சிவராத்திரியை ஒட்டி வரும் மார்ச் 8ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01-03-2024...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01-03-2024 - School Morning Prayer Activities...
திருக்குறள்:
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை.
குறள் 76:
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
விளக்கம்:
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.
பழமொழி :
Too much of anything is good for nothing.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்
பொன்மொழி:
The real secret to success is enthusiasm.
வெற்றியின் உண்மையான ரகசியம் உற்சாகம்.
அறிவியல் பொது அறிவு வினா விடைகள் :
மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு - தோல்
வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர் - அஸாடிராக்டின்
ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி - O இரத்தத் தொகுதி
எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள் - ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா
முட்டைத் தாவரம் என அழைக்கப்படுவது - கத்தரி
ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :
Fertility - வளம்
Festival - திருவிழா
Few - சில
Field - வயல்
Fiercely - மும்முரமாக
ஆரோக்கியம்
சுவாசக் கோளாறுகள் (அலர்ஜி)
கபத்தைத் தூண்டும் உணவுகளைத் (வாழைப் பழம், பால் மற்றும் பால் பொருட்கள்) தவிர்க்க வேண்டும்.
ஆசனப் பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்யலாம்.
நல்ல காற்றோட்டமுள்ள அறையில் வசித்தல், போதுமான உடலுழைப்பு, துளசி+மிளகு, துளசி+தேன், தேன்+மிளகு மற்றும் கொள்ளு போன்றவற்றை உட்கொள்ளுதல் உதவி செய்யும்.
புகை பிடித்தல் கூடாது.
காதுகளை மூடி வைத்திருக்க வேண்டும்.
குளிரான காலை/மாலை வேளைகளில் தலையைப் போர்த்தி வைக்க வேண்டும்.
இன்றைய சிறப்புகள்
மார்ச் 1
1966 – சோவியத்தின் வெனேரா 3 விண்கலம் வெள்ளி கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
1980 – சனி கோளின் யானுசு என்ற சந்திரன் இருப்பதை வொயேசர் 1 விண்கலம் உறுதி செய்தது.
1995 – யாகூ! ஆரம்பிக்கப்பட்டது.
2003 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தனது முதலாவது அமர்வை டென் ஆக்கில் நடத்தியது.
பிறந்த நாள்
1944 – புத்ததேவ் பட்டாசார்யா, மேற்கு வங்கத்தின் 7வது முதலமைச்சர்
1953 – மு. க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர், தி.மு.க. தலைவர்
நினைவு நாள்
-
சிறப்பு நாட்கள்
நினைவு நாள் (மார்சல் தீவுகள்)
விடுதலை நாள் (பொசுனியா எர்செகோவினா, யுகோசுலாவியாவில் இருந்து 1992)
பாகுபாடுகள் ஒழிப்பு நாள்
நீதிக்கதை
முட்டாள் குருவியும் குரங்கும்
ஒரு பெரிய மரத்தில் ஒரு ஜோடி சிட்டுக்குருவிகள் வசித்து வந்தன. அவை இரண்டும் முன்யோசனையும் நன்கு வேலை செய்யும் குணமும் கொண்டவை. குளிர்காலம் வரும் முன் அவை இரண்டும் ஒரு அழகிய, உறுதியான கூட்டை கட்டின. அதனால் அவர்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
மிகவும் மழை பெய்து கொண்டு இருந்த ஒருநாள் இந்த குருவிகள் வசித்துக் கொண்டிருந்த மரத்தில் ஒரு குரங்கு வந்து ஒதுங்கியது. மழையில் மிகவும் நனைந்து அந்த குரங்கு நடுங்கிக்கொண்டிருந்தது. அதை பார்த்த பெண் குருவி, “ஐயா ஏன் நீங்கள் இப்படி மழையில் நனைந்து கொண்டு இருக்கிறீர்கள், ஏன் உங்கள் வீட்டுக்கு போகவில்லை” என்று கேட்டது.
அதற்கு குரங்கு சொன்னது “எனக்கு தனியாக வீடு ஒன்றும் இல்லை எல்லா மரங்களிலும் நான் மாறி மாறி தங்குவேன்” என்றது. இதைக்கேட்ட பெண்குருவி “எதிர்காலத்திற்கு சேகரிக்காத புத்தியில்லாத குரங்கு ஒரு சோம்பேறி” என்று விமர்சித்தது. குரங்கு மிகவும் கோபப்பட்டு அந்த குருவிடம் அமைதியாக இருக்கச் சொன்னது.
ஆனால் அந்தக் குருவி சொன்னது, “என்னுடைய சிறிய அலகை வைத்து நான் இவ்வளவு பெரிய கூட்டை கட்டி உள்ளேன், ஆனால் உன்னிடம் இரண்டு கைகள் இருந்தும் உன்னால் ஒரு வீடு கட்ட இயலவில்லை” என்று விமர்சித்துக் கொண்டே இருந்தது. குரங்கிற்கு மிகவும் கோபம் வந்தது.
அந்தக் குரங்கு கோபத்தில் அந்தக் குருவியின் கூட்டை தன் கைகளால் கிழித்து போட்டது. அந்தக் குருவிக்கு மிகவும் கோபம் வந்தது ஆனால் அதால் எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக இருந்தது. அந்த இரண்டு குருவிகளும் மழையில் நனைய ஆரம்பித்தன. தேவையில்லாத இடத்தில் தான் செய்த உபதேசம் தான் இதற்கு காரணம் என்று அந்தப் பெண் குருவி மிகவும் வருந்தியது.
நீதி : கேட்பவர்களுக்கு மட்டும் அறிவுரை கொடுப்பது நல்லது.
இன்றைய முக்கிய செய்திகள்
01-03-2024
சிவராத்திரியை ஒட்டி வரும் மார்ச் 8ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...
12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்...
மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது; உயர்நீதிமன்ற தீர்ப்பு சரியே.. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு...
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட உத்தரவை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு...
