கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.07.2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.07.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம்: கல்லாமை

குறள் எண்:410

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.

பொருள் :அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர்,
மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.


பழமொழி :
Fair words butter no parsnips.

சர்க்கரை என்றால் தித்திக்குமா?


இரண்டொழுக்க பண்புகள் :

* போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

* என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.



பொன்மொழி :

" தோல்விகளுக்கு இடையில் தான் வாய்ப்புகள் மறைந்திருக்கின்றன ; அதனால் தோல்விகளைக் கண்டு அஞ்சாதே"----ஆல்பர்ட் ஐன்ஸ்டின்


பொது அறிவு :

1. நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது?

விடை: டால்பின்


2. உலகில் அதிகூடிய விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது?

விடை: ஸ்டான் பிஷ்



English words & meanings :

amiable-நட்பு,

affable- நட்புணர்வுள்ள



வேளாண்மையும் வாழ்வும் :

ஆனால் இயற்கை வேளாண்மை மண்ணையும் மனிதர்களையும் பாதுகாக்கும் சிறந்த வேளாண்மை முறையாகும்.



ஜூலை 04

மேரி க்யூரி அவர்களின் நினைவுநாள்

மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Salomea Skłodowska-Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934[1]) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார்.

இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903[2], 1911[3] ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்



நீதிக்கதை

ரகசியம் என்ன?

ஒரு நாட்டின் சிறந்த கோதுமையை உற்பத்தி செய்யக்கூடிய விவசாயி ஒருவரை பேட்டி எடுக்க பத்திரிக்கையாளர் ஒருவர் சென்றார்.

விவசாயிடம் பத்திரிக்கையாளர் "எப்படி உங்களால் மட்டும் தரமான கோதுமையை உற்பத்தி செய்ய முடிகிறது"? என்று கேட்டார்.

அதற்கு அந்த விவசாயி, "என்னுடைய பக்கத்து வயலில் உள்ளவர்களுக்கும் என்னிடம் உள்ள தரமான,சிறந்த  கோதுமை விதைகளை கொடுத்து  பயிரிடச் சொன்னேன். அதுதான் என்னுடைய வெற்றியின் ரகசியம்" என்று கூறினார்.

அதற்கு பேட்டி எடுப்பவர் ".அது எப்படி?,அவர்களுக்கும் தரமான விதைகளை  கொடுத்தால் அவர்களும் உங்களுக்கு போட்டியாக வந்து விடுவார்கள் அல்லவா?,  என்று கேட்டார்.

அதற்குஅவர்,"காற்று வீசும் போது ஒரு செடியில் உள்ள மகரந்தம் ஒரு வயலில் இருந்து பக்கத்து வயலில் உள்ள செடி வரைக்கும்  பரவும். அவர்கள் தரம் குறைந்த கோதுமைகளை பயிரிட்டால் அதிலிருந்து வரக்கூடிய மகரந்தம் என்னுடைய பயிரையும் பாதிக்கும். எனவே அவர்களுக்கும்  தரமான விதைகளை கொடுத்து பயிரிட செய்வேன்", என்றார்.

"அதனால்,நான் தரமான கோதுமையை உற்பத்தி செய்ய வேண்டுமானால் என்னை சுற்றி இருப்பவர்களும் தரமான கோதுமையே உற்பத்தி செய்ய வேண்டும்", என்றார்.

அதுபோல் நாமும் சந்தோஷமான வாழ்க்கை வாழ,நம்மை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.



இன்றைய செய்திகள்

04.07.2024

# குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம்: தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் பதிவு.

# தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் மூலமாக ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

# சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ் பாடத்திட்ட பள்ளிகள் கட்டாயக்கல்வி சட்ட இடஒதுக்கீடு வரையறைக்குள் வராது என்பதால் 25 சதவீத ஒதுக்கீடு வழங்கும்படி கோர முடியாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

# மேகாலயாவில் தொடங்கியது இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி.

# அசாம் வெள்ளம்: 28 மாவட்டங்களில் 11.34 லட்சம் மக்கள் பாதிப்பு; 38 பேர் உயிரிழப்பு.

# அமெரிக்க அதிபர் தேர்தல்.. பைடனை விட கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்: சி.என்.என். கருத்துக்கணிப்பு.

# டி20 தரவரிசை: ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா.

# ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: நெதர்லாந்து காலிறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines

# Cooking gas supply to homes through pipeline: 30 thousand registered across Tamil Nadu.

# Chief Minister Stalin released 100 legal books translated from English into Tamil by the Tamil Nadu State Legal Official Language Commission.

# The Tamil Nadu government has informed the High Court that CBSE and ICS curriculum schools do not fall under the compulsory education law reservation limits and cannot claim 25 per cent quota.

