கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Aadhaar Correction - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள்


ஆதார் திருத்தம் - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள்


Aadhaar Correction - Required Documents, Terms and Limitations


UIDAI (Unique Identification Authority of India) வழிகாட்டி சட்டங்களின் கீழ், ஆதார் விவரங்களைத் திருத்துவது கட்டுப்பாடுகளுடன் நிர்ணயிக்கப்பட்டது. கீழே முக்கியமான விவரங்கள்:


---


*1. பெயர் திருத்தம் (Name Update)*


🔴மொத்தம் 2 முறை மட்டுமே பெயரை மாற்ற அனுமதி.


🔴சிறிய மாற்றங்கள் (எ.கா: spelling திருத்தம்) மற்றும் பெரிய மாற்றங்கள் (marriage after name change) இரண்டும் சேர்த்தே 2 முறை.


🔴ஆதாரமான ஆவணம் தேவை:


🔹Passport,


🔹PAN Card,


🔹SSLC Certificate,


🔹Marriage Certificate,


🔹Gazette Notification போன்றவை.


---


*2. பிறந்த தேதி திருத்தம் (Date of Birth - DoB)*


🔴மொத்தம் 1 முறை மட்டுமே பிறந்த தேதியை மாற்ற முடியும்.


🔴DoB திருத்தம் செய்ய வயது நிரூபிக்கும் ஆவணம் கட்டாயம்:


🔹Birth Certificate,


🔹SSC Marksheet,


🔹Passport,


🔹Government issued document with DoB.


🔴மாற்றம் 3 வருடத்திற்குள் இருக்க வேண்டும் (உதாரணம்: 1985-01-01 ஐ 1982-01-01 ஆக மாற்ற முடியாது).


---


*3. முகவரி திருத்தம் (Address Update)*


🔴எத்தனை முறை வேண்டுமானாலும் முகவரி மாற்றம் செய்யலாம் (வசதி பொருந்தும் வரை).


🔴ஆதாரமாக:


🔹Electricity bill, Water bill, Telephone bill,


🔹Ration Card,


🔹Bank Statement with address,


🔹Rent Agreement (தகுந்த Supporting Document)


🔴Address Validation Letter மூலமாக, Proof இல்லாமல் வேறு நபரின் address பயன்படுத்த முடியும் (பரிந்துரைக்கப்படும் நபரிடமிருந்து ஒப்புதல் அவசியம்).


---


*4. பாலினம் (Gender Update)*


🔴1 முறை மட்டுமே மாற்ற முடியும்.


🔴ஆவணங்கள் பொதுவாக தேவையில்லை, ஆனால் கூடுதல் சரிபார்ப்புகள் இருக்கலாம்.


---


*5. மொபைல் எண் மற்றும் இமெயில் (Mobile Number / Email Update)*


🔴எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்ற முடியும்.


🔴OTP மூலமாக சுய சரிபார்ப்பு தேவை.


🔴நேரடி Aadhaar Seva Kendra அல்லது Online via myAadhaar மூலம் செய்யலாம்.


---


*முக்கியக் குறிப்புகள்:*


🔴திருத்தங்கள் Online (https://myaadhaar.uidai.gov.in) மூலமாகவும், Aadhaar Seva Kendra மூலமாகவும் செய்யலாம்.


🔴முக்கியமான திருத்தங்களுக்கு, Biometric Authentication மற்றும் Face Authentication தேவைப்படும்.


🔴UPD Request Number (URN) மூலம் update நிலையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்.


Kalanjiyam Mobile App New Version Update - Version 1.22.2 - Updated on 13-05-2025

  

 

 KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.22.2


IFHRMS Kalanjiyam Mobile App New App New Update 


Version 1.22.2


Updated on 13-05-2025


*Whats New?


• Pensioner can do the mustering for Others


• Paydrawn reports are updated for Current financial year


• Minor Bug fixes


🧶Update Link👇👇👇


👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾


https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam





About this App

Kalanjiyam is Employee / Pensioner management app, User can apply leaves, Payrolls


Kalanjiyam is Employee / Pensioner management app. User can apply their leaves and HR requests, also their monthly, annual payrolls and many more.


Airtel mobile சேவை பாதிப்பு


ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு


Airtel mobile service affected


மாநிலம் முழுவதும் ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு என வாடிக்கையாளர்கள் புகார்




ஏர்டெல் மொபைல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.


இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.


சென்னையில் ஏர்டெல் மொபைல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக என்று வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


சென்னை, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஏர்டெல் மொபைல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் ஏர்டெல் எங்களை தொடர்பு கொள்ள முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.


ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு தொடர்பாக ஏர்டெல் இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.


இன்று தமிழகம் மட்டுமின்றி பெங்களூரிலும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கடுமையான நெட்வொர்க் கால் சேவையில் சிக்கலை சந்தித்துள்ளனர். இந்த மொபைல் சேவை பாதிப்பு சுமார் 2 மணிநேரமாக நீடித்துள்ளதால், வாடிக்கையாளர்கள் பார்தி ஏர்டெல் சமூக வலைத்தள பக்கங்களில் புகார்களை பதிவு செய்து வருகின்றன. இந்த சிக்கலுக்கான காரணம் குறித்து பார்தி ஏர்டெல் தரப்பில் இன்னும் சரியான அறிவிப்புகள் வெளியாகவில்லை. இந்நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் மே 13, 2025 இன்று அதன் நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் நிகர லாபம் PAT பின்பு 77% உயர்ந்து ரூ.5,223 கோடியாக பதிவு செய்துள்ளது. மேலும் நிறுவனம் அதன் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 16 ரூபாய் டிவிடெண்ட் கொடுப்பதாக அறிவித்துள்ளது.


லாபத்தில் இயங்குவதாக கணக்கு காட்டியுள்ள ஏர்டெல் சேவையின் தற்போதய நெட்வொர்க் முடக்கம் தமிழ்நாட்டில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.


NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

 தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்


Supreme Court dismisses petition seeking direction to state governments to implement National Education Policy in Tamil Nadu


தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துமாறு தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


மாநில அரசு, தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல எனவும் கருத்து.



தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிட கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 


தேசிய கல்விக் கொள்கைப்படி தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மனுவில் கோரியிருந்தார். இந்த நிலையில், தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துமாறு தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது . மாநில அரசு, தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல எனவும் கருத்து தெரிவித்துள்ளது. 



தமிழ்நாடு அமைச்சுப் பணி - உதவியாளராகப் பதவி உயர்வு வழங்குவது - 15.03.2025 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் - தேர்ந்தோர் பெயர்பட்டியல் (Drawl of Panel to the post of Assistant) வெளியீடு

 

 

தமிழ்நாடு அமைச்சுப் பணி - உதவியாளராகப் பதவி உயர்வு வழங்குவது - 15.03.2025 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் - தேர்ந்தோர் பெயர்பட்டியல் (Drawl of Panel to the post of Assistant) வெளியிடுதல் - தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்


Tamil Nadu Ministerial Services - Promotion to the post of Assistant - Eligible candidates as on 15.03.2025 - Publication of the list of selected candidates (Drawl of Panel to the post of Assistant) - Regarding - Tamil Nadu Joint Director of School Education (Staff Group) Proceedings 



தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்,

ந.க.எண். 012828/ அ4/ இ3/ 2025-5, நாள். 02.05.2025

பொருள்: தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / - சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III ஆகியோர்களுக்கு உதவியாளராகப் பதவி உயர்வு / பணிமாறுதல் வழங்குவது - 15.03.2025 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள்- தேர்ந்தோர் பெயர்பட்டியல் (Drawl of Panel to the post of Assistant) வெளியிடுதல் - தொடர்பாக.


பார்வை:

1. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள், ந.க.எண்.012828/94/3/2025-1, நாள். 05.03.2025


2. பள்ளிக்கல்வி துறை இயக்ககம்/ வாரியம் அலுவலக தலைவர்களிடமிருந்தும், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களிடமிருந்தும் பெறப்பட்ட கருத்துருக்கள்.


3. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள், ந.க.எண். 012828/14/3/2025-4, நாள். 22.04.2025


பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர்களுக்கு தமிழ்நாடு அமைச்சுப்பணி சிறப்பு விதிகள், விதி 5(b) ன் படி உதவியாளர் பதவி உயர்வு மற்றும் விதி 9 ன் படி சுருக்கெழுத்துத் தட்டச்சர் நிலை-III லிருந்து உதவியாளர்களாகப் பணி மாறுதல் வழங்குதல் சார்ந்து 15.03.2025 நிலவரப்படி தகுதிவாய்ந்த நபர்கள் விவரங்களை அனைத்து அலுவலர்களிடமிருந்து பார்வை 2ல் காணும் கருத்துருக்கள் மூலம் வரப்பெற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணிநிபந்தனைகள்) சட்டம் 2016-ன் கீழ் பிரிவு 40(2)-ன்படி பார்வை 3ல் காணும் செயல்முறையின்படி முன்னுரிமைப் பட்டியல் (SENIORITY LIST) வெளியிடப்பட்டது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மேல்நிலைத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு விண்ணப்பிக்கும் நேரடி மறுகூட்டல் முறையினை (Retotal I) இரத்து செய்து அரசாணை வெளியீடு

 

G.O. (Ms) No. 103, Dated: 07-05-2025


மேல்நிலைத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு விண்ணப்பிக்கும் நேரடி மறுகூட்டல் முறையினை (Retotal I) இரத்து செய்து அரசாணை (நிலை) எண்: 103, நாள் : 07-05-2025 வெளியீடு



Government Order (Ms) No. 103, Dated: 07-05-2025, Cancelling the Direct Retotaling System (Retotal I) for applying after the results of the Higher Secondary Examination.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பள்ளிக்கல்வி - அரசு பொதுத் தேர்வுகள் - இனிவரும் கல்வியாண்டு முதல் மேல்நிலைத் தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் விண்ணப்பிக்கும் நேரடி மறுகூட்டல் (மறுகூட்டல் I) முறையினை இரத்து செய்தல் மற்றும் மாணவர்கள் விடைத்தாள் நகல் பெற்ற பின்னர் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

EMIS Students TC Generation & Promotion பணிக்கான வழிகாட்டுதல்கள்

 

EMIS Students TC & Promotion பணி தொடங்குவதற்கான வழிகாட்டுதல்கள்


EMIS Students TC Generation & Promotion பணிக்கான வழிகாட்டுதல்கள்


அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,


பின்வரும் வகை பள்ளிகளின் Terminal Class மாற்றுச் சான்றிதழ் (TC) களை முதலில் Generate செய்யவும்


Terminal Classes

1. Primary school - 5 std

2. Middle Schools - 8 Std

3. High Schools - 10 std

4. Higher Secondary schools - 10 and 12 std


* Note: Govt & Aided Schools அனைத்தும், மாணவர்களுக்கான அனைத்து Schemes (EMIS Mark Entry, Cycle Entry, Textbook, uniform, etc) பதிவுகளை உரிய TNSED Schools App / EMIS-இல் மேற்கொண்ட பின் மட்டும்தான் TC Generation & Promotion மேற்கொள்ள வேண்டும்.


For TC reset (Too many attempts exceeded) - Please contact BRTE


Regarding Promotion


* Promotion பணி தொடங்குவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய 3 குறிப்புகள்


* குறிப்பு : 1


Terminal Class க்கு TC எடுத்து முடிக்கப்பட்டதை உறுதி செய்து கொள்ளவும்.

