>>> எண்ணும் எழுத்தும் செயலி பயன்படுத்துதல் (Ennum Ezhuthum App) Demo...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் (முன்னதாக தமிழ்நாடு மின்சார வாரியம் என அறியப்பட்ட) மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் மன்றம் (CGRF-Consumer Grievance Redressal Forum) பற்றிய விவரங்கள், புகார் அளிக்க அலைபேசி எண்கள் வெளியீடு (Details of the Consumer Grievance Redressal Forum (CGRF) & mobile numbers to lodge complaints of the Tamil Nadu Electricity Generating and Distribution Corporation (formerly known as the Tamil Nadu Electricity Board))...
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் (முன்னதாக தமிழ்நாடு மின்சார வாரியம் என அறியப்பட்ட) மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் மன்றம் (CGRF-Consumer Grievance Redressal Forum) பற்றிய விவரங்கள், புகார் அளிக்க அலைபேசி எண்கள் வெளியீடு (Details of the Consumer Grievance Redressal Forum (CGRF) & mobile numbers to lodge complaints of the Tamil Nadu Electricity Generating and Distribution Corporation (formerly known as the Tamil Nadu Electricity Board))...
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
4வது தளம், சிட்கோ தலைமை நிர்வாக அலுவலக கட்டிடம்,
திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை - 600 032.
தொலைபேசி எண்கள் : ++91-044-2953 5806 / 2953 5816
தொலைநகல் : ++91-044-2953 5893
மின்னஞ்சல்: tnerc@nic.in
இணையதளம்: www.tnerc.gov.in
தேதி: 02.06.2022
செய்திக்குறிப்பு
இந்தச் செய்திக் குறிப்பானது, தற்போது இருந்து வரும் பல நிலைகளைக் கொண்ட குறை தீர்க்கும் செயல்பாட்டு அமைப்பினையையும் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் (முன்னதாக தமிழ்நாடு மின்சார வாரியம் என அறியப்பட்ட) ஒவ்வொரு வட்ட அலுவலகத்திலும் இயங்கிக்கொண்டிருக்கிற மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் மன்றம் (CGRF-Consumer Grievance Redressal Forum) பற்றிய விவரங்களையும் பொதுமக்களுக்கு பரப்புவதற்காகவும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வெளியிடப்படுகிறது.
அத்தகைய வசதிகள் பின்வருமாறு பட்டியலிடப்படுகிறது:
1. தனி நபர் மின்தடை / பொதுவான மின்தடை/அவசர அழைப்பு :
நுகர்வோர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகம், சென்னையில் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மின் நுகர்வோர் அழைப்பு மையமான, “மின்னகத்தை” 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்.
2. சேதமடைந்த மின்கம்பம், தொங்கலான மின் கம்பிகள், திறந்த நிலையிலுள்ள/ சேதமடைந்துள்ள தெருவிளக்குப் பெட்டி/ மின் விநியோகப் பெட்டி, அபாயகரமாக வெளியில் தெரியும் மின் ஒயர்கள் மின் அமைப்பிலுள்ள பழுதுகள் முதலியன:
நுகர்வோர்கள் தங்கள் கைபேசியில் நிழல்படம் எடுத்து அவைகளை கீழ்காணும் “வாட்ஸ் அப்” எண்ணிற்கு அனுப்பலாம்.
வ.எண் மாவட்டங்கள் அழைப்பு எண்
1 சென்னை 9445850829
2 காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் 9444371912
3 கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி 9442111912
4 சேலம், ஈரோடு, நாமக்கல் 9445851912
5 மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை 9443111912
6 திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, விருதுநகர் 8903331912
7 திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் 9486111912
8 வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி 6380281341
9 விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் 9445855768
3. மற்ற வகை புகார்கள், அதாவது மின்மாற்றி / கம்பம்/ தெருவிளக்குப் பெட்டி/ மின்விநியோகப் பெட்டி, மின் அளவி பழுது, குறைவான / அதிகமான மின் அழுத்தப்புகார்கள், கேபிள் பழுது, தீப்பொறி, மின் அமைப்பில் தீ விபத்து, பட்டியிடல் புகார்கள், புதிய மின் இணைப்பு சம்பந்தப்பட்ட புகார்கள், மறு மின் இணைப்பு, மின் தரம், தாமத சேவை, சேவை குறைபாடு, மின்சாரம் தொடர்புடைய பிற புகார்கள் முதலியன:
புகார்கள் / குறைகளை மின்னகம் - மின்நுகர்வோர் அழைப்பு மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யாலாம்.