# India-Mongolia joint military exercise begins in Meghalaya

# Assam floods: 11.34 lakh people affected in 28 districts;  38 people lost their lives.

# US presidential election.. Kamala Harris has a better chance of winning than Biden: CNN  Survey.

# T20 rankings: Indian player Hardik Pandya tops the all-rounders list.

# European Football Championship: Netherlands advance to quarter-finals.

Prepared by

Covai women ICT_போதிமரம்


Teachers Transfer Counseling 2024 - இன்று ( 04.07.2024 ) யாருக்கு?


Teachers Transfer Counseling 2024 - இன்று ( 04.07.2024 ) யாருக்கு?


DEE - தொடக்கக் கல்வித்துறை


04.07.2024 வியாழன்கிழமை தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்  பணிமாறுதல் கலந்தாய்வு. ( வருவாய் மாவட்டத்திற்குள்) 



நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு( வருவாய் மாவட்டத்திற்குள்) 


பள்ளிக்கல்வித்துறை (DSE)


 முன்னுரிமை  பட்டியலில் திருத்தம் (முறையீடுகள் ஏதும் இருப்பின் )



கரூர் மாவட்டப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு - குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் செய்தி வெளியீடு...

 கரூர் மாவட்டப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு - குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் செய்தி வெளியீடு...





அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வேண்டி 03-07-2024 அன்று நடைபெற்ற TETOJAC மறியல் போராட்டம் குறித்த செய்தித் தொகுப்பு...

 

அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வேண்டி 03-07-2024 அன்று நடைபெற்ற TETOJAC மறியல் போராட்டம் குறித்த செய்தித் தொகுப்பு...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



TNSED Schools App New Version: 0.1.6 - Updated on 03-07-2024 - MHT Screening. EE and Bus pass Module Changes...

 

TNSED schools App


What's is new..?




*🎯 MHT Screening. EE and Bus pass Module Changes...


*🎯Bug Fixes and Performance Improvement....


*_UPDATED ON  03 July 2024


*_Version: Now 0.1.6


Link:

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.07.2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.07.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம்:கல்லாமை

குறள்எண்: 409

மேல்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.

பொருள்: கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்வி கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.

பழமொழி :
Distance lends enchantment to the view.

இக்கரைக்கு அக்கரைப் பச்சை.


இரண்டொழுக்க பண்புகள் :

* போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

* என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.



பொன்மொழி :

" நேர்மறை எண்ணங்களே சாதனைக்கு வழிகாட்டும் "-----ஹெலன் கெல்லர்


பொது அறிவு :

1. தலையில் இதயத்தைக் கொண்டுள்ள உயிரினம் எது?


விடை: இறால்

2. மீன்கள் இல்லாத ஆறு?

விடை: ஜோர்டான் ஆறு



English words & meanings :

appease- சமாதானம்,

mollify- சினத்தை குறை


வேளாண்மையும் வாழ்வும் :

இவை மனிதர்களின் உடலை தாக்குவதோடு சுற்றுப்புற சூழலையும் மாசடைய செய்கின்றன. செயற்கை உரங்கள், பூச்சி மருந்துகள் செடிகளுக்கு விஷ தன்மையை கொடுக்கிறது.



ஜூலை 03

சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்

2008 ஆம் ஆண்டில், இத்தாலியில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளின் குழு, ரெஸெரோவின் தலைமையில், பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், உலகளாவிய பிரச்சாரத்தைத் தொடங்கவும் முடிவு செய்தது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான வலுவான வழக்கறிஞரான, புகழ்பெற்ற பாதுகாவலர் சர் டேவிட் அட்டன்பரோவின் பிறந்தநாளை ஒட்டி, ஜூலை 3-ஆம் தேதி, முதல் சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வு வெற்றிகரமாக இருந்தது, முதன்மையாக இத்தாலியில் பிளாஸ்டிக் பைகள் இல்லாத மாற்றுகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தியது.


நீதிக்கதை

வருத்தம்

ஒரு காட்டு வழியே இரண்டு நண்பர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இருவர், ஒரு மரத்தில் இருந்த தேனை எடுத்துக் கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்த ஒரு நண்பர்,

" தேனி எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த தேனை சேகரித்து வைத்திருக்கும் . ஆனால் இந்த மனிதர்கள், வெகு சுலபமாக அதனுடைய தேனை திருடி செல்கின்றனர்.இதை நினைத்து அந்தத் தேனீ எவ்வளவு வருத்தப்படும்" என்று கூறினார்

அதுக்கு மற்றொரு நண்பர் "கண்டிப்பாக அந்த தேனி அவ்வாறெல்லாம் வருத்தப்படாது. ஏனென்றால் மனிதர்களால் அந்த தேனை மட்டுமே திருட முடியும். ஆனால் அந்த தேனை உருவாக்கும் கலையை  தேனீயிடம் இருந்து திருட முடியாது.  திரும்பவும் தன்னால் தேனை  உருவாக்க இயலும் திறமையுள்ள  தேனீ,  ஒரு நாளும் வருத்தப்படாது என்று கூறினார்.

அதுபோல்தான்,  உங்களிடம் உள்ள செல்வத்தையோ,  உழைப்பையோ எவராலும் திருட முடியும். ஆனால்  உங்களிடம் திறமையும், வெற்றி பெறும் திறனும் இருந்தால் எதையும் சாதிக்க இயலும்.



இன்றைய செய்திகள்

03.07.2024

# சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள்: நாடு முழுவதும் 14,627 பட்டதாரிகள் தேர்ச்சி; தமிழகத்தில் 650 பேர் தேர்வு.

# தமிழக அரசின் விண்வெளி வரைவு கொள்கை வெளியீடு: மதுரை, தூத்துக்குடி, நெல்லை வளர்ச்சிக்கு முக்கியத்துவம்.

# மருத்துவத்தில் சிறப்பாக சேவை ஆற்றிய 105 மருத்துவர்களுக்கு விருதுகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

# கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்ள தாய்லாந்து புறப்பட்டது இந்திய ராணுவக் குழு.

#;ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: ஜார்ஜியாவை வீழ்த்தி ஸ்பெயின் காலிறுதிக்கு தகுதி.

# விம்பிள்டன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா.


Today's Headlines

# Civil Service Prelims Results: 14,627 graduates passed across the country;  650 candidates got passed in Tamil Nadu.

#  Tamil Nadu Government's Draft Space Policy Released: Importance is given for the Development of Madurai, Thoothukudi, Nellai.

#  Health Minister M. Subramanian presented awards to 105 doctors for their outstanding service in medicine.

# Indian army team leaves for Thailand to conduct joint military exercise.

# European Football Championship: Spain beat Georgia to reach quarter-finals

# Wimbledon Tennis: USA's Jessica Pegula advanced to 2nd round.

Prepared by

Covai women ICT_போதிமரம்


அரசுப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.300 வழங்குவதாக அழைப்பு...

 

அரசுப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.300 வழங்குவதாக அழைப்பு...




ஒருமையில் பேசிய மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்...


 ஒருமையில் பேசிய மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் (நாளிதழ் செய்தி)...



அரசுப்பள்ளியில் மாணவியை அறைந்த ஆசிரியை பணியிடை நீக்கம்...

 

 ஜோலார்பேட்டை அருகே அரசுப்பள்ளியில் மாணவியை அறைந்த ஆசிரியை பணியிடை நீக்கம்...



ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடத்த எதிர்ப்பு - இன்று மறியல் போராட்டம் (நாளிதழ் செய்தி)...


 ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடத்த எதிர்ப்பு - இன்று மறியல் போராட்டம் (நாளிதழ் செய்தி)...



பள்ளிக் கல்வித் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு (Non Teaching Staff) கட்டாய இடமாறுதல் - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் DSE செயல்முறைகள் மற்றும் அரசாணை (நிலை) எண்: 149 , நாள்: 01-07-2024...

 

G.O. Ms. No: 149 , Dated: 01-07-2024...


பள்ளிக் கல்வித் துறையில்  3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு (Non Teaching Staff) கட்டாய இடமாறுதல்  - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் DSE செயல்முறைகள் மற்றும் அரசாணை (நிலை) எண்: 149 , நாள்: 01-07-2024...



>>> பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் DSE செயல்முறைகள் மற்றும் அரசாணை (நிலை) எண்: 149 , நாள்: 01-07-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை 2024-2025 - மீதமுள்ள காலி இடங்களை நிரப்புதல் - கல்லூரிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 02-07-2024...

 

 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை 2024-2025 - மீதமுள்ள காலி இடங்களை நிரப்புதல் - கல்லூரிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 02-07-2024...



>>> கல்லூரிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 02-07-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.07.2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.07.2024 - School Morning Prayer Activities...



திருக்குறள்:

பால் :பொருட் பால்

அதிகாரம்:கல்லாமை

குறள் எண்:408

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.

பொருள்: கல்லாதவரிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம்
உள்ள வறுமையை விட மிக்க துன்பம் செய்வதாகும்.


பழமொழி :
Calm before the storm. stoop to conquer.

புலி பதுங்குவது பாய்வதற்கு அடையாளம்.


இரண்டொழுக்க பண்புகள் :

* போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

* என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.



பொன்மொழி :

" பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை தட்டிக் கொடுப்பது மட்டும் தான்"----விவேகானந்தர்


பொது அறிவு :

1. ஒரு தலைமுறை சுமார் எத்தனை ஆண்டுகளை குறிக்கும்?

விடை: 33

2. பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?

