கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கிளெய்ம் மறுப்பு - புதிய உடல்நலக் காப்பீடு நிறுவன இயக்குநருக்கு பிடிவாரண்ட் - நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு (Rejection of Claims - Warrant against Director of New Health Insurance Scheme Company - Consumer Court orders)...

 


கிளெய்ம் மறுப்பு - புதிய உடல்நலக் காப்பீடு நிறுவன இயக்குநருக்கு பிடிவாரண்ட் - நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு (Rejection of Claims - Warrant against Director of New Health Insurance Scheme Company - Consumer Court orders)...


அரசுப் பள்ளி ஆசிரியை தான் எடுத்திருந்த புதிய உடல்நலக் காப்பீட்டில் தன்னுடைய கணவரின் சிகிச்சைக்குக் கிளெய்ம் தரப்படாததால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குநருக்கு பிடிவாரண்ட் வழங்கி உத்தரவிட்டுள்ளது.


ஜெயங்கொண்டம் அரசு பள்ளியில் பாரதி என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் யுனைட்டட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். இந்நிலையில் பாரதியின் கணவர் சுவாமிநாதனுக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கான செலவை தன்னுடைய ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் கிளெய்ம் செய்துள்ளார் பாரதி.


ஆனால் இவருடைய புதிய உடல்நலக் காப்பீடு (ஹெல்த் இன்ஷூரன்ஸ்) பாலிசிக்கு டிபிஏ-வாக இருந்த எம்டி இந்தியா ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளைத் தர மறுத்துள்ளது. இதனால் கடந்த 2020ல் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்தனர்.


அதன்படி பாரதிக்கு மருத்துவ சிகிச்சைக்காக ஏற்பட்ட செலவில் அளிக்க வேண்டிய தொகை ரூ.1,98,308 மற்றும் நிறுவனத்தின் சேவை குறைபாட்டால் பாரதிக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரமும் காப்பீட்டு திட்டத்தை நிர்வகிக்கும் தனியார் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.


ஆனால் உத்தரவின்படி எம்டி இந்தியா ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பாரதிக்கு தரவேண்டிய தொகையைத் தராததால் மீண்டும் நுகர்வோர் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்தார்.


இந்த மனுவை ஏற்றுக்கொண்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் நிறுவனத்தின் சார்பில் யாரும் ஆஜராகததால் அந்நிறுவனத்தின் இயக்குநருக்கு நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மக்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை நுகர்வோர் நீதிமன்றம் மூலம் பெற முடியும் என்பதை பாரதி நிரூபித்திருக்கிறார்.


நன்றி : விகடன்



2022-2023ஆம் நிதியாண்டில் பொது வருங்கால வைப்பு நிதி சந்தா தொகை உச்ச வரம்பான ரூ.5இலட்சத்தை தாண்டினால் அதன்பின் மாத சந்தா தொகை பிடித்தம் செய்யக்கூடாது - அரசாணை (G.O.Ms.No.15, Dated: 18-01-2023) வெளியீடு (If the amount of General Provident Fund subscription exceeds the maximum threshold limit of Rs.5 lakh, then the monthly subscription amount should not be deducted, In the financial year 2022-2023)...


>>> 2022-2023ஆம் நிதியாண்டில் பொது வருங்கால வைப்பு நிதி சந்தா தொகை உச்ச வரம்பான ரூ.5இலட்சத்தை தாண்டினால் அதன்பின் மாத சந்தா தொகை பிடித்தம் செய்யக்கூடாது - அரசாணை (G.O.Ms.No.15, Dated: 18-01-2023) வெளியீடு (If the amount of General Provident Fund subscription exceeds the maximum threshold limit of Rs.5 lakh, then the monthly subscription amount should not be deducted, In the financial year 2022-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



2022-2023ஆம் கல்வியாண்டு - 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை (Academic Year 2022-2023 - SSLC, +1, +2 Public Examination Time Table)...


>>> 2022-2023ஆம் கல்வியாண்டு - பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை (Academic Year 2022-2023 - SSLC, +1, +2 Public Examination Time Table)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



TNSED Attendance App - Version 6.0 பயன்படுத்துவது எப்படி? -State EMIS Team - User Manual - Exclusive App For Attendance - Tamil Nadu School Education Department - App Version 6.0 - Manual Version 3.0...

