கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders



 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு


₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders


 கர்நாடகா  தனியார் பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் வருமானம் இழந்ததாக வழக்கு தொடர்ந்த தீபிகா என்பவருக்கு, ₹1.1 லட்சம் இழப்பீடாக வழங்குமாறு பேருந்து நிறுவனத்திற்கு தக்ஷினா கன்னடா மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு


2022 ஆகஸ்டில் பூச்சி கடித்ததால் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனதுடன், மருத்துவமனை செலவு, மன உளைச்சல் ஆகியவற்றை எதிர்கொண்டதாக தீபிகா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


தனியார் பேருந்தில் மூட்டை பூச்சி தொல்லை… பயணி தொடர்ந்த வழக்கில் மொத்தம் ரூ. 1.29 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு


இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த தீபிகா நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார். விசாரணையில் பஸ் நடத்துனர், பேருந்தை பட்டியலில் சேர்த்த ஆப் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.


தனியார் பேருந்தில் பயணம் செய்தபோது மூட்டை பூச்சிகள் கடித்ததாக கூறி,பயணி தொடர்ந்த வழக்கில் அவருக்கு ரூ. 1.11 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கர்நாடகாவில் 2022 ஆகஸ்ட் 16 ஆம் தேதியன்று தீபிகா என்பவர் ஸ்லீப்பர் வகுப்பில் தனியார் பேருந்தில் மங்களூருவிலிருந்து பெங்களூருவுக்கு சென்றுள்ளார் சென்றுள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்  ராஜா – ராணி என்ற தொடரில் கலந்து கொள்வதற்காக  தீபிகாவும் அவரது கணவர் சோபராஜ் என்பவரும் தனியார் மொபைல் ஆப்-ல் டிக்கெட் புக் செய்து பயணம் மேற்கொண்டனர்.


அப்போது இருக்கையில் இருந்த மூட்டை பூச்சிகள் தீபிகாவை கடித்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், ராஜா ராணி நிகழ்ச்சியில் அவரால் பங்கேற்க முடியவில்லை.


இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த தீபிகா நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார். விசாரணையில் பஸ் நடத்துனர், பேருந்தை பட்டியலில் சேர்த்த ஆப் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.


அபராதமாக ரூ. 18,650, டிக்கெட் கட்டணம் ரூ. 850, வழக்கு தொடர்ந்ததற்கான செலவு உள்பட மொத்தம் ரூ. 1.29 லட்சத்தை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



TRUST Exam Date Announcement

 


தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு தேதி அறிவிப்பு


Tamil Nadu Rural Students Talent Serach Exam Date Announcement 



>>> செய்திக் குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






03-01-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-01-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்:மருந்து

குறள் எண்:943

அற்றால் அளவுஅறிந்து உண்க; அஃதுடம்பு
பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு.

பொருள்:முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும்; அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.


பழமொழி :
Beauty is a short-lived reign.

அழகின் ஆட்சி அற்ப காலமே.


இரண்டொழுக்க பண்புகள் : 

   *புத்தாண்டில் புதிதாக ஒரு நல்ல விஷயத்தை  கற்றுக்கொள்ள உறுதி ஏற்பேன். 

*காலம் தவறாமை , கடமைகளை சரிவர செய்தல் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றுவேன்.


பொன்மொழி :

சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள் - பெர்னாட்ஷா


பொது அறிவு :

1. கடலில் கலக்காத பெரிய நதி எது?

விடை : யமுனை.

2. இந்தியாவில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் யார்?