மேலும், புகார்களை www.tangedco.gov.in Reach us Consumer’s Complaint என்ற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக வலைய தள பக்கத்தில் பதிவு செய்யலாம்.
மேலும், புகார்களை சம்பந்தப்பட்ட பிரிவு அலுவகத்தில் பதிவு செய்யலாம். புகார்கள் தீர்க்கப்படவில்லையெனில் அடுத்த கட்டமாக உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோரை அணுகலாம். ஒவ்வொரு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளரும் குறை தீர்க்கும் கூட்டத்தை அனைத்து கோட்ட அலுலகத்திலும் ஒவ்வொரு மாதமும் நடத்துகிறார்கள். குறைகளை இந்த குறை தீர்க்கும் கூட்டத்தின் போது மேற்பார்வை பொறியாளரிடம் சமர்ப்பிக்கலாம்.
மேற்கண்ட வழிகளில் குறை தீர்க்கப்படவில்லை என்றாலும் கூட, அவைகளை மின்சார விதி 2003 ஷரத்துக்களின் படி ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்திலும் ஏற்படுத்தப்பட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்திடம் சமர்ப்பிக்கலாம். அனைத்து நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றங்களின் முகவரிகள் ஆணையத்தின் வலையதளம் www.tnerc.gov.in Consumer Corner என்ற பக்கத்திலும், மேலும் www.tangedco.gov.in Consumer Info Consumer Guidance Consumer Grievance என்ற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக வலையதளத்திலும் உள்ளது.
மன்றம் குறைகளை தீர்க்கவில்லை என்றாலோ அல்லது மன்றத்தின் ஆணையினால் நுகர்வோர் திருப்தி அடையவில்லையென்றாலோ, அவராகவோ அல்லது அவருடைய சார்பாளர் மூலமாகவோ முப்பது நாட்களுக்குள் ஒழுங்கு முறை ஆணைய அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள மேல் முறையீட்டு அதிகார அமைப்பான மின்சாரக் குறை தீர்ப்பாளரிடமும் மேல்முறையீடு செய்யலாம்.
மேல் முறையீட்டாளர் சம்பந்தப்பட்ட அனைத்து நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் மற்றும் செயல்பாட்டு முறைகளின் விவரங்கள், நுகர்வோர்களின் வழிகாட்டுதலுக்காக www.tnerc.gov.in Regulations Final Regulations Consumer Grievance Redressal Forum and Electricity Ombudsman என்ற பகுதியில் உள்ளது.
4. மின் திருட்டு, தவறான மின் உபயோகம் முதலியன:
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, என்கிற 4 கோட்டத்தின் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு உதவி செயற்பொறியாளரின் தலைமையின் கீழும் 21 அமலாக்கக் குழுக்கள் மாநிலம் முழுவதும் செயல்பட்டுக்கொண்டுள்ளன. இந்த அமலாக்கக் குழுக்களுக்கு கூடுதலாக இரண்டு பறக்கும் குழு /சென்னை மற்றும் உளவுத்துறை பிரிவுகள் அமலாக்கத் துறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அனைத்து 23 குழுக்களும் சென்னையிலுள்ள அமலாக்கப்பிரிவின் மேற்பார்வை பொறியாளரால் கண்காணிக்கப்படுகிறது.
இவை அனைத்தும் காவல்துறை தலைமை இயக்குனர் / லஞ்ச ஒழிப்பு / சென்னை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன.
ஆகவே, நுகர்வோர்கள் இது சம்பந்தமான புகார்களை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக அமலாக்கப்பிரிவிற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்புக்கு www.tangedco.gov.in consumer info enforcement .
புகார்களை ig@tnebnet.org மற்றும் ceapts@tnebnet.org என்ற மின்னஞ்சல்கள் மூலமும் அனுப்பலாம்.
5. ஒழுங்கின்மை, கடமை புறக்கணித்தல், ஊழல், லஞ்சம் முதலியவை பற்றிய புகர்கள்:
இந்த வகையிலான புகார்களை உரிமம்தாரரின் மேலதிகாரிகளுக்கும், லஞ்ச ஒழிப்புப் பிரிவிற்கும் அனுப்ப வேண்டும்.
6. செந்தர விதிகளில் (Codes and Regulations) மாற்றம் செய்வதற்கான பரிந்துரைகள்:
ஆணையத்தால் இயற்றப்பட்ட விதிகளில், நுகர்வோர்கள் ஏதாவது மாற்றம் செய்ய விரும்பினால், அந்த மாற்றத்தையும் அதற்கான குறிப்பிட்ட கராணங்களையும் எழுத்து வடிவாக மின் வழங்கல் விதி பிரிவு 27 / மின்பகிர்மான விதி பிரிவு 51ன் கீழ் ஏற்படுத்தப்பட்ட விதித்தொகுப்பு மீள்பார்வைக் குழு (Code Review Panel) விற்கு அனுப்பலாம்.
அத்தகைய மாற்றமும், காரணங்களும் கொண்ட விதித்தொகுப்பு மீள் பார்வைக் குழுவின் கருத்துரு , உறுப்பினர் செயலராக உள்ள தலைப்பொறியாளர் / வணிகம் / தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் / சென்னை அவர்களுக்கு அனுப்பலாம்.
7.பொதுமக்களுக்கான செய்தி:
ஆகவே குறைகள்/ புகார்கள் மேற்கண்ட மின்சார உரிமைதாரரின் பல நிலைகளைக் கொண்ட குறைகளைத் தீர்க்கும் செயல்பாட்டு அமைப்புகளை நேரடியாக அணுகி மேலே விளக்கியுள்ளவாறு பயன்படுத்தி தங்களுடைய குறைகளையும்/ புகார்களையும் உரிய நேரத்திற்குள் நிவர்த்தி செய்து பயனடையுமாறு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
செயலாளர்
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை - பாடத்திட்டக் கையேடு - முதல் பருவம் - அனைத்துப் பாடங்கள் - தமிழ் வழி (II - V Standard - Lesson Plan - Term I - All Subjects - Ganga Guide - Tamil Medium)...
இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை - பாடத்திட்டக் கையேடு - முதல் பருவம் - அனைத்துப் பாடங்கள் - தமிழ் வழி (II - V Standard - Lesson Plan - Term I - All Subjects - Ganga Guide - Tamil Medium)...
இன்றைய (03-06-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஜூன் 03, 2022
உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்கள் சார்ந்த பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். தாய்வழி உறவினர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளின் உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். சிக்கல் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : ஒத்துழைப்பான நாள்.
பரணி : வாக்குவாதம் நீங்கும்.
கிருத்திகை : ஆலோசனைகள் கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்
ஜூன் 03, 2022
எதிர்பாராத தனவரவு கிடைக்கும். சமூக பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
கிருத்திகை : வரவு மேம்படும்.
ரோகிணி : லாபகரமான நாள்.
மிருகசீரிஷம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.
---------------------------------------
மிதுனம்
ஜூன் 03, 2022
வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபார பணிகளில் வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : முயற்சிகள் கைகூடும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் ஏற்படும்.
---------------------------------------
கடகம்
ஜூன் 03, 2022
உத்தியோக பணிகளில் இருந்துவந்த அலைச்சல்கள் படிப்படியாக குறையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுத்து செயல்படுவது நல்லது. செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
புனர்பூசம் : அலைச்சல்கள் குறையும்.
பூசம் : அனுசரித்து செல்லவும்.
ஆயில்யம் : சிந்தனைகள் மேம்படும்.
---------------------------------------
சிம்மம்
ஜூன் 03, 2022
இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். வர்த்தகம் தொடர்பான துறைகளில் புதிய நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : காலதாமதம் ஏற்படும்.
பூரம் : தேடல் அதிகரிக்கும்.
உத்திரம் : நுட்பங்களை அறிவீர்கள்.
---------------------------------------
கன்னி
ஜூன் 03, 2022
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : ஆதரவு கிடைக்கும்.
சித்திரை : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
துலாம்
ஜூன் 03, 2022
அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : இழுபறிகள் மறையும்.
சுவாதி : முன்னேற்றமான நாள்.
விசாகம் : ஒத்துழைப்பு மேம்படும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜூன் 03, 2022
வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் வேலையாட்களை பற்றிய புரிதல் மேம்படும். உத்தியோகத்தில் பொறுப்பும், அலைச்சலும் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். கவலை குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
விசாகம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
அனுஷம் : புரிதல் மேம்படும்.
கேட்டை : நெருக்கடியான நாள்.
---------------------------------------
தனுசு
ஜூன் 03, 2022
உறவினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனை தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். பயணங்களில் பொறுமையை கையாளுவது நல்லது. தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : விவாதங்களை தவிர்க்கவும்.
பூராடம் : அலைச்சல்கள் மேம்படும்.
உத்திராடம் : பொறுமை வேண்டும்.
---------------------------------------
மகரம்
ஜூன் 03, 2022
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : புரிதல் உண்டாகும்.
திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும்.
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
கும்பம்
ஜூன் 03, 2022
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் நிமிர்த்தமான புதிய முடிவுகளை எடுப்பீர்கள். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள்.
சதயம் : மதிப்பு அதிகரிக்கும்.
பூரட்டாதி : சேமிப்பு மேம்படும்.
---------------------------------------
மீனம்
ஜூன் 03, 2022
வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைகூடும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தைரியம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : இலக்குகள் பிறக்கும்.
ரேவதி : ஈடுபாடு அதிகரிக்கும்.
---------------------------------------
இன்று (02-06-2022) தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இயக்கப் பொறுப்பாளர்கள் கூட்டத்தின் முக்கிய தகவல்கள் (Informations about Today's (02-06-2022) meeting of Elementary Education Director with the Federation Bearers)...
சென்னையில் தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் முனைவர் திரு.அறிவொளி அவர்கள் தலைமையில் நடைபெறும் தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களின் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்...
இன்று (02-06-2022) தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இயக்கப் பொறுப்பாளர்கள் கூட்டத்தின் முக்கிய தகவல்கள் (Informations about Today's (02-06-2022) meeting of Elementary Education Director with the Federation Bearers)...
1.மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஜூன் 14 அன்று மாணவர் சேர்க்கை முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற வேண்டும்.
2. ஆசிரியர்கள் நோட்ஸ் ஆப் லெசன் கொண்டிருக்க வேண்டும்.
3. எண்ணும் எழுத்தும் பயிற்சி செல்லும் ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க வகை செய்ய ஆலோசிக்கப்படும்.
4. பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்துவதற்காக அரசு ரூ 1800 கோடி ஒதுக்கி உள்ளது.
5. ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆகஸ்ட் மாதத்திற்குள் கல்வி அமைச்சர் தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
6. ஒற்றை இலக்க மாணவர் பள்ளிகளை இரட்டை இலக்கத்திற்கு சேர்க்கை செய்ய ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு, பொதுமக்கள் இணைந்து செயல்படுத்த வேண்டும்.
7. ஓராசிரியர் பள்ளிகள் அனைத்தும் ஈராசிரியர் பள்ளி ஆக்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
கோடை விடுமுறையின்போது பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க நடவடிக்கை. இனிவரும் ஆண்டுகளில் கோடை விடுமுறை காலங்களில் பயிற்சி கிடையாது. தொடக்கக்கல்வி இயக்குனர் உறுதி.
பள்ளிக்கல்வி துறை அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அறையில் தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் மதிப்புமிகு அறிவொளி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்தனர். கூட்டத்தில் சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகள் அடிப்படையில் பதிலளித்த இயக்குனர் கூறியதாவது, தவிர்க்க இயலாத காரணங்களால் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் சிரமத்தை ஆசிரியர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். கோடை விடுமுறைக்கு வெளியூர் சென்றுள்ள ஆசிரியர்கள் அந்தப் பகுதியிலேயே பயிற்சியைப் பெற ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கோடை விடுமுறையில் பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு அந்த நாட்களுக்கு ஈடாக சிறப்பு விடுப்பு வழங்கவும் முடிவு செய்யப்படும். மேலும் அடுத்தக் கல்வி ஆண்டுகளில் இதுபோல் விடுமுறை நாட்களில் எந்த பயிற்சியும் நடக்காது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று இயக்குனர் தெரிவித்தார்.
சிஆர்சி பயிற்சி பெறும் 7 நாட்களும் கல்வியாண்டின் வேலை நாளான 210 நாட்களுக்குள் உட்படுத்தப்படும்.
தேவை பணியிடங்களில் மாறுதல் பெற்ற ஆசிரியர்களின் 108 பேருக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. ஜூன் 10-ஆம் தேதிக்குள் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்பதை உறுதியுடன் தெரிவிப்பதாக இயக்குனர் கூறினார்.
தொடக்கக் கல்வித் துறைக்கு பாதகத்தை ஏற்படுத்தும் 101 மற்றும் 108 அரசாணைகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்தபடி விரைவில் ரத்து செய்யப்படும்.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் ஜூன் 14-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாணவர் சேர்க்கைப் பேரணி நடத்தப்படும். எதிர்காலங்களில் எமிஸ் வலைதளத்தில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் நீக்கப்படும். இவ்வாறு இயக்குனர் முனைவர் அறிவொளி அவர்கள் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களுடனான தொடக்க கல்வி இயக்குநர் மற்றும் உதவிஇயக்குநர் அவர்களுடனான சந்திப்பு நல்லமுறையில் நடந்தது.
இயக்குநர் அவர்கள் கீழ்க்கண்ட நடைமுறை மாற்றங்களை செய்வதாக அறிவித்தார்கள்.
1. எண்ணும் எழுத்தும் என்ற புது முறை கற்பித்தலை ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலை இலகுவாக்கும் அருமையான திட்டம் ...அதோடு இதை அரசிடம் ஏற்கனவே பரிந்துரைத்து அனுமதி பெற்றுவிட்டதாலும், மாண்புமிகு.முதல்வர் அவர்கள் வரும் 13 ந்தேதி துவக்கி வைக்க இருப்பதாலும், இந்த கல்வியாண்டு பள்ளி துவங்கும் முதல் நாளான 13 ஆம் தேதியே நாம் புது வழி முறைகளை கையாள வேண்டும் என்பதாலும் விடுமுறை நாட்களில் நடத்தப்படும் பயிற்சியை ரத்து செய்ய இயலாத நிலை உள்ளது*என்றும் இப்பயிற்சி நாட்களுக்கானஈடு செய்யும் விடுப்பை வழங்க தான் ஆவன செய்ததாகவும்...இனி வரும் காலங்களில் இது போல் விடுமுறை நாட்களில் பயிற்சி நடத்தப்படாது எனவும் கூறினார்கள்.
2. குறுவள மைய பயிற்சிக்கு செல்லும் 7 நாட்களும், மொத்த பள்ளி வேலை நாட்களில்(210) சேர்த்துக்கொள்ளப்படும் என்று கூறினார்கள்.
3. பள்ளிகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடாமல் ஒரே மாதிரியான குறைந்த எண்ணிக்கை இருக்குமாறு உரிய சுற்றறிக்கை விரைவில் அனுப்பப்படும்
ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு வகையான பதிவேடுகள் பராமரிக்க அதிகாரிகளால் நிர்பந்தப்படுத்தப்படுகிறோம் . இதனால் கற்பித்தல் பணி பாதிக்கிறது என்ற வருத்தத்தை சங்கங்கள் பதிவு செய்தன.இனிமேல் மாநிலம் முழுவதுக்குமான ஒரே மாதிரியான பதிவேடுகள் பராமரிக்க இயக்குனரே ஒரு நெறிமுறை உத்தரவிடுவதாகவும், அதை தாண்டி வேறு எந்த பதிவேடுகளையும் ஆசிரியர்கள் பராமரிக்க தேவையில்லை எனவும் கூறினார்கள்.
4.EMIS பதிவேற்றம் பற்றி அனைவரும் ஆட்சேபித்த வகையில் எதிர்காலத்தில் முற்றிலும் தவிர்க்கப்பட்டு ஆசிரியர்களுக்கு எளிய நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்தார்கள்.
5. ஆசிரியர்களை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுக்கு வற்புறுத்தாமல் கற்பித்தல் பணிக்கு மட்டுமே உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று வரும் காலங்களில் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் நேரடியாக பள்ளியிலேயே கிடைக்கச் செய்வதற்கு வழிவகை செய்வதாக உறுதியளித்தார்கள்.
6.இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்த விரிவான விவர அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது விரைவில் சரி செய்யப்படும்.
7.சில மாவட்டங்களில் அடிப்படை ஊதியம் 65000த்தை கடந்த நிலையில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும் முறையை ரத்து செய்து ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வு கிடைக்க வழிவகை செய்வதாக கூறினார்கள்.
9.தமிழகத்தில் மொத்தம் 669 பள்ளிகளில் ஓரிலக்க எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளதால் அதனை ஈரிலக்க எண்ணிக்கையில் தரம் உயர்த்தி ஆசிரியர்கள் நிரவலை தடுக்க விளையும்படியும், இந்த வருடம் மாணவர்கள் சேர்க்கையை அதிகபடுத்த எதிர்வரும் 14.06.22 மாநிலம் முழுவதும் smc, pta மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து மாணவர் சேர்க்கைப் பேரணி நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள்.
10.ஆசிரியர் தேவை பணியிடத்திற்கு மாறுதல் செய்யப்பட்டு ஊதியம் வராத ஆசிரியர்களுக்கு பத்தே நாட்களில் ஊதியம் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.
11. உடனடியாக 7500 நடுநிலைப்பள்ளிகளுக்கு கணினி ஆய்வகம் வழங்கப்படும்.இதனைத்தொடர்ந்து படிப்படியாக எதிர்காலத்தில் தொடக்க பள்ளிகளுக்கும் மடி கணினி வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்கள்.
மொத்தத்தில் இயக்குனர் அவர்கள் தாயுள்ளத்தோடு பொறுமையாக அனைத்து சங்கங்களின் பொறுப்பாளர்களின் கோரிக்கைகளுக்கும், ஆதங்கங்களுக்கும், கொந்தளிப்புக்கும் மதிப்பளித்து பொறுமையுடன் விளக்கம் அளித்தார்கள்.
இதுவரை CPS திட்டத்தின் கீழ் பணியாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டுள்ள மொத்த வைப்பு தொகை எவ்வளவு? - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தகவல் - இணைப்பு : தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு எண்: 53, நாள்: 01-06-2022 வெளியீடு (What is the total amount of deposits that have been received from employees under the CPS scheme so far? - Tamil Nadu Finance Minister Palanivel Thiagarajan Information - Attachment: Government of Tamil Nadu Press Note No: 53, Date: 01-06-2022)...
இன்றைய (02-06-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஜூன் 02, 2022
முயற்சிக்கு உண்டான வெற்றி கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். சிறு மற்றும் குறுந்தொழிலில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். எண்ணங்கள் ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அஸ்வினி : வெற்றிகரமான நாள்.
பரணி : புரிதல் உண்டாகும்.
கிருத்திகை : சாதகமான நாள்.
---------------------------------------
ரிஷபம்
ஜூன் 02, 2022
இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கும். வியாபாரம் ரீதியான பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான முடிவு கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக குறையும். பயணங்களின் போது பிறமொழி பேசும் மக்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும். கவலைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : வரவு மேம்படும்.
ரோகிணி : அலைச்சல்கள் ஏற்படும்.
மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------
மிதுனம்
ஜூன் 02, 2022
மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் பலவிதமான இலக்குகள் பிறக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.
திருவாதிரை : இலக்குகள் பிறக்கும்.
புனர்பூசம் : லாபம் மேம்படும்.
---------------------------------------
கடகம்
ஜூன் 02, 2022
வியாபார பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான விஷயங்கள் கைகூடும். முன்கோபமின்றி எதிலும் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகம் ரீதியான செயல்பாடுகளில் சாதகமான முடிவை எடுப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு சார்ந்த துறைகளில் பொறுமையுடன் செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும். அறிமுகம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
புனர்பூசம் : தாமதங்கள் குறையும்.
பூசம் : பொறுமையுடன் செயல்படவும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் அமையும்.
---------------------------------------
சிம்மம்
ஜூன் 02, 2022
செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கை துணையுடன் சிறு தூர பயணங்கள் செல்வதற்கான தருணங்கள் உண்டாகும். தடைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : புத்துணர்ச்சியான நாள்.
பூரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
கன்னி
ஜூன் 02, 2022
பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவம் உண்டாகும். வாழ்க்கை துணைவரின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அஸ்தம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
துலாம்
ஜூன் 02, 2022
எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான சூழ்நிலைகள் அமையும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். தாமதம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : அதிர்ஷ்டகரமான நாள்.
சுவாதி : திறமைகள் வெளிப்படும்.
விசாகம் : வாய்ப்புகள் அமையும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜூன் 02, 2022
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயணங்களின் போது ஆவணங்களில் கவனம் வேண்டும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. வழக்கு சார்ந்த விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம் : கருத்துக்களை தவிர்க்கவும்.
கேட்டை : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
தனுசு
ஜூன் 02, 2022
உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் உண்டாகும். கற்பனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : மேன்மையான நாள்.
பூராடம் : அனுகூலம் ஏற்படும்.
உத்திராடம் : எண்ணங்கள் உண்டாகும்.
---------------------------------------
மகரம்
ஜூன் 02, 2022
சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். தொழில் தொடர்பான பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். சிக்கல் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
உத்திராடம் : இழுபறிகள் அகலும்.
திருவோணம் : அனுபவம் ஏற்படும்.
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
கும்பம்
ஜூன் 02, 2022
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
மீனம்
ஜூன் 02, 2022
மனதில் தாய் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
பூரட்டாதி : கவலைகள் நீங்கும்.
உத்திரட்டாதி : மாற்றம் ஏற்படும்.
ரேவதி : லாபம் அதிகரிக்கும்.
---------------------------------------
தகவல் அறியும் உரிமைச் சட்டம் கையேடு - பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்ந்து அனைத்து தகவல்கள், 1854ஆம் ஆண்டு முதல் பதவி வகித்த பள்ளிக் கல்வி இயக்குநர்கள் விவரம், அனைத்து மாவட்ட CEO, DEO அலுவலக முகவரி, தொடர்பு எண்கள் மற்றும் CoSE Organization Set-Up உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் ஒரே கோப்பில் வெளியீடு (Right to Information Act Guide - All information related to the School Education Commisionerate, including details of School Education Directors who have served since 1854, all District CEOs, DEO office addresses, contact numbers and various information including CoSE Organization Set-Up)...
இன்றைய (01-06-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஜூன் 01, 2022
மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். உடனிருப்பவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். ஆடம்பரமான பொருட்களின் மீது விருப்பம் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அஸ்வினி : எண்ணங்கள் நிறைவேறும்.
பரணி : ஈடுபாடு உண்டாகும்.
கிருத்திகை : விருப்பம் அதிகரிக்கும்.
---------------------------------------
ரிஷபம்
ஜூன் 01, 2022
தனவரவில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் உங்களது தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பார்கள். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் சோர்வை ஏற்படுத்தும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும். தாமதம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : நெருக்கடிகள் குறையும்.
ரோகிணி : சோர்வான நாள்.
மிருகசீரிஷம் : தெளிவு கிடைக்கும்.
---------------------------------------
மிதுனம்
ஜூன் 01, 2022
தற்பெருமை சார்ந்த எண்ணங்களை குறைத்து கொள்வது நன்மையை அளிக்கும். உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விருப்பம் நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிஷம் : பொறுமையுடன் செயல்படவும்.
திருவாதிரை : மாற்றம் உண்டாகும்.
புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
---------------------------------------
கடகம்
ஜூன் 01, 2022
நிர்வாகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. தந்தையின் உடல் ஆரோக்கியம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வாழ்க்கை துணையுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் மாற்றம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : மாற்றமான நாள்.
---------------------------------------
சிம்மம்
ஜூன் 01, 2022
உடன்பிறந்தவர்களின் மூலம் ஒத்துழைப்பு உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் ரீதியான பயணங்களில் சாதகமான சூழல் அமையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எந்தவொரு செயலையும் மனநிறைவுடன் செய்து முடிப்பீர்கள். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மகம் : ஒத்துழைப்பு உண்டாகும்.
பூரம் : சாதகமான நாள்.
உத்திரம் : இலக்குகள் பிறக்கும்.
---------------------------------------
கன்னி
ஜூன் 01, 2022
பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். செய்யும் செயல்களில் பதற்றமின்றி செயல்படவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : குழப்பமான நாள்.
அஸ்தம் : எதிர்ப்புகள் குறையும்.
சித்திரை : மேன்மை ஏற்படும்.
---------------------------------------
துலாம்
ஜூன் 01, 2022
உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தந்தைவழி வியாபாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
சித்திரை : திறமை வெளிப்படும்.
சுவாதி : விவாதங்களை தவிர்க்கவும்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜூன் 01, 2022
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகம் நிமிர்த்தமான பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். மனதிலிருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். ஆவணம் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அனுஷம் : எண்ணங்கள் வெளிப்படும்.
கேட்டை : காலதாமதம் உண்டாகும்.
---------------------------------------
தனுசு
ஜூன் 01, 2022
கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கற்பனை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூராடம் : புரிதல் உண்டாகும்.
உத்திராடம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.
---------------------------------------
மகரம்
ஜூன் 01, 2022
உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறைந்து புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் மேன்மையை ஏற்படுத்தும். வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். வெளிவட்டாரங்களில் உங்கள் மீதான மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெளிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திராடம் : பொறுப்புகள் குறையும்.
திருவோணம் : மேன்மையான நாள்.
அவிட்டம் : மதிப்பு அதிகரிக்கும்.
---------------------------------------
கும்பம்
ஜூன் 01, 2022
பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகம் நிமிர்த்தமான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும்.
சதயம் : முன்னேற்றமான நாள்.
பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
மீனம்
ஜூன் 01, 2022
தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கனிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
ரேவதி : சிந்தனைகள் உண்டாகும்.
---------------------------------------
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்















