கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Competitive exams for school students & monthly scholarships

 

பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக உள்ள போட்டித் தேர்வுகள் - வெற்றி பெற்றால் மாதம் தோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைகள் குறித்த தகவல்


Class-wise competitive exams for school students & monthly scholarships provided if successful -information


பள்ளி மாணவர்களுக்கு என்னென்ன போட்டித் தேர்வுகள் உள்ளன? வெற்றி பெற்றால் எவ்வளவு கல்வி உதவித் தொகை மாதம் தோறும் வழங்கப்படும்? என்பது குறித்த தகவல்


எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பதினோராம் வகுப்பு மாணவர்கள் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு....


பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியாக என்னென்ன போட்டித் தேர்வுகள் உள்ளன?


வெற்றி பெற்றால் எவ்வளவு தொகை மாதம் தோறும் வழங்கப்படும்?


என்பது குறித்த தகவல்...


NMMS, NTSE, trust, tn chief minister talent exam... Etc., 👇👇👇




பள்ளி மாணவர்கள் கணினி, AI பயில ‘TN Spark’ திட்டம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்



 அடிப்படை கணினி தொழில்நுட்ப செயல்பாடுகளை பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் திறன் மற்றும் TN Spark எனும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இத்திட்டம் இந்தியாவிற்கே முன்னோடியாக இருக்கும்!


- மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்


பள்ளி மாணவர்கள் கணினி, AI பயில ‘டிஎன் ஸ்பார்க்’ திட்டம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


பள்ளி மாணவர்கள் அடிப்படை கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ‘டிஎன் ஸ்பார்க்’ என்ற புதிய திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புதிதாக தேர்வான 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.




ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா சென்னையில் நடந்தது. நியமன ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.


தொடர்ந்து 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் மொழி, கணித திறன் மேம்பாட்டுக்காக, ‘திறன்’ (THIRAN-Targeted Help for Improving Remediation and Academic Nurturing) திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ள புத்தகங்களை வெளியிட்டார்.



புதிய பாடத் திட்ட நூல்கள்: 

மாணவர்களுக்கு கணினிசார் அடிப்படை அறிவியல், செயற்கை நுண்ணறிவு (AI) திறனை கற்பிக்கும் வகையில் உருவாக்கப்பட் டுள்ள TN SPARK (TamilNadu School Programme for Artificial Intelligence, Robotics and Knowledge of Online Tools) என்ற புதிய திட்டத்தின் பாட நூல்களையும் வெளியிட்டார்.


பின்னர் அவர் பேசியதாவது: 

பள்ளிக்கல்வி துறை வரலாற்றில் முதல்முறையாக மலைப் பகுதிகளில் காலி பணியிடமே இல்லை என்று கூறும் அளவுக்கு இடைநிலை ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தொடக்க கல்வியில் 100 சதவீதம் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான். இதை மத்திய அரசின் புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன.


கல்விக்கான நிதியை வழங்காமல் மத்திய அரசு நமக்கு சுமையை ஏற்படுத்திய போதிலும், ஆசிரியர்கள், மாணவர்கள் பாதிக்காதபடி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


ஆசிரியர்களுக்கு இந்த அரசு எப்போதும் துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார். 


பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசும்போது, 

‘‘பள்ளி பருவத்திலேயே கோடிங், ஏஐ, ஆன்லைன் டூல்ஸ் பற்றி குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டுள்ள ‘டிஎன் ஸ்பார்க்’ திட்டம், நாட்டுக்கே வழிகாட்டி திட்டமாக இருக்கும்’’ என்றார்.



முதல்வர் வாழ்த்து செய்தி: 

புதிதாக பணி நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பள்ளிக்கல்வி துறை செயலாளர் சந்திரமோகன், இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தொடக்கக் கல்வித் துறையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு 2,457 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியில் இன்னும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்படுகிறது.


