கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருவாரூர் மாவட்டத்திற்கு அக்டோபர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 


உள்ளூர் விடுமுறை

💢💢💢💢💢💢


திருவாரூர் மாவட்டத்திற்கு அக்டோபர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை ஒட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 22ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


இதனை ஈடு செய்ய வரும் 24ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்


பத்தாம் வகுப்பு/ மேல்நிலை துணைத் தேர்வுகள் ஜூன் / ஜூலை 2026 - அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (Original Mark Certificates) வழங்குதல் சார்ந்த செய்திக் குறிப்பு



பத்தாம் வகுப்பு/ மேல்நிலை துணைத் தேர்வுகள் ஜூன் / ஜூலை 2026 - அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (Original Mark Certificates) வழங்குதல் சார்ந்த செய்திக் குறிப்பு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-10-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-10-2026 | School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


 

NHIS 2026 Reimbursement | DSE Proceedings



NHIS 2026 Reimbursement | DSE Proceedings 


NHIS 2026 - மருத்துவச் செலவினம் மீள கோருதல் தொடர்பாக குறைகளின்றி கருத்துருக்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு


பள்ளிக்கல்வி இயக்கக நிதி கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


2026 Nobel Prize in Economics



2026ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு


Announcement of the 2026 Nobel Prize in Economics


2026ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் இ.ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டு ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு.


பேரியல் பொருளாதார நிலைப்படுத்துதலின் நுண் பொருளாதார அடித்தளங்களுக்காக இருவருக்கு நோபல் பரிசு.


வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 


வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு


கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்கும் இலக்கை எய்திட வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. செவ்வாய் அன்று சிங்கப்பெண்கள் கடன்கள், வீட்டு வசதிக் கடன்கள் முகாமும், வெள்ளி அன்று இதர முன்னுரிமைத் துறைக் கடன்கள் முகாமும் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 9884000845 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்


தலைமைச் செயலகம் வரை மின்வெட்டு பாதிப்பு : தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி



தலைமைச் செயலகம் வரை மின்வெட்டு பாதிப்பு : தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி


அன்புமணி ராமதாஸ் அவர்கள் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,


தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தின் முதல் தளத்தில் இன்று காலை  ஏற்பட்ட மின் தடை காரணமாக அமைச்சர்கள் அலுவலக அறைகள் இருளில் மூழ்கின.  இது தொடர்பான காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.  தமிழ்நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மின்வெட்டு தமிழ்நாடு அரசின் அதிகார பீடமான தலைமைச் செயலகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது கவலையளிக்கிறது.



தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு கடந்த ஐந்து மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. மின்வெட்டால் பாதிக்கப்படாத பகுதிகளே இல்லை எனும் அளவுக்கு தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட மின் தடை இப்போது தலைமை செயலகம் வரை சென்றிருப்பது நிலைமை மோசமடைந்திருப்பதையே காட்டுகிறது. இந்த நிலைமை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

என்று தெரிவித்துள்ளார்.


தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு : ஆசிரியர் சங்கம் அறிக்கை



உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு :

💥💥💥💥💥💥💥

 பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்:


💥💥💥💥💥💥💥

 *எமது இயக்கத்தின் 18 ஆண்டுக்கால போராட்டம் நிறைவடைகிறது!* 


💥💥💥💥💥💥💥

எல்லா தரப்பு வாதங்களும் நிறைவடைந்துவிட்டன. ஆன்லைனில் அனைவரும் பார்த்திருப்பீர்கள்.


பட்டதாரி ஆசிரியர்கள் சார்பாக எடுத்து வைக்க வேண்டிய அனைத்து வாதங்களும் நம்முடைய மூத்த வழக்கறிஞர்கள் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுவிட்டன.

💥💥💥💥💥💥💥

 *மூத்த வழக்கறிஞர்கள்:* 

1.திரு. ரவிபிரகாஷ் மெஹரோட்ரா

2.திரு.எஸ்.எஸ்.சுந்தர்

3.திரு.அஜ்மல்கான்


ஆகியோர் பட்டதாரி ஆசிரியர்களின் சார்பாக வழக்காடிய மூத்த வழக்கறிஞர்கள்.