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித அழுத்தமும் இன்றி எழுத வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை...
ரூ.986 கோடியில் 2 ஆயிரத்து 292 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்...
Today's Headlines:
01-03-2024
Announcement of local holiday for Kanyakumari district on 8th March which coincides with Shivratri...
My heartiest congratulations to the students who are going to write the 12th general examination: Chief Minister M.K.Stalin...
Sterlite plant cannot be allowed to open again; High Court verdict is correct.. Supreme Court praises Madras High Court...
Chief Minister M.K.Stal's welcome to the Supreme Court's decision which upheld the order to close the Sterlite plant...
Students writing the 12th general exam should write without any pressure: Minister Anbil Mahesh advises...
New rocket launch pad at Kulasekaranpatnam on 2,292 acres at Rs.986 crore: Prime Minister Modi laid the foundation stone...
பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) பதவிக்காலம் ஆகஸ்ட் 2024 மாதம் வரை நீட்டிப்பு - அரசாணை 1(டி) எண்: 64, நாள் : 29-02-2024 வெளியீடு...
பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) பதவிக்காலம் ஆகஸ்ட் 2024 மாதம் வரை நீட்டிப்பு - அரசாணை 1(டி) எண்: 64, நாள் : 29-02-2024 - G.O. (1D) No.64, Dated: 29-02-2024 வெளியீடு...
>>> அரசாணை 1(டி) எண்: 64, நாள் : 29-02-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளிக் கல்வி - பள்ளி மேலாண்மைக் குழு - 2022-2024 ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது...
TNPSC வெளியிட்ட சிவில் நீதிபதி தேர்வுப் பட்டியல் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...
TNPSC வெளியிட்ட சிவில் நீதிபதி தேர்வுப் பட்டியல் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...
சிவில் நீதிபதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று சிவில் நீதிபதிகளின் தேர்வு பட்டியலை ரத்து செய்யுமாறு டிஎன்பிஎஸ்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய பட்டியலை 2 வாரங்களில் வெளியிட டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து கடந்த கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் இந்த பணிக்காக விண்ணப்பிக்கும் அவகாசம் முடிவடைந்தது.
மொத்தம் இந்த தேர்விற்காக 6,031 ஆண்களும், 6,005 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 12,037 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நடந்து முடிந்தது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சாவூர், வேலுார், விழுப்புரம் ஆகிய 9 இடங்களில், சிவில் நீதிபதி முதல் நிலை தேர்வுக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு கடந்த நவம்பரில் நடந்து முடிந்தது. இதன் பின்னர் முதன்மை எழுத்து தேர்வானது (மெயின் தேர்வு) கடந்த தாண்டு நவம்பர் 4, 5ஆம் தேதிகளில் நடந்தது. இந்தத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 472 பேர் அழைக்கப்பட்டனர். இதற்கான முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதனை தொடந்து, கடந்த ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நேர்முக தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், சமீபத்தில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சியானவர்களின் 245 பேர் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த நிலையில், 245 சிவில் நீதிபதிகளுக்கான புரவைசனல் பட்டியலை ரத்து செய்ய கோரி ஷீலா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவில், சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில், பின்னடைவு காலி பணியிடங்களை நிரப்பாமல் இட ஒதுக்கீடு முறை தவறாக பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிவில் நீதிபதிகளின் தேர்வு பட்டியலை ரத்து செய்யுமாறு டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய பட்டியலை 2 வாரங்களில் வெளியிட டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்குடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக பள்ளிக்கு ரூபாய் 2000 ஒதுக்கி SPD செயல்முறைகள் வெளியீடு...
மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்குடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக பள்ளிக்கு ரூபாய் 2000 ஒதுக்கி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 0783/ A7/SS/2023, நாள்: 29.02.2024 வெளியீடு...
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண்: 0783/ A7/SS/2023, நாள்: 29.02.2024
பொருள் : 2023-24 – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 28.02.2023 முதல் 2024-2025ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ளுதல் – நிதிவிடுவித்தல் – தொடர்பாக...
பார்வை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள், ந.க.எண். 079119/எம்/இ1/2023, நாள். 20.02.2024
அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் - குறைந்தபட்சம் 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு முடிய 175 மாணவர்கள் மற்றும் ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் உள்ள 66 பள்ளிகளுக்கு மட்டும் ஏற்கனவே அந்த பள்ளிகளில் உள்ள 216 பட்டதாரி பணியிடங்களை தவிர்த்து கூடுதலாக அப்பள்ளிகளுக்கு 114 பட்டதாரி பணியிடங்கள் அனுமதி அளித்து ஆணை - பள்ளிக்கல்வித்துறை அரசாணை (நிலை) எண்: 54, நாள்: 28-02-2024 வெளியீடு...
அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் - குறைந்தபட்சம் 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு முடிய 175 மாணவர்கள் மற்றும் ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் உள்ள 66 பள்ளிகளுக்கு மட்டும் ஏற்கனவே அந்த பள்ளிகளில் உள்ள 216 பட்டதாரி பணியிடங்களை தவிர்த்து கூடுதலாக அப்பள்ளிகளுக்கு 114 பட்டதாரி பணியிடங்கள் அனுமதி அளித்து ஆணை - பள்ளிக்கல்வித்துறை அரசாணை (நிலை) எண்: 54, நாள்: 28-02-2024 வெளியீடு...
6-8 வகுப்புகளில் குறைந்தபட்சம் 175 மாணவர்கள் மற்றும் 6-8 வகுப்புகளில் தலா 35 மாணவர்கள் என்ற இரண்டு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து அரசாணை வெளியீடு...
26.02.2024, 27.02.2024, 28.02.2024 மற்றும் 29.02.2024 ஆகிய நாட்களில் நடந்த 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான பிப்ரவரி மாத கற்றல் விளைவுகள் மற்றும் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு விடைக்குறிப்புகள் - தமிழ் & ஆங்கில வழி...