ஸ்ரீரங்கத்தில் திருவேங்கடமுடையன் திருக்கோலத்தில் ஆண்டாள் கண்ணாடி அறை சேவை

ஸ்ரீரங்கத்தில் திருவேங்கடமுடையன் திருக்கோலத்தில் ஆண்டாள் கண்ணாடி அறை சேவை


ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி கோயில், பரமபத நாதர் சன்னதியில் நடைபெற்று வரும் ஆடிப்பூர உற்சவத்தின் 8ஆம் நாளான 26.07.2025 அன்று கண்ணாடி அறை சிறப்பு சேவையில், ஆண்டாள் மூலவர் - திருவேங்கடமுடையான்

உற்சவர் -  பூவராகவன் திருக்கோலத்திலும் பக்தர்களுக்கு சேவை சாதித்தனர்.



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-07-2025



 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-07-2025 : School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


THIRAN - Teacher's Handbook - Tamil

 


திறன் - ஆசிரியர் கையேடு - தமிழ் - வகுப்புகள் :6, 7 & 8  - 2025-2026


THIRAN - Teacher's Handbook - Tamil - Classes :6, 7 & 8  - 2025-2026


 கல்வியில் சீரமைப்பையும் வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்கான  இலக்குகளை அடைய உதவுதல் - THIRAN (Targeted Help for Improving Remediation & Academic Nurturing) ஆசிரியர் கையேடு - வகுப்புகள் :6, 7 & 8 - தமிழ் - 2025-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


THIRAN - Teacher's Handbook - English

 


திறன் - ஆசிரியர் கையேடு - ஆங்கிலம் - வகுப்புகள் :6, 7 & 8  - 2025-2026


THIRAN - Teacher's Handbook - English - Classes :6, 7 & 8  - 2025-2026


 கல்வியில் சீரமைப்பையும் வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்கான  இலக்குகளை அடைய உதவுதல் - THIRAN (Targeted Help for Improving Remediation & Academic Nurturing) ஆசிரியர் கையேடு - வகுப்புகள் :6, 7 & 8 - English - 2025-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


"அன்பு கரங்கள்" : ரூ.2000 நிதி ஆதரவு திட்டம் - விண்ணப்பிக்கும் முறை



பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை : முதலமைச்சரின் "அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டம் - விண்ணப்பிக்கும் முறை & தேவையான ஆவணங்கள்


Monthly allowance of Rs. 2000 for children who have lost their parents : Chief Minister's "Anbu Karangal" financial support scheme - Application procedure & required documents


பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கும் முதலமைச்சரின் "அன்பு கரங்கள்" திட்டம் - செய்தி வெளியீடு 


 இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகள் "அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்டங்களில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்  என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ்குமார் இ.ஆ.ப., அவர்கள் தகவல்



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம்


அன்புக்கரங்கள் திட்டம்: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி பெறலாம். அதற்கு விண்ணப்பிப்பது எப்படி, என்ன ஆவணங்கள் தேவை


அன்புக்கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் பெற்றோர் இருவரையும் இழந்து உறவினர்களின் பாதுகாப்பில் உள்ள 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் நிதி ஆதரவுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்


 மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவல்

தமிழ்நாடு முதலமைச்சர், மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில், தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின்  பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதை அறிந்து, இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அவர்களது பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியைத் தொடர, 18 வயது வரை  மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்கள். 


அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டம்

இந்த அறிவிப்பிற்கிணங்க, இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதந்திர உதவித்தொகை “அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.


இச்சீரிய திட்டத்தின் கீழ் பயன்பெற கீழ்க்கண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்:       


1. ஆதரவற்ற குழந்தைகள் (பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்).


2. கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்)


3. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறன் தன்மை (Physically/mentally challenged) கொண்டவராக இருந்தால்


4. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து. மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்)


5. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்)


கீழ்க்காணும் ஆவணங்களுடன்,  “அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற மாவட்டங்களில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்“ முகாம்களில் அல்லது மாவட்ட ஆட்சியர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம்.


தேவையான ஆவணங்கள்


1. குடும்ப அட்டையின் நகல்


2. குழந்தையின் ஆதார் அட்டையின் நகல்


3. குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச்சான்றிதழ்/ கல்வி மாற்றுச் சான்றிதழ்/ மதிப்பெண் சான்றிதழ்)


4. குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்.


5. பெற்றோரின் இறப்புச்சான்று நகல். 

உள்ளிட்டவற்றை மாவட்ட  குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்


THIRAN - Teacher's Handbook - Mathematics



திறன் - ஆசிரியர் கையேடு - கணக்கு - வகுப்புகள் :6, 7 & 8  - 2025-2026


THIRAN - Teacher's Handbook - Mathematics - Classes :6, 7 & 8  - 2025-2026


 கல்வியில் சீரமைப்பையும் வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்கான  இலக்குகளை அடைய உதவுதல் - THIRAN (Targeted Help for Improving Remediation & Academic Nurturing) ஆசிரியர் கையேடு - வகுப்புகள் :6, 7 & 8 - Maths - 2025-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Instructions for applying for the Dr. Radhakrishnan Award on the EMIS website


டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதுக்கு EMIS வலைதளத்தில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு


Instructions for applying for the Dr. Radhakrishnan Award on the EMIS website



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



ஆடிப் பூரத்தின் பின்னணி

 


ஆடி பூரத்தின் பின்னணியில் உள்ள புராணக் கதைகள்


ஆடிப் பூரம்

புராணங்களின்படி, ஆழ்வார் துறவியான பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வந்தார். குழந்தை இல்லாததால், தனது துயரத்தைத் தீர்க்க விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தார். ஒரு நல்ல நாள், அவர் ஒரு கோயில் வழியாக நடந்து செல்லும்போது, கோயிலின் தோட்டத்தில் ஒரு பெண் குழந்தையைக் கண்டார். அந்தப் பெண்ணைத் தத்தெடுக்க முடிவு செய்து, அதற்கு 'கோதை' என்று பெயரிட்டார். அந்தக் குழந்தை விஷ்ணுவை வழிபடும் வைணவ மரபில் வளர்க்கப்பட்டது. சிறிது காலத்தில், கோதையின் ரங்கநாதர் (விஷ்ணு) மீதான பக்தி கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு வளர்ந்தது. அவள் மாலையை இறைவனுக்குக் கொடுப்பதற்கு முன்பே அணியத் தொடங்கினாள். ஒரு நாள், பெரியாழ்வார் மாலையைத் தேடிக்கொண்டிருந்தபோது, கோதை இறைவனுக்குக் கொடுக்கப்பட்ட மாலையை அணிந்திருப்பதைக் கவனித்தார். மிகவும் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அவளுடைய நடத்தைக்காக அவளைக் கண்டித்தார்.


அன்றிரவு, பெரியாழ்வார் தூங்கிக் கொண்டிருந்தபோது, விஷ்ணு பகவான் தனது கனவில் தோன்றி, ஆண்டாள் அதை அணிந்த பிறகுதான் மாலையை அணிய விரும்புவதாகக் கூறினார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு அவளை அழைத்துச் செல்லும்படியும் இறைவன் அறிவுறுத்தினார். ஆச்சரியத்தால் நிறைந்திருந்தாலும், பெரியாழ்வாரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆண்டாள் தன் தந்தையிடம், தான் ரங்கநாதரைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று சொன்னாள். ஆண்டாள் கருவறைக்குள் நுழைந்ததும், ரங்கநாதருடன் (விஷ்ணு) இணைந்ததாக நம்பப்படுகிறது.


மற்றொரு புராணத்தின் படி, ஆடி பூரம் தினம், உலகத் தாயான பார்வதி தேவிக்கு 'வளைகாப்பு' (வளையல் விழா) விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்குப் பின்னால் ஒரு கதை உள்ளது. தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில், சிவன் மற்றும் பார்வதி தேவிக்கு ஒரு விழா நடத்தப்பட்டது. திருவிழா முடிந்ததும், கூட்டம் மெதுவாகக் கலையத் தொடங்கியது. கூட்டத்தில், ஒரு கர்ப்பிணிப் பெண் இருந்தாள், அவள் உடலைத் தளர்த்த ஓய்வெடுக்கும்போது, திடீரென்று பிரசவ வலியால் அவதிப்பட்டாள். சுற்றி யாரும் இல்லை, சிறிது நேரம் உதவி கேட்டு அலறிய பிறகு, பார்வதி தேவி மயக்கமடையவிருந்தபோது, அவளைக் காப்பாற்றினாள். அவள் ஒரு மருத்துவச்சி வேடத்தில் வந்து அந்தப் பெண்ணுக்கு குழந்தையைப் பெற்றெடுக்க உதவினாள். ஆனால் அந்தப் பெண் தெய்வத்தை அடையாளம் கண்டுகொண்டு, அந்த நாளை பார்வதி தேவிக்காக ஒவ்வொரு ஆண்டும் வளையப்பு நாளாக (கர்ப்பத்தின் ஏழாவது மாதத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல் விழா, வளைகாப்பு போன்றது) கொண்டாடுவதாக சபதம் செய்தார்.


ஆடி பூரத்தின் சடங்குகள்

ஆடி பூரத்தன்று, பல வைணவ கோயில்கள் ஹோமங்கள் (தீபமேடைகள்) மற்றும் பூஜைகள் (வழிபாட்டிற்கான சடங்குகள்) நடத்துகின்றன. ஆண்டாளின் பிறப்பிடமான ஸ்ரீவல்லிபுத்தூரில் ஆடி பூரம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா ஸ்ரீரங்கம் கோயிலிலும் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 10 ஆம் நாளில், ஆண்டாள் மற்றும் ரங்கநாதர் (விஷ்ணு) ஆகியோரின் தெய்வீக திருமணம் கொண்டாடப்படுகிறது. இன்னும் திருமணம் ஆகாத அல்லது சரியான மணமகனைத் தேடாத பெண்கள், 10 ஆம் நாளில் (அதாவது, தெய்வீக திருமண நாள்) ஆண்டாளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள், விரைவில் திருமணம் செய்து கொள்ளவும், சரியான துணையைப் பெறவும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது.


ஆண்டாள் ரங்கநாதரைப் புகழ்ந்து பல பாசுரங்களை (பக்திப் பாடல்கள்) இயற்றியுள்ளார். திருப்பாவை (30 பாசுரங்கள்) மற்றும் நாச்சியார் திருமொழி (143 பாசுரங்கள்) ஆகியவை அவளுடைய பாசுரங்கள். திருமண விழாவிற்குப் பிறகு, பக்தர்கள் திருப்பாவை மற்றும் பிற பாசுரங்களைப் பாடுகிறார்கள்.


அனைத்து சக்தி கோயில்களிலும், இந்த நாளில், தேவி அழகாக அலங்கரிக்கப்படுகிறாள், மேலும் பல கண்ணாடி வளையல்கள் பல்வேறு வடிவங்களில் தேவிக்கு படைக்கப்படுகின்றன. பின்னர், வளையல்கள் அனைத்து பக்தர்களுக்கும் விநியோகிக்கப்படுகின்றன. இந்த வளையல்களை அணிவது தம்பதிகளுக்கு சந்ததியினரை ஆசீர்வதிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், கர்ப்பிணிப் பெண்கள் இந்த வளையல்களை அணியும்போது, அது அவர்களின் குழந்தையை தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது.


ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருவாரூர் மாவட்டத்திற்கு அக்டோபர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

  உள்ளூர் விடுமுறை 💢💢💢💢💢💢 திருவாரூர் மாவட்டத்திற்கு அக்டோபர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை...