கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Government / Government aided schools Admission will start from tomorrow (01-03-2025)

 



நாளை (01-03-2025) முதல் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்...


Admission to Government / Government aided schools will start from tomorrow (01-03-2025)



மாணவர் சேர்க்கை - பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் - இயக்குநரின் செயல்முறைகள்...


High Court orders government to state stand on removal of caste names from school and college names



 பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


High Court orders government to state stand on removal of caste names from school and college names


பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் ஏற்படும் சாதி தொடர்பான வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க ஓய்வு நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து, பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை அகற்ற பரிந்துரைகளை பெற்றது. அவ்வாறு இருக்கும் போது, பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிப்பதில் என்ன தயக்கம்?” எனக்கூறிய நீதிபதி பரத சக்ரவர்த்தி ஒருவார கால அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.


தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, சாதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் துவங்கப்பட்டுள்ள சங்கத்தை, சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.


சாதி சங்கங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் சாதிப் பெயருடன் உள்ள நிலையில், அங்கு ஆசிரியர் "சாதிகள் இல்லையடி பாப்பா" என பாடம் நடத்துவது பெரிய முரண் எனக் குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இதேபோன்ற வழக்கில் மதுரை அமர்வு, சாதி சங்கங்கள் குறிப்பிட்ட சாதியினரின் நலனுக்கானது என்ற சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சங்கங்களுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்கப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


`எந்த சங்கங்களும் விதிகளை திருத்தியதாக தெரியவில்லை’ எனத் தெரிவித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, விதிகளை திருத்தாத சங்கங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், மேலும், சில அரசு பள்ளிகளில் கூட சாதிப் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்தார்.


இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், பள்ளிக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர் பள்ளிக்கு சூட்டப்பட்டிருக்கும் என விளக்கமளித்தார்.


அப்படி இருந்தாலும், சாதிப் பெயர் சேர்க்கப்படக் கூடாது எனக் கூறிய நீதிபதி, பகுத்தறிவுவாதிகள், நாத்திகர்கள் சங்கங்களும் கூட சாதிப் பெயர்களை தாங்கியிருப்பதாக குறிப்பிட்டார்.


மேலும், பள்ளி, கல்லூரிகளின் பெயரில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா என விளக்கமளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.


Sub Registrar Offices will function on Saturdays - Head of Registration Department


சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படும் - பதிவுத் துறை தலைவர் 


Offices of the Sub Registrars will function on Saturdays - Head of Registration Department


 அரசின் வருவாயை பெருக்கும் வகையில். மாநிலம் முழுவதும் பதிவுத்துறையில் 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் அனைத்து சனிக்கிழமைகளில் செயல்படும் என்று பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு



Case trial on TET mandatory for promotion completed in Supreme Court - when is the verdict?


பதவி உயர்வுக்கு TET அவசியம் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிறைவடைந்தது - தீர்ப்பு எப்பொழுது?


அதாவது TET பதவி உயர்வு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நிறைவடைந்தது. நீதிபதிகள் உத்தரவுப்படி, வரும் திங்கட்கிழமைக்குள் (03-03-2025) தங்கள் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு NCTE-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


06.03.2025ல் மீண்டும் அமர்வு கூடுகிறது.. அன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படும் தேதி அறிவிக்கப்படலாம்... அநேகமாக ஏப்ரல் 10க்குள் பதவி உயர்வு சார்ந்த வழக்குகள் அனைத்தும் முடிவடையும்..


TET Promotion/Appointment Related Supreme Court Case


- Pending Final Hearing Continuation 


Feb-6


Feb-13


Feb-20


Feb-27


( இன்றும் தீர்ப்பு இல்லை)


 Next Upcoming


 March-6 ( Thursday) அன்று விசாரணை தொடரும்...,


The  hearing for the TET promotion case was completed today in the Supreme Court. The NCTE has been instructed to submit their affidavit by the coming 3-March-2025 (Monday), as directed by the judges.


TET Compulsory for Promotion Case – Details in 3 Forms to file reply on 03.03.2025 – DEE Proceedings

 

 பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET கட்டாயம் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பாணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு - 03.03.2025 அன்று நடைபெறும் விசாரணையில் பதிலுரையாக தாக்கல் செய்யும் பொருட்டு, 3 படிவங்களில் விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 27-02-2025...



A case filed in the Supreme Court challenging the Madras High Court judgment that Teacher Eligibility Test TET is mandatory for teachers for promotion – Details in 3 Forms to file reply on 03.03.2025 – Proceedings of Director of Elementary Education






28-02-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-02-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெருமை

குறள் எண்:979

பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

பொருள்:
தற்பெருமையற்றது பெருமையின் குணம், தற்பெருமையுடையது சிறுமையின் குணம்


பழமொழி :
அதிகம் கேள், குறைவாகப் பேசு.

Hear more, but talk less


இரண்டொழுக்க பண்புகள் :  

* வெயில் காலத்தில் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்ப்பேன். 

  *மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு கூழ் போன்ற இயற்கை குளிர்பானங்கள் குடித்து வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பேன்.


பொன்மொழி :

நீ நினைத்ததை அடைய , நீ நினைத்துப் பார்த்ததை விட அதிகம் "உழைக்க" வேண்டும்.


பொது அறிவு :

1. பழ மரங்களிலேயே சுமார் 400 ஆண்டுகள் விளைச்சல் தரும் மரம் எது?

விடை : ஆரஞ்சு மரம்.

2. இந்தியாவில் நறுமணப் பொருட்களை உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

விடை : கேரளா


English words & meanings :

Police station     -     காவல் நிலையம்

Post office     -      தபால் நிலையம்


பிப்ரவரி 28

தேசிய அறிவியல் நாள்

தேசிய அறிவியல் நாள் (National Science Day) இந்தியாவில் பெப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 - ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.

சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.


நீதிக்கதை

அக்பர்-பீர்பால்  மனவேறுபாடு

அக்பருக்கும் பீர்பாலுக்கும்

அடிக்கடி ஏற்படும் மனவேறுபாடு அன்றைக்கும் ஏற்பட்டது.

அக்பர் ஏதோ சொல்ல,

அதற்கு பதிலாக பீர்பால் எதையோ சொல்ல… பேச்சு வளர்ந்து பெரிய சச்சரவில் கொண்டு போய் விட்டு

விட்டது. மன்னர் கோபம் கொண்டார்.

“இனிமேல் என்னுடைய மண்ணில் நீ வாழக்கூடாது.

எனது ஆளுகைக்கு உட்பட்ட  மண்ணை விட்டு நீ வெளியேறி விடவேண்டும்!” என்று

ஆணை பிறப்பித்தார்.

“சரி. உம்முடைய அதிகாரத்துக்கு உட்பட்ட மண்ணில் நான் வாழமாட்டேன்!” என்று வீராப்பாகச் சொன்ன பீர்பால் அங்கிருந்து வெளியாகி

சீன நாட்டுக்கு சென்றார்.



சில ஆண்டுகள் கழித்து ஏராளமான மூட்டைகளுடன் தில்லி வந்து சேர்ந்தார்!

பீர்பால் ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு சென்று சிலகாலம் இருந்து விட்டு இப்போது மீண்டும்

தில்லிக்கே வந்துவிட்டதை

அக்பர் அறிந்தார். உடனே அவருக்கு சினம் வந்தது.

தனது தலைமை அமைச்சரை அனுப்பி பீர்பாலை உடனே அரசவைக்கு அழைத்து

வரச் சொன்னார்.

பீர்பாலின் இல்லம் சென்ற அமைச்சரை அன்போடு வரவேற்று வீடு முழுவதையும் சுற்றிக் காட்டினார் பீர்பால்.

“இது என்ன வீட்டுக்குள்ளும் வெளியிலும் மண்ணைக்

கொட்டி வைத்திருக்கிறீர்களே?” என்று கேட்டார் அந்த

அமைச்சர்.“இந்த மண் சீன நாட்டில் இருந்து கொண்டு வந்தேன். ஒரு காரணத்திற்காகத்தான்

பரப்பி வைத்திருக்கிறேன்!”

என்று கூறினார்.

பின்னர் அந்த அமைச்சரின் வண்டியைப் பின்தொடர்ந்து

தன் வண்டியிலேயே அரசவை நோக்கி புறப்பட்டார்.

செல்லும் வழியில்… “இதென்ன வண்டிக்குள்ளும் இவ்வளவு மண்??” என்று கேட்டார் அந்த அமைச்சர்.“எல்லாம் காரணமாகத்தான்!” என்று

பதில் அளித்தார் பீர்பால்.

அரண்மனைக்குச் சென்றதும் அரசர் முன் நின்று

வணங்கினார் பீர்பால்.

“என் உத்தரவையும் மீறி இன்னும் தில்லி நகரத்தில் உலவுகிறீர்? 

என்னை மதிக்காமல் இந்த மண்ணில் உம்மால் வாழ்ந்து

விட முடியுமா?” என்று கோபத்துடன் கேட்டார்

அக்பர்.“மன்னர் பெருமானே! தங்கள் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறு எனக்கு ஒன்றும் தெரியாது. தங்களின் உத்தரவை

அப்படியே பின்பற்றி

வருகிறேன்!” என்று சொன்னார் பீர்பால் பவ்யமாக.

“எங்கே நிறைவேற்றுகிறீர்? இப்போது தில்லியில் அல்லவா நீர் தங்கி இருக்கிறீர்?” என்றார் அக்பர் சினத்துடன்.“தில்லியில் நான் தங்கி இருப்பது உண்மைதான். ஆனால்

தங்களின் மண்ணில்

நான் நடமாடவில்லை. அமைச்சரைக் கேட்டுப்

பாருங்கள். அவரே என்

வீட்டுக்கு வந்து பார்த்தாரே!” என்றார் பீர்பால்.

அக்பர் அமைச்சரை நோக்கினார்… உடனே அமைச்சர் பதில் அளித்தார்..

“மன்னர் அவர்களே! பீர்பால்

தம் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியிலும் மண்ணைக்

கொட்டி பரப்பி இருக்கிறார். பயணம் செய்த வண்டியிலும்

கூட மண்ணைக் கொட்டி இருந்தார். எதற்காக இப்படி எல்லாம் செய்திருக்கிறார்

என்று எனக்கு விளங்கவில்லை. அவரைக் கேட்டேன்.. காரணமாகத்தான் என்று சொல்கிறார்!”

அப்போது பீர்பால், “மன்னர் அவர்களே,”என் வீட்டின் உள்ளும் வெளியிலும் நான் பயணம் செய்யும் வண்டியிலும் நான் உலவும் என் வீட்டுத் தோட்டங்களிலும் நான்

கொட்டி பரவி இருப்பது

சீன தேசத்தில் இருந்து

கொண்டு வரப்பட்ட மண்.

அது தில்லியின் மண் அல்ல. தங்களுக்கு சொந்தமான மண்ணில் நடமாடக் கூடாது என்றீர்கள். அதனால்தான் சீன மண்ணில் நடமாடிக் கொண்டிருக்கிறேன். இது எவ்வாறு தங்கள் உத்தரவை மீறிய செயலாகும்?” என்று அப்பாவி போல் பதில் சொன்னார்.

பீர்பால் விளக்கம் கொடுத்ததும் அக்பர் உட்பட அவையினர் சிரித்தனர். மன்னருக்கு சினம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று.  தன் உத்தரவினை வாபஸ் வாங்கிக் கொண்டார் அக்பர்.


இன்றைய செய்திகள்

28.02.2025

* அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

* 25 மருத்துவமனைகளில் போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

* கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

* போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார்; ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு.

* பிங்க் பெண்கள் கோப்பை கால்பந்து போட்டி: தென் கொரியா வெற்றி.


Today's Headlines

* The Medical Services Recruitment Board has announced that applications are invited for 425 vacant pharmacist positions in government hospitals.

* Chief Minister Stalin has inaugurated de-addiction treatment and rehabilitation centers in 25 hospitals.

* The Chennai Meteorological Centre has predicted heavy rain in 10 districts, including Kanyakumari and Tirunelveli, today.

* The Central government has spent over ₹400 crore on court cases over the past 10 years, according to government data.

* Hamas has announced its readiness for the next round of ceasefire talks.

* South Korea wins the Pink Women's Cup football tournament.


Covai women ICT_போதிமரம்


Case seeking cancellation of New Pension Scheme - High Court Madurai branch orders Tamil Nadu government


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரும் வழக்கு - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு


Case seeking cancellation of New Pension Scheme - High Court Madurai branch orders Tamil Nadu government


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய கோரி திண்டுக்கலைச் சேர்ந்த பி. பிரெடெரிக் எங்கெல்ஸ் என்பவரால் தொடரப்பட்ட வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.


தமிழ்நாடு அரசுக்கு எதிர்வாத உரை அளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.



Comparison of UPS , NPS & OPS



ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம், புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் - ஒப்பீடு


Unified Pension Scheme, New Pension Scheme and Old Pension Scheme - Comparison


Comparison of UPS , NPS & OPS



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Classical Day Festival - Essay and speech competition for students



செம்மொழி நாள் விழா - மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி


Classical Day Festival - Essay and speech competition for students


செம்மொழி நாள் விழாவையொட்டி, தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி செம்மொழி நாள் விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழ்நாடு சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் பள்ளி மாணவா்கள், கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவா்களுக்கான போட்டிகள் மே 9-ஆம் தேதியும், கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள் மே 10-ஆம் தேதியும் நடைபெறும். இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் விண்ணப்பப் படிவங்களை தமிழ் வளா்ச்சித் துறையின் https://tamilvalarchithurai.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து அல்லது அவா்கள் பயிலும் பள்ளியின் மாவட்டங்களில் அமைந்துள்ள தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா்கள், உதவி இயக்குநா்கள் அலுவலகங்களில் நேரடியாக பெற்று தலைமையாசிரியா், துறைத் தலைவா் பரிந்துரையுடன் மாா்ச் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத் தமிழ் வளா்ச்சி துணை இயக்குநா், உதவி இயக்குநா் அலுவலகங்களில் நேரில் அளிக்க வேண்டும்.


போட்டி நடைபெறும் இடம், நாள் குறித்த தகவல்கள் மாவட்ட துணை இயக்குநா்கள், உதவி இயக்குநா்கள் வழியாக முதன்மைக் கல்வி அலுவலகம், பள்ளித் தலைமையாசியா் வழியாகவும் நாளிதழ் வாயிலாகவும் மாணவா்களுக்கு தெரிவிக்கப்படும்.


போட்டிக்கான தலைப்புகள் போட்டியின் போது அறிவிக்கப்படும். செம்மொழியின் சிறப்பு மற்றும் முத்தமிழறிஞா் கலைஞரின் தமிழ்த்தொண்டின் பெருமை சாா்ந்த தலைப்பு அளிக்கப்படும். இப்பொருண்மை சாா்ந்த தலைப்புகளுக்கு மாணவா்கள் ஆயத்தப்படுத்திக் கொள்ளலாம்.


மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். மாநில அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசு ரூ.7 ஆயிரம் வழங்கப்படும்.


மாவட்டப் போட்டிகளில் முதல் பரிசு பெறும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மே 17-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவா். மாநிலப் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று பரிசுகளைப் பெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வரும் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள செம்மொழிநாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Temporary removal of admission form from EMIS website

 

 EMIS Website ல் மாணவர் சேர்க்கைப் படிவம் தற்காலிகமாக நீக்கம்


இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி (ந.க.எண் : 002596/ஜெ2/2025; நாள் : 18.02.2025) 2025-2026 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1, 2025 முதல் தொடங்க இருப்பதால் பழைய மாணவர் சேர்க்கைப் படிவம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பப் படிவம் விரைவில் இங்கு கொடுக்கப்படும்.




Writing of Confidential Reports to High School HMs / Higher Officials - G.O.Ms.No. 32, Dated: 10-02-2025

 

 பள்ளிக் கல்வித் துறை - உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / உயர் அலுவலர்களுக்கு மந்தன அறிக்கைகள் (Confidential Reports) எழுதுதல் - அரசாணை (நிலை) எண் : 32, நாள் : 10-02-2025 வெளியீடு 


Department of School Education - Writing of Confidential Reports to High School Headmasters / Higher Officers - G.O.Ms.No. 32, Dated: 10-02-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



TRUST Exam Question Paper 2025

 

 தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு, பிப்ரவரி 2025 - வினாத்தாள் - Tamilnadu Rural Students Talent Search Exam



TRUST Exam - February 2025 - Question Paper



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




TRUST Exam - February 2025 - Tentative Official Answer Key & Question Paper

 

 தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு, பிப்ரவரி 2025 - தற்காலிக விடைக் குறிப்புகள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு - Tamilnadu Rural Students Talent Search Exam



TRUST Exam - February 2025 - Tentative Official Answer Key & Question Paper - DGE Released



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு, பிப்ரவரி 2025 - வினாத்தாள் - 


TRUST Exam - February 2025 - Question Paper



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Implementation of DAAS - Dispensing of Physical Salary Vouchers - submission of online Salary Bills - Letter from Director of Treasuries and Accounts Department to all DDOs and TOs, dated : 24-02-2025


ஊதியப் பட்டியலை கருவூலத்தில் ஒப்படைக்கும் நடைமுறை முடிவுக்கு வருகிறது - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநரின் கடிதம், நாள் : 24-02-2025


ஊதியப் பட்டியலை கருவூலத்தில் ஒப்படைக்கும் நடைமுறையில் (Physical  salary vouchers) மாற்றம். Online salary bill system நடைமுறைக்கு வருகிறது - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநரின் கடிதம், நாள் : 24-02-2025



Change in the process of handing over the pay bill to the treasury (Physical salary vouchers). Online salary bill system coming into effect - Letter from Director of Treasuries and Accounts Department, dated : 24-02-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



TREASURIES AND ACCOUNTS DEPARTMENT 


From

Tmt. T.Charusree, I.A.S.,

Director of Treasuries and Accounts,

3rd Floor, Perasiriyar K.Anbazhagan Maaligai,

571, Anna Salai,

Nandanam, Chennai-600 035.


To

All Pay and Accounts Officers

All Treasury Officers


Rc.No.1243239/E1/2025-2, Dated: 24.02.2025


Sir / Madam,

Sub: Accounts - Treasuries and Accounts Department - Kalanjiyam (IFHRMS 2.0) - Digital Audit and Accounting System (DAAS) Portal - Implementation of DAAS - Dispensing of Physical Salary Vouchers - Concurrence given by Accountant General - Decisions have been taken to incorporate the procedures of Dispensing Physical Vouchers and the DDOs of all Departments are requested for submission of online Salary Bills before 2 Working of Salary due date - Intimation to Government - Regarding.

Ref: 1. The Principal Accountant General (A&E), Tamil Nadu, Chennai D.O.Lr No. AG(A&E)/TM/III/2024-25 Dated: 29.01.2025.

2. This office even number letter dated: 24.02.2025.


I invite kind attention to the reference cited. (Copy enclosed)

The integrated Financial and Human Resources Management System(IFHRMS) was implemented from January 2020 and all the Bills and Challans are processed through IFHRMS.

The Monthly Accounts are being compiled in IFHRMS and sent to AG as e-Data through SFTP since January 2020 and district wise monthly accounts with physical vouchers are also being sent to Accountant General by concerned Pay and Accounts Offices and District Treasuries.

Now a new auditing tool Digital Audit and Accounting system (DAAS) has been developed for AG to audit all the vouchers and sub-vouchers online. This tool enables Accountant General to view the vouchers and its attachments online.

Therefore, in the reference cited, the Accountant General has agreed to dispense with submission of physical vouchers for salary with effect from 01.02.2025.

In view of the above, following proposals have been suggested after detailed discussions with Subordinates / District Officials of this department.

1. Dispense with submission of physical salary vouchers to District Treasuries/Pay and Accounts Offices with effect from 01.03.2025 for salary bills.

2. Status-quo to be maintained for February 2025 and physical salary vouchers to be received and retained at Concerned District Treasury / Sub Treasury.



ஊதியம் வழங்கும் நாளுக்கு, குறைந்தபட்சம்  2 நாட்கள் முன்னதாக ஊதியப் பட்டியல் சமர்ப்பிக்க கருவூலம் மற்றும் கணக்குத் துறை உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Details of school education related cases to be heard in the Supreme Court today (27.02.2025)


உச்சநீதிமன்றத்தில் இன்று (27.02.2025) விசாரணைக்கு வரும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த வழக்குகள் விவரம்


Details of school education related cases to be heard in the Supreme Court today (27.02.2025)


 இன்றைய தினம் (27.02.2025) பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்பது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணையும், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கும் விசாரணைக்கு வருகிறது.


Record of Proceedings - Supreme Court of India



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




27-02-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-02-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெருமை

குறள் எண்:978

பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

குறள்:
பணிவுடனிருத்தல் பெருமையுடையோர் இயல்வு சிறியோர் தம் பெருமை தாமே பாராட்டுவர்.


பழமொழி :
அதிகப் பேச்சு அறிவுடைமை அல்ல

It is not wise to talk more.


இரண்டொழுக்க பண்புகள் :  

* வெயில் காலத்தில் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்ப்பேன். 

  *மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு கூழ் போன்ற இயற்கை குளிர்பானங்கள் குடித்து வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பேன்.


பொன்மொழி :

"விழாமல் ஓடுவேன் என்பது நம்பிக்கை! விழுந்தாலும் எழுந்து ஓடுவேன் என்பது தன்னம்பிக்கை!"


பொது அறிவு :

1. சீனர்கள் முதன் முதலில் எதன் மீது எழுத்துக்களைப் பொறித்தனர்?

விடை : எலும்புகள் மற்றும் ஆமை ஓடுகள்.      

2. ஒரு நெருப்புக் கோழியின் முட்டை எத்தனை கோழி முட்டைகளுக்குச் சமம்?

விடை : 22


English words & meanings :

Mosque.    -     பள்ளிவாசல்

Park.    -   பூங்கா


பிப்ரவரி 27

பன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்புகளின் நாள்



நீதிக்கதை

சத்திரம்

ஒருமுறை பீர்பால் தன்

சொந்த வேலை காரணமாக அயல்தேசம் செல்ல

நேரிட்டது. செல்லும்

வழியில் அரண்மனை

ஒன்று தென்பட்டது.

மிகவும் அசதியாக இருந்த

பீர்பால் அதில் சிறிது நேரம் தங்கிச் செல்லலாம் என

முடிவு எடுத்தார். அது

அயல்நாட்டு மன்னனின் அரண்மனையாகும். அந்த விஷயம் பீர்பாலுக்கு

தெரியாது. அக்பரின் ஆளுகைக்குட்பட்ட

மண்ணில் இருக்கும்

அரண்மனை என்றே

அவர் நினைத்தார்.

அந்த அரண்மனையின்

பின்புறம் சென்று

குதிரையைக் கட்டிவிட்டு பார்த்தார். ஆள் அரவமே

இல்லை. அரண்மனைக்குள் புகுந்ததும் அடுக்களை தென்பட்டது. தமக்கிருந்த

பசியில் சிறிதும்

யோசிக்காமல் உணவினை எடுத்து உண்டார். பின்னர்

அடுத்த அறைக்குச் சென்றார். அழகான பஞ்சு மெத்தையுடன் கூடிய படுக்கையறை. உண்ட மயக்கத்தில் அந்த படுக்கையில் படுத்து உறங்கியும் விட்டார்.

வேட்டையாடச் சென்றிருந்த மன்னர் சற்று

நேரத்திற்கெல்லாம் வந்து விட்டார். தன் உணவை

உண்டு விட்டு தன்னுடைய படுக்கையில் படுத்திருப்பவனைப் பார்த்ததும் சினம்கொண்டு பீர்பாலைத் தட்டி எழுப்பினார்.

“என் அரண்மனைக்குள்

புகுந்து என் உணவினை

உண்டு, என் படுக்கை

அறையில் படுத்திருக்கிறாயே?” என்று அதட்டினார்.

“ஓஹோ… இது அரண்மனையா? காவலர் யாருமே இல்லாததால் இதனை சத்திரம் என்று நினைத்தேன்!” என்றார்

பீர்பால்.

தன்னை மன்னர் என்று

அறிமுகம் செய்தும் சற்றும் அஞ்சாமல் தன்னுடைய அரண்மனையை தர்ம

சத்திரம் என்கிறானே

இவன் என கோபமுற்றார்

அந்த மன்னர்.

“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கிறதா? அரண்மனைக்கும் தர்ம சத்திரத்திற்கும்கூட உனக்கு வித்தியாசம் தெரியவில்லையே!” என்று கடிந்தார் மன்னர்.

“மன்னர் அவர்களே.. இது அரண்மனையாகவே

இருந்தாலும் இதனையும்

தர்ம சத்திரம் என்று

அழைப்பதில் தவறில்லை!” என்றார் பீர்பால்.

“ஓர் அரண்மனை எப்படி சத்திரமாக முடியும்?

சத்திரம் என்றால் இன்று

ஒருவர் வருவார் நாளை போய்விடுவார்… மறுநாள் வேறொருவர் வருவார்..

பிறகு சென்று விடுவார்.. இங்கேயே தங்க மாட்டார்கள். அரண்மனை அப்படி அல்ல.

நான் நிரந்தரமாக தங்கி இருக்கிறேனே!” என்றார்

மன்னர்.

“மன்னர் அவர்களே உங்கள் பாட்டனார் எங்கே தங்கி இருந்தார்?”

“இதே அரண்மனையில்தான்!”

“உமது தந்தையார்?”

“இதே அரண்மனையில்தான்!”

“நாளை உங்களுக்குப் பின் யார் தங்குவார்கள்?”

“இதென்ன கேள்வி? எனது மகன் தங்குவான்!”

“ஆக இந்த அரண்மனையில் யாருமே நிரந்தரமாக தங்கி இருக்கவில்லை! தங்கள் முன்னோர் சில காலம் தங்கி இருந்துவிட்டு சென்று விட்டனர். இப்போது நீங்கள். உங்களுக்குப் பின் உங்கள் மகன். எனவே சத்திரத்துக்கும் அரண்மனைக்கும் எந்த வேறுபாடும் இல்லை!” என்றார் பீர்பால்.

பீர்பால் சொல்வதில் உள்ள உண்மை மன்னருக்கு விளங்கியது. வந்திருப்பவர் சாமான்யர் இல்லை என்பது விளங்கியது அவருக்கு!

“தாங்கள் யார்?” என்று மரியாதையுடன் வினவினார் அரசர்.

“என்னைப் பீர்பால் என்று அழைப்பார்கள்!’ என்று பதில் சொன்னார் பீர்பால்.

“அந்த மாமேதை நீங்கள்தானா? தங்களின் புகழை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். இதுவரை பார்த்தது இல்லை. நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். வருத்தம் வேண்டாம். என்னை மன்னித்து விடுங்கள்!” என்றார் அரசர்.

அந்த மன்னனின் அன்புக் கட்டளையை ஏற்று பீர்பால் மேலும் சில நாட்கள் அவரின் விருந்தினராகத் தங்கி இருந்து விட்டு பிறகு தான் செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்பட்டார்.



இன்றைய செய்திகள்

27.02.2025

* மத்திய மின்துறை வெளியிட்டுள்ள மின்விநியோக நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலில், தமிழக மின்பகிர்மான கழகம் 11.90 மதிப்பெண் பெற்று 48-வது இடத்தில் உள்ளது.

* வங்கக் கடலில் நிலவும் மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக பிப். 26 முதல் 28 வரை நாகை - இலங்கை  இடையேயான  பயணிகள் கப்பல் போக்குவரத்து மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஒடிசாவின் புரி அருகே வங்க கடலில் நேற்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

* அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

* பெண்கள் புரோ ஹாக்கி லீக்: நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.

* சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆண்டர்சனின் மாபெரும் சாதனையை தகர்த்த ஆர்ச்சர்.


Today's Headlines

- The Tamil Nadu Electricity Distribution Corporation has secured 48th place with a score of 11.90 in the rankings of power distribution companies released by the Ministry of Power.¹

- Passenger ship services between Nagapattinam and Sri Lanka have been suspended for three days due to rough weather and strong winds in the Bay of Bengal.

- A 5.1-magnitude earthquake struck off the coast of Odisha near Puri in the Bay of Bengal.

- US President Donald Trump has announced plans to introduce a 'Golden Card' scheme for immigrants, which can be obtained by paying $5 million.

- India won a thrilling match against the Netherlands in the Women's Pro Hockey League.

- Archer achieved a remarkable feat in the international one-day cricket match, surpassing Anderson's record.


Covai women ICT_போதிமரம்


Hindi language erasing - BJP question - Chief Minister M.K.Stalin's response



இந்தி மொழி அழிப்பு - பாஜக கேள்வி - முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி


Hindi language erasing - BJP question - Let travelers from northern states learn the same way Tamils ​​know the names of towns when they go to northern states - Chief Minister Stalin's response


இந்தி மொழி அழிப்பு - பாஜக கேள்வி - தமிழர்கள் வடமாநிலங்களுக்குச் செல்லும்போது ஊர் பெயர்களை எப்படி அறிந்துகொள்கிறார்களோ வடமாநிலப் பயணிகளும் அப்படியே அறிந்துகொள்ளட்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி


"இந்தி எழுத்துகளை அழித்தால் வடமாநிலப் பயணிகள் எப்படி ஊர்ப் பெயர்களை அறிந்துகொள்வார்கள்?" என்று 'அறிவுப்பூர்வமான' வினாவை எழுப்பி, தங்கள் இந்தி விசுவாசத்தைக் காட்டுகிறார்கள் இங்குள்ள பா.ஜ.க.வினர்!


தமிழர்கள் வடமாநிலங்களுக்குச் செல்லும்போது எப்படி அறிந்துகொள்கிறார்களோ அப்படியே அறிந்துகொள்ளட்டும்!






Punjabi a compulsory subject in all schools - Punjab Chief Minister Bhagwant Mann orders



 பஞ்சாப் மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழி கட்டாயப் பாடம் - பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் உத்தரவு


Punjab to make Punjabi a compulsory subject in all schools - Punjab Chief Minister Bhagwant Mann orders


பஞ்சாபில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி மொழி கட்டாய பாடம் என அம்மாநில அரசு உத்தரவு


பஞ்சாப் மாநிலத்தில் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


சி.பி.எஸ்.இ. தேர்வின் வரைவுத் திட்டத்தில் இருந்து பஞ்சாபி மொழி நீக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் ஆம்னில அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.



முன்னதாக, 2025-26 கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. மற்றும் பிற வாரிய இணைப்புப் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தெலுங்கு மொழியை கட்டாயப் பாடமாகக் கற்பிக்க தெலுங்கானா அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


26-02-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-02-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெருமை

குறள் எண்:977

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்பும்தான் சீரல் லவர்கண் படின்.

பொருள்:
கல்வி, செல்வம், சிறப்புகள் சிறுயாரைச் சேருமாயின் தவறான
செயல்களையே செய்விக்கும்.


பழமொழி :
அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்

Face the danger boldly than live in fear.


இரண்டொழுக்க பண்புகள் :  

* வெயில் காலத்தில் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்ப்பேன். 

  *மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு கூழ் போன்ற இயற்கை குளிர்பானங்கள் குடித்து வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பேன்.


பொன்மொழி :

இதயத்தை சுத்தபடுத்தி விட்டு இறைவனை கூப்பிடு. நிச்சயம் வருவார்.

- பைபிள்


பொது அறிவு :

1. இரைப்பையில் சுரக்கப்படும் நொதியங்கள். _______, ___________

விடை: பெப்சின், ரெனின்.      

2. ஆணின் உடலில் உள்ள இதயத்தின் எடை எவ்வளவு?

விடை: 230-280 கிராம்


English words & meanings :

Jail.    -        சிறைச்சாலை

Market.     -    சந்தை


வேளாண்மையும் வாழ்வும் :

 பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை...


நீதிக்கதை

முதல் வழக்கில் வெற்றி!

ஒருநாள் சக்கரவர்த்தி அக்பர்

தர்பாரில், வாயிற்காவலன்

உள்ளே நுழைந்து,“பிரபு!

ஒரு கிழவரும், இளைஞரும்

நியாயம் கேட்டு

வந்திருக்கிறார்கள்” என்றான். “அவர்களை வரச்சொல்!”

என்றார் அக்பர்.

உடனே, தர்பாரில் ஒரு

கிழவரும், ஓர் இளைஞனும்

உள்ளே நுழைந்து

சக்கரவர்த்தியை வணங்கினர். “என்ன விஷயம்? உங்களில்

யாருக்கு என்ன குறை?”

என்று கேட்டார் அக்பர்.



“பிரபு! என் பெயர் ரகுமான்”

என்று தன்னை

அறிமுகப்படுத்திக்

கொண்ட கிழவர் தொடர்ந்து, “நான் ஒரு சட்ட நிபுணன்!

மாணவர்களுக்கு சட்டத்தின்

நுணுக்கங்களையும், வழக்கு

விசாரணைகளைப் பற்றியும்

கற்பிக்கிறேன்".



இதோ நிற்கிறானே மணி!

இவன் என் மாணவனாக

இருந்தவன்! இவன் மீது

நான் குற்றம் சாட்ட

வந்துள்ளேன்” என்றார்.

அந்த இளைஞன் செய்த

குற்றம் குறித்து அக்பர் கேட்டார்.

“பிரபு! இவன் என்னிடம்

மாணவனாக சேர விரும்பிய

போது, நான் மாதம் மூன்று

பொற்காசு வீதம் குரு

தட்சிணை தர வேண்டுமென்றும், ஓராண்டு காலம் சட்டம் படிக்க

வேண்டும் என்றும் கூறினேன்.

ஆனால் இவன் தான் பரம

ஏழை என்றும், தட்சிணை

கொடுக்க இயலாது என்றும்

கூறினான். படிப்பு முடிந்ததும்

வழக்கறிஞனாகி முதல்

வழக்கில் வெற்றி பெற்றவுடன்,

முப்பத்தாறு பொற்காசுகள்

சேர்த்து தருவதாகவும்

வாக்களித்தான். அதை

நம்பி இவனுக்கு ஓராண்டு

காலம் கற்பித்தேன்.

இவன் மிகவும் கெட்டிக்கார

மாணவன் என்பதால்

ஓராண்டிலேயே மிகச்

சிறப்பாக சட்ட

நுணுக்கங்களைக் கற்றுக்

கொண்டு விட்டான். நானும்

இவன் வழக்கறிஞனாகி,

முதல் வழக்கிலேயே வெற்றி

பெறுவான் என்றும்,

தட்சிணையை மொத்தமாகக்

கொடுப்பான் என்றும்

நம்பினேன்” என்று சொல்லி

நிறுத்தினார் கிழவர். “இப்போது பணம் தராமல்

ஏமாற்றுகிறானா?” என்று

அக்பர் கேட்டார்.



“இல்லை பிரபு! இவன் திடீரென

வழக்கறிஞனாகப் பணி புரியும் யோசனையை கை விட்டு

விட்டான். அந்தத் தொழிலில்

ஈடுபடப் போவதில்லையாம்!”

என்றார். உடனே அக்பர்

அந்த இளைஞனை நோக்கி, “எதற்காக உன்னுடைய

உத்தேசத்தை நீ மாற்றிக்

கொண்டாய்?” என்று கேட்டார்.



“பிரபு! நான் சட்டம் பயின்று

முடித்ததும் வழக்கறிஞர்

தொழிலில் ஈடுபடுவதாகத் தான் இருந்தேன். ஆனால்

என் சித்தப்பா திடீரென

இறந்து போனார். அவர்

தன்னுடைய உயிலில்

அவருடைய அனைத்து

சொத்துகளுக்கும் என்னை

வாரிசாக்கி விட்டார். இப்போது

நான் லட்சாதிபதி. அதனால்

எந்த வேலையும் செய்யத்

தேவையில்லை,” என்றான்.



“அப்படியானால் இவருடைய

தட்சிணை என்ன ஆவது?”

என்று கேட்டார் அக்பர். “நான் கொடுத்த வாக்கைக்

காப்பாற்றுவேன். எனக்கு

என்று வழக்கறிஞனாக

ஆக வேண்டும் என்று

தோன்றுகிறதோ, அப்போது

தான் தட்சிணையும் தர முடியும்”

என்றான்.



மணி கூறுவது சரியே

என்று நினைத்த அக்பர்.

இருவரையும் நோக்கி, “இரு தரப்பினரின் வாதத்தையும் கூர்ந்து கவனித்தேன்.

என்னைப் பொறுத்தவரை

இந்த வழக்கில் மணியின்  பக்கமே நியாயம் இருக்கிறது. கொடுத்த வாக்கைக்

காப்பாற்றுவேன் என்று

இந்த தர்பாரில் அவன்

உறுதி அளித்துள்ளான்.



அவன் சொல்லை ஏற்றுக்

கொண்டு, அவனுக்கு என்று

வழக்கறிஞராக வேண்டும்

என்று தோன்றுகிறதோ, அன்று

அந்தத் தொழிலில் ஈடுபட்டு

குருவின் தட்சிணையைத்

திருப்பித் தரலாம். அதுவரை

குரு காத்திருக்க வேண்டும்.

இதுவே என் தீர்ப்பு!” என்றார்

அக்பர். தர்பாரில் அனைவரும்

இந்தத் தீர்ப்பைப் பாராட்டினர்.

இதை எதிர்பார்க்காத கிழவர்

ஏமாற்றத்தினாலும்,

வருத்தத்தினாலும் உடல்

குறுகிப் போனார்.

ஆனால் பீர்பால் மட்டும்

தீர்ப்பைப் பாராட்டாமல்

மிகவும் மௌனமாக

இருந்ததை கவனித்த அக்பர்,

இந்தத் தீர்ப்பை மறுஆய்வு

செய்யுமாறு பீர்பாலிடம்

கூறினார்.அதைக்கேட்டதுமே

கிழவரின் முகம் மலர்ந்தது.

மிகவும் புத்திசாலியான

பீர்பால் சரியான தீர்ப்பு

வழங்குவார் என்று அவர்

உறுதியாக  நம்பினார்.



பீர்பால் இளைஞனை

நோக்கி,“நீ கொடுத்த வாக்கில்

உறுதியாக இருக்கிறாய்

அல்லவா?” என்றார். “அதில் என்ன சந்தேகம்?

