தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிப்பது எப்படி?
Job opportunities in the Tamil Nadu Postal Department: How to apply?
தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிப்பது எப்படி?
Job opportunities in the Tamil Nadu Postal Department: How to apply?
பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு
தீபாவளி பண்டிகை அன்று (08/11/2026) காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி.
- தமிழ்நாடு அரசு.
தீபாவளி பண்டிகை அன்று (08-11-2026) பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரங்கள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் : 977, நாள் : 03-11-2026
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, 01.01.2027 - ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட சிறப்பு சுருக்கமுறைத் திருத்த நடவடிக்கைகள் 15.10.2026 முதல் 04.01.2027 வரை மேற்கொள்ளப்படுகின்றன
01.01.2027ஐ அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த நடவடிக்கைகள் (Special Summary Revision Measures) - தலைமை தேர்தல் அதிகாரி செய்தி வெளியீடு எண் : 980, நாள் : 03-11-2026
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
All India Sainik Schools Entrance Exam 2027 குறித்த தகவல்கள்
ALL INDIA SAINIK SCHOOLS ENTRANCE EXAMINATION - 2027
IMPORTANT INFORMATION AND DATES AT A GLANCE
FEE DETAILS AND IMPORTANT DATES Activity
Online Submission of Application Forms
/ Dates
03rd November 2026 to 02nd December 2026(Upto 11.50 PM)
Last Date of Successful Transaction of Fee through Credit/ Debit Cards/Net-Banking/UPI
02nd December 2026 (Upto 11:50 PM)
Late Submission of online application Form with Late Fee Rs. 500/-
Late Submission of online application Form
03rd December 2026 to 06th December 2026
Last Date of Successful Transaction with Late Fee through Credit/ Debit Cards/Net-Banking/UPI
06th December 2026 (upto 11:50 P.M.)
Fee Payable by candidates in INR:
Category / Fee payable
General/ Wards of Defence personnel and ex- servicemen/ OBC (NCL)* as per central list
Rs. 850/- (Rs. Eight Hundred & Fifty Only)
Scheduled Castes/ Scheduled Tribes
Rs. 700/- (Rs. Seven Hundred Only)
Note: - The fee as mentioned above is exclusive of any taxes or service charges payable to banks/payment organizations, that may be applicable. Fee as mentioned above is non-refundable. Fee once paid will not be refunded under any circumstances.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-11-2026 | School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Future Ready வினாத்தாள்கள் Download செய்யும் வழிமுறை
Future Ready Question Papers Download Steps
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Dear Team,
The Future Ready question papers (2 sets) for Classes 1 to 9 for this month are now available for download in PDF format for all government and government aided schools.
Please inform all schools to download the question papers from exam.tnschools.gov.in
The question papers will be available for download until 6th November 2026.
மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் மற்றும் பிற முறையற்ற கட்டணங்கள் வசூலிக்க தடைவிதித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
Question Paper Fee | High Court Order | DSE Proceedings
பள்ளிகளில் வினாத்தாள் கட்டணம் உள்ளிட்ட முறையற்ற கட்டணம் வசூலிக்க கூடாது உயர் நீதி மன்ற இடைக்காலத் தடையை மேற்கோள் காட்டி பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
RTI 2005 - குறித்த காலத்திற்குள் தகவல் அளிக்காத வட்டாட்சியருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் மற்றும் மனுதாரருக்கு கட்டணமின்றி தகவல் வழங்க தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
தமிழ்நாடு தகவல் ஆணையம்
பிளாக் எண் 19,
அரசு பண்ணை இல்லம்
பேன்பேட்
நந்தனம்
சென்னை 600 035
தொலைபேசி எண் 0442955590
ஆணை நாள். 30.09.2026
காணொளி காட்சி விசாரணை
முன்னிலை
திரு. வி.பி.ஆர். இளம்பரிதி, எம்.ஏ., பி.எல்., எம்.பில்., மாநில தகவல் ஆணையர்
வழக்கு எண்.CP-3073/A/2024
திரு E ரஜினி
மனுதாரர்
எதிர்
பொதுத் தகவல் அலுவலர் /
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்
சங்ககிரி வட்டம்
சேலம் மாவட்டம் 637 301
பொது அதிகார அமைப்பு
ஆணை
மேற்குறிப்பிட்ட வழக்கு 30.09.2026 அன்று ஆணையத்தில் வைத்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இன்றைய விசாரணையில் மனுதாரர் திரு E ரஜினி அவர்கள் சேலம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவல் மையத்தின் (NIC) காணொளி காட்சி அரங்கிலிருந்து ஆஜரானார் பொது அதிகார அமைப்பின் சார்பாக திரு. து பிரபு பொதுத் தகவல் அலுவலர்/தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சங்ககிரி, சேலம் மாவட்டம் அவர்கள் நேரில் ஆஜரானார்