அரசு தரப்பு வாதத்தின் மூலமாக இறுதி நாள் விசாரணை தொடங்கியது.


 *அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது.* 


1.உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதியானவர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே!


2.பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு விதிகளின்படி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க முடியாது!


3.தற்போதுள்ள சுமார் 1200க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப் பணியிடங்கள் அனைத்துக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும்.


4.சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அரசு தரப்பு ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்த தயாராக உள்ளது.


5.முதுகலை ஆசிரியர் பணியில் இருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாகப் பணி மாறுதலில் 2018,2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் சென்ற 1212 பேரை மீளவும் முதுகலை ஆசிரியர்களாகவே திருப்பி அனுப்ப வேண்டும் என்பதிலிருந்து மட்டும் விலக்களிக்குமாறு கோரிக்கை வைக்கப்படுகிறது.


6.1212 பேரை மீளவும் முதுகலை ஆசிரியர்களாகத் திருப்பி அனுப்புவதால் அரசு தரப்புக்கு ஏராளமான நிர்வாகச் சிக்கல் ஏற்படுவதாலும், மாணவர்களின் நலன் கருதியும், தகுதித் தேர்வு பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டும்  Reversion ஐ மட்டும் கைவிட அனுமதிக்குமாறு அரசு தரப்பு கோரியுள்ளது.


7.பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மேல்நிலைக் கல்வித் தொகுதியில் நிரந்தர உறுப்பினர்களாவர்.எனவே அவர்களுக்கான அடுத்த பதவி உயர்வு அப்பணித் தொகுதியில் இருக்கும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணி மட்டுமே.


8.confirmation order அதாவது தகுதிகாண் பருவம் முடித்த பின்பு பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஆணை வழங்க வேண்டும் என்பது விதியில் தெரிவிக்கப்பட்டிருக்கும் போதிலும், 1994 ஆம் ஆண்டு முதல் அதை பின்பற்றவில்லை.


9.அதற்குக் காரணம், விதியில் shall be given என்று அதாவது, தேவைப்பட்டால் தரலாம் என்றவாறு தெரிவிக்கப்பட்டுள்ளதால், வழங்க வேண்டிய கட்டாயம் எழவில்லை. அது சார்ந்த சில ஆணைகள் பிறப்பிக்கப்பட்டதையும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.


10.அரசு தரப்பு வாதத்தின் மூலம், பட்டதாரி ஆசிரியர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டது. பல்வேறு குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.


 Temporary பிரச்சனை தெறித்து ஓடியது!


 Approved probationer பிரச்சனை அப்புறப்படுத்தப்பட்டது!


Confirmation பிரச்சனை காணாமல் போய்விட்டது!


உண்மை வெளி வந்தது! தர்மம் தலை தூக்கியது!


 *மூத்த வழக்கறிஞர் திரு. அஜ்மல்கான் அவர்கள்:* 


கடந்த விசாரணையிலேயே அரை மணி நேரத்தில் ஒட்டு மொத்த வழக்கின் நிலைப்பாட்டையும் உச்ச நீதிமன்றத்தில் பட்டியலிட்டு விளக்கினார்கள்!


2015 ஆம் ஆண்டே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு தடை வழங்கப்பட்டமையையும் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெறத் தகுதியானவர்கள் என்றும் வாதிட்டு, உரிய விதிகளை எடுத்து வைத்தார்கள்.


 *மூத்த வழக்கறிஞர் திரு. எஸ்.எஸ்.சுந்தர் அவர்கள்:* 


அரசு தரப்பில் வழங்க வேண்டிய confirmation குறித்த விளக்கங்களைத் தாம் பட்டியலிட்டு விளக்கினார்கள். பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மேல்நிலைக் கல்வித் தொகுதியில் நிரந்தர உறுப்பினர்களே என்பதை மேலும் உறுதிபடுத்தினார்கள்.