விடை : அன்னை தெரசா


English words & meanings :

Basketball      -     கூடைப்பந்து

Boxing          -       குத்துச்சண்டை


வேளாண்மையும் வாழ்வும் :

நிலத்திலிருந்து பெறும் நீரில் 97% உப்பு நீராகவே உள்ளது. கடலில் காணப்படும் நீர். 3% மட்டுமே புதுப்புனலாக அதாவது நல்ல நீராக இருக்கும்


ஜனவரி 03

சாவித்திரிபாய் புலே அவர்களின் பிறந்தநாள்

சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 – 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார்.இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.[1][2]

சாவித்திரிபாய் புலே பிறப்பின் 186 ஆவது ஆண்டு நிறைவை தேடு பொறி கூகுளானது, ஜனவரி 3, 2017 அன்று ”கூகுள் டூடுள்” கொண்டு அடையாளப்படுத்திச் சிறப்பித்தது


நீதிக்கதை

இயற்கையின் ஒவ்வொரு படைப்புக்கும் அர்த்தம் உண்டு.

ஒரு பகல் வேளையில் ஒரு பயணி தன்னுடைய பையை சுமந்து நடந்து கொண்டு இருந்தார். அவருக்கு ஓய்வு தேவைப்படுவது போல் இருந்தது. சுற்றி பார்த்தபோது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு மரம் கூட காணமுடியவில்லை. பாலைவனம் மாதிரி இருந்தது அந்த இடம்.

ரொம்ப தூரம் நடந்ததற்கு பின் அவர் ஒரு அழகான தோட்டத்திற்கு உள்ளே நுழைந்தார். அங்கு நிறைய மரங்களும், பழங்களும், பூக்களும்  இருந்தன . அங்கு மரங்கள் முழுவதும் ஆரஞ்சு பழங்களால் நிரம்பியிருந்தது.  அவருக்கு  கீழே விழுந்த ஒரு ஆரஞ்சுப் பழம் கிடைத்தது. அதை அவர் எடுத்து உண்ண ஆரம்பித்தார்.

அந்த ஆரஞ்சு மரத்துக்குப் பக்கத்தில் ஒரு பூசணி கொடியை பார்த்தார் . அதில் மிகவும் பெரிய பெரிய பூசணிக்காய்கள் இருந்தது. அவர் அதை பார்த்ததும் , “இந்த பூசணிக்கொடி இவ்வளவு சிறியதாக இருக்கிறது.ஆனால் காயோ ரொம்ப பெரியதாக இருக்கிறது . ஆரஞ்சு பழமோ சிறியதாக  இருக்கிறது.ஆனா அது பெரிய மரத்தில் காய்க்கிறது.இந்த இயற்கை ரொம்பவே முரண்பாடாக இருக்கிறது .

இந்த இயற்கையைப் படைத்தவர்களுக்கு கண்டிப்பாக ஒன்றுமே தெரியாமல் தான் இருந்திருக்கும்"

என்று யோசித்தார்

அவ்வாறு சுற்றி இருந்த எல்லா படைப்புகளையும் ஏளனம் செய்து கொண்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து  ரொம்பவே தூக்கம் வருவதுபோல் இருக்க மரத்துக்கு அடியில் தலைசாய்த்து அசந்து தூங்கி விட்டார்

திடீரென்று  அவர் தலையில் ஏதோ வந்து விழுந்தது. அவர் எழுந்து பார்த்தபோது ஒரு ஆரஞ்சு பழம் தன் காலுக்கு பக்கத்தில்  கிடந்தது. உடனே அவருக்கு புரிந்தது இந்த ஆரஞ்சு பழம் தான் தன்னுடைய தலையில் விழுந்தது என்று.

அப்போதுதான் திடீரென்று அவர் யோசித்தார் “இந்த  ஆரஞ்சு பழத்திற்கு பதிலாக பூசணிக்காய் தன்னுடைய தலையில் விழுந்திருந்தால் என்னவாயிருக்கும்”

என்று பயந்தார் . அவர் மனதில்  "பூசணிக்காய் இருக்க வேண்டிய இடம் தரைதான்" என்று அப்போது நினைத்தார்.

இயற்கையின் ஒவ்வொரு படைப்புக்கும் அர்த்தம் உண்டு என்பதை அவர் உணர்ந்தார்.