2 மனுதாரர் 26.04.2024 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005. பிரிவு 6(11-ன் கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் மனுதாரர் சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம், இடங்கணசாலை பிட் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட நத்தம் பழைய சர்வே எண் 485 புதிய சர்வே எண்.911 மற்றும் நத்தம் சர்வே எண் 488 அதன் உட்பிரிவுகளுடன் முழு பட்டாகளின் பெயர்களின் முழு விவரம்.. அ.பதிவேட்டின் நகல்கள், சிட்டா அடங்கல் நகல்கள், மற்றும் பாதையின் நீளம் மற்றும் அகலம் விவரங்களை தகவல்களாக 5 இனங்களில் வழங்கக் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
3. பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்காத காரணத்தால் மனுதாரர். 26.06 2024 நாளிட்ட பிரிவு 18(1)-ன் கீழ் புகார் மனுவினை தாக்கல் செய்துள்ளார் அந்த புகார் மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு 30.09.2026 முற்பகல் இவ்வாணையத்தில் வைத்து காணொளி காட்சி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
4 இன்றைய விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் மனுதாரர் கோரிய தகவல்களுக்கு 20.03 2025 மற்றும் 24 09.2026 தேதியிட்ட கடிதங்களின் வாயிலாக தகவல் அளித்துள்ளதாக ஆணையத்தில் தெரிவித்தார். ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க மனுதாரர் கோரிய அனைத்து இனங்களுக்கான முழுமையான தகவலை விரைவில் வழங்குவதாக ஆணையத்தில் உறுதியளித்தார்
5 இன்றைய விசாரணையில் ஆஜரான மனுதாரர் தகவல் அறியும் உரிமைச் சட்டப்பிரிவு 7/1)-ன் படி மனுதாரரிடமிருந்து வேண்டுகோள் கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்படவில்லை என ஆணையத்தில் தெரிவித்தார். உரிய காலத்திற்குள் தகவல் வழங்காத அப்போதைய பொதுத் தகவல் அலுவலர் மீது பிரிவு 20(1), 2012)-ன் கீழ் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஆணையத்தைக் கேட்டுக் கொண்டார்
5 இன்றைய விசாரணை மற்றும் ஆவணப் பரிசீலனையின் முடிவில் மனுதாரரின் தகவல் கோரும் மனுவையும். பொதுத் தகவல் அலுவலரின் தகவலையும் இணைத்துப் பரிசீலனை செய்கையில் பொதுத் தகவல் அலுவலரால் மனுதாரருக்கு முழுமையான தகவல் அளிக்கப்படவில்லை எனத் தெரிய வருகிறது. எனவே, இவ்வாணையம் பொதுத் தகவல் அலுவலருக்கு இறுதி வாய்ப்பளித்து, கீழ்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கிறது:
மனுதாரரின் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1)-ன் கீழான மனுவிற்கு உரிய காலத்திற்குள் முழுமையான தகவல் வழங்காத காரணத்திற்காக அப்போதைய பொதுத் தகவல் அலுவலர் திரு. வெ. தமிழ்ச்செல்வி, பொதுத்தகவல் அலுவலர் / தலைமையிடத்து துணை வட்டாட்சியர், சங்ககிரி அவர்களின் மீது தகவல் அறியும் உரிமை சட்டம், 2005, பிரிவு 20(1), 20(2)-ன் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான காரண விளக்கங்களை 29.10.2026 அன்று முற்பகல் ஆணையத்தில் நேரடியாக ஆஜராகி சமர்ப்பிக்குமாறு அப்போதைய பொதுத்தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது.
மனுதாரர் 8(1) மனுவில் கோரிய அனைத்து இனங்களுக்கான முழுமையான தகவல்களை உரிய ஆவண நகல்களுடன் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 இன் படி இத்தகவல்கள் வழங்கப்படுகிறது" என்ற முத்திரையுடன் பொதுத் தகவல் அலுவலர் உரிய சான்றொப்பமிட்டு இவ்வாணை கிடைக்கப்பெற்ற இரு வார காலத்திற்குள் விரைவஞ்சலில் சட்டப்பிரிவு 7(6)-ன்படி கட்டணமின்றி மனுதாரருக்கு தகவல்களை அனுப்பிவைத்து விட்டு அதன் பின்னர். மனுதாரர் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை அட்டையின் நகல் மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட தகவலின் நகல் மற்றும் மனுதாரருக்கு அனுப்பி வைத்த கடிதத்தின் அஞ்சல் கண்காணிப்பு சான்றின் நகல் (Proof of Postal Tracking) இக்கோப்புத் தொடர்பான அனைத்து ஆவணங்களின் நகல்ளையும் இணைத்து ஒரு அறிக்கையாகத் தயாரித்து இவ்வாணையத்திற்கு 29.10.2026 அன்று தற்போதைய பொதுத் தகவல் அலுவலர் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்குமாறு ஆணையம் உத்தரவிடுகின்றது.
ஒம்/-(வி.பி.ஆர். இளம்பரிதி) மாநில தகவல் ஆணையர்
(ஆணையத்தின் ஆணைப்படி)
உதவிப் பதிவாளர்
கனமழை காரணமாக 03-11-2026 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் (Taluk declared holiday to Schools on 03-11-2026 due to heavy rain) விவரம்
பள்ளிகளுக்கு விடுமுறை
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️
கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.
திடீர் கனமழை காரணமாக கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (03.11.2026) விடுமுறை.
மாவட்டத்தின் மற்ற தாலுக்காவில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம் போல் இயங்கும் – மாவட்ட ஆட்சியர்.
கல்வி அஞ்சல்
Kalvi Anjal
NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க 13.11.2026 வரை கால அவகாசம் நீட்டிப்பு
NMMS EXAM 2026
➡️ எட்டாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான NMMS EXAM -க்கு விண்ணப்பிக்க 13-11-2026 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
▪️இதற்கு முன் 03-11-2026 கடைசி நாளாக இருந்தது. தற்போது 13-11-2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநரின் கடிதம்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-11-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்