கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (30-06-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூன் 30, 2021



புதிய வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் வருகைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் கௌரவப் பொறுப்புகள் கிடைக்கும். செய்தொழிலில் மேன்மையும், அதன்மூலம் லாபமும் உண்டாகும். வேளாண்மை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அஸ்வினி : சிந்தனைகள் மேம்படும்.


பரணி : லாபம் உண்டாகும்.


கிருத்திகை : சாதகமான நாள்.

---------------------------------------




ரிஷபம்

ஜூன் 30, 2021



உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகளும், கவலைகளும் குறையும். வழக்கு மற்றும் நீதிமன்றம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் தனவரவுகள் மேம்படும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் செல்வச்சேர்க்கைக்கான சூழ்நிலைகள் அமையும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



கிருத்திகை : கவலைகள் குறையும்.


ரோகிணி : மேன்மையான நாள்.


மிருகசீரிஷம் : செல்வச்சேர்க்கை உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

ஜூன் 30, 2021



திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களிடம் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். திருப்பணி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் உங்களின் மீதான மதிப்புகள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் பொறுப்புகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.


திருவாதிரை : நம்பிக்கை மேம்படும்.


புனர்பூசம் : அனுகூலமான நாள்.

---------------------------------------




கடகம்

ஜூன் 30, 2021



பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் புரிதல் மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். மற்றவர்களுடைய நிதி விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.


பூசம் : அனுசரித்து செல்லவும்.


ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




சிம்மம்

ஜூன் 30, 2021



ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான தருணங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் ஏற்படும். தவறிப்போன சில பொருட்கள் கிடைக்கும். அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


பூரம் : அலைச்சல்கள் உண்டாகும்.


உத்திரம் : நெருக்கம் அதிகரிக்கும்.

---------------------------------------




கன்னி

ஜூன் 30, 2021



விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உடல் உழைப்பிற்கேற்ற பொருள் வரவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். இயந்திரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. கடன் தொடர்பாக எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். மனதில் இருக்கும் கவலைகளை உடனிருப்பவர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் தெளிவு பிறக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



உத்திரம் : பொருள் வரவுகள் உண்டாகும்.


அஸ்தம் : பொறுமை வேண்டும்.


சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

ஜூன் 30, 2021



ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் தடைகள் ஏற்பட்டாலும் அதற்கான காரணங்களை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். எந்தவொரு செயலையும் பகுத்துப் பார்த்து உணரும் தன்மை மேம்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஒத்துழைப்புகளை பெறுவீர்கள். திடமான முடிவுடன் எண்ணிய காரியங்களில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். புதுவிதமான உணவுகளை உண்பதில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.


சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


விசாகம் : வெற்றிகரமான நாள்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூன் 30, 2021



பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். களத்திர வழியில் பெருமையும், முன்னேற்றமும் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பொருள் வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வாகனங்களில் சிறு சிறு மாற்றங்களை செய்து மகிழ்வீர்கள். உயர்கல்வி தொடர்பான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



விசாகம் : ஆதாயம் உண்டாகும்.


அனுஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.


கேட்டை : இன்னல்கள் குறையும்.

---------------------------------------




தனுசு

ஜூன் 30, 2021



சிறிய தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்களும், உத்வேகமான சிந்தனைகளும் உண்டாகும். சிறு வியாபார பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையாட்களின் திறமைகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எண்ணிய காரியங்களை எதிர்பார்த்த விதத்தில் செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மூலம் : மாற்றமான நாள்.


பூராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

ஜூன் 30, 2021



புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் ஆதரவான பலன்கள் உண்டாகும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவதன் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். கூட்டு வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் அனைவரின் மனங்களை கவருவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


திருவோணம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


அவிட்டம் : லாபகரமான நாள்.

---------------------------------------




கும்பம்

ஜூன் 30, 2021



உடனிருப்பவர்கள் பற்றிய எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். சபை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பங்கு வர்த்தகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் காரிய வெற்றிகளை அடைவீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் மற்றும் கனவுகளை உருவாக்குவீர்கள். அமைதியான செயல்பாடுகளின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான குறைபாடுகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.


சதயம் : இலக்குகள் பிறக்கும்.


பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




மீனம்

ஜூன் 30, 2021



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் நிறைவான சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களின் பொருட்களின் மீது ஆர்வம் கொள்ளாமல் இருப்பது நல்லது. அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கௌரவப் பொறுப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



பூரட்டாதி : சிந்தனைகள் உண்டாகும்.


உத்திரட்டாதி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


ரேவதி : பொறுப்புகள் கிடைக்கும்.