இன்றைய செய்திகள்

03.01.2025

* கல்வி வளாகங்​களில் வெளிநபர்கள் நுழைய கட்டுப்​பாடுகள் விதிக்க வேண்​டும் என்று தேசிய மகளிர் ஆணையத்​தின் உறுப்​பினர் அறிவுறுத்​தல்.

* பதவிக் காலம் முடிய​வுள்ள 28 மாவட்​டங்​களில் உள்ள ஊராட்​சிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு முடிவு: அவசர சட்டத்​துக்கான கோப்புகள் ஆளுநர் ஒப்பு​தலுக்கு அனுப்​பப்​பட்​டுள்ளன.

* 1901-க்குப் பின் இந்தியாவில் மிக வெப்பமான ஆண்டு 2024 தான். அந்த வகையில் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2024-ல் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

* ஆப்கானிஸ்தானில் நேற்று திடீர் நிலநடுக்கம்: இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

* 6-வது ஹாக்கி இந்தியா லீக் போட்டி: ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணி வெற்றி.

* பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி: செர்பிய வீரர் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines

* National Commission for Women members advise that restrictions should be imposed on the entry of outsiders into educational institutions.

* The Tamil Nadu government has decided to appoint special officers for village administrations in 28 districts whose term is about to end: Files for the Emergency Act have been submitted to the Governor for approval.

* 2024 is the hottest year in India since 1901. In that regard, the India Meteorological Department has announced that 2024 has recorded the highest temperature in the last 123 years.

* A sudden earthquake occurred in Afghanistan yesterday: The National Seismological Center reported that it was recorded as 4.3 on the Richter scale.

* 6th Hockey India League match: Sarachi RAR Bengal Tigers team won.

* Brisbane International Tennis Tournament: Serbian player Djokovic advances to the quarterfinals.


Covai women ICT_போதிமரம்


Pay Authorization for the month of December 2024 salary for 94 vocational teacher posts

 

94 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் 2024 மாத ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு




டிசம்பர்‌ 2024 மாதத்திற்கான பள்ளிக்‌ கல்வித்‌ துறை,

சம்பளம்‌ வழங்கும்‌ அதிகார ஆணை 

(Pay Authorization for the month of December 2024)

தலைமைச்‌ செயலகம்‌,

சென்னை-600 009.


கடித எண்‌.வி16/11298/ப.க.7(1)/2024 - 1, நாள்‌. 31-12-2024


அனுப்புநர்‌

திருமதி.சோ.மதுமதி, இ.ஆ.ப,

அரசு செயலாளர்‌.

பெறுநர்‌

மாநில தலைமைக்‌ கணக்காயர்‌, சென்னை - 18/35 

முதன்மைச்‌ செயலர்‌/கருவூல கணக்கு ஆணையர்‌, சென்னை-15 (8)

அனைத்து மாவட்ட கருவூல கணக்கு அலுவலர்கள்‌ (8)

அனைத்து சம்பளக்‌ கணக்கு அலுவலர்கள்‌ (8)

சார்‌ சம்பளக்‌ கணக்கு அலுவலர்‌, பெருநகர்‌ சென்னை மாநகராட்சி

சென்னை - 03. (8)

ஐயா,

பொருள்‌ பள்ளிக்‌ கல்வி- தொழிற்கல்வி - தற்காலிக பணியிடங்கள்‌- 94 தொழிற்‌ கல்வி ஆசிரியர்‌ நிலை-1 தற்காலிக பணியிடங்கள்‌- டிசம்பர்‌ 2024-ம்‌ மாதத்திற்கு ஊதியம்‌ வழங்கும்‌ அதிகார ஆணை ((Pay Authorization for the month of December 2024) வழங்குதல்‌ - தொடர்பாக.

பார்வை 1 அரசாணை (நிலை) எண்‌. 358, பள்ளிக்‌ கல்வித்‌ துறை, நாள்‌. 18.08.1997.

