கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DA நிலுவைத் தொகையுடன் சம்பளம் தயாரித்தல் - eTeam தகவல்

 

 அக்டோபரில் DA நிலுவைத் தொகையுடன் சம்பளம் தயாரித்தல்.


அரசு அறிவித்தபடி, உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை ஜூலை, 2024 முதல் வழங்க வேண்டும்.   இது தொடர்பாக, பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்: 


1. அக்டோபருக்கான DA-ஆனது அக்டோபர் மாத ஊதியப் பட்டியலில் புதுப்பிக்கப்படும். 

2. ⁠3 மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் (ஜூலை - செப்,24) அக்டோபர் மாத ஊதியப் பட்டியலில் கணக்கிடப்பட்டு இணைக்கப்படும் (G.O. No.192 T&A DT 31.05.24)

3. ⁠தேவையான கணக்கீடுகள் கணினியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, திங்கள்கிழமைக்குள் DDO-க்களுக்குக் கிடைக்கும் (அதுவரை ஊதிய ஐகான் முடக்கப்படும்)

4. பட்டியல் தயாரிப்பது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல் விரைவில் வழங்கப்படும்.

5. ⁠தனியான DA நிலுவைப் பட்டியல்களைத் தயார் செய்யாமல் இருப்பதில் போதுமான கவனம் செலுத்துங்கள் (ரெட்ரோ பட்டியலில் கூட) .


அன்புடன்

AD eTeam



October-2024 Payslip has been published on Kalanjiyam app


தற்போது              அக்டோபர் -2024 க்கான ஊதியப் பட்டியல் களஞ்சியம் செயலியில் வெளியிடப்பட்டுள்ளது.


October-2024 Payslip has been published on Kalanjiyam app


களஞ்சியம் செயலியில் அவரவர் October மாத Payslip Download செய்து ஊதியம் மற்றும் அகவிலைப்படி நிலுவைத்தொகை சரிபார்த்துக் கொள்ளலாம்.


மேலும்,

அகவிலைப்படி நிலுவைத் தொகைக்கான CPS பிடித்தம் மற்றும் வருமானவரி தொகை பிடித்த மாற்றம் போன்றவற்றையும் அறிந்து கொள்ளலாம்.


3 month's D.A. arrears and October salary - Information



மூன்று மாத அகவிலைப்படி நிலுவை மற்றும் அக்டோபர் மாத ஊதியம் குறித்த தகவல்


Information about 3 month's D.A. arrears and October salary 


2024 ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மூன்று மாத அகவிலைப்படி நிலுவையும், அக்டோபர் இம்மாதம் 53℅ அகவிலைப்படியுடன் ஊதியமும் ஒரே தொகையாக அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது


வருமான வரி கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளதால் ஊதியத்தில் வித்தியாசம் வரலாம்


 களஞ்சியம் செயலியில் அவரவர் சம்பள பட்டியலை சரிபார்த்துக் கொள்ளவும்.


தீக்காயங்கள் இல்லாத பாதுகாப்பான தீபாவளிக் கொண்டாட்டம்

 தீக்காயங்கள் இல்லாத பாதுகாப்பான தீபாவளிக் கொண்டாட்டம்


தீக்காயங்கள் இல்லாத 

பாதுகாப்பான தீபாவளியை 

சொந்தங்கள் அனைவருக்கும் 

வேண்டியவனாக இந்தக் கட்டுரையைத் தொடங்குகிறேன்.


தீக்காயங்களைத் தவிர்க்கும் வழிகளை முதலில் கூறிவிடுகிறேன். 


- ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் வெடி / மத்தாப்பு கொளுத்தும் இடங்களில் இல்லாமல் இருப்பது நல்லது. 


முதல் காரணம் 

வெடி மத்தாப்பில் இருந்து வரும் புகை அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தலாம்


இரண்டாவது காரணம் 

ஊர்ந்து தவழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகள் துருதுருவென ஓடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் 

தன்னை அறியாமல் பட்டாசின் மீது கால் வைத்தோ கை வைத்துத் தொட்டோ தீக்காயம் ஏற்படலாம். 


பட்டாசு மத்தாப்பு வைக்கும் நேரத்தில் பெரியவர்களின் கவனம் அவர்கள் மீது குறையும் வாய்ப்பு உள்ளது


- ஒரு நேரத்தில் வலப்பக்கம் புஸ்வானம் இடப்பக்கம் மற்றொரு புஸ்வானம் என்று இரு மத்தாப்புகளை வைப்பது ஆபத்து

ஒரு நேரத்தில் ஒரு மத்தாப்பு அல்லது வெடியை வைப்பதே சரி


- நீண்ட ஊதுபத்தி வைத்து வெடிகளை வைப்பதே சரி. 


- புதிதாகத் திருமணமாகி தலை தீபாவளி கொண்டாடும் மாப்பிளைகளே,  தங்களது வீரத்தைப் பரைசாற்றும்  விதமாக கையில் வெடி வைத்து வெடிக்க வேண்டாம்.

பாதுகாப்பாக வெடி வெடிக்கவும். 


- வெடிக்காத மத்தாப்பு அல்லது வெடிகள் இருப்பின் அதன் மீது மண் அல்லது நீரை ஊற்றி விடவும். 

- எப்போதும் வெடி மத்தாப்பு வைக்கும் போது அருகில் ஒரு வாளி தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் 

- எளிதில் தீப்பற்றும் 

பட்டு உடைகள்/ ஜரிகை உடைகள் / ஷால்கள் / லுங்கிகள் அணிந்து மத்தாப்பு வெடி வைக்க வேண்டாம்.


- குழந்தைகளை பெரியவர்கள் மேற்பார்வையின்றி வெடி மற்றும் மத்தாப்பு வைக்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். அவர்கள் வெடி மருந்துகளை வைத்து ஆல்ப்ரெட் நோபல் போல ஆராய்ச்சி செய்து பெரிய பிரளயத்தையே கிளப்பி விடுவார்கள் ஜாக்கிரதை. 


- வெடியை அடுத்தவர் மீதோ- நாய் உள்ளிட்ட மிருகங்கள் மீதோ வீசி வதை செய்வது தவறு. 

நாம் அவ்வாறு வெடியை வீசும் போது நாய் தறிகெட்டு ஓடி பைக் ஓட்டி வருபவரை கீழே தள்ளி விட வாய்ப்புண்டு. 


- வெடிக்காத வெடியை கையில் ஒருபோதும் எடுக்காதீர்கள். நீங்கள் கையில் எடுக்கும் பொன்னான தருணத்தில் படார் என்று வெடிக்கக் காத்திருக்கும்.


இத்தனை விஷயங்களுக்குப் பின்பும் 

வெடி மத்தாப்பினால் தீக்காயம் பட்டு விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்? 


தீக்காயம் ஏற்பட்ட பகுதியை உடனே 

குழாய் நீரைத் திறந்து விட்டு அதில் காட்ட வேண்டும். சுமார் இருபது நிமிடங்கள் தொடர்ந்து தீக்காயம் பட்ட இடத்தை குளிர்விக்க வேண்டும். 


தீக்காயம் என்பது உஷ்ணத்தால் ஏற்படும் காயமாகும். 