---------------------------------------



e-SR Updation Step by Step Process...



மின்னணு பணிப்பதிவேடுகள் புதுப்பித்தல் - படிநிலை வாரியான செயல்முறைகள்...


>>> Click here to Download IFHRMS e-SR Updation Step by Step Process(PDF File)...


EMIS FAQs - எமிஸ் இணையதளத்தில் ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான விளக்கமும்...



>>> EMIS FAQs - எமிஸ் இணையதளத்தில் ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான விளக்கமும்...


>>> EMIS FAQs - எமிஸ் இணையதளத்தில் ஏற்படும் மேலும் சில சந்தேகங்களும் அதற்கான விளக்கமும் (கோயம்புத்தூர் மாவட்டம்)...



பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு ஜூன் 30-இல் கலந்தாய்வு...

 பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு ஜூன் 30-இல் கலந்தாய்வு...



இன்றைய (29-06-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூன் 29, 2021



பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு அதிகரிக்கும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்



அஸ்வினி : அறிவு வெளிப்படும்.


பரணி : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.


கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூன் 29, 2021



புதிய வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வுகளும், காலதாமதமும் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும். 


ரோகிணி : காலதாமதம் உண்டாகும்.


மிருகசீரிஷம் : ஏற்ற, இறக்கமான நாள்.

---------------------------------------




மிதுனம்

ஜூன் 29, 2021



திறமைக்கேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மனதில் மேலோங்கும். உடல் நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சிந்தனைகள் மேலோங்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : எண்ணங்கள் அதிகரிக்கும். 


திருவாதிரை : சோர்வான நாள். 


புனர்பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------




கடகம்

ஜூன் 29, 2021



உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுவதை குறைத்துக்கொள்வது நன்மையை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை



புனர்பூசம் : வாய்ப்புகள் அமையும்.


பூசம் : சேமிப்புகள் குறையும்.


ஆயில்யம் : கவனம் வேண்டும்.

---------------------------------------





சிம்மம்

ஜூன் 29, 2021



வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்களின் மூலம் லாபத்தை மேம்படுத்த முடியும். அரசு தொடர்பாக எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் உதவிகளால் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மகம் : லாபம் மேம்படும்.


பூரம் : உதவிகள் கிடைக்கும்.


உத்திரம் : இழுபறிகள் குறையும்.

---------------------------------------




கன்னி

ஜூன் 29, 2021



வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிராக செயல்பட்டவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



உத்திரம் : சாதகமான நாள்.


அஸ்தம் : கருத்து வேறுபாடுகள் மறையும். 


சித்திரை : கவனம் வேண்டும்.

---------------------------------------




துலாம்

ஜூன் 29, 2021



சுபகாரியங்கள் தொடர்பான செலவுகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் அகலும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



சித்திரை : செலவுகள் உண்டாகும்.


சுவாதி : சிந்தனைகள் அதிகரிக்கும். 


விசாகம் : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூன் 29, 2021



நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். தவறிப்போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். விவசாயப் பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் அமையும். வர்த்தகம் சார்ந்த வியாபாரத்தில் லாபம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



விசாகம் : உதவிகள் கிடைக்கும்.


அனுஷம் : தடைகள் குறையும். 


கேட்டை : லாபம் மேம்படும்.

---------------------------------------




தனுசு

ஜூன் 29, 2021



நெருக்கமானவர்களிடம் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மூலம் : மகிழ்ச்சியான நாள்.


பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


உத்திராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

---------------------------------------




மகரம்

ஜூன் 29, 2021



குடும்ப உறுப்பினர்களிடம் பொழுதுகளை செலவு செய்து மகிழ்வீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடுவதற்கான சூழ்நிலைகள் அமையும். மனதில் நினைத்த காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திராடம் : மேன்மையான நாள். 


திருவோணம் : எண்ணங்கள் ஈடேறும்.


அவிட்டம் : பிரச்சனைகள் நீங்கும். 

---------------------------------------




கும்பம்

ஜூன் 29, 2021



உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதத்தில் மாற்றங்கள் ஏற்படும். உறவினர்களின் வழியில் நிதானம் வேண்டும். புதுவிதமான அணிகலன்கள் செய்வது மற்றும் அது தொடர்பான விருப்பங்கள் மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும். 


சதயம் : நிதானம் வேண்டும்.


பூரட்டாதி : விருப்பங்கள் உண்டாகும்.

---------------------------------------




மீனம்

ஜூன் 29, 2021



எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். ஆடம்பரப் பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். எதிர்பாராத சிலரது சந்திப்புகள் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தும். உலக வாழ்வியல் நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



பூரட்டாதி : ஈர்ப்பு அதிகரிக்கும். 


உத்திரட்டாதி : லாபம் மேம்படும்.


ரேவதி : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------


10ம் வகுப்புக்கு மார்க் எப்படி?

 பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் நிர்ணயிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள்,  ஆலோசனை நடத்த உள்ளனர். வேலைவாய்ப்புகளில் 10ம் வகுப்பு மதிப்பெண் முக்கியம் என்பதால், அவர்களுக்கு எதன் அடிப்படையில், மதிப்பெண் வழங்குவது; அதற்கு என்னென்ன வழிகள் உள்ளன; 9ம் வகுப்பின் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில், மதிப்பெண் வழங்கலாமா என, ஆலோசனை நடத்தப்பட உள்ளது.



கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவே பாடங்கள் கற்பிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

 ''ஐ.சி.எம்.ஆர்., வழிக்காட்டல், மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை பெற்று, முதல்வருடன் ஆலோசனை செய்த பின்பு தான், பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்,'' என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.


திருச்சியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக, வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 1 மதிப்பெண்கள் பள்ளிக்கல்வித்துறையிடம் உள்ளது. அதன் அடிப்படையில், விரைவாக பிளஸ் 2 மதிப்பெண் வெளியிடப்படும்.கொரோனா தாக்கம் முழுமையாக கட்டுக்குள் வந்த பின், மாணவர்களுக்கு கேடு ஏற்படாத நாட்களில்தான் பள்ளிகள் திறக்கப்படும். அது வரை கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவே பாடங்கள் கற்பிக்கப்படும்.


தற்போது, கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது.இருப்பினும், உளவியல் ரீதியாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். மூன்றாவது அலை வரும், எனக் கூறுகின்றனர். எனவே,


  ஐ.சி.எம்.ஆர் வழிக்காட்டல், மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை பெற்று, முதல்வருடன் ஆலோசனை செய்த பின், பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.




மின்னணு நூல்களை வாசிக்க உதவும் கருவி - பார்வை திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்...

 மின்னணு நூல்களை வாசிக்க உதவும் கருவி - பார்வை திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்...


மின்னணு வடிவில் உள்ள புத்தகங்கள் மற்றும் பிரெய்லி எழுத்துக்கள் வடிவில் தொடு உணர்வுடன் அறிய உதவும் வாசிக்கும் கருவி பெறுவதற்கு, தகுதிகளுடைய பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


 திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வைத் திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் எளிதில் கற்பதற்கு ஏதுவாக மின்னணு வடிவில் உள்ள புத்தகங்களை (இ-புக்) பிரெய்லி எழுத்துக்கள் வடிவில் தொடு உணர்வுடன் அறிய உதவும் வாசிக்கும் கருவி வழங்கும் திட்டத்தின் கீழ், தகுதிகள் உள்ள மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பார்வைத் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். 


இளநிலை கல்விமுடித்தவராக இருக்க வேண்டும். முதுநிலை படிப்பு படிப்பவராகவோ அல்லது டெட், டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெறுபவராக இருத்தல் வேண்டும். பிரெய்லி எழுத்துக்களை வாசிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். 


ஜூலை 5-ம் தேதிக்குள்.. 

மேற்கண்ட தகுதிகளை உடையபார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வரும் ஜூலை 5-ம் தேதிக்குள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.



பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் ஏன்? கல்வித்துறை அமைச்சர் அவர்கள்...


பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டு முறையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தது ஏன் என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார். 


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் அதிகாரிகளுடன்  சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்ட பின்பு செய்தி யாளர்களிடம் கூறியது: பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு மொத்தம் 12 கணக்கீட்டு முறைகள் பரிந்துரைக்கப்பட்டன. அது குறித்து விவாதித்து, இரண்டு முறைகளை முதல்வர், தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோருக்குச் சமர்ப்பித்தோம். 


அதிலிருந்து ஒரு முறையை இறுதி செய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிளஸ் 2 மாணவர்கள் பெருந்தொற்று இல்லாத காலத்தில் நேரடியாக பள்ளிக்குச் சென்று பாடங்களைப் பயின்று, நேரடியாகத் தேர்வை எழுதிப் பெற்ற மதிப்பெண்கள் அவை. அதனால் மட்டுமே பத்தாம் வகுப்பிலிருந்து 50 சதவீத மதிப்பெண்கள் பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண்ணுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. 


தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை:

 அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா கையடக்க மடிக்கணினி (டேப்லெட்) வழங்குவது குறித்தும், கல்வி தொலைக்காட்சியை 4 சேனல்களாக விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசனை நடை பெற்று வருகிறது என்றார் அவர்.



எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை 14 வயதுக்கு உட்பட்ட 1.89 லட்சம் மாணவர்களின் விவரம் சேகரிப்பு...

 எல்கேஜி முதல் 8 ம் வகுப்பு வரை 14 வயதுக்கு உட்பட்ட 1.89 லட்சம் மாணவர்களின் விவரம் சேகரிப்பு. 3வது அலையை தடுக்க பெற்றோர்களுக்கு தடுப்பூசி...



விடுபட்ட மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்கப்படும்...

 விடுபட்ட மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்கப்படும்...



சேவை மனப்பான்மையில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு அரசு துணை நிற்கும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி...



 சேவை மனப்பான்மையில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தெரிவித்தார்.


சென்னையில்  செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ''கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பள்ளிகளிடம் இருந்து அறிக்கை கோரியிருக்கிறோம். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வி சென்று சேரவேண்டும் என்ற அடிப்படையில், தேவைப்படும் மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்கும்.


கல்விக் கட்டணத்தைச் செலுத்தாவிட்டாலும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களை அனுமதிக்க வேண்டும். இதுகுறித்த அறிக்கையையும் கேட்டுள்ளோம். அரசின் விதிமுறைகளைப் பள்ளிகள் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தெரிவித்துள்ளோம். மாணவர்களுக்காகப் பள்ளி நிர்வாகத்தையும், பள்ளி நிர்வாகங்களுக்காக மாணவர்களையும் நாங்கள் விட்டுக் கொடுப்பதாக இல்லை.


சேவை மனப்பான்மையில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும். அதே நேரத்தில் வணிக நோக்கில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், உதாரணத்திற்குக் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் அனுமதிக்கப்படாத நிலையை ஏற்படுத்தும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு எச்சரிக்கை விடுக்கும் தொனியில்தான் செயல்படும்.


கல்விக் கட்டணம் தொடர்பாக 14417 என்ற உதவி எண் மூலம் பள்ளிக் கல்வித்துறைக்கு வரும் புகார்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் முதல் கட்டமாக எச்சரிக்கை விடுக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ’டேப்’ வழங்குவது குறித்த ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்

தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்...



தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் செய்யப்பட்ட அளவிற்கு பரிசோதனைகள் தற்போது செய்யப்படுகின்றன. தினமும் 1.30 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 36வது நாளாக ஒருநாள் கொரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது. மேற்கு மண்டலத்தை சேர்ந்த 9 மாவட்ட மருத்துவர்கள் உடன் காணொலியில் ஆலோசிக்கப்பட்டது.



மகப்பேறு பரிசோதனைக்கு வரும் தாய்மார்களுக்கு யோகா, மூச்சுப்பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். மேலும், விரும்பிய தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிசேரியன் செய்வது அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதற்காக பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், விருப்பத்தின் பேரில் சிசேரியன் செய்வது ஏற்கத்தக்கது அல்ல. இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கும் என்றும், மேலும், சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுவதற்கு ஊக்குவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும். மாணவர்கள் பயிற்சிக்கு செல்வதை தடுத்து ஒருவேளை காலதாமதம் ஏற்பட்டால் எதிர்காலம் பாதிக்கப்படும். நீட் எதிர்ப்பு தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு சென்றால் அது ஒப்புதலோடுதான் திரும்ப வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


கொரோனா அச்சம் குறைந்த பிறகே, பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி...



 கொரோனா அச்சம் குறைந்த பிறகே, பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் -  பெற்றோர்களிடம் கருத்துக்கணிப்பு கேட்ட பிறகு தான் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி...


கொரோனா தொடர்பான பெற்றோர்களின் அச்சம் குறைந்த பிறகே, பள்ளி திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆன்லைன் வகுப்பிலேயே சென்றுவிட்டன. நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளை திறக்க திட்டமிட்டிருந்த தமிழக அரசு, இரண்டாம் அலையின் தீவிரத்தால் அந்த முடிவை கைவிட்டது. தற்போது பாதிப்பு குறைந்து இருக்கும் நிலையில் பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.


தெலுங்கானாவில் ஜூலை 1 ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. பிற மாநிலங்களும் இதனை பின்பற்ற வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. இத்தகைய சூழலில் தான், ஜூலை மாதம் பள்ளிகளை திறப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.


முதலில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கிய பின்னர் படிப்படியாக பிற வகுப்புகளுக்கு தொடங்க அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில், கொரோனா தொடர்பாக பெற்றோர்களின் அச்சம் குறைந்து பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இன்று முதல் பஸ்கள் ஓடும் - மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகள் இயங்கும் - அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு...


 தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 9333 பேருந்துகள் நாளை மறுநாள் முதல் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டம் விட்டு மாவட்டமும் பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை 5ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஏற்கனவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.


இந்த சூழலில் வரும் 28ம் தேதி முதல் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், நெல்லை,. கன்னியாகுமரி, ராமநாதபுரம், கடலூர் உள்பட மேலும் 23 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்தது.


எந்தெந்த மாவட்டங்கள் - 50 சதவீத பயணிகள்

இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று வெளியிட்டுள்ள அறவிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், கோவிட்-19 தொற்றின் காரணமாக அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கனை 28.6.2021 முதல் 05.07,2021 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்கள். அந்த உத்தரவில் வகை 2ல் குறிப்பிட்டுள்ளவாறு அரியலூர், கடலூர், திண்டுக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கிடையேயும் பொதுப் பேருந்து போக்குவரத்தினை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்துள்ளார்கள்.


27 மாவட்டங்களில் பேருந்துகள் - 28ம் தேதி முதல் பேருந்துகள்

ஏற்கனவே தமிழக முதல்வர் அவர்கள், வகை 3ல் குறிப்பிட்டுள்ளவாறு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கிடையே பொதுப்போகுவரத்தினை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்து தற்போது இயக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்கள் என ஆக மொத்தம் 27 மாவட்டங்களில் வரும் 28.06.2021 காலை 6 மணி முதல் 50 சதவீத இருக்கைகளுடன், மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டங்களுக்கு இடையேயும் இயக்கப்படுகின்றன.



எத்தனை பேருந்துகள்  - எங்கு எவ்வளவு..

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள மொத்தம் 19290 பேருந்துகளில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2200 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 385 பேருந்துகளும், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2210 பேருந்துகளும், சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 50 பேருந்துகளும், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1592 பேருந்துகளும், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1300 பேருந்துகளும் மற்றும் திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1153 பேருந்துகள் என மொத்தம் 9323 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



ராஜகண்ணப்பன்  - போக்குவரத்துஅமைச்சர்

இயக்கப்படுகின்ற பேருந்துகளை உரிய முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து அரசு விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்கிடுமாறு உத்தரவிட்ப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு விதித்துள்ள வழிகாட்டு முறைகளான கட்டாய முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பயணித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது' இவ்வாறு போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.



ஆந்திராவில் அரசுப் பணிகளுக்கு இனி நேர்முகத் தேர்வு இல்லை...

 ஆந்திராவில் அரசுப் பணிகளுக்கு இனி நேர்முகத் தேர்வு இல்லை...



கொரோனா ஆபத்து இன்னும் ஓயவில்லை; தயக்கம் தவிர்த்து, வதந்திகளை விடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்வீர்: பிரதமர் மோடி வேண்டுகோள்...



 கொரோனா ஆபத்து இன்னும் ஓயவில்லை; தயக்கம் தவிர்த்து, வதந்திகளை விடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்வீர்: பிரதமர் மோடி வேண்டுகோள்...


பிரதமர் நரேந்திர மோடி, "மன் கி பாத்" எனும் வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களுக்கு அவ்வப்போது உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இது 78வது மன் கி பாத் அத்தியாயம்.


இந்த நிகழ்ச்சியில், பிரதமர் பேசியதாவது:


மக்களே, நீங்கள் அனைவரும் அறிவியலை நம்ப வேண்டுகிறேன். நம் விஞ்ஞானிகள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். இதுவரை கோடிக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். எனது தாய் 100 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அவர், இரண்டு டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளார். ஆகையால், தடுப்பூசி தொடர்பான எந்தவொரு வதந்தியையும் நம்பாதீர்கள்.


தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் மட்டுமே கொடிய உயிர்க்கொல்லி நோயில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும். தடுப்பூசிக்கு எதிராக சிலர் வதந்திகளைப் பரப்பலாம். அவர்கள் பரப்பட்டும். நாம் நமது வேலையைச் செய்வோம். கரோனா தொற்றின் பேராபத்து இன்னும் ஓய்ந்துவிடவில்லை. ஆகையால் இப்போது நாம் அனைவரும் தடுப்பூசியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.


இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


நிகழ்ச்சியின் போது மத்தியப் பிரதேச மாநிலம் பீடுல் மாவட்டம் துலாரியா கிராமத்தைச் சேர்ந்த இருவரிடம் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர்கள், சமூகவலைதளங்களில் பரவும் தடுப்பூசி தகவல்கள் பற்றி கூறினர். அதற்கு பிரதமர் வதந்திகளை நம்ப வேண்டாம். தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே இப்போதைக்கு ஒரே தீர்வு என்று எடுத்துரைத்தார்.


முன்னதாக நேற்று, தடுப்பூசி திட்டம் தொடர்பாக பிரதமர் மோடி உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர், "நாட்டில் தடுப்பூசி வழங்கலின் வேகம் திருப்தியளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுவரை 5.6% மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டிருக்கிறது.


தடுப்பூசி மக்களை சென்றடைவதற்காக புதுமையான முறைகளை ஆராய்ந்து செயல்படுத்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகளை ஈடுபடுத்த வேண்டும்.


எந்தவொரு பகுதியிலும் அதிகரித்து வரும் தொற்றுகளை கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கான மிக முக்கிய ஆயுதமாக பரிசோதனைகள் இருப்பதால், மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றி பரிசோதனைகள் குறைந்து விடாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி...



ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.


தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி தொடர்பான வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், ஜைடஸ் காடிலா நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்த பின்னர் விரைவில் சிறுவர்களுக்கு செலுத்தப்படும் என தெரிவித்திருந்தது. ஜைடஸ் காடிலா நிறுவனம், தனது தடுப்பூசிக்கு அனுமதி கேட்டு, விரைவில் விண்ணப்பம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பூசி பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் கொடுக்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.


இது தொடர்பாக தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் டாக்டர் என் கே அரோரா கூறியதாவது: ஜைடஸ் கடிலா தடுப்பூசி பரிசோதனை முடிவடையும் நிலையில் உள்ளது. ஜூலை அல்லது ஆக., துவக்கத்தில் 12 முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கும். இந்த தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கும் போது, நமக்கு கூடுதலாக ஒரு தடுப்பூசி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


முன்னதாக இந்த தடுப்பூசி தொடர்பாக, எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப்குலேரியா கூறுகையில், இந்த தடுப்பூசி, பயன்பாட்டிற்கு வரும் போது மிகப்பெரிய சாதனையாக அமையும். பள்ளிகள் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளை துவக்குவதற்கான பெரிய வழியை ஏற்படுத்தும். 2 முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி குறித்த இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனை முடிவுகள் செப்., மாதம் கிடைக்கும். மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல் பெற்ற பின்னர், அந்த தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்தப்படும். பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தாலும், அதுவும் குழந்தைகளுக்கான மற்றொரு தடுப்பூசியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


எந்த வயது மாணவரை எந்த வகுப்பில் சேர்க்க வேண்டும் - வயது ஒப்பீட்டு விவரம்...

 


Which Age student should be Admitted in which class - Age comparison details ...


>>> எந்த வயது மாணவரை எந்த வகுப்பில் சேர்க்க வேண்டும் - வயது ஒப்பீட்டு விவரம்...



வகை 2ல் உள்ள 23 மாவட்டங்களில் 28-06-2021 முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்:

வகை 2ல் உள்ள 23 மாவட்டங்களில் 28-06-2021 முதல் ஜவுளி, நகை கடைகள் திறக்க அனுமதி. 50% வாடிக்கையாளர்களுடன் காலை 9 மணி முதல் இரவு 7மணிவரை இயங்க அனுமதி - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...





தொழிற்சாலைகள் கொரோனா நிலையான கட்டுப்பாடு வழிமுறைகளைப் பின்பற்றி மருத்துவத்துறை சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிப்பின் கீழ் செயல்பட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...



Public health and preventive medicine - COVID 19 PANDEMIC - Ease of lockdown - Monitoring industries and Services establishments by Local Authorities - Instructions issued - Regarding


>>> கோவிட் 19 தளர்வுகள் - உள்ளூர் சுகாதார அலுவலர்களால் தொழில் மற்றும் சேவை நிறுவனங்கள் கண்காணிக்கப்படுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...


கல்வி தொலைக்காட்சி - வகுப்பு வாரியான கால அட்டவணை (தனித்தனி பக்கங்களில்)...

 



>>> கல்வி தொலைக்காட்சி - வகுப்பு வாரியான கால அட்டவணை (தனித்தனி பக்கங்களில்)...


இன்றைய (28-06-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜூன் 28, 2021



இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றமான சூழல் ஏற்படும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த உபாதைகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அஸ்வினி : முன்னேற்றமான நாள்.


பரணி : புரிதல் மேம்படும்.


கிருத்திகை : உபாதைகள் குறையும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூன் 28, 2021



அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சகோதரர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலைகள் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும்.


ரோகிணி : திறமைகள் வெளிப்படும்.


மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------




மிதுனம்

ஜூன் 28, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகளும், கலகலப்பான சூழ்நிலைகளும் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மிருகசீரிஷம் : கலகலப்பான நாள். 


திருவாதிரை : எண்ணங்கள் மேம்படும்.


புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




கடகம்

ஜூன் 28, 2021



மனதில் தோன்றும் சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படும். இலக்கியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த செயல்பாடுகளில் நிதானம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படும். 


பூசம் : ஆர்வம் உண்டாகும்.


ஆயில்யம் : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------




சிம்மம்

ஜூன் 28, 2021



புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். சமூகப்பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் புதுவிதமான உத்வேகத்தை ஏற்படுத்தும். குடும்ப பெரியோர்களின் வருகையும், மனதிற்கு மகிழ்ச்சியும் உண்டாக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : எண்ணங்கள் மேம்படும்.


பூரம் : ஆதரவான நாள். 


உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.

---------------------------------------




கன்னி

ஜூன் 28, 2021



புதிய முயற்சிகளின் மூலம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறியான நிலைகள் அகலும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



உத்திரம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். 


அஸ்தம் : இன்னல்கள் குறையும்.


சித்திரை : லாபம் ஏற்படும்.

---------------------------------------




துலாம்

ஜூன் 28, 2021



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணியில் எதிர்பார்த்த மாற்றங்கள் சாதகமாக அமையும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : ஒற்றுமை ஏற்படும். 


சுவாதி : சாதகமான நாள்.


விசாகம் : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூன் 28, 2021



தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். செலவுகளின் தன்மைகளை அறிந்து சூழ்நிலைக்கேற்ப செயல்படுவீர்கள். தந்தைவழி தொழிலின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



விசாகம் : நெருக்கடிகள் குறையும்.


அனுஷம் : அனுகூலமான நாள். 


கேட்டை : தெளிவு பிறக்கும்.

---------------------------------------




தனுசு

ஜூன் 28, 2021



திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடித்து மனம் மகிழ்வீர்கள். உறவினர்களின் மூலம் திருப்தியான செய்திகள் கிடைக்கும். வாகனம் தொடர்பான விருப்பங்களில் மாற்றங்கள் உண்டாகும். கடன் தொடர்பாக இருந்துவந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவுகளை எடுக்க வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : திருப்தியான நாள். 


பூராடம் : தீர்வு கிடைக்கும். 


உத்திராடம் : ஆலோசனைகள் வேண்டும்.

---------------------------------------




மகரம்

ஜூன் 28, 2021



செய்கின்ற பணிகளில் லாபகரமான கண்ணோட்டங்கள் அதிகரிக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சிறு வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : லாபகரமான நாள்.


திருவோணம் : ஈடுபாடு உண்டாகும்.


அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




கும்பம்

ஜூன் 28, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும். தொழில் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வீர்கள். கடன் தொடர்பான உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அவிட்டம் : பொறுப்புகள் குறையும்.


சதயம் : முயற்சிகள் அதிகரிக்கும்.


பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




மீனம்

ஜூன் 28, 2021



தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை குறைத்துக்கொள்வது நல்லது. மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவடையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



பூரட்டாதி : ஆதரவான நாள். 


உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


ரேவதி : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------



70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதை எட்டிய ஓய்வூதியம் பெறுவோர் / குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு கூடுதல் ஓய்வூதியம் அனுமதித்து தெலங்கானா அரசு அரசாணை வெளியீடு...



 GOVERNMENT OF TELANGANA

PENSIONS – Additional Quantum of Pension – Family Pension to be allowed to those  Pensioners / Family Pensioners on attaining the age of 70 years and above in the Pre- Revised Scales of Pay, 2020 – Orders – issued.

-------------------------------------------------------------------------------------

FINANCE (HRM.V) DEPARTMENT

G.O.Ms.No.57, Dated:11-06-2021.



>>> Click here to Download G.O.Ms.No.57, Dated:11-06-2021....


கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு - பயனடையும் மாணவர்கள் விவரம் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...



 கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு - பயனடையும் மாணவர்கள் விவரம் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 1183/ ஆ4/ 2020, 26-06-2021...


>>> ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 1183/ ஆ4/ 2020, 26-06-2021...


மாணவர் சேர்க்கை & இணையதள உள்ளீடு குறித்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...



 மாணவர் சேர்க்கை & இணையதள உள்ளீடு குறித்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 1744/ சி1/ 2021, நாள்: 26-06-2021...


>>> ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 1744/ சி1/ 2021, நாள்: 26-06-2021...



இன்றைய (27-06-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூன் 27, 2021



குடும்பத்தில் உங்களின் மீதான பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


பரணி : ஈடுபாடு உண்டாகும்.


கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூன் 27, 2021



சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். புதிய முயற்சிகளில் பெரியவர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். வித்தைகளின் மூலம் லாபம் மேம்படும். வேலையாட்கள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மற்றும் அது சார்ந்த பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.


ரோகிணி : பிரச்சனைகள் குறையும்.


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

ஜூன் 27, 2021



தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மனதில் அஞ்ஞான சிந்தனைகள் மேம்படும். இயந்திரம் தொடர்பான பணியில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



மிருகசீரிஷம் : ஏற்ற, இறக்கமான நாள்.


திருவாதிரை : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


புனர்பூசம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------




கடகம்

ஜூன் 27, 2021



உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் மற்றும் நட்பு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் ஊதிய உயர்விற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



புனர்பூசம் : நட்பு கிடைக்கும்.


பூசம் : உயர்வான நாள்.


ஆயில்யம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

ஜூன் 27, 2021



தாய்மாமன் வகையில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தும் பொழுது கவனம் வேண்டும். உத்தியோக மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். தொழில் சார்ந்த லாபம் மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : ஆதரவான நாள்.


பூரம் : சிந்தித்து செயல்படவும்.


உத்திரம் : இழுபறிகள் குறையும்.

---------------------------------------




கன்னி

ஜூன் 27, 2021



குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான பணிகளில் எண்ணிய உதவிகள் சாதகமாக அமையும். கலை சார்ந்த அறிவு மேம்படும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்தி அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திரம் : பாராட்டுகள் கிடைக்கும்.


அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.


சித்திரை : புத்திக்கூர்மை வெளிப்படும்.

---------------------------------------




துலாம்

ஜூன் 27, 2021



வாகனப் பயணங்களின் மூலம் லாபம் உண்டாகும். உறவினர்களிடம் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். கால்நடைகளின் மூலம் மேன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். நீர்நிலைகள் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



சித்திரை : லாபம் மேம்படும்.


சுவாதி : மேன்மை உண்டாகும்.


விசாகம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூன் 27, 2021



பெரியோர்களின் ஆதரவின் மூலம் இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். காது தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மைக்கான சூழ்நிலைகள் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



விசாகம் : இழுபறிகள் குறையும்.


அனுஷம் : அனுகூலமான நாள்.


கேட்டை : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------




தனுசு

ஜூன் 27, 2021



கோபமான பேச்சுக்களை குறைத்துக்கொள்வது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எந்தவொரு செயலிலும் வேகம் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். பொருளாதார நிலை மேம்படும். எதிர்பாலின மக்களின் மூலம் பொருள் ஆதாயம் ஏற்படும். வாதத்திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மூலம் : வேகம் அதிகரிக்கும்.


பூராடம் : பொருளாதாரம் மேம்படும்.


உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




மகரம்

ஜூன் 27, 2021



உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். சிந்தனையின் போக்கில் முன்னேற்றத்திற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்கள் பற்றிய மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்பட்டு மறையும். புதுவிதமான கனவுகளை உருவாக்குவீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவை பெறுவீர்கள். நினைவாற்றில் ஏற்பட்ட மந்தத்தன்மை குறையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



உத்திராடம் : மாற்றங்கள் ஏற்படும்.


திருவோணம் : முன்னேற்றமான நாள்.


அவிட்டம் : மந்தத்தன்மை குறையும்.

---------------------------------------




கும்பம்

ஜூன் 27, 2021



பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். விவாதம் புரிவதில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மற்றவர்களுக்கான பணிகளை செய்து அதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான எண்ணங்கள் மனதில் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் கருத்துக்கள் கூறுவதை குறைத்துக்கொள்வது நல்லது.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.


சதயம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.


பூரட்டாதி : எண்ணங்கள் உண்டாகும்.

---------------------------------------





மீனம்

ஜூன் 27, 2021



சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கும். இணையதளம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வேளாண்மை தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். மனதில் இருக்கும் கவலைகளை மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் தெளிவும், புத்துணர்ச்சியும் பெறுவீர்கள். செய்தொழிலில் மேன்மையும், முன்னேற்றமும் உண்டாகும். சங்கீதம் தொடர்பான பணிகளில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



பூரட்டாதி : அங்கீகாரம் கிடைக்கும்.


உத்திரட்டாதி : தெளிவு பிறக்கும்.


ரேவதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...