2 அரசு கடித (நிலை) எண்‌. 221, பள்ளிக்‌ கல்வித்‌ (வி.க) துறை, நாள்‌. 15.07.1999.

3 அரசாணை (2டி) எண்‌. 46, பள்ளிக்‌ கல்வித்‌ (வி.) துறை, நாள்‌. 12.09.2006.

4 அரசாணை (நிலை) எண்‌. 69. பள்ளிக்‌ கல்வித்‌ துறை, நாள்‌. 20.03.2007.

5 அரசாணை (1டி) எண்‌. 245, பள்ளிக்‌ கல்வித்‌ (ப.க.7(1)) துறை, நாள்‌. 19.12.2021.

6 பள்ளிக்‌ கல்வி ஆணையரின்‌ கடிதம்‌ ந.க.எண்‌. 036847/எல்‌/ 372022, நாள்‌. 03.10.2022.

7 அரசு கடித எண்‌.னி6/3630/ப.௧.7(1)/2024, நாள்‌. 10.05.2024.

8 பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ கடிதம்‌ ந.க.எண்‌.0368477எல்‌/ 83/2022, நாள்‌. 20.11.2024.






2025 January - Teachers Diary


2025 ஜனவரி மாதம் - ஆசிரியர் நாட்குறிப்பு - டைரி


_*01.01.2025 - புதன்கிழமை*_

_*ஆங்கில புத்தாண்டு_

அரசு விடுமுறை


_*02.01.2025 - வியாழக்கிழமை*_

_*பள்ளிகள் திறப்பு*_

மூன்றாம் பருவம் வகுப்புகள் தொடக்கம்


_*04.01.2025 - சனிக்கிழமை*_

_*1-8 மாநில கலைத் திருவிழா போட்டி நாள்*_

_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_

BEO அலுவலகம்


_*10.01.2025 - வெள்ளிக்கிழமை*_

_*ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி*_ 

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்- RL

_*LMS இணைய வழி பயிற்சி கடைசி நாள்*_


_*11.01.2025 - சனிக்கிழமை*_

_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_

DEO அலுவலகம்


_*13.01.2025 - திங்கள் கிழமை*_

_*போகிப் பண்டிகை*_

_*ஆருத்ரா தரிசனம்*_ 

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்- RL


_*14.01.2025 - செவ்வாய்க்கிழமை*_

_*தைத்திருநாள்*_

பொங்கல்

அரசு விடுமுறை


_*15.01.2025 - புதன்கிழமை*_

_*மாட்டுப் பொங்கல்*_ திருவள்ளுவர் தினம

அரசு விடுமுறை


_*16.01.2025 - வியாழக்கிழமை*_

_*உழவர் திருநாள்*_

அரசு விடுமுறை


_*18.01.2025 - சனிக்கிழமை*_

_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_

CEO அலுவலகம்


_*24.01.2025 - வெள்ளிக்கிழமை*_

_*NMMS Exam*_

படிவம் ஒப்படைப்பு கடைசி நாள்


_*26.01.2025 - ஞாயிற்றுக்கிழமை*_

_*குடியரசு தின நாள்*_


_*27.01.2025 - திங்கள் கிழமை*_

_*ஷபே மீரஜ்*_

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்- RL


தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 3,5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு SLAS Exam ஜனவரி 3 அல்லது 4 ஆவது வாரத்தில் நடைபெறும்


🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸


ஜனவரி -2025 பள்ளி நாள்காட்டி..


02-01-2025 --  வியாழன் -- அனைத்து வகை பள்ளிகள் திறப்பு..


04-01-2025 -சனி --ஆசிரியர் குறை தீர் நாள்.


06-01-2025,07-01-2025 --1-3 ஆசிரியர்களுக்கு EE பயிற்சி.


08-01-2025, 09-01-2025 -- 4-5 ஆசிரியர்களுக்கு EE பயிற்சி.


*அரசு விடுமுறை நாள்கள்..*


14-01-2025 -- செவ்வாய் - பொங்கல் 

15-01-2025 -- புதன் -- மாட்டுபொங்கல் 

16-01-2025 -- வியாழன் -- உழவர் திருநாள் 

26-01-2025 - ஞாயிறு -- குடியரசு தினம்


*வரையறுக்கப்பட்ட விடுப்பு நாள்கள் (RL)..*


10-01-2025 -வெள்ளி -- வைகுண்ட ஏகாதசி 

13-01-2025 - திங்கள் -- ஆருத்ரா தரிசனம், போகி பண்டிகை.


*ஜனவரி வேலை நாள்கள் --19*


02-01-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-01-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்:மருந்து

குறள் எண் :942

மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

பொருள்:முன் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றிப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.


பழமொழி :
Many hands make work light\

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை


இரண்டொழுக்க பண்புகள் : 

   *புத்தாண்டில் புதிதாக ஒரு நல்ல விஷயத்தை  கற்றுக்கொள்ள உறுதி ஏற்பேன். 

*காலம் தவறாமை , கடமைகளை சரிவர செய்தல் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றுவேன்.


பொன்மொழி :

எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு நம்மை தேடி வரும். - ஆபிரகாம் லிங்கன்


பொது அறிவு :

1. பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் யார்?

விடை: ரோமானியர்கள்.

2. முதன்முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை தந்த நாடு எது?

விடை: நியூசிலாந்து


English words & meanings :

Archery      -      வில்வித்தை

Badminton       -      பூப்பந்து


வேளாண்மையும் வாழ்வும் :

இந்த பருவத்தில் நாம் வேளாண்மைக்கு முக்கிய தேவையான நீர் வளங்கள், அதை சேமிக்க வேண்டிய முறைகள் குறித்து பார்ப்போம்


நீதிக்கதை

நரியும் புலியும்

ஒரு அடர்ந்த காட்டிற்குள் பல விலங்குகள் வசித்து வந்தன. அங்குள்ள அனைத்து விலங்குகளுக்கும் புலியை கண்டால் மிகவும் பயம். தூரத்தில் புலி வருவதை பார்த்தாலே இவர்கள் அனைவரும் பயந்து ஓடுவார்கள்.ஒருநாள் புலி வந்து கொண்டிருக்கும்போது, மற்ற விலங்குகள் அந்த புலியை பார்த்து பயந்து ஓடுவதை நரி பார்த்துக் கொண்டு இருந்தது.

அந்த நரிக்கு புலியின் மேல் பொறாமை  உண்டு, “இந்த விலங்குகள் எல்லாம் புலியை மட்டும் பார்த்து பயப்பட்டு ஓடுகிறார்கள், ஆனால் என்னை பார்த்து யாரும் பயப்படுவதில்லையே” என்று எண்ணி நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தது.

அப்போதுதான் அது முடிவெடுத்தது. நானும் புலியைப் போல் மாறினால் என்னை பார்த்து எல்லாரும் நிச்சயமாக பயப்படுவார்கள் என்ற எண்ணத்தில், கொல்லனிடம் சென்று நரி “எனக்கு புலியை போல் தோற்றம் வேண்டும் எனவே என் மீது கோடு போடு” என்றது. அந்தக் கொல்லனும் கம்பியை பழுக்கக் காய வைத்து அந்த நரியின் மேல் சூடு போட்டான்.

முதல் சூடு போட்டவுடனே அந்த நரி வலியால் கத்த ஆரம்பித்தது. அந்த நரி கொல்லனிடம், “எனக்கு புலியைப் போல் தோற்றம் வேண்டும் ஆனால் இப்படி வலி இருக்கக்கூடாது வேறு ஏதாவது செய்” என்றது. அதற்கு அந்த கொல்லன், “வலி இல்லாமல் உனக்கு கோடு போட வேண்டுமென்றால் நீ வண்ணம் பூசுபவனிடம் செல்" என்றான்.