பணி மாறுதல் குறித்த பல்வேறு விளக்கங்களை எடுத்து வைத்து பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்  பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதை மேலும் உறுதி செய்தார்கள்!


 *மூத்த வழக்கறிஞர் திரு. ரவிபிரகாஷ் மெஹரோட்ரா அவர்கள்:* 


56000 க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 3000 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் மட்டுமே உள்ளன. 28000 முதுகலை ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கும் சுமார் 3000 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் உள்ளன.


எனவே எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தாலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலைப் பள்ளி த் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.


ஒரே பணியாளர் இரண்டு பணித் தொகுதிகளில் உறுப்பினர்களாக இருக்க முடியாது. ஏதாவது ஒன்றில் மட்டும்தான் உறுப்பினராக இருக்க முடியும்! எனவே பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் இரண்டு பணித் தொகுதிகளிலும் மாறி மாறி பணி மாறுதல் பெறுவது விதிகளுக்குப் புறம்பானது!


1212 பேர் மீளவும் முதுகலை ஆசிரியர்களாக அனுப்பப்பட்டால் எந்த பாதிப்பும் இல்லை.


 அவர்களுக்கு மேல்நிலைப் பணித் தொகுதியில் அடுத்த பதவி உயர்வு காத்திருக்கிறது. பணப்பலனும் காத்திருக்கிறது!


1212 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களும் பட்டதாரி ஆசிரியர்களுக்குச் சொந்தமானவை. அவர்களுக்கு உரியதை இவர்களுக்குத் தருவது உரிமையைப் பறிப்பதாகும். 1000 பணியிடங்களை மீண்டும் பெற வேண்டுமானால், குறைந்தபட்சம் பத்தாண்டுகள் பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருக்க வேண்டும்!


Lien கிடையாது! எனவே 01.01.2016 முதல் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அதாவது 1212 பேர் கட்டாயம் reversion செய்யப்பட வேண்டும்!


 *நீதிபதிகளின் முடிவு:* 


மேற்கண்ட எல்லா தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த பிறகு அரசு தரப்பினரை அழைத்து மீண்டும் அபிடவிட் தாக்கல் செய்யுமாறு கீழ்க்கண்டவாறு ஆணையிட்டு வழக்கை வரும் 17.11.2026 அன்று ஒத்தி வைத்தது.


Heard learned counsel for the parties.


2.Though, as of now, arguments stand concluded; however, the

State is directed to file a detailed affidavit bringing on record

any proposal/scheme as to how the State proposes to deal with the

present scenario in a way that equities can be balanced and there

is no infraction of the law.


3.List on 17.11.2026 at 3.30 p.m.


 *அநேகமாக அன்றே தீர்ப்பும் வழங்கப்பட்டுவிடும் .  அல்லது தீர்ப்பு தேதி மட்டும் தள்ளி வைக்கப்படும்.* 

💥💥💥💥💥💥

வழக்கினை இறுதி வரை நகர்த்தி முடித்து வைக்கத் தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் எமது பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.🙏🙏🙏


அரசு மருத்துவமனைக்கு முறையான வசதிகளை செய்து கொடுப்பதில்லை - நீதிபதிகள் வேதனை



அரசு மருத்துவமனைக்கு முறையான வசதிகளை செய்து கொடுப்பதில்லை - நீதிபதிகள் வேதனை


மதுரை அரசு மருத்துவமனை இதயவியல் துறைக்கான உபகரணங்களை விரைவாக கொள்முதல் செய்யக் கோரி உயர்நீதிமன்ற அமர்வில் வழக்கு.


அரசு மருத்துவமனைக்கான வசதிகளை செய்து கொடுப்பதில்லை, தனியார் மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளன.


ஒவ்வொரு அரசு மருத்துவரும் தனியே கிளினிக் வைத்து நடத்துகிறார்.