அதை எவ்வளவு விரைவில் குளிர்விக்கிறோமோ... 

எவ்வளவு நீண்ட நேரம் குளிர்விக்கிறோமோ...

அவ்வளவு நல்லது


கம்பி மத்தாப்பு பத்த வைக்கும் போது சுமார் 2000 டிகிரி செல்சியஸை எட்டுகிறது. இத்தகைய வெப்பம் தோலில் படும் போது உடனே தீக்காயம் உண்டாகி விடும்

 

எனவே தீக்காயம் பட்ட இடத்தை 

உடனே குழாய் நீரைத் திறந்து விட்டு காட்டி இருபது நிமிடங்கள் குளிர்வியுங்கள். 


தீக்காயங்கள் மீது 

டூத் பேஸ்ட் 

மை 

க்ரீம்

வெண்ணெய் 

உள்ளிட்ட எதையும் பூசக் கூடாது. 

இது எதுவும் தீக்காயம் குணமாக உதவாது. இன்னும் பிரச்சனைகளையே வரவழைக்கும். 


தீக்காயத்தின் மீது துணியை வைத்து சுற்றுவது,  

பேண்டேஜ் வைற்று சுற்றுவது, 

கட்டு போடுவது இவையனைத்தும் தவறு. 


மருத்துவரை சந்திக்கும் முன் 

தீக்காயத்தின் மீது சுத்தமான ப்ளாஸ்டிக் பை வைத்து மூடிக்கொள்ளலாம். ப்ளாஸ்டிக் பை 

தீக்காயத்தில் ஒட்டாது. மற்ற அனைத்தும் புண்ணுடன் ஒட்டிக் கொண்டு அவற்றை எடுக்கும் போது தீக்காயம் இன்னும் மோசமாகும். 


தீக்காயம் மீது ஐஸ் கட்டி வைப்பது 

ஐஸ் தண்ணீரை ஊற்றுவது தவறு. 

ஐஸ் மூலம் கிடைக்கும் அதீத குளிர்ச்சி தீக்காயத்தை இன்னும் பிரச்சனையாக்கும். 


தீக்காயங்கள் மீது ஒட்டியிருக்கும் துணியை ஒருபோதும் எடுக்க முயற்சிக்க வேண்டாம். அது காயத்தின் ரணத்தை இன்னும் அதிகமாக்கி விடும்.

அந்தத் துணியுடன் சேர்த்தே நீரில் குளிர்விக்க வேண்டும். 


கண்களில் மத்தாப்புத் துகள் வெடியின் துகள் விழுந்து விட்டால் ஒரு போதும் கண்களைக் கசக்கக் கூடாது. 

மேற்கூறியது போலவே நீரை கண்களில் ஊற்றி குளிர்விக்க வேண்டும். 

ஐஸ் ஒருபோதும் உபயோகிக்கக் கூடாது. 

காயம்பட்ட கண்களின் மீது சுத்தமான துணியை வைத்துக் கொண்டு 

உடனே கண் நல மருத்துவரை சந்திக்க விரைந்திட வேண்டும். 


மேற்கூறிய

பாதுகாப்பான முறைகளைப் பின்பற்றி மத்தாப்பு வெடிகளை வெடித்து

தீக்காயங்களற்ற 

பாதுகாப்பான தீபாவளிப் பண்டிகையை அனைவரும் கொண்டாடிட வேண்டுகிறேன் 


நன்றி 


அனைவருக்கும் எனதினிய

தீபாவளி நல்வாழ்த்துகள் 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை



NHIS 2021 - United India Insurance Co.Ltd அலுவலகம் முகவரி மாற்றம்

 


 NHIS அலுவலகம் முகவரி மாற்றப்பட்டுள்ளது - Pay and Accounts Officer கடிதம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



NHIS NEW OFFICE ADDRESS


The United India Insurance Co.Ltd's Divisional Office dealing with NHIS scheme was shifted to a new premises in the following address


DEPARTMENT OF TREASURIES AND ACCOUNTS


From

Pay and Accounts Officer,

Pay and Accounts Office (South),

Amma Complex, 1st Floor,

NO.571 Anna Salai,

Nandanam, Chennai -600 035.


To

AII DDOs


PAO(South)/BAS III/12580/2024 dated 28/10/2024

Sir/Madam,

Sub : New Health Insurance Scheme 2021 - United Insurance Co Ltd's Divisional Office - shifted -New Address communicated -Regarding.


Ref : 1. Letter received from the commissioner of Treasuries and Accounts, Rc.No.30655/NHIS-2/2024 Dated 21-03-2024


The United India Insurance Co.Ltd's Divisional Office dealing with NHIS scheme was shifted to a new premises in the following address

"United India Insurance Co. Ltd,

LBO-010600,

134, Silingi Buildings,(Behind IDBI Bank),

Greams Road, Chennai-600 006"

Therefore the reimbursement claims may be send to the above address. And it is also informed that there is no change in the telephone numbers.

Asst Pay and Accounts Officer (South)

Chennai-35


இன்று (30-10-2024) TNSED Attendance செயலியில் விடுப்பு பதிவு செய்தல் குறித்த தகவல்கள்

 


 இன்று (30-10-2024) TNSED Attendance செயலியில் விடுப்பு பதிவு செய்தல் குறித்த தகவல்கள்


தகவலுக்காக....


இன்று (30.10.2024) கல்வி நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் விடுப்பு எடுப்பவர்கள் 1/2 நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

 

          Attendance App இல் 1/2 day CL என்று பதிவு செய்யலாம்.

 

         அதே போன்று Leave Apply செய்யும் போது 30.10.24 Forenoon முதல் 30.10.24 Forenoon வரை விடுப்பு  Apply செய்யவும்.


முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு - Annexure 1 - P.G. TEACHER PANEL PARTICULARS & ANNEXURE 2 - Appointment Details படிவங்கள்


 முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு - Annexure I - P.G. TEACHER PANEL PARTICULARS & ANNEXURE II - Appointment Details படிவங்கள்


Post Graduate Teacher Promotion - Annexure I - P.G. TEACHER PANEL PARTICULARS & ANNEXURE II - Appointment Details Formats



>>> Click Here to Download - Annexure 1...



>>> Click Here to Download - Annexure 2...



எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் - இன்று ஒரு சிறுகதை

 

எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் - இன்றைய சிறுகதை


You become what you think - Today's short story


#பேசி_பேசியே...


குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார்.


இப்போதெல்லாம் அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை.அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை.


 நல்ல உடற்பயிற்சி , சத்தான உணவு , தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள். 


பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள். ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார். எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது.


குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார்.


உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள். எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும். அவரை வீழ்த்துபவருக்கு 10லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள்.


பெரிய தொகைதான், இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள். இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது. 10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை. இந்த நிலையில் அந்தப் புதிய இளைஞன் , தான் போட்டிக்கு வருவதாக முன்வந்தான். பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான். வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார். போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது.



புதிய இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான் . அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக் கூறினான். அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே செய்தார்கள்.


அதில் ஒருவன் , வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான். அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார். வந்தவன் திடீரென்று , "என்னய்யா ஆச்சு உங்களுக்கு ?


பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே. கல்லு மாதிரி இருந்தீங்களே.. உடம்பைப் பாத்துக்குங்க " என்று சொல்லிக் கிளம்பினான்.


"எனக்கு மூச்சு வாங்குதா ? நான் நல்லா தானே பேசுறேன் ? " . அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.


மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்ப்பட்டு வணங்கினான். " ஐயா , போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன் . நான் உங்க தீவிர ரசிகன். இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க.


அதுல சந்தேகமே இல்லை.


ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும் , வலிமையும் இப்ப இல்லையே ? உடம்பு சரியில்லையா ? " என்று கேட்டுவிட்டு நகர்ந்தான்.


'என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?' இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது. போட்டி துவங்கும் நேரம் வந்தது. பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப் படுத்தினர். 


அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின் நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன் வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான். "என்னய்யா , எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும் இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே என்னாச்சு உங்களுக்கு ? " என்று கேட்டுவிட்டு விடைபெற்றான்.


அவ்வளவுதான் வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார். போட்டி துவங்கியது . அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும் இனம் புரியாத சோர்வு அவரை ஆட்கொண்டது. இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார்.


எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும் , வீரத்தையும் பாராட்டினார்கள் . அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான்.


பேசி ! பேசியே ஆளை வீழ்த்துவது இப்படித்தான்.


(இது போன்ற நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.)


பலருடைய வாழ்வில் , வந்துவிட்ட வியாதியைவிட , வந்துவிடுமோ என்று எண்ணி பயப்படுகிற வியாதியே பலரை கீழேதள்ளி வீழ்த்திவிடுகிறது.


பலப்படுவோம் எண்ணங்களால் , நம்பிக்கைகளால்.. உடல் அளவில் பலவீனப்பட்டாலும் மனதளவில்

மிருகபலத்தோடு இருப்போம்.


பிறரின் வார்த்தைகளால் பயப்படவும் வேண்டாம். பலவீனப்பட வேண்டாம்.


பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!


தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்


#வாழ்த்துகள்.


#வாழ்க_வளத்துடன்.


*சிந்தைக்கு இனியோர்க்குச் சிறக்கட்டும் இந்நாள்🙏*


Booking for the hostel rooms built by Arulmiku Subramania Swamy temple in Tiruchendur started from 29-10-2024 - TNHRCE Press Release


தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் திருச்செந்தூரில் நிர்வகிக்கப்பட்டு வரும் பக்தர்கள் தங்கும் விடுதி அறைகளுக்கு முன்பதிவு 29-10-2024 முதல் தொடக்கம்...



திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி அறைகளுக்கு முன்பதிவு 29-10-2024 முதல் தொடக்கம் - அறைகள் வாடகை குறித்த தகவல்கள் - இந்து சமய அறநிலையத் துறை - செய்தி வெளியீடு...



Booking for the hostel rooms for devotees built by Arulmiku Subramania Swamy temple in Tiruchendur will start from 29-10-2024 - Details of Room Rent - TNHRCE Press Release...



>>> இந்து சமய அறநிலையத் துறை - செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-10-2024

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-10-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

"பால் : பொருட்பால்

அதிகாரம் : அவை அஞ்சாமை

குறள் எண்: 724

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.

பொருள்: கற்றவர் முன், தாம் கற்றவற்றை அவர் மனதில் பதியும்படிச் சொல்லி,தம்மை விட அதிகமாகக் கற்றவரிடம் தாம் கற்கவேண்டிய மிகுதியைக் கற்றுக் கொள்ள வேண்டும்."


பழமொழி :
Do good to those who harm you

பகைவனை நேசித்துப்பார்


இரண்டொழுக்க பண்புகள் : 

*திடீரென  மழை அதிகமாக பெய்யும் நேரத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

*மழை பெய்யும் நேரத்தில் மரங்களின் அடியிலோ, மின்கம்பங்களின் அருகிலோ நிற்க மாட்டேன்.


பொன்மொழி :

வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு , வேடிக்கை பார்த்தவர்க்கும்,விமர்சனம் செய்பவர்க்கும் ஒரு வரி கூட கிடையாது வாழ்க்கை புத்தகத்தில்.......,


பொது அறிவு :

1. சாத்தனூர் அணை எந்த நதியின் குறுக்கே கட்டுப்பட்டுள்ளது?

விடை: தென்பெண்ணை

2. இந்தியாவின் மிகப்பெரிய நீர்ப்பாசன கால்வாய் எது?

விடை: சாரதா கால்வாய்


English words & meanings :

Needle-ஊசி,                                       

Pliers-இடுக்கி


வேளாண்மையும் வாழ்வும் :

பொது மக்களிடையே இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வும், அக்கறையும் அதிகரிக்கவே, தொடக்கத்தில் வழங்குதல்களின் அடிப்படையில் தொடங்கிய இந்த இயக்கம், தேவையின் அடிப்படையிலாக மாறியது. நுகர்வோர் இதற்காக கூடுதல் விலை கொடுக்க முன்வந்தனர்.


அக்டோபர் 30

மாரடோனா அவர்களின் பிறந்தநாள்

1960 அக்டோபர் 30 ஆம் தேதி அர்ஜென்டினாவின் Lanús பகுதியில் பிறந்தவர் மாரடோனா. அவரது குடும்பம் எளிய பின்னணியை கொண்டது. அவருக்கு நான்கு தங்கைகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். மாரடோனா மூன்று வயது சிறுவனாக இருந்த போது கால்பந்து ஒன்று அன்பளிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் கால்பந்தாட்டத்தின் மீதான காதலை பின்னாளில் வளர்த்துள்ளது. வீட்டில் வறுமை வாட்டிய போதும் கால்பந்தை விடாமல் விரட்டியுள்ளார் மரடோனா. 15 வயது 355 நாளில் தொழில்முறை கால்பந்தாட்ட விளையாட்டில் முதல்முறையாக விளையாடி உள்ளார் மாரடோனா. அதற்கடுத்த சில மாதங்களில் அர்ஜென்டினா அணிக்காக விளையாட ஆரம்பித்தார் மாரடோனா. அதன்பிறகு நடந்த அனைத்தும் வரலாறு. அர்ஜென்டினா அணிக்காக 91 ஆட்டங்களில் விளையாடிய மாரடோனா 34 கோல்களை அடித்துள்ளார். நூற்றாண்டின் சிறந்த கோல் என போற்றப்படும் கோலை இங்கிலாந்துக்கு எதிராக அடித்திருந்தார் மாரடோனா. அதே ஆட்டத்தில் தான் சர்ச்சையான HAND OF GOD என்ற கோலும் அடிக்கப்பட்டது.


நீதிக்கதை

அச்சம்

அக்பரிடம் ஒரு அறிவாளி, "எனது வேலைக்காரன் ஒருவன் பெரும்தீனிக்காரன். அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுங்கள். ஆனால்  அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. மாத இறுதியில் அவனுடைய உடலில் ஒரு கிலோ எடை கூட ஏறக்கூடாது" என்று சவால் விட்டார்.

