கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நீட் (இளநிலை) - 2024 தேர்வுக்கான மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் (Updated Syllabus for NEET (UG)-2024 Exam)...


 நீட் (இளநிலை) - 2024 தேர்வுக்கான மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் (Updated Syllabus for NEET (UG)-2024 Exam)...



>>> Click Here to Download...


2023 நவம்பர் மாத கற்றல் விளைவுகள் மற்றும் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு உத்தேச விடைக்குறிப்புகள் - அறிவியல் - 6 - 8ஆம் வகுப்புகள் - Tentative Answer Keys of Learning Outcomes (LOs) & Competency Based Assessment Exam - 6th to 8th Standard (TM & EM) KEY...

 

 2023 நவம்பர் மாத கற்றல் விளைவுகள் மற்றும் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு உத்தேச விடைக்குறிப்புகள்  - அறிவியல் - 6 - 8ஆம் வகுப்புகள் - Tentative Answer Keys of Learning Outcomes (LOs) & Competency Based  Assessment Exam  - 6th to 8th Standard (TM & EM) KEY...


🌹 *2023-நவம்பர் மாத கற்றல் விளைவுகள் அடிப்படையிலான அறிவியல் தேர்வு - 6th STD (TM) KEY* 👇🌹


1. இ

2. ஆ

3. ஆ

4. இ

5. ஆ


🌹 *2023-NOVEMBER MONTH LO BASED SCIENCE TEST - 6th STD (EM) KEY* 👇 🌹


1. c

2. b

3. b

4. c

5. b


🌹 *2023-நவம்பர் மாத    கற்றல் விளைவுகள் அடிப்படையிலான அறிவியல் தேர்வு - 7th STD (TM) KEY* 👇🌹


1. ஈ

2. இ

3. ஆ

4. இ

5. இ


🌹 *2023-NOVEMBER MONTH LO BASED SCIENCE TEST - 7th STD (EM) KEY* 👇 🌹


1. d

2. c

3. b

4. c

5. c


🌹 *2023-நவம்பர் மாத    கற்றல் விளைவுகள் அடிப்படையிலான அறிவியல் தேர்வு - 8th STD (TM) KEY* 👇🌹


1. அ

2. அ

3. ஆ

4. அ

5. இ


🌹 *2023-NOVEMBER MONTH LO BASED SCIENCE TEST - 8th STD (EM) KEY* 👇 🌹


1. a

2. a

3. b

4. a

5. c


டிசம்பர் 2023 - மாத பள்ளி நாள்காட்டி (December 2023 - School Calendar)...



டிசம்பர் 2023 - மாத பள்ளி நாள்காட்டி (December 2023 - School Calendar)...


02-12-2023 - சனி - 1-5ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC & குறைதீர்க்கும் நாள்


11-12-2023 - திங்கள் - இரண்டாம் பருவம் SA தேர்வு / அரையாண்டுத் தேர்வு - 1-12 வகுப்பு மாணவர்களுக்கு.


18-12-2023  to  20-12-2023 வரை --- 1-3 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவ  EE  பயிற்சி...


23-12-2023 --  இரண்டாம் பருவம்  / அரையாண்டுத் தேர்வு விடுமுறை  ஆரம்பம்...


02-01-2024 -- 6-12 வகுப்புகளுக்கு மூன்றாம் பருவம் -- பள்ளிகள் திறப்பு..


தொடக்கப் பள்ளிகளுக்கு பள்ளிகள் திறப்பு மாறுதலுக்கு உட்பட்டது..


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.11.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.11.2023 - School Morning Prayer Activities...



திருக்குறள்: 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : வெகுளாமை


குறள்:310


இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்

துறந்தார் துறந்தார் துணை.


விளக்கம்:


சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறவிக்கு ஒப்பாவர்.



பழமொழி :

Learning is youth is an engraving on a rock.


இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.



இரண்டொழுக்க பண்புகள் :


1) விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.


2) என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.


பொன்மொழி :


துருப்பிடித்து தேய்வதை

விட உழைத்து தேய்வது

சிறந்தது.. நீ நினைத்தால்

விண் மீனையும் விழுங்கி

விட முடியும்.. இதுவே உன்

உண்மை பலம்.. மூட

நம்பிக்கைகளை

உதரித் தள்ளிவிட்டு

தைரியமாக செயல்படு



பொது அறிவு :


1. ஆதார் அட்டை முதலில் பெற்றவர் யார்?


விடை:  ரஞ்சனா சோனாவனே


2.. தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர்?


விடை: டீனியா (Taenia)



English words & meanings :


 gut(n) - the elementary canal குடல், நரம்பு. 

gymnast (n) - expert in gymnastics உடற்பயிற்சி வல்லுநர்



ஆரோக்ய வாழ்வு : 


பூசணிப் பூ: பூசணி பூக்களில் ஏராளமான வைட்டமின் A தாது சத்துக்கள் காணப்படுகின்றன. வைட்டமின்-A கண்பார்வையை மேம்படுத்த உதவும். ஒளியினால் உண்டாகும் மாற்றங்களை சமாளிக்க கண்களுக்கு போதுமான சக்தியை தருகிறது மற்றும் கண்களை ஈரத்தன்மையுடன் வைத்திருக்க கூடியது. அதுமட்டுமல்ல, வைட்டமின்-A இரவு பார்வையையும் மேம்படுத்துகிறது



நவம்பர் 30


சர் ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள்...



சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.[1] போசு வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.



நீதிக்கதை


 பசியால் வருந்திய ஒரு ஓநாய் ஒருநாள் காலையில் ' இரை தேடி கிளம்பியது. காட்டில் கட்டப்பட்டிருந்த ஒரு குடிசையைக் கடக்கும் போது குடிசையிலிருந்த ஒரு தாய் தன் குழந்தையிடம் சொன்ன சொற்களைக் கேட்டது. "அழாமல் இரு.என் சொற்படி கேட்காமல் அழுதாய் என்றால் ஜன்னல் வழியே தூக்கிப் போட்டு விடுவேன். ஓநாய் வந்து உன்னைத் தின்று விடும்." என்று அந்தத் தாய் தன் குழந்தையை மிரட்டிக் கொண்டிருந்தாள். ஓநாய் நாள் முழுவதும் அந்தக் குடிசையின் கதவருகே உட்கார்ந்தே இருந்தது. மாலையும் வந்தது.


இப்போது அந்தத் தாய் குழந்தையிடம் "சமர்த்துப் பிள்ளை, சொன்னதைக் கேட்டாய். ஓநாய் வந்தால் அதைக் கொன்று போடுவோம்." என்று சொன்னதைக்" கேட்டு ஓட்டமெடுத்தது ஓநாய்.


பசியுடனும் குளிருடனும் பொந்தில் முடங்கிக் கொண்டது. "என்ன ஆயிற்று உனக்கு. நீ எப்போதும் இப்படி வந்ததில்லையே. உணவு கிடைக்காமல் களைத்து போய் வந்துள்ளாயே, என்ன விஷயம்?" என்று மற்றொரு ஓநாய் கேட்டது. அதற்கு "ஒரு பெண்ணின் சொற்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் வந்த வினை!" என்று அந்த ஓநாய் பதில் சொன்னது.


நீதி : வீண் எதிர்பார்ப்பால் கால இழப்பும், பொருள் இழப்பும் ஏற்படுமே அன்றி காரியம் கை கூடாது.



இன்றைய செய்திகள்


30.11.2023


*சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.


* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.


* சீனாவில் சுவாசத் தொற்று எதிரொலி- இந்தியாவில் 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை.


* புழல் ஏரியிலிருந்து 200 கன அடி உபரி நீர் திறப்பு.


*சுரங்க தொழிலாளர்கள் 41 பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டனர்.


*இந்திய  அணியின் பயிற்சியாளராக தொடர்கிறார் டிராவிட்.


Today's Headlines


*Announcement of the holiday tomorrow for schools in Chennai, Tiruvallur, Chengalpattu, Kanchipuram district.


* Chance of thundershowers in Chennai and suburbs today.


* Respiratory infection reverberates in China- alert for 6 states in India.


