கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

PKBFS Name Board Installation | District Collector's order



பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் பெயர் பலகை நிறுவுதல் தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் உத்தரவு


PKBFS Name Board Installation | District Collector's order to all BDOs


The Virudhunagar District Collector has issued an order to all Block Development Officers regarding the installation of name boards for the 'Perunthalaivar Kamarajar Breakfast Scheme'.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Special TET Results வெளியிட நீதிமன்ற தடையை விலக்கக் கோரி அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல்


 சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட நீதிமன்ற தடையை விலக்கக் கோரி அரசு சார்பில் பிரமாண பத்திரம் 2nd September 2026 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Special TET Results வெளியிட நீதிமன்ற தடையை விலக்கக் கோரி அரசு சார்பில் பிரமாண பத்திரம் 02-09-2026 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.







27 IAS officers transferred


 27 இ.ஆ.ப., அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணைகள் G.O.Rt.No. 3213, Dated : 08-09-2026 வெளியீடு


27 IAS officers transferred


தமிழ்நாட்டில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் சாய்குமார் உத்தரவு.


மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் செயலராக டி.மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) ஸ்ரேயா சிங் தொழில்கல்வித் துறை கூடுதல் செயலராக நியமனம்.


சென்னை மாநகராட்சி இணை ஆணையராக (சுகாதாரம்), தாகரே சுபம் ஞானதேவ் ராஜ் நியமனம்.


சுற்றுலாத் துறை இயக்குநர் ஜெயசீலன் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


சுற்றுலாத் துறை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராக ராஜகோபால் சுங்கரா நியமனம்.


விருதுநகர் ஆட்சியராக இருந்த சுகபுத்ரா சென்னை குடிநீர் வழங்கல் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநராக நியமனம்.


💥 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்


பெரம்பலூர் ஆட்சியராக இருந்த சரண்யா அரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


பொன்னேரி உதவி ஆட்சியராக இருந்த அப்துல் ரசாக், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.


செங்கல்பட்டு உதவி ஆட்சியராக இருந்த வி.நல்லசிவன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்.


திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜி.ரவிக்குமார், வேளாண்மை-உழவர் நலத் துறை இணைச் செயலராக மாற்றம்.



மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்


ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளராக பிரதாப் யாதவ் நியமனம்


கைத்தறி, ஜவுளி மற்றும் காதி துறையின் செயலாளராக லில்லி நியமனம்


பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இன்னசென்ட் திவ்யா நியமனம்


வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளராக சந்திர மோகன் நியமனம்


அச்சு மற்றும் எழுதுபொருள் துறையின் ஆணையராக சரவண செல்வராஜ் நியமனம்


குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் ஆணையராக அஜய் யாதவ் நியமனம்


பால் உற்பத்தி மற்றும் பால் வளத்துறை இயக்குநராக சிவராசு நியமனம்


சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக சிவநந்தம் நியமனம்


டான்சி நிறுவன கூடுதல் தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம்


தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவன முதன்மைச் செயலாளராக வெங்கடேஷ் நியமனம்


தமிழ்நாடு கனிமவள நிறுவன நிர்வாக இயக்குநராக கந்தசாமி நியமனம்


தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக கவிதா ராமு நியமனம்


தாட்கோ நிறுவன நிர்வாக இயக்குநராக செந்தில் ராஜ் நியமனம்



>>> அரசாணை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பள்ளிக் கல்வித் துறைச் செயலாளராக இன்னோசன்ட் திவ்யா IAS நியமனம்




பள்ளிக் கல்வித் துறைச் செயலாளராக இன்னோசன்ட் திவ்யா IAS நியமனம்


Innocent Divya IAS appointed as Secretary of the School Education Department.


 பள்ளிக் கல்வித் துறை செயலாளராக ஜெ.இன்னோசன்ட் திவ்யா IAS அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.


இவர் 2009 பேட்ச் தமிழ்நாடு கேடர் IAS அதிகாரி. மீன்வள அறிவியலில் (B.F.Sc) பட்டம் பெற்றவர் 


இவரது முக்கிய பணிக் கால வரிசை:


1. ஆரம்ப கால பணிகள்:

- சென்னை மாவட்டத்தில் DRO, RDO

- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் (TTDC) பொது மேலாளர்

- உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையில் துணைச் செயலாளர்

- முதலமைச்சரின் சிறப்பு பிரிவில் சிறப்பு அதிகாரி - மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தனி அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார் 


2. நீலகிரி மாவட்ட ஆட்சியர் 

10.07.2017 அன்று நீலகிரி மாவட்டத்தின் 113-வது ஆட்சியராக, 5-வது பெண் ஆட்சியராக பொறுப்பேற்றார். சுமார் 5 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி, நீண்ட காலம் ஊட்டி கலெக்டராக இருந்த ஒரே அதிகாரி என்ற சாதனை படைத்தார். 


