கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - மதுரை பில்லர் மைய பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டிய தலைமை ஆசிரியர்கள் பெயர்ப்பட்டியல் (மாவட்டம் மற்றும் ஒன்றிய வாரியாக) - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 14257/ கே2/2023, நாள்: 29-09-2023 (Skill Development Training for Primary and Middle School HeadMasters - List of HeadMasters to attend Madurai Pillar Center Training (District & Block wise) - Director of Elementary Education Proceedings Rc.No: 14257/ K2/2023, Dated: 29-09-2023)...

 05-10-2023 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - மதுரை பில்லர் மைய பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டிய தலைமை ஆசிரியர்கள் பெயர்ப்பட்டியல் (மாவட்டம் மற்றும் ஒன்றிய வாரியாக) - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 14257/ கே2/2023, நாள்: 29-09-2023 (Skill Development Training for Primary and Middle School HeadMasters - List of HeadMasters to attend Madurai Pillar Center Training (District & Block wise) - Director of Elementary Education Proceedings Rc.No: 14257/ K2/2023, Dated: 29-09-2023)...

10ஆம் வகுப்பு படித்து மூன்று ஆண்டுகள் பட்டயப்படிப்பு (Diploma - 10+3+3) / இரண்டாண்டுகள் தொழில்நுட்பப் பயிற்சி (ITI - 10+2+3) / ஆசிரியர் பட்டயப் படிப்பு (D.T.Ed - 11+2+3) மற்றும் Lateral Entry (10+3+2) படித்தால் 12ஆம் வகுப்புக்கு சமம் என்பதற்கான அரசாணை (நிலை) எண்: 242, நாள்: 18-12-2012 (Equivalence - Ordinance G.O.(Ms) No: 242, Dated: 18-12-2012 for equivalent to 12th standard after 10th standard three years diploma course / two years technical training / teaching diploma course)...

SNA கணக்கிலிருந்து பணம் அனுப்புவதற்கு முன் உள்ளீடு செய்ய வேண்டிய COMPONENTS CODE FOR GRANTS...

SNA கணக்கிலிருந்து பணம் அனுப்புவதற்கு முன் உள்ளீடு செய்ய வேண்டிய COMPONENTS CODE FOR GRANTS...

SNA COMPONENTS CODE FOR GRANTS

தொடக்க , நடுநிலைப் பள்ளிகளுக்கு

COMPOSITE GRANT ELEMENTARY

COMPONENTS CODE-F. 01.18

YOUTH AND ECO CLUB ELEMENTARY

COMPONENTS CODE -F. 01.12.01

உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளுக்கு

COMPOSITE GRANT SECONDARY

COMPONENTS CODE -F. 03.12

YOUTH AND ECO CLUB SECONDARY

COMPONENTS CODE-  F. 03.06

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சி.இ.ஓவும், நிர்வாக இயக்குநருமான எஸ்.கிருஷ்ணன் ராஜினாமா (Tamil Nadu Mercantile Bank CEO and Managing Director S Krishnan Resigns)...

 தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சி.இ.ஓவும், நிர்வாக இயக்குநருமான எஸ்.கிருஷ்ணன் ராஜினாமா (Tamil Nadu Mercantile Bank CEO and Managing Director S Krishnan Resigns)...

தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அறிவிப்பு

சமீபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் கணக்கில் ₹9000 கோடி செலுத்தப்பட்டு, திரும்ப பெறப்பட்டது சர்சையான நிலையில் ராஜினாமா.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் மாதம் 27-ந்தேதி வெளியீடு (Draft Electoral Roll of Tamil Nadu to be released on October 27)...

தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் மாதம் 27-ந்தேதி வெளியீடு (Draft Electoral Roll of Tamil Nadu to be released on October 27)...

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

 இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜனவரி 5-ந் தேதி மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறுகிறது. அந்த காலகட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வு செய்யப்படும்.

அதன் பின்னர் வரும் ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கும் நாளன்று, சரிபார்ப்புக்கு வசதியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் வரும் அக்டோபர் 17-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்றே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:-

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதியாக அறிவிக்கப்பட்ட வரும் அக்டோபர் 17-ந் தேதிக்கு பதிலாக அக்டோபர் 27-ந் தேதி வெளியிடப்படும். இதற்கான அட்டவணையை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் அன்றைய தினம் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளும் தொடங்கும்.