அரசு மருத்துவமனைக்கு வருவோரை பரிசோதித்து, மறுநாள் தனது கிளினிக்கிற்கு வர மருத்துவர் சொல்கிறார்.


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கோரியுள்ள உபகரணங்களை வாங்க எவ்வளவு காலமாகும்?


அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.


மதுரையை சேர்ந்த கதிர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள இதயவியல் துறைக்கு தேவையான நவீன உபகரணங்களை வழங்க கோரி பல முறை மனு அனுப்பியும் தமிழக அரசு தற்போது வரை வழங்கவில்லை. அதனால், இதயவியல் துறைக்கான உபகரணங்களை விரைவாக கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.


இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று (12-10-26) வந்தது. மனுதாரர் மற்றும் அரசு தரப்பு என இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் கூறுகையில், “அரசு மருத்துவமனைக்கான வசதிகளை செய்து கொடுப்பதில்லை, தனியார் மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் இல்லாத உபகரணங்கள், தொழில்நுட்பங்கள் தனியார் மருத்துவமனைகளில் உள்ளது. இது போன்ற முரண்பாடுகள் தொடர்கிறது.


ஒவ்வொரு அரசு மருத்துவரும் தனியே கிளினிக் வைத்து நடத்துகிறார். அரசு மருத்துவமனைக்கு வருவோரை பரிசோதித்து, மறுநாள் தனது கிளினிக்கிற்கு வர மருத்துவர் சொல்கிறார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கோரியுள்ள உபகரணங்களை வாங்க எவ்வளவு காலமாகும்? என அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர். 


மழை நீர் வடிகால் உள்ளே இறங்கிய மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் இருவர், விஷவாயு தாக்கி உயிரிழப்பு



மழை நீர் வடிகால் உள்ளே இறங்கிய மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் இருவர், விஷவாயு தாக்கி உயிரிழப்பு


சென்னை பெரம்பூர் பகுதியில் விஷ வாயு தாக்கி, மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் இருவர் உயிரிழந்த துயரம்


* மழை நீர் கால்வாயில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாரை பழுது நீக்க உள்ளே இறங்கியவர் மயங்கி சரிந்து விழ, அவரைக் காப்பாற்ற இறங்கிய மற்றொரு தொழிலாளியும் உயிரிழப்பு


 

Special TET 2026 Exam Results Released



சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு


Special TET 2026 Exam Results Released


அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு


இத்தேர்வில் தகுதிப் பெற்ற தேர்வர்கள் 5 தினங்களில் தங்களது தகுதிச் சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www.trb.tn.gov.in ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


TRB Press Release 


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) முடிவுகள் இன்று (அக்டோபர் 12) இரவு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.gov.in-ல் வெளியீடு


https://www.trb.tn.gov.in/more_notification_details.php?id=MN-1045



ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் சிக்கல். 


இன்று அல்லது நாளை தேர்வு முடிவு வெளியிடப்படும்.



மாதவிடாய் சுகாதார மேலாண்மை (MHM) - விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளித்தல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்



School Education - Menstrual Hygiene Management (MHM) - Implementation of the directions of the Hon'ble Supreme Court of India regarding Menstrual Hygiene Management in all schools - Ensuring adequate toilet and washing facilities, availability of menstrual absorbents, safe disposal of sanitary waste, awareness and training - Compliance - Regarding - Proceedings of the Joint Director of School Education 


பள்ளிக் கல்வி - மாதவிடாய் சுகாதார மேலாண்மை (MHM) - அனைத்துப் பள்ளிகளிலும் மாதவிடாய் சுகாதார மேலாண்மை தொடர்பான இந்திய உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களைச் செயல்படுத்துதல் - போதுமான கழிப்பறை மற்றும் கழுவும் வசதிகள், மாதவிடாய் உறிஞ்சுப் பொருட்கள் (sanitary absorbents) கிடைப்பதை உறுதி செய்தல், சுகாதாரக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்றுதல், விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளித்தல் - விதிமுறைகளைப் பின்பற்றுதல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


என்னென்ன எப்பொழுது கெடும்? - ஔவையாரின் 60 அறிவுரைகள்

 


என்னென்ன எப்பொழுது கெடும்? - ஔவையாரின் 60 அறிவுரைகள்


கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?