நரியும்  வண்ணம் பூசுபவரிடம் சென்று “எனக்கு புலியைப் போல் தோற்றம் வேண்டும் எனவே என் மீது  வண்ணம் பூசு" என்றது.  அவனும் சரி என்று சொல்லிக்கொண்டு அந்த நரியின் மேல் வண்ணத்தை பூசினார்.

அந்த நரி பார்ப்பதற்கு புலியைப் போல்  தோற்றம் கொண்டிருந்தது.  நரி தனக்குள்  “இனிமேல் எல்லோரும் நிச்சயமாக என்னை பார்த்து பயப்படுவார்கள்” என்று சிரித்துக்கொண்டே காட்டுக்குள் சென்றது.புலியை போல்  சத்தமிட முயற்சித்தது.ஆனால் முடியவில்லை.

வித்தியாசமான சத்தத்தை கேட்டு மற்ற எல்லா விலங்குகளும் ஓடி வந்தன. மற்ற விலங்குகள் நரியை பார்த்து ஆச்சரியப்பட்டனர்.  ஆனால் சிறிது நேரத்தில் பயங்கரமான மழை ஆரம்பித்தது. அந்த மழையில் நனைந்த  நரியின் வேஷம் அனைத்தும் கலைந்து போயிற்று. அந்த நரி மீண்டும் பழைய நிலைமைக்கே வந்தது. இதை பார்த்த மற்ற எல்லா விலங்குகளும் ஏளனமாக  சிரித்தனர்.

நீதி:  பிறரை போல் இல்லாமல், நாம் நாமாக இருப்பதே நல்லது.


இன்றைய செய்திகள்

02.01.2025

* 2024-ம் ஆண்டில் அரசு பணிக்கு 10,701 பேர் தேர்வு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்.

* வரும் கல்வி ஆண்டில் புதிய ஐடிஐ தொடங்கவும், அங்கீகாரத்தை புதுப்பிக்கவும், புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கவும் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

* சைபர் குற்றங்களுக்கு அதிகம் பயன்படுத்தும் தளமாக வாட்ஸ் அப் உள்ளது என்றும், அதற்கு அடுத்த இடத்தில் டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் இருப்பதாகவும் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.

* சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் 16 முறை புத்தாண்டு கொண்டாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம் அவர் 16 சூரிய உதயங்களையும் சூரிய அஸ்தமனங்களையும் காண முடியும்.

* உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீராங்கனை ரமேஷ்பாபு வைஷாலி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

* சர்வதேச நட்பு ரீதியிலான மகளிர் கால்பந்தாட்டத்தில்  மாலத்தீவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.


Today's Headlines

* 10,701 people selected for government jobs in 2024: Tamil Nadu Public Service Commission information.

* The Employment and Training Department has announced that applications can be made online from today to start new ITIs, renew recognition, and start new industries in the coming academic year.

* The Home Ministry has announced that WhatsApp is the most used platform for cyber crimes, followed by Telegram and Instagram.

* It has been reported that Sunita Williams, who is in the International Space Station, will celebrate the New Year 16 times because she can see 16 sunrises and sunsets.

* Tamil Nadu player Rameshbabu Vaishali has won the World Blitz Chess Championship bronze medal.

* India achieved a huge victory by defeating Maldives in an international friendly women's football match.


Covai women ICT_போதிமரம்


Income Tax Calculator – OLD REGIME Vs NEW REGIME - Official website of Income Tax Department

 

 

வருமான வரி கணிப்பான் (கால்குலேட்டர்) - பழைய முறை Vs புதிய முறை - வருமான வரி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம்


Income Tax Calculator – OLD REGIME Vs NEW REGIME - Official website of Income Tax Department


For Individual/ HUF/ AOP/ BOI/ Artificial Juridical Person (AJP)

as per section 115BAC  




வருமான வரி கணிப்பான் வலைத்தளத்தில் உள்ளீடு செய்ய தேவையான விவரங்கள்


1. Gross Salary (after deducting allowances exempted under both regimes) 


2. Amount deductible from gross salary (except standard deduction), which is not allowed under the new regime 


3. Income other than Salary and Special Rate Income


4. Deductions/exemptions allowed under new tax regime


5. Deductions/exemptions under old tax regime



>>> Click Here to go - Income Tax Calculator – OLD REGIME Vs NEW REGIME - Official website of Income Tax Department



