கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அனைத்து வகையான சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான (Small Savings Scheme) வட்டி விகிதம் அதிரடி குறைப்பு - நாளை (01.04.2021) முதல் அமல் - மத்திய அரசு உத்தரவு...

 


>>> அனைத்து வகையான அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான (Small Savings Scheme) வட்டி விகிதம் அதிரடி குறைப்பு - நாளை (01.04.2021) முதல் அமல் - மத்திய அரசு உத்தரவு...

12 ஆம் மாணவர்களுக்கு ரகசிய திட்டம் ஒன்று உள்ளது – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு...

 12 ஆம் மாணவர்களுக்கு ரகசிய திட்டம் ஒன்று உள்ளது – அமைச்சர் செங்கோட்டையன்  அறிவிப்பு...



>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...

TRB - சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான - ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தள்ளிவைப்பு - தேர்வர்கள் ஏமாற்றம்...

 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,098 முதுகலை பட்டதாரி ஆசிரியர்,கணினி பயிற்றுநர் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்.11-ம் தேதி வெளியிட்டது. இதற்கான இணையவழித் தேர்வுஜுன் 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெறும் என்றும் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன்பதிவு மார்ச் 1 முதல் 25-ம் தேதிவரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொழில்நுட்பக் காரணங்களால் ஆன்லைன் பதிவு தள்ளிவைக்கப்படுவதாக திடீரென அறிவித்தது. 



இதற்கிடையே, சிறப்பு ஆசிரியர்பதவியில் (ஓவியம், தையல், இசை, உடற்கல்வி) 1,598 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு பிப்.26-ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான இணையவழி தேர்வு ஆக.27-ம் தேதி நடத்தப்படும் என்றும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மார்ச் 31 முதல் ஏப்.25 வரை நடைபெறும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.


ஏற்கெனவே, அறிவிக்கப்பட்டிருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஆன்லைன் பதிவு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு மார்ச் 31-ல் (இன்று) தொடங்கப்படுமா என்ற சந்தேகம் தேர்வர்கள் மத்தியில் நிலவி வந்தது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே, அதற்குப் பிறகு வெளியிடப்பட்ட சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் பதிவும் மார்ச் 1-ல் தொடங்கப்படாது. இதுதொடர்பாக அறிவிக்கை வெளியிடப்படும்’’ என்றார். 


ஏற்கெனவே கடந்த 2017-ல்நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர்தேர்வில் தமிழ்வழி ஒதுக்கீட்டுஇடங்களுக்கான தேர்வுப்பட்டியலும் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குச்சாவடிக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பு பொருட்களும் - பயன்படுத்தும் முறைகளும்...

 Corona prevention materials provided at the Election poll booth - methods of use ...


>>> வாக்குச்சாவடிக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பு பொருட்களும் -பயன்படுத்தும் முறைகளும் - கோப்பை (File) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

பிளஸ் 2வுக்கு வகுப்பு உண்டா? குழப்பத்தை தீர்க்க கோரிக்கை...

பிளஸ் 2 மாணவர்களுக்கு, , நாளை முதல் பள்ளிகள் செயல்படுமா என்பதை, பள்ளி கல்வி துறை அறிவிக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பிளஸ் 2 தவிர மற்ற வகுப்புகளுக்கு, காலவரையின்றி விடுமுறை விடப்பட்டுள்ளது.கல்லுாரிகள், பல்கலைகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும், இன்றைக்குள் நேரடி வகுப்புகள் மற்றும் நேரடி தேர்வுகளை முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.


பள்ளிகளில் ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 2வுக்கு விடுமுறை விட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேலும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, சட்டசபை தேர்தலுக்கு பிறகும், மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வரலாமா அல்லது 'ஆன்லைன்'வழியில் தான் படிக்க வேண்டுமா என, பள்ளிக் கல்வித் துறை இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.


எனவே, பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல் பள்ளிகள் செயல்படுமா அல்லது விடுமுறையா என்பதை அறிவிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறைக்கு, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மின்சார பயன்பாட்டுக்கான கட்டணம் - கணக்கீடு செய்ய...

 TNEB BILL CALCULATOR



>>> Click Here - ( Enter unit & calculate your bill amount )



தேர்தல் - வாக்கு சாவடியில் பயன்படுத்தப்படும் அனைத்துப் படிவங்கள் (நிரப்பப்பட்ட & நிரப்பப்படாத மாதிரிகள்)...

 Election - All forms used at the polling booth ...



>>>  நிரப்பப்படாத படிவங்கள் (Click here to Download Empty Forms)...


>>> நிரப்பப்பட்ட படிவங்கள் (மாதிரி)...

புதிய மின் இணைப்புக்கு இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு மின்சார வாரியம்...

 You can now apply online for a new electricity connection - Tamil Nadu Electricity Board ..


>>> விண்ணப்பிக்கும் வலைதள முகவரி...

கட்சியினர் சார்பில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்படும் உணவுக்குத்தடை...

 


ஆசிரியர்களுக்கு பரவுது கொரானா - கல்வித்துறை பாடம் கற்பது எப்போது?

 


தபால் வாக்கு விண்ணப்பத்தில் 99.7 % ஏற்பு ஆணையம் தகவல் - மாபெரும் அளவில் நடக்கும் தேர்தல் பணியில் அரிய சில தவறுகள் அவமதிப்பு அல்ல - ஆசிரியர் சங்கம் தொடர்ந்த வழக்கை நீதி மன்றம் முடித்துவைப்பு...

 


B.E, B.Tech படித்தவர்களுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) வேலை வாய்ப்பு : ஊதியம் 50,000- விண்ணப்பிக்க கடைசி நாள்: 07-04-2021...

 



>>> Click here to Download Notification...

01.05.2021 வரை வாக்கு சாவடி அலுவலர்கள் தங்களது வாக்குகளை கட்டணமின்றி அஞ்சலகம் மூலமாகவும் அனுப்பலாம் – மாவட்ட தேர்தல் அலுவலர்...

 இராமநாதபுரம் மாவட்டம் 


செய்தி வெளியீடு எண்: 64, நாள்: 29-03-2021

வாக்குச்சாடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி நடைபெறும் மையங்களில் மாற்றம் அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை அந்தந்த பயிற்சி மையங்களிலேயே நேரில் செலுத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது


மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ.ஆ.ப., அவர்கள் தகவல் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் இரண்டு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் வருகின்ற 31.03.2021 அன்று மற்றும் 01.04.2021 ஆகிய தேதிகளிலும் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் இராமநாதபுரம் இன்பாண்ட் ஜீசஸ் மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் பரமக்குடி சட்டமன்றத் தொகுதியில் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி வகுப்புகள் (ஏற்கனவே இரண்டு கட்ட பயிற்சி நடைபெற்ற இடங்கள்) நடைபெறும்.


அதேபோல, திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முன்னதாக சி.கே.மங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியிலும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு கமுதியில் உள்ள தனியார் பள்ளியிலும் பயிற்சிகள் நடைபெற்றன. இந்நிலையில், வாக்குச்சாவடி அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு திருவாடானை சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இராமநாதபுரம் நகரிலுள்ள ஸ்வார்ட்ஸ் மெட்ரிக் மேனிலைப்பள்ளி மற்றும் புனித அந்திரேயா மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இராமநாதபுரம் நகரிலுள்ள செய்யதம்மாள் மெட்ரிக் மேனிலைப்பள்ளியிலும் நடைபெறும். சமூக இடைவெளியைப் பின்பற்றி வகுப்புகள் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக காலை மாலை என இரு அமர்வுகளாக (Sessions) பிரித்து பயிற்சி அளித்திடவும், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெறும் இடம், அறை எண், பயிற்சி நேரம் உள்ளிட்ட விபரங்களுடன் உத்தரவு வழங்கப்படும்.


தபால் வாக்கு கோரிய தேர்தல் பணியாளர்களுக்கு பதிவு தபால் மூலமாக வாக்கு சீட்டுகள் அனுப்பப்பட்டு வருகின்றன. 31.03.2021 மற்றும் 05.04.2021 ஆகிய இரு நாட்களிலும் பயிற்சி முடிந்ததும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்கள் தபால் வாக்குகளை அந்தந்த பயிற்சி மையங்களிலேயே நேரடியாக செலுத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 01.05.2021 வரை வாக்கு சாவடி அலுவலர்கள் தங்களது வாக்குகளை கட்டணமின்றி அஞ்லகம் மூலமாகவும் அனுப்பலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார். 


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், இராமநாதபுரம்.

தேர்தல் வகுப்பில் பங்கேற்ற ஆசிரியை கொரோனாவால் இறப்பு - தேர்தல் வகுப்பில் பங்கேற்றவர்களுக்கு பரிசோதனை...

 திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் தொகுதியில் பணியாற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கான, முதல் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு மார்ச், 18ல் சின்னாளப்பட்டி தனியார் பள்ளியில் நடந்தது.


2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.மார்ச், 26ல் இதே ஆசிரியர்களை பிரித்து, மாவட்டத்தின் மற்ற, ஆறு தொகுதிகளிலும், இரண்டாவது கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. இந்நிலையில், முதல் கட்ட வகுப்பில் பங்கேற்ற, 53 வயதுடைய, உதவி பெறும் பள்ளி ஆசிரியை ஒருவர், கொரோனா பாதிப்பால், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, அவருடன் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து, சான்று சமர்ப்பிக்கும்படி கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பலியான ஆசிரியை மார்ச், 5ல் பெங்களூரு சென்று வந்துள்ளார். 'மார்ச், 11ல் அரசு மருத்துவமனை பரிசோதனையில், 'நெகட்டிவ்' என வந்ததால், தேர்தல் வகுப்பில் பங்கேற்றுள்ளார்.'பாதிப்பு தொடர்ந்ததால், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மார்ச், 25ல் நடந்த சோதனையில் கொரோனா உறுதியானது' என்றார்.

ஊக்க ஊதியம் பெற மார்ச் 31 க்குள் நிதித்துறை ஒப்புதல் கிடைக்குமா ?

 10-03-2020க்கு முன்பாக ஊக்க ஊதியம் பெற துறை முன் அனுமதி பெற்று உயர்கல்வி முடித்து இருந்து பல்வேறு காரணங்களால் ஊக்க ஊதியம் பெறாத ஆசிரியர்களின் பட்டியல் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் திரட்டப்பட்டு நமது பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 



இந்நிலையில்  மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வி இணை இயக்குநர் திரு பூ.ந.நரேஷ் ஐயா அவர்கள் ஊக்க ஊதியம் சார்ந்து கூறும்போது...


 உயர்கல்வி முடித்து ஊக்க ஊதியம் பெற தகுதியுள்ள ஆசிரியர்களின் பெயர் பட்டியல் நிதித் துறையின் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிறது.


இதில் பள்ளிக்கல்வி துறையின் வேலை நிறைவுபெற்றுவிட்டது. நிதித்துறைசார்ந்த முடிவு எடுப்பது அரசு மட்டுமே என்று கூறி உள்ளார்.


மேலும் அவர் கூறும்போது, மார்ச் 31 க்குள் நிதித்துறை ஒப்புதல் கிடைக்காவிட்டால் உயர்கல்வி படிப்புக்கு ஊக்க ஊதியம் பெற முடியாமல் போய்விடும் என்று ஆசிரியர்கள் அச்சப் பட வேண்டாம். அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

தபால் வாக்கு ஊடகங்களில் வெளியான விவகாரத்தில் திடீர் திருப்பம் - வேறு ஆசிரியை உட்பட 3 பேர் கைது...

 தபால் வாக்குப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, வேறு ஆசிரியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



தென்காசி மாவட்டம், சுரண்டையில் உள்ள அரசு நிதியுதவி பெறும் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் சகாய ஆரோக்கிய அனுஷ்டாள். இவரது தபால் வாக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த தபால் வாக்குச் சீட்டு முகநூல், வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, தென்காசி மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சமீரனுக்கு சமூக ஊடகங்களில் வெளியான தபால் வாக்கு புகைப்பட ஆதாரத்துடன் தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனி புகார் அளித்தார்.


இதையடுத்து, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கருப்புசாமிக்குத் தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். தேர்தல் நடத்தை விதிகளை மீறி தபால் வாக்கு ரகசியம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதால் ஆசிரியர் சகாய ஆரோக்கிய அனுஷ்டாளைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்து, அதற்கான ஆணையை வட்டாரக் கல்வி அலுவலர் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க, பள்ளித் தாளாளருக்கு தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கருப்புசாமி உத்தரவிட்டார்.


இந்நிலையில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தென்காசி மாவட்டச் செயலாளர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அதில், “சுரண்டை ஆர்.சி. நடுநிலைப் பள்ளி ஆசிரியர் சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பணியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் முறையாகத் தபால் வாக்கைப் பெறாத நிலையில், அவரது தபால் வாக்கை முறைகேடாக வெளி நபருக்கு வழங்கி, தபால் வாக்கின் ரகசியத்தை முகநூலில் பதிவிடச் செய்த அதிகாரிகள் மீதும், முகநூலில் பதிவிட்ட நபர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.


இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, தேர்தல் வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் தென்காசி போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சமூக வலைத்தளத்தில் பரவியது ஆசிரியர் சகாய ஆரோக்கிய அனுஷ்டாளின் தபால் வாக்கு அல்ல என்பதும், அது வெள்ளக்கால் கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் கிருஷ்ணவேணி (50) என்பவருடைய தபால் வாக்கு என்பதும் தெரியவந்தது.


தேர்தல் பயிற்சி வகுப்புக்குச் சென்ற ஆசிரியை கிருஷ்ணவேணி, தபால் வாக்குப் படிவத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். அதைத் தனது மகனிடம் காட்டி இதுதான் தபால் வாக்குப் படிவம் என்றும், அதில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். வாக்களித்தபின் தபால் வாக்குச் சீட்டு படிவத்தை கிருஷ்ணவேணியின் கணவர் கணேஷ் பாண்டியனின் செல்போனில் அவரது மகன் போட்டோ எடுத்துள்ளார். அந்த போட்டோ கணேஷ் பாண்டியனின் செல்போனில் வாட்ஸ் அப் மூலம் ஒரு குழுவுக்குப் பகிரப்பட்டுள்ளது.


அதைத் தென்காசியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் முகநூலில் பகிர்ந்துள்ளார். இது தெரியவந்ததும் ஆசிரியர் கிருஷ்ணவேணி, அவரது கணவர் கணேஷ் பாண்டியன் (50), தென்காசியைச் சேர்ந்த செந்தில்குமார் (47) ஆகிய 3 பேர் மீதும் தென்காசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.


இந்நிலையில் ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாளை சஸ்பெண்ட் செய்ய பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆசிரியர் கிருஷ்ணவேணி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு இன்று (31-03-2021) நடைபெறுகிறது...

 Gandhigram Rural Institute - Assistant Professor Job...



>>> Click here to Download Notification...

மத்திய அரசின் ஆசிரியர் பணியிட அறிவிப்பு – 3479 காலிப்பணியிடங்களுக்கு பட்டதாரிகள் தேவை...

 பழங்குடியினர் விவகார அமைச்சகம் (Ministry of Tribal Affairs) ஆனது தேசிய பழங்குடி மாணவர்கள் கல்வி சங்கத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Principal, Vice Principal, PGTs & TGTs பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. 



ஆசிரியர் பணியிடங்கள் 2021 :


Principal – 175


Vice Principal – 116


PGTs – 1244


TGTs – 1944


கல்வித்தகுதி :


அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் இளநிலை/ முதுநிலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆசிரியர் கல்வித் தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பு.


PGT & TGT தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Computer based Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் முறை :


ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.04.2021 முதல் 30.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


>>> Click here to Download Notification...


தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் தீ விபத்து...



சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தின் முதல் தளத்தில் தீ விபத்து - 30க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள், துறை தொடர்பான ஆவணங்கள் எரிந்து நாசம் என தகவல்


ஆவணங்களை அழிக்கும் முயற்சியா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.தமிழக பள்ளி கல்வித் துறையின் மாநில தலைமை அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்படுகிறது. இங்கு, பள்ளி கல்வித் துறையின் பல்வேறு பிரிவு இயக்குநரகங்கள் உள்ளன. தனிக் கட்டடம்அதில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்திற்குள், தொடக்க கல்வி இயக்குநரகம், தனிக் கட்டடத்தில் இயங்குகிறது. 


இங்கு, தினமும் அலுவலர்கள் பணிக்கு வந்து செல்கின்றனர்.தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் முதல் மாடியில் உள்ள பொருட்கள், நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் வருவதற்குள், அங்கிருந்த கணினி அறை முழுதும் எரிந்து, அங்குள்ள எட்டு கணினிகள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் சாம்பலாகின. தொடக்க கல்வித் துறையின், அரசு பள்ளிகள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.


விசாரணை


அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் விபரம், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை, பணியாளர் விபரங்கள், நலத் திட்ட தகவல்கள், பென்ஷன் விபரம், அரசு பள்ளி உள்கட்டமைப்பு பராமரிப்பு, அதற்கான வரவு - செலவு நிதி கணக்கு உட்பட அனைத்து விபரங்களும் கணினியில் இருந்தன. 


அவை அனைத்தும் தீ விபத்தால் அழிந்து விட்டன. கணினியில் உள்ள, 'ஹார்டு டிஸ்க்' அனைத்தும் தீயில் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டதால், அவற்றில் இருந்து தகவல்களை மீட்டு எடுக்க முடியாத நிலை உள்ளது. தொடக்க கல்வி இயக்குனராக உள்ள பழனிசாமியின் அறையை ஒட்டி, இந்த தீ விபத்து நிகழ்ந்து உள்ளது. இயக்குநரின் அறைக்கு தீ பரவாததால், பல முக்கிய ஆவணங்கள் காப்பாற்றப்பட்டன.இந்த சம்பவம் குறித்து, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 


விசாரணையில், கணினி அறையில் இருந்த, யு.பி.எஸ்., பேட்டரி அணைத்து வைக்கப்படாமல் இருந்ததால், மின் கசிவு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், தகவல்களை அழிப்பதற்காக, யாராவது திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தினரா என்றும் விசாரணை நடந்து வருகிறது.

இன்றைய (31-03-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மார்ச் 31, 2021



குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும். நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். வாக்குவன்மையால் பொருள் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு ஆதரவாக செயல்படுவீர்கள். போட்டிகளில் பங்கேற்று பாராட்டுகளை பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



அஸ்வினி : மேன்மையான நாள்.


பரணி : ஆதாயம் உண்டாகும்.


கிருத்திகை : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

மார்ச் 31, 2021



எண்ணிய செயலை முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். பணிகளில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். வாகனத்தில் ஏற்பட்ட பழுதுகள் நீங்கும். மனதில் பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் அமையும். உடன்பிறந்தவர்களிடம் ஆதரவான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



கிருத்திகை : காலதாமதம் உண்டாகும்.


ரோகிணி : பழுதுகள் நீங்கும்.


மிருகசீரிஷம் : வெற்றி கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

மார்ச் 31, 2021



வெளியூர் பயணங்களால் மனமகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளின் மூலம் தொழிலில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பொன், பொருள் போன்றவற்றை கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.


திருவாதிரை : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


புனர்பூசம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------




கடகம்

மார்ச் 31, 2021



பயணங்களால் லாபம் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். பெரியோர்களின் ஆசியும், ஆதரவும் கிடைக்கும். தந்தைவழி உறவுகளால் மேன்மை உண்டாகும். தொழிலில் எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்புகள் உயரும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



புனர்பூசம் : லாபம் கிடைக்கும்.


பூசம் : ஆதரவான நாள்.


ஆயில்யம் : சேமிப்புகள் உயரும். 

---------------------------------------




சிம்மம்

மார்ச் 31, 2021



முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தந்தையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு லாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த பழைய சரக்குகளால் லாபம் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளின் மூலம் அனுகூலம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : வெற்றிகரமான நாள்.


பூரம் : துரிதம் உண்டாகும்.


உத்திரம் : லாபம் அதிகரிக்கும். 

---------------------------------------




கன்னி

மார்ச் 31, 2021



சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பொருட்சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைக்கேற்ப பாராட்டுகள் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



உத்திரம் : கீர்த்தி உண்டாகும்.


அஸ்தம் : முயற்சிகள் மேம்படும்.


சித்திரை : அன்யோன்யம் அதிகரிக்கும்.

---------------------------------------




துலாம்

மார்ச் 31, 2021



குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். உடனிருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும். வியாபாரத்தில் புதிய நபர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : அமைதியுடன் செயல்படவும்.


சுவாதி : சிந்தனைகள் மேம்படும்.


விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




விருச்சகம்

மார்ச் 31, 2021



கூட்டுத்தொழிலில் உள்ள பங்குதாரர்களால் சுபவிரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். பொதுக்கூட்ட பேச்சுக்களில் எதிர்பார்த்த ஆதரவு காலதாமதமாகும். பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



விசாகம் : அபிவிருத்தியான நாள்.


அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.


கேட்டை : பயணங்களை மேற்கொள்வீர்கள். 

---------------------------------------




தனுசு

மார்ச் 31, 2021



மனதில் இருந்துவந்த வீண் கவலைகள் குறையும். செய்தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். போட்டித்தேர்வுகளில் சாதகமான சூழல் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான அனுகூலமான சூழல் உண்டாகும். தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க முயல்வீர்கள். நிறுவனங்களில் புதிய நபர்களுக்கு வாய்ப்புகள் அளிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மூலம் : கவலைகள் குறையும்.


பூராடம் : அனுகூலமான நாள்.


உத்திராடம் : தடைகள் அகலும்.

---------------------------------------




மகரம்

மார்ச் 31, 2021



பிள்ளைகளால் சுபவிரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் நினைத்த லாபம் கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இளைய சகோதரர்களால் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். பணியில் மாற்றங்கள் நேரிடும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : லாபகரமான நாள்.


திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.


அவிட்டம் : மாற்றங்கள் நேரிடும்.

---------------------------------------




கும்பம்

மார்ச் 31, 2021



உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். தொழிலை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகளை செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான சூழல் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


சதயம் : முயற்சிகள் மேம்படும்.


பூரட்டாதி : திருப்தியான நாள். 

---------------------------------------




மீனம்

மார்ச் 31, 2021



செய்யும் பணிகளில் சற்று கவனமாக செயல்படவும். உடனிருப்பவர்களின் பிரச்சனைகளில் ஈடுபடுவதால் அவச்சொல் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். தாயாரின் உடல்நிலை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் ஆரஞ்சு



பூரட்டாதி : கவனம் வேண்டும்.


உத்திரட்டாதி : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


ரேவதி : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------


இன்றைய செய்திகள் தொகுப்பு... 30.03.2021(செவ்வாய்)...

 


🌹இன்று கை கொடுக்க 

யாரும் இல்லை என்று வருந்தக்கூடாது.

ஏனெனில் 

நாளை கை தட்ட உலகமே காத்திருக்கும் நீங்கள் முயற்சி செய்தால் என்பதை மறந்து விடக்கூடாது.!

🌹🌹உதட்டுக்கும் உள்ளத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் 

உதடு சொல்லத் துடிக்கும் 

உள்ளம் சொல்லாமல் துடிக்கும்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀தமிழகத்தில் தற்போது இரண்டாம் அலை கொரோனா தொற்று - பள்ளிகளில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

🎀🎀பள்ளி, கல்லூரிகளை மூடப்போவதில்லை: கர்நாடக அரசு

🎀🎀92 தொழிற்கல்வி தற்காலிக ஆசிரியர் நிலை 1 பணியிடங்களை மூன்றாண்டுகளுக்கு  தொடர் நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு

🎀🎀193 வேளாண்மை தொழிற்கல்வி தற்காலிக  ஆசிரியர்கள் பணியிடங்களை ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு

🎀🎀வங்க கடலிலும், அரபிக்கடலிலும் ஒரே நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்: சென்னை வானிலை மையம்

🎀🎀மே 1 வரை ‌அஞ்சல் வாக்குகளை கட்டணமின்றி அஞ்சலகம் மூலமாக அனுப்பலாம்

🎀🎀 தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஜாக்டோ ஜியோ கோரிக்கை மனு.

🎀🎀PAN(பான் நம்பரை) - AADHAAR Card (ஆதார் எண்ணுடன்) இணைக்கப்பட்டுள்ளதா- மார்ச் 31, 2021 அன்றே கடைசி தேதி.

🎀🎀சமையலர், உதவியாளருக்கு தேர்தல் பணி|( தேர்தல் அலுவலர் கிரேடு 2 ) மிகுந்த சிரமங்களையும், குழப்பங்களுக்கும், தடுமாற்றத்தை தான் வழிவகுக்கும் - சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு. 

🎀🎀தேர்தல் நாளில் வாக்குச்சாவடி அலுவலர்கள், -அரசியல் கட்சியினர் சார்பில் ‘ஸ்பான்சர்’ செய்யப்படும் உணவை சாப்பிட தடை:தேர்தல் கமிஷன்.

🎀🎀உணவு, கழிப்பிடம், போக்குவரத்து- தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு -இம்முறையேனும் தமிழக தேர்தல் ஆணையம் இந்தச் பிரச்னையை சரிசெய்யுமா? என எதிர்பார்ப்பு.

🎀🎀பள்ளிக் கல்வி - அகரம் அறக்கட்டளை வழங்கும் அகரம் விதைத் திட்டம் - தகுதியுள்ள 12ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

🎀🎀சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்தின் முதல் தளத்தில் தீ விபத்து - 30க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள், துறை தொடர்பான ஆவணங்கள் எரிந்து நாசம் என தகவல்.                                                        

🎀🎀தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு ஏப் 7 விடுப்பு தர ஜாக்டோ - ஜியோ கோரிக்கை

🎀🎀தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் பள்ளியில் நடத்த இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 

🎀🎀NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வை நாடு முழுவதும் நடத்த கோரிக்கை. மத்திய அரசு டெல்லியில் டெல்லியில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என  அறிவித்துள்ளது.

🎀🎀தமிழகத்தில்  தேர்தலுக்காக 44,578 (50%) வாக்குச்சாவடிகளில் CCTV  கேமரா பொருத்தப்படும் நடவடிக்கை தொடங்கியது. மீதமுள்ள 50% வாக்குசாவடிகளில் வீடியோ காமிராவில் தேர்தல் நிகழ்வுகள் பதிவு செய்யப்படும்.

🎀🎀பொதுத்தேர்வு நடத்தும் முன்பு, மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரித்து, மாடல் தேர்வு நடத்தினால், மாணவர்கள் கற்றல் நிலை தெரியவரும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது 

🎀🎀தென் மாவட்டங்களில் இன்றும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்.                                                                  

 🎀🎀அடி மனதில் இருந்து வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்: ஆ.ராசா

எனது பேச்சால் முதல்வர் காயப்பட்டார் என்ற செய்தியை நாளிதழ் வாயிலாக படித்து மிகுந்த மன வேதனை அடைகிறேன். இடப் பொருத்தம் இல்லாமல் சித்தரிக்கப்பட்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சுக்காக, அடி மனதில் இருந்து வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் . இன்னும் ஒரு படி மேலே போய் சொன்னால், முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல், உள்ளபடியே காயப்பட்டு இருப்பதாக உணர்வாரேயானால், எனது மனம் திறந்த மன்னிப்பு கோருவதில் எனக்கு சிறிதும் தயக்கம் இல்லை. முதல்வருக்கும் அவரது கட்சிக்காரர்களுக்கும், நடுநிலையாளர்களும் நான் மீண்டும் குறிப்பிட விரும்புவது , எனது பேச்சு இரண்டு தனி நபர்கள் பற்றிய தனிநபர் விமர்சனம் அல்ல. பொது வாழ்க்கையில் இரண்டு அரசியல் ஆளுமைகள் குறித்த மதிப்பீடு தான். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

🎀🎀மத்திய அரசின் வீடு கட்ட மானியத்தொகை – மார்ச் 31 கடைசி தேதி

🎀🎀மத்திய அரசு அதிமுகவுக்கு ஆதரவாகவும், தமிழக மக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது: மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்

மத்திய அரசு தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் சென்னையில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரசார கூட்டத்தில் பேசிய பிரகாஷ் காரத், எடப்பாடி பழனிசாமி அரசு சுதந்திரமான அரசாக இல்லாமல் அடிமை அரசாக உள்ளது. இந்த அரசின் கட்டுப்பாடு நரேந்திரமோடி மற்றும் அமித்ஷாவின் கைகளில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

🎀🎀மக்களை கண்டுக்கொள்ளாத அதிமுக அரசுக்கு பாடம் புகுட்டுங்கள் என மேலூர் அணைக்கட்டு பகுதியில் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக கூட்டணி 234 தொகுதியிலும் வெல்லும் எனவும்  கூறியுள்ளார்.

🎀🎀வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்திற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு.

₹33 லட்சம் அபராதமும், சொத்துக்களை அரசுடமை ஆக்கவும் நீதிபதி தீர்ப்பு

🎀🎀மோடியின் வித்தை  தமிழகத்தில் செல்லுபடி ஆகாது

-திருச்சி சிவா

🎀🎀சிறுபான்மையினர் பாதுகாவலர் போல் பழனிசாமி நாடகமாடுகிறார்: 

-மு.க. ஸ்டாலின்

🎀🎀பகல் கொள்ளையர்கள் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரிடம் இருந்து தேசத்தை பாதுகாக்க மு.க.ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் 

திருக்குவளையில் சி.பி.எம். பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி  பேச்சு

🎀🎀அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டி இடுவதால் இரட்டை இலை இருக்காது தாமரை தான் இருக்கும் 

காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா பேச்சு.

🎀🎀வாணியம்பாடி பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் திடீரென வாணியம்பாடி பேருந்து நிலையத்திலிருந்து முக்கிய சாலையான சி.எல் ரோடு  வழியாக வீதி வீதியாக நடந்து சென்று திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நயிம் அகமது ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஸ்டாலின் திடீர் வருகையால் பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

🎀🎀இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு நடராஜன் வீசிய யார்க்கர் பந்துகள் முக்கிய காரணம்: மைக்கேல் வாகன்.

👉இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்படன் மைக்கேல் வாகன் புகழாரம் சூட்டியுள்ளார். இங்கிலாந்து எதிரான இறுதிப்போட்டியில் சிறப்பான யார்க்கர் பந்துகளை நடராஜன் வீசியுள்ளார் என குறிப்பிட்டார். இறுதி ஓவரில் நெருக்கடியான நேரத்தில் யார்க்கர் வீசி 6 ரன்களை மட்டுமே நடராஜன் கொடுத்துள்ளார் என கூறினார். இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு நடராஜன் வீசிய யார்க்கர் பந்துகள் முக்கிய காரணம் என கூறினார்.

🎀🎀அமைச்சர் பதவியை பயன்படுத்தி திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு கே.சி.வீரமணி எதுவும் செய்யவில்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பி.எஸ் மற்றும் உறவினர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. 

அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டிலும் சோதனை நடத்தி மத்திய பாஜக அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டது. 

தனது கல்லூரிக்காக மணல் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு விதிமீறலை தைரியமாக செய்தவர் தான் அமைச்சர் வீரமணி. 

கொள்ளை அடிப்பதையே குறிக்கோளாக வைத்துள்ளார் அமைச்சர் கே.சி.வீரமணி என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

கொள்ளை அடித்த கே.சி.வீரமணியை தேர்தலில் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.                 

🎀🎀பாஜக - அதிமுக கூட்டணிக்கும் எதிரான போர்தான் இத்தேர்தல்; மொத்த தமிழகமும் திமுக ஆட்சியை எதிர்பார்க்கிறது : 

மு.க.ஸ்டாலின் ட்வீட்

🎀🎀டெல்லி துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்

🎀🎀ஆளும் கட்சியினர் தொண்டர்களை நம்பி இல்லை;ரூபாய் நோட்டுகளை நம்பியே உள்ளனர் 

டிடிவி தினகரன்

🎀🎀இனி என்னுடைய அரசியல் பயணம்

ஆன்மீக அரசியல் பயணம் 

டி ராஜேந்தர்

🎀🎀தமிழக சட்டமன்ற தேர்தலில் 88,947 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும்.

ஏப்ரல் 6 -ம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கு தயார் 

தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி.

🎀🎀நாளுக்கு ஒரு தள்ளுபடி அறிவிப்பை வெளியிடுகிறார் பழனிசாமி

ப.சிதம்பரம்

🎀🎀வேலுமணி, தங்கமணி, வீரமணி.. 

மூன்று பேர் பெயரிலுமே money இருப்பதால்,  கொள்ளையடிப்பதிலேயே மும்முரமாக இருக்கின்றனர் 

- மு.க.ஸ்டாலின்

🎀🎀தன்னை விவசாயி என்று சொல்லிக்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி, அவர் விவசாயி அல்ல விஷவாயு

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

🎀🎀நாடு முழுவதும் வேளாண் சட்டங்களை அமல்படுத்த அதிமுக, பாமக ஆகிய கட்சிகள்தான் துணை நின்றன

குடியுரிமை திருத்த சட்டம் எக்காரணத்தைக் கொண்டும் அமல்படுத்தப்படாது 

சிறுபான்மையினருக்கு ஆதரவாக திமுக எப்போதும் குரல் கொடுக்கும் 

- ஸ்டாலின்

🎀🎀திருச்சி தேர்தல் ரத்து செய்யப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.

திருச்சி ஆட்சியர்  திவ்யதர்ஷினி

🎀🎀அதிமுக ஆட்சியில் சென்னையில் நல்ல சாலை வசதி, மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் அகற்றுதல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது.

-எடப்பாடி பழனிச்சாமி

🎀🎀பிரதமர் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் இன்று ஒருநாள் 144 தடை உத்தரவு

🎀🎀தன் தாயை தவறாக ராசா பேசிட்டார்னு முதல்வர் அழுகிறார். உங்களை ஒருத்தவங்க முதல்வராக்கிட்டு, சிறைக்கு போனாங்க. ஞாபகம் இருக்கா ? இன்னிக்கு சசிகலா யார்னு கேள்வி கேட்குறீங்க. ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்துட்டு, இப்ப பெண்களுக்காக அழுவது போல பேசுறீங்க

-டிடிவி தினகரன்

🎀🎀முதல்வர் கண்ணீர் வடித்தார், ஆ.ராசா மன்னிப்பு கேட்டு விட்டார்; 10 ஆண்டுகள் தமிழக மக்களின் உரிமைகளை பறித்துக் கொண்டதற்கு முதல்வர் மன்னிப்பு கேட்பாரா? 

- மதுரையில் சி.பி.எம்.  எம்.பி. சு.வெங்கடேசன் பேச்சு

🎀🎀அமைச்சர் எம்.சி சம்பத் உறவினரின் வீட்டிலிருந்து ரூ.11 கோடி ரொக்கம் பறிமுதல்.

🎀🎀குஷ்புவைத் தேர்ந்தெடுத்தால் டெல்லி வரை சென்று உரிமையுடன் பேசுவார் - முதல்வர் பழனிசாமி பேச்சு

🎀🎀மணப்பாறை அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் 

வீட்டில்  ஜேசிபி  டிரைவராக  வேலை பார்க்கும்  அழகர்சாமியிடம்  இருந்து  

ஒரு  கோடி  பறிமுதல்  செய்தது  வருமானவரித்துறை

🎀🎀வேளாண் சட்ட நகலை எரித்து தில்லியில் விவசாயிகள் ஹோலி கொண்டாட்டம்.

🎀🎀தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் சட்டம் ஒழுங்கு இரும்பு கரம் கொண்டு பாதுகாக்கப்டும், காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும்

- வேலூரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சு

🎀🎀ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்காதீர்கள் உழைத்து சம்பாதிக்கும் ரூ.10 மேலானது 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேச்சு

🎀🎀மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று. மீண்டும் முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என உத்தவ் தாக்கரே எச்சரிக்கை.

🎀🎀சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில்

இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்;

தேர்தல் பரப்புரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்.

🎀🎀முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் குற்றச்சாட்டு.

🎀🎀அதிமுக, திமுக வெல்வது வெறும் நிகழ்வு! நாம் தமிழர் வென்றால் அது புரட்சி; நாம் தமிழர் கட்சியின் தலைமை

ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை.

🎀🎀மக்களால்தான் மக்கள் நீதி மய்யம் என்ற 3 வயது குழந்தை எழுந்து நடந்து ஓடுகிறது; தேர்தல் பரப்புரையில் மநீம தலைவர் கமல்ஹாசன் உரை.

🎀🎀புதிய கொரோனா வைரஸ் உருமாற்றம் குறித்து பிரிட்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஆய்வு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

🎀🎀மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 114 பேர் ஒரே நாளில்

சுட்டுக்கொலை; அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

தமிழகத்தில் தற்போது இரண்டாம் அலை கொரோனா தொற்று - பள்ளிகளில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

 


தமிழகத்தில் தற்போது இரண்டாம் அலை கொரோனா தொற்று - பள்ளிகளில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்...

>>> தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனர் கடிதம்...


பள்ளிக் கல்வி - அகரம் அறக்கட்டளை வழங்கும் அகரம் விதைத் திட்டம் - தகுதியுள்ள 12ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...



 >>> பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & அகரம் விதைத் திட்டம் விண்ணப்பப் படிவம் ...

தேர்தல் பணி அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 7ஆம் தேதி விடுப்பு அளிக்க கோரிக்கை...

 சட்டசபை தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தேர்தலுக்கு மறுநாள் விடுப்பு வழங்க வேண்டும் என, ஜாக்டோ - ஜியோ (JACTTO GEO) கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது.



இந்த கூட்டமைப்பினர், மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் அளித்து உள்ள மனு:சட்டசபை தேர்தல் பணியில் உள்ள, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வந்த பல ஆசிரியர்களுக்கு, விண்ணப்பித்தும் தபால் ஓட்டு கிடைக்கவில்லை. அவர்களின் சட்டசபை தொகுதியும் பிரித்து காட்டப்படவில்லை. கடைசி தேர்தல் வகுப்புக்கு முன் தபால் ஓட்டுகளை வழங்க வேண்டும்.


ஓட்டுப்பதிவு, காலை, 7:00 மணி முதல், மாலை, 7:00 மணி வரை நடப்பதால், தேர்தல் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு, போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும்.கொரோனா பரவல் காலமாக, தேர்தல் பணியாளர்களுக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதி மற்றும் சுகாதார வசதிகள் செய்து தர வேண்டும்.தேர்தலை முடித்து, அதற்கான பொருட்களை ஒப்படைக்கும் பணிகள், அடுத்த நாள் வரை நடப்பதால், தேர்தல் பணி பார்க்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஏப்.,7ல் விடுமுறை அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

>>> ஜாக்டோ ஜியோ கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி...

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று ஆசிரியர்கள், பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.




நடப்பு ஆண்டு கரோனா பரவல்காரணமாக தமிழக பள்ளிக்கல்விபாடத்திட்டத்தில் 9, 10-ம் வகுப்புகள் மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதேநேரம் உயர் கல்வியை கருத்தில் கொண்டு பிளஸ் 2 வகுப்புக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 3 முதல் 21-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.



இதற்கிடையே மாநிலம் முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தஞ்சாவூர்உள்ளிட்ட சில மாவட்டங்களில் தனியார் பள்ளிகளில் மாணவர்கள்,ஆசிரியர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக 9, 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு நேரடி கற்பித்தல் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


பொதுத்தேர்வு இருப்பதால் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் தற்போது நேரடி வகுப்புகள் தொடர்கின்றன.


மறுபுறம் நோய் பரவலின் தீவிரம் தினமும் உயர்வதால் மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. இதை தவிர்க்க பிளஸ் 2மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.


இதுதொடர்பாக பெற்றோர் சிலர் கூறும்போது, ‘‘பெரும்பாலானபள்ளிகள் கரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை. வகுப்பறையில் முகக்கவசத்தை கழற்றிவைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.அதனால் பிள்ளைகள் தினமும்பாதுகாப்பாக பள்ளி சென்று திரும்புவதே சிக்கலாகியுள்ளது. எனவே பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து தேர்ச்சி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இல்லையெனில் பள்ளிகளில் உரிய பாதுகாப்பு வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.


ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் பே.சந்தானம் கூறியதாவது:


தற்போதைய சூழலில் நோய்த் தொற்று பரவலுக்கான சாத்தியங்கள் அதிகரித்துவிட்டன. இவற்றில் இருந்து மாணவர்களை பாதுகாத்து தேர்வுக்கு தயார்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால், தேர்தலில் மட்டுமே அரசியல் கட்சிகளின் கவனம் இருக்கிறது. பள்ளிகளில் மட்டுமல்ல பொதுவெளியில்கூட பலர் முகக்கவசத்தை முறையாக அணிவதில்லை. இதனால் பெற்றோர் மத்தியில் அச்சம் நிலவுகிறது. அதேநேரம் பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்தால் மாணவர்கள் உயர்கல்வி செல்வதில் சிக்கல்கள் ஏற்படும். அதனால் உரிய பாதுகாப்புகளுடன் தேர்வை நடத்த கல்வித் துறை முன்வரவேண்டும்.


இளைஞர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் என்பதற்காக அலட்சியமாக இருக்கக்கூடாது. மாணவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டால் குறைந்தபட்சம் இருவாரங்கள் கற்றல் தடைபடும். மேலும், மே மாதம் பாதிப்பு ஏற்பட்டால் தேர்வெழுத முடியாத நிலை உருவாகும். அது உளவியல் ரீதியாக மாணவர்களுக்கு பின்னடைவை தரும். தற்போது தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


அதேபோல், தேர்வெழுதும் மாணவர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை அரசு இலவசமாக போட வேண்டும். அதன்பின் மாணவர்கள் தொற்றுக்கு ஆளானாலும் பெரிய பாதிப்பு இருக்காது. மேலும், வழக்கமான முறையை மாற்றி எளிய வடிவில் தேர்வை நடத்த வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


தமிழகம் முழுவதும் சுமார் 8.5 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2தேர்வெழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு ? தமிழக அரசு தொடர் ஆலோசனை...

 தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500-க்கும் கீழ் இருந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் அதிகமாகியுள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.