 


>>> TNSED Attendance App - User Manual - Exclusive App For Attendance -  Tamil Nadu School Education Department -  App Version 6.0 - Manual Version 3.0...




பழைய ஓய்வூதியத் திட்டம் மாநிலங்களின் நிதி நிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் - ரிசர்வ் வங்கி எச்சரிக்கை (Old Pension Scheme will cause major strain on states' finances - RBI warns)...


 பழைய ஓய்வூதியத் திட்டம் மாநிலங்களின் நிதி நிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் - ரிசர்வ் வங்கி எச்சரிக்கை (Old Pension Scheme will cause major strain on states' finances - RBI warns)...


பழைய ஓய்வூதிய திட்டம் மாநிலங்களின் நிதிநிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்: ஆா்பிஐ எச்சரிக்கை


ரிசா்வ் வங்கி வெளியிட்ட மாநிலங்களின் 2022-23 நிதிநிலை குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


சில மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும்போது, அவற்றின் நிதிநிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம், இயற்கை பேரிடா் உள்ளிட்டவற்றுக்கு மாநிலங்கள் ஒதுக்கீடு செய்யும் நிதியானது குறைந்துள்ளது.


கடன்களுக்கான வட்டி, நிா்வாக பணிகள் மற்றும் ஓய்வூதியங்களுக்காக பட்ஜெட்டின்போது நிதி ஒதுக்கீடு செய்வது ‘மாநிலங்களின் 2021-22 நிதிநிலை குறித்த அறிக்கை’யுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது.


தற்போதைய செலவுகளை எதிா்காலத்துக்குத் தள்ளிப்போடுவது, வரும் காலங்களில் மாநிலங்களின் வருவாய் இல்லாத ஓய்வூதிய செலவின பொறுப்புகளை அதிகரிக்கச் செய்யும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



புதிய மனை பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களில் பட்டா மாற்றம் - புதிய மென்பொருள் - செய்தி வெளியீடு எண்: 112, நாள்: 18-01-2023 (Change of Patta within minutes of new plot registration - New Software - News Release No: 112, Dated: 18-01-2023)...


>>> புதிய மனை பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களில் பட்டா மாற்றம் - புதிய மென்பொருள் - செய்தி வெளியீடு எண்: 112, நாள்: 18-01-2023 (Change of Patta within minutes of new plot registration - New Software - News Release No: 112, Dated: 18-01-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2023 - School Morning Prayer Activities...

 

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2023 - School Morning Prayer Activities...

    

திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


 இயல்:இல்லறவியல்


 அதிகாரம்: செய்நன்றி அறிதல்


குறள் : 107

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு.


பொருள்:

ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.


பழமொழி :

Be slow to promise but quick to perform


ஆலோசித்து வாக்கு கொடு விரைந்து நிறைவேற்று



இரண்டொழுக்க பண்புகள் :


1. புத்தகம் மனித குலத்தின் குல சொத்து வாசிப்பேன். 


2. மனிதன் இறைவனின் அற்புத படைப்பு. நேசிப்பேன்.


பொன்மொழி :


வாழ்க்கை ஒரு சங்கீதம்.  அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட திட்டங்களால் அல்ல.


பொது அறிவு :


1. மனிதனுக்கு எத்தனை ஜோடி விலா எலும்புகள் உள்ளன? 


 12 ஜோடிகள் .


 2.அரண்மனை நகரம் என்று அழைக்கப்படுவது எது? 


 கொல்கத்தா.


English words & meanings :


lessen - make smaller. verb. குறைப்பது. வினைச் சொல். lesson - learning materials or things.noun பாடம். பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


மொச்சை பயிறில் உள்ள எல் டோபா பார்கின்சன் நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.


மனச்சோர்வு மற்றும் மனப்பிறழ்வு போன்ற பிரச்சினைகளை எதிர்த்து போராடவும் உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்துக்கள் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. எடை இழப்புக்கு உதவுகிறது.