அதன்படி, அக்டோபர் 27-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், டிசம்பர் 26-ந் தேதி வரை பரிசீலிக்கப்படும். அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜனவரி 5-ந் தேதி மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியல் திருத்த காலகட்டத்தில் ஆதார் இணைப்புக்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். பல மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகங்கள் ஆதார் இணைப்புக்கான முகாம்களை நடத்துகின்றனர். ஆனால் நகர்ப்புறங்களில் ஆதார் இணைப்பு குறைவாக உள்ளது.

இவ்வாறு சத்யபிரதா சாகு  கூறினார்.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கூட்டுறவு சங்கம், வங்கிகளின் உறுப்பினர்கள் அனைவரும் ஆதார்எண், குடும்ப அட்டை எண்ணை சமர்ப்பிக்க இணைப் பதிவாளர் அறிவுறுத்தல் (Joint Registrar instructs all members of Co-operative Societies, Banks to submit Aadhaar Number, Family Card Number)...

அக்டோபர் 2023 மாத பள்ளி மேலாண்மை குழு (SMC) கூட்டம் தேதி மாற்றம் (October 2023 School Management Committee (SMC) meeting date change)...

 அக்டோபர் 2023 மாத பள்ளி மேலாண்மை குழு (SMC) கூட்டம் தேதி மாற்றம் (October 2023 School Management Committee (SMC) meeting date change)...

*SMC கூட்டம் தேதி மாற்றம்*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

அனைவருக்கும் வணக்கம். 

வருகிற 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் ப.மே.கு கூட்டம் தொடக்கப் பள்ளிகள் தவிர மற்ற அனைத்து நிலைப் பள்ளிகளிலும் (MS/HS/HSS) மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகளில் உள்ளபடி 6-10-2023 முதல் வெள்ளிக் கிழமை நடத்தப்பட வேண்டும் எனவும், 

*தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் (1-5 வகுப்புகள்) எண்ணும் எழுத்தும் பயிற்சி காரணமாக ப.மே.கு SMC கூட்டமானது இரண்டாவது வெள்ளிக்கிழமை 13-10-2023 அன்று நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.*

இத்தகவலை அனைத்து தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூட்டத் தேதி மாறுதலுக்கான செயல்முறைக் கடிதம் இயக்குநரின் ஒப்புதலோடு அனுப்பப்படும் என்பதும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.09.2023 - School Morning Prayer Activities...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.09.2023 - School Morning Prayer Activities...

திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் :268

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயி ரெல்லாந் தொழும்.

விளக்கம்:

தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் அவனுடைய பெருமையை உணர்ந்து தொழும்.

பழமொழி :

Delay of justice is injustice

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமமாகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.

 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி 

பொன்மொழி :

சகிப்புத் தன்மையால் தான் மகான்கள் நிம்மதிப் பெறுகின்றனர்.துன்பம் வரும் காலத்தில் அமைதியாக இருக்க பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்...

-------மார்க் ட்வைன்

பொது அறிவு :

1. பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?

விடை: நாக்கு

 2. சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய பிராணி எது?

விடை: கழுகு 

English words & meanings :

 mickle - a large amount மிகப்பெரிய அளவு 

grunting - make a short sound in pain or anger வலியால் உறுமுதல், முணுமுணுத்தல்.

ஆரோக்ய வாழ்வு : 

கொண்டைக்கடலை: இதில் உள்ள குறைந்த க்ளைசெமிக் மற்றும் ஸ்டார்ச் அமிலோஸின் இருப்பு காரணமாக உடல் கொண்டைக் கடலையில் உள்ள சத்தை உறிஞ்சிகிறது. இதனால் இரத்தத்தில் சமநிலை கட்டுப்படுத்தப்படுகிறது.

செப்டம்பர் 27

உலக சுற்றுலா நாள்

உலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

நீதிக்கதை

 ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் சலவை தொழிலாளி, இன்னொருவர் மண்பானைகள் செய்யும் குயவர். இரண்டு பேருமே அரசரிடம் வேலை பார்த்து வந்தனர்.

ஒரு நாள் இரண்டு பேருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அவர்கள் தங்கள் குறைகளை தாங்களே தீர்த்துக்  கொள்ளாமல் அரசரிடம் ஒருவர் பற்றி ஒருவர் குறை கூறிக்கொண்டு இருந்தனர்.மண்பானை செய்யும் குயவர், சலவை தொழிலாளியை அரசரிடம் வசமாக சிக்க வைக்க வேண்டும் என்று எண்ணி அரசரைப் பார்த்து, “அரசே, நமது பட்டத்து யானை கருப்பாக இருக்கிறது. யானையை சலவை தொழிலாளியிடம் கொடுத்து வெளுக்க செய்ய சொல்லுங்கள்” என்றார். அரசர் மிகப்பெரிய முட்டாளாவார். அவர் எதைப் பற்றியும் சிந்திக்காமல் சலவை தொழிலாளியை கூப்பிட்டு யானையை வெளுத்து வரும்படி கூறினார். உடனே சலவை தொழிலாளி அரசரைப் பார்த்து, “அரசே, யானையை வெளுத்து விடலாம் யானையை வேக வைக்கும் அளவிற்கு பெரிய பானை ஒன்றை குயவரை செய்து தர சொல்லுங்கள்” என்றார்.அரசர் குயவரை கூப்பிட்டு, “யானையை வேக வைக்க பெரிய பானையை செய்து கொடு” என்று ஆணையிட்டார். குயவர் திரு திரு என விழித்தார்.

இறுதியில் இருவரும் சந்தித்தனர். உன் மேல் நானும், என்மேல் நீயும் குறை கூறி மாட்டிக் கொண்டோம். இதனால் நம் இருவருக்குமே துன்பம். இனிமேல் இதுபோல் நடக்கக்கூடாது. நம் தவறுகளை நாமே திருத்திக் கொள்வோம் என்றார்கள். இருவரும் முன்பு போலவே நண்பர்கள் ஆனார்கள். 

நீதி : ஒருவர் மீது ஒருவர் குறை கூறி வம்பில் மாட்டிக்கொண்டு விழிப்பதை விட, ஒருவர் மீது மற்றொருவர் குறை கூறுவதை விட்டு அவரவர் குறையை அவரவர் திருத்திக் கொண்டு வாழ்வது சிறந்ததாகும்.

இன்றைய செய்திகள்

27.09.2023

*தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

* தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கை 2023 முதலமைச்சர் 

மு. க. ஸ்டாலின் வெளியிட்டார்.

* தமிழகம் முழுவதும் வருகிற 1ஆம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் - அமைச்சர் மா சுப்பிரமணியன்.

*37 மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 1000 புதிய வகுப்பறைகள் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

* ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 :

ஆண்கள் ஹாக்கியில் இந்தியா 16- 1 என்ற கோடு கணக்கில் அபார வெற்றி பெற்றது.

*ஆசிய விளையாட்டுப் போட்டி 2023: படகு போட்டியில் இந்தியாவின் 

நேஹா தாகூர் வெள்ளி பதக்கம் வென்றார்.

Today's Headlines

*Chance of thunder and lightning rains in Tamil Nadu- Chennai Meteorological Department warns.

 * Tamil Nadu Tourism Policy 2023 published by Chief Minister

 M. K. Stalin.

 * Special fever camp at 1000 places across Tamil Nadu on 1st October- Minister Ma Subramanian.

 * The Chief Minister inaugurated 1000 new classrooms in panchayat union schools in 37 districts.

 * Asian Games 2023 :

 In men's hockey, India won by a score of 16-1.

 *Asian Games 2023:  In rowing

 Neha Tagore of India won the silver medal.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாவட்டக் கல்வி அலுவலர் பணி நிலையில் இருந்து முதன்மைக்கல்வி அலுவலர் (CEO Promotion) மற்றும் அதற்கீடான பணி இடத்திற்கு தற்காலிக பதவி உயர்வு வழங்கி அரசாணை (நிலை) எண்: 236, நாள்: 26-09-2023 வெளியீடு (G.O. (Ms) No: 236, Dated: 26-09-2023 - Provisional promotion from the post of District Education Officer to Chief Education Officer and related posts)...

>>> Click Here to Download G.O. (Ms) No: 236, Dated: 26-09-2023...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

செப்டம்பர் 28ஆம் தேதி முதல் பேருந்துகளில் 2000 நோட்டுகளை பயணிகளிடமிருந்து பெற வேண்டாம் - போக்குவரத்துத் துறை உத்தரவு (Don't get Rs 2000 notes from passengers in buses from September 28 - Transport Department orders)...

தேர்தல் பணி படிவத்தை நிரப்புவதற்கு, சட்டமன்றத் தொகுதி எண், பாகம் எண், வரிசை எண் போன்ற வாக்காளரின் விவரங்களை ஆன்லைனில் பார்ப்பது எப்படி? (How to view Details of Voter like Assembly Constituency No., Part No., Sl.No. in Online to fill in Election Duty Form)...

How to view 

Assembly Constituency No.,

Part No.

Sl.No.

Online

for Election Duty Form.

முதலில் 

வாக்காளர் அடையாள அட்டை எண் 

EPIC Number 

குறித்துக் கொள்ளவும்

Then 

Just click this link

👇🏻👇🏻👇🏻

https://electoralsearch.eci.gov.in/

Tap 

Search by EPIC

Select

Language

Enter 

EPIC Number

Select 

State

Enter 

Captcha code

உங்கள் Details வரும்

அதன் வலது புறத்தில் கடைசியில்

View Details 

Click செய்யவும்.

உங்களுக்கு தேவையான 

🟢சட்டமன்ற தொகுதி எண்

AC No.

🟢 பகுதி எண்

Part No.

🟢வரிசை எண்

Sl No.

ஆகிய விவரங்கள் கிடைக்கும்.

இதனை Print எடுத்துக் கொள்ளலாம் அல்லது PDF File ஆக Download செய்து கொள்ளலாம்...

மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளை தவிர்க்க அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவிற்கு ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் (Director of School Education proceedings to provide suggestions and feedback to a one-man committee set up to avoid violence arising out of caste and ethnic sentiments among students)...

>>> Click Here to Download DSE Proceedings & One Man Committee Letters ...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை (AADHAR SEEDING) உறுதி செய்யும் வழிமுறை (Process to ensure that Aadhaar number is linked with the student's bank account)...

மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை (AADHAR SEEDING) கீழ்கண்ட வழிமுறையை பயன்படுத்தி உறுதி செய்து கொள்ளலாம்...

 மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை (AADHAR SEEDING) உறுதி செய்யும் வழிமுறை (Process to ensure that Aadhaar number is linked with the student's bank account)...

>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஊதிய முரண்பாடு அநீதி : இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதி வழங்க வேண்டும் - மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் (Salary Discrepancy Injustice: Justice should be given to Secondary Grade Teachers - Dr. S.Ramadoss)...

தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றும் இரு பிரிவினருக்கு இடையிலான ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து அரசுக்கும், ஆசிரியர் சங்கத்தினருக்கும்  இடையே நடைபெற்ற பேச்சுகள் தோல்வியடைந்திருக்கின்றன. நீதி கிடைக்காத ஆசிரியர்கள் 28-ஆம் நாள் முதல் போராட்டம் அறிவித்துள்ளனர். வருங்காலத் தலைமுறையினருக்கு பாடம் நடத்த வேண்டிய ஆசிரியர்களை சாலையில் இறங்கி போராட்டம் நடத்தும் கட்டாயத்திற்கு தள்ளுவதை ஏற்க முடியாது.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற முழக்கத்துடன் ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என வலியுறுத்தி வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை மிகவும் நியாயமானது.  2009-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ஆம்  தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் ஊதிய முரண்பாடு நிலவுகிறது. 31.05.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9,300 அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. ஆனால், 01.06.2009க்கு பிறகு  நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 மட்டுமே அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. அப்போது அடிப்படை ஊதியத்தில் ரூ.4100 என்ற வேறுபாட்டில் தொடங்கிய ஊதிய முரண்பாடு, இப்போது மொத்த ஊதியத்தில் ரூ.16,000க்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது. ஒரே பணியை செய்யும் இடைநிலை ஆசிரியர்களிடையே இந்த அளவு ஊதிய முரண்பாடு நிலவுவது நியாயமற்றது.

2009-ஆம் ஆண்டில் தொடங்கி 14 ஆண்டுகளாக நீடித்து வரும் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அவர்களுக்கும், அரசுக்கு இடையில் பலமுறை பேச்சு நடத்தியும் எந்தத் தீர்வும் காணப்படாதது மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த ஆண்டு திசம்பர் மாதம் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் 5 நாட்களுக்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து அவர்களுடன்  பேச்சு நடத்திய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆசிரியர்களின்  கோரிக்கையை ஏற்பது குறித்த முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்தார். ஆனால், அதன்பின் 9 மாதங்களாகியும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படவில்லை.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைவது சாத்தியமற்ற ஒன்றல்ல; எளிதானதே. 2009-ஆம் ஆண்டு மே மாதம் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ரூ.5200 மட்டுமே  அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது. அதை ஏற்காத ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் பணிக்கான அடிப்படைக் கல்வித் தகுதி பட்டயப் படிப்பு என்பதையும், ரூ.5200  என்பது பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி கொண்ட பணிக்கானது என்பதையும் அரசுக்கு சுட்டிக்காட்டினர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கான அடிப்படை ஊதியம் 1.80 மடங்கு உயர்த்தப்பட்டது. 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு இதே நடைமுறையை கடைபிடிக்க  அரசு தவறி விட்டது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம்.