விடை: நாக்கு



English words & meanings :


avarice-பண பேராசை

greed- பேராசை



வேளாண்மையும் வாழ்வும் :

ஊட்டச்சத்து குறைந்த காய்கறிகளை, தானியங்களை சாப்பிடுவதால் குழந்தைகள் இளம் வயதிலேயே நோய்வாய்ப்படுகின்றனர்.


ஜூலை 02

உலக விளையாட்டுத் துறை செய்தியாளர்கள் தினம்

சாதி, மதம், இனம், நாடு, மொழி எல்லாவற்றையம் கடந்து மக்களை விளையாட்டால் ஒன்று சேர்க்கும் பணியைச் செய்யும் விளையாட்டு பத்திரிகையாளர்களை கவுரவிக்கும் நாள் இன்று.



நீதிக்கதை

விட்டுக் கொடுத்தல்

பழங்காலத்தில் வேடர்கள் குரங்குகளை பிடிக்க ஒரு யுக்தியை  கையாண்டனர்

குறுகிய வாய்ப்பகுதி கொண்ட கனமான ஒரு கண்ணாடி ஜாடியில் குரங்குகளுக்கு பிடித்த உணவை அடைத்து குரங்குகள் அதிகம் இருக்கும் இடங்களில் வைத்து விடுவார்கள்

குரங்குகள் அதை பார்த்ததும் ஜாடியில் கையை விட்டு உணவை எடுக்க முயலும்.ஆனால் கை வெளியே வராது. அந்தக் கனமான கண்ணாடி ஜாடியை தூக்கவும் முடியாது.

குரங்குகளும் விடாப்பிடியாக உணவை கையில் வைத்துக் கொண்டே கையை எடுக்க முயலும். ஆனால் உணவை விட்டுக் கொடுத்தால் உயிர் பிழைக்கலாம் என்பது அறியாமல் உணவை கெட்டியாக பிடித்துக் கொண்டே இருக்கும். கடைசியில் வேடனிடம் மாட்டிக் கொள்ளும்.

நம் வாழ்வில் ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளவும், அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்லவும்  எந்த இடத்தில் விட்டுக் கொடுக்க வேண்டும், எந்த இடத்தில் கடந்து செல்ல வேண்டும் ,எந்த இடத்தில் நின்று போராடி ஜெயிக்க வேண்டும் என்பதை அறிந்து  செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.



இன்றைய செய்திகள்

02.07.2024

* தமிழக அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடம் மாற்றப்பட்டனர். நீர்வளம், வனத்துறை செயலர்கள் உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் விக்கிரவாண்டி தவிர மற்ற பகுதிகளில் சொத்துக்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பு அமல்.

* சளி, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான 52 மருந்துகள் தரமற்று இருந்தது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

* 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

* வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தியது ஆஸ்திரேலியா.

* மகளிர் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி.

* ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: டென்மார்க்கை வீழ்த்தி ஜெர்மனி காலிறுதிக்கு தகுதி.

* கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் நேற்று தொடங்கியது.


Today's Headlines

* Secretaries of important departments of the Tamil Nadu government have been transferred.  16 IAS officers including Water Resources and Forest Secretaries have been transferred.

* New Guideline Values for properties in Tamil Nadu other than Vikravandi were implemented.

*  The Central Drug Quality Control Board has revealed that 52 medicines for diseases such as cold and high blood pressure were of substandard quality.

* 3 new criminal laws came into effect across the country from yesterday.

* Australia doubles visa fees for foreign students.

* Women's Test: India won the women's test series with South Africa.

* European Football Championship: Germany beats Denmark and has entered quarter-finals.

* Grand Slam Wimbledon tennis started yesterday.

Prepared by

Covai women ICT_போதிமரம்


சொத்துக்களுக்கான புதிய சந்தை மதிப்பு (New Market Value) 01.07.2024 முதல் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது - செய்தி வெளியீடு எண்: 886, நாள்: 01-07-2024...



 சொத்துக்களுக்கான புதிய சந்தை மதிப்பு (New Market Value) 01.07.2024 முதல் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது - செய்தி வெளியீடு எண்: 886, நாள்: 01-07-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியுடையோர் பட்டியலை மாவட்ட வாரியாக ஒப்படைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்...



 மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியுடையோர் பட்டியலை மாவட்ட வாரியாக ஒப்படைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


1-5 வகுப்பு வரை - THB ல் All Subjects செயல்பாடுகள் எண்ணிக்கை - WorkBook ல் நானே செய்வேன், SA, MSA விவரம்...

 

1-5 வகுப்பு வரை - THB ல் All Subjects செயல்பாடுகள் எண்ணிக்கை - WorkBook ல் நானே செய்வேன், SA,  MSA விவரம்... 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாட்டில் இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிடமாற்றம் - அரசாணை G.O. Rt. No. 3238, Dated: 01-07-2024 வெளியீடு...

