவசியம் என்பதில் முழு ஒப்புதல்.


ஆனால், ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை; இது நீதியற்றது, நடைமுறையிலும் சாத்தியமில்லை.


இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தால், ஆசிரியர்கள் கட்டாய ஓய்வு, ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்களின் கல்வி பாதிப்பு போன்ற கடுமையான விளைவுகள் ஏற்படும்.


மறுபரிசீலனை மனுவின் காரணங்கள்:


1. இலவச & கட்டாயக் கல்வி சட்டம், 2009 (RTE Act) – புதிய நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும்; பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு விதிக்க இயலாது.


2. NCTE அறிவிப்பு (23.08.2010) – அதற்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET விதி பொருந்தாது.


3. பின்பற்றும் விதி (retrospective) ஆசிரியர்களின் உரிமைகளை பாதிக்கிறது; கல்வித் துறையில் ஆபத்தை உண்டாக்குகிறது.


அரசின் உறுதி:


கல்வித் தரமும், ஆசிரியர் நலனும் பாதுகாக்கப்படும்.


தற்போதைய ஆசிரியர்களின் உரிமைகள் காக்கப்படும், புதிய நியமனங்களுக்கு மட்டும் TET கடைபிடிக்கப்படும்.


ஆசிரியர்களுடன் மாநில அரசு உறுதியாக நிற்கிறது, நியாயமான தீர்வு கிடைக்கும் வரை சட்டப்போராட்டம் தொடரப்படும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்