அக்பரின் சார்பாக பீர்பால் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார். அதேபோல் அந்த வேலையாளுக்கு  ஒரு மாதம் சத்தான உணவுகள் வழங்கப்பட்டது. மாத இறுதியில் அவருடைய எடையை பார்த்தபோது, அவருடைய எடை கூடவே இல்லை. அக்பருக்கு ஆச்சரியம் என்ன நடந்தது என்று விசாரித்தார்.

பீர்பால், "அரசரே அவருக்கு மூன்று வேளையும் சத்தான உணவுகள்  கொடுக்கப்பட்டது. ஆனால் அவருடைய இரவு படுக்கை மட்டும் சிங்கத்தின்  குகையின் அருகே  அமைக்கப்பட்டது.

அதனுடைய கதவின் பூட்டு சரியாக இல்லை என்றும் கூறினேன். அச்சத்தின் காரணமாகவே அவருடைய உடலில் ஊட்டச்சத்து ஒட்டவில்லை.

நீதி: அச்சமின்மையே ஆரோக்கியம்.


இன்றைய செய்திகள்

30.10.2024

* தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்க 19 கட்டுப்பாடுகளை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுரை வழங்கியுள்ளார்.

* தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் உறுதி.

* நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும். இதன் அடிப்படையில் வரும் 2028-ம் ஆண்டில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

* புரோ கபடி லீக்; பெங்கால் வாரியர்ஸ் - புனேரி பால்டன் ஆட்டம் 'டிரா'.

* கால்பந்து விளையாட்டின் உயரிய விருதான பலோன் டி'ஆர் 2024 விருதை வென்றார் மான்செஸ்டர் சிட்டி மிட் பீல்டர் ரோட்ரி.


Today's Headlines

* Chennai Police Commissioner Arun has issued 19 restrictions on bursting crackers on the occasion of Diwali.

* No chance of heavy rain in Tamil Nadu till November 1: Meteorological Department confirms.

* A nationwide census will be launched next year.  Based on this, the constituencies will be redefined in the coming year 2028, the central government sources said.

* Pro Kabaddi League;  Bengal Warriors - Puneri Paltan Match 'Draw'.

* Manchester City midfielder Rodry has won football's highest award, the Ballon d'Or 2024.


Prepared by

Covai women ICT_போதிமரம்


District Level Kalai Thiruvizha Competitions - Guidelines - SPD Proceedings Letter, Dated : 28-10-2024

 

1-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம், நாள் : 28-10-2024



Conduct of District Level Kalai Thiruvizha Competitions for Class 1-12 Students - Issue of Guidelines - Proceedings Letter from State Project Director, dated : 28-10-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



*அரசுப் பள்ளிகளில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை நவம்பர் 11 முதல் 20-ம் தேதிக்குள் நடத்த வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.*



இதுகுறித்து *SPD -  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி,* அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றிக்கை விவரம்: 



*“தமிழகத்தில் 2024-25-ம் கல்வியாண்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு*  பள்ளி அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. *வட்டார அளவிலான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.* இதில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை EMIS தளத்தில் *வரும் நவம்பர் 8-ம் தேதிக்குள்* பதிவு செய்ய வேண்டும்.



வட்டார அளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற வெற்றியாளர்களை கொண்டு *நவம்பர் 11 முதல் 20-ம் தேதி வரை  மாவட்ட அளவிலான போட்டிகளை* நடத்த வேண்டும். இதில், முதல் 3 வெற்றியாளர்களின் விவரங்களை EMIS தளத்தில் 21-11-2024  தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறும் வெற்றியாளர்கள் மட்டுமே மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க வேண்டும்.



மாவட்ட அளவிலான போட்டிகளை அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு தனியாக நடத்திட வேண்டும். *மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்லும்போது ஒரு ஆண் ஆசிரியர், ஒரு பெண் ஆசிரியர் உடன் செல்ல வேண்டும்.* பள்ளி தலைமையாசிரியர்கள் நடுவர்களாக இருந்தால், அந்த பள்ளியின் மாணவர்கள் பங்கேற்கும் போட்டியில் அவர்கள் நடுவர்களாக நியமிப்பதை தவிர்க்க வேண்டும். *வட்டார அளவிலான போட்டிக்கு ரூ.25 ஆயிரமும், மாவட்ட அளவிலான போட்டிக்கு ரூ.1 லட்சமும் நிதி வழங்கப்படும்.* இதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்றி, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடத்திட வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.


WhatsApp குழுக்களில் வரும் App install link குறித்த விழிப்புணர்வு தகவல்

 


WhatsApp குழுக்களில் வரும் App install link குறித்த விழிப்புணர்வு தகவல்


விழிப்புணர்வு தகவல் - Awareness Information 


அன்பார்ந்த ஆசிரிய சகோதர சகோதரிகளே,


தாங்கள் இருக்கும் WhatsApp குழுக்களில் இதுபோன்று State Bank of India உள்ளிட்ட பிற வங்கிகளின் பெயர்களில் வரும் App install link ஐ தொட வேண்டாம். இது ஒரு HACKING App. இதனை தொட்டவுடன் நீங்கள் உள்ள அனைத்து Whatsapp குழுக்களுக்கும் தானாக சென்றுவிடும். அது அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இது போன்றவை மூலம் தங்கள் அலைபேசிகளில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்புண்டு.


தங்கள் அலைபேசியில் உள்ள Google Play Storeல் உள்ள செயலிகளை (Apps) மட்டும் Download செய்து பயன்படுத்துவது பாதுகாப்பானது.


Tamil Nadu government announced a half-day holiday for schools and colleges tomorrow (October 30) on the occasion of Diwali

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்டோபர் 30) பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு


தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (30-10-2024) முற்பகல் மட்டும் செயல்படும் - பிற்பகல் அரை நாள் விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...


The Tamil Nadu government has announced a half-day holiday for schools and colleges tomorrow (October 30) on the occasion of Diwali.








G.O. Released in Tamil Nadu Government's "Foot Protection Scheme" to avoid diabetic foot complications



 நீரிழிவு நோய் பாத பாதிப்புகளை தவிர்க்க தமிழ்நாடு அரசு “பாதம் பாதுகாப்போம் திட்டத்தின்” கீழ் பாத மருத்துவ மையங்கள் அமைக்க அரசாணை வெளியிடுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்: 1804, நாள் : 28-10-2024...




G.O. Released to set up Podiatry Centers under the Tamil Nadu Government's "Foot Protection Scheme" to avoid diabetic foot complications - Tamil Nadu Government Press Release No: 1804, Date : 28-10-2024...





G.O. (Ms) No. 233, Dated: 28-10-2024 - Allocating Rs.745/- Crore to improve infrastructure facilities in 440 Government High / Higher Secondary Schools

 

 நபார்டு வங்கி நிதியுதவியுடன் 2024-2025ஆம் ஆண்டில் 440 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் சுற்றுச்சுவர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.745/-  கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை (நிலை) எண் 233, நாள் : 28-10-2024 வெளியீடு


Government Ordinance G.O. (Ms) No. 233, Dated: 28-10-2024 issued by allocating Rs.745/- Crore to improve infrastructure facilities including classrooms, laboratories and perimeter walls in 440 Government High / Higher Secondary Schools with financial support from NABARD Bank.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை பயன்படுத்த ₹745 கோடி ஒதுக்கீடு.


