கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"அரசு அலுவலர்களின் பணித்திறன் உயர்த்தும் வகையில் பயிற்சிகள்; மக்கள் பயன்பெறும் வண்ணம் அரசு சேவைகள் அமைய வேண்டும்” - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு க.ஸ்டாலின் அவர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தல் - செய்தி வெளியீடு எண்‌:540, நாள்‌:31.07.2021 ...

 செய்தி வெளியீடு எண்‌:540, நாள்‌:31.07.2021


செய்தி வெளியீடு


“அரசு அலுவலர்களின்‌ பணித்திறன்‌ உயர்த்தும்‌ வகையில்‌ பயிற்சிகள்‌; மக்கள்‌ பயன்பெறும்‌ வண்ணம்‌ அரசு சேவைகள்‌ அமைய வேண்டும்‌” - மனிதவள மேலாண்மைத்‌ துறையின்‌ செயல்பாடுகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ அறிவுறுத்தல்‌.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ தலைமையில்‌ இன்று (31.07.2021 தலைமைச்‌ செயலகத்தில்‌, மனிதவள மேலாண்மைத்துறையின்‌ செயல்பாடுகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.


இக்கூட்டத்தில்‌,  அரசு அலுவலர்களுக்குச்‌ சிறப்பான பயிற்சிகளை அளிப்பதன்‌ மூலம்‌, அவர்களது பணித்திறனை மேம்படுத்தி, அதன்மூலம்‌ மக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ சேவைகளின்‌ தரத்தை உயர்த்த வேண்டும்‌ என்று மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌. மேலும்‌, போட்டித்‌ தேர்வுகளில்‌ நமது மாநில மாணவர்கள்‌ அதிக அளவில்‌ தேர்ச்சி பெறும்‌ வண்ணம்‌ பல்வேறு வகைப்பட்ட சிறப்புப்‌ பயிற்சிகளை வடிவமைத்து, அரசு பயிற்சி நிலையங்கள்‌ மூலம்‌ வழங்க வேண்டும்‌ எனவும்‌ வலியுறுத்தினார்‌. தமிழ்நாட்டு, மாணவர்களிடையே   மாநில மற்றும்‌ ஒன்றிய அரசுப்பணிகள்‌ தொடர்பான போட்டித்‌ தேர்வுகள்‌ / தகுதிகள்‌ / தேவையான பயிற்சிகள்‌ குறித்த விழிப்புணர்வை முதலில்‌ ஏற்படுத்தவும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌.


மேலும்‌, குடும்பத்தில்‌ முதல்‌ தலைமுறைப்‌ பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பகங்கள்‌ மூலம்‌ அரசுப்‌ பணியிடங்களில்‌ முன்னுரிமை வழங்கவும்‌, தகவல்‌ பெறும்‌ உரிமைச்‌ சட்டத்தின்கீழ்‌ அனைத்துத்‌ துறைகளிடமும்‌ இணையதளம்‌ மூலம்‌ தகவல்‌ பெறும்‌ வசதிகளை மேம்படுத்தவும்‌ அறிவுறுத்தினார்‌.


அரசு  அலுவலர்களின்‌ மனிதவள ஆற்றலினை மேம்படுத்தவும்‌, தமிழக இளைஞர்களின்‌ அரசு வேலைவாய்ப்பினைப்‌ பெருக்குவதற்கும்‌, அண்ணா மேலாண்மைப்‌ பயிற்சி மையம்‌ மற்றும்‌ போட்டித்‌ தேர்வுப்‌ பயிற்சி மையங்களின்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ கட்டமைப்புகளை உயர்த்திடவும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌.


பவானிசாகரில்‌  உள்ள அடிப்படைப்‌ பயிற்சி மையத்தால்‌ அரசுப்‌ பணியாளர்களுக்கான பயிற்சியினைக்‌ காணொலிக்‌ காட்சி வாயிலாக இணைய வழி பயிற்சியாக அறிமுகப்படுத்தலாம்‌ என்றும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌.


இந்த  ஆய்வுக்‌ கூட்டத்தில்‌, மாண்புமிகு நிதி மற்றும்‌ மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்‌ திரு.பழனிவேல்‌ தியாகராஜன்‌, தலைமைச் ‌செயலாளர்‌ முனைவர்‌ வெ.இறையன்பு, இ.ஆ.ப., நிதித்துறைக்‌ கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ திரு.ச.கிருஷ்ணன்‌, இ,ஆ.ப., மனிதவள மேலாண்மைத்‌ துறைச்‌ செயலாளர்‌ திருமதி.மைதிலி கே.ராஜேந்திரன்‌, இ,ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்துகொண்டனர்‌.


வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9





2020-2021ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என அச்சிட்டு வழங்கப்படும் என்று அரசாணை (2டி) எண்: 15, நாள்: 26-07-2021 வெளியீடு...



 2020-2021ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என அச்சிட்டு வழங்கப்படும் என்று அரசாணை (2டி) எண்: 15, நாள்: 26-07-2021 வெளியீடு...


>>> அரசாணை (2டி) எண்: 15, நாள்: 26-07-2021...


மின்வாரியம் தொடர்பான கருத்துக்கள் & புகார்களை 94987-94987 எண் மூலம்‌ மின்னகம் - மின் நுகர்வோர் சேவை மையத்திற்கு தெரிவிக்கலாம் - அமைச்சர் செந்தில்பாலாஜி...

 


மின் கட்டணம் தொடர்பாக ஜூனியர் விகடன் இதழ் ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. கட்டணம் செலுத்துவதில் மூன்று வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கு மின்வாரியம் வழங்கியிருக்கிறது. 


1) 2019ம் ஆண்டு மே மாதக் கட்டணம் (அல்லது) 

2) முந்தைய மாதக் கட்டணம் (அல்லது)

3) மின் அளவீட்டை அலைபேசியில் படம் எடுத்து அனுப்பி - அதற்குரிய கட்டணம். 


இதனடிப்படையில் இதுவரையில் 14 லட்சத்து 62 ஆயிரம் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தி இருக்கிறார்கள். ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் நண்பர்கள் விமர்சனங்களை அல்லது குறைகளை முன்வைக்கும் போது மின் இணைப்பு எண்ணுடன் குறிப்பிட்டால் மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். சமூக ஊடகங்களில் சொல்லப்படும் இத்தகைய ஆதாரமற்ற பல குற்றச்சாட்டுகளைத் தேடி அதிகாரிகள் செல்லும்போது எந்தக் குறையும் அங்கு இருப்பதில்லை. மக்களுக்காக அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களும் பிறகு எதுவும் எழுப்புவதில்லை. அமைதியாகி விடுகிறார்கள். அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நபர்களின் விவரங்களையும் சேகரித்து, குறைகள் மீது மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும் அல்லது விளக்கம் கொடுக்கும். மின்வாரியம் எடுக்கும் நடவடிக்கைகளையும், தரும் விளக்கங்களையும், ஜூனியர் விகடன், Follow-up கட்டுரையாக வெளியிடவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும் உங்கள் கருத்துக்கள் & புகார்களை 94987-94987 எண் மூலம்‌ #மின்னகம் - மின் நுகர்வோர் சேவை மையத்திற்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. 

இவ்வாறு அமைச்சர் அவரது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


மாதாந்திர மின் கட்டண கணக்கீடு முறை (Monthly Electricity Bill Calculation Method) வாக்குறுதி - முதல்வர் விரைவில் நிறைவேற்றுவார் - அமைச்சர் தகவல்...

 மாதாந்திர மின் கட்டண கணக்கீடு முறை வாக்குறுதி - முதல்வர் விரைவில் நிறைவேற்றுவார் - அமைச்சர் தகவல்...


மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தேர்தலுக்கு முன் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக மாதாந்திர மின் கட்டண கணக்கீடு முறையையும் நிச்சயம் நிறைவேற்றுவார்கள்.








மீண்டும் உயரும் தொற்று – சென்னையில் 9 இடங்களில் மக்கள் செல்ல தடை...

 பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்கெட் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள 9 இடங்களில் அங்காடிகள் செயல்பட  அனுமதி இல்லை. 


கோவிட் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 09.08.2021 வரை கூடுதலாக எவ்வித தளர்வுகளும் இன்றி நீடிக்கப்படுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார் . தற்பொழுது அண்டை மாநிலங்களிலும் , மாநிலத்தின் சில பகுதிகளிலும் , நோய் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைபடுத்த மாநகராட்சி ஆணையாளர் மற்றும் காவல் துறை ஆணையாளர் ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.


 அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கோவிட் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி , இஆப , அவர்கள் பெருநகர சென்னை காவல் துறை ஆணையாளர் திரு சங்கர் ஜிவால் இகாப , ஆகியோர் தலைமையில் ரிப்பன் கட்டட கூட்டரங்கில் இன்று ( 30.07-2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் இரயில் நிலையம் வரை , புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை , ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை , ஃபக்கி சாஹிப் தெரு , அபிபுல்லா தெரு . புலிபோன் பஜார் , என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை , இராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை , வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை , அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க. நகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள வணிகவளாகங்கள் மற்றும் அங்காடிகள்  31.07.2021 ( சனிக் கிழமை ) முதல் 09.08.2021 ( திங்கட்கிழமை ) காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை , மேலும் , கொத்தவால் சாவடி மார்கெட் 01.08.2021 ( ஞாயிற்று கிழமை ) முதல் 09.08.2021 ( திங்கட்கிழமை ) காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை என வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.





நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85% கட்டணம் வசூலிக்கலாம் – உயர்நீதிமன்றம்...

 


* பள்ளி கட்டணம் - கொரோனாவால் வருவாய் இழந்தவர்களிடம் 75%


* 6 தவணைகளில் செலுத்தலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


 நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் கொரோனா ஊரடங்கால் வருமானம் பாதிப்பு இல்லாத அரசு ஊழியர்களிடம் 85 சதவீத கட்டணமும், வருவாய் இழந்து தவித்த பெற்றோர்களிடம் 75 சதவீத கட்டணத்தையும் 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா  தொற்றால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. தமிழகத்தில் அரசு எடுத்த  நடவடிக்கையால் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்றால்  பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.


 இந்நிலையில், ஊரடங்கு காரணமாக  மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து  கடந்தாண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட  வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 75 சதவீத கட்டணத்தை முறையே 40, 35 சதவீதம்  என்று இரு தவணைகளாக வசூலித்துக்கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டது.  இந்த  வழக்குகள், நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு  வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் சேவியர் அருள்ராஜ், சிலம்பண்ணன், இ.விஜய் ஆனந்த், எம்.புருஷோத்தமன் உள்ளிட்டோர் ஆஜராகினர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், அரசு வக்கீல் ஆ.செல்வேந்திரன், சிபிஎஸ்இ தரப்பில் நாகராஜன் ஆஜராகினர்.


அப்போது, தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான வக்கீல், ‘பள்ளிகள் 85 சதவீத  கட்டணத்தை வசூலித்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டணம்  செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள். கட்டண  சலுகை கோரும் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்’ என்றார்.  தமிழக  அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், ‘ஐகோர்ட்  பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடப்பு (2021-22) கல்வியாண்டிலும்  2019-20ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் 75 சதவீத கட்டணத்தை வசூலிக்க  அனுமதியளித்து ஜூலை 5ம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழகத்துக்கு பொருந்தாது. தமிழகத்தை பொறுத்தவரை  கட்டண நிர்ணய குழு அளித்த பரிந்துரைகளையே அரசு பரிசீலிக்கும். கட்டண நிர்ணய  குழுவில் உள்ள காலியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்’ என்று  உறுதியளித்தார். அப்போது, மாணவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாநில அரசு  நிர்ணயிக்கும் கட்டணமே பொருந்தும் என்று வாதிட்டார். 


அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: கொரோனா ஊரடங்கால் வருமானம் பாதிப்பு அடையாத ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், வணிகம் செய்பவர்களிடம் கடந்த 2019-20ம் கல்வி ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் 85 சதவீதத்தை தனியார் சுயநிதி பள்ளிகள் 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும்.


கடைசி தவணையை பெற்றோர்கள் 2022 பிப்ரவரி 1ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஊரடங்கால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர்களிடம் 2019-20ம் கல்வி ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தில் 75 சதவீதத்தை 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும். இந்த தவணையின் கடைசி தவணை 2022 பிப்ரவரி 1ம் தேதிக்கு முன்பு செலுத்தப்பட வேண்டும். வேலை இழப்பு போன்ற காரணங்களால் கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் கட்டண சலுகை குறித்து கோரிக்கை வைக்கலாம். 2020-21ம் ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்தாத பெற்றோர்களிடம் அந்த தொகையை தவணை அடிப்படையில் பள்ளிகள் வசூலித்துக்கொள்ளலாம்.


ஒட்டுமொத்த கட்டணத்தையும் ஏற்கனவே செலுத்தியவர்கள் அந்த கட்டணத்தை திரும்ப கோர முடியாது. கட்டணத்தை கட்டாத மாணவர்களை நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் வகுப்புகளில் பங்கேற்பதை பள்ளி நிர்வாகங்கள் தடுக்க கூடாது. கட்டணத்தை காரணம் காட்டி அந்த மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்றோ, தேர்வு முடிவுகளை அறிவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர் என்றோ தெரியவந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கல்வித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர் பள்ளிகள் மாணவர்களுக்கு கூடுதல் கட்டண சலுகை வழங்குவதற்காக எந்த முறையையும் கையாளலாம்.


பெற்றோர்களுக்கும் பள்ளி நிர்வாகங்களுக்கும் கல்வி கட்டணம் தொடர்பாக ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் பெற்றோர்கள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் மனு கொடுக்கலாம். மாணவர்களை எந்த சூழ்நிலையிலும் 2021-22ம் கல்வி ஆண்டில் பள்ளிகளில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது. இதை சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கு அதே பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் அந்த மாணவர்களுக்கு அரசு பள்ளியிலோ, மாநகராட்சி பள்ளியிலோ, ஊராட்சி பள்ளியிலோ இடம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இலவசம் மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் 25 சதவீத மாணவர்களுக்கான கட்டணத்தை மாநில அரசு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.


சிபிஎஸ்இ பள்ளிகள் 2021-22ம் கல்வி ஆண்டுக்கான கட்டணம் வசூல் குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட இணைய தளத்தில் 4 வாரங்களுக்குள் வெளியிட வேண்டும். கட்டண நிர்ணயத்தில் ஏதாவது பிரச்னை இருந்தால் பள்ளி நிர்வாகங்கள் கட்டண நிர்ணய குழுவை அணுகி தீர்வு பெறலாம்.  பள்ளியிலிருந்து விலக விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த மாணவர்கள் புதிதாக சேரவுள்ள பள்ளிகள் மாணவர்களிடம் மாற்று சான்றிதழ் கட்டாயம் என்று கூறாமல் சேர்க்கை வழங்க வேண்டும். பள்ளிகளுக்கான கல்வி கட்டண நிர்ணய குழுவில் காலியாக உள்ள பணியாளர் இடங்களை நிரப்பி குழு முழு அளவில் செயல்பட மாநில அரசு 8 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த உத்தரவுகள் குறித்து பள்ளிகளுக்கு தெரியப்படுத்துவதற்கான புதிய சுற்றறிக்கையை தமிழக அரசு 2 வாரங்களுக்குள் வெளியிட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை

கட்டணத்தை கட்டாத மாணவர்களை நேரடியாகவோ,  ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் வகுப்புகளில் பங்கேற்பதையோ பள்ளி நிர்வாகங்கள்  தடுக்க கூடாது. கட்டணத்தை காரணம் காட்டி அந்த மாணவர்களை தேர்வு எழுத  அனுமதிக்கவில்லை என்றோ, தேர்வு முடிவுகளை அறிவிக்காமல் நிறுத்தி  வைத்துள்ளனர் என்றோ தெரியவந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கல்வித்துறை  அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.


ஆடித் திங்கள் 18ஆம் நாளான 03-08-2021 அன்று (தீரன் சின்னமலை நினைவு நாள்) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு...

 ஆடித் திங்கள் 18ஆம் நாளான 03-08-2021 அன்று (தீரன் சின்னமலை நினைவு நாள்) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு...


ஆணை : 

ஈரோடு மாவட்டம் , சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் ஆடித்திங்கள் 18 – ம் நாளான 03.08.2021 செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்படுவதால் , அரசாணையின்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து ஆணையிடப்படுகிறது. 


உள்ளூர் விடுமுறை நாளான 03.08.2021 செவ்வாய்க்கிழமை அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட வேண்டியது எனவும் ஆணையிடப்படுகிறது.


இந்த விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881 ( under Negotiable Instruments Act 1881 ) -ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் , வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.


இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு , ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 14.08.2021 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...