நமது தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்

தெரிந்து கொள்வோம்


01) பார்க்காத பயிரும் கெடும்.

02) பாசத்தினால் பிள்ளை கெடும்,.

03) கேளாத கடனும் கெடும்.

04) கேட்கும்போது உறவு கெடும்.

05) தேடாத செல்வம் கெடும்,.

06) தெகிட்டினால் விருந்து கெடும்.

07) ஓதாத கல்வி கெடும்.

08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.

09) சேராத உறவும் கெடும்.

10) சிற்றின்பன் பெயரும் கெடும்,.

11) நாடாத நட்பும் கெடும்.

12) நயமில்லா சொல்லும் கெடும்.

13) கண்டிக்காத பிள்ளை கெடும்.

14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.

15) பிரிவால் இன்பம் கெடும்,.

16) பணத்தால் அமைதி கெடும்.

17) சினமிகுந்தால் அறமும் கெடும்.

18) சிந்திக்காத செயலும் கெடும்.

19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.

20) சுயமில்லா வேலை கெடும்,.

21) மோகித்தால் முறைமை கெடும்.

22) முறையற்ற உறவும் கெடும்.

23) அச்சத்தால் வீரம் கெடும்.

24) அறியாமையால் முடிவு கெடும்.

25) உழுவாத நிலமும் கெடும்,.

26)உழைக்காத உடலும்  கெடும்,.

27) இறைக்காத கிணறும் கெடும்.

28) இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்.

29) இல்லாலில்லா வம்சம் கெடும்.

30) இரக்கமில்லா மனிதம் கெடும்,.

31) தோகையினால் துறவு கெடும்.

32) துணையில்லா வாழ்வு கெடும்.

33) ஓய்வில்லா முதுமை கெடும்.

34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.

35) அளவில்லா ஆசை கெடும்,.

36) அச்சப்படும் கோழை கெடும்.

37) இலக்கில்லா பயணம் கெடும்.

38) இச்சையினால் உள்ளம் கெடும்.

39) உண்மையில்லா காதல் கெடும்.

40) உணர்வில்லாத இனமும் கெடும்,.

41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.

42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.

43) தூண்டாத திரியும் கெடும்.

44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.

45) காய்க்காத மரமும் கெடும்,.

46) காடழிந்தால் மழையும் கெடும்.

47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.

48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.

49) வசிக்காத வீடும் கெடும்.

50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்,.

51) குளிக்காத மேனி கெடும்.

52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.

53) பொய்யான அழகும் கெடும்.

54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.

55) துடிப்பில்லா இளமை கெடும்,.

56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.

57) தூங்காத இரவு கெடும்.

58) தூங்கினால் பகலும் கெடும்.

59) கவனமில்லா செயலும் கெடும்.

60) கருத்தில்லா எழுத்தும் கெடும்,.


இந்த 60  ஐ யும் அறிந்து கொண்டால்?

நமது வாழ்க்கை கெடவே கெடாது…


தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்


 தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக கவனித்து வரும் ராஜேந்திர அர்லேக்கர், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமனம்.


ஒடிசா, கர்நாடகா, உத்தரகாண்ட் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமனம்


கேரளம் ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் நியமனம்


ஒடிசா: பிரஜ் மோகன் ராம் (Braj Mohan Ram)


கர்நாடகா: டாக்டர் சுதா யாதவ் (Dr. Sudha Yadav)


உத்தரகாண்ட்: டாக்டர் தல் சிங் பிசேன் (Dr. Dhal Singh Bisen)


சிக்கிம்: துஷ்யந்த் கௌதம் (Dushyant Gautam)


PRESS COMMUNIOUE

The President of India is pleased to make the following appointments of Governors:-

(i) Shri Om Prakash Mathur, Governor of Sikkim appointed as Governor of Keralam.