நபார்டு வங்கி ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் நிதி ஒதுக்கி கல்வித் துறை அரசாணை.


பள்ளிகளில் வகுப்பறைகள், கழிப்பறை, அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும்.


திட்டங்களுக்கு 85% நிதியை நபார்டு வங்கியும், 15% நிதியை மாநில அரசும் பங்களிப்பாக வழங்கும்.


440 பள்ளிகளில் 3,032 வகுப்பறைகள் ₹714 கோடி செலவில் கட்டப்பட உள்ளன.


BT to PG Promotion - Seeking Eligible Teachers - DSE Proceedings

 

01.01.2024 நிலவரப்படி BT to PG பதவி உயர்வு வழங்க தகுதியானோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் 



  BT to PG Promotion - Seeking Eligible Teachers - DSE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Teacher arrested for beating student - Case registered in 3 sections

 மாணவியை அடித்த உடற்கல்வி ஆசிரியர் கைது - 3 பிரிவுகளில் வழக்கு பதிவு


Physical Education Teacher arrested for beating student - Case registered in 3 sections


ஓசூரில் பள்ளி மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 23-ம் தேதி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்றபோது ஆசிரியையின் கைக்கடிகாரத்தை திருடியதாக குற்றம்சாட்டி நடுரோட்டில் மாணவி மீது உடற்கல்வி ஆசிரியர் சரமாரி தாக்குதல் நடத்தினார்.


மாணவியை கண்மூடித்தனமாக தாக்கியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள், அங்கு பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ வெளியான நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.



இதையடுத்து அரசு உதவிபெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் தியாகராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது ஆசிரியர் தியாகராஜன் மீது பெண் வன்கொடுமைச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-10-2024



 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-10-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

"பால்: பொருட்பால்

அதிகாரம் : நட்பு

குறள் எண்: 783

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்  பண்புடை யாளர் தொடர்பு.

பொருள் : நூலின் நற்பொருள் படிக்கப் படிக்க மேன்மேலும் இன்பம் தருவதைப் போல, நற்பண்புடையவரின் நட்பு ஒருவருக்கு பழகப் பழக இன்பம் தரும்."


பழமொழி :
ஆயிரம் கல் தொலைவு பயணமும் ஒரே ஒரு எட்டில் தான் துவங்குகிறது .

A journey of a thousand miles begins with a single step.


இரண்டொழுக்க பண்புகள் : 

*திடீரென  மழை அதிகமாக பெய்யும் நேரத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

*மழை பெய்யும் நேரத்தில் மரங்களின் அடியிலோ, மின்கம்பங்களின் அருகிலோ நிற்க மாட்டேன்.


பொன்மொழி :

வாய்மைக்கு மிக நெருக்கமான நண்பன் அச்சமின்மையே. -- ஜவஹர்லால் நேரு


பொது அறிவு :

1. அமெரிக்கர்கள் பேரார்வத்துடன் ஈடுபட்டதுறை எது?

விடை : பங்கு வணிகச்சந்தை

2. மூலப்பொருட்களின் தேவையை அதிகப் படியாக உருவாக்கியது______

விடை: தொழிற்புரட்சி


English words & meanings :

Hammer.      - சுத்தி          

 Handsaw -      ஈர்வாள்/ ரம்பம்


வேளாண்மையும் வாழ்வும் :

பொது மக்களிடையே இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வும், அக்கறையும் அதிகரிக்கவே, தொடக்கத்தில் வழங்குதல்களின் அடிப்படையில் தொடங்கிய இந்த இயக்கம், தேவையின் அடிப்படையிலாக மாறியது.


அக்டோபர் 29

உலக பக்கவாத நாள் (World Stroke Day) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 29 ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது. பக்கவாதத்தின் தீவிர தன்மையையும் அதிக விகிதங்களையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதும் அந்த நிலையின் தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் உயிர் பிழைத்தவர்களுக்கு சிறந்த கவனிப்பு மற்றும் ஆதரவை உறுதி செய்வதும் உலக பக்கவாத நாள் அனுசரிக்கப்படுவதன் நோக்கங்களாகும். மனித உடலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளில் முக்கியமானது, ‘பக்கவாதம்.’ ஒரு மனிதனை செயல்பட விடாமல் ஓரிடத்தில் முடக்கிப்போடும் அபாயகரமான நோயில் இதுவும் ஒன்று.மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக, மூளை செயல் இழப்பதால் இந்த பக்கவாத நோய் ஏற்படுகிறது. வலது, இடது என்று இரண்டு பாகங்களாக பிரிந்திருப்பது மூளை. வலதுபக்க மூளை இடது பக்க உடலையும், இடதுபக்க மூளை வலது பக்க உடலையும் கட்டுப்படுத்துகின்றன. இதில் ஒரு பக்கம் செயல்படாமல் போனாலும் மற்றவை செயல்படாது.


நீதிக்கதை

அன்பு எதையும் சுமக்கும்

துறவி ஒருவர்  தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மலை மீது ஏறிக் கொண்டிருந்தார்.அது செங்குத்தான மலை. மலையின் மேலே ஏற ஏற சுமை சற்று அதிகமானதாக தோன்றியதுடன் அவருக்கு  மூச்சு வாங்கியது.

சற்று தூரம் முன்னால் சென்றபோது மலைவாழ் சிறுமி ஒருத்தி தனது மூன்று வயதுள்ள தம்பியை முதுகில் சுமந்து கொண்டு உற்சாகமாக பாடல் பாடிக்கொண்டு 

மிக சாதாரணமாக மலை உச்சியை நோக்கி ஏறுவதை பார்த்தார்.துறவிக்கோ மிகவும் ஆச்சரியம். அவர் சிறுமியை பார்த்து, "என்னம்மா இவ்வளவு சிறிய பையை தூக்கிக்கொண்டு மலையை ஏற என்னால் முடியவில்லை. உன்னால் எப்படி இவ்வளவு பெரிய பையனை தூக்கிக் கொண்டு ஏற முடிகிறது?என்றார்.

அதற்கு  அந்த சிறுமி பதில் சொன்னாள்,"ஐயா நீங்கள் தூக்கிக் கொண்டிருப்பது ஒரு சுமையை. நான்  தூக்கிக் கொண்டிருப்பது எனது தம்பியை என்றாள். துறவிக்கு புரிந்தது அன்பு எதையும் சுமக்கும் என்று.


இன்றைய செய்திகள்

29.10.2024

* தீபாவளி விளையாட்டு போட்டிகளில் யாரையும் புறக்கணிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.

* குருப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு: காலியிடங்கள் 9,491 ஆக உயர்வு.

* தீபாவளி வாரம் தொடங்கிய நிலையில் டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசம்: திணறும் மக்கள்.

* தென்கொரியாவில் தனிமை மரணங்கள்' அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க அந்த நாட்டு அரசு ரூ.2,750 கோடியில் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.

* ஜப்பான் ஓபன் டென்னிஸ்; சீன வீராங்கனை சாம்பியன்.