இங்கு இவர்

- சேகூர் யானை வழித்தடத்தில் இருந்த 38 சட்டவிரோத ரிசார்ட்டுகளுக்கு சீல் வைத்தார்

- ஆழ்துளை கிணறு, பொக்லைன் மூலம் மலைகளை குடைவது, பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்தார்

- பழங்குடியினருக்கு 300 வீடுகள், சாலை, குடிநீர், மின்சார வசதிகளை ஏற்படுத்தினார்


இதன் காரணமாக இவரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


3. அதன் பிறகு:


- தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக (TNSDC) மேலாண் இயக்குநர் - நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தியதில் முக்கிய பங்கு

- தொழில்நுட்ப கல்வி ஆணையர்

- சுற்றுலாத் துறை ஆணையர் மற்றும் TTDC மேலாண் இயக்குநர் - ஜனவரி 2026-ல் நியமனம்

- கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் - ஜூன் 2026-ல் நியமனம் 



TNSED Attendance App - Version 8.1 - Download Link - Updated on 04-09-2026

  


TNSED Attendance App - Version 8.1 - Download Link - Updated on 04-09-2026 (App performance and SDK version update added)...



TNSED ATTENDANCE APP DIRECT LINK AVAILABLE...


*VERSION 8.1

UPDATED ON 04/09/2026


*Whats New?

App performance and SDK version update added.


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedattendance.tnemis



About this App

The attendance of students, teachers & all staff of School Education Department.

As part of the exercise to improve the efficiency of the various mobile applications and to simplify the update life cycle of various apps for the end user, the mobile based attendance has been separated from the main TNSED Schools app and deployed as a separate app on the play store. This will ensure better user experience and decreased number of updates for the staff of School Education Department, Government of Tamil Nadu.


Kalanjiyam Mobile App New Version Update - Version 1.23.6 - Updated on 06-09-2026

  



Kalanjiyam Mobile App New Version Update - Version 1.23.6 - Updated on 06-09-2026


KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.23.6

* 

IFHRMS Kalanjiyam Mobile App New App New Update



* Version 1.23.6


* Updated on 06-09-2026



* Whats New?

களஞ்சியம் Kalanjiyam App New Update 1.23.6

👉  Simple GOV - Property Statement Enabled


👉 Enhancement and Bug Fixes


App Update செய்ய Direct link

👇👇👇👇👇👇👇



About this App

Kalanjiyam is Employee / Pensioner management app, User can apply leaves, Payrolls

Kalanjiyam is Employee / Pensioner management app. User can apply their leaves and HR requests, also their monthly, annual payrolls and many more.



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-09-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-09-2026 | School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




விமான நிலைய ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற விமானம் - 5 பேர் உயிரிழப்பு



அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில் (Miami International Airport) ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6, 2026) அன்று அமேசான் நிறுவனத்தின் பிரைம் ஏர் (Prime Air) போயிங் 767 சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர்.


 மியாமி விமான நிலைய ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற அமேசான் சரக்கு விமானம் - 5 பேர் உயிரிழப்பு.


அமேசான் பிரைம் ஏர் (Amazon Prime Air) நிறுவனத்திற்காக '21 ஏர்' (21 Air) நிறுவனத்தால் இயக்கப்படும் போயிங் 767-300 ரக சரக்கு விமானம், அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.


புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவானிலிருந்து மியாமிக்கு வந்துகொண்டிருந்த இந்த விமானம், ஓடுபாதையின் எல்லையைக் கடந்து விமான நிலையப் பகுதியை விட்டு வெளியேறி, 'நார்த்வெஸ்ட் 42-வது அவென்யூ' (Northwest 42nd Avenue) அருகே இருந்த பல வாகனங்கள் மீது மோதியது.


இந்த விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.


இந்த விபத்தினால் மியாமி சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டன. 


விமானம் ஏன் ஓடுபாதையில் நிற்காமல் சென்றது என்பதற்கான காரணம் குறித்து FAA மற்றும் NTSB ஆகிய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.


அமைச்சரின் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு



அமைச்சரின் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு.


சென்னையை அடுத்த காட்டங்குளத்தூர் பகுதியில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி 26 வயது இளைஞர் உயிரிழப்பு.


ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தில் வந்த இறையன்பு என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.


சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க நேற்று (07-09-2026) காலை அமைச்சர் ஜெகதீஸ்வரி சென்னை வந்து கொண்டிருந்தார்.


அமைச்சர் அரசு வாகனத்தில் வந்துள்ளார்; அவருக்கு முன்னால் எஸ்கார்ட் வண்டியும்; அதற்கு பின்னால் அவரது சொந்த வாகனமும் வந்துள்ளது.


காட்டாங்குளத்தூர் சந்திப்பில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த காரான மாருதி எர்டிகா கார் மோதி இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு.


மறைமலைநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்து ஏற்படுத்திய அமைச்சரின் சொந்த காரை பறிமுதல் செய்து விசாரணை.


HM பதவி உயர்வு வழக்கு ஒத்திவைப்பு



தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கு ஒத்திவைப்பு 


HS HM Case - 08.10.2026க்கு ஒத்திவைப்பு


உச்சநீதிமன்றம் Case Status 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2026-2027 Term 1 / Quarterly Exam Time Table

  2026-2027 முதல் பருவம் / காலாண்டுத் தேர்வு கால அட்டவணை 2026-27- Quarterly Time Table- Classes - 1 to 12 தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, தொட...