மாதம் ரூ.1,15,000 வீதம் ஆண்டுக்கு ரூ.13,80,000 வருமானம் கொண்ட நபருக்கு பழைய மற்றும் புதிய வரி விதிப்பு முறையில் தோராய வருமான வரி கணக்கீடு...








Term 3 - Some important tasks to be observed in the third term once the schools open on 02.01.2025



 அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்


 02.01.2025 அன்று பள்ளிகள் திறந்தவுடன் மூன்றாம் பருவத்தில் கவனிக்க வேண்டிய சில முக்கிய பணிகள்


 1.பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.


 2. வகுப்பறைகள் அனைத்தும் நேரடியாக பார்வையிட்டு மாணவ மாணவிகள் அனைவரும் பாதுகாப்புடன் அமர்ந்து படிக்க உகந்ததாக உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.


 3. இறைவணக்க கூட்டம் முடிந்தவுடன் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நோட்டு புத்தகங்கள் வழங்கிட வேண்டும். உரிய பதிவேட்டில் முறையாக பதிந்து பராமரித்திட வேண்டும்.


 4 .ஆசிரியர்களின் வருகைப்பதிவு, மாணவ மாணவிகளின் வருகை பதிவுகளை App-ல் பதிவேற்றம் செய்திட வேண்டும்.


 5. முதல் பருவம், இரண்டாம் பருவம், மூன்றாம் பருவத்திற்கு வழங்கப்பட்ட விலையில்லா நோட்டு புத்தகம் மற்றும் இதர நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரத்தை TNSED App-ல் முழுமையாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதை உறுதிபடுத்த வேண்டும்.


 6. மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கு பெறும் மாணவ மாணவிகளை தயார் படுத்தி உரிய நேரத்தில் கலந்துகொள்ள உரிய பாதுகாப்பு ஏற்பாட்டுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.


7. தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டம் சார்ந்த verification - ஐ தினந்தோறும் பார்த்து update செய்தல் வேண்டும்.


8.  இன்டர்நெட் கனெக்சன் சார்ந்த OTC, Monthly Charges receipts ஐ upload செய்ய வேண்டும்.


9. ஜனவரி 6 முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ள எண்ணும் எழுத்தும் சார்ந்த மூன்றாம் பருவ பயிற்சிகளில் அவர்களுக்கு உரிய நாட்களில் தவறாமல் பங்கு பெறுதல் வேண்டும்.


 10. மாணவ மாணவிகளின் ஹெல்த் செக்கப் முடிக்காத பள்ளிகள் இப்பணியை முழுமையாக முடித்திருக்க வேண்டும். 


11. 6, 7 ,8 வகுப்புகளின் அரையாண்டுத்தேர்வு மதிப்பெண்களை EMIS-இல் அப்லோடு செய்திருக்க வேண்டும்.


 12. SMC புதிய உறுப்பினர்கள் அனைவரையும் EMIS-இல் முழுமையாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்த வேண்டும்.


13. *UDISE+* சார்ந்த பதிவுகளை முழுமையாக நிறைவு செய்து இருக்க வேண்டும்.


 14. புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சார்ந்த பணிகளை ITK தன்னார்வலர் மற்றும் BRTE யுடன் இணைந்து செயல்படுத்திட வேண்டும்.


 15. அனைத்து வகுப்பு மாணவ மாணவிகளும் சரளமாக வாசிப்பதையும் எழுதுவதையும் உறுதிப்படுத்திட வேண்டும்.


- வட்டாரக் கல்வி அலுவலர்கள்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders

 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு ₹ 1.1 lakh compensation for insect bite while traveling...