கண்டிப்பாக அப்போது

அதில் கிடைக்கும்

வருமானத்திலிருந்து என்

குருநாதருக்கு சேர வேண்டிய

தட்சிணையைக் கட்டாயம்

தந்து விடுவேன்” என்றான்

இளைஞன்.



பிறகு கிழவரை நோக்கி, “மணியின் நிபந்தனையை

நீங்கள் ஆரம்பத்திலேயே

ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா?” என்று கேட்டார் பீர்பால்

“ஆம் ஐயா!” என்றார் கிழவர்.



“அப்படியானால் சட்டப்படி

இளைஞனின் தரப்பில்தான்

நியாயம் உள்ளது. அவன்

வழக்கில் வெற்றி பெற்று

தட்சிணை தரும் வரை நீங்கள்

காத்திருக்க வேண்டியதுதான்”

என்றார் பீர்பால். பீர்பாலையும்,

அக்பரையும் வணங்கிவிட்டு

அவர் தள்ளாடித் தள்ளாடி

வெளியேற, இளைஞன்

வெற்றிப் பெருமிதத்துடன்

வெளியேறினான்.



திடீரென மணியை அழைத்து, “மணி ! இதுதான்

சக்கரவர்த்தியின்

நீதிமன்றத்தில் உன்னுடைய

முதல் வழக்கு! உன்னுடைய

வழக்கை விசாரிக்க வேறு

வழக்கறிஞரை நியமிக்காமல்

நீயே உன் தரப்பு நியாயத்தை

வெகு அழகாக எடுத்துக்

கூறினாய்” என்றார் பீர்பால்.

மணி  மகிழ்ச்சியுடன், “நன்றி ஐயா!” என்றான்.



பீர்பால் தொடர்ந்து, “அதாவது உன்னுடைய

முதல் வழக்கில் நீயே

வழக்கறிஞராக இருந்து

வாதாடி அதில் வெற்றி

பெற்று விட்டாய். இல்லையா?”

என்று பீர்பால் கேட்டார். “ஆம் ஐயா!” என்றான்

மணி  மகிழ்ச்சியுடன்.

“அப்படியானால் நீ

வழக்கறிஞராக இருந்து

வெற்றி பெற்ற முதல் வழக்கு

இது! நீ வாக்களித்தபடியே,

குருதட்சிணையை உன்

குருவிற்கு இப்போதே இங்கேயே கொடுத்து விடு!” என்றார்.

ஒருகணம் திகைத்துப்

போன அனைவரும்,

மறுகணமே கைதட்டி

ஆர்ப்பரித்தனர். கிழவர்

பீர்பாலுக்கு மனமார நன்றி

கூற, அக்பர் பீர்பாலை மிகுந்த

மகிழ்ச்சியுடன் தழுவிக்

கொண்டார்.



இன்றைய செய்திகள்

26.02.2025

* மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் ரூ.194.67 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

* பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்கும் வகையில் கூட்டுறவு துறை சார்பில் தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

* இந்தியாவில் 5 புற்றுநோயாளிகளில் 3 பேர் உயிரிழக்கின்றனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

* உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது. 193 நாடுகள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 93 நாடுகள் ஆதரவாகவும், 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்திய உள்பட 65 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

* ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி இன்று தொடக்கம். விதர்பா - கேரளா அணிகள் மோதல்.


Today's Headlines

- *Women's Self-Help Groups*: The Tamil Nadu government has announced that products made by women's self-help groups have been sold for ₹194.67 crore.

- *Chief Minister's Pharmacies*: Chief Minister M.K. Stalin has inaugurated 1,000 pharmacies across Tamil Nadu, providing quality medicines at affordable prices to the public.

- *Cancer Treatment*: According to the Indian Council of Medical Research, three out of five cancer patients in India die due to inadequate treatment.

- *UN Resolution*: India has abstained from voting on a UN resolution demanding Russia's withdrawal from Ukraine. 93 countries voted in favour, 18 against, and 65 abstained.

- *Ranji Trophy Finals*: The Ranji Trophy finals begin today, with Vidarbha facing Kerala.


Covai women ICT_போதிமரம்


HC directs TN Govt to remove temporary employees and take disciplinary action against appointees




2020ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிகப் பணியாளர்களை நீக்கவும், பணி நியமனம் செய்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


High Court directs Tamil Nadu government to remove temporary employees appointed in government departments after November 2020 and take disciplinary action against appointees


2020-க்குப் பிறகு தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


2020 நவம்பருக்குப் பிறகு தற்காலிக பணியில் நியமிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களையும் பணியில் இருந்து விடுவிக்க உத்தரவு.


தற்காலிக பணி நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு.


அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் கணிப்பொறி உதவியாளராக தினக்கூலி அடிப்படையில் கடந்த 1997-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்த சத்யா என்பவர், பணி வரன்முறை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனுவை பரிசீலித்து 12 வாரங்களில் முடிவு எடுக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


இந்த வழக்கு விசாரணையின்போது, தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படமாட்டாது என தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.


இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், பி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமைச் செயலாளர் சார்பில், "2020-ம் ஆண்டு நவம்பர் 28-ந்தேதி தற்காலிக பணி நியமனம் செய்வது கைவிடுவது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது" என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதிகள், 2020 நவம்பர் 28ஆம் தேதிக்குப் பிறகு தற்காலிக பணியில் நியமிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களையும் பணியில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டனர். அத்துடன் தற்காலிக பணி நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.


இந்த உத்தரவுகள் தொடர்பாக மார்ச் 17ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள் அன்றைய தினத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Why do we need the Old Pension Scheme?

  ஏன் வேண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்?  Why do we need the Old Pension Scheme? பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்கிற முதன்மைக் கோரிக்கைக்...