இடைநிலை ஆசிரியர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி கல்வியியல் பட்டயப்படிப்பு (D.T.Ed) ஆகும். பட்டயப்படிப்பை குறைந்தபட்ச கல்வித்தகுதியாகக் கொண்ட அனைத்து பணிகளுக்கும் ரூ.9300 அடிப்படை ஊதியம் வழங்கப்படும் போது இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பிரிவினருக்கு மட்டும் அந்த அளவு ஊதியத்தை மறுப்பது நியாயமற்றது. இந்த உண்மையையும், நியாயத்தையும் உணர்ந்து கொண்டு   2009-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் ரூ.9300 அடிப்படை  ஊதியம் வழங்கப்பட்டால் 14 ஆண்டு கால சிக்கலுக்கு தமிழக அரசால் தீர்வு கண்டுவிட முடியும்.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும் என்பதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதே கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு திசம்பர் 25, 26 ஆகிய நாட்களில் சென்னையில் போராட்டம் நடத்திய போது, அவர்களை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த  மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை நன்கு உணர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உடனடியாக  அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் அவர்களின் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கி சிக்கலைத் தீர்க்க வேண்டும்.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

முடியை வெட்டிவர சொன்ன ஆசிரியர் - மாணவன் தற்கொலை - பெற்றோர், உறவினர்கள் சாலைமறியல் - கொலை வழக்கு பதிவு செய்ய கோரிக்கை - பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை (Teacher asked to cut hair - student commits suicide - parents, relatives block road - request to register case of murder - district education officer investigates at school)...

புதுக்கோட்டையில், முடியை வெட்டிவரசொல்லி ஆசிரியரால் அனுப்பப்பட்ட பிளஸ் 2 மாணவன் தற்கொலை.

மாணவரின் பெற்றோர், உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முன்பு சாலைமறியல்.

ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை.

தற்போது பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை.

புதுக்கோட்டையில் முடி வெட்ட சொன்னதால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் மற்றும் வகுப்பு ஆசிரியர் பாரதி சஸ்பெண்ட் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

சந்தேக மரணம் என போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

தமிழ்நாட்டில் 4 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (G.O.Rt.No.3980, Dated: 25-09-2023 - IAS Officers Transfer) வெளியீடு...

 தமிழ்நாட்டில் 4 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (G.O.Rt.No.3980, Dated: 25-09-2023 - IAS Officers Transfer) வெளியீடு...

>>> Click Here to Download G.O.Rt.No.3980, Dated: 25-09-2023...

சுரங்கத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி ஐஏஎஸ்;

தொழில்துறை ஆணையராக எல். நிர்மல்ராஜ் ஐஏஎஸ்;

சிறு, குறு, நடுத்தர தொழில்துறை செயலாளராக அர்ச்சனா பட்நாயக்  ஐஏஎஸ், நியமனம்!

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் பின்பற்ற வேண்டிய பணிகள் மற்றும் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 070833/ சி5/ இ4/ 2019, நாள்: 23-09-2020 (Proceedings of the Director of School Education regarding duties to be followed and records to be maintained by Physical Education Teachers / Directors of Physical Education in Schools Rc.No: 070833/ C5/ E4/ 2019, Dated: 23-09-2020)...

>>> Click Here to Download DSE Proceedings...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு, அக்டோபர் 2023 - தேர்வுக் கட்டணம் செலுத்துச் சீட்டு E-Challanல் செலுத்துதல் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் ந.க.எண். 012929 /டி (3) / 2023, நாள்: 22.09.2023 (TTS Exam 2023 - Offline Payment Instructions by DGE)...

>>> Click Here to Download DGE Instructions...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.09.2023 - School Morning Prayer Activities...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.09.2023 - School Morning Prayer Activities...

திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் :267

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

விளக்கம்:

நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.

பழமொழி :

Delay is dangerous

தாமதம் தாழ்வுக்கு ஏதுவாகும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.

 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி.

பொன்மொழி :

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும் கட்டுப்பாடும் உறுதியும் தியாக உணர்வும் வேண்டும். தந்தை பெரியார் 

பொது அறிவு :

1. அதிகமான நாடுகளை கொண்ட கண்டம் எது?

விடை: ஆப்பிரிக்கா 

2. ஒரு தலைமுறை சுமார் எத்தனை ஆண்டுகளை குறிக்கும்?

விடை: 33

English words & meanings :

 purgation- cleansing தூய்மையாக்கல். 

nervation- arrangement of nerves in leaf இலை நரம்பு அமைப்பு

ஆரோக்ய வாழ்வு : 

 கொண்டைக்கடலை: நீரிழிவு நோய் என்பது இங்கு பலருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் அதன் ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்தவும் சுண்டல் உதவுகிறது. 

செப்டம்பர் 26

மன்மோகன் சிங் அவர்களின் பிறந்தநாள்

மன்மோகன் சிங் (Manmohan Singh, பஞ்சாபி: ਮਨਮੋਹਨ ਸਿੰਘ, பிறப்பு: செப்டம்பர் 26, 1932) இந்தியாவின் 14 ஆவது, பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார்

1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது.

நீதிக்கதை

 The Fox And The Crab நரியும் நண்டும்  கதை :- ஒரு பெரிய கடல்ல ஒரு நண்டு வாழ்ந்துகிட்டு வந்துச்சு.

ஒரு நாள் அந்த நண்டுக்கு ரொம்ப போர் அடிச்சுச்சு ,உடனே இந்த உலகத்தை சுத்திப்பார்க்க போறேன்னு சொல்லிட்டு தண்ணிக்கு வெளிய வந்துச்சு. வெளி உலக ரசித்தது  நண்டு. கொஞ்ச தூரம் நடந்து பாக்கலாம்னு , புல்வெளியில நடக்க ஆரம்பிச்சுச்சு.அப்பத்தான் ஒரு நரி அந்த நண்ட பார்த்துச்சு , உடனே அந்த நண்ட பிடிச்சி திங்க நினச்சுச்சு அந்த நரி.ஆனா அந்த நண்டு ரொம்ப சுறுசுறுப்பா அங்குட்டும் இங்குட்டும் ஓடிக்கிட்டே இருந்துச்சு ,அந்த நரியோட விளையாடி என்ன பிடி பாப்போம்னு சொல்லி அந்த நரியவே கோபப்பட வச்சுச்சு.

ஆனா கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அந்த நண்டு ரொம்ப சோர்வாக ஆரம்பிச்சுச்சு ,அப்பத்தான் அந்த நரி சொல்லுச்சு ,இவ்வளவு நேரம் உன்ன ஆட விட்டது எதுக்கு தெரியுமா ,நீ இப்ப உன்னோட இடத்துல இல்ல ,அதனால உனக்கு நீ சாப்புடற உணவு இங்க கிடைக்காதுனு எனக்கு தெரியும் அதனால தான்உணவு கிடைக்காம இப்ப நீ சோர்வாகிட்ட பார்த்தியா ,இப்ப என்கிட்ட இருந்து ஓடு பார்க்கலாம்னு சொல்லுச்சு நரி ,ஆனா ரொம்ப சோர்வான நண்டால நடக்க கூட முடியல,

 இப்ப அந்த நண்ட தின்னுச்சு . தேவையில்லாத இடத்துக்கு வந்து ,தேவையில்லாத வேலை செஞ்ச தனக்கு இது நல்ல தண்டனைத்தானு நினச்சுகிட்டே அந்த நரிக்கு உணவா மாறி செத்து போச்சு அந்த நண்டு.

இன்றைய செய்திகள்

26.09.2023

*கேரளாவில் புதிதாக நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை -  கோழிக்கோடு இயல்பு நிலைக்கு திரும்பியது. 

*சென்னை திருநெல்வேலிக்கு ஆம்னி பஸ்சை விட மூன்று மணி நேரம் முன்கூட்டியே செல்லும் வந்தே பாரத் ரயில்.

* ஆந்திர 

தடுப்பணைகள் நிரம்பியது: கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு.

* இலவச சிகிச்சை அளிப்பதில் கேரளா மாநிலம் முன்னணி: கேரளாவுக்கு மத்திய அரசின் சார்பில் ஆரோக்கிய மந்தன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அந்த விருதை கேரள மாநிலம் வென்றுள்ளது.

* ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி :

19 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.

* ஆசிய விளையாட்டு 2023 : 

துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் பிரதாப் சிங் தோமர் வெண்கலம் வென்றார்.

Today's Headlines

*No new cases of Nipah virus in Kerala - Kozhikode is back to normal.

 *Vande Bharat train between Chennai and  Tirunelveli reaches it's destination three hours earlier than omni bus.

 *Andhra Pradesh

 Barrages full: Heavy rains cause flooding in Palaru.