26.02.2024, 27.02.2024, 28.02.2024 மற்றும் 29.02.2024 ஆகிய நாட்களில் நடந்த 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான பிப்ரவரி மாத கற்றல் விளைவுகள் மற்றும் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு விடைக்குறிப்புகள் - தமிழ் & ஆங்கில வழி (Answer Keys of Learning Outcomes (LOs) & Competency Based Assessment Exam February 2024 for Class 6, 7, 8 & 9 held on 26.02.2024, 27.02.2024, 28.02.2024 மற்றும் 29.02.2024 - Tamil & English Medium)...
NMMS RESULT 2023-2024 - இட ஒதுக்கீடு பிரிவுகள் வாரியாக மதிப்பெண்கள் விவரம்...
NMMS RESULT 2023-2024 - இட ஒதுக்கீடு பிரிவுகள் வாரியாக மதிப்பெண்கள் விவரம்...
*GEN-2053*
TOP MARK :150
LOW MARK : 96
*OBC-1774*
TOP MARK :96
LOW MARK :72
*BCM-234*
TOP MARK :96
LOW MARK : 72
*MBC-1339*
TOP MARK :96
LOW MARK : 72
*SC-1004*
TOP MARK :96
LOW MARK : 81
*SCA-201*
TOP MARK :96
LOW MARK : 78
*ST-67*
TOP MARK :96
LOW MARK : 82
*GEN LV (BLIND)-7*
TOP MARK :114
LOW MARK : 59
*GEN HH/HI-5*
TOP MARK :102
LOW MARK : 58
*GEN ORTHO-11*
TOP MARK :147
LOW MARK : 63
-----------------------------------
Total. : 6695
-----------------------------------
2023-24 NMMS தேர்வு முடிவுகள் உணர்த்தும் உண்மைகள் குறித்த விளக்கம்...
2023-2024 NMMS தேர்வு முடிவுகள் உணர்த்தும் உண்மைகள் குறித்த விளக்கம்...
அன்பிற்குரிய தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம்.
*NMMS 2023-24 தேர்வு முடிவுகளின் விபரம்*:
General 2053 / 2053
OBC. 1377 / 1774 = 397
BCM. 152 / 234. = 82
MBC. 1013 / 1339 =. 326
SC. 1004 /1004
SCA. 201 / 201
ST. 67 / 67
Blind. 7 / 7
Hearing. 5 / 5
Ortho. 11/. 11
---------- --------
5890. 6695
---------- --------
NMMS தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற எடுக்க வேண்டிய குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்கள் விவரம்...
SAT 36
MAT 36
(BC / MBC / BC MUSLUM)
SAT 29
MAT 29
(SC/ST) .
மேற்கண்ட புள்ளி விபரம் நமக்கு தெரிவிக்கும் உண்மை .
நமது மாநில ஒதுக்கீடு அகில இந்திய அளவில் 6695 இடங்கள். மேற்கண்ட தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 5890 மட்டுமே.
அதாவது பொது/ SC/ST /PWD பிரிவு மாணவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடத்தையும் தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதனால் அதிகளவில் தகுதி மதிப்பெண் பெற்ற SC/ ST மாணவர்களால் தேர்வு பட்டியலில் இடம் பெற இயலவில்லை. அதேவேளையில்
BC /MBC/ BC( MUSLIM) மாணவர்களில் குறைந்த பட்சமதிப்பெண் SAT 36 MAT 36 மதிப்பெண்கள் கூட பெறாமல் நமது மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட3347 இடங்களில் 2542 இடங்களுக்கு மட்டுமே தகுதி பெற்று 805 இடங்களை அகில இந்திய அளவில் இழந்திருக்கிறோம்.
MAT இல் அதிக மதிப்பெண் பெற்றுள்ள நமது மாணவர்கள் SAT இல் குறைந்த பட்ச மதிப்பெண் 36 பெறாமல் வெற்றியை இழந்துள்ளனர்.
இந்த ஆண்டு BC/MBC/BC (MUSLIM)CUT OFF MAT 36 SAT 36 TOTAL 72 இல் முடிந்திருக்கிறது.
SAT இல் 36 மதிப்பெண்கள் பெறாமல் ஒன்று இரண்டு மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் வெற்றியை இழந்துள்ளனர். தோல்வியில் இருந்து தான் மிக பெரிய பாடங்களை கற்றுகொள்ள முடியும்.
வெற்றி பெறாமல் மயிரிழையில் வெற்றியை தவறவிட்ட மாணவர்களின் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மன வேதனை தாங்கிட முடியாதது.வரும் ஆண்டில்
வெற்றி இலக்கை அடைய
இன்றே தற்போது நம்மிடம் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவ /மாணவிகளை அடுத்த ஆண்டு NMMS SAT தேர்வுக்கு தயார் செய்யும் பணியை தொடங்குவோம்.
அறிவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி கொடுப்போம்.
அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழ்நாடு அரசுக்கு 35000 கோடி ரூபாய் லாபம் - நக்கீரன் இதழ் செய்தி வெளியீடு...
அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழ்நாடு அரசுக்கு 35000 கோடி ரூபாய் லாபம் - நக்கீரன் இதழ் செய்தி வெளியீடு...
35000 crore rupees profit for Tamilnadu government if implementation of old pension scheme for government employees, teachers - Nakkheeran magazine news...
>>> நக்கீரன் இதழ் செய்தி - PDF File...
மாற்றுத் திறனாளிகள் / புற்றுநோயாளிகள் அவர்தம் உதவியாளர்கள் பேருந்துகளில் பயணம் செய்யும் பொழுது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் - பயணக் கட்டண சலுகைகள் - அறிவுறுத்தல் - பொது மேலாளர் சுற்றறிக்கை கடிதம்...
