கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01-04-2024...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01-04-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:


இனியவைகூறல்

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: இனியவைகூறல்.


குறள் 96:


அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்.


விளக்கம்:


தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.




பழமொழி : 


As you sow, so you reap


 வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான்...



பொன்மொழி:


ஒவ்வொருவரும் அசலாக பிறந்து, பிறருடைய நகலாக இறக்கிறோம்.



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?  


விடை: வேளாண்மை     


 மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?


விடை: ஆந்திரப்பிரதேசம்


ஈராக் நாட்டின் தலைநகரம்


விடை: பாக்தாத்


இந்திய அறிவியற் கழகம் அமைந்துள்ள நகரம்?


விடை: பெங்களூர்


 ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?


விடை: 1919




ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Marriage - திருமணம் 

Match Box - தீப்பெட்டி 

Measure - அளந்து 

Meat - மாமிசம் 

Medicine - மருந்து 

Meet - சந்திப்பு



ஆரோக்கியம்


  மருத்துவப் பரிசோதனைகள்


உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு போன்றவை உங்கள் இதய, ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினையை மருத்துவப் பரிசோதனை செய்யாமல் உங்களால் கண்டறிய முடியாது. அதனால், 40 வயதுக்கு மேலானவர்கள் ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து அளவுகள், நீரிழிவு போன்ற மருத்துவச் சோதனைகளைக் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது செய்துகொள்வது அவசியம்.



இன்றைய சிறப்புகள்


ஏப்ரல் 1


1973 – புலிகள் பாதுகாப்புத் திட்டம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது.


1976 – ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜொப்ஸ், ஸ்டீவ் வாஸ்னியாக், ரொனால்டு வைன் ஆகியோரால் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.


1981 – சோவியத் ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.


1997 – ஏல்-பாப் வால்வெள்ளி பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்தது


2004 – கூகிள் நிறுவனம் ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியது.


பிறந்த நாள் 

-



நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்

ஏப்ரல் முட்டாள்கள் நாள்

மர நாள் (தன்சானியா)

தேசிய நாள் (சைப்பிரசு)

ஒடிசா நாள் (ஒடிசா)



நீதிக்கதை 


எதிரியால் ஏற்பட்ட விளைவு 


ஒரு காட்டுக்கு நடுவில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றங்கரையில் ஒரு மரத்தில் ஒரு கொக்கு தன் மனைவியுடன் வசித்து வந்தது. ஒவ்வொரு முறையும் பெண் கொக்கு கூடுகட்டி முட்டைகளை இடும் போதெல்லாம் ஒரு பெரிய கருநாகம் அவற்றை உண்டு சென்றது. கொக்கும் அதன் மனைவியும் மிகவும் துயருற்று இருந்தன. கொக்குக்கு ஒரு நண்டு நண்பனாக இருந்தது. 


ஒரு நாள் கொக்கு நண்பனிடம் சென்று தன் பிரச்சினையைத் துயரத்துடன் கூறியது. 


“அந்தப் பொல்லாத திருடன் அடிக்கடி எங்கள் முட்டைகளைத் தின்று விடுகிறான். இதைத் தடுப்பதற்கு எனக்கு ஒரு வழியும் தெரியவில்லையே” என்று வருத்தத்துடன் நண்டிடம் முறையிட்டது. கவலைப்படாதே, என்று நண்டு அதைச் ஆறுதல்படுத்தி, பிறகு கூறியது: “என்னைப் போல் ஒரு நண்பன் இருக்கும்போது வருந்த வேண்டாம். யோசித்து நாம் ஒரு தீர்வைக் கண்டு பிடிப்போம்.” 


கொக்கின் அருகில் உட்கார்ந்து நண்டு யோசனை செய்தது. திடீரென்று துள்ளிக் குதித்து, “நண்பனே ! ஓர் அருமையான திட்டம் தோன்றி இருக்கிறது,” என்ற நண்டு கொக்கின் காதில் தன் திட்டத்தைக் கூறியது.



அதைக் கேட்டு மகிழ்ந்த கொக்கு உடனே தன் கூட்டிற்குப் பறந்து சென்றது. தன் மனைவியிடம் நண்டின் திட்டத்தை விவரித்தது. 


அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அது மிகவும் துடிப்பாக இருந்தது. “நீ கூறுவதைப் போல் இதை நிறைவேற்ற முடியுமா?” என்று அதன் மனைவி கேட்டது. 


“நாம் செய்வதில் ஏதாவது தவறாக நிகழ்ந்து விடுமோ ? மீண்டும் நன்றாக யோசித்துப் பிறகு திட்டத்தைச் செயல்படுத்து,” என்று எச்சரித்த மனைவியின் சொற்களை அலட்சியப்படுத்தியது அந்தக் கொக்கு. திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதில் அது ஆவலாக இருந்தது. 


கொக்கு ஆற்றங்கரைக்குச் சென்றது. மீன் பிடிக்கத் தொடங்கியது. நிறைய சிறிய மீன்களைப் பிடித்தது. ஒரு கீரி வசித்து வந்த ஒரு பொந்துக்கருகில் சென்று ஒரு மீனைப் போட்டது. சிறிது தொலைவு சென்று மற்றொரு மீனைக் கீழே போட்டது. இவ்வாறு வரிசையாக மீன்களைப் போட்டவாறு தான் கூடு கட்டியிருக்கும் மரத்தருகில் வந்து முடித்தது. 



மீன் வாசனையை முகர்ந்தவாறு பொந்திலிருந்து வெளியே வந்தது கீரி. “ஆ, இதோ ஒரு மீன் !” என்று கத்தியவாறே மகிழ்ச்சியுடன் உடனே அந்த மீனை எடுத்துத் தின்றது. 


அடுத்தது, அடுத்தது என்று வரிசையாகக் கீழே கிடந்த மீன்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தின்றவாறே கொக்குகளும் பாம்பும் இருந்த மரத்தினடியில் வந்து நின்றது. 


அதற்குப் பிறகு அங்கு மீன் இல்லாததால் அங்கே நின்று சுற்று முற்றும் பார்த்தது கீரி. மரத்தினடியில் இருந்த கருநாகம் திடீரென்று அதன் கண்களில் தென்பட்டது. கீரியைப் பார்த்த நாகமும் சண்டைக்குத் தயாரானது. இரண்டிற்கு மிடையே பயங்கர சண்டை நீண்ட நேரம் நடைபெற்றது. 


இறுதியில் கீரி பாம்பைக் கொன்றது. இந்தச் சண்டையைக் கூட்டிலிருந்து பார்த்த கொக்குகள் பாம்பு இறந்தவுடன் நிம்மதியாகப் பெருமூச்சுவிட்டன.


 மறுநாள் அந்தக் கீரி அதே போல் உண்ணுவதற்கு மீன்கள் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு அதே வழியாக வந்தது. உணவு ஏதும் கிடைக்காமல் மரத்தடியை அடைந்தது. மரத்தின் மீது ஏறி ஏதாவது தின்பதற்குக் கிடைக்குமா என்று பார்த்தது. ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றிருந்த இரு கொக்குகளும் அந்த நேரம் திரும்பி வந்து கொண்டிருந்தன. மரத்திலிருந்து கீழே இறங்கும் கீரியைப் பார்த்தன. 


பறந்து சென்று கூட்டை அடைந்தன. இந்த முறை கீரி கொக்கின் முட்டைகளைத் தின்றிருந்தது ! 


“ஐயோ ! ஓர் எதிரியைப் பெறுவதற்காகத் தான் முதல் எதிரியை ஒழித்தோமா ? பாம்பை ஒழித்தோம். இப்போது கீரி நம் முட்டைகளை அழிக்கிறதே ! ” என்று கொக்கு வருத்தத்துடன் தன் மனைவியிடம் கூறியது. 


நீதி : எண்ணித் துணிக கருமம்




இன்றைய முக்கிய செய்திகள் 


01-04-2024 


 வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உள்ளிட்ட நால்வருக்கு பாரத் ரத்னா விருது: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்...


 அத்வானிக்கு பாரத ரத்னா விருதை அவரது இல்லத்திற்கே சென்று வழங்கினார் குடியரசுத் தலைவர்...


தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் தேர்வு தேதிகள் மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...


‘ஏஐ’ தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை: பில்கேட்ஸ் – மோடி சந்திப்பு...


கொடைக்கானலில் டால்பின் நோஸ் மீது நடந்து சென்றபோது 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர் மீட்பு...




Today's Headlines:

01-04-2024


 Bharat Ratna award to four including Agricultural Scientist M.S.Swaminathan: President Draupati Murmu presented... 


President awarded Bharat Ratna to Advani at his residence... 


Change in examination dates of school students in Tamil Nadu: School Education Department orders... 


Consultation on 'AI' technology: Bill Gates - Modi meeting... 


Rescued a youth who fell into a 100 feet ditch while walking on Dolphin Nose in Kodaikanal...


4 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகளில் மாற்றம் - 22.04.2024 & 23.04.2024 தேதிகளில் நடைபெறுகிறது - பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் DSE & DEE இணைச் செயல்முறைகள் ந.க.எண் : 19528 / எம் / இ1 / 2023, நாள் : 29.03.2024...

 

 4 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகளில் மாற்றம் - 22.04.2024 & 23.04.2024 தேதிகளில் நடைபெறுகிறது - பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் DSE & DEE இணைச் செயல்முறைகள் ந.க.எண் : 19528 / எம் / இ1 / 2023, நாள் : 29.03.2024...


Change in Science, Social Science Examination Dates for Classes 4 to 9 - Joint Proceedings of Director of School Education and Director of Elementary Education Rc. No. : 19528 / M / E1 / 2023, Date : 29.03. 2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வரும் ஏப்ரல் 12ஆம் தேதி பிறை தென்பட்டு ரமலான் பண்டிகை வரும் பட்சத்தில் அன்றைய தேதியில் தமிழ்நாட்டில் நிச்சயமாக பொதுத்தேர்வு இருக்காது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்...

 

வரும் ஏப்ரல் 12ஆம் தேதி பிறை தென்பட்டு ரமலான் பண்டிகை வரும் பட்சத்தில் அன்றைய தேதியில் தமிழ்நாட்டில் நிச்சயமாக பொதுத்தேர்வு இருக்காது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்...



வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சிக்கான அறிவுரைகள் - விருதுநகர் மாவட்ட ஆட்சியர்/ மாவட்டத் தேர்தல் அலுவலரின் அறிவிப்பு, நாள்: 27-03-2024...

 

 வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சிக்கான அறிவுரைகள் - விருதுநகர் மாவட்ட ஆட்சியர்/ மாவட்டத் தேர்தல் அலுவலரின் அறிவிப்பு, நாள்: 27-03-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தேர்தல் பணிக்கு வராத 1500 பேருக்கு நோட்டீஸ்...

 

 தேர்தல் பணிக்கு வராத 1500 பேருக்கு நோட்டீஸ்...


சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்...


நோட்டீஸ் பெற்றவர்கள் பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை கூறியுள்ளனர். பயிற்சிக்கு வராதோருக்கு நாளை மீண்டும் பயிற்சி - சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்...



நாடாளுமன்றத் தேர்தல் 2024 - மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டியவை...

 

நாடாளுமன்றத் தேர்தல் 2024 - மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டியவை...


Parliamentary Elections 2024 - To be handed over to Zonal Officer...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


நான் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் PrO - ஆக பணியாற்றினால் செய்ய வேண்டிய பணிகள்...



 நான் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் PrO - ஆக பணியாற்றினால் செய்ய வேண்டிய பணிகள்...


வாக்குப் பதிவிற்கு முந்தைய நாள்

1. வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய நாள் பிற்பகல் 12.00 மணிக்கு வாக்குச் சாவடிக்கு சென்று விடுவேன்.

2. வாக்குப்பதிவுக்கு தேவையான 5 Table , 4  chair ( Teachers)  , Agents 10 chair தண்ணீர் வசதி உள்ளதை உறுதி செய்வேன்.

3.  தேர்தல் பொருட்களை  zonal officer - இடம் சரி பார்த்து பெற்றுக் கொள்வேன்.

4.  VVPAT ,  CU, BU  address Tag  இன் மூலம் அந்த வாக்குச்சாவடிக்கு உரியதா என்பதை சரி பார்ப்பேன்.

5. வாக்காளர் வசிப்பிடம் குறித்த அறிவிப்பு பட்டியல், போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வாக்குச்சாவடிக்கு வெளியில் வாக்காளர் பார்க்கும்படி ஒட்டுவேன்.

6. வாக்குச்சாவடிக்குள் PrO, P-1, P-2, P-3 &  compartment பட்டியலை ஒட்டுவேன்.

7. Ballot unit 1 இன் wire - ஐ VVPAT உடனும், VVPAT இன் wire - ஐ Control unit உடனும் Connect செய்வேன்.

8. VVPAT இன் பின்புறம் உள்ள குச்சிபோன்ற பட்டனை 1 இல் வைப்பேன். குறிப்பு: (Ballot unit ஒன்று இருப்பதால், Ballot unit இரண்டு இருந்தால் குச்சி போன்ற பட்டனை 2 - இல் )

9. VVPAT இன் பின்புறம் உள்ள knob - ஐ  vertical Mood க்கு கொண்டு வருவேன்.

10. Control unit இல் உள்ள Button ஐ Press செய்வேன்.

11. VVPAT இன் drop box இல் PASS என்று 7 Paper slip கள் விழும். 

12. ஒவ்வொரு வேட்பாளரின் சின்னங்களையும் CUல் அழுத்தி BU press செய்து VVPAT இன் dropbox இல் paper slip களை Collect செய்து கொண்டு CU இன் Swith-ஐ off செய்து விடுவேன்.

13. குப்பியில் மணல் நிரப்பி indelible ink ஐ குச்சியுடன் எடுத்து வைப்பேன்.

 குறிப்பு: காது Clean செய்யும் buds பயன்படுத்தலாம்.

14. Po, P-1, P-2, P-3 அனைவரும் சேர்ந்து 17 A Register இல் வரிசை எண் voter slip இல் வரிசை எண் மற்றும் address ஐ எழுதி வைப்போம். கொடுக்கப்பட்ட Brown Sheet-ல் நமக்கு தேவையான Cover களை செய்து கொள்வோம்.


வாக்குப்பதிவு அன்று

15. Mock poll ஆரம்பிக்கும் முன்பு Declaration form part - i , ii படிவத்தில் PO, Agent sign பண்ணி Agent வசம் இந்த form ஐ ஒப்படைப்பேன். 

குறிப்பு: Declaration Part - i,ii இல் 17A Register, Cu, BU, VVPAT இல் எந்தப் பதிவும் இல்லை என்றும், Strip seal, Green seal இன் No PO , Agent குறித்துக் கொண்டோம் என்றும் PO, Agent sign பண்ணினோம் என்றும் வாக்குறுதியளித்தல்.

16. காலை 5 1/2 மணியளவில் Mock poll ஆரம்பித்து விடுவேன்.

17. குறைந்தது 2 - Agent - ஆவது இருக்கும்படி பார்த்துக் கொள்வேன். குறிப்பு: 15 நிமிடம் Agent களுக்கு காத்திருக்கலாம்.

18. CU - ஐ Switch on செய்வேன்.

19. CU - இல் Button ஐ Press செய்வேன்.

20. Agent களை அவரவர் சின்னத்தில் ஓட்டளிக்க செய்வேன் (குறைந்தது 50 ஓட்டுகள்)

21. Total button ஐ Press செய்து Total ஐ Agent களுக்கு காண்பிப்பேன்

22. Close பட்டனை press செய்வேன்.

23. Result பட்டனை press செய்வேன்.

24. Clear button ஐ press செய்வேன்

25. Total button ஐ Press செய்து   '0' என்பதை காண்பிப்பேன்

26. CU ஐ off செய்து விடுவேன்.

27. VVPAT இன் Dropbox இல் உள்ள paper Slip களை Collect பண்ணி Total-ம் Slip-ம் ஒன்றாக உள்ளதா என்பதை உறுதி செய்வேன்.

28. VVPAT dropbox க்கு Seal உடன் கூடிய address Tag இடுவேன்.

29. Paper slip க்கு பின்புறம் Mock poll Slip Rubber Stamp முத்திரை பதித்து கருப்புத் தாள் உறையில் போட்டு பெட்டியில் வைத்து மூடி பின்பு உறையின் மீது PO, agent Sign பண்ணுவோம்

30. Green Paper Seal ஐ Cu -இல் உள்ள Inner door இல் செருகி door -ஐ Close செய்வேன்


31. Close button இல் Seal உடன் கூடிய special Tag இல் CU - இன் Sl.No எழுதி இதிலும் PO, agent Sign பண்ணுவோம்


32. Result Section வெளிப்புற கதவை மூடி Address Tag போட்டு முத்திரை இடுவேன்.


33. Strip seal ABCD இல் உள்ள No PO, agent குறித்துக் கொண்டு PO, agent sign பண்ணி CU - இன் Result Section இன் வெளிப்புறம் ஒட்டுவேன்.


34. Mock poll Certificate. இல் PO, agent sign பண்ணி Agent க்கும் (zonal officer - க்கு வாக்குப் பதிவு முடிந்த உடன் கொடுத்து விடுவேன்.)


35. குறிப்பு: 17 C படிவம் zonal officer க்கு 3-copies, Agent -களுக்கு தலா 1 - copy


36. சரியாக காலை 7.00 மணிக்கு உண்மையான வாக்கு பதிவை ஆரம்பித்து விடுவேன்.


37. 1 மணி நேரத்திற்கு ஒருமுறை 17 A Register - லும் , CU இன் Total button ஐ அழுத்தி இரண்டின் எண்ணிக்கையும் ஒன்றாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்வேன்.


38. PO Dairy யிலும் குறித்துக் கொள்வேன்.


39. ஒரு சமயத்தில் ஒரு வேட்பாளருக்கு ஒரு Agent மட்டுமே உள்ளே இருக்க வேண்டும்.


வாக்குப் பதிவு முடியும் நேரம்

40. வாக்காளர் இல்லா பட்சத்தில் மாலை 6.00 மணிக்கு வாக்குப் பதிவை முடித்து விடுவேன்.


41. 6.00 மணிக்கு மேல் வரும் வாக்காளர்களுக்கு கடைசியில் நின்றிருப்பவரிலிருந்து 1, 2, 3 என்று எழுதப்பட்ட slip களை கொடுப்பேன்


42. EDC வாக்கு இருந்தால் (வாக்குச் சாவடியில் பணிபுரிபவர்களின் வாக்கு PO, P-1, P - 2, P-3 , Police) 17 A Register இல் கடைசியில் எழுதி வாக்களிப்போம்


43. வாக்குப் பதிவு முடிந்தவுடன் CU - இல் உள்ள ரப்பர் உரையைத் திறந்து Close  button ஐ Press செய்து வாக்கு பதிவை முடிவுக்கு கொண்டு வருவேன்.


44. Total button ஐ Press செய்து Total ஐ Agent, PO -ம் பார்த்து குறித்து வைத்துக் கொள்வோம் (CU ஐ Close  செய்தாலும் Total button மட்டும் வேலை செய்யும் மற்ற button கள் வேலை செய்யாது)


46. CU இன் Switch ஐ off செய்வேன்


47. VVPAT இன் பின்புறம் உள்ள Knob ஐ கிடைமட்டத்திற்கு கொண்டு வருவேன்


48. VVPAT இன் Battory-யை கழற்றி விடுவேன்


49.  17 C படிவத்தில் வாக்குப்பதிவையும் EDC வாக்குப்பதிவையும் தனித்தனியாக பிரித்து  Total ஐ எழுதுவேன்


50. Declaration Part -iii form ஐ fill பண்ணி PO, Agent Sign பண்ணியதை Agent க்கு கொடுப்பேன். குறிப்பு: 17 C படிவம் கொடுத்ததற்கான Declaration.


51. 17 A Register இல் வாக்குப் பதிவு முடித்த கடைசி பக்கத்தில் Certified that the last Serial number in 17 A Register is என்று எழுதி கடைசியாக வாக்களித்த Sl.No ஐ எழுதுவேன்


52. வாக்குப் பதிவு முடிவுற்ற நேரத்தையும் எழுதி கீழ் PO, P-1, P-2, P-3, Agent sign வாங்குவேன்.


53. CU, BU, VVPAT பெட்டியில்  address tag இல் PO, Agent - இன் sign போடுவோம்.


54. Use பண்ணாத கவர்களில் வாக்குச்சாவடி விவரங்களை எழுதி Nil என்று எழுதினேன் குறிப்பு: Use பண்ணினாலும், use பண்னா விட்டாலும், zonal office க்கு கொடுக்கும் அனைத்து கவர்களிலும் Address எழுத வேண்டும்


zonal officer கையில் கீழ்க்கண்டவைகளை கொடுப்பேன்

55. CU, BU, VVPAT


56. Mock poll Certificate - 7 copies


57. 17 C Account of votes recorded - 3 copies


58. PO Diary - 2 Copies (இதில் P-1 ம் Sign பண்ண வேண்டும்)


59. PO Declaration form Part - i,ii,iii,iv


60. 16-point Report - I copy


61. Metal Seal


62. VVPAT Battory


63. Mock poll paper slip box.


64. 17 A Register (EPIC , Aadhar, பிற ஆவணங்களில் எத்தனை, எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்ற விவரமும் எழுத வேண்டும்) percentage-ம் எழுத வேண்டும்.


65. visit Sheet (visiters யாரும் வரவில்லை என்றால் Nil என்று எழுதி PO sign பண்ண வேண்டும்)


66. Meterial list - 1



2024-2025ஆம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ ஊராட்சி ஒன்றியத் தொடக்க & நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாவட்டங்கள் வாரியாக வழங்கப்படவுள்ள கையடக்கக் கணினிகளின் (TAB) எண்ணிக்கை - மாவட்டக் கல்வி அலுவலர்கள் பாதுகாப்பாக பெற்று பராமரித்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...



2024-2025ஆம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ ஊராட்சி ஒன்றியத் தொடக்க &  நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாவட்டங்கள் வாரியாக வழங்கப்படவுள்ள  கையடக்கக் கணினிகளின் (TAB) எண்ணிக்கை - மாவட்டக் கல்வி அலுவலர்கள்  பாதுகாப்பாக பெற்று பராமரித்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


மூன்று சுற்றுகளாக சார்ந்த அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) மூலமாக வழங்கப்பட உள்ளது... 


District-wise number of Portable Computers (TAB) to be provided to teachers working in Government/ Municipal/ Panchayat Union Primary & Middle Schools during the academic year 2024-2025 - Secured acquisition and maintenance by District Education Officers - Proceedings of Director of Elementary Education depending on instructions...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தொடக்கக் கல்வி - 2023-2024ஆம் கல்வி ஆண்டு - பள்ளி ஆண்டு இறுதித் தேர்வுகள் - தேர்வு தேதிகளை மாற்றிக்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 28-03-2024...

 

 தொடக்கக் கல்வி - 2023-2024ஆம் கல்வி ஆண்டு - பள்ளி ஆண்டு இறுதித் தேர்வுகள் - தேர்வு தேதிகளை மாற்றிக்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 28-03-2024...



Elementary Education - Academic Year 2023-2024 - School Annual Examinations - Issuance of Instructions to Change Examination Dates - Proceedings of the Director of Elementary Education, Dated: 28-03-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


19.04.2024 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குதல் - தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைமைத் தேர்தல் அலுவலரின் கடிதம்...



 தேர்தலை முன்னிட்டு 19.04.2024 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குதல் - தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைமைத் தேர்தல் அலுவலரின் கடிதம்...



Grant of leave with pay on 19.04.2024 in view of election - Letter from Additional Chief Secretary and Chief Electoral Officer, Government of Tamilnadu...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


01.04.2024 முதல் உயர்த்தப்படவுள்ள SBI Debit Card வருடாந்திர பராமரிப்புக் கட்டணங்கள் விவரம்...

 


01.04.2024 முதல் உயர்த்தப்படவுள்ள எஸ்.பி.ஐ. டெபிட் கார்டு வருடாந்திர பராமரிப்புக் கட்டணங்கள் விவரம்...


SBI - REVISION IN ANNUAL MAINTAINANCE CHARGES RELATED TO DEBIT CARDS: CHANGES PROPOSED FROM 01.04.2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2024 பயிற்சி - வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களின் பணிகளும் பொறுப்புகளும் - கையேடு...



 பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2024 பயிற்சி - வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களின் பணிகளும் பொறுப்புகளும் - கையேடு...



Parliamentary General Election 2024 Training - Duties and Responsibilities of Presiding Officer and Polling Officers - Handbook...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28-03-2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28-03-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:


இனியவைகூறல்

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: இனியவைகூறல்.


குறள் 95:


பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற.


விளக்கம் :


அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.






பழமொழி : 


A honey tongue and a heart of gall


அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் தேனும்...


பொன்மொழி:


எல்லோருக்கும் சொர்க்கத்திற்கு செல்ல ஆசை

ஆனால் யாருக்கும் சாகத்தான் விருப்பமில்லை.




அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


சார்மினார் இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?


விடை: தெலுங்கான 


 எந்த மாநிலத்தின் பெண்கள் அதிகம் படித்தவர்கள்?


விடை: கேரளா 


 இந்தியாவின் தேசிய நிறம் எது?


விடை: குங்குமப்பூ நிறம் 


ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் எங்கு கொடி ஏற்றுகிறார்?


விடை: செங்கோட்டை 


எந்த உயிரினம் அதிக மக்களை கொள்கிறது?


விடை: பாம்பு




ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Magazine - பத்திரிகை 

Magic - தந்திரம் 

Make - செய் 

Male - ஆண் 

Man - மனிதன் 

Manage - நிர்வகி


ஆரோக்கியம்


  மன அழுத்தத்தைத் தவிர்த்தல்


மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்காகச் சிலர் அதிகமாகச் சாப்பிடுவது, மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். இது இன்னும் தீவிரமான பாதிப்புகளையே ஏற்படுத்தும். அன்றாட மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி, தியானம் போன்றவைதான் சரியான தீர்வாக இருக்கும்.



இன்றைய சிறப்புகள்


மார்ச் 28


1969 – நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.


1970 – கொன்கோர்ட் விமானம் தனது முதலாவது சுப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது.



பிறந்த நாள் 

1910 – கடல் விமானம் ஒன்றில் பறந்த முதலாவது மனிதர் என்ற சாதனையை பிரான்சைச் சேர்ந்த என்றி பாப்ரி என்பவர் பெற்றார்.



நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்

ஆசிரியர் நாள் (செக் குடியரசு, சிலோவாக்கியா)



நீதிக்கதை 



நன்றி மறவாமை


ஒரு சிறிய கிராமத்தில் கருணை மனம் கொண்ட ஓர் அந்தணன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ஒரு நாள் தன் வேலையை முடித்துக்கொண்டு அருகிலிருந்த கிராமத்திலிருந்து அவன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். 


வழியில் ஒரு சிறு கீரிப்பிள்ளை தன் தாயின் உயிரற்ற உடலருகில் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தான்.


“ஐயோ பாவம் ! நான் இப்போது இங்கேயே இந்த கீரிப் பிள்ளையை விட்டுச்சென்றால் இது இறந்து விடும்,” என்று எண்ணிய அந்தணன் அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.


“கௌரி, இந்தச் சிறிய பிராணியை நான் வரும் வழியில் கண்டேன். நாம் அதை வளர்க்கலாம். என்று தன் மனைவியிடம் கூறினான்.”



அப்படியே செய்யலாம். நம்முடைய குழந்தையுடன் சேர்த்து நான் கீரியையும் கவனமாகப் பார்த்துக் கொள்கிறேன்,” என்று உறுதி அளித்தாள் அவன் மனைவி. 


அந்தணனும் அவன் மனைவியும் கீரியின் மீது அன்பும், அக்கறையும் காட்டி வளர்த்தனர். அவர்களுடைய குழந்தையோடு கீரியும் தொட்டிலில் ஒன்றாகத் தூங்கியது; பால் குடித்தது ; தவிர தினமும் குழந்தையுடன் விளையாடியது.


பிள்ளை அந்தணன் வீட்டில் நாள்களை மிகவும் மகிழ்ச்சியாகக் கழித்தது. கீரியும் அக்குழந்தையும் வளர, வளர, நட்பு சகோதரப் பாசமாக உருவெடுத்தது. அந்தக் கீரிப் குறிப்பாகக்  அவர்களுடைய பராமரிப்பில் வேகமாக வளர்ந்தது.


 திடீரென்று அந்தணனின் மனைவிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. என்ன இருந்தாலும் இது ஒரு முரட்டுப் பிராணி.விரைவிலேயே தன்னுடைய சுய உருவத்தைக் காட்டுமோ ? என்று தனக்குள் எண்ணிக் கொண்டாள்.



 இப்போதெல்லாம் கீரியின் படுக்கையைச் சற்றுத் தொலைவில் விரித்தாள். தன் குழந்தையோடு அது விளையாடும் போதெல்லாம் அதிக எச்சரிக்கையோடு அதைக் கவனித்தாள். அந்தணன் ஒரு நாள்  வெளியில் சென்றிருந்தான். கௌரி ஆற்றிலிருந்து ஒரு குடம் தண்ணீர் கொண்டு வரத் தீர்மானித்தாள். தன் குழந்தை தொட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டாள். தொட்டிலுக்கு அருகில் தரையில் கீரியும் உறங்கிக் கொண்டிருந்தது. 


“நான் ஆற்றுக்குச் சென்று வர அதிக நேரமாகாது. அதற்குள் இந்தக்கீரி என் குழந்தைக்கு ஒரு தீங்கையும் ஏற்படுத்தாது.” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவளாக மறு முறையும் அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு ஆற்றுக்கு விரைந்தாள். 


திடீரென்று ஒரு மெல்லிய சத்தம் கேட்டுக் கீரி விழித்துக் கொண்டது ; மேலே பார்த்தது ; சுவரின் ஓட்டை வழியாக ஒரு பெரிய கருமையான பாம்பு ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. 


“என் தம்பிக்கு இந்தப் பாம்பு தீங்கு விளைவிக்கும். தாயும் தந்தையும் வெளியே சென்றிருக்கிறார்கள். என் தம்பியை நான் பாதுகாக்க வேண்டும்” என்று எண்ணியது கீரி. 


பாம்பு தொட்டிலை நோக்கி வர ஆரம்பித்தது. தைரியமாக அந்தச் சிறிய கீரி பெரிய பாம்பின் மீது பாய்ந்து தாக்கியது. நீண்ட நேரம் கடுமையாக நடந்த சண்டையின் இறுதியில் அந்தச் சிறு பிராணி பெரிய பாம்பைக் கொன்றது. அதே நேரம் அந்தணனின் மனைவி வரும் சத்தம் கேட்டது. மகிழ்ச்சியுடன் கீரி தன் தாயிடம் ஓடிச் சென்றது.


 தன்னால் முடிந்த அளவு சைகைகளின் மூலம், தன் தம்பியைப் பயங்கரமான பாம்பிடமிருந்து காப்பாற்றியதைக் கீரி அவளிடம் சொல்ல முயன்றது. ஆனால், கௌரி கீரியின் வாயிலும் கால்களிலும் முதலில் இரத்தத்தைக் கண்டாள். அது என்ன சொல்ல வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. 


“என்னுடைய குழந்தையை இந்த மோசமான பிராணி கொன்று விட்டது,” என்று எண்ணிக் கோபமடைந்தாள். ஆத்திரத்துடன் தண்ணீர் நிரம்பிய குடத்தை அதன் மீது போட்டாள் ; கீரிப்பிள்ளை துடிதுடித்து இறந்தது.


பதைபதைப்போடு வீட்டினுள் நுழைந்தாள். அவளுடைய குழந்தை தொட்டிலில் இன்னமும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டு வியப்புற்றாள். தரையில் துண்டிக்கப்பட்ட தலையுடன் ஒரு பாம்பின் உடல் கிடப்பதையும் கண்டாள்.



“ஐயோ , அறிவில்லாமல் என்ன காரியம் செய்துவிட்டேன் ! என் அருமைக் குழந்தையின் விலை மதிப்பற்ற உயிரைக் காப்பாற்றிய நன்றியுள்ள அந்தச் சிறிய கீரியை நானே கொன்றுவிட்டேனே !” என்று கதறியழுதாள்.


நீதி : ஆத்திரம் அறிவை மயக்கும்.



இன்றைய முக்கிய செய்திகள் 


28-03-2024 


மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...


சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழடி அருங்காட்சியகத்தில் 4 சுற்றுலா வழிகாட்டிகள் நியமனம்...


நாடாளுமன்ற தேர்தலில் 6.23 கோடி தமிழ்நாடு வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்: சத்யபிரத சாகு பேட்டி...


கோட்டா பயிற்சி மையத்தில் படித்த ‘நீட்’ தேர்வு மாணவர் விடுதியில் தற்கொலை: கடந்த 3 மாதத்தில் மட்டும் 6 பேர் மரணம்...


சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை...


தேசிய புலனாய்வு முகமையின் தலைவராக ஐ.பி.எஸ். அதிகாரி சதானந்த் வசந்த் நியமனம்...


சமூக நெறிமுறைகளை மீறியதற்காக 22 லட்சம் வீடியோக்களை இந்தியாவில் நீக்கியது யூடியூப்...



Today's Headlines:

28-03-2024


Dismissal of case seeking early counting of votes in Lok Sabha elections: Madras High Court orders...


 In response to the demand of tourists, 4 tour guides have been appointed at Keezhadi Museum... 


6.23 Crore Tamil Nadu Voters Eligible to Vote in Parliamentary Elections: Satyapratha Sahu Interview... 


'NEET' students studying at Kota Coaching Center commit suicide in hostel: 6 dead in last 3 months alone...


6 naxalites shot dead in Bijapur district of Chhattisgarh... 


IPS Officer Sadanand Vasant  is Appointed as the head of the National Intelligence Agency... 


YouTube removes 22 lakh videos in India for violating social norms...


வாக்குச்சாவடிச் சீட்டு விநியோகம் செய்வதற்கான மதிப்பூதியம் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் தகவல் அறியும் உரிமைச் சட்ட பதில் கடிதம்...

 


வாக்குச்சாவடிச் சீட்டு விநியோகம் செய்வதற்கான மதிப்பூதியம் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் தகவல் அறியும் உரிமைச் சட்ட பதில் கடிதம்...


Remuneration for Distribution of Booth Slips - Tamil Nadu State Election Commission's Right to Information Act Reply Letter...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




BLO மதிப்பூதியம் Rs.7150 லிருந்து உயர்த்தி Rs.18000 வேண்டி ECI க்கு தலைமைத் தேர்தல் அலுவலர் அனுப்பிய கடிதம்...

 


வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான BLO மதிப்பூதியத் தொகை Rs.7150 லிருந்து உயர்த்தி Rs.18000  வேண்டி ECI க்கு  தலைமைத் தேர்தல் அலுவலர் அனுப்பிய கடிதம்...


Letter from Chief Electoral Officer to ECI seeking increase in BLO Honorarium for Booth Level Officers from Rs.7150 to Rs.18000...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு...



 தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு...


The Chief Education Officer ordered the teachers to give explanation who did not attend the election training class...



>>> முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மருத்துவ காரணங்களால் தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து அறிக்கை அளிக்க மருத்துவக் குழுவிற்கு அனுப்பி மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவு...



 மருத்துவ காரணங்களால் தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து அறிக்கை அளிக்க மருத்துவக் குழுவிற்கு அனுப்பி மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவு...



The District Election Officer has directed the Medical Board to conduct a medical examination and report on those who have applied for exemption from election duty on medical grounds...





சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் வழங்குதல் - வழிகாட்டுதலில் திருத்தங்கள் வழங்கி அரசாணை எண்: 110, நாள்: 13-03-2024 வெளியீடு...


Legal Heir Certificate வழங்கிட நெறிமுறைகள் - அரசாணை வெளியீடு...



சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் வழங்குதல் - வழிகாட்டுதலில் திருத்தங்கள் வழங்கி அரசாணை எண்: 110, நாள்: 13-03-2024 வெளியீடு...



Issuance of Certificate of Legal Succession - Amending the Guidelines Ordinance G.O.Ms.No: 110, Dated: 13-03-2024...



>>> Click Here to Download G.O.Ms.No: 110, Dated: 13-03-2024...


தேர்தல் தொடர்பான குற்றங்கள் குறித்த சட்டப் பிரிவுகள் விவரம்...



 தேர்தல் தொடர்பான குற்றங்கள் குறித்த சட்டப் பிரிவுகள் விவரம்...


Details of Sections of the Law on Election Related Offenses...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை - அங்கன்வாடி குழந்தைகள் விவரம் - EMIS வலைதளத்தில் தலைமை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய பணிகள்...



தற்போது EMIS இணையதளத்தில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் விவரங்கள் தலைமை ஆசிரியர் Individual Login ல் கொடுக்கப்பட்டுள்ளது...



முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை - அங்கன்வாடி குழந்தைகள் விவரம் - EMIS வலைதளத்தில் தலைமை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய பணிகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27-03-2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27-03-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:


இனியவைகூறல்

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: இனியவைகூறல்.


குறள் 94:


துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.


விளக்கம் :


இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு நட்பில் வறுமை எனும் துன்பமில்லை.





பழமொழி : 


A hungry man is an angry man 


பசி வந்திட பத்தும் பறந்து போகும்


பொன்மொழி:


ஆயிரம் வருடம் மௌனமாக நின்ற மரம் விழும்போது காடே அதிரும்படி செய்துவிடுகிறது. நீ?



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


எந்த விலங்குகளுக்கு ஆதார் அட்டையை உருவாக்கலாம்?


விடை: கோலா 


 எறும்புக்கு எத்தனை கால்கள் உள்ளன?


விடை: ஆறு கால்கள் 


அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது?


விடை: தாய்லாந்து 


 முயல் எந்த நாட்டின் தேசிய விலங்கு?


விடை: நார்வே 


 இந்தியாவின் தேசிய வாக்கியம் எது?


விடை: சத்யமேவ் ஜெயதே 




ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Loan - கடன் 

Lock - பூட்டு 

Loose - தளர்வு 

Lose - இழப்பு 

Louse - பேன் 

Love - அன்பு 


ஆரோக்கியம்


  ஆரோக்கியமான தூக்கம்


காலையில் உங்களால் நினைத்த நேரத்துக்கு எழுந்துகொள்ள முடியாமல் தொடர்ச்சியாகச் சிரமப்பட்டால் உங்களுக்குக் கூடுதல் தூக்கம் தேவைப்படுகிறது என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையின் முன்னுரிமையாகத் தூக்கத்தை மாற்றுங்கள். தூங்குவதற்கான நேரத்தை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள். அன்றாடம் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுந்துகொள்வது ஆரோக்கியமானது. உங்கள் படுக்கையறையை அமைதியாக இருக்கும்படி பார்த்துக்கொள்வதும் இதில் அடக்கம்.


இன்றைய சிறப்புகள்


மார்ச் 27


1969 – நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.


1970 – கொன்கோர்ட் விமானம் தனது முதலாவது சுப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது.



பிறந்த நாள் 

1973 – லாரி பேஜ், கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்த அமெரிக்கர்



நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்

உலக நாடக அரங்க நாள்



நீதிக்கதை 


அறிவற்ற சிங்கம்


ஒரு காட்டில் ஒரு சிங்கம் வசித்தது. அது வயதான கிழச்சிங்கம். இப்போதெல்லாம் அந்தச் சிங்கத்தால் வேகமாக ஓட முடிவதில்லை. நாள்கள் செல்லச் செல்ல ஓடியாடி வேட்டையாடுவது கடினமான செயலாயிற்று. 


ஒரு நாள் இரைதேடி காட்டில் இங்கு மங்கும் சுற்றி அலைந்து கொண்டிருந்த சிங்கம் ஒரு குகையைக் கண்டது. ஏதாவது விலங்கு இங்குத் தங்கியிருக்கக் கூடும், என்று எண்ணியவாறு, மெதுவாக அதனுள் நுழைந்தது.


உள்ளே ஒரு பிராணியும் இல்லை. நான் உள்ளே ஒளிந்து கொண்டு விலங்கு வருவதற்காகக் காத்திருப்பேன் என்று நினைத்தது. அந்தக் குகை ஒரு நரியின் இருப்பிடம். ஒவ்வொரு நாளும் நரி உணவு தேட வெளியே சென்று மாலையில் குகைக்கு வந்து இளைப்பாறும்.


அன்று மாலை உணவு உண்டப் பிறகு தான் வசிக்கும் இடம் நோக்கி நரி செல்ல ஆரம்பித்தது. அருகில் வந்த போது சூழ்நிலையில் ஏதோ மாற்றம் இருப்பதைக் கண்டது. அங்கு எல்லாமே அமைதியாக இருந்தது. 



“ஏதோ தவறு நடந்திருக்கிறது. ஏன் எல்லாப் பறவைகளும், பூச்சிகளும் சிறிது கூட ஓசை எழுப்பாமல் அமைதியாக இருக்கின்றன ?” என்று தனக்குள் கேட்டுக்கொண்டது நரி.


மிகுந்த கவனத்தோடு மெதுவாகக் குகையை நெருங்கியது. ஆபத்துக்கான அடையாளம் ஏதேனும் இருக்கிறதா என்று அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தது. 


குகையின் வாயிலை நெருங்கிய போது ஆபத்து காத்திருப்பதை அதன் உள்ளுணர்வு எச்சரித்தது. “எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திய பிறகே நான் உள்ளே நுழைய வேண்டும்” என்று கூறியவாறே, நரி யோசித்து ஒரு திட்டம் தீட்டியது.


“அதன்படி, அந்தப் புத்திசாலி நரி தன் குகையைக் கூப்பிட்டது !என் அருமை நண்பனான குகையே ! இன்றைக்கு உனக்கு என்ன நேர்ந்தது ? ஏன் மிகவும் அமைதியாக இருக்கிறாய் ?” என்று கேட்டது நரி.



நரியின் குரல் குகையின் உள்ளே எதிரொலித்தது. பசியை இதற்கு மேலும் தாங்க முடியாத சிங்கம் தனக்குள், நான் உள்ளே இருப்பதால்தான் இந்தக் குகை அமைதியாக இருக்கிறது. நான் உள்ளே இருப்பதை நரி தெரிந்து கொள்வதற்கு முன்னால் நான் ஏதாவது செய்தாக வேண்டுமே, என்று எண்ணியது.


மறுபடியும் நரி தொடர்ந்து பேசியது. “குகையே ! நம்முடைய உடன்படிக்கையை நீ மறந்து விட்டாயா ? நான் வீடு திரும்பும் போது நீ என்னை வரவேற்க வேண்டுமே ? ” என்று சாமர்த்தியமாக ஒரு கேள்வியை எழுப்பியது நரி.


“நண்பனே உள்ளே வா” என்று தன் குரலை மிகவும் தாழ்த்திக் கொண்டு குகையின் உள்ளிருந்து சிங்கம் கூப்பிட்டது. 


வெளியே சிங்கத்தின் குரலைக் கேட்டதும் பறவைகள் கத்தியவாறு அங்கிருந்து பறந்து சென்றன. நரியின் உடல் அச்சத்தால் நடுங்கியது. பசியால் துடித்த சிங்கம் தன் மீது பாய்ந்து கொன்று தின்பதற்கு முன்னால் தன் உயிரைக் காப்பற்றிக் கொள்ள நரி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.


குகைக்குள் நரி நுழையும் என்று சிங்கம் காத்திருந்தது. நீண்ட நேரம் கழிந்த பின்னரும் நரி வரவேயில்லை. தான் முட்டாளாக்கப்பட்டதைப் பிறகு சிங்கம் உணர்ந்து கொண்டது. தன்னுடைய முட்டாள்தனத்தால் இரையைத் தப்பிக்க விட்டதை அறிந்து சிங்கம் தன்னையே நொந்து கொண்டது.


 நீதி : புத்தி இல்லாதவனுக்கு எல்லாமே சிக்கல்தான்.



இன்றைய முக்கிய செய்திகள் 


27-03-2024 


 இந்தியாவிலேயே இளம் வாக்காளர்கள் கேரளாவில்தான் அதிகம்...


புனித வெள்ளி, வார விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு...


அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், சரக்கு கப்பல் மோதியதில் பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்து பயங்கர விபத்து..


மாவட்ட பதிவாளருக்கு போலி பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் சட்டதிருத்தத்தை நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...


மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கனஅடி நீர் திறப்பு...


சங்கரன்கோவிலில் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த ஓட்டுநர் முருகன் மனைவிக்கு அங்கன்வாடி பணி வழங்க உத்தரவு...


வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு...


ஜவ்வாது மலை பகுதியில் பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள்...


Today's Headlines:

27-03-2024


Kerala has the highest number of young voters in India. 


Special buses run for Good Friday, weekend: Transport department announcement... 


In the state of Maryland, USA, the Baltimore bridge collapsed after a cargo ship collided with a terrible accident. 


High Court directs TamilNadu government to stay amendment to empower district registrar to cancel fake deed registrations...


200 cubic feet per second water release from Mettur dam for drinking water requirement...


 Order to provide Anganwadi work to wife of driver Murugan who died in police attack at Sankarankoil... 


Leave with pay should be given on polling day: Chief Electoral Officer Satya Pratha Sahu... 


Traces of Paleolithic humans living in Javvad Hill region...


கல்வி ஆண்டு இறுதியில் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள்...

 


கல்வி ஆண்டு இறுதியில் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள்...


* All Year End Forms - Single Pdf File 


5+ மாணவர்கள் பெயர் பட்டியல்.


* ஆசிரியர்கள் விடுப்பு விவரம்.


* இனவாரியாக தேர்ச்சி சுருக்கம்.


* ஒப்புதல் கடிதம்.


* குழந்தை தொழிலாளர்கள் விவரம்


* பள்ளி இடைநின்றவர் விவரம்.


* பள்ளி செல்லாதோர் விவரம்.


* பள்ளி வேலை நாட்கள் விவரம்.


* மக்கள் தொகை சுருக்கம்.


* அடிப்படை திறனடைவுப்பட்டியல்


* விலையில்லா சீருடை மற்றும் பாடநூல் தேவை விவரம்.


* மாற்றுத் திறனாளிகள் விவரம்.


* வகுப்பு மற்றும் இனவாரி தேர்ச்சி சுருக்கம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26-03-2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26-03-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:


இனியவைகூறல்

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: இனியவைகூறல்.


குறள் 93:


முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்

இன்சொ லினதே அறம்.


விளக்கம்:


முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.




பழமொழி : 


Coming events cast there shadow before 


ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே


பொன்மொழி:


போலியான நண்பனாக இருப்பதைவிட

வெளிப்படையான எதிரியாக இரு...



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


இந்தியாவில் எந்த மாநிலத்தில் நிலக்கரி காணப்படுகிறது?


விடை: ஜார்கண்ட் 


உலகின் மிகப்பெரிய ராணுவத்தை கொண்ட நாடு எது?


விடை: சீனா 


 உலகின் மிகப்பெரிய உப்பு ஏரி எந்த நாட்டில் உள்ளது?


விடை: ரஷ்யா 


உலகில் அதிக விலை கொண்ட விலங்கு எது? 


விடை: பந்தய குதிரை


 ஜப்பானின் தலைநகரம் எது? 


விடை:  டோக்கியோ 




ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Listen - கவனி 

Little - சிறிய 

Lion - சிங்கம்

Live - வாழ் 

Lizard - பல்லி 

Load - சுமை 


ஆரோக்கியம்


  ஆரோக்கியமான தூக்கம்


தூக்கமின்மை உடல் ஆரோக்கி யத்தைப் பெரிதும் பாதிக்கக்கூடிய அம்சமாக இருக்கிறது. போதுமான தூக்கம் இல்லாதவர்கள் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு, மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கு சாத்தியம் அதிகம். பெரியவர்களுக்கு அன்றாடம் 7 அல்லது 9 மணி நேரத் தூக்கம் அவசியம் தேவை.



இன்றைய சிறப்புகள்


மார்ச் 26


2000 – விளாடிமீர் பூட்டின் உருசியாவின் அரசுத்தலைவராகத் தெரிவானார்.


2006 – மியான்மாரின் புதிய தலைநகராக நாய்பிடோ என்ற புதிய நகரம் இராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது.


2006 – முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது.



பிறந்த நாள் 

1973 – லாரி பேஜ், கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்த அமெரிக்கர்



நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்

விடுதலை நாள் (பாக்கித்தானிடமிருந்து 1971)

மாவீரர் நாள் (மாலி)



நீதிக்கதை 


நரியும் போர் முரசும் 


 ஒரு காலத்தில் ஒரு காட்டில் ஒரு நரி இருந்தது. அதன் பெயர் கோமயா. அது மிகவும் சோம்பேறி. தன் உணவைக்கூடத் தானே தேடிக் கொள்ளாது. மற்ற இளம் நரிகள் ஓடியாடித் தங்கள் இரையைப் பிடித்தவுடன் இந்தக் கிழட்டு நரி அவர்களைத் துரத்திவிட்டு இரையைத் தானே உண்ணும். மற்ற எல்லா நரிகளுக்கும் இதன் மீது அதிகக் கோபமுண்டாயிற்று. 


கோமயாவை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டுமென்று மற்ற நரிகள் கூடித் தீர்மானித்தன. எந்த நரியுமே கோமயாவைப் போல் அவ்வளவு பெரிதாக இல்லை. அதனால் தனியாக யாராலும் அதை எதிர்க்க முடியவில்லை. 


கோமயா நமக்கு மிகவும் தொல்லை கொடுக்கிறது, என்றது ஒரு நரி. “ஆம். நாம் முயற்சி எடுத்து இரையைப் பிடித்தால் கோமயா அங்கு வந்து அதைத் தூக்கிக் கொண்டு போகிறது.” என்றது மற்றொரு நரி.


“எனக்கு யோசனை தோன்றுகிறது. நாம் நமக்குள் முறை வைத்து இரையைப் பிடிக்க வேண்டும். ஒரு நரி இரையை உண்ணும் போது மற்ற நரிகள் கோமயாவை இரைக்கு அருகில் வரவிடாமல் தடுக்க வேண்டும். நாம் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்தால் கோமயாவால் நம்மை எதிர்க்க முடியாது.” என்று மூன்றாவதாக ஒரு நரி கூறியது. 



அதற்குப் பிறகு கோமயாவிற்கு இரை கிடைப்பது பெரிய பிரச்சினையாயிற்று. மற்ற நரிகளிடமிருந்து இப்போதெல்லாம் கோமயாவால் இரையைப் பிடுங்கிக் கொள்ள முடியவில்லை. அவை எல்லாம் ஒன்று சேர்ந்து கோமயாவைத் தாக்கி அந்த இடத்தை விட்டுத் துரத்தின. 


மேலும், காட்டின் அந்தப் பகுதியில் அந்தக் கிழட்டு நரியை வேட்டையாடக் கூட அவை அனுமதிக்கவில்லை.


 வருத்தமடைந்த கோமயா அந்த இடத்தை விட்டுச் சென்றது. மிகத் தொலைவிலுள்ள காட்டின் மற்றப் பகுதிகளில் அந்தக் கிழட்டு நரி சுற்றித் திரிந்தது. 


இறுதியில் காட்டின் எல்லைப் பகுதியை அது அடைந்தது. விரைவாக நான் உணவைத் தேடிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன், என்று எண்ணியது.



அங்குமிங்கும் அலைந்த போது போர் முடிந்து ஆளரவமற்ற ஒரு போர்க்களத்தை நரி பார்த்தது. திடீரென்று காதைப் பிளக்கும்படியாக ‘ டம் , டம் ‘ என்று ஓசை கேட்டது. கோமயாவுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. மிக விரைவாகக் காட்டுக்குள் ஓடியது. சிறிது தூரம் சென்ற பிறகு நின்று சுற்று முற்றும் பார்த்தது. இப்போதும் அந்த ஓசை கேட்டது.


ஆனால், அது தொலைவில் இருந்து வந்தது. ” நான் தைரியமாக முன்னே சென்று எங்கிருந்து அந்தப் பயங்கரச் சத்தம் வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும், ” என்று தீர்மானித்தது.


 கோமயா மெதுவாகப் போர்க்களத்திற்குச் சென்றது. அதன் நெஞ்சு முழுவதும் அச்சம் இருந்தாலும் முன்னேறிச் சென்றது. அங்குச் சென்றவுடன் கோமயாவிற்கு நிம்மதி ஏற்பட்டது. ஆளரவமற்ற அந்த இடத்தில் மரத்தினடியில் ஒரு போர் முரசு இருந்தது. காற்று அடிக்கும் போது, மரத்தின் கீழ்க்கிளை அந்த முரசில் மோதும் போது பெரிய ஓசை எழும்பியது என்பதைக் கோமயா புரிந்து கொண்டது. 


போர் முரசுக்கருகில் நிறைய உணவுப் பொருள்கள் சிதறிக் கிடந்ததைக் கண்டு அந்த நரி மிகவும் மகிழ்ச்சியடைந்தது ; வயிறு புடைக்க உணவை உண்டது.


“அந்தச் சத்தத்திற்குப் பயந்து நான் இங்கிருந்து ஓடியிருந்தால் இந்தச் சுவைமிக்க உணவு எனக்குக் கிடைத்திருக்காது, நான் பெரிய முட்டாளாக இருந்திருப்பேன்” என்று தனக்குள் எண்ணிக் கொண்டது நரி. 


நீதி : அச்சத்தை நீக்கு; துணிவைத் துணையாக்கு.





இன்றைய முக்கிய செய்திகள் 


26-03-2024 


 10ம் வகுப்பு தேர்வு இன்று தொடக்கம்: 9.10லட்சம் பேர் எழுதுகின்றனர்...


பெங்களூருவில் காவிரி நீரை அவசியமற்ற நோக்கங்களுக்கான பயன்படுத்தியதற்காக 22 குடும்பங்களுக்கு அபராதம் விதிப்பு...


டெல்லியின் அலிபூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம்...


தங்கம் சவரன் ரூ.50,000ஐ நெருங்கியது: இன்று சவரனுக்கு ரூ.160 உயர்வு ...


பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் - இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை...



Today's Headlines:

26-03-2024


Class 10 Exams Begin Today: 9.10 Lakh Candidates Write... 


22 families fined for non-essential use of Cauvery water in Bengaluru...


Terrible fire at a factory in Delhi's Alipur area: Firefighters struggle to put out the fire... 


Gold Price closes to Rs 50,000: Sovereign up by Rs 160...


Bharat Biotech Information - Tuberculosis vaccine trial in India...


2024ஆம் ஆண்டு - வரையறுக்கப்பட்ட விடுப்பு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்கள் விவரம் - IFHRMS Kalanjiyam செயலியில் தாங்களே அறிந்து Apply செய்யும் முறை...

 


2024ஆம் ஆண்டு - வரையறுக்கப்பட்ட விடுப்பு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்கள் விவரம் - RH & Public Holiday Details - IFHRMS Kalanjiyam செயலியில் தாங்களே அறிந்து Apply செய்யும் முறை...


Procedure to Know & Apply RH & Public Holidays in Kalanjiyam App...



RH Leave தகவல்.



>>> Click Here to Download the Procedure to Know & Apply RH & Public Holidays in Kalanjiyam App...



>>> 2024ஆம் ஆண்டு - வரையறுக்கப்பட்ட விடுப்பு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்கள் விவரம் - IFHRMS Kalanjiyam செயலியில் வெளியீடு...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

12-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-12-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் :சூது குற...