NMMS Q


தனிம வரிசை அட்டவணையில் 118 வது தனிமமாக நவ 28, 2016 இல் சேர்க்கப்பட்ட தனிமம் ___________ 


a) Oganesson b) Tennessine c) Livermorium.


 விடை: Oganesson


ஜனவரி 19


1986 – முதற் கணினி நச்சுநிரலான (Computer Virus) பிரெயின் பரவத் தொடங்கியது.





நீதிக்கதை


செய்நன்றி மறவேல்


ஒருநாள் மான் ஒன்று புல் மேய்ந்துக் கொண்டிருக்கையில், வேடன் ஒருவன் கண்களில் சிக்கியது. அவன் மானைக் கொல்ல, அம்பெய்தப் குறி பார்த்தான்.


மான் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடியது. சிறிது தூரம் சென்றதும், ஒரு புதரைப்பார்த்து அதன் பின் ஓடி ஒளிந்தது. மானைத் துரத்தி வந்த வேடன் அதைக் காணாது சுற்றும் முற்றும் தேட ஆரம்பித்தான்.


அவனிடமிருந்து தப்பித்துவிட்டோம் என்ற எண்ணத்தில் புதரில் வளர்ந்திருந்த செடியின் இலைகளை மான் தின்ன ஆரம்பித்தது. அப்போது அச்செடி, மானே! நான் உன்னை வேடனிடமிருந்து காப்பாற்றியுள்ளேன்! ஆனால், நீ எனது செல்வங்களான இலைகளை உண்ணுகிறாய். தயவு செய்து சில நாட்களாவது அவை தாயான என்னிடம் இருக்கட்டும் என கெஞ்சியது.


ஆனால், அதைக் கேட்காத மான் செடியின் இலைகளை உண்ணத் தொடங்கியது. அப்போது, அதனால் சிறு சலசலப்பு உண்டாக, வேடன் மான் அங்கு ஒளிந்திருப்பதைப் பார்த்துவிட்டான். அதன் மீது அம்பை எய்திக் கொன்றான்.


தன்னைக் காத்த செடியின் செய்நன்றியை மான் மறந்ததால் மான் உயிரையே இழக்க நேர்ந்தது. நாமும் நமக்கு ஒருவர் சிறிய உதவியைச் செய்தாலும் அதை மறக்காது, உதவி புரிந்தோர்க்கு நம்மாலான நன்மைகளையே செய்ய வேண்டும்.


இன்றைய செய்திகள்


19.01.2023


* மத்திய அரசுப் பணிகளில் 2.1% பேர் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகின்றனர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்.


* சென்னையில் 3 கடைகளில் 1500 பொம்மைகள் பறிமுதல்: ஐஎஸ்ஐ முத்திரை இல்லாததால் நடவடிக்கை.


* விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையும் பருவத்தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


* சிறுபான்மையினரை அடையாளம் காண்பதில் சுணக்கம்: 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி.


* உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிரிஸ்கி, மூத்த அதிகாரிகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.


* டாடா ஸ்டீல் செஸ் போட்டி: உலகின் நம்பர் 2 வீரரை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தல் வெற்றி.


* 150 நாட்களாக தினமும் ஒரு மாரத்தான் ஓடி ஆஸ்திரேலிய பெண் உலக சாதனை.


* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், முர்ரே, ஜாபியர் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* Only 2.1% of Tamilians have been selected for central government jobs : Minister Udayanidhi Stalin informs.


 * 1500 toys seized from 3 shops in Chennai: Action for lack of ISI stamp


 * Anna University said that the term exam will be conducted on Sunday as well.  Students are dissatisfied with the announcement.


 * Reluctance to identify minorities: Supreme Court disapproves of 6 states and UT governments.


*  16 people, including Minister of Home affairs Denis Monastrisky, died in a helicopter crash in the capital of Ukraine, Kiev.


 * TATA STEEL CHESS MATCH: Pragnananda beats World No. 2 with stunning victory.


 * An Australian woman has run a marathon every day for 150 days, a world record.


 * Australian Open tennis: Djokovic, Murray, Japier advance to 2nd round.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...