மாற்றுத் திறனாளிகள் / புற்றுநோயாளிகள் அவர்தம் உதவியாளர்கள் பேருந்துகளில் பயணம் செய்யும் பொழுது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் - பயணக் கட்டண சலுகைகள் - அறிவுறுத்தல் - பொது மேலாளர் சுற்றறிக்கை கடிதம், நாள்: 28-02-2024...
Rules to be followed by Drivers and Conductors while traveling in Buses for Differently Abled Persons - PwD / Cancer Patients - Their Assistants - Fare Concessions - Instruction - General Manager Circular Letter...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
போலியோ சொட்டு மருந்து முகாம் – நாள் : 03.03.2024 - முக்கிய அம்சங்கள் - செய்தி வெளியீடு எண்: 443, நாள்: 28-02-2024...
போலியோ சொட்டு மருந்து முகாம் – நாள் : 03.03.2024 - முக்கிய அம்சங்கள் - செய்தி வெளியீடு எண்: 443, நாள்: 28-02-2024...
Pulse Polio Immunization (PPI) Campaign – Date: 03-03-2024...
>>> செய்தி வெளியீடு எண்: 443, நாள்: 28-02-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்கள், ஆகஸ்ட் 2023 - 23.08.2023 அன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் பெயர்ப்பட்டியல் - அரசிதழ் வெளியீடு......
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், சென்னை-600 106.
ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்கள், - Local Body Elections ஆகஸ்ட் 2023
23.08.2023 அன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் பெயர்ப்பட்டியல் - அரசிதழ் வெளியீடு...
இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு...
வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை செயலாளராக காகர்லா உஷா இ.ஆ.ப. அவர்கள் நியமனம் - அரசாணை - G.O. Rt. No. 920, Dated: 28-02-2024 வெளியீடு....
இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29-02-2024...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29-02-2024 - School Morning Prayer Activities...
திருக்குறள்:
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை.
குறள் 75:
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
விளக்கம்:
உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.
பழமொழி :
Tit for tat.
பழிக்குப் பழி
பொன்மொழி:
Minds are like parachutes - they only function when open.
மனம் என்பது வான்குடையைப் போன்றது. அதில் பறந்துசெல்பவர் மட்டுமே திறந்து கொள்ளமுடியும்.
அறிவியல் பொது அறிவு வினா விடைகள் :
ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை - டாக்டர். சாமுவேல் ஹென்மென்
1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார் - மூன்று
கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர் - ஜே.சி. போஸ்
மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் - 16 முதல் 18 முறை
ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - புல்
ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :
Fate - விதி
Fault - குற்றம்
Fear - பயம்
Favour - சாதகம்
Fenugreek - வெந்தயம்
ஆரோக்கியம்
மூட்டு வலி
வாயு உண்டாக்கும் உணவுப் பொருட்களை (உருளைக்கிழங்கு, வாழைக்காய், கொண்டக்கடலை போன்றவை) தவிர்க்க வேண்டும்.
உடல் எடையை குறைக்க வேண்டும்.
யோகப் பயிற்சிகள் செய்யலாம்.
பிண்ட தைலம் நல்ல மருந்து.
உளுந்து மாவை, வலியும் வீக்கமும் உள்ள மூட்டுக்களின் மீது போடலாம்.
முடக்கத்தான் கீரை, வாதநாராயணன் கீரை நல்லது.
இன்றைய சிறப்புகள்
பிப்ரவரி 29
1992 - போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா சுதந்திர வாக்கெடுப்பின் முதல் நாள்
பிறந்த நாள்
1896 – மொரார்ஜி தேசாய், இந்தியாவின் 4-வது பிரதமர் (இ. 1995)
நினைவு நாள்
உலகின் குறிப்பிடத்தக்க நபர்களில் தாஸ்மானியா முதலமைச்சர் ஜேம்ஸ் வில்சன் (1812-1880) என்பவரே பெப்ரவரி 29 இல் பிறந்து அதே நாளில் இறந்தார்.
சிறப்பு நாட்கள்
அரிய நோய் நாள் (நெட்டாண்டுகளில்; சாதாரண ஆண்டுகளில் பெப்ரவரி 28 இல்)
நீதிக்கதை
சிங்கத்தை ஏமாற்றிய தந்திர நரி
முன்னொரு காலத்தில் காட்டில் ஒரு வயதான சிங்கம் இருந்தது. வயதானதால் தனக்கு உதவியாக ஒரு மிருகத்தை வைத்துக்கொள்ள எண்ணியது. வயதான சிங்க ராஜா தன்னுடைய மந்திரி பதவியை ஒரு நரிக்கு கொடுத்தது.
நரிக்கு அதில் விருப்பமில்லை என்றாலும் காட்டின் ராஜா கொடுத்த பதவியை மறுக்க முடியவில்லை. மந்திரியின் பொறுப்பு என்னவென்று சிங்கம் நரிக்கு சொல்லிக்கொடுத்தது. “வயதானதால் என்னால் இரையைத் தேடி அலைய முடியாது எனவே நீ தினமும் எனக்கு இறையை கொண்டு வரவேண்டும்” என்று கூறியது.
வேறு வழி இல்லாமல் நரி காட்டுக்குள் சென்று இறையைத் தேடி அலைந்தது. அப்போது அங்கு ஒரு கழுதையை கண்டவுடன் நரிக்கு ஒரு யோசனை தோன்றியது. “காட்டின் ராஜாவாகிய சிங்கத்திடம் ஒரு மந்திரி பதவி இருக்கிறது அது உனக்கு வாங்கித் தருகிறேன்” என்று கூறி அந்த கழுதையை சிங்கத்திடம் அழைத்துச் சென்றது அந்த நரி.
மிகவும் பசியுடன் இருந்த அந்த சிங்கம் கழுதையை கண்டவுடன் கர்ஜித்துக்கொண்டு அந்த கழுதையின் மேல் பாய்ந்து அதைக் கொன்றது. “என்னுடைய புத்திசாலித்தனத்தினால் இந்தக் கழுதையை ஏமாற்றி சிங்கத்திற்கு உணவாக கொண்டு வந்தேன், எனவே இதில் நல்ல ஒரு பங்கு எனக்கு சாப்பிட கிடைக்க வேண்டும்” என்று நரி எண்ணியது.