(Terminal Class enrollment should be zero)


* குறிப்பு : 2


Promotion பணி தொடங்குவதற்கு முன் தேவையான Sections Add செய்து கொள்ளவும்.

( School -> Class and Section).



 * குறிப்பு : 3


Promotion பணி தொடங்குவதற்கு முன் Terminal வகுப்பு அல்லாத வேறு பள்ளியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு TC வழங்கியிருக்க வேண்டும். 


* குறிப்பு : Promotion பணி EMIS-ல் முடிந்த பின் எந்த மாணவருக்காவது TC வழங்கினால் "Student is Promoted to the Next class ?" என்ற களத்தில் Discontinued என்று குறிப்பிட வேண்டியிருக்கும்.


Promotion work


* Point to be noted: 01


Reverse order ல் promotion தொடங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


* Primary School -  4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.


* Middle School -  7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.


* High School -  9 to 10 std, 8 to 9 std,7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.


* Higher secondary School - 11 to 12 std,  9 to 10 std, 8 to 9 std,7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.


* Note: Higher secondary school - 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TC generate செய்து common pool அனுப்பி, Promotion பணி முடிந்த பின் common pool இல் இருந்து மாணவர்களின் EMIS number கொண்டு search செய்து 11-ஆம் வகுப்பில் Admit செய்ய வேண்டும்.


* Steps to be Followed after Promotion Process


* Promotion முடித்த பின்


* Step 1


* School -> Class and Section பகுதியில் தேவையற்ற  Class and Section ஏதேனும் மாணவர்கள் இல்லாமல் இருந்தால் Delete செய்ய வேண்டும்.


* Step : 2


* School -> Class and Section பகுதியில் அனைத்து வகுப்பு மற்றும் பிரிவுகளுக்கும் Class Teacher, Medium and Group (Only for Higher secondary schools) சரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.


நேரடியாக நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களுக்கு நியமனத்தின் பொழுது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் - ஆணையரின் கடிதம், நாள் : 07-05-2025


 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககம் - மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர்/ வட்டார வளர்ச்சி அலுவலர்களால் நேரடியாக நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களுக்கு நியமனத்தின் பொழுது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் - ஆணையரின் கடிதம், நாள் : 07-05-2025



Directorate of Rural Development and Panchayats - Procedures to be followed during appointment to Government posts filled directly by the District Collector's Personal Assistant (Development) and Panchayat Union Commissioner / Block Development Officers - Commissioner's letter, Dated: 07-05-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



12.05.2025 முதல் +2 மதிப்பெண் பட்டியல் விநியோகம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - Scan Copyக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளும் வெளியீடு

 

 

12.05.2025 முதல் +2 மதிப்பெண் பட்டியல் விநியோகம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - Scan Copyக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளும் வெளியீடு


Director of Government Examinations orders to distribute +2 marksheet from 12.05.2025 - Procedures for applying for Scan Copy released 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



12-05-2025 முதல் +2 மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்

 


வரும் 12ம் தேதி முதல் +2 மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்



+2 முடித்துள்ள அனைத்து மாணவர்களையும் உயர்கல்வியில் சேர்த்தல் நிகழ்வு - முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்


+2 முடித்துள்ள அனைத்து மாணவர்களையும் உயர்கல்வியில் சேர்த்தல் நிகழ்வு சார்பு - திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்


Admission of all students who have completed +2 to higher education on the event regarding - Proceedings of the Tiruppur District Chief Educational Officer



70 வயது மூதாட்டி 12ஆம் வகுப்பில் தேர்ச்சி

 


70 வயது மூதாட்டி 12ஆம் வகுப்பில் தேர்ச்சி


கோவையைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ராணி, தனது கணவரின் மறைவுக்குப் பிறகு கல்வியில் ஆர்வம் கொண்டு, வீட்டிலிருந்தபடியே 12ஆம் வகுப்பை படித்து 346 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். 


தமிழில் 89, ஆங்கிலத்தில் 50, வரலாற்றில் 52 மதிப்பெண்கள் உள்ளிட்ட பல பாடங்களில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.


இது போன்ற நிகழ்வுகள் கல்விக்கு வயது தடையல்ல என்பதை உறுதிப்படுத்துகின்றன.



+2 Result Analysis 2025


மேல்நிலை இரண்டாம் ஆண்டு + 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல், நாள் : 08-05-2025 பகுப்பாய்வு அறிக்கை


 HSE +2 Result Analysis 2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


+2 Public exam results released




 வெளியானது +2 பொதுத் தேர்வு முடிவுகள்


+2 public exam results released


Website Links :


https://results.digilocker.gov.in


https://tnresults.nic.in



கல்லூரிக் கனவு கையேடு



கல்லூரிக் கனவு கையேடு 



Kalloori Kanavu Guide - College Dream Guide



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


சிவில் பாதுகாப்பு மற்றும் பயிற்சி ஒத்திகை - தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் - செய்தி வெளியீடு

 


சிவில் பாதுகாப்பு மற்றும் பயிற்சி ஒத்திகை - தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் - செய்தி வெளியீடு


Civil Defence Exercise and Rehersal - Tamil Nadu Disaster Management Authority - Press Release




Deployment of surplus teachers - DSE Proceedings


2024-2025ஆம் கல்வி ஆண்டு பணியாளர் நிர்ணயத்தின் படி அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் -  பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 050640/ டி1/ இ4/ 2024, நாள் : 06-05-2025 வெளியீடு


அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை மே மாதத்திற்குள் பணி நிரவல் செய்ய பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு


Deployment of surplus teachers in government aided schools as per the staff fixation for the academic year 2024-2025 - Instructions issued - Proceedings of the Director of School Education Rc. No.: 050640/ D1/ E4/ 2024, Dated: 06-05-2025 Released 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2025-2026 - BEOs Transfer Counselling Procedure, Timetable & Application Form - DEE Proceedings

 

 

2025-2026ஆம் கல்வி ஆண்டு - வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைமுறை, கால அட்டவணை & விண்ணப்பப் படிவம் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 004634/ ஐ1/ 2025, நாள்: 05-05-2025 வெளியீடு


2025-2026 - BEOs Transfer Counselling Procedure, Timetable & Application Form - DEE Proceedings


Academic Year 2025-2026 - General Transfer Counselling Procedure, Timetable & Application Form for Block Education Officers - Proceedings of the Director of Elementary Education R.C. No.: 004634/ I1/ 2025, Dated: 05-05-2025



வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


EMISல் Promotion பணி தொடங்குவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய 3 குறிப்புகள்

 

EMIS Websiteல் Promotion பணி தொடங்குவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய 3 குறிப்புகள்


3 things to keep in mind before starting student's promotion work on EMIS website


* குறிப்பு : 1


Terminal Class க்கு TC எடுத்து முடிக்கப்பட்டதை உறுதி செய்து கொள்ளவும்.

(Terminal Class enrollment should be zero)


* குறிப்பு : 2


Promotion பணி தொடங்குவதற்கு முன் தேவையான Sections Add செய்து கொள்ளவும்.

( *School -> Class and Section*).


 * குறிப்பு : 3


Promotion பணி தொடங்குவதற்கு முன் Terminal வகுப்பு அல்லாத வேறு பள்ளியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு TC வழங்கியிருக்க வேண்டும். 


* குறிப்பு : Promotion பணி EMIS-ல் முடிந்த பின் எந்த மாணவருக்காவது TC வழங்கினால் *"Student is Promoted to the Next class ?"* என்ற களத்தில் *Discontinued* என்று குறிப்பிட வேண்டியிருக்கும்.


* Promotion work


* Point to be noted: 01


Reverse order ல் promotion தொடங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


*Primary School* -  4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.


*Middle School* -  7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.


*High School* -  9 to 10 std, 8 to 9 std,7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.


*Higher secondary School* - 11 to 12 std,  9 to 10 std, 8 to 9 std,7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.


*Note:* Higher secondary school - 10 வகுப்பு மாணவர்களுக்கு TC generate செய்து common pool அனுப்பி, Promotion பணி முடிந்த பின் common pool இல் இருந்து மாணவர்களின் EMIS number கொண்டு search செய்து 11-ஆம் வகுப்பில் Admit செய்ய வேண்டும்.


*Steps to be Followed after Promotion Process*


*Promotion முடித்த பின்* 


* Step 1


*School -> Class and Section* பகுதியில் தேவையற்ற  Class and Section ஏதேனும் மாணவர்கள் இல்லாமல் இருந்தால் *Delete* செய்ய வேண்டும்.


* Step : 2

*School -> Class and Section* பகுதியில் அனைத்து வகுப்பு மற்றும் பிரிவுகளுக்கும் Class Teacher, Medium and Group (Only for Higher secondary schools) சரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.


 நன்றி!!


மே 28ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


 மே 28ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


Local holiday in Karur district on May 28th - District Collector's announcement


கரூர் - உள்ளூர் விடுமுறை


கரூர் மகா மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியை ஒட்டி வரும் 28ம் தேதி, மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!


இதனை ஈடு செய்ய வரும் ஜூன் 14ம் தேதி அரசு வேலைநாளாக அறிவிப்பு



30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் - உணவு பாதுகாப்புத் துறை



30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் - உணவு பாதுகாப்புத் துறை


Drinking water cans should be used only 30 times - Food Safety Department


குடிநீர் கேன்களை 30 முறை மட்டுமே மறுசுழற்சி மூலம் குடிநீர் நிரப்பி பயன்படுத்த வேண்டும்.


கேன்களின் நிறம் மாறினால் மீண்டும் மீண்டும் குடிநீரை நிரப்பி விற்பதை தவிர்க்க வேண்டும்.


தரமின்றி, முறையான அனுமதி இன்றி அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடி நடவடிக்கை - உணவு பாதுகாப்பு துறை.


மே 8இல் +2 தேர்வு முடிவுகள் - அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியீடு

 


மே 8இல் +2 தேர்வு முடிவுகள் - அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியீடு


+2 Exam Results on May 8 - Directorate of Government Examinations Press Release


மே 9க்குப் பதில், மே 8இல் தேர்வு முடிவுகள்


பிளஸ் டூ தேர்வு முடிவுகள் ஒருநாள் முன்னதாக நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.

 

+2 RESULTS


12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே 08ம் தேதி வெளியாகும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!


மே 09ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் முன்கூட்டியே வெளியாகிறது.




மாநிலங்கள் வாரியாக கடற்கரைகளின் நீளம் - புதிய தகவல்



 மாநிலங்கள் வாரியாக கடற்கரைகளின் நீளம் - புதிய தகவல்


Length of beaches by state - new information


கடற்கரை நீளம் - புதிய தகவல்


புதிய, மேம்பட்ட அளவை மூலம் இந்திய கடற்கரையின் நீளம் இதுவரை கருதப்பட்டது போல சுமார் 7500 கி.மீ. அல்ல, மாறாக சுமார் 11100 கி.மீ. என்று அரசு அறிவித்துள்ளது. அதன் விபரங்கள் கீழ்வருமாறு.


புதிய அளவீட்டின்படி நீளம் - 11098.81 கி.மீ.

பழைய தரவுவின்படி நீளம்: 7516.6 கி.மீ.


மாநில வாரியாக கடற்கரை நீளம்:


அந்தமான் & நிக்கோபார் தீவுகள் - 3083.50 கி.மீ.

குஜராத் - 2340.62 கி.மீ.

தமிழ்நாடு - 1068.69 கி.மீ.

ஆந்திரப் பிரதேசம் - 1053.07 கி.மீ.

மகாராஷ்டிரா - 877.97 கி.மீ.

மேற்கு வங்காளம் - 721.02 கி.மீ.

கேரளா - 600.15 கி.மீ.

ஒடிசா - 574.71 கி.மீ.

கர்நாடகா - 343.30 கி.மீ.

கோவா - 193.95 கி.மீ.

லட்சத்தீவுகள் - 144.80 கி.மீ.

டாமன் & டையூ - 54.38 கி.மீ.

பாண்டிச்சேரி - 42.65 கி.மீ.


தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை ( TNEA - B.E., B.Tech / B.Arch ) - 2025-2026 அறிவிப்பு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை ( TNEA - B.E., B.Tech / B.Arch ) - 2025-2026 அறிவிப்பு


Tamil Nadu Engineering Admission (B.E., B.Tech / B.Arch) - 2025-2026 Notification



4,552 பள்ளிகளில் 80,898 மாணவர்களின் திறனடைவு ஆய்வு


4,552 பள்ளிகளில் 80,898 மாணவர்களின்  திறன் ஆய்வு. முதலில் ஆய்வுக்கு அழைத்த பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் விரைவில் பாராட்டு விழா (பத்திரிகைச் செய்தி)


An Achievement survey of 80,898 students in 4,552 schools. The Directorate of Elementary Education will soon felicitate the schools that were first invited for the survey (press release)


100 நாட்களில் 100% வாசித்தல் திட்டம்: 4,552 பள்ளிகளில் 80,898 மாணவர்களின் திறன் ஆய்வு; முதலில் ஆய்வுக்கு அழைத்த பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் விரைவில் பாராட்டு விழா


பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/77 என்னும் திட்டத்தின் கீழ், 234 தொகுதிகளில் இருக்கும் அரசுப்பள்ளிகளுக்குச் சென்று 77 வகையான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.


கிருஷ்ணகிரி மாவட்டம், டி.புதூர் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியை வளர்மதி பேஸ்புக் பக்கத்தில், எங்கள் பள்ளியில் 33 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழ், ஆங்கிலம் சரளமாக வாசிப்பார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஆய்வு பணிக்காக வருகின்றபோது எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களின் கற்றல் வாசிப்புத் திறனை ஆய்வு செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.


இந்த அழைப்பை ஏற்று, பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஸ், அனைத்து மாணவர்களும் சரளமாக வாசிக்கின்றார்கள், எழுதுகின்றார்கள், தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும், மாணவர்களும் பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறினார். அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களே, நீங்களும் அழையுங்கள். அழைப்பை ஏற்று சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் உங்களின் பள்ளிகளுக்கு வருகை புரிவார்கள். மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்வார்கள். நானும் வருவேன். இன்றே பயணத்தைத் தொடங்குவோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இதனத்தொடர்ந்து 100 நாள் சவாலின் அடிப்படையில், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படைத் திறன் மதிப்பீடு செய்யப்படுவதாக, தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.இதுகுறித்து தொடக்கப் பள்ளி இயக்குநர் கூறும்போது, ‘‘தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் மற்றும் கணக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகிய திறன்களில் தயாராக உள்ளதாக 4,552 தொடக்கப் பள்ளிகள் தெரிவித்துள்ளன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அடிப்படைத் திறனை அளவிட வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது’’ என்றார். அதனடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலர்களால் (தொடக்கக் கல்வி) தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட பள்ளிகளில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து வழங்கிய மதிப்பீட்டு வினாத்தாள்களைக் கொண்டு வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம் மாணவர்களின் திறன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.தமிழ்நாட்டில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ள நிலையில் முற்கட்டமாக மொத்தம் 4 ஆயிரத்து 552 பள்ளிகளில் 80 ஆயிரத்து 898 மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் திறன் ஆய்வு நடைபெற்றது. 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழில் உயிர், மெய் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்களை வாசித்தல், ஆங்கிலத்தில் சிறிய எழுத்துகள் மற்றும் பெரிய எழுத்துக்கள் வாசித்தல், சிவிசி (consonant-vowel-consonant in three-letter words) வார்த்தைகள் வாசித்தல், கணிதத்தில் ஒன்று மற்றும் இலக்க எண்களை கண்டறிதல், கூட்டல், கழித்தல் போன்ற கணக்குகளை செய்ய சொல்லுதல் போன்ற அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.அதேபோல் 3 மற்றும் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு 65க்கும் அதிகமான உயிர், மெய் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்களை வாசித்தல், ஆங்கிலத்தில் சிறிய எழுத்துகள் மற்றும் பெரிய எழுத்துக்கள் வாசித்தல், 2 இலக்க எண்களை கண்டறிதல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணக்குகளை செய்ய சொல்லுதல் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வுகளை தொடங்க இருப்பதாகவும், மேலும் முதற்கட்டமாக ஆய்வுக்கு அழைத்த பள்ளிகளுக்கு வருகிற ஜூன் மாதம் மிகப்பெரிய அளவில் நிகழ்ச்சி ஒன்று நடத்தி கவுரவிக்கப்பட இருப்பதாகவும் தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆய்வு செய்யப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை

நிலை 1

வகுப்பு 1 14,647

வகுப்பு 2 14,750

வகுப்பு 3 15,635

மொத்தம் 45,032


நிலை 2

வகுப்பு 4 17,883

வகுப்பு 5 17,983

மொத்தம் 35,866




ஏற்காடு Yercaud சுற்றிப் பார்க்க அரசுப் பேருந்து வசதி

ஏற்காடு - 11 இடங்கள் - சுற்றிப் பார்க்க அரசுப் பேருந்து வசதி


Yercaud - 11 beautiful places - Government bus facility to explore


 ஏற்காட்டிற்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் கவனத்திற்கு! 