* புரோ கபடி லீக்; குஜராத்தை வீழ்த்தியது உ.பி. யோத்தாஸ்.


Today's Headlines

* No one should be ignored in Diwali sports: HC orders.

* Group-IV Exam Results Released: Vacancies increased to 9,491.

* Air quality in Delhi continues to deteriorate as Diwali week begins: People suffocate.

* 'Loneliness deaths' are on the rise in South Korea  To prevent this, the government of that country has announced a special scheme of Rs 2,750 crore.

* Japan Open Tennis;  Chinese female beat  championship.

* Pro Kabaddi League;  UP beat Gujarat  Yodas.


Prepared by

Covai women ICT_போதிமரம்


Ennum Ezhuthum Training assesment (Quiz) link

 

எண்ணும் எழுத்தும் பயிற்சி மதிப்பீடு (வினாடி வினா) வலைதள முகவரி இணைப்பு


 Ennum Ezhuthum Training assesment (Quiz) link


https://exams.tnschools.gov.in/login



பாண்டிச்சேரி - தீபாவளிக்கு முந்தைய நாள் அக்டோபர் 30ஆம் தேதி விடுமுறை என அறிவிப்பு



 பாண்டிச்சேரி - தீபாவளிக்கு முந்தைய நாள் அக்டோபர் 30ஆம் தேதி விடுமுறை என அறிவிப்பு...


*தீபாவளி முன்னிட்டு தமிழ்நாடு அரசு ஏற்கனவே நவம்பர் ஒன்றாம் தேதி அதாவது தீபாவளிக்கு மறுதினம் விடுமுறை என அறிவித்துள்ளது. தற்போது தீபாவளி முன்னிட்டு அக்டோபர் 30ஆம் தேதி விடுமுறை என்று பாண்டிச்சேரி அரசு அறிவித்துள்ளது.


திருவனந்தபுரம் வாமனபுரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய கேரள முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள்



Kerala Chief Minister's security  vehicles collided one after the other at Thiruvananthapuram's Vamanapuram


 திடீரென சாலையை கடந்த பெண்ணால் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய கேரள முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள்


திருவனந்தபுரம் வாமனபுரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய கேரள முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் - காயங்களின்றி பயணத்தை தொடர்ந்தார் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள்




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வாமனபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது அணிவகுப்பு பாதுகாப்புடன் காரில் சென்று கொண்டிருந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்ற கார் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் சாலையில் ஒன்றுடன் மோதி திடீரென விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருவனந்தபுரம் அருகே உள்ள வாமனபுரம் என்ற பகுதியில் சாலையில் பெண் ஒருவர் தமது ஸ்கூட்டர் ஒன்றில் சென்று கொண்டிருந்தார். சாலையில் ஒருபுறம் நடுவழியில் தமது வாகனத்தை நிறுத்திய அப்பெண் வலதுபுறம் திரும்பினார்.


அதே நேரத்தில், முதல்வர் பினராயி விஜயன் கார் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் கோட்டயத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. பரபரப்பான சாலையில் பெண்ணின் வாகனம் நின்று திரும்புவதை அறியாமல் முதல்வரின் பாதுகாப்பு வாகனம் திடீரென பிரேக் போட்டு நின்றது.


இதையடுத்து, முதல்வர் இருந்த வாகனம் உள்ளிட்ட 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் முதல்வர் பினராய் விஜயனின் கார் சிறிதளவு சேதம் அடைந்தது. விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் திடீர் பரபரப்பு நிலவியது. முதல்வர் பினராயி விஜயன் பயணித்த கார் சிறிது சேதம் அடைந்தது. அவருக்கும், உடன்வந்த பாதுகாவலர்கள் உள்பட யாருக்கும் நல்வாய்ப்பாக எந்த காயமும் ஏற்படவில்லை.


முதல்வர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றின்மீது ஒன்று மோதி விபத்தில் சிக்கிய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




பயனுள்ள இணையதள முகவரிகள்

 


பயனுள்ள இணையதள முகவரிகள்


Useful Website Addresses


நமக்கு தேவையான பயனுள்ள இணையதள முகவரிகள்


01. இந்திய தேர்தல் ஆணையம் – இணையதள முகவரி

http://www.elections.tn.gov.in/eroll


02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி

http://www.rtiindia.org/forum/content/


03. இந்திய அரசின் இணையதள முகவரி

http://india.gov.in/


04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி

http://www.tn.gov.in/


05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி

http://supremecourtofindia.nic.in/


06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி

http://www.tnpolice.gov.in/


07. உயர்நீதிமன்ற இணையதள முகவரி

http://www.hcmadras.tn.nic.in/


08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி

http://www.indianrailways.gov.in/indianrailways/indexhome.jsp


09. இந்திய தூதரகம் – இணையதள முகவரி

http://www.indianembassy.org/


10. தமிழ்நாடு அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி

http://www.tnreginet.net/


11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி

http://www.mca.gov.in/


12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி

http://www.chennaicorporation.gov.in/


13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி

http://tnvelaivaaippu.gov.in/EmploymentExchange/login/loginFrame.jsp


14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி

http://www.indiapost.gov.in/nsdefault.html


15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி

http://www.incredibleindia.org/index.html


16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி

http://www.tamilnadutourism.org/


17 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி

http://www.tneb.in/


Science Conclave - Paper Submission - Guidelines

 


அறிவியல் மாநாடு - ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் - வழிகாட்டுதல்கள் - வானவில் மன்றம்


Scientific Conference - Paper Submission - Guidelines




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


Science Dissertation Writing Method

 


அறிவியல் ஆய்வுக் கட்டுரை எழுதும் முறை:


Scientific Dissertation Writing Method


1. தலைப்பு: ஆய்வின் நோக்கத்தை தெளிவாக விளக்கும் தலைப்பு.


2. முன்னுரை: ஆய்வின் பின்னணி, நோக்கம், முடிவுகள்.


3. பொருளாதார வரலாறு: ஆய்வுக்கு தேவையான பொருளாதாரம்.


4. கோட்பாட்டுப் பின்னணி: ஆய்வுக்கு அடிப்படையாக உள்ள கோட்பாடுகள்.


5. ஆய்வு நுட்பங்கள்: ஆய்வு செய்யப்பட்ட முறை.


6. பெற்ற முடிவுகள்: ஆய்வில் பெற்ற முடிவுகள்



Vaanavil Mandram - School Level Competitions - Guidelines for Registration on EMIS Site

 

 வானவில் மன்றம் - பள்ளி அளவிலான போட்டிகள் - EMIS தளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்கள்


Vaanavil Mandram - School Level Competitions - Guidelines for Registration on EMIS Site




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-10-2024

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-10-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

"பால்:அறத்துப்பால்

அதிகாரம் : நடுவுநிலைமை

குறள் எண்: 114

தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்  படும் .

பொருள் : ஒருவர் நேர்மை உடையவரா, இல்லாதவரா என்பது அவரவர் நடத்தையால் தெரியப்படும். நேர்மையானவர்களுக்கு பண்புடைய  மக்கள் பிறப்பதும்,நேர்மை தவறுவோர்க்கு நல்ல மக்கள் அமையாமல் போவது உலகியல் மரபு."