சிங்கம் சாப்பிட உட்கார்ந்ததும் நரி ஒரு யோசனை சொன்னது, “ராஜா நீங்க மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள் எனவே உணவு அருந்துவதற்கு முன்பு குளிப்பது நல்லது அல்லவா” என்று யோசனை சொன்னது. சிங்கமும் அதற்கு சரி என்று சொல்லி குளிக்க சென்றது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய நரி கழுதையின் மூளையை தின்றது.
குளித்து முடித்த சிங்கம் வந்து கழுதையை சாப்பிட உட்கார்ந்தது. அப்போது கழுதையின் மூளையை காணாததால் அதைப்பற்றி நரியிடம் கேட்டது. புத்திசாலியான நரி “ஹா ஹா ஹா, கழுதைக்கு மூளை இருந்திருந்தால், அது சிங்கத்திடம் மந்திரி பதவி இருக்கிறது, என்று நான் சொன்னதை நம்பி இங்கு வந்து இருக்குமா” என்று கேட்டது.
இன்றைய முக்கிய செய்திகள்
29-02-2024
மக்களின் சேவகனான நான் உங்களின் விருப்பங்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்: தூத்துக்குடியில் பிரதமர் மோடி உரை...
தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் “பெற்றோரைக் கொண்டாடுவோம் மாநாட்டினை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி...
2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...
பதிவுச்சான்று, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை அஞ்சல் மூலம் அனுப்பும் புதிய சேவை தொடக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு...
அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக காவல்துறையினர் செயல்பட வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்...
தூத்துக்குடியில் ஆழ்கடல் பகுதியில் சங்கு எடுக்க அனுமதி வழங்க உரிமம் வழங்கக் கூடாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை...
இனி பணமே தேவையில்லை.. யுபிஐ, கார்டு மூலம் டிக்கெட் வாங்கலாம்.. சென்னை மாநகர பேருந்துகளில் புதிய வசதி அறிமுகம்...
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது...
Today's Headlines:
29-02-2024
As a servant of the people, I will fulfill your wishes and demands: PM Modi's speech in Thoothukudi...
Minister Udayanidhi inaugurated the "Let's celebrate parents" conference organized by the Tamil Nadu State Parent Teacher Association...
Veteran Journalist VN Samy will be awarded the Kalaignar Pen Award for 2022: Chief Minister M K Stalin's order...
New service to send registration certificate, driving license by post: Transport department announces...
Police should act as a bridge between the government and the people: Chief Minister M.K.Stal's instruction...
License should not be issued to allow conch shelling in deep sea area in Tuticorin: High Court Madurai Branch...
No need for cash anymore.. Tickets can be bought through UPI, card.. New facility introduced in Chennai city buses...
Foundation stone laid for rocket launch pad at Kulasekaranpatnam...
IFHRMS Kalanjiyam Appஐ Install செய்து open ஆகவில்லை என்றால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்...
IFHRMS Kalanjiyam Appஐ Install செய்து open ஆகவில்லை என்றால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்...
IFHRMS Kalanjiyam Appஐ Install செய்து open ஆகவில்லை என்றால் கீழே உள்ள முறையை பின்பற்றவும்....
👇👇👇👇👇👇
At first go to settings
In the search box type developer option
Switch off the developer option
Uninstall Kalanjiyam old app if you have
Install the Kalanjiyam app using the link given
Download Link👇👇👇
https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam
After that it will display as " you should update "
Then touch the update
Then it would be opened
Thank you
>>> IFHRMS - Kalanjiyam Mobile App - பயன்படுத்தும் முறை...
01-01-2024 நிலவரப்படி ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 6755 இடைநிலை ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச முன்னுரிமை பட்டியல் - 31-12-1997 வரை...
01-01-2024 நிலவரப்படி ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 6755 இடைநிலை ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச முன்னுரிமை பட்டியல் - 31-12-1997 வரை...
State Level Tentative Priority List of 6755 Secondary Grade Teachers working in Panchayat Union / Municipal / Government Primary and Middle Schools as on 01-01-2024 - Up to 31-12-1997...
NMMS RESULT 2024 - மாவட்டங்கள் வாரியாக தேர்வாகியுள்ள மாணவர்கள் எண்ணிக்கை...
NMMS RESULT 2024 - மாவட்டங்கள் வாரியாக தேர்வாகியுள்ள மாணவர்கள் எண்ணிக்கை...
NMMS RESULT 2024 - DISTRICT WISE NUMBER OF STUDENTS SELECTED...
NMMS EXAMINATION 2023 -2024 - LIST OF 5890 SELECTED CANDIDATES...
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு 2023-2024 - தேர்வாகியுள்ள 5890 மாணவர்களின் பெயர் பட்டியல்...
NMMS EXAMINATION 2023 -2024 - LIST OF 5890 SELECTED CANDIDATES...
தமிழ்நாடு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் - TN - NHIS Mobile App Download Link...
தமிழ்நாடு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் - Tamilnadu New Health Insurance Scheme - TN - NHIS Mobile App Download Link...
தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு, களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைதளம் மற்றும் கைபேசி செயலி தொடக்கம்...
தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு, களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைதளம் மற்றும் கைபேசி செயலி தொடக்கம் - செய்தி வெளியீடு எண்: 387, தேதி : 27.02.2024...
மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு, களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் மற்றும் கைபேசி செயலியை தொடங்கி வைத்தார்
>>> செய்தி வெளியீடு எண்: 387, தேதி : 27.02.2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
செய்தி வெளியீடு
மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் கருவூலம் மற்றும் கணக்குத் துறை சார்பில் தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு (TNPFTS), களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் மற்றும் கைபேசி செயலி தொடங்கி வைத்தார் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் இன்று (27.02.2024) கருவூலம் மற்றும் கணக்குத் துறை சார்பிலான பின்வரும் நிகழ்ச்சிகளை பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை 6வது தளத்தில் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு (TNPFTS), அரசு பொது நிதி நடைமுறையை எளிமைப்படுத்துதல், கருவூலத்தில் இருந்து கடைசி பயனர் வரை நிதி சென்று சேர்வதைக் கண்காணித்தல், அரசு செலவினத்தை முறைப்படுத்துதல், சிறந்த நிதி கண்காணிப்பு செயலி மூலம் திட்டங்களை தீட்டுதல், அரசின் கடனைக் குறைத்தல் என்ற வகையில் தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு துவக்கி வைக்கப்பட்டது.
களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, தமிழ்நாடு அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறை வாயிலாக அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான சுயசேவைகளை நேரம் மற்றும் இருப்பிடம் சாராமல் பயன்படுத்தும் வகையில் கைபேசி செயலி துவக்கி வைக்கப்பட்டது.
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் (Website) மற்றும் கைபேசி செயலி (Mobile App) அரசு ஊழியர்கள். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் (NHIS/PNHIS) சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள், சிகிச்சைகளின் விவர பட்டியல்கள். மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் பதிவிறக்கம் செய்யும் வசதிகள் மற்றும் பல விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் வலைத்தளம் மற்றும் கைபேசி செயலி துவக்கி வைக்கப்பட்டது.
கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் பணியாளர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை (IFHRMS) தொடர்பான பயிற்சிகள் வழங்கிடவும், நிதித்துறையின் கீழ் இயங்கும் துறை தலைமைகளின் பயன்பாட்டிற்கும் மற்றும் பொதுவான செயல்பாடுகளுக்காகவும் ரூ.16.11 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய பயிற்சி கூடம் மற்றும் ரூ. 9.85 இலட்சம் மதிப்பீட்டில் நூலகம் திறக்கப்பட்டது.
சென்னை மற்றும் மதுரை மண்டல இணை இயக்குநர்களின் அலுவலக பயன்பாட்டிற்காகவும், புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்ட மருத்துவ அலுவலரின் பயன்பாட்டிற்காகவும் ரூ.26.10 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று மகேந்திரா பொலிரோ வாகனங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நிதித்துறை. முதன்மை செயலாளர். திரு.த.உதயச்சந்திரன். இ.ஆ.ப. அவர்கள், அரசு சிறப்பு செயலாளர், திரு. பிரசாந்த் மு.வடநேரே, இ.ஆ.ப. அவர்கள், கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் திரு.க.விஜயேந்திர பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள். அரசு இணைச் செயலாளர், திரு. எச்.கிருஷ்ணனுண்ணி, இ.ஆ.ப. அவர்கள் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
IFHRMS - Kalanjiyam Mobile App - பயன்படுத்தும் முறை...
IFHRMS - Kalanjiyam Mobile App - Version 1.0 - New Update on 21-02-2024 - Now available @ Play store...
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தாங்கள் பெறும் சம்பள தகவல்களை ஐ எஃப் எச் ஆர் எம் எஸ் இணையதளத்திற்கு சென்று இதற்கு முன்பு பார்க்க முடியும். தற்போது கையடக்க அலைபேசி வழியாக அதற்கான பிரத்தியேக வடிவமைப்புடன் IFHRMS - Kalanjiyam Mobile App ஆக தற்போது தரப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி வரும் காலங்களில் அனைத்து தகவல்களையும் இந்த அலைபேசி செயலி வழியாகவே தெரிந்து கொள்ள முடியும்.
பயன்படுத்தும் முறை
✔️Install the application
👍Open the application
✔️Input ID number
👍Mobile number automatic showing
👍OTP number received
✔️Input OTP number
👍 Reset New PIN Number (4 Digit)
Download Link👇👇👇
https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam
>>> IFHRMS Kalanjiyam Appஐ Install செய்து open ஆகவில்லை என்றால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்...
பணி நிரவல் - TRB மூலம் இடைநிலை ஆசிரியர் நியமனம் - பின்பற்ற வேண்டிய கால அட்டவணை குறித்த அரசாணை (நிலை) எண்: 48, நாள்: 21-02-2024 வெளியீடு...
பணி நிரவல் - TRB மூலம் இடைநிலை ஆசிரியர் நியமனம் - பின்பற்ற வேண்டிய கால அட்டவணை குறித்த அரசாணை (நிலை) எண்: 48, நாள்: 21-02-2024 வெளியீடு...
G.O. Ms. No. 48, Dated: 21-02-2024 - இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் -31.05.2024க்குள் பணி நிரவல் செய்தல் வேண்டும் - ஆசிரியர் கலந்தாய்வு ஜூன் -30 க்குள் நடத்தி முடித்தல் வேண்டும் - அரசாணை வெளியீடு...
>>> அரசாணை (நிலை) எண்: 48, நாள்: 21-02-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
இன்று (28.02.2024) பிற்பகல் 04.00 மணிக்கு NMMS தேர்வு முடிவுகள் வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு வெளியீடு...
இன்று (28.02.2024) பிற்பகல் 04.00 மணிக்கு NMMS Results தேர்வு முடிவுகள் 2023-2024 வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு வெளியீடு...
>>> அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
2024-2025ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடர்பாக DSE & DEE இணைச் செயல்முறைகள்...
2024-2025ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடர்பாக DSE & DEE இணைச் செயல்முறைகள்...
💥 2024-2025 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை - 01.03.2024 முதல் தொடக்கம்...
💥 தொடக்கக் கல்வி பதிவேடு...
💥 பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்துதல்...
💥 விழிப்புணர்வுடன் பேரணி நடத்துவதற்கான முன்னேற்பாடுகள்...
💥 பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கடமைகள்...
💥 பேரணியில் இடம்பெறத்தக்க வாசகங்கள்...
💥 பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்...