பள்ளி, கல்லூரிகள் திறப்பு , தேர்தல் பிரசாரத்தால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் ஏப்ரல் 2-வது வாரம் முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, தனியார் துறை ஊழியர்களை வீட்டில் இருந்து பணியமர்த்தல் ஆகியவை அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை, கோவை, செங்கல்ப்பட்டு உள்ளிட்ட கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.


கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட 4 ஆம் மற்றும் 5-ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் மீண்டும் செயல்படுத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 4-ம், 5-ம் கட்ட ஊரடங்கு தளர்வுப்படி வழிபாட்டு தலங்கள், மத நிகழ்ச்சிகள், அரசியல், சமூக நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. 


பொதுப்போக்குவரத்தில் சில கட்டுப்பாடுகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவிவரும் நிலையில் பள்ளி விடுமுறை மற்றும் சனிக்கிழமை விடுமுறை பற்றி RTI விளக்கம்...









தபால் வாக்கை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக ஆசிரியை தற்காலிக பணி நீக்கம்...

 


சட்டமன்ற தேர்தலில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள்  தங்கள் தபால் வாக்குகளை செல்போனில் படம் எடுத்துக் கொண்டாலும் அதை வாட்ஸ்அப் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் எதையும் வைக்காதீர்கள் எந்த ஒரு முகநூல் பக்கத்திலும் பதிவிட வேண்டாம் தென்காசி மாவட்டத்தில் ஸ்டேட்டஸ் வைத்த பெண் ஆசிரியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் தாங்கள் அளித்த வாக்குச் சீட்டின் விவரங்களை மற்றவருடன் பகிர வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தென்காசி மாவட்டக் கல்வி அலுவலரின் ந.க.எண்: 630/ அ1/ 2021, நாள்: 28-03-2021...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 - தேர்தல் விதிமுறைகளை மீறியமைக்காக கீழப்பாவூர் வட்டாரம் ஆர்.சி நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் திருமதி. சகாய ஆரோக்கிய அனுஷ்டாள்‌ என்பார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல் சார்பு

>>> தென்காசி மாவட்டக் கல்வி அலுவலரின் ந.க.எண்: 630/ அ1/ 2021, நாள்: 28-03-2021...




இன்றைய (30-03-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்



மேஷம்

மார்ச் 30, 2021



மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தனவரவுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பார்கள். நண்பர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : புத்துணர்ச்சியான நாள்.


பரணி : விருப்பங்கள் நிறைவேறும்.


கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------




ரிஷபம்

மார்ச் 30, 2021



சமூகப்பணிகளில் இருப்பவர்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவு ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.


ரோகிணி : தெளிவு ஏற்படும்.


மிருகசீரிஷம் : முயற்சிகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மிதுனம்

மார்ச் 30, 2021



மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்களின் வழியில் இருந்துவந்த மருத்துவ செலவுகள் குறையும். வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் நிறைவேறும். தொழில் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் அதிகரிக்கும். வியாபார அபிவிருத்தி தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : விருப்பங்கள் நிறைவேறும்.


திருவாதிரை : செலவுகள் குறையும்.


புனர்பூசம் : அபிவிருத்தியான நாள்.

---------------------------------------




கடகம்

மார்ச் 30, 2021



உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய தொழில் தொடர்பான திட்டங்கள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், ஒற்றுமையும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நிலுவையில் இருந்துவந்த சரக்குகள் விற்பனையாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும்.


பூசம் : திட்டங்கள் நிறைவேறும்.


ஆயில்யம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------




சிம்மம்

மார்ச் 30, 2021



சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், ஆதரவும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


பூரம் : மாற்றங்கள் ஏற்படும்.


உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 

---------------------------------------




கன்னி

மார்ச் 30, 2021



சகோதரர்களுக்கிடையே ஒற்றுமையும், ஆதரவும் கிடைக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில செயல்களை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. வாக்கு சாதுர்யத்தின் மூலம் லாபம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கும், அறிமுகமும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திரம் : ஒற்றுமை மேம்படும்.


அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.


சித்திரை : அறிமுகம் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

மார்ச் 30, 2021



பொருளாதாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். போட்டிகளில் கலந்துகொண்டு பாராட்டுகளை பெறுவீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய தெளிவு ஏற்படும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திக்கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



சித்திரை : முன்னேற்றமான நாள்.


சுவாதி : பாராட்டுகளை பெறுவீர்கள்.


விசாகம் : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------




விருச்சகம்

மார்ச் 30, 2021



நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தொழிலை விரிவுப்படுத்துவது தொடர்பான சிந்தனைகளும், முதலீடுகளும் மேம்படும். புதிய பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும். ஒருசிலர் எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். நண்பர்களுடன் கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



விசாகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


அனுஷம் : முதலீடுகள் மேம்படும்.


கேட்டை : இடமாற்றங்கள் சாதகமாகும்.

---------------------------------------




தனுசு

மார்ச் 30, 2021



திட்டமிட்ட காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நடைபெறும். தனவரவுகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும். வாரிசுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : எண்ணங்கள் நிறைவேறும்.


பூராடம் : நெருக்கம் அதிகரிக்கும்.


உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




மகரம்

மார்ச் 30, 2021



குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். தடைபட்டு வந்த சுபகாரியங்கள் கைகூடும். விலகி சென்ற உறவினர்கள் விரும்பி வருவார்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பெயரும், செல்வாக்கும் அதிகரிக்கும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திராடம் : தடைகள் நீங்கும்.


திருவோணம் : செல்வாக்கு அதிகரிக்கும்.


அவிட்டம் : லாபம் மேம்படும்.

---------------------------------------




கும்பம்

மார்ச் 30, 2021



முயற்சிக்கேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வீடு கட்டுவதற்கான எண்ணங்கள் நிறைவேறும். எதிர்பாராத உபரி வருமானங்கள் மேம்படும். குழந்தைகள் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்பட்டாலும் லாபம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


சதயம் : வருமானம் மேம்படும்.


பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




மீனம்

மார்ச் 30, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய தொழில் தொடங்குவது தொடர்பான எண்ணங்கள் காலதாமதமாகும். பெற்றோர்களின் உடல்நிலையில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும்.


ரேவதி : கவனம் வேண்டும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 29.11.2024

  கனமழை காரணமாக 29-11-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools &am...