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் மண்டலம் மூலமாக சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 04.05.2025 முதல் கோடை காலம் முடியும் வரை தினமும் காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களை கண்டு களித்து மீண்டும் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாலை 7.00 மணிக்கு நிறைவு செய்யும் வகையில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது



கொடைக்கானல் - Kodaikanal எழில்மிகு 12 இடங்கள் - சுற்றிப் பார்க்க அரசுப் பேருந்து வசதி

கொடைக்கானல் - எழில்மிகு 12 இடங்கள் - சுற்றிப் பார்க்க அரசுப் பேருந்து வசதி


Kodaikanal - 12 beautiful places - Government bus facility to explore


கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் கவனத்திற்கு



Student TC & Promotion modules, Annual marks entry - State EMIS Team Message



EMIS - Student TC module, Promotion module and Entry of annual marks - State Team Message 


 Dear Sir / Madam, 


🌾 Student Promotion module will be enabled by Friday (09.05.2025).                   


🌾 TC module is on, schools can generate TC  


🌾 Please ensure entry of annual marks in EMIS before promoting the profiles  ( as per the instructions of DEOs concerned)


Thank you.




EMIS TC GENERATION REGARDING

                                                                                          Hi all,

Good Evening,


TC module is live now!! Please start generating the TC          

                                                                                                                                                                                                                                                                              STATE EMIS TEAM


STUDENTS TC Genaration Process

 

மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் வழங்கும் முன் EMIS வலைதளத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்


STUDENTS TC Genaration Process in EMIS Website 


Tasks to be completed on the EMIS website before issuing students' Transfer Certificates


STUDENTS TC GENARATION REGARDING..


1. TC எடுப்பதற்கு முன்னர் Annual mark entry, EE  mark entry, 7.5% Verification (school & medium) , Career Guidance work மற்றும் EMIS சார்ந்த பிற பணிகள் முடிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். மேற்கண்ட பணிகளை முடிக்காமல் TC GENERATION செய்ய வேண்டாம். 


2. TC எடுப்பதற்கு முன் student profile ல் உள்ள அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும்.


3. *தங்கள் பள்ளியில் மாணவன் படித்த வகுப்புகளுக்குரிய Medium த்தை TC ல் குறிப்பிடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது* . மற்றப்படி சென்ற வருடம் உள்ள அதே வழிமுறைகளைப் பின்பற்றி TC எடுத்துக் கொள்ளலாம்.


4. 2024-25 ஆம் கல்வி ஆண்டில் தங்கள் பள்ளியில் இறுதி வகுப்பு பள்ளியிலும் 


        (Primary - வகுப்பு 5

          Middle  - வகுப்பு 8

          High school -வகுப்பு 10  

          HR sec - 10  & 12 

 *முடித்த மாணவர்களுக்கு TC generation செய்து Common poolக்கு அனுப்பும் போது Terminal Class என்பதனை கட்டாயமாக தேர்வு* செய்ய வேண்டும்.


 Terminal வகுப்பு தவிர இதர வகுப்புகளில் மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்து இருந்தால் requested by parents என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.


5. அனைத்து மாணவர்களுக்கும் online TC மட்டுமே வழங்க வேண்டும். இறுதி வகுப்பு  பயிலும் (Classes - Primary -5, Middle -8 , High -10, Hr sec -12) மாணவர்களை *எக்காரணம் கொண்டும் மற்ற பள்ளிகள் Raise request மூலம் Admission செய்தல் கூடாது.* 


6. ஒரு மாணவருக்கு TC எடுக்கும் பொழுது மூன்று முறை Edit option வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் Edit செய்ய இயலாது எனவே மிகுந்த கவனத்துடன் சரிபார்த்தல் வேண்டும். 


7. TC edit செய்வதற்கு reset தேவைப்பட்டால் தங்கள் பள்ளியை பார்வையிடும் ஆசிரியர் பயிற்றுனர்  மூலம் தகவல் தெரிவிக்கவும்.


மேற்கண்ட பணியை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



"நீட் தேர்வு" பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்


 "நீட் தேர்வு" பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன...?

👇👇👇👇👇👇👇


*நாடு முழுவதும் நாளை (மே 4) இளநிலை மருத்துவப் படிப்பான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நடைபெறுகிறது.*


*பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்:*


*நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஹால்டிக்கெட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.* 


*அதன்படி, தேர்வு மையத்துக்குள் செல்ல காலை 11.40 மணி முதல் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.* 


*தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பின் வருபவர்களுக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி தரப்படாது.*


*இதுதவிர தேர்வுக்கு ஹால்டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட  அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.*


*தேர்வர்கள் தங்கள் கையில் கிளியர் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லலாம்.*


*மேலும், ஹால்டிக்கெட்டில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு முடிந்ததும் அறை கண்காணிப்பாளரிடம் அதை  ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தப்படாது.*


*வழக்கம்போல் தேர்வறையில் செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுச் செல்ல அனுமதியில்லை.*


*முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி அணியக்கூடாது. தலைமுடியில் ஜடை பின்னல் போடக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் உட்பட இதர வழிமுறைகளையும் மாணவ, மாணவிகள் தவறாது பின்பற்ற வேண்டும்.*


*தவறான விடைக்கு நெகட்டிவ் மார்க் இருப்பதால், தேர்வின் போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.*


*இதுகுறித்த கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தேசிய தகுதிகாண் தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.*


*இன்று (04.05.2025) நீட் தேர்வு(மருத்துவ தகுதித்தேர்வு)  எழுத உள்ள அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் மகத்தான வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது, ஓட்டுநர்கள் (ம) நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்



அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது, ஓட்டுநர்கள் (ம) நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள்


Standard operating procedures to be followed by drivers and conductors when transporting differently abled persons in State Transport Corporation buses



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் போது ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள். கடைபிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள் (Standard Operating Procedures) போக்குவரத்துத்துறை, தலைவர் அலுவலகம் வாயிலாக கடித எண் 453/Ch2/ChO/2022, நாள்: 10/01/2022. கடித எண்: 750/Ch5/ChO/2022. நாள்: 05/01/2023 மற்றும் கடித எண்: 453/Ch5/Cho/2023. நாள்: 30/01/2023 மூலம் வழங்கப்பட்டு, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், சில நேரங்களில் இவ்வியக்க நடைமுறைகள் பின்பற்றப்படாமல் புகார்கள் பெறப்படுகின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு. கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள இயக்க நடைமுறைகளை, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தவறாது பின்பற்றுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.



1, மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்திற்காக. பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பொழுது பேருந்தை முறையாக நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு மாற்றுத்திறனாளி பயணி பேருந்து நிறுத்தத்தில் நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும்.


2. ஓட்டுநர் பேருந்து நிற்பதற்கு என அறிதியிடப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்தை நிறுத்த வேண்டும். பேருந்தை நிறுத்தத்திற்கு முன்பாகவோ /தள்ளியோ நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு ஏறி / இறங்க சிரமம் ஏற்படுத்துக்கூடாது.


3. நடத்துனர் வேண்டும் என்றே. பேருந்தில் இடமில்லை என்று கூறி பேருந்தில் ஏறும் மாற்றுத்திறனாளி பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிடக் கூடாது.


4. மாற்றுத்திறனாளிகளுக்கு என பேருந்தில் ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு மேல் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதை அறிவித்து. அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய உதவி செய்ய வேண்டும்.


5. மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்குரிய இருக்கையில் அமர்ந்தவுடன், கனிவுடன் பயணச்சீட்டுக்கள் வழங்கி அவர்கள் இறங்க வேண்டிய இடங்களில் பேருந்தினை நிறுத்தி, இறங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் நடத்துனர்கள் உதவி செய்வதுடன், அவர்கள் இறங்கும் வரை காத்திருந்து அவர்கள் இறங்கி கடந்து சென்ற பின்னர் பேருந்தினை நகர்த்த வேண்டும்.


6. சாதாரண பயணிகள் மாற்றுத்திறனாளிகள் இருக்கையில் அமர்ந்திருந்தால் அவர்களை கனிவுடன் மாற்று இருக்கைகளில் அமரச்செய்து, மாற்றுத்திறனாளிகளை அந்த இருக்கையில் அமரச் செய்ய வேண்டும்


7. பேருந்து நிலையங்களில் பேருந்து புறப்படுவதற்கு முன், மாற்றுத் திறனாளிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இருக்கையில், பேருந்து புறப்படும் வரையில் இதர பயணிகளை அமர வைக்காமல் வைத்திருந்து, ஒரு வேளை சாதாரண பயணிகள் அமர்ந்து இருப்பின், கடைசி நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறினால், சாதாரண பயணிகளை மாற்றுத்திறனாளிகள் அமரும் பொருட்டு அவர்களுக்கான இருக்கையினை தர வேண்டும் என தெரிவித்து அமர வைக்க வேண்டும்.


8. மாற்றுத்திறனாளி பயணிகளிடம் அவர்கள் மனம் புண்படும் வகையிலோ,எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ. ஏௗனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது.


9. பேருந்தில் ஏறும் மாற்றுத் திறனாளி பயணிகளை கனிவுடனும், அன்புடனும் நடத்திட வேண்டும்.


10. மாற்றுத்திறனாளி பயணிகள் ஏறும் பொழுதும், இறங்கும் பொழுதும் கண்காணித்து ஓட்டுனருக்கு சமிக்ஞை (Signal) செய்து பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும்.


11. இந்திய அரசு அறிவித்த மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய தேசிய அடையாள அட்டை (Unique Disability ID Card) and National Disabilty Identity Certificate Cards (NDIC) அசல் அட்டை கொண்டு. 40 சதவீதம் மாற்றுத் திறன் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது துணையாளர் (Escort) ஒருவருடன் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (White board) மட்டும் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். இவர்கள் இருவருக்கும் உரிய கட்டணமில்லா பயணச் சீட்டினை பேருந்து நடத்துனர் வழங்க வேண்டும்.


12. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் புறநகர் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி. 75% பயணக் கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.


13. இயற்கை சீற்றம் உள்ள நாட்கள் மற்றும் இரவு நேரங்களில் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு கட்டண நிறுத்தம் இல்லாத இடங்களிலும், கோரிக்கையின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் மகளிர் கேட்கும் பேருந்து நிறுத்தங்களில் பேருந்தினை நிறுத்தி ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்.


14. ஒவ்வொரு மண்டலத்திலும் மாதந்தோறும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொழுது, சிறப்பு விருந்தினராக மாற்றுத்திறனாளியை அழைத்து மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தெரிவிக்குமாறும், அதற்கேற்ப மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது கனிவுடனும் பொறுமையுடனும் நடத்தப்பட வேண்டும் என்று பயிற்சி அளிக்கும் முகாமில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.


பேருந்தில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது தவறாமல் மேற்குறிப்பிட்டுள்ள நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்ற, தகுந்த சுற்றறிக்கையை அனைத்து பணிமனைகளுக்கும் அனுப்பி, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தி, இது பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்கப்பட வேண்டும் என்று அனைத்துப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.


அரசு ஊழியர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் விவரம் - தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு



அரசு ஊழியர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் விவரம் - தமிழ்நாடு தகவல் ஆணையம்  உத்தரவு


அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை வெளியிட முடியாது - தமிழ்நாடு தகவல் ஆணையம்


பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது.


காளிப்பிரியன் ஊழல் செய்திருந்ததாக கருதினால் உரிய அமைப்புகளிடம் புகார் அளிக்கலாம்.


அரசு ஊழியர்களின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடியாக தெரிவித்துள்ளது.


மேலும், பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது என்றும் தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


கிருஷ்ணகிரியில் நீர்த்தேக்க திட்ட உதவி பொறியாளராக பணியாற்றிய காளிப்பிரியனின் சொத்து, கடன், வருமான வரி விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சீனிவாசன் என்பவர் கோரி இருந்தார்.


மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் ஆர்.ப்ரியக்குமார், விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


காளிப்பிரியன் ஊழல் செய்திருந்ததாக கருதினால் உரிய அமைப்புகளிடம் புகார் அளிக்கலாம் என்றும் மாநில தகவல் ஆணையர் உத்தரவிட்டார்.


NEET (UG) 2025 தொடர்பான வதந்திகள் மற்றும் தவறான தகவல்களுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்குமாறு தேசிய தேர்வு முகமை NTA அறிவுறுத்தல்


 NTA advises caution against rumours and misleading information regarding NEET(UG) 2025


NEET (UG) 2025 தொடர்பான வதந்திகள் மற்றும் தவறான தகவல்களுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்குமாறு தேசிய தேர்வு முகமை NTA அறிவுறுத்தல் 




அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - அமைச்சர்



அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை 


மே முழுவதும் விடுமுறை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - கீதாஜீவன்


போராட்டத்தில் ஈடுபட்டு, குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என எச்சரிக்கை


போராடும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன்


அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை.


மே மாதம் முழுவதும் விடுமுறை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.


கோடையில் இருந்து குழந்தைகளைக் காக்க மே 11 முதல் 25 ஆம் தேதி வரை அங்கன்வாடிக்கும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மே மாதம் முழுவதும் விடுமுறை கோரி அங்கன்வாடி பணியாளர்கள், அந்தந்த மாவட்ட அலுவலகங்கள் முன்பாக  திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில் இதுதொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:


தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், அங்கன்வாடி ஊழியர்களுக்கான கோடை விடுமுறையை மே மாதம் முழுவதும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து எவ்வித முன்னறிவிப்புமின்றி அனைத்து மாவட்ட அலுவலகங்கள் முன்பாக மே 2, 2025 முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


இதனால் ஆங்காங்கே குழந்தைகள் மைய செயல்பாடுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய குழந்தைகளுக்கு மதிய உணவு, முட்டை, சத்துமாவு உள்ளிட்ட ஊட்டச்சத்து வழங்காமல் வேலையை புறக்கணிக்கும் செயல் குழந்தைகள் மைய பயனாளிகளை பாதிக்கக்கூடியதாக உள்ளதென்பது மிகவும் வருந்தத்தக்கது.


மே 2-ம் தேதி எந்தெந்த குழந்தைகள் மையம் மூடப்பட்டுள்ளது, மாவட்ட திட்ட அலுவலகம் முன்பு முன்னறிவிப்புமின்றி போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஊழியர்களின் விவரங்கள் பெறப்பட்டு வருகிறது. அரசு ஏழை, எளிய குழந்தைகளின் நலனுக்காக, அவர்களுக்கு தொடர்ந்து ஊட்டச்சத்து வழங்குவதை உறுதி செய்வதற்காக, முறையற்ற போராட்டங்களில் ஈடுபடும் குழந்தைகள் மையப் பயணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 


அரசாணை (ப) எண்.117, சமூகநலன் (ம) மகளிர் உரிமைத்துறை நாள்: 30.04.2025-ன்படி குழந்தைகள் மையங்களுக்கு (அங்கன்வாடி மையங்கள்) மே மாதத்தில் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் முதல் 25 ஆம் நாள் முடிய 15 நாள்களுக்கு குழந்தைகள் மையங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமான செயலாகும். 


உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ன்படி 300 நாட்களுக்கு குறையாமல் குழந்தைகள் மையப் பயனாளிகளுக்கு உணவு வழங்கப்படவேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. தேசிய விடுமுறை, பண்டிகை நாள்களுக்கான விடுமுறை , உள்ளுர் விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறைகளையும் கணக்கிட்டு, 300 நாள்கள் கண்டிப்பாக மைய செயல்பாடுகளும் அதன் மூலம் முன் பருவ பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதும் உறுதி செய்யப்பட்டு வந்தது.


ஆனால் அங்கன்வாடி பணியாளர்களின் தொடர் கோரிக்கையினை ஏற்ற இவ்வரசு 2022 ஆம் ஆண்டு முதல் மே மாதம் சம்பளத்துடன் கூடிய கோடை விடுமுறை அறிவித்து, கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. 


மேலும், உணவு பாதுகாப்புச் சட்டத்தின் சரத்துகளை உறுதி செய்திடும் பொருட்டு மேற்கண்ட விடுமுறை நாள்களுக்கான சத்து மாவினை முன்கூட்டியே முன் பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மே மாதத்தின் ஆரம்பத்திலேயே வழங்கவும் ஆணை வழங்கியுள்ளது. குழந்தைகள் மைய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துமாவு வீட்டுக்கு எடுத்து சென்று உண்ணும் வகையில் THR - (TAKE HOME RATION) - ஆக வழங்கப்பட்டு வருகிறது.  


பதவி உயர்வு, பணி மாறுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் மற்றும் பணியாளர் நலன் தொடர்பாக பணியாளர் சங்கங்களால் அளிக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் இந்த அரசு நிறைவேற்றி தந்துள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.


ஆகவே, போராட்டத்தில் ஈடுபட்டு, குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினைச் சார்ந்த ஊழியர்கள் அனைவரும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Aadhaar Correction - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள்

ஆதார் திருத்தம் - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள் Aadhaar Correction - Required Documents, Terms and Limitations UIDAI (Uniq...