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனரின் இணை செயல்முறைகள் ந.க.எண்: 079119/ எம்/ இ1 / 2023, நாள்: 27-02-2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28-02-2024...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28-02-2024 - School Morning Prayer Activities...
திருக்குறள்:
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை.
குறள் 74:
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
விளக்கம்:
அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்..
பழமொழி :
The mills of God grind slow but sure.
அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்
பொன்மொழி:
“This too shall pass.”
இது கூட கடந்துபோகும்.
அறிவியல் பொது அறிவு வினா விடைகள் :
படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி - ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்
மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் - நெருப்புக்கோழி
அக்ரோசோமின் முக்கியப் பணி - அண்டத்தினுள் நுழைதல்
இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர் - ஹீமோபாயிடிக் செல்கள்
பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம் - ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)
ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :
Extend - நீட்டித்தல்
Faint - மயக்கம்
Faith - விசுவாசம்
Famous - பிரபலமான
Fast - வேகமான
ஆரோக்கியம்
கற்றாழை: சிறிய புண்கள், வெட்டுக் காயங்கள், தோல் எரிச்சல் இவற்றுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.
இன்றைய சிறப்புகள்
பிப்ரவரி 28
1953 – ஜேம்ஸ் வாட்சன், மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் தாம் டிஎன்ஏயின் வேதியியல் அமைப்பைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
2007 – புளூட்டோவை நோக்கி ஏவப்பட்ட நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் வியாழனை அண்மித்தது.
பிறந்த நாள்
-
நினைவு நாள்
-
சிறப்பு நாட்கள்
அமைதி நினைவு நாள் (சீனக் குடியரசு)
கலேவலா நாள், (பின்லாந்து)
தேசிய அறிவியல் நாள்
ஆசிரியர் நாள் (அரபு நாடுகள்)
நீதிக்கதை
பேசும் குகை
வெகு காலத்துக்கு முன்பு மிருகங்களின் ராஜாவாகிய சிங்கம் ஒரு காட்டில் வசித்து வந்தது. அங்கு இருந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தை பார்த்து பயந்து வாழ்ந்து வந்தனர். ஒருநாள் சிங்கம் இரையைத் தேடி காட்டில் அலையும் போது ஒரு குகையை கண்டது.
உள்ளே சென்று பார்க்கும் போது அங்கே யாரும் இல்லை. “நிச்சயமாக இங்கே யாரோ வசித்து வருகிறார்கள், அவர்கள் வரும் வரை இங்கே இருந்தால் நிச்சயமாக பெரிய விருந்து இன்றைக்கு உண்டு” என்று சிங்கம் தனக்குத்தானே பேசிக்கொண்டு, அங்கே ராஜா போல் அமர்ந்து இருந்தது.
மாலை நேரத்தில் அங்கு வசித்து வந்த குள்ள நரி திரும்பி வந்து பார்க்கும்போது வெளியே சிங்கத்தின் கால்தடங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தது. “இப்போது நான் உள்ளே சென்றால் நானே அபாயத்தை ஏற்படுத்தியது போல் இருக்கும்” என்று குள்ளநரி எண்ணியது.
“ஆனால் குகைக்குள் சிங்கம் இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது” புத்திசாலியான குள்ளநரி மனதில் ஒரு திட்டமிட்டது. “ஓ.. குகையே” என்று பெரிய சத்தத்தில் நரி கத்தியது. இதைக் கேட்டு சிங்கம் சந்தோஷப்பட்டாலும் சத்தமிடாமல் பதுங்கி இருந்தது. மீண்டும் குள்ள நரி சத்தமாக,” ஓ குகையே நீ ஏன் இன்று மௌனமாக இருக்கிறாய்” என்று கேட்டது.
நரி குகையிடம் பேசுவது அதிசயமாக இருந்தாலும் சிங்கம் அமைதியாகவே இருந்தது. மீண்டும் குள்ளநரி, “ஓ குகையே உனக்கு என்ன ஆயிற்று. எல்லா நாளும் நான் திரும்பி வந்த உடனே எனக்கு வணக்கம் சொல்லுவாய், இன்று ஏன் பேசாமல் இருக்கிறாய்? என் மேல் ஏதாவது கோபமா? நான் திரும்பி செல்கிறேன்” என்று சொன்னது.
“அடக்கடவுளே.. இப்போது நான் எதுவும் செய்யாமல் இருந்தால், எனக்கு உணவு ஆக வேண்டிய அந்த நரி நிச்சயமாக தப்பித்து செல்லும். ஒருவேளை என்னை கண்டு பயந்து தான் இந்த குகை பேசாமல் இருக்கிறதோ” என்று எண்ணியது அந்த சிங்கம். உடனே தன் கர்ஜிக்கும் குரலால் வணக்கம் சொல்லியது.
அதைக் கேட்ட உடன் நரி பயந்து ஓடியது. தன்னுடைய புத்திசாலித்தனத்தினால் நரி தன்னுடைய உயிரைக் காப்பாற்றியது.
நீதி : சிந்தித்து செயல்பட வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள்
28-02-2024
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வார காலமாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள்...
ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய தென்காசி தம்பதியருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.. ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்தார்...
ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி...
கர்ப்பிணியாக இருப்பதால் வேலை மறுக்கப்படுவது அரசியலமைப்புக்கு எதிரானது : உயர்நீதிமன்றம் அதிரடி...
பணிக் காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு இனி அரசுப் பணி வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு...
4 ஆண்டுகளுக்குப் பின் குறைந்தது பயணிகள் ரயில் டிக்கெட் கட்டணம்: பயணிகள் மகிழ்ச்சி...
Today's Headlines:
28-02-2024
School Education Minister Anbil Mahesh Poiyamozhi appealed to the teachers who have been protesting continuously for a week demanding equal pay for equal work...
Chief Minister M.K.Stalin praised the Tenkasi couple who prevented the train accident.. announced a reward of Rs.5 lakh...
