கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு(Transfer Counselling to BRTEs) நடத்த கல்வித்துறை உத்தரவு...

 


பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு நிகழ் கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது : 


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாநில , மாவட்ட திட்ட அலுவலகங்கள் , வட்டார மற்றும் குறுவள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி மாறுதல் வழங்க அரசு உத்தரவிடுகிறது. நிகழ் கல்வியாண்டில் பணி மூப்பு அடிப்படையில் 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் செய்திட வேண்டும். மேலும் , தற்போது தேர்வு செய்யப்படும் பணியில் மூத்த ஆசிரியர் பயிற்றுநர்கள் பணி மாறுதலுக்கு விருப்பமின்மை தெரிவித்து, பணியில் தொடர விரும்பினாலும் அதனை அனுமதிக்கத் தேவையில்லை. 2014ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களில் சேர்ந்த 500 பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பணிமாறுதல் செய்யப்படும் போதும் , பணி இடங்களுக்கு பாடவாரியாக திறமையும் அனுபவமும் சேவை மனப்பான்மையும் உள்ள ஆசிரியர்களை பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான கலந்தாய்வு , ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். கலந்தாய்வு அனைத்தும் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் மட்டுமே நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


>>> 500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு(BRTE) பட்டதாரி ஆசிரியர்களாக(B.T.) பணிமாறுதல் (Conversion) வழங்குதல் மற்றும் பணியிட மாறுதல் (Transfer) வழங்கிட நெறிமுறைகள் வகுத்து அரசாணை (1டி) எண்: 134, நாள்: 18-08-2021 வெளியீடு...


சிறந்த கற்போம் எழுதுவோம் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது(PLA Award Proposal Format ) – பட்டியல் சேகரிக்க உத்தரவு...



 பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் அவர்களின் கடிதத்தில் உள்ளவாறு மாண்புமிகு . பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை எண்.43 அறிவிப்பின்படி, கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் கீழ் திட்டச் செயல்பாடுகளை புதுமைச் செயல்பாடுகளுடன் சிறப்பாக செயல்படுத்திய கற்போர் மையங்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில எழுத்தறிவு விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தருமபுரி மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் இணைப்பில் கோரப்பட்டுள்ள விவரங்களின்படி கற்போம் எழுதுவோம் இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்திய ஏதேனும் 2 மையங்களை (ஒரு ஒன்றியத்திற்கு) தெரிவு செய்து இணைப்பில் உள்ள படிவத்தின்படி கருத்துருக்களை பரிந்துரை செய்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஒன்றியங்களிலிருந்து பெறப்படும் கருத்துருக்கள் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவினால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு இறுதியாக 5 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில இயக்ககத்திற்கு அனுப்பப்படும்.


மாநில இயக்ககத்தால் அமைக்கப்பட்டுள்ள குழுவினால் இம்மையங்கள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு இறுதியாக 3 மையங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு மாநில எழுத்தறிவு விருது 2020-21 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறந்த கற்போர் மையங்களுக்கான எழுத்தறிவு விருது வழங்குதல் என்பது வயது வந்தோர் கல்வித் திட்ட செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்துகின்ற மையங்களை ( பள்ளிகளை ) தெரிவு செய்து ஊக்கப்படுத்தும் ஒரு செயல்பாடாகும் . எனவே முன்குறிப்பிட்டுள்ள சிறந்த கற்போர் மையங்களுக்கான மாநில எழுத்தறிவு விருது வழங்குதல் சார்ந்த செயல்பாடுகளில் முறையான வெளிப்படைத் தன்மையை கையாண்டு , எந்தவித தொய்விற்கும் , சிக்கல்களுக்கும் இடமளிக்காத வளமைய வகையில் தனிக்கவனம் செலுத்தி சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலர்கள் , வட்டார மேற்பார்வையாளர்கள் , மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பரிந்துரையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 2 சிறந்த மையங்களின் கருத்துருக்களை உரிய படிவத்தில் வருகின்ற 01.09.2021 க்குள் மாவட்டத்திட்ட வளமைய அலுவலகத்திற்கு வட்டார அனுப்பி வைக்குமாறு மேற்பார்வையாளர்களுக்கு தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.


>>> சிறந்த கற்போம் எழுதுவோம் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது - கருத்துரு படிவம்...



பிடித்தம் செய்த பங்களிப்பு ஓய்வூதியப் பணம்(Contributory Pension Scheme Fund) ரூ.அறுபது ஆயிரம் கோடி(60 Thousand Crores) எங்கே?

 ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக அரசு பிடித்தம் செய்த ரூ.60 ஆயிரம் கோடி தொகை எங்கே போனது’ என சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் கேள்வி எழுப்பியுள்ளனர்.


அவர் கூறியதாவது: தமிழகத்தில் 2003 ஏப்ரல்1 முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் அரசுஊழியர், ஆசிரியர்கள் 8 லட்சம் பேர் உள்ளனர். இவர்களிடம் இருந்து அடிப்படை ஊதியம் , அகவிலைப்படியில் அரசு 10 சதவீதம் பிடித்தம் செய்கிறது. அரசு சார்பிலும் 10 சதவீதம் பங்களிப்பு தொகை செலுத்தப்படுகிறது. இத்தொகை நடப்பு ஆண்டு வரை ரூ.60 ஆயிரம் கோடி அளவில் உள்ளது.


புதிய ஓய்வூதிய திட்டத்தில் (சி.பி.எஸ்.,) இறந்த ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம், ஓய்வுக்கு பின்பு வழங்க வேண்டிய பணிக்கொடை வழங்காமல் பாதிக்கப்படுகின்றனர். இத்திட்டத்தில் தமிழக அரசால் பிடித்தம் செய்த தொகை ரூ.60ஆயிரம் கோடி எங்கே உள்ளது என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. இந்த நிதி குறித்து அரசு வெள்ளை அறிக்கையை வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என்றார்.





பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருள் விற்போருக்கு கடும் தண்டனை தர புதிய சட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...



 பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருள் விற்போருக்கு கடும் தண்டனை தர புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். பேரவையில் கேள்வி நேரத்தில் பென்னாகரம் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி கேள்விக்கு முதலமைச்சர் பதில் அளித்தார். தமிழகத்தில் குட்கா பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும் எனவும் கூறினார். தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்போர், கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குட்கா விஷயத்தில் காவல்துறையினரை ஊக்குவிக்க தமிழக அரசு நிச்சயம் தயங்காது என தெரிவித்தார். தமிழகத்தில் இதுவரை 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 11,247 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார். குட்கா வழக்கில் 15 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறினார்.


போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் 89  பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசினார். தமிழக சட்டப்பேரவையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கேள்வி நேரத்தில் முதலமைச்சர் பதிலளித்துள்ளார். 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முதல்வர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம் பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேள்வி நேரத்தில் முதல்வர் சார்ந்த துறைகளுக்கு பதில் வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டது. கேள்வி நெரத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்து பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பதில் அளித்தார்.


சீனாவில் உள்ள 5D தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய சினிமா தியேட்டர் இங்கு எந்த சிறப்பு கண் கண்ணாடிகளையும் அணியாமல் வீடியோவைப் பார்க்க முடியும்(newest cinema theater in China with 5D technology where people can watch video without wearing any special glasses)...

இது சீனாவில் 5D தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய சினிமா தியேட்டர் ஆகும். அங்கு மக்கள் எந்த சிறப்பு கண் கண்ணாடிகளையும் அணியாமல் வீடியோவைப் பார்க்க முடியும்.


திரை இல்லை, சுற்றிலும் சுவர் மட்டுமே உள்ளது. இருக்கைகள் இல்லை.  மக்கள் நின்று மட்டுமே ரசிக்க முடியும். மேலும் அவர்கள் 360 டிகிரி பார்க்க முடியும். நடைபாதையும் திரையின் ஒரு பகுதியாகும்...


It is the newest cinema theater in China with 5D technology where people can watch video without wearing any special glasses. There is no screen and only the surrounding wall and there are no seats. People can only stand and walk and they can see 360 ​​degrees and the sidewalk is part of the screen.



>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...


2021-2022ஆம் ஆண்டு பள்ளி செல்லா(OSC)/ இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்புப்(Drop Out Children Survey) பணியினை 20-09-2021 வரை நீட்டித்து மாநிலத் திட்ட இயக்குநர்(SPD) உத்தரவு...



>>> 2021-2022ஆம் ஆண்டு பள்ளி செல்லா(OSC)/ இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்புப்(Drop Out Children Survey) பணியினை 20-09-2021 வரை நீட்டித்து மாநிலத் திட்ட இயக்குநர்(SPD) உத்தரவு...


15.09.2021 வரை நீட்டிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குக்கான அரசாணை (G.O.Ms.No:541, Dated: 31-08-2021) வெளியீடு...

 


15.09.2021 வரை நீட்டிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குக்கான அரசாணை (G.O.Ms.No:541, Dated: 31-08-2021) வெளியீடு...


>>> Click here to Download G.O.Ms.No:541, Dated: 31-08-2021...


>>> ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15-09-2021வரை நீட்டிப்பு - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 665, நாள்: 30-08-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 19.11.2024

  கனமழை காரணமாக 19-11-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 19-11-2024 d...