(ii) Shri Rajendra Vishwanath Arlekar, Governor of Keralam appointed as Governor of Tamil Nadu.

(iii) Shri Braj Mohan Ram appointed as Governor of Odisha.

(iv) Dr. Sudha Yadav appointed as Governor of Karnataka.

(v) Dr. Dhal Singh Bisen appointed as Governor Uttarakhand.

(vi) Shri Dushyant Gautam appointed as Governor of Sikkim.

The above appointments will take effect from the dates they will assume charge of their respective offices.

Rashtrapati Bhavan

New Delhi-110004.

12"October, 2026

For immediate release.

(Ancctad. Meshram)

Additional Scéretary to the President

12.10.2026

Press Secretary to the President




பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-10-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-10-2026 | School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

 

SMC Member Registration – Important Update

 


Sir / Madam 

📢 **SMC Member Registration – Important Update**


The following changes are being implemented in the SMC Member Registration module:


• The **Submit Member Details** button will be removed, and member details can be saved **row-wise**.

• Member login will be created automatically upon saving the member details.

• The application will **not freeze after final submission**. Schools can continue updating details and re-uploading photos until the registration end date.

• Registration will be controlled based on the configured **Start Date and End Date**.


These changes will be **enabled by EOD tomorrow** and can be used by schools **from Wednesday onwards**.


👉 As per the above changes, kindly **guide the schools accordingly and ensure they complete the SMC member registration process** within the registration window.


Thank you.


*SMC registration.


SMC members registration 

Edit option EMIS இல் தற்போது ஓபன் செய்யப்பட்டுள்ளது* .

First step.

Members count சரியாக பதிவிடவும். Submit கொடுக்கவும்.


Second step.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் விவரங்களை பதிவு செய்யவும். 

புதிய உறுப்பினரை add செய்யலாம். 

அனைத்து உறுப்பினரின் விவரங்களை சரியாக போட்ட பின் final submission கொடுக்கவும். 

உள்ளாட்சி பிரதிநிதிகள். 

கிராம பஞ்சாயத்து vacant position.


புதிய உறுப்பினர் பெயர் விவரங்கள் தரவில்லை எனில் பழைய உள்ளாட்சி பிரதிநிதிகள் பெயரையே போட்டுக் கொள்ளலாம்.


இந்த வாரம் 9/10/26 வரை எடிட் செய்ய முடியும்.


Transfer of IAS officers



ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்


உள்துறை செயலாளர் மணிவாசன் நில நிர்வாக ஆணையராக நியமனம்; தமிழ்நாடு சிறுதொழில் மேலாண் கழகத்தின் நிர்வாக இயக்குநர் கார்த்திக், உள்துறை செயலாளராக நியமனம்


மின்வாரிய நிர்வாக இயக்குநர் அருண் ராய், நிதித்துறை செலவினங்கள் பிரிவு செயலாளராக நியமனம்; நிதித்துறை செலவினங்கள் பிரிவு செயலாளர் வெங்கடேஷ், வேளாண் துறை செயலாளராக நியமனம்; 


நிலநிர்வாக ஆணையராக இருந்த ராஜேஷ் லக்கானி, மின்வாரிய நிர்வாக இயக்குநராக நியமனம். மின் உற்பத்திக் கழக தலைவராகவும் இவர் செயல்படுவார்


ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா தாம்பரம் மாநகராட்சி ஆணையராக நியமனம். செய்யாறு சார் ஆட்சியர் அம்பிகா ஜெயின், ஆவடி மாநகராட்சியின் ஆணையராக நியமனம்


குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநரான சிவகிருஷ்ண மூர்த்தி, தேனி மாவட்ட ஆட்சியராக நியமனம்


தேனி ஆட்சியர் வைத்தியநாதன், குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநராக நியமனம்


Diwali Festival Advance விண்ணப்பித்தல் தொடர்பான தகவல்கள்

 


தீபாவளி பண்டிகை முன்பணம் விண்ணப்பித்தல் தொடர்பான தகவல்கள்


🏹 நண்பர்களே இன்று முதல் தீபாவளி பண்டிகை முன்பணம் பெறுவதற்கு களஞ்சியம் செயலி மூலமாக விண்ணப்பிக்கலாம்.