பழமொழி :
He that can stay obtains.

பொறுத்தார் பூமி ஆள்வார்.


இரண்டொழுக்க பண்புகள் : 

*திடீரென  மழை அதிகமாக பெய்யும் நேரத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

*மழை பெய்யும் நேரத்தில் மரங்களின் அடியிலோ, மின்கம்பங்களின் அருகிலோ நிற்க மாட்டேன்.


பொன்மொழி :

கடந்து போன நிமிடத்தை விலைக்கு வாங்கி அனுபவிக்க முடிகிற அளவிற்கு இந்த உலகில் யாரும் பணக்காரர்கள் கிடையாது. - ஆஸ்கர் வைல்ட்


பொது அறிவு :

1. தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு எது?

விடை: குதிரை

2.மாநிலத்தின் கீழுள்ள நீதிமன்றங்களை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றவை எது?

விடை: உயர்நீதிமன்றம்


English words & meanings :

Fence- வேலி                                

Fertilizer. -  உரம்


வேளாண்மையும் வாழ்வும் :

சர் ஆல்பர்ட் ஹோவர்ட் என்பவர் தாம் கரிம வேளாண்மையின் தந்தையாகக் கருதப்படுகிறார்.


அக்டோபர் 28

வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) (English: William Henry Gates or Bill Gates) (பி. அக்டோபர் 28, 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.



நீதிக்கதை

பொம்மை

ஆறு வயது சிறுவன் ஒருவன் தனது நான்கு வயது தங்கையை அழைத்துக் கொண்டு  கடைத்தெரு வழியாக சென்றான்.

ஒரு கடையிலிருந்து பொம்மையை பார்த்து, தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை உனக்கு வேண்டும்" என்று கேட்டான்.

அவள் விரும்பிய பொம்மையை வாங்கி கையில் கொடுத்துவிட்டு பெரிய மனித தோரணையுடன் கடைக்காரரைப் பார்த்து, "அந்த பொம்மை என்ன விலை? என்றான்.

அதற்கு அந்த கடையின் முதலாளி சிரித்துக் கொண்டே,"உன்னிடம் எவ்வளவு பணம் உள்ளது? என்று கேட்டார்.

அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேகரித்து வைத்திருந்த சிற்பிகளை எடுத்து கடைக்காரரிடம் கொடுத்தான். இது போதுமா? என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கவலையான முகத்தை பார்த்துக் கொண்டே," எனக்கு நான்கு சிப்பிகள் போதும் மீதியை நீயே எடுத்துக்கொள்" என்றார்.

சிறுவன் மகிழ்ச்சியோடு மீதி இருந்த சிற்பிகளையும் தன் தங்கையுடன் அந்த

பொம்மையையும் எடுத்துக் கொண்டு சென்றான்.

இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அந்தக் கடையின் வேலையாள் தனது முதலாளியிடம், " ஐயா ஒன்றுக்கு உதவாத சிப்பிகளை எடுத்துக்கொண்டு விலையுயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே ஐயா" என்று கேட்டார்.

அதற்கு  முதலாளி, "அந்த சிறுவனுக்கு  பணம்  கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும்  என்பது புரியாத வயது  அவனைப் பொறுத்தவரை அவனிடம் உள்ள சிப்பிகளே உயர்ந்தவை. நாம் பணம் கேட்டால் அவனுடைய மனதில் பணம் தான் உயர்ந்தது என்ற எண்ணம் வந்துவிடும்.

அதனை நான் தடுத்து விட்டேன். மேலும், தனது தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கித் தர இயலும் என்ற தன்னம்பிக்கையும் அவனது மனதில் விதைத்து விட்டேன்"என்றார்.

மேலும்,"என்றாவது ஒருநாள் அவன் பெரியவனாகி இதை நினைத்துப் பார்க்கும் பொழுது இந்த உலகம் நல்லவர்களால் ஆனது என்ற எண்ணம் அவன் மனதில் எழும் ஆகையால் அவனும் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வான்" என்றும் கூறினார்.

நீதி: இந்த உலகம் அன்பாலும், மனிதத் தன்மையாலும் கட்டமைக்கப்பட வேண்டும்.


இன்றைய செய்திகள்

28.10.2024

* அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 7,979 பணியிடங்களில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிச.31-ம் தேதி வரை ஊதியம் வழங்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

* காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து  33 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.

* பிரபல இசைக் கச்சேரிகளின் டிக்கெட் விற்பனையில் முறைகேடு: 5 மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை.

* சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா.

* லா லிகா கால்பந்து: இன்றைய ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி பார்சிலோனா அபார வெற்றி.

* ஜப்பான் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின்.


Today's Headlines

* The school education department has given permission to pay salaries to the graduate teachers working in 7,979 posts created temporarily in government schools till 31st December.

* Due to heavy rains in the Cauvery catchment areas, the flow of water to Mettur dam has increased to 33 thousand cubic feet.

* Malpractice in ticket sales of popular music concerts: Enforcement probes in 5 states

* America sent back Indians who stayed illegally.

* La Liga Football: Barcelona beat Real Madrid in today's match.

* Japan Open Tennis: American player Sophia Kenin advanced to finals.

Prepared by

Covai women ICT_போதிமரம்


பயிற்சி அளிக்க ஆசிரியர்களை பயன்படுத்த மாட்டோம் என்ற அமைச்சரின் உறுதிமொழி என்ன ஆயிற்று? - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி


 எண்ணும் எழுத்தும் நேரடி பயிற்சியை கைவிடுக - பயிற்சிக்கு ஆசிரியர்களை பயன்படுத்த மாட்டோம் என்ற அமைச்சரின் உறுதிமொழி என்ன ஆயிற்று? - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி


*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*


நாமக்கல்

24-10-2024



தொடக்கக்கல்வித்துறையில் நடைபெறும் நிகழ்வுகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் முதலமைச்சர் அவர்களும் உடனடி கவனம் செலுத்தி ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் மட்டும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க *தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*



எண்ணும் எழுத்தும் நேரடி பயிற்சியை கைவிடுக !



பயிற்சிக்கு ஆசிரியர்களை பயன்படுத்த மாட்டோம் என்ற அமைச்சரின் உறுதி மொழி என்ன ஆயிற்று ?



ஒரே நேரத்தில் ஆசிரியர்களுக்கு 


கலைத் திருவிழா 

எண்ணும் எழுத்தும்

இணையதளப் பயிற்சி

எண்ணும் எழுத்தும் நேரடி பயிற்சி

வாசிப்பு இயக்கம் 

இணையதள பயிற்சி

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்


ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலில், மன அழுத்தத்தில் பணியாற்ற வைப்பது ஏன்?


அதிகாரிகள் சிந்திப்பார்களா? 


அமைச்சர் தன் கவனத்தில் கொண்டு குறைகளை நீக்குவது எப்போது?


கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை எண்ணும் எழுத்தும் எனும் திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது


இத்திட்டத்திற்கு ஒவ்வொரு பருவத்திற்கும், பருவம் ஆரம்பிப்பதற்கு முன்பாக இரண்டு அல்லது மூன்று நாட்கள் நேரடி பயிற்சி அளிக்கப்பட்டு வந்தன.