 * Kerala state is leading in providing free treatment: Kerala has been receiving Arogya Manthan award by the central government.  Kerala state  won the award this year too.

 * Asian Games Women's Cricket Final:

 India won by 19 runs.

 * Asian Games 2023 :

 India's Pratap Singh Tomar won bronze in shooting.

25-09-2023 அன்று நடைபெற்ற டிட்டோஜாக் பொதுக்குழுக் கூட்டத் தீர்மானங்கள் (TETOJAC General Body Meeting Resolutions held on 25-09-2023)...

 டிட்டோஜாக் உயர் மட்டக் குழுவின் முடிவின் படி பள்ளிக்கல்வித்துறை DPI வளாகத்தில் (13-10-2023) வெள்ளிக்கிழமை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது...

>>> 25-09-2023 அன்று நடைபெற்ற டிட்டோஜாக் பொதுக்குழுக் கூட்டத் தீர்மானங்கள் (TETOJAC General Body Meeting Resolutions held on 25-09-2023)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

1 - 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவம் விடுமுறை முடிந்து இரண்டாம் பருவம் பள்ளி திறக்கும் தேதிகள் அறிவிப்பு - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 021651/ ஜெ2 / 2023, நாள் : 25.09.2023 (Notification of Term 1 Holidays and School Opening Dates for 2nd Term - Director of Elementary Education Proceedings Rc.No. 021651/J2/2023, Dated : 25.09.2023)....

>>> தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

1 முதல் 5ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறும் நாட்கள் மாற்றம் - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனரின் இணை செயல்முறைகள் (SCERT & DEE Joint Proceedings) ந. க. எண்: 2411/ எஃப்2/ 2011, நாள்: 25-09-2023 (Change of days of Ennum Ezhuthum training for teachers teaching classes 1 to 5 - Joint Proceedings of State Council of Educational Research and Training and Director of Elementary Education Rc. No: 2411/ F2/ 2011, Dated: 25-09-2023)...

>>> Click Here to Download SCERT & DEE Directors Joint Proceedings...

>>> பயிற்சி கால அட்டவணை (Training Schedule)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதி மீண்டும் மாற்றம் - 1 முதல் 3ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு  03.10.2023 & 04.10.2023 ஆகிய தேதிகளிலும் 4 & 5ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 05.10.2023 & 06.10.2023 தேதிகளிலும் பயிற்சி நடைபெறும் என SCERT இயக்குநர் கடிதம்...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.09.2023 - School Morning Prayer Activities...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.09.2023 - School Morning Prayer Activities...

திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் :266

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்

அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

விளக்கம்:

தவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர்.

பழமொழி :

Debt is the worst poverty

ஏழ்மை கடனினும் மேன்மை.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.

 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி 

பொன்மொழி :

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

-பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயர்நாடி. தந்தை பெரியார் 

பொது அறிவு :

1. பழங்காலத்தில் “சேரன் தீவு” என அழைக்கப்பட்ட நாடு எது?

விடை: இலங்கை 

2. “ஜனநாயகம்” என்ற அரசியல் தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்?

விடை: ஆப்ரகாம் லிங்கன் 

English words & meanings :

 gimmickry - a profusion of gimmicks. மந்திர தந்திரங்களை கையாளுதல்; grenade - கையெறி குண்டு

ஆரோக்ய வாழ்வு : 

கொண்டைக்கடலை:  ஃபைபர் மற்றும் இரும்பு சத்துக்கள் இதயத்தை தாண்டி ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும். இதனால் இதய அபாயங்களை குறைப்பதில் கொண்டைக் கடலை முக்கிய பங்கு வகிக்கிறது.

நீதிக்கதை

 புத்திசாலி புலவரும் நெல்மணிகளும் 

அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் ஒரு திறமை வாய்ந்த புலவர் ஒருவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.சில மாதங்களுக்கு பிறகு,அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது மேலும் இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வதென்று புலவர் யோசித்துக்கொண்டு இருந்தார். புலவரின் நிலையைப் பார்த்த அந்த கிராமத்தின் தலைவர் புலவரிடம் சென்று, "நம் நாட்டின் அரசரை புகழ்ந்து பாடும் புலவருக்கு கேட்கும் பரிசினை கொடுக்கிறார். அந்த பரிசினைப் பெறுவதற்கு நீயும் முயற்சிக்கலமே" என்று கூறினார்.