* Release of 200 cubic feet of surplus water from Puzhal Lake.


*All 41 miners were rescued unharmed.


* Dravid continues as the coach of the Indian team.

 

கனமழை காரணமாக 30-11-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 30-11-2023 due to heavy rain) விவரம்...

 

கனமழை காரணமாக 30-11-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 30-11-2023 due to heavy rain) விவரம்...


பள்ளிகள் மட்டும்

சென்னை

காஞ்சிபுரம்

ராணிப்பேட்டை


பள்ளி மற்றும் கல்லூரிகள்

திருவள்ளூர்



🔴🔴செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (30.11.2023) பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது...


மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய மொழிகள் உற்சவம் 2023-2024 நடத்துதல் - வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் கடிதம், போட்டிகள் விவரம் & மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் (Conduct of Indian Languages ​​Utsavam 2023-2024 on Mahakavi Subramania Bharatiyar Birthday - Issue of Guidelines - Letter from Director of School Education, Details of Competitions & Activities to be undertaken)...



 மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய மொழிகள் உற்சவம் 2023-2024 நடத்துதல் - வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல்  - பள்ளிக்கல்வி இயக்குநரின் கடிதம், போட்டிகள் விவரம் & மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் (Conduct of Indian Languages ​​Utsavam 2023-2024 on Mahakavi Subramania Bharatiyar Birthday - Issue of Guidelines - Letter from Director of School Education, Details of Competitions & Activities to be undertaken)...



>>> மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய மொழிகள் உற்சவம் 2023-2024 நடத்துதல் - வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல்  - பள்ளிக்கல்வி இயக்குநரின் கடிதம்...



>>> இந்திய மொழிகள் உற்சவம் 2023-2024 - போட்டிகள் விவரம் & மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்...


அரசுப் பள்ளிகளில் மிஷன் இயற்கை - சுற்றுச்சூழல் திட்டம் செயல்படுத்துதல் - Roll Out Plan - 2023-2024 சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 69206/ எம்/ இ2/ 2023, நாள்: 28-11-2023 (Implementation of Mission Eyarkai (Nature) - Environment Scheme in Government Schools - Roll Out Plan - 2023-2024 Proceedings of Joint Director of School Education Rc.No: 69206/ M/ E2/ 2023, Date: 28-11-2023)...



அரசுப் பள்ளிகளில் மிஷன் இயற்கை - சுற்றுச்சூழல் திட்டம் செயல்படுத்துதல் - Roll Out Plan - 2023-2024 சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 69206/ எம்/ இ2/ 2023, நாள்: 28-11-2023 (Implementation of Mission Eyarkai (Nature) - Environment Scheme in Government Schools - Roll Out Plan - 2023-2024 Proceedings of Joint Director of School Education Rc.No: 69206/ M/ E2/ 2023, Date: 28-11-2023)...



>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 69206/ எம்/ இ2/ 2023, நாள்: 28-11-2023...



>>> அரசுப் பள்ளிகளில் மிஷன் இயற்கை சுற்றுச்சூழல் திட்டம் செயல்படுத்துதல் - 18-11-2022 அன்று பயிற்சி - சிறப்பாக செயல்படும் 5 பள்ளிகள் மற்றும் 25 மாணவர்களுக்கு முதலமைச்சர் விருதுகள் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - திட்டத்தின் செயல்பாடு கால அட்டவணை (Implementation of Mission Eyarkai Environment Program in Government Schools – Training on 18-11-2022 – Chief Minister Awards to 5 best performing schools and 25 students – Proceedings of Commissioner of School Education - Roll out Plan) ந.க.எண்: 56667/ எம்/ இ2/ 2021, நாள்: 15-11-2022...


2023 - 2024ஆம் ஆண்டு - உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முறை - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 69185/ எம்/ இ3/ 2023, நாள்: 28-11-2023 (Announcement of General Transfer Counselling for Physical Education Teachers - Procedure for Uploading Applications - Proceedings of Director of School Education Rc.No: 69185/ M/ EE/ 2023, Dated: 28-11-2023)...


2023 - 2024ஆம் ஆண்டு - உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முறை -  பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 69185/ எம்/ இ3/ 2023, நாள்: 28-11-2023 (Announcement of General Transfer Counselling for Physical Education Teachers - Procedure for Uploading Applications - Proceedings of Director of School Education Rc.No: 69185/ M/ EE/ 2023, Dated: 28-11-2023)...



>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 69185/ எம்/ இ3/ 2023, நாள்: 28-11-2023...



குறித்த காலத்திற்குள் வளரறி மதிப்பீடு (FA) முடிக்காத வகுப்பு ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க தஞ்சாவூர் ஊரகம் வட்டாரக் கல்வி அலுவலர் குறிப்பாணை (Thanjavur Rural Block Education Officer Memorandum to explain to the class teachers who have not completed the FA within the stipulated time)...

 


குறித்த காலத்திற்குள் வளரறி மதிப்பீடு (FA) முடிக்காத வகுப்பு ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க தஞ்சாவூர் ஊரகம் வட்டாரக்  கல்வி அலுவலர் குறிப்பாணை (Thanjavur Rural Block Education Officer Memorandum to explain to the class teachers who have not completed the FA within the stipulated time)...


அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை பள்ளிகளிலும் எண்ணும் எழுத்தும் 4,5 வகுப்புகளுக்கு வளரறி மதிப்பீடு மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


 குறித்தக்காலத்திற்குள் வளரறி மதிப்பீடு முடிக்காத வகுப்பு ஆசிரியர்கள் அதற்கான காரணத்தினை தலைமையாசிரியர் வழியாக அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.



>>> தஞ்சாவூர் ஊரகம் வட்டாரக்  கல்வி அலுவலர் குறிப்பாணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


5 ரூபாய் அஞ்சல் தலைகளுக்கு திடீர் தட்டுப்பாடு - காரணம் மாணவர்களா? - பின்னணி என்ன? (Sudden shortage of Rs 5 stamps - Students to blame? - What is the background?)...

 


5 ரூபாய் அஞ்சல் தலைகளுக்கு திடீர் தட்டுப்பாடு - காரணம் மாணவர்களா? - பின்னணி என்ன? (Sudden shortage of Rs 5 stamps - Students to blame? - What is the background?)...


அதன்படி நாங்கள் மாணவர்கள் கொடுக்கும் ஸ்டாம்புகளை விண்ணப்பத்துடன் இணைத்து, சாதாரண தபாலில் அனுப்புகிறோம். மேலும் விவரங்களுக்கு 93194 85303 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ‘sub code M2A5R004’ என்று குறிப்பிட்டு தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் இதுபற்றிய விவரங்களுக்கு www.pcoi.org.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளவேண்டும்” என்று தெரிவித்தனர். அவர்கள் குறிப்பிடும் அந்த விண்ணப்பத்தில், மாணவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், தந்தையின் தொழில் உள்ளிட்டவைகளுடன் 10 ஐந்து ரூபாய் அஞ்சல் தலைகளை இணைக்கச் சொல்லி குறிப்பிடப்பட்டுள்ளது.



ஆனால், தனியார் பள்ளி நிர்வாகம் குறிப்பிடும் தொலை பேசி எண்ணை தொடர்பு கொண்டால், தொடர்பு செல்லவில்லை. அவர்கள் குறிப்பிடும் இணையதள முகவரியும் தவறாகவே இருந்தது. மாணவர்களிடையே தேவையற்ற ஒரு ஆசையைத் தூண்டி, அவர்களை அலைக்கழிப்பதாகவே இதை உணர முடிந்தது. விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனிடம் இதுபற்றி கேட்ட போது, “தனியார் பள்ளிகளில் மாவட்ட கல்வி அலுவலரை விட்டு உடனே விசாரிக்க சொல்கிறேன்’‘ என்று தெரிவித்தார்.


கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக விழுப்புரம் மாவட்ட மாணவர்களிடையே இந்த 5 ரூபாய் அஞ்சல் தலை மோகம் இருந்து வரும் நிலையில், இவர்கள் குறிப்பிடுவது போல் எந்த ஒரு மாணவரும் ‘டேப்லெட் பிசி’ பெற்றதாக இதுவரையில் தகவல் இல்லை. 