Prime Minister Modi introduced 4 astronauts who will go to space under Gaganyaan project...
Being denied a job because of pregnancy is unconstitutional: High Court takes action...
Family heirs of government doctors who died during service will now be given government jobs: Tamilnadu government notification...
Passenger rail ticket fares lowest after 4 years: Passengers happy...
இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வேண்டுகோள் - செய்தி வெளியீடு எண்: 388, நாள்: 27-02-2024...
இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வேண்டுகோள் - செய்தி வெளியீடு எண்: 388, நாள்: 27-02-2024...
தமிழ்நாடு அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க மூவர் குழு ஒன்றை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
.
இக்குழு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மூன்று சுற்று கருத்து கேட்புக்கூட்டங்களை நடத்தியுள்ளது.மற்ற சங்கப் பிரதிநிதிகளுடன் அடுத்த சுற்று கருத்துக் கேட்பு நடைபெற வேண்டியுள்ளது.
அதன் பின்னர் இப்பொருள் சார்ந்து விரிவான அறிக்கையினைப் பெற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன் - பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்...
>>> செய்தி வெளியீடு எண்: 388, நாள்: 27-02-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாம் பெற்றோர். தேர்வு காலம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டு பள்ளிக்குத் திரும்ப பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வேண்டுகோள்...
NMMS FEBRUARY - 2024 தேர்வு முடிவுகள் - இணையதள முகவரி வெளியீடு...
NMMS FEBRUARY - 2024 தேர்வு முடிவுகள் - இணையதள முகவரி வெளியீடு...
தமிழ்நாட்டு அரசு ஊழியர்களின் வருமான வரியை ஊதியத்தில் தானாகவே பிடித்தம் செய்யும் வசதி மார்ச்சில் அறிமுகம்...
இத்தகைய சிக்கல்களை முழுமையாகத் தவிர்க்கும் பொருட்டு, வரும் வரியாண்டு முதல் ஊதியத்திற்கு ஏற்ப வருமானவரியானது மாதாந்திர தவணை அடிப்படையில் தானாகவே பிடித்தம் செய்யப்படும் வசதி தமிழ்நாடு அரசின் IFHRMS (களஞ்சியம்)ல் நடைமுறைக்கு வர உள்ளது.
எந்தமுறையில் என்று தெரிவிக்கவில்லை எனில், தானாகவே New Regime முறையில் வரி கணக்கிடப்படும்.
டிசம்பர் மாதத்தில் இதில் வரித் திருத்தங்களில் மாற்றம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பழைய வரிவிதிப்பு முறையைத் தேர்வு செய்ய விரும்புவோர் தங்களது வரித்தளர்வு தொடர்பான சேமிப்புகளை இந்த வாரத்திலேயே (தோராயமாகக்) கணக்கிட்டு முடிவு செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது ஒரு வரிவிதிப்பு முறையைத் தேர்வு செய்துவிட்டு பின்னர் மற்றொரு வரிவிதிப்பு முறைக்கு மாறிக்கொள்ளும் வசதி உள்ளதா என்பதும், இறுதி மாதங்களில் வரித்தளர்வுகளில் தேவையான கூடுதல் திருத்தங்களைச் செய்து கொள்ளும் வசதி உள்ளதா என்பதும் இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்தபின்னர்தான் தெரியவரும்.
வங்கிகளைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக இந்நடைமுறைதான் உள்ளது. வரி விதிப்பு முறையை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. அதேநேரம் டிசம்பர் மாதத்திலேயே சேமிப்புகள் / கடன்கள் / கல்விச் செலவுகள் தொடர்பான அனைத்து ரசீதுகளையும் சமர்ப்பித்தாக வேண்டிய நிலையும் அங்கு உள்ளது. அவர்களுக்குத் தனியே IT படிவம் தயார் செய்து அளிக்க வேண்டிய தேவையுமில்லை. அந்த மென்பொருள் மூலமே Form 16A & 16B என அனைத்தையும் வங்கி ஊழியர்கள் தமது Login மூலம் இருந்த இடத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.
இத்தகைய முழுமையான வசதி IFHRMS (களஞ்சியம்)ல் இருக்குமா என்பது திட்ட செயலாக்கத்திற்குப் பின்பே தெரியவரும். இவையெல்லாம் இருக்குமெனில், Audit Consultancy மூலம் TDS & Form16 பணியை மேற்கொள்ள ஊழியர்களிடமிருந்து தனியே பணம் வசூல் செய்யப்படுவது முற்றுப்பெறும்.
Form 16Bல் ஓராண்டிற்கான ஊதியத்திற்கு எவ்வாறு வரி கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற முழுமையான விபரம் இருக்கும். அதாவது நாமளிக்கு IT படிவத்தின் அனைத்துத் தரவுகளும் இதில் இருக்கும்.
நாம் தயாரித்து அலுவலகத்தில் அளிக்கும் IT படிவம் என்பது ஒரு மாதிரி தான். அது நமது ஊதியம் பெற்று வழங்கும் அலுவலகத்தைத் தவிர்த்து வேறெங்கும் எந்தவகையிலும் பயன்படாது / பொருட்படுத்தப்படாது. இப்படிவத்தை அடிப்படையாக வைத்து IT Web Pageல் TDS செய்யும் போது, TRACES எனப்படும் இந்திய வருமான வரித்துறையின் TDS Reconciliation Analysis and Correction Enabling System மூலம் தரவிறக்கப்பட்டு வழங்கப்படும் Form 16B தான் அதிகாரப்பூர்வ IT படிவம். வங்கிகளில் கடன் கோரும்போதும், வருமான வரி தொடர்பான இதர பயன்பாடுகளுக்கும் இந்த Form 16Bயைத்தான் கேட்பர்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Government Relief Application Form for Storm Damaged Crops
புயலில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு நிவாரண விண்ணப்ப படிவம் மாதிரி Government Relief Application Form for Storm Damaged Crops