 

தமிழ்நாட்டில் இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிடமாற்றம் - அரசாணை G.O. Rt. No. 3238, Dated: 01-07-2024 வெளியீடு...


▪️ வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு, மருத்துவத்துறைக்கு மாற்றம்


▪️ மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றம்


▪️ ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார், வனத்துறைக்கு மாற்றம்



>>> Click Here to Download G.O. Rt. No. 3238, Dated: 01-07-2024...


கட்டட முடிவுச் சான்று பெறுவதிலிருந்து விலக்களித்தல் - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செய்தி வெளியீடு...

 


கட்டட முடிவுச் சான்று பெறுவதிலிருந்து விலக்களித்தல் - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செய்தி வெளியீடு...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாறுதல் கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பாகவே பட்டதாரி ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு மாறுதல் வழங்கப்பட்டதால் ஆசிரியர்கள் கொந்தளிப்பு...

மாறுதல் கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பாகவே பட்டதாரி ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு மாறுதல் வழங்கப்பட்டதால் ஆசிரியர்கள் கொந்தளிப்பு...




முசிறி மாவட்டக் கல்வி அலுவலகத்தில் (தொடக்கக்கல்வி) இன்று (01-07-2024) நடைபெற்று வரும் உள்ளிருப்பு போராட்டம் குறித்த காணொளிகள்...




>>> காணொளி 1 - காண இங்கே சொடுக்கவும்...




>>> காணொளி 2 - காண இங்கே சொடுக்கவும்...




>>> காணொளி 3 - காண இங்கே சொடுக்கவும்...


நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு...

 நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு...


கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்காக நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது.


நீட் மறுதேர்வு முடிவுகளை exams.nta.ac.in/NEET இணையதளத்தில் காணலாம்.


நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு மறுதேர்வு நடந்தது; 813 மாணவர்கள் மறுதேர்வு எழுதினர்...



கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவு...

 கனமழை காரணமாக நீலகிரி: கூடலூர், பந்தலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை...


கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவு...





பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.07.2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.07.2024 - School Morning Prayer Activities...



திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம்:கல்லாமை

குறல் எண்:407

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம்
மண்மாண் புனைபாவை யற்று.

பொருள்: நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராயவல்லதான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு,
மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.

பழமொழி :

Blessed are the meek: for they shall inherit the earth.

பொறுத்தார் பூமி ஆள்வார்.


இரண்டொழுக்க பண்புகள் :

* போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

* என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.



பொன்மொழி :

விடாமல் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்களைத்தான் வெற்றி தேடி வரும்"---ஜவஹர்லால் நேரு



பொது அறிவு :

1. பழங்காலத்தில் “சேரன் தீவு” என அழைக்கப்பட்ட நாடு எது?

விடை: இலங்கை

2. “ஜனநாயகம்” என்ற அரசியல் தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்?

விடை: ஆப்ரகாம் லிங்கன்



English words & meanings :

callous-கடுமையான, heartless- இரக்கமற்ற
வேளாண்மையும் வாழ்வும் :

இப்படி அனைத்து வேளாண்மையிலும் செயற்கை உரங்களை பயன்படுத்துவதால் காய்கறிகளில் இருக்கும் ஊட்டச்சத்து குறைவது மட்டும் இன்றி மண்ணின் வளத்தையும் பாதிக்கின்றன.



ஜூலை 01

தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day)

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.[சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day) ஆகும்.

கல்பனா சாவ்லா அவர்களின் பிறந்த நாள்

கல்பானா சாவ்லா ஓர் இந்திய அமெரிக்க விண்ணோடி ஆவார்.விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனை



நீதிக்கதை

சமயோஜித  புத்தி

முன் ஒரு  காலத்தில் புகழ்பெற்ற தலைவர் ஒருவர் இருந்தார்.

தந்திரமான போர் குணம் கொண்டவர். ஒரு நாள் ஒரு மாநாட்டை முடித்துக் கொண்டு

தனது  பாதுகாப்பு  படையுடன் நாட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.

வழியில்  பயணக் களைப்பு தீர ஓரிடத்தில் முகாமிட எண்ணினர். கொஞ்சம் வீரர்களை மட்டும் தன்னுடன் வைத்துக் கொண்டு மீதி பாதுகாப்பு படைவீரர்களை  வேறொரு இடத்தில் ஓய்வெடுக்க அனுப்பி வைத்தார்.

தலைவர் பாதுகாப்பு படை இன்றி இருப்பதை அறிந்த  அவரின் எதிரிகள் ஆயிரக்கணக்கான படை வீரர்கள் சூழ அவருடைய இருப்பிடம் நோக்கி வர தொடங்கினர்

நடு ராத்திரியில் அவர் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அந்த தகவல் அவருக்கு கிடைத்தது. குறைவான எண்ணிக்கையில் உள்ள படைவீரர்களைக் கொண்டு அவர்களை சமாளிக்க இயலாது என்று யோசித்தார்.

உடனே அவர் தம் வீரர்களுக்கு கட்டளையிட அவர்கள் அந்த இடத்தில் எதுவும்  இருந்த இடம் தெரியாமல் அழித்துவிட்டு அவர்களும் மறைவான இடங்களில் தனித்தனியாக மறைந்து கொண்டனர்.

தலைவரும் தன்னுடைய பாதுகாப்பு கவசங்களை எல்லாம் கழற்றி விட்டு அங்கே அமர்ந்து வீணை வாசிக்க  தொடங்கினார். 

சற்று நேரத்தில் அங்கே வந்த எதிரி நாட்டுப் படைகள் அவர் தனியே வீணை வாசித்துக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்தனர்.

எதிரி நாட்டு படையின்   தலைவர் இவர் சாதாரணமான முறையில் வீணை வாசித்துக் கொண்டிருக்கிறார் என்றால் நம்மை பிடிக்க வேறு ஏதேனும் தந்திர வழியில் படை வீரர்களை மறைத்து வைத்திருப்பாரோ என்று யோசித்தார்.

எனவே படைகளுடன் பின்வாங்கினார்.

எப்போதும் பிரச்சினையை கண்டு பயப்படாமல்  சமயோஜித  புத்திக்கொண்டு  தீர்க்க வேண்டும்.



இன்றைய செய்திகள்

01.07.2024

# வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் நியமனம்: 133 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் தமிழக முதல்வர்.

# சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.14.56கோடியில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

# தமிழக காவல் துறையினருக்கு பணியின்போது உயிரிழப்போ, உடலுறுப்பு இழப்போ, காயமோ ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத் தொகை உயர்த்தப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

# கடும் வெப்ப அலையில் 62 கோடி பேர் இந்தியாவில் பாதிப்பு:அமெரிக்காவின் பருவநிலை மத்திய ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானிகள் குழு  வெளியிட்ட அறிக்கை தகவல்.

# சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலத்தில் எரிபொருள் கசிவு: சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் சிக்கல்.

# சர்வதேச டி20 கிரிக்கெட்: விராட், ரோகித் வரிசையில் ஜடேஜாவும் ஓய்வு அறிவிப்பு.

# ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இத்தாலியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது சுவிட்சர்லாந்து அணி.

# ஈஸ்ட்போர்ன் டென்னிஸ்: அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.


Today's Headlines

# Agriculture and Horticulture Officers are appointed: Chief Minister of Tamil Nadu issued work orders to 133 people.

# New and latest medical equipment which  costs  Rs.14.56 crore was brought to public use in Rajiv Gandhi Government  Hospital, Chennai.

#  The chief minister said that the gratuity paid to the Tamil Nadu Police Department in case of loss of life, loss of limb or injury while on duty will be increased.

# 62 crore people affected by extreme heat wave in India: According to the report released by the team of scientists of the United States' National Center for Climate Research.

# There is Fuel Leak in the Space Shuttle : There is a Problem for Sunitha Williams' Returning to Earth

# International T20 cricket: Virat, Rohit and Jadeja announce retirement

# European Football Championship: Switzerland beat Italy to reach the quarter-finals.

# Eastbourne tennis: USA's Taylor Brits advances to finals.


Prepared by

Covai women ICT_போதிமரம்


அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் பணியிட மாறுதல் செய்தல் - பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண் : 146, நாள்: 28-06-2024 வெளியீடு...

 


G.O. Ms. No. 146, Dated: 28-06-2024 


அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் பணியிட மாறுதல் செய்தல் - பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண் : 146, நாள்: 28-06-2024 வெளியீடு...


அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் மாவட்டத்திற்கு உள்ளேயும் அதன் பின்னரும் உபரி ஆசிரியர் இருந்தால் மாவட்டத்திற்கு வெளியேயும் பணியிட மாறுதல் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு...



>>> அரசாணை (நிலை) எண் : 146, நாள்: 28-06-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பள்ளிக் கல்வி - அரசு உதவிபெறும் பள்ளிகள் - 2023-2024ஆம் கல்வி ஆண்டிற்கான பணியாளர் நிர்ணய அறிக்கையின்படி அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உபரிப் பணியிடங்களில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.

வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த புதிய நீல வட்டம் என்ன?

 


வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த புதிய நீல வட்டம் என்ன?


``கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப்,  ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நீல நிற வளையம் ஒன்று உலா வருகிறது. ஆனால் என்ன நடக்கிறது என்பது பலருக்குப் புரியவில்லை.


உண்மையில், இந்த நீல வளையம் மெட்டாவின் AI சாட் போட்டைக் குறிக்கிறது. மெட்டாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நீல வளையத்தின் உள்ளே பயனர்கள் இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய புத்திசாலித்தனமான AI உதவியாளர்.


இந்தியாவில், WhatsApp, Facebook, Messenger மற்றும் Instagram அனைத்தும் இப்போது Meta AIஐ ஆதரிக்கின்றன. Meta AI Chatbot இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இந்த மேம்பட்ட அம்சம் நேற்று முதல் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு கிடைக்கிறது. Meta AI Chatbot ஆனது Meta Llama 3 ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது, இது மெட்டாவின் மிகவும் மேம்பட்ட LLM ஆகும்.


Meta AI சாட்போட் தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, உகாண்டா மற்றும் ஜிம்பாப்வே உட்பட 12 நாடுகளில் இலவசமாகக் கிடைக்கிறது. புதிய உள்ளடக்கத்தை உருவாக்குதல், ஒவ்வொரு தலைப்பிலும் ஆழமான அறிவைக் கண்டறிதல், உங்களுக்காக மின்னஞ்சல்களை அனுப்புதல் மற்றும் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்த்தல் போன்ற அனைத்திலும் Meta AI உங்களுக்கு உதவும்.


ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஊட்டங்களை ஸ்க்ரோலிங் செய்யும் போது Meta AI சாட்போட்டைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் Facebook இல் பார்த்த ஒரு இடுகையைப் பற்றிய கூடுதல் விவரங்களை அறிய விரும்பினால், இடுகையில் இருந்தே Meta AI ஐக் கேட்கலாம். நாம் தட்டச்சு செய்யும் சோதனைகளின் அடிப்படையில் படங்களை உருவாக்கும் இமேஜின் கருவியும் மெட்டா ஏஐ கொண்டுள்ளது. நீங்கள் விரும்பும் வழியில் படங்களை உருவாக்க மற்றும் அனிமேஷன் செய்ய இது உங்களை அனுமதிக்கிறது. எனவே அந்த நீல மோதிரம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை வேறு நிலைக்கு கொண்டு செல்லும் ஒரு பெரிய அதிசயம்...


அலைபேசி சேவையை மாற்றும் காலக்கெடுவில் புதிய மாற்றம்...



அலைபேசி சேவையை மாற்றும் காலக்கெடுவில் புதிய மாற்றம்...


புதிய சிம் கார்டு வாங்கினால் அல்லது அது மோசடிக்காரர்களால் முடக்கப்பட்டிருந்தால், மற்றொரு மொபைல் போன் சேவை நிறுவனத்துக்கு மாறுவதற்கான கால அவகாசம், 10 நாளில் இருந்து ஏழு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.


ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சேவையில் இருந்து, நம் மொபைல் எண்ணை மாற்றாமலேயே வேறொரு சேவை நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளும் திட்டம், 'மொபைல் போர்டபிளிட்டி' என அழைக்கப்படுகிறது.


பழுதடைந்தது, தொலைந்தது என பல காரணங்களால் ஒருவேளை புதிய சிம் வாங்கியிருந்தால், மொபைல் போர்டபிளிட்டி செய்வதற்கு, 10 நாட்கள் காத்திருக்க வேண்டும்.


இந்நிலையில், மொபைல் போன் மோசடிக்காரர்கள், ஒரு குறிப்பிட்ட மொபைல் போனை 'ஸ்வாப்' எனப்படும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் மோசடியில் ஈடுபடுகின்றனர்.


இந்த மோசடிக்காரர்கள், குறிப்பிட்ட நபரின் மொபைல் எண்ணுக்குள் நுழைந்து தகவல்களை திருடி, சேவை அளிக்கும் நிறுவனத்திடம், புதிய சிம் பெற்றுக் கொள்கின்றனர். அதை பயன்படுத்தி, அவர்கள் போர்டபிளிட்டி செய்து, வேறொரு சேவை நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்கின்றனர்.


இந்த தகவல்களை வைத்து, குறிப்பிட்ட நபரின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை திருடுகின்றனர். இந்த மோசடி தற்போது அதிகளவில் நடந்து வருகிறது.


இதைத் தடுக்கும் வகையில், மொபைல் ஸ்வாப் அல்லது புதிய சிம் வாங்கிய பின், மற்றொரு சேவை நிறுவனத்துக்கு மாறுவதற்கான காலத்தை குறைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.


மோசடிகளை தடுக்கும் வகையிலும், பயனாளிக்கு உதவும் வகையில், தற்போதுள்ள 10 நாட்கள் என்ற அவகாசத்தை, ஏழு நாட்களாக குறைத்து, 'டிராய்' எனப்படும் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கூகுள் மொழிபெயர்ப்பு சேவையில் மொத்தமாக 243 மொழிகள்...