மொத்தத்தில், ஏதோ ஒரு வகையில் மாணவர்களிடையே ஆசை காட்டி, அவர்கள் சார்ந்த தொலைபேசி எண்கள் உள்ளிட்ட புள்ளி விவரங்களை ஏதோ ஓரு அமைப்பு திரட்டி வருவது உறுதியாகிறது. இந்த புள்ளி விவரங்களைக் கொண்டு, குறிப்பிட்ட இணையவழி கல்வியில் சேர ஆசை காட்டலாம். அடுத்த உயர்கல்விக்கு அணுகும் ஏஜென்சிகள் மாணவர்களின் இந்த தகவல் தொகுப்பை பயன்படுத்தலாம் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.



தனியார் நிறுவனம் அனுப்பிய விண்ணப்பப்படிவ மாதிரி.



கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ திரைப்படத்தில், பொதுமக்களின் முழு விவரங்கள் திரட்டப்பட்டு, எப்படி வணிக நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு பணமாக்கப்படுகிறது என்பது விவரிக்கப்பட்டு இருக்கும். அதுபோலவே மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். “எல்லாம் சரி.. தரமான தனியார் பள்ளிகள் இதற்கு ஏன் உடன்பட வேண்டும்? இதுபோல மாணவர்கள் தன்னிச்சையாக செய்வதை அறிந்தால், பள்ளிகளே ‘இது தவறு’ என்று சுட்டிக்காட்டி மாணவர்களை நல்ல முறையில வழி நடத்த வேண்டும். ஆனால், அதற்கு மாறாக அவர்களே இதை ஏன் ஊக்குவிக்குகின்றனர்?” என்று பெற்றோர் தரப்பில் கேள்வி எழுப்புகின்றனர்.


ஆய்வுக்கு வந்த இடத்தில் ஆசிரியரை ஒருமையில் பேசி திட்டி மிரட்டிய வட்டார கல்வி அலுவலர் - முதன்மை கல்வி அலுவலரிடம் பரபரப்பு புகார் (Complaint to Chief Education Officer - Block Education Officer who verbally insulted and threatened the teacher at the place of inspection)...

 ஆய்வுக்கு வந்த இடத்தில் ஆசிரியரை ஒருமையில் பேசி திட்டி மிரட்டிய வட்டார கல்வி அலுவலர் - முதன்மை கல்வி அலுவலரிடம் பரபரப்பு புகார் (Complaint to Chief Education Officer - Block Education Officer who verbally insulted and threatened the teacher at the place of inspection)...


கிருஷ்ணகிரி அருகே ஆய்வுக்கு வந்த இடத்தில் , ஒருமையில் திட்டி மிரட்டியதாக வட்டாரக் கல்வி அலுவலர் மீது , ஆசிரியர் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


கிருஷ்ணகிரி, நவ.29 கிருஷ்ணகிரி அருகே ஆய்வுக்கு வந்த இடத்தில்‌, ஒருமையில் திட்டி மிரட்டியதாக வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ மீது. ஆசிரியர்‌ புகார்‌ தெரிவித்துள்ள சம்பவம்‌ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம்‌, காவேரிப்‌பட்டணம்‌ ஒன்றியம்‌ அங்கினாம்பட்டியில்‌ உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்‌ பள்ளியில்‌ பணியாற்றி வரும்‌ ஆசிரியர்‌லட்சுமிபதி மற்றும்‌ ஆசிரியர்கள்‌, மாவட்டமுதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ மகேஸ்வரியிடம்‌ புகார்‌ மனு ஒன்றை அளித்தனர். 



தனிப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் POLICE ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது - சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சுற்றறிக்கை (Curtailing the unauthorised use of POLICE stickers on private vehicles both two wheelers and four wheelers - instructions issued - Memorandum of Additional Director General of Police)...



 தனிப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் POLICE ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது - சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சுற்றறிக்கை (Curtailing the unauthorised use of POLICE stickers on private vehicles both two wheelers and four wheelers - instructions issued - Memorandum of Additional Director General of Police)...



>>> Click Here to Download Memorandum of Additional Director General of Police...


ஃப்ளூ காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் (Ways to prevent the spread of flu)...



 ஃப்ளூ காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் (Ways to prevent the spread of flu)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 2023 - தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்த அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு (Tamil Nadu Chief Minister Talent Search Exam 2023 - Directorate of Government Examinations Press Release on Result Release)...

 

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 2023 - தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்த அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு (Tamil Nadu Chief Minister Talent Search Exam 2023 - Directorate of Government Examinations Press Release on Result Release)...



>>> அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.11.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.11.2023 - School Morning Prayer Activities...

    

திருக்குறள்: 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : வெகுளாமை


குறள்:309


உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்

உள்ளான் வெகுளி எனின்.


விளக்கம்:


உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.


பழமொழி :

Habit is a second nature


தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்



இரண்டொழுக்க பண்புகள் :


1) விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.


2) என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.


பொன்மொழி :


உழைப்பின் சக்தியே

உலகிலே உயர்ந்த சக்தி..

அதை வெற்றி கொள்ளும்

ஆற்றல் வேறெந்த

சக்திக்கும் கிடையாது.



பொது அறிவு :


1. ஆஸ்கார் விருதை வென்ற முதல் இந்தியர் யார்?


விடை: பானு அத்தையா


2. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர்?

விடை: ஜவகர்லால் நேரு



English words & meanings :


 Additional Assistance - கூடுதல் உதவி, 


Adventure Sports - சாகச விளையாட்டு



ஆரோக்ய வாழ்வு : 


பூசணிப் பூ: பூசணி பூவில் உள்ள வைட்டமின் C சத்து நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, இதன் மூலம் சளி மற்றும் இருமல் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.



நீதிக்கதை


 ஒன்றென்று உணர்ந்தால் நன்று


ஒருமுறை உடம்பின் உறுப்புகள் எல்லாம் வயிற்றின் மேல் பொறாமை கொண்டன. உணவு எங்கே இருக்கிறது? என்று கண்டு பிடிப்பவன் நான் என்றது மூக்கு. அந்த உணவை எடுப்பவன், ஆக்குபவன் நான் என்றது கை. அதை வயிற்றுக்கு அனுப்புபவன் நான் என்றது வாய். அதை அரைத்துக் கொடுப்பவர்கள் நாங்கள் என்றன பற்களும் நாக்கும். இந்த வயிற்றுக்காக நாம் இப்படிப் பாடுபடுகிற பொழுது இந்த வயிறு என்ன செய்கிறது? சுகபோகமாக இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே இனி நாம் எதுவும் செய்யக் கூடாது, என வயிறு தவிர மற்ற உறுப்புகள் போராட்டத்தில் இறங்கின. உணவு இல்லை என்றால், அந்த உறுப்புகள் என்ன ஆகும்? கண்கள் பஞ்சடைந்தன. கால்கள் வலுவிழந்தன. கைகள் சோர்ந்தன. பாதங்கள் நடுங்கின. மூக்கில் மூச்சு திணறியது. இப்படி ஆனபிறகு தான் அந்த உறுப்புகளுக்கு "தாங்கள் வயிற்றுக்கு அனுப்பும் உணவில் பயன் பெறுவது வயிறு அல்ல, தாங்கள் தான்" என்ற உண்மை புரிந்தது. தங்களது அறியாமையை எண்ணி அவை வருந்தின.


நீதி : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு



இன்றைய செய்திகள்


29.11.2023


*பராமரிப்பு காரணமாக கடற்கரை தாம்பரம் இரவு ரயில் நாளை முதல் ரத்து.


* மயானங்களில் அடக்கம் செய்வதற்கான விதிமுறைகளை அரசு தளர்த்த முடிவு.


* 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இரண்டாம் தேதி புயலாக மாறுகிறது.


* நிலவில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்க வேண்டும்; அண்ணாதுரை பேட்டி.


* முதலீட்டாளர்களின் முதல் தேர்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.


* மும்பை இந்தியன்ஸ் unfollow செய்த பும்ரா; சிஎஸ்கே அணிக்கு செல்ல உள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி.


Today's Headlines


*Chennai Beach to Tambaram night train canceled from tomorrow due to maintenance.


* Government decided to relax norms for burial in cemeteries.


* Chance of heavy rain in 10 districts. The depression becomes a storm on 2nd December 


*We have to Establish an International Space Station on the Moon:  Annadurai during an interview.


* The first choice for investors is Tamil Nadu, Chief Minister M.K. Stalin.


* Bumrah unfollowed the Mumbai Indians; Fans are happy with the news that he is going to join CSK.

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.11.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.11.2023 - School Morning Prayer Activities...



திருக்குறள்: 



பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : வெகுளாமை


குறள்:308


இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்

புணரின் வெகுளாமை நன்று.


விளக்கம்:


தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.



பழமொழி :

Great minds think alike


பேரறிஞர்கள் ஒரே மாதிரியாக சிந்திப்பர்



இரண்டொழுக்க பண்புகள் :


1) விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.


2) என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.



பொன்மொழி :


வெற்றி வந்தால்

நம்பிக்கை வரும்.

ஆனால் நம்பிக்கை

இருந்தால் மட்டுமே

வெற்றி கிடைக்கும்..

அதனால் நம்பிக்கையை

மனதில் வளர்த்துக்கொள்



பொது அறிவு :


1. மிகப்பெரிய கண் கொண்ட பறவை எது?

விடை: நெருப்புக்கோழி


2. உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது? 

சுப்பீரியர் ஏரி.



English words & meanings :


 Equipoise - equality of distribution சரி சம நிலை

Endear - to make dear , beloved பிரியமுடையதாக்குதல்


ஆரோக்ய வாழ்வு : 


பூசணிப் பூ : பூசணி பூக்களை உட்கொள்வது எலும்பு தேய்மானம் அல்லது தாது சத்து இழப்பு போன்ற தீவிர பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.



நீதிக்கதை


 அகந்தை ஆபத்தானது.


ஒரு குறிப்பிட்ட இடத்தில் யார் இரை தேடுவது என்பதில் இரண்டு சேவல்களுக்கிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. மோதலில் தோற்றுப் போன சேவல் ஒரு மூலையில் சென்று பதுங்கிக் கொண்டது.


வெற்றி பெற்ற சேவலோ பெருமிதத்துடன் பறந்து ஒரு சுவர் மீது ஏறி நின்று இறக்கைகளைப் படபட என அடித்துக் கொண்டு, தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சப்தம் போட்டு மகிழ்ச்சி கொண்டாடியது.


அப்போது வானத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு கழுகு அதன் மேல் பாய்ந்து கவ்விக் கொண்டு சென்றது. பதுங்கியிருந்த சேவல் மூலையை விட்டு வெளியே வந்து போட்டிக்கு யாரும் இல்லாததால் தன்னிஷ்டப்படி இரை தின்றது.


நீதி : அகந்தை கொள்வது எப்பொழுதும் ஆபத்தானது.



இன்றைய செய்திகள்


28.11.2023


*வாக்காளர் பட்டியல் 15.33 லட்சம் பேர் விண்ணப்பம்; சத்யபிரதா சாகு தகவல்.


*சுரங்கத்தில் சிக்கியவர்களுடன் உரையாடிய பிரதமரின் முதன்மைச் செயலர்.


* ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முழுமையாக முடிவடையவில்லை- காவல்துறை தலைமை.


* வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் 3ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.


* ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள்: ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி நடக்கிறது. மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா; குஜராத்துக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிப்பு.



Today's Headlines


*15.33 lakh applications for voter list;  Satyaprada Sakhu information.


 *Prime Minister's Principal Secretary interacts with mine victims.


 * War on terrorism is not completely over in Jammu and Kashmir- Police chief.


 * A low pressure area has formed in the Bay of Bengal, there is a chance of rain in Tamil Nadu till the 3rd.


 * Players for IPL Cricket Tournament: Auction will be held on 19th December.  Hardik Pandya in Mumbai team;  Subman Gill announced as new captain for Gujarat.

 

ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி - மன்ற செயல்பாடுகள்‌ 2023-24 - வட்டார அளவில்‌ பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்‌ நடத்துதல்‌ -ஆகஸ்டு 2023 - நிதி விடுவித்தல்‌ - சார்பு - மாநிலத்‌ திட்ட இயக்குநரின் கடிதம் ந.க.எண்‌: 3437/ ஆ3/ CLUB/ ஒபக/ 2023, நாள்‌: 04.08.2023 (Samagra Shiksha - Forum Activities- 2023-24 - Conduct of Block Level Competitions for School Students - August 2023 - Release of Funds - Regarding - State Project Director's letter Rc.No: 3437/ B3/ CLUB/ SS/ 2023, Dated: 04.08.2023)...

 

ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி - மன்ற செயல்பாடுகள்‌ 2023-24 - வட்டார அளவில்‌ பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்‌ நடத்துதல்‌ -ஆகஸ்டு 2023 - நிதி விடுவித்தல்‌ - சார்பு - மாநிலத்‌ திட்ட இயக்குநரின் கடிதம் ந.க.எண்‌: 3437/ ஆ3/ CLUB/ ஒபக/ 2023, நாள்‌: 04.08.2023 (Samagra Shiksha - Mandram Activities- 2023-24 - Conduct of Block Level Competitions for School Students - August 2023 - Release of Funds - Regarding - State Project Director's letter Rc.No: 3437/ B3/ CLUB/ SS/ 2023, Dated: 04.08.2023)...



>>> மாநிலத்‌ திட்ட இயக்குநரின் கடிதம் ந.க.எண்‌: 3437/ ஆ3/ CLUB/ ஒபக/ 2023, நாள்‌: 04.08.2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி


விடுநர்‌ 


திருமதி. மா. ஆர்த்தி இ.ஆ.ப., 

மாநிலத்‌ திட்ட இயக்குநர்‌, .

ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி,

சென்னை- 600006.


பெறுநர்‌

முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌,

அனைத்து மாவட்டங்கள்‌


ந.க.எண்‌: 3437/ ஆ3/ CLUB/ ஒபக7/ 2023, நாள்‌: 04.08.2023


பொருள்‌: ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி-மன்ற செயல்பாடுகள்‌ 2023-24 - வட்டார அளவில்‌ பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்‌ நடத்துதல்‌ -ஆகஸ்டு 2023 - நிதி விடுவித்தல்‌ - சார்பு.

பார்வை: தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌. 019528 / எம்‌/ 1 / 2022. நாள்‌: 26.07.2023


***********


2023-2024 ஆம்‌ கல்வியாண்டில்‌ பள்ளி அளவிலான மன்ற செயல்பாடுகள்‌ நடத்துதல்‌ மற்றும்‌ அதனைத்‌ தொடர்ந்து வட்டார, மாவட்ட அளவிலான போட்டிகள்‌ நடத்துவது சார்ந்து அறிவுரைகள்‌ பார்வை-(1)ல்‌ கண்டுள்ள பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகளின்‌ வாயிலாக அனைத்து மாவட்டங்களுக்கும்‌ பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌ வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஓரு பள்ளியிலிருந்து ஜூன்‌, ஜூலை மற்றும்‌ ஆகஸ்டு மாதங்களில்‌ பள்ளி அளவில்‌ நடைபெற்ற 10 போட்டிகளில்‌ வெற்றி பெற்ற 30 மாணவர்கள்‌ வட்டார அளவிலான போட்டிகளில்‌ பங்கு பெறுவர்‌. இம்மாணவர்களை வட்டார அளவில்‌ நடைபெறும்‌ போட்டிகளில்‌ கலந்து கொள்ள ஏதுவாக ஓர்‌ ஆசிரியர்‌ பள்ளியிலிருந்து அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டிகளில்‌ கலந்துக்‌ கொள்ளும்‌ மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும்‌ சிற்றுண்டி செலவினம்‌, 2 நடுவர்களுக்கான மதிப்பூதியம்‌ & நினைவு பரிசு, வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்கள்‌, வட்டார அளவில்‌ போட்டிகள்‌ நடத்துவதற்கான செலவினத்திற்கான நிதி இணைப்பில்‌ உள்ளவாறு ரூ.2,81,06,035/- (ரூபாய்‌ இரண்டு கோடியே எண்பத்து ஒரு இலட்சத்து ஆறாயிரத்து முப்பத்தைந்து ரூபாய் மட்டும்) அனைத்து மாவட்டங்களுக்கும் விடுவிக்கப்படுகிறது.