இந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற டிட்டோஜாக் பேச்சுவார்த்தையின் போது டிடோஜாக் அமைப்பின் கோரிக்கையின் ஒன்றான பயிற்சிக்கு ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.


இனிவரும் காலங்களில் பயிற்சிக்கு ஆசிரியர்கள் பயன்படுத்த மாட்டோம் என்றும் விருப்பமுள்ள ஒரு சில ஆசிரியர்களை மட்டும் பயன்படுத்துவோம் என்றும் உறுதியளித்தார்.


மேலும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களும், ஆசிரியர்கள் இனி பயிற்சிக்கு பயன்படுத்தப்பட மாட்டார்கள் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் போதுமான அளவுக்கு இருக்கிறார்கள். அவர்கள் பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படுவார்கள்.


போதுமான பயிற்சியாளர்கள் இல்லாதநிலை ஏற்படும் போது மட்டும் விருப்பமுள்ள ஆசிரியர்களை பயன்படுத்துவோம் என்று உறுதியளித்தனர்.


அதற்கு முற்றும் மாறாகவும் இனி இணைய வழியில் மட்டுமே பயிற்சிகள் என்ற மாண்புமிகு அமைச்சர் அவர்களின் உறுதிமொழிக்கு மாறாகவும் தற்பொழுது கல்வித்துறை அதிகாரிகள் நேரடி பயிற்சி அளிப்பது மட்டுமல்லாது இணையதள பயிற்சியும் இணைந்து அளிக்கிறார்கள். 


நேரடி பயிற்சிக்கு ஆசிரியர்கள் பயன்படுத்த மாட்டார்கள் என கொடுக்கப்பட்ட உறுதிமொழிக்கு மாறாக முற்றிலும் மாநில, மாவட்ட, வட்டார அளவிலான பயிற்சி கருத்தாளர்களாக ஆசிரியர்களே நியமித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.


அமைச்சர் மற்றும் கல்வித்துறை செயலாளர் அவர்கள் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக இணையதள பயிற்சி கொடுத்த பின்பு நேரடி பயிற்சியை ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொள்கிறது.


பருவ விடுமுறைக்குப்பின் இரண்டாம் பருவம் இம் ( அக்டோபர்) மாதம் ஏழாம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. 


இன்றோடு (24-10-24) ஏறக்குறைய 12 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக நடைபெற்றுள்ள நிலையில் இந்த 12 நாட்களுக்குள் ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு கல்விப் பணி அல்லாத பணியை செய்யக்கூடிய சூழ்நிலையை கல்வித்துறை உருவாக்கி உள்ளது.


இலவச பாடபுத்தகங்கள். இலவச நோட்டுகள், விலையில்லா புத்தகப் பைகள், எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் இவற்றையெல்லாம் தினந்தோறும் பெற்று வந்து ஆசிரியர் மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் வழங்கி வந்தனர்.


அது மட்டுமல்ல 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கடந்த பருவத்தில் நடைபெற்ற பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகளின் தொடர்ச்சியாக இந்த வாரம் குறுவளமைய அளவிலும் வட்டார அளவிலும் பின்பு மாவட்ட அளவிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இந்த 13 நாட்களில் பல நாட்களை கலைத்திருவிழாக்கள் கலந்துகொள்வதிலும், அதற்கான “பயிற்சியிலும் கற்றல் கற்பித்தல் நாட்கள் காவு கொண்டு விட்டன என்பதே நிதர்சனமான உண்மை.


“இதே நாட்களில் தான் எண்ணும் எழுத்தும் இணையதள பயிற்சி 3 நாட்கள், வாசிப்பு இயக்க இணையதள பயிற்சி 2 நாட்கள் என குறிப்பிட்ட கால அளவுக்குள் பயிற்சிகள் முடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டு ஆசிரியர்கள் எந்நேரமும் அவர்களின் செல்போன் மூலம் இணையதளத்தில் இருக்கக்கூடிய நிலைமையை உருவாக்கியுள்ளார்கள்.


தற்பொழுது இந்த வாரத்திலேயே எண்ணும் எழுத்தும் நேரடி பயிற்சி மட்டுமல்லாமல்...


25 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும்...


அதற்கான ஆயத்த பணிகளை, தொடர்ந்து இரண்டு நாட்களாக செய்ய வேண்டும் என்றும் தொடர் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது.


இதனால் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை கடும் மன உளைச்சலிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.


பற்றாக்குறைக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் 25ஆம் தேதி சாரணர் இயக்க பயிற்சியும் அதுமட்டுமல்லாது வேறு எந்த மாவட்டங்களிலும் இல்லாமல் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மட்டும் "தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம்" பாடல் பாடும் போட்டி 1 முதல் 12 ஆம் வகுப்புக்குவரை எந்த வித பிரிவு நிலையும் அல்லாது, 


பள்ளி அளவில் 

குறுவளமைய அளவில், 

வட்டார அளவில் 

மாவட்ட அளவில் 


என இம்மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என அழுத்தம் தரப்பட்டு அனைத்து ஆசிரியர்களும் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள் என்பது உண்மையே.


தொடர்ந்து கற்றல் கற்பித்தல் பணியை மட்டும் செய்ய வேண்டிய ஆசிரியர்கள் இது போன்ற பிற பணிகள் மற்றும் பயிற்சிகளாலும் கற்றல் கற்பித்தல் பணியை செய்ய முடியாமல், அரசுப் பள்ளியை நம்பி வந்த ஏழை எளிய மாணவர்களுக்கும் போதிய கற்றல் கற்பித்தல் பணியில் ஈடுபட இயலாத நிலையினால், பெற்றோர்களிடமும் சமுதாயத்திலும் அரசு ஆசிரியர்கள் பெரும் அவப்பெயரை பெறும்வகையில் அதிகாரிகள் நடந்துகொள்வது வேதனையாகவும் கண்டிக்கத் தக்கதாகவும் அமைந்துள்ளது.


அதுமட்டுமல்லாமல் இது அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துவதுடன், அரசுப்பள்ளிகளின் மீதான நம்பிக்கையை பொதுமக்கள் மத்தியில் தகர்ப்பதாகவும் உள்ளது.


எனவே உடனடியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களும் பள்ளிக் கல்வித்துறையின் மீது உடனடியாக கவனம் செலுத்தி ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் பணிகள் மட்டும் வழங்கிடவும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் நேரடி பயிற்சியை ரத்துசெய்து, டிட்டோஜாக் பேச்சுவார்த்தையின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி பயிற்சிகளுக்கு இனிவரும் காலங்களில் ஆசிரியர்களை பயன்படுத்தாத நிலையினை உறுதிசெய்ய வேண்டுமென தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறோம். 


ஆசிரியர் சங்க மூத்த பொதுச்செயலாளர்,

செ.முத்துசாமி Ex MLC

பொதுசெயலாளர்.





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Government Relief Application Form for Storm Damaged Crops

 புயலில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு நிவாரண விண்ணப்ப படிவம் மாதிரி Government Relief Application Form for Storm Damaged Crops