இது சரியான தருணம் என்று கருதிய புலவரும் மன்னரை பார்க்க அரண்மனை நோக்கி பயணித்தார்.மன்னரைப் புகழ்ந்து பாடுவதற்காக சென்ற புலவர் அரண்மனையை அடைந்தார். மன்னரைப் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் புகழ்ந்து பாடினார்புகழ்ந்து பாடிய புலவரின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்த அரசன் புலவனிடம், "உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்" என கூறினார்.

புலவரும் இதுபோன்ற வறுமை எப்பொழுதும் என் குடும்பத்தை பாதிக்கக் கூடாதென்று யோசித்தார். பின்னர் அரண்மனையில் ஒரு சதுரங்க

பலகை இருப்பதைப் பார்த்தார். "அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் அங்கே சதுரங்க பலகை ஒன்று இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு

நெல்மணியை வைத்த பின் ஓவ்வொரு கட்டத்திற்கும் நெல்மணிகளை இரட்டிப்பாகி தர வேண்டும் என்றார்.மன்னர் புலவரைப்பார்த்து, "நெல்மணிகள் போதுமா? தங்கம், வைரம் போன்றவிலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா?" என்று கேட்டார்.

புலவரோ "அரசே எனக்கு நெல்மணிகள் மட்டும்

போதும்" என்று கூறிவிட்டார்.

பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என கூறிவிட்டார்.பின்னர் அரசர் அரண்மனை சேவகர்களிடம், "புலவர் கேட்ட நெல்மணிகளை எடுத்து

வாருங்கள்" என்று கட்டளையிட்டார். சேவகர்களும் சதுரங்கப் பலகையில் புலவர் கூறியபடியே நெல்மணிகளை சதுரங்க பலகையின் மேல் அடுக்கினர்.

1ம் கட்டத்தில் 1, 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 4, 4ம் கட்டத்தில் 8 என நெல்மணிகளை அடுக்கினர்10ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 512 என ஆனது.

20ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 5,24,288 என அதிகரித்தது.பாதி தூரம் அதாவது 32வது கட்டத்தை அடைந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 214,74,83,648 ஆக பெருகியது.

விரைவில் நெல்மணிகளின்

எண்ணிக்கை கோடனகோடிகளை தாண்டியது. இதனால் அரசன் தன் ராஜ்ஜியம் முழுவதையும் அந்த புத்திசாலி புலவரிடம்

இழக்கும் நிலை ஏற்பட்டது.இந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு என்னைவிட இந்த புலவருக்கு அதிக திறமை உள்ளது என்று சபை முன் கூறிவிட்டு அரசர் பதவியை புலவரிடம்ஒப்படைத்தார்.

நீதி: கூட்டுப்பலனின் பெருக்கும் சக்தியை எப்பொழுதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

இன்றைய செய்திகள்

25.09.2023

*வந்தே பாரத் ரயில் நெல்லைக்கு கிடைத்த ஒரு வரப் பிரசாதம் தமிழிசை சௌந்தர்ராஜன்.

*தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூபாய் 6 ஆயிரத்து 80 கோடி ஒதுக்கீடு - கவர்னர் ஆர். என்.ரவி பெருமிதம்.

*லேண்டர் ரோவர் செயல்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது- இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்.

*பொதுமக்கள் புகார் தெரிவிக்க 'ஊராட்சி மணி' திட்டம் விரைவில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

*2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சதம் அடித்து அசத்திய ஸ்ரேயஸ் ஐயர், சுப்மன் கில்.

*ஆசிய விளையாட்டுப் போட்டி 2023: இன்று 5 பதக்கங்களை வென்றது இந்தியா!

துப்பாக்கி சுடுதல்: ரமிதா 2 பதக்கங்கள். துடுப்பு படகு போட்டி: 3 பதக்கங்கள்.

Today's Headlines

*Vande Bharat train was a boon offering to Nellai said Tamilisai Soundarrajan.

 * Allotment of 6 thousand 80 crore rupees for Tamil Railway projects - Governor R.  N. Ravi .

 *Lander rover is likely to become operational- ISRO chief SOMNATH's information.

 *Chief Minister M.K.Stalin will soon start the 'Municipal Bell' program to report complaints.

 * Shreyas Iyer, Subman Gill who scored a super century in the 2nd ODI.

 *Asian Games 2023: India won 5 medals today!

 Shooting: Ramitha 2 medals.  Rowing competition: 3 medals.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Thirukkural quiz competition - Top 9 winners in Tirupur district

 இன்று நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் பங்கேற்று திருப்பூர் மாவட்டத்தில் முதல் 9 இடங்கள் பிடித்தவர்கள் விவரங்கள் Details of the ...