TRB - BT / BRTE பணியிடத்திற்கு இணைய வழி வாயிலாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 07-12-2023 வரை நீட்டிப்பு (Last date for online upload of application for TRB - BT / BRTE post has been extended till 07-12-2023)...



TRB - BT / BRTE  பணியிடத்திற்கு இணைய வழி வாயிலாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 07-12-2023 வரை நீட்டிப்பு (Last date for online upload of application for TRB - BT / BRTE post has been extended till 07-12-2023)...



>>> TRB செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



🌀 பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வுக்கு இணைய வழி வாயிலாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் நீட்டிப்பு 


மேலும் விண்ணப்பத்தில் Edit option மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வெளியீடு


TNTRB - பட்டதாரி ஆசிரியர் நியமனத்தேர்வு எழுதுபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தி வெளியீடு...

எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு (அ) மேற்கொள்ளும் முறை (EE - FA(a) - Ennum Ezhuthum – Formative Assessment (a) Methodology)...

 எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு (அ) மேற்கொள்ளும் முறை (EE - FA(a) - Ennum Ezhuthum – Formative Assessment (a) Methodology)...



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


1-5 வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு CRC பயிற்சி நடைபெறும் தேதிகள் அறிவிப்பு - DIET முதல்வரின் கடிதம்(Notification of Dates of CRC Training for Teachers handling Classes 1-5 - Letter from DIET Principal)...

 

1-5 வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு குறுவள மைய (CRC) பயிற்சி நடைபெறும் தேதிகள் அறிவிப்பு - DIET முதல்வரின் கடிதம்(Notification of Dates of CRC Training for Teachers handling Classes 1-5 - Letter from DIET Principal)...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



CRC பயிற்சி

 

1 to 3 வகுப்புகளுக்கு - 30/11/2023


4 to 5  வகுப்புகளுக்கு - 02/12/2023


மேற்கண்ட தேதிகளில் நடைபெற உள்ளது.

உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்க விபத்து : தொழிலாளர்களை மீட்பதில் தாமதம் ஏன்? (Uttarakhand Silkyara mine accident: Why the delay in rescuing workers?)



 உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்க விபத்து : தொழிலாளர்களை மீட்பதில் தாமதம் ஏன்? (Uttarakhand Silkyara mine accident: Why the delay in rescuing workers?)


மீட்புப் பணிகளில் இன்று 16வது நாளாகத் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


ஆக்கர் இயந்திரத்தைக் கொண்டு துளையிடும் பணியில் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டுக்கொண்டே இருப்பதால், மாற்று வழியில் தொழிலாளர்களை மீட்பதில் தீவிரம்.


சுரங்கப்பாதை உள்ள மலையின் மேலே இருந்து கீழ்ப்பகுதி வரை செங்குத்தாகத் துளையிட்டு மீட்புப் பணியைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.


சுரங்கத் தொழிலாளர்களை மீட்பதற்கான காலக்கெடுவைக் குறிப்பிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.



உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இன்று தொடங்குகிறது கைகளால் துளையிடும் பணி...


கடந்த சனிக்கிழமை, 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத உபகரணம் பழுதாகி உடைந்துவிட்டது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதை கடந்த நவம்பர் 12 ஆம் தேதி இடிந்து விழுந்ததையடுத்து, 41 தொழிலாளர்கள் அந்த சுரங்கபாதையில் சிக்கி கொண்டனர்.

அதனை தொடர்ந்து, 16 நாட்களுக்கும் மேலாக அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், இன்னும் அவர்கள் மீட்கப்படவில்லை.

கடந்த சனிக்கிழமை, 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத உபகரணம் பழுதாகி உடைந்துவிட்டது.

சில்க்யாரா சுரங்கப்பாதையின் இடிபாடுகளுக்குள் துளையிட்டுக் கொண்டிருந்தபோது, ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டன.

ஏறக்குறைய 60 மீட்டர் இடிபாடுகளை உடைக்க, இந்த கனரக இயந்திரம் அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டது.

இது உடைந்து விழுந்த நிலையில், அந்த இயந்திரத்தின் உடைந்த பாகங்கள் இன்று அகற்றப்பட்டன.


எப்போது முடியும் மீட்பு பணி?

இதனையடுத்து, இன்றிலிருந்து மீதம் உள்ள சுரங்க இடிபாடுகள் கைகளால் துளையிடப்பட இருக்கின்றன.

தொடர்ச்சியான பின்னடைவுகளுக்குப் பிறகு, சுரங்கப்பாதையின் சரிந்த பகுதிக்கு மேலே உள்ள மலையின் உச்சியில் இருந்து செங்குத்தாக துளையிடும் நடவடிக்கைகளும் நேற்று தொடங்கியது.

நேற்று ஒரு நாளைக்குள் மீட்புக் குழுவினர் வெற்றிகரமாக கிட்டத்தட்ட 20 மீட்டர்கள் துளையிட்டனர்.

தடைகள் ஏதும் ஏற்படாத பட்சத்தில், இந்த துளையிடும் பணி வரும் வியாழக்கிழமைக்குள் வெற்றிகரமாக முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் முடிவடைந்ததும் 700-மிமீ அகலமுள்ள குழாய்கள் உள்ளே செலுத்தப்பட்டு, அதன் மூலம் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள்.

இதற்கிடையில், அமெரிக்க ஆகர் இயந்திரம் துளையிட்டு கொண்டிருந்த பகுதியில் அடுத்த 10-15 மீட்டர்களுக்கு கைகளால் துளையிடப்பட இருக்கிறது.


உத்தரகாசியில் கடந்த இரண்டு வாரங்களாக சில்க்யாரா-பர்கோட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றுடன் மீட்பு பணிகள் 16வது நாளை தொட்டுள்ளது. நேற்று புதிய முயற்சியாக சுரங்கப்பாதையின் மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் சுமார் 20 மீட்டர் வரை துளையிடும் பணி நடைபெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர்களை மீட்க போடப்பட்ட 5 திட்டங்களில் செங்குத்து துளையிடுதலும் ஒன்றாகும். சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை சென்றடைய ஏற்கனவே 19.2 மீட்டர் துளை போடப்பட்ட நிலையில், இன்னும் 86 மீட்டர் செங்குத்து துளையிடும் பணி மீதம் இருக்கிறது. இந்த பணிகள் முழுமையடைய இன்னும் 4 நாட்களாவது ஆகும் என்று கூறப்படுகிறது. 


தொழிலாளர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் - அதிகாரிகள் தகவல்

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் லிமிடெட் (NHIDCL) நிர்வாக இயக்குனர் மஹ்மூத் அகமது கூறியதாவது, “சட்லஜ் ஹைட்ரோபவர் கார்ப்பரேஷன் தொடங்கியுள்ள செங்குத்து துளையிடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. ஏதேனும் சிக்கல்கள் இல்லாமல் இப்படியே தொடர்ந்தால், வரும் வியாழன் வரை அதாவது இன்னும் நான்கு நாட்களில் முடித்துவிடலாம் என எதிர்பார்க்கலாம். 700 மிமீ குழாய்கள் துளையிட்டு 'எஸ்கேப் பாதை' உருவாக்கப்படுகிறது. இதிலிருந்து சிறிது தொலைவில், 70 மீட்டரை எட்டிய 200 மிமீ விட்டம் கொண்ட மெல்லிய குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.  



துளையிடுவதில் ஏற்பட்ட சிக்கல்கள்: 

சுரங்கப்பாதையின் சில்க்யாரா முனையிலிருந்து அமெரிக்கன் ஆகர் இயந்திரம் மூலம் கிடைமட்டமாக துளையிடுவதில் மீண்டும் மீண்டும் சிக்கல்கள் ஏற்பட்டதால், தொழிலாளர்களை சென்றடைய செங்குத்து துளையிடல் என்னும் முறை தேர்வு செய்யப்பட்டது. சுரங்கப்பாதையில் 60 மீட்டர் பரப்பளவில் இடிபாடுகள் பரவியுள்ளன. இதனால் சுமார் 25 டன் எடை கொண்ட ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் அந்த இடிபாடுகளில் சிக்கி கடந்த வெள்ளிக்கிழமை உடைந்தது. 


இதுகுறித்து மீட்பு பணிகளுக்கு உதவ நியமிக்கப்பட்டுள்ள நோடல் அதிகாரி நீரஜ் கைர்வால் கூறியதாவது: 

பிளாஸ்மா கட்டர் மற்றும் லேசர் கட்டர் மூலம் இடிபாடுகளில் சிக்கிய ஆகர் இயந்திரத்தின் பாகங்களை வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது. இரவு 7 மணி நிலவரப்படி 8.15 மீட்டர் தூரம் மட்டுமே ஆகர் இயந்திரம் வெளியே எடுக்க முடிந்தது. பிளாஸ்மா கட்டர் ஹைதராபாத்தில் இருந்து சில்க்யாராவுக்கு நேற்று காலை விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.” என்று தெரிவித்தார்.


தொடரும் உயிரைக் காப்பாற்றும் போராட்டம்:

ஆகர் இயந்திரத்தின் பாகங்கள் முழுமையாக அகற்றப்பட்டவுடன், மீதியுள்ள 10-12 மீட்டர் இடிபாடுகளை மீட்புப் பணியாளர்கள் கையால் துளையிட்டு அகற்றுவார்கள். ஒரு குறுகிய இடத்திற்குள் இந்த கையால் நடத்தப்படும் உடைப்பு பணியில், ஆகர் இயந்திரத்தினால் ஏற்கனவே போடப்பட்ட துளைக்குள் சென்று கைகளால் துளையிடுவார். பின்னே செல்லும் மற்ற தொழிலாளர்கள் ஒரு கப்பி மூலம் குப்பைகளை வெளியே அனுப்புவர். ஆனால், இந்த கைகளால் துளையிடும் பணி அதிக நேரம் எடுக்கும் என தெரிகிறது. இதற்கிடையில், சுரங்கப்பாதையின் பார்கோட் முனையிலிருந்தும் தோண்டும் பணி நடைபெற்று வருவதாகவும், இதுவரை 10 மீட்டர் தோண்டும் பணி நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கரையில் இருந்து மொத்தம் 483 மீட்டர் தோண்டும் பணி நடைபெற 40 நாட்கள் ஆகலாம் என்றும், இது மாற்று வழியாகவே இந்த தோண்டும் பணி நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.


முன்னதாக சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக மீட்கப்படுவார்கள்; கிறிஸ்துமஸ்க்கு வீடு திரும்புவார்கள் என சர்வதேச சுரங்க மீட்பு நிபுணர் அர்னால்ட் கூறியுள்ளார். இது குறித்த முழுமையான தகவல்கள் :


உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா என்ற பகுதியில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 12ம் தேதி வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சுரங்கத்தின் உள்ளே 41 தொழிலாளர்கள் சிக்கினர்.


இவர்களை மீட்பதற்கான பணி உடனடியாக தொடங்கியது. பேரிடர் மீட்பு படையினர், சுரங்க நிபுணர்கள், தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 41 தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், ஆக்ஸிஜன் உள்ளிட்டவை குழாய்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதனை தொழிலாளர்கள் சாப்பிட்டு வருகின்றனர்.


இருப்பினும் அந்த சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பது என்பது சுலபமான காரியமாக இல்லை. அங்குள்ள இடம் நிலச்சரிவுக்கு ஏற்ற வகையில் உள்ளது. இதனால் அதிர்வுகளால் மேலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதோடு சுரங்கத்தின் மேல்புறத்தில் இருந்து செங்குத்தாக துளை போட்டு மீட்கும் பணியும் சவால் நிறைந்ததாக உள்ளது. மீட்பு பணிக்கான ஆகர் இயந்திரத்தின் மூலம் இந்த பணி நடந்து வந்த நிலையில் கான்கிரீட் கம்பிகள் இயந்திரத்தின் பிளேடுகளில் சிக்கியது. இதனால் இந்த மீட்பு பணியும் தடைப்பட்டது. அதன்பிறகு கான்கிரீட் கம்பிகள், பிளேடுகள் அகற்றப்பட்டு மீண்டும் மீட்புபணி தொடங்கி உள்ளது. மேலும் அங்கு நிலவும் தட்பவெப்ப நிலையும் மீட்பு பணியை தாமதப்படுகிறது.


இதனால் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் எப்போது பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில்தான் சுரங்கபாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் சுரங்ப்பாதை மீட்பு பணிகளில் கைதேர்ந்தவர்.


இந்நிலையில் தான் அர்னால்ட் டிக்ஸ் தற்போதைய மீட்பு பணி குறித்தும், தொழிலாளர்கள் எப்போது மீட்கப்படுவார்கள் என்பது பற்றியும் கூறியுள்ளார். அதுபற்றி அவர் கூறியதாவது: ‛‛இது மலைப்பகுதியில் நடக்கும் மீட்பு பணி என்பதால் மிகவும் பிரச்சனையாக உள்ளது. இதில் அவசரப்படக்கூடாது. முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் மீட்புப் பணி எப்போது முடியும் என்பதை கூறிவிட முடியாது. மீட்பு பணிக்கு குறிப்பிட்ட காலம் பிடிக்கும். இன்று முதல் ஒரு மாதம் கூட ஆகலாம். ஆனால் 41 பேரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள்.


கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் வீடு திரும்புவார்கள் என நம்பலாம். இந்த மீட்பு பணியில் நாங்கள் ஒன்றை மட்டுமே கவனத்தில் வைத்துள்ளோம். அது என்னவென்றால் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதுதான். மேலும் தொடக்கத்தில் இருந்தே இந்த பணி என்பது வேகமாக நடக்கும் என உறுதியளிக்கவில்லை. மாறாக இந்த பணி சவால் நிறைந்ததாகதான் இருக்கும் என கூறினேன். அது தொடர்கிறது. ஆனால் தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்’’ என்றார்.


தற்போது சுரங்க மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் இந்த அர்னால்ட் டிக்ஸ் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். இவர் மீட்பு பணியில் ஈடுபட தொடங்கிய நிலையில் வேகமெடுத்தது. ஆனால் தற்போது சுரங்கம் அமைந்துள்ள இடத்தில் மீட்பு பணிக்கு பல இடையூறுகள் உள்ளன. இதனால் மீட்பு பணி மெதுவாக நடந்து வருகிறது. இந்த அர்னால்ட் டிக்ஸ் சுரங்க மீட்பு பணிகளில் மிகவும் கைதேர்ந்தவர். இவர் பிரிட்டனில் பள்ளி கல்வியை முடித்தார். அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் புவியியல் என்ஜீனியரிங் கல்வி பயின்றார்.


இதையடுத்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுரங்க கட்டுமான தொழிலில் வல்லுனராக திகழ்கிறார். அதன் சர்வதேச சுரங்க கூட்டமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வரும் இவர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு சுரங்கப் பாதை திட்டங்களுக்கு  ஆலோசகராக செயல்பட்ட அனுபவம் கொண்டவர். இந்தியாவில் டெல்லி மெட்ரோ சுரங்க பாதைக்கும் இவர் ஆலோசனைகளை வழங்கியிருந்தார். ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு சுரங்கப்பாதை விபத்து மீட்புப் பணிகளுக்கு அவர் தலைமையேற்று இருக்கிறார். தற்போது உத்தராகண்ட் சுரங்கப்பாதை மீட்புப் பணியின் முக்கிய ஆலோசகராக அர்னால்டு டிக்ஸ் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


10.03.2020க்கு முன்பாக உயர்கல்வி முடித்து ஆணை பெற்றவர்கள் - பெறாதவர்கள் - நிலுவை பெறாமல் ஊதியத்தில் உயர்வு அனுமதிக்கப்பட்டவர்கள் நிலை குறித்த கேள்விக்கு முதலமைச்சர் சிறப்புப் பிரிவு பதில் கடிதம் (Chief Minister's Special Cell's reply letter to the question regarding the status of those who have completed their higher education before 10.03.2020 - those who have received order and not - those who have been allowed to incentive in salary without receiving the Arrears)...


 10.03.2020க்கு முன்பாக உயர்கல்வி  முடித்து ஆணை பெற்றவர்கள் - பெறாதவர்கள் - நிலுவை பெறாமல் ஊதியத்தில் உயர்வு அனுமதிக்கப்பட்டவர்கள் நிலை குறித்த கேள்விக்கு முதலமைச்சர் சிறப்புப் பிரிவு பதில் கடிதம் (Chief Minister's Special Cell's reply letter to the question regarding the status of those who have completed their higher education before 10.03.2020 - those who have received order and not - those who have been allowed to incentive in salary without receiving the Arrears)...


ஆசிரியர் சகோதரர்களுக்கு,

10.03.2020க்கு முன்பாக உயர்கல்வி  முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் 

1. ஆணை மட்டும் பெற்றவர்கள்

2. ஆணை பெற்று நிலுவை பெறாதவர்கள்

3. ஆணை பெற்று நிலுவை பெறாதவர்கள், ஊதியத்தில் உயர்வு அனுமதிக்கப்பட்டவர்கள்

4. ஆணை பெறாதவர்கள்

சார்பாக முதல்வரின் குறை தீர்வு பிரிவு மூலம் தெளிவுரை கோரினேன். தெளிவுரை வழங்காமல் அரசாணையை மட்டும் சுட்டிக்காட்டி பதில் அளித்துள்ளனர் .

ஆ. மிகாவேல் ஆசிரியர்

மணப்பாறை


>>> முதலமைச்சர் சிறப்புப் பிரிவு பதில் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>>   உயர்கல்வி  ஊக்கத்தொகை   - மனிதவள மேம்பாட்டுத் துறை அரசாணை...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.11.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.11.2023 - School Morning Prayer Activities...

    


திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : வெகுளாமை


குறள்:307


சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.


விளக்கம்:


நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.



பழமொழி :

Grasp all, lose all


பேராசை பெரு நட்டம்



இரண்டொழுக்க பண்புகள் :


1) விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.


2) என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.


பொன்மொழி :


தோல்வி அடைவதற்கு

பல வழிகள் காரணங்களாக

அமையலாம்.. ஆனால்

வெற்றி பெறுவதற்கு

ஒரே காரணம் தான்

அது உன் “உழைப்பு”.


பொது அறிவு :


1. உலகில் அதிக மழைப்பொழிவை பெறும் இடம்?


விடை: மௌசின் ராம் ( மேகாலயா)


2. உயிரியல் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?


விடை: சர் ஜெகதீஷ் சந்திர போஸ்



English words & meanings :


 Distort-pull or twist out of shape.சிதைக்க. 

Dough-thick mixture of flour and other ingredients that can be kneaded, baked, and eaten.பிசைந்த மாவு


ஆரோக்ய வாழ்வு : 


பூசணிப் பூ: பூசணிப் பூக்களில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது மற்றும் எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது. பூசணி பூக்கள் ஈறுகள் மற்றும் பல் இனாமல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.


நீதிக்கதை


 நடனமாடிய ஆட்டுக்குட்டியும் ஓநாயும் –             ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற கிராமத்துல ஒரு ஆட்டுக்குட்டி இருந்தது.


அது எப்பவும் தன்னோட அம்மாவோடவும் தங்களோட ஆட்டு மந்தையோடேயும் சேர்ந்து அந்த காட்டுக்குள்ள போயி இரைதேடி சாப்பிடும்.


சாயந்திரம் ஆனதும் தன்னோட மந்தையோட சேர்ந்து வீட்டுக்கு வந்திடும் அந்த ஆட்டுக்குட்டி.


ஒருநாள் அதே மாதிரி காட்டுக்குள்ள இரைதேட போன அந்த ஆட்டுக்குட்டி ரொம்ப பசிச்சதால தனக்கு வேண்டிய இலை தளைகளை சாப்பிட்டுக்கிட்டு இருந்துச்சு.


அப்படி சுவாரசியமா சாப்பிட்டுகிட்டு இருந்த ஆட்டுக்குட்டி தன்னோட அம்மாவையும் தன்னோட ஆட்டு கூட்டத்தையும் மறந்துடுச்சு.


சாயந்திரம் ஆனதால அந்த ஆட்டு கூட்டம் தங்களோட கிராமத்த நோக்கி நடக்க ஆரம்பிச்சுட்டாங்க


ஆனா இது தெரியாத ஆட்டு குட்டி தன்னோட சாப்பாட்ட சாப்பிட்டுக்கிட்டே இருந்துச்சு.


அப்ப அங்க ஒரு ஓநாய் வந்துச்சு. அத பார்த்த ஆட்டுக்குட்டி ரொம்ப பயந்து போச்சு.இருந்தாலும்


கொஞ்சம் தைரியமா இருந்த ஆட்டுக்குட்டிக்கு ஒரு யோசனை வந்துச்சு.


உடனே அந்த ஓநாய்கிட்ட ஐயா நீங்க எப்படியும் என்ன சாப்பிட போறீங்க, அதனால என்னோட கடைசி ஆசைய நிறைவேத்துங்கனு சொல்லுச்சு.


அந்த ஓநாயும் உன்னோட கடைசி ஆசை என்னனு கேட்டுச்சு ,அதுக்கு அந்த ஆட்டுக்குட்டி சொல்லுச்சு, எனக்கு டான்ஸ் ஆடணும்போல இருக்கு நீங்க ஒரு பாட்டு பாடுங்கனு சொல்லுச்சு.


உடனே அந்த ஓநாய் பாட்டு பாட ஆரம்பிச்சுச்சு ,அப்பத்தான் அந்த சத்தம் கேட்ட ஆட்டு கூட்டத்தை சார்ந்த வேட்டை நாய்களுக்கு அந்த சத்தம் கேட்டுச்சு.


உடனே அந்த வேட்டை நாய்கள் எல்லாம் ஓநாய் சத்தம் வர்ற இடத்துக்கு ஓடி வந்துச்சுங்க.


வேட்டை நாய்கள பார்ததும் ஓநாய் அங்க இருந்து ஓடி போய்யிடுச்சு, அங்க வந்த அந்த ஆட்டு குட்டியோட அம்மா நடந்த எல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கிட்டு ,ஆட்டு குட்டியோட புத்திசாலித்தனத்தை பாராட்டுச்சு.


இன்றைய செய்திகள்


27.11.2023


*பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியில் நேற்று கோவை சூலூர் பகுதியில் சேர்ந்த லோகநாதன் என்பவரின் சேவையை பாராட்டினார்.


* உச்சநீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு; முதலமைச்சர் மு க ஸ்டாலின்

வாழ்த்து.


 *15 வது ஆண்டு தினம்: நேற்று மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி.


* புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது. தமிழகத்தில் 29ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு.


*சேத்தியாதோப்பு அணைக்கட்டு, வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு.  வினாடிக்கு 1200 கன அடி நீர் வெளியேற்றம்.


* 17 வது ஐபிஎல் கிரிக்கெட்: இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் திடீர் விலகல்.


Today's Headlines


* In Prime Minister Modi's Man Ki Baat program yesterday, he appreciated the service of Loganathan from Sulur area of ​​Coimbatore.


 * Inauguration of Ambedkar Statue in Supreme Court Complex;praised by  Chief Minister M.K Stalin


  *15th death Anniversary: ​​Tributes to those who lost their lives in the Mumbai attacks .


 * A new low pressure area is forming today.  Chance of heavy rain in Tamil Nadu on 29th.


 * Chethiyathoppu dam, release of water from Veeranam lake.  Release of 1200 cubic feet water per second.


 * 17th IPL Cricket: England player Joe Root makes a sudden exit.


எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 2 - நவம்பர் 5வது வாரம் - தமிழ் & ஆங்கில வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 2 - November 5th Week - Tamil & English Medium Lesson Plan )...

 


>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 2 - நவம்பர் 5வது வாரம் - தமிழ்  வழி பாடக்குறிப்பு  (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 2 - November 5th Week - Tamil Medium Lesson Plan )...



>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 2 - நவம்பர் 5வது வாரம் - ஆங்கில  வழி பாடக்குறிப்பு  (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 2 - November 5th Week - English Medium Lesson Plan )...



>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 2 - நவம்பர் 5வது வாரம் - தமிழ்  வழி பாடக்குறிப்பு - மாதிரி 2  (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 2 - November 5th Week - Tamil Medium Lesson Plan - Model 2)...



>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 2 - நவம்பர் 5வது வாரம் - ஆங்கில  வழி பாடக்குறிப்பு  - மாதிரி 2 (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 2 - November 5th Week - English Medium Lesson Plan - Model 2 )...


எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - 1,2 & 3ஆம் வகுப்புகள் - அலகு 6 - நவம்பர் ஐந்தாவது வாரம் - 27.11.2023 to 01.12.2023 - தமிழ் மற்றும் ஆங்கில வழி (Ennum Ezhuthum Lesson Plan - Standard 1, 2 & 3 - Unit 6 - November 5th Week - 27.11.2023 to 01.12.2023 - Tamil and English Medium)...

 

>>> எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - 1,2 & 3ஆம் வகுப்புகள் - அலகு 6 - நவம்பர் ஐந்தாவது வாரம் - 27.11.2023 to 01.12.2023 - தமிழ் மற்றும் ஆங்கில வழி (Ennum Ezhuthum Lesson Plan - Standard 1, 2 & 3 - Unit 6 - November 5th Week - 27.11.2023 to 01.12.2023 - Tamil and English Medium)...




>>> எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - 1,2 & 3ஆம் வகுப்புகள் - நவம்பர் ஐந்தாவது வாரம் - 27.11.2023 to 01.12.2023 - தமிழ்  வழி - மாதிரி 2 (Ennum Ezhuthum Lesson Plan - Standard 1, 2 & 3 - November 5th Week - 27.11.2023 to 01.12.2023 - Tamil Medium - Model 2)...



>>> எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - 1,2 & 3ஆம் வகுப்புகள் - நவம்பர் ஐந்தாவது வாரம் - 27.11.2023 to 01.12.2023 - ஆங்கில  வழி - மாதிரி 2 (Ennum Ezhuthum Lesson Plan - Standard 1, 2 & 3 - November 5th Week - 27.11.2023 to 01.12.2023 - English Medium - Model 2)...



மனமகிழ்ச்சியே இதய நோய்களைத் தடுக்கும் - மருத்துவர் வி.சொக்கலிங்கம் அவர்கள் (Happiness prevents heart diseases - Doctor V.Chokkalingam)...

 மனமகிழ்ச்சியே இதய நோய்களைத் தடுக்கும் - மருத்துவர் வி.சொக்கலிங்கம் அவர்கள் (Happiness prevents heart diseases - Dr. V.Chokkalingam)...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


இனிய தீப திருநாள் வாழ்த்துகள் (Deepa Thirunaal Wishes)...

இனிய தீப திருநாள் வாழ்த்துகள் (Deepa Thirunaal Wishes)...



TNPSC - பொதுத்தமிழ் - தகவல் தொகுப்பு - 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள புதிய சமச்சீர் பாடப்புத்தகம் - பாடங்களின் தொகுப்பு கையேடு - குரூப் 2, 2A, 4 & VAO அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான ஆதார நூல் (TNPSC - Common Tamil - Collection of Information - New Samacheer Kalvi Textbook for 6th to 12th Class - Collection of Subjects - Sourcebook for Group 2, 2A, 4 & VAO All Competitive Exams)...

 


TNPSC - பொதுத்தமிழ் - தகவல் தொகுப்பு -  6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள புதிய சமச்சீர் பாடப்புத்தகம் - பாடங்களின் தொகுப்பு கையேடு - குரூப் 2, 2A, 4 & VAO அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான ஆதார நூல் (TNPSC - Common Tamil - Collection of Information - New Samacheer Kalvi Textbook for 6th to 12th Class - Collection of Subjects - Sourcebook for Group 2, 2A, 4 & VAO All Competitive Exams)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாநில கற்றல் அடைவுத் திறனாய்வு தேர்வு (SEAS) - புறக்கணித்த 6 மாநிலங்கள் (State Education Achievement Survey Exam - 6 States Skipped)...

 

மாநில கற்றல் அடைவுத் திறனாய்வு தேர்வு (SEAS) - புறக்கணித்த 6 மாநிலங்கள் (State Education Achievement Survey Exam - 6 States Skipped)...


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) கீழ் இயங்கி வரும் முழுமையான வளர்ச்சிக்கான அறிவாற்றல் ஆய்வு மற்றும் மறு ஆய்வு அமைப்பு (பராக்) சார்பில் நடத்தப்பட்ட முதல் மாநில கற்றல் அடைவுத் திறனாய்வு தில்லி, சத்தீஸ்கர், மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் புறக்கணித்து உள்ளதாக மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) கீழ் இயங்கி வரும் முழுமையான வளா்ச்சிக்கான அறிவாற்றல் ஆய்வு மற்றும் மறு ஆய்வு அமைப்பு (பராக்) சாா்பில் நடத்தப்பட்ட முதல் மாநில கற்றல் அடைவுத்திறன் ஆய்வை தில்லி, சத்தீஸ்கா், மேற்கு வங்கம், ஓடிஸா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் புறக்கணித்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.


மாணவா்களின் கற்றல் அடைவுத் திறனை அறிந்து அதனடிப்படையில் பள்ளி கற்றல்-கற்பித்தல் நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான நடைமுறைகளை அடையாளம் காணும் நோக்கத்தோடு, நாடு முழுவதும் 3, 6 மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவா்களிடையே கடந்த 3-ஆம் தேதி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.


குறிப்பாக, நாடு முழுவதும் 5,917 வட்டாரங்கள் அளவில் உள்ள 3 லட்சம் பள்ளிகளைச் சோ்ந்த 80 லட்சம் மாணவா்கள், 6 லட்சம் ஆசிரியா்களிடையே 3 லட்சம் களப் பணியாளா்கள் மூலமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.


இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘அடிப்படை, தொடக்கநிலை மற்றும் நடுநிலை பள்ளிக் கல்வி அளவில் மாணவா்களின் கற்றல் அடைவுத்திறனை ஆய்வு செய்து, அதனை மேம்படுத்துவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். இந்த கணக்கெடுப்பில் தில்லி, சத்தீஸ்கா், மேற்கு வங்கம், ஓடிஸா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களைத் தவிா்த்து, பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பங்கேற்றன’ என்றாா்.



இதுகுறித்து மத்திய பள்ளிக் கல்வி செயலா் சஞ்சய் குமாா் கூறுகையில், ‘வட்டார அளவிலான பள்ளி மாணவா்களிடையே கற்றல் அடைவுத்திறனை ஆய்வு செய்வதே இந்த கணக்கெடுப்பின் சிறப்பு. இதன் மூலமாக, நாடு முழுவதும் கல்வி நடைமுறையில் என்னென்ன மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற தெளிவான ஆதார அடிப்படையிலான தரவுகள் கிடைக்கும். அதனைக் கொண்டு மாணவா்களுக்கான கல்வித் தரத்தை மேம்படுத்த முடியும்’ என்றாா்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Government Relief Application Form for Storm Damaged Crops

 புயலில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு நிவாரண விண்ணப்ப படிவம் மாதிரி Government Relief Application Form for Storm Damaged Crops