கூகுள் மொழிபெயர்ப்பு சேவையில் மொத்தமாக 243 மொழிகள்... 


கூகுள் மொழிபெயர்ப்பு சேவையில் புதிதாக 7 இந்திய மொழிகள் உட்பட 110 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது...


2006 ஆம் ஆண்டு கூகுள் மொழிபெயர்ப்பு சேவை தொடங்கப்பட்டது. உலகம் எங்கும் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு மொழிகளை படிப்பதற்கு கூகுள் மொழிபெயர்ப்பு சேவை உதவி செய்து வருகிறது.


இந்நிலையில், கூகுள் தனது மொழிபெயர்ப்பு சேவையைக் கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. கடந்தாண்டு 24 புதிய மொழிகள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு 110 புதிய மொழிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


கூகுள் தனது மொழிபெயர்ப்பு சேவையில் 110 புதிய மொழிகளை இணைத்ததன் மூலம் மொத்தமாக 243 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிதாக சேர்க்கப்பட்ட 110 மொழிகளில் அவதி, போடோ, காசி, கோக்போரோக், மார்வாடி, சந்தாலி மற்றும் துலு போன்ற ஏழு இந்திய மொழிகளும் அடங்கும்.


போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயு கசிவு, தொழில் நுட்பக் கோளாறுகள் - சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் பூமி திரும்ப இன்னும் ஒரு மாதம் ஆகும்...



போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயு கசிவு, தொழில் நுட்பக் கோளாறுகள் - சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் பூமி திரும்ப இன்னும் ஒரு மாதம் ஆகும் என தகவல்...


வாஷிங்டன்: 

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்பிட இன்னும் ஒரு மாதங்களுக்கு மேல் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.


அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளிக்கு இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் (வயது 61) ஆகியோர் ஜூன் 5ம் தேதி பயணம் மேற்கொண்டனர்.


ஜூன் 5ம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி இரவு 8.22 மணிக்கு புறப்பட்டு, ஜூன் 06ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தனர். 


9 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஆய்வுகள் நடத்தி திட்டமிட்டபடி கடந்த 22-ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். தற்போது, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயு கசிவு , தொழில் நுட்ப கோளாறுகள் சரி செய்ய குறைந்தது 30 நாட்களுக்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் இருவரும் மேலும் 30 நாட்களுக்கு மேல் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


அலைபேசி சேவை கட்டணங்களின் விலை உயர்வு - இந்தியர்கள் ஆண்டுக்கு ரூ.47500 கோடி அதிகம் செலவிட வேண்டும்...



அலைபேசி சேவை கட்டணங்களின் விலை உயர்வு - இந்தியர்கள் ஆண்டுக்கு ரூ.47500 கோடி அதிகம் செலவிட வேண்டும்...


தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விலைஉயர்வு குறித்து, கோடக் நிறுவன பங்குகள் வெளியிட்டுள்ள ஆய்வுக் குறிப்பின்படி இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.47,500 கோடி கூடுதல் சுமை உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் சேவை கட்டணங்களை அடுத்தடுத்து அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இதில் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையில் முதன்மையில் இருக்கும் ஜியோ நிறுவனம் நேற்று முன்தினம் (ஜூன் 27) முதலில் தங்கள் ரீசார்ஜ் பிளான்களின் விலையை அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டது.


ஜியோ தனது ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 12 முதல் 27% வரையில் அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டது. 

இந்த விலையேற்றம் ஜூலை முதல் அமலுக்கு வரும் என கூறியது. அதேபோல, ஏர்டெல் நிறுவனமும், தங்கள் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு கட்டணங்களை 11 முதல் 21% உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. 


இந்த கட்டண உயர்வு வரும் ஜூலை 3 முதல் அமலுக்கு வரும் என கூறியது. தொடர்ந்து, வோடஃபோன் ஐடியா நிறுவனமான VI நிறுவனமும் விலையேற்றத்தை அறிவித்துள்ளது. அடுத்தடுத்த காலாண்டுகளில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையில் கவனம் செலுத்தவும் உள்ளது என அறிவித்துள்ளது.  


இந்த விலையேற்றம் ஜூலை 4-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது. சமீப காலங்களில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 5G தொலைத்தொடர்பு சேவைகளை வழங்க பெரும் முதலீடுகளை செய்துள்ளன.


இப்போது வாடிக்கையாளர்கள் 5ஜி சேவையைப் பெற 71% கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு பயனருக்கான சராசரி செலவை (ARPU) 15 முதல் 17% வரை அதிகரித்துள்ளன.


தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விலைஉயர்வு குறித்து, கோடக் நிறுவன பங்குகள் ஆய்வுக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.47,500 கோடி கூடுதல் சுமையை இந்த விலை உயர்வு ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.07.2024...

    பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.07.2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: கல்லாமை ...