 

எப்பொழுதும் போன்று களஞ்சியம் செயலி மூலமாக அப்ளை செய்யலாம் அல்லது initiator மூலமாக webadi இல் upload செய்யலாம்.


தலைமை ஆசிரியர்கள் கட்டாயம் மாவட்ட கல்வி அலுவலர் அல்லது முதன்மை கல்வி அலுவலகம் இருந்து online proceedings இல் sign வாங்க வேண்டும்


* Manual Proceedings தேவை இல்லை


November month இல் இருந்து பிடித்தம் மேற்கொள்ளப்படும்.


Online proceeding generate செய்யும் போது copy 1 and copy 2 line இல்


Individual and treasury name கொடுக்கவும்....🏹




Group 4 Notification Released: Announcement of 6,574 Vacancies



குரூப் 4 அறிவிப்பு வெளியீடு : 6,574 காலி பணியிடங்கள் அறிவிப்பு


Group 4 Notification Released: Announcement of 6,574 Vacancies


Group 4 notification published


Group - IV Notification :


Link:

1) Tamil Notification 

https://d1cmkr5tdoeyjk.cloudfront.net/tnpsc/PIY0000001/notification/CCSE_Group_IV_Tamil_2026.pdf 


2) English Notification 

https://d1cmkr5tdoeyjk.cloudfront.net/tnpsc/PIY0000001/notification/CCSE+_Group_IV_English_2026.pdf


* குரூப்-4 அறிவிப்பு வெளியீடு


* டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு 6,574 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


* கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் உள்ளிட்ட 46 வகை பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.


* ஆன்லைன் விண்ணப்பப் பதிவு அக்டோபர் 6 முதல் நவம்பர் 5 இரவு 11.59 மணி வரை நடைபெறும்.


* குரூப்-4 தேர்வு ஜன.10, 2027 அன்று நடைபெறும்.


* விண்ணப்பிக்க www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in இணையதளங்களைப் பயன்படுத்த வேண்டும்.


TNPSC Group 4 Notification:-*


Total Vacancy - 6574

Application Start Date : 06.10.2026

Application last date : 05.11.2026

Exam date : 10.01.2027


Vacancy Category — High to Low


Rank Post Category Total Vacancies


1 Junior Assistant 3,530

2 Typist 1,566

3 Steno Typist (Grade III) 361

4 Village Administrative Officer 291

5 Tax Collector 107

6 Bill Collector 97

7 Revenue Assistant 96

8 Personal Clerk 60

9 Junior Administrative Assistant 55

10 Executive Officer (Grade IV) 46

11 Forest Watcher 40

12 Shorthand Typist (Grade III) 28

13 Laboratory Assistant 23

14 Record Clerk (Grade III) 19

15 Sales Assistant 10

16 Junior Inspector of Co-operative Societies 8

17 Junior Assistant cum Typist 6

18 Senior Laboratory Assistant 1

19 Telephone Operator 1

20 Forest Guard with Driving Licence 1



Mental Health Seminar for School Students | Guidance | DSE Proceedings



பள்ளி மாணவர்களுக்கான மன நல கருத்தரங்கம் - அறிவுரை வழங்குதல் - இணை இயக்குநரின் செயல்முறைகள்


Mental Health Seminar for School Students | Guidance | Proceedings of the Joint Director


பள்ளி மாணவர்களுக்கான மன நல இணைய வழி கருத்தரங்க மாணவர்களை பங்கேற்கச் செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (நாட்டு நலப்பணி திட்டம்) செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருவாரூர் மாவட்டத்திற்கு அக்டோபர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

  உள்ளூர் விடுமுறை 💢💢💢💢💢💢 திருவாரூர் மாவட்டத்திற்கு அக்டோபர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை...