கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2023-2024ஆம் நிதியாண்டுக்கான CPS Account Slip இன்று (01-07-2024) வெளியீடு...

 

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2023–2024ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்கள் தொகுக்கப்பட்டு 01.07.2024 அன்று காலை 10 மணிக்கு அரசுத் தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது...


Contributory Pension Scheme Accounts Slip for the year 2023-2024 for Tamil Nadu Government employees and teachers working under Contributory Pension Scheme are being compiled and published by the Government Data Center on 01.07.2024 at 10 am...


வலைதள முகவரி:

http://cps.tn.gov.in/public/index.php



>>> 2023-2024ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தரவிறக்கம் செய்யும் வழிமுறை...




01-03-2024 நிலையில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இறுதி பணி மூப்புப் பட்டியல் - ஆதிதிராவிடர் நல இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 25-06-2024...


 01-03-2024 நிலையில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இறுதி பணி மூப்புப் பட்டியல் - ஆதிதிராவிடர் நல இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 25-06-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2024-2025 - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் (4-5) FA(b)க்கான கால அட்டவணை...

 

2024 - 2025 - பருவம் 1 Term I - எண்ணும் எழுத்தும் Ennum Ezhuthum (4, 5) வளரறி மதிப்பீடு - ஆ ( FORMATIVE ASSESSMENT (b) FA (b) ) க்கான கால அட்டவணை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2024-2025 - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் (1-3) FA(b)க்கான கால அட்டவணை...


2024 - 2025 - பருவம் 1 Term I - எண்ணும் எழுத்தும் Ennum Ezhuthum (1-3) வளரறி மதிப்பீடு - ஆ ( FORMATIVE ASSESSMENT (b) FA (b) ) க்கான கால அட்டவணை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தனியார் பள்ளிகளில் இருந்து புதிதாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு திறனறித் தேர்வு...

 

இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் இருந்து புதிதாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு திறனறி தேர்வை ஜூலை மாதம் முதல் நடத்த அறிவுறுத்தல்...



முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - 05-07-2024க்குள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் செய்தி வெளியீடு...

 

 Job Notification..


 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - 05-07-2024க்குள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் செய்தி வெளியீடு எண்: 55, நாள்: 27-06-2024...



>>> செய்தி வெளியீடு எண்: 55, நாள்: 27-06-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி ரூ.20000 மோசடி - பெற்றோர்களே கவனம்...


 கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி ரூ.20000 மோசடி - பெற்றோர்களே கவனம்...



TNSED Schools App New Version: 0.1.4 - Updated on 27-06-2024 - MHT Screening and Bus Pass Module Changes...

 

TNSED schools App


What's is new..?



*🎯 MHT Screening and Bus Pass Module Changes...


*🎯Bug Fixes and Performance Improvement....


*_UPDATED ON  27 June 2024


*_Version: Now 0.1.4


Link:

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis



அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (Govt. I.T.I.) 01.07.2024 முதல் 15.07.2024 வரை நேரடி சேர்க்கை அறிவிப்பு...

 

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (Govt. ITI) 01.07.2024 முதல் 15.07.2024 வரை நேரடி சேர்க்கை அறிவிப்பு...





பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (வா) எண்: 448, நாள்: 29-06-2024 வெளியீடு...

 

 பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (வா) எண்: 448, நாள்: 29-06-2024 வெளியீடு...


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக மீண்டும் திரு.ச.கண்ணப்பன் அவர்களும், தொடக்கக்கல்வி இயக்குநராக திரு.சேதுராமவர்மா  அவர்களும், தேர்வுத்துறை இயக்குநராக திருமதி. லதா அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்...



>>> அரசாணை (வா) எண்: 448, நாள்: 29-06-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஆளிநர்கள் மற்றும் சிறப்பு இலக்கு படை ஆளிநர்கள் பணிபுரியும் பொழுது உயிரிழப்பு / உடல் ஊனம் / காயம் ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத்தொகை உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு...


 தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஆளிநர்கள் மற்றும் சிறப்பு இலக்கு படை ஆளிநர்கள் பணிபுரியும் பொழுது உயிரிழப்பு / உடல் ஊனம் / காயம் ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத்தொகை உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு...


ஏழு இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள்...


காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் அறிவிப்புகள் - 2024-2025...


Announcements of Police, Fire and Rescue Services Department - 2024-2025 - Tamil Version




>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




NHIS திட்டத்தில் அரசு ஊழியர்களின் பெற்றோர்களும் இனி பயன்பெறலாம் - முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிப்பு...

NHIS திட்டத்தில் அரசு ஊழியர்களின் பெற்றோர்களும் இனி பயன்பெறலாம் - முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிப்பு...




NHIS திட்டத்தில் அரசு ஊழியர்களைச் சார்ந்துள்ள தாய், தந்தையரை பயனாளிகளாக சேர்க்க உரிய முறையில் ஆய்வு செய்யப்படும் - NHIS திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை களைந்திட தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தி  நெறிமுறைகள் வழங்க முதலமைச்சர் உத்தரவு!!! (பக்கம் 9&10)...



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


30-06-2024 அன்று பணி நிறைவு பெறும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பதில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் விவரங்கள் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


30-06-2024 அன்று பணி நிறைவு பெறும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பதில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள்  விவரங்கள் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


30-06-2024 அன்றுடன் பணி நிறைவு பெறும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் முனைவர். க.அறிவொளி அவர்களின் மடல்...



 30-06-2024 அன்றுடன் பணி நிறைவு பெறும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் முனைவர். க.அறிவொளி அவர்களின் கடிதம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

 

கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியல் வெளியீடு...

கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியல் வெளியீடு...


01. *வெள்ளமடை*

02. *அக்ரஹாரசாமக்குளம்*

03. *கொண்டையம்பாளையம்*

04. *சர்க்கார்சாமக்குளம்*

05. *காளிபாளையம்*

06. *வெள்ளானைப்பட்டி*

07. *கீரணத்தம்*

08. *குருடம்பாளையம்*

09. *பன்னிமடை*

10. *நீலம்பூர்*

11. *இருகூர்*

12. *மயிலம்பட்டி*

13. *பட்டணம்*

14. *கலிக்கநாயக்கன்பாளையம்*

15. *வேடபட்டி*

16. *சோமையம்பாளையம்*

17. *தீத்திபாளையம்*

18. *பேரூர் செட்டிபாளையம்*

19. *மலுமிச்சம்பட்டி*

20. *சீரபாளையம்*



தேர்வு முடிவுகள் வெளியானதுமே தேர்வர்களின் விடைத்தாள்களை TNPSC வெளியிட வேண்டும்: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு...



 தேர்வு முடிவுகள் வெளியானதுமே தேர்வர்களின் விடைத்தாள்களை TNPSC வெளியிட வேண்டும்: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு...


திண்டுக்கல்லை சேர்ந்த முத்துலெட்சுமி, குணசீலன் ஆகியோர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: 


கடந்த 30.1.24ல் குரூப் 4 தேர்வு குறித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதில் நாங்களும் விண்ணப்பித்தோம். இதற்கான தேர்வை கடந்த ஜூன் 9ம் தேதி எழுதினோம். டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு மட்டும் விடைத்தாள்களை வௌியிடுவதில்லை. எனவே, டிஎன்பிஎஸ்சியும் தேர்வு முடிவுகளை அறிவிப்பு செய்தவுடன், விடைத்தாள்களை வௌியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மற்ற தேர்வு நடத்தும் தேர்வு முகமைகள், தேர்வாணையங்கள், தேர்வு முடிவுகளை வெளியிட்ட உடனே விடைத்தாள்களை வௌியிடுகின்றனர். டிஎன்பிஎஸ்சி மட்டும் ஏன் வௌியிட மறுக்கிறது? இனி வரும் காலங்களில் தேர்வு முடிவுகளை அறிவித்த உடனே தேர்வர்களின் விடைத்தாள்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.


எண்ணும் எழுத்தும் பயிற்சியில் பங்கேற்காத ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு...

 

 

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் பங்கேற்காத ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு...



தஞ்சாவூர் மாவட்ட CEO செயல்முறைகள் 👇👇👇


Ennum_Ezhuthum_Traning_Not_Attended_Teachers_-_CEO_Proceedings...


2024-2025 - ஆம் கல்வியாண்டிற்கான எண்ணும் எழுத்தும் சார்ந்து 1-3 - ஆம் வகுப்புகளுக்கான வட்டார அளவிலான பயிற்சி 26.06.2024 மற்றும் 27.06.2024 ஆகிய இரண்டு நாட்கள் அந்தந்த வட்டாரங்களில் நடைபெற்றது. இப்பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் விவர அறிக்கை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.



 மேற்கண்ட பயிற்சியில் கலந்துகொள்ளாத ஆசிரியர்களின் விவரங்களை உரிய விளக்கத்துடன் இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 03.07.2024 - க்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி mitraining3321@gmail.com -க்கு அனுப்பிவைத்திட மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .


  


PTA இணைப்புக் கட்டணத் தொகை மறுநிர்ணயம் - DEE செயல்முறைகள்...


 PTA இணைப்புக் கட்டணத் தொகை மறுநிர்ணயம் - DEE செயல்முறைகள்...


2024-2025ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணத் தொகை மறுநிர்ணயம் செய்யப்பட்ட விவரம் தெரிவித்தல் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


4 நகராட்சிகள் மாநகராட்சியாகின்றன - பேரவையில் மசோதா தாக்கல்...


 புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சியாகின்றன - பேரவையில் மசோதா தாக்கல்...



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.06.2024...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.06.2024 - School Morning Prayer Activities...



திருக்குறள்:

பால்:பொருட்பால்

அதிகாரம்:கல்லாமை

குறள் எண்:406

உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர்.

பொருள்: கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே
அல்லாமல், ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.


பழமொழி :


Pride comes before fall.

அகம்பாவம் அழிவைத் தரும்.


இரண்டொழுக்க பண்புகள் :

*மழைநீரே குடிநீருக்கு ஆதாரம் என்பதால் மழை நீரை சேமிப்பேன்.

*தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.



பொன்மொழி :

" என்னிடம் எதை வேண்டுமானாலும் கேள்; ஆனால் என் நேரத்தை மட்டும் கேட்காதே! ---- நெப்போலியன் ஹில்



பொது அறிவு :

1. உலகின் மிகப்பெரிய தீவு எது?


விடை: கிரீன்லாந்து

2. உலகின் மிகச்சிறிய கண்டம் எது?

விடை: ஆஸ்திரேலியா



English words & meanings :

honesty-நேர்மையான,

sincerity-நேர்மை



வேளாண்மையும் வாழ்வும் :

உற்பத்தி பெருக்கத்திற்காக உலக நாடுகள் செயற்கை வேளாண்மை செயல் படுத்த ஆரம்பித்தன. ஆனால் அது மண்ணையும் மக்களையும் மக்கள் உடல்நிலையும் பாதிக்க ஆரம்பித்தது.



நீதிக்கதை

வேலை

சிற்பக்கூடத்திற்கு பார்வையாளர் ஒருவர் சென்றார் அங்கே இருந்த சிற்பி செதுக்கி வைத்திருந்த சிற்பங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருந்தது அவர் சிற்பம் செதுக்கி கொண்டிருப்பதை  பார்த்துக் கொண்டிருந்த  பார்வையாளருக்கு ஒரு சந்தேகம் தோன்றியது

அவர் அந்த சிற்பியிடம்,   "இந்த இரண்டு சிலைகளும் ஒரே மாதிரி இருக்கிறதே! இரண்டு சிலைகள் செய்ய கூறினார்களா"?  என்றார்

அதுக்கு அந்த சிற்பி அவரிடம் ," இல்லை இல்லை நான் முதலில் செய்த சிற்பத்தில் ஒரு குறை உள்ளது அதனால்  புதிய  சிலை செதுக்கி கொண்டிருக்கிறேன்" என்றார்.

பார்வையாளரும்,"குறையா?  இவ்வளவு அழகான சிற்பத்தில் குறை உள்ளதா? எங்கே உள்ளது!  என்று கேட்டார்.

அதுக்கு அந்த சிற்பி அவரிடம் ,"சிலையின் வலது காதுக்கு கீழே சிறிய  விரிசல் ஒன்று உள்ளது பாருங்கள்"என்றார்

அவர் அந்த சிற்பியிடம் "இந்த சிற்பத்தை எங்கே பிரதிஷ்டை செய்ய இருக்கிறார்கள்"? என்று கேட்டார்."கோபுரத்தின் மீது வைக்க உள்ளார்கள்"என்றார் சிற்பி.

அதற்கு அவர் " கோபுரத்தின் மீது வைக்கும் போது இந்த சிறிய விரிசல் எவர் கண்ணிலும் தெரியாது அல்லவா"? என்று கேட்டார்.

அதற்கு சிற்பி "நான் பிறருக்காக வேலை செய்யவில்லை  என் மனசாட்சி படி வேலை செய்கிறேன்"என்று  கூறினார்.



இன்றைய செய்திகள்

29.06.2024

# ஊட்டி, கொடைக்கானலுக்கான இ-பாஸ் நடைமுறையை செப்டம்பர்-30 வரை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவு.

# மயிலாடும்பாறையில் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு.

# மாநகராட்சிகளாக தரம் உயரும் திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை: பேரவையில் மசோதா தாக்கல்.

# இந்திய ராணுவத்தில் விரைவில் ரோபோ நாய்கள்: சீன எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு.

# சர்வதேச விண்வெளி நிலையத்தை அப்புறப்படுத்தும் பணியை ஸ்பேஸ்எக்ஸ் வசம் ஒப்படைத்த நாசா.

# ஈஸ்ட்போர்ன் டென்னிஸ் : அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

# கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பொலிவியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற உருகுவே.

# டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்.


Today's Headlines

# Court orders extension of e-pass procedure for Ooty, Kodaikanal till September-30th.

# Discovery of the 13th Century stone Inscription at Mayiladumparai.

# Tiruvannamalai, Namakkal, Karaikudi, Pudukottai are being upgraded to Municipal Corporations: Bill passed in Assembly.

#  Robot dogs will be used soon in the Indian Army: it is to tighten the security in Chinese border areas.

# NASA entrusted SpaceX with the task of disposing  the International Space Station.

# Eastbourne Tennis: American Taylor Pritz advances to semi-finals.

# Copa America: Uruguay beat Bolivia and bagged the thrashing victory

# T20 World Cup Final: India vs South Africa clashes today.


Prepared by

Covai women ICT_போதிமரம்


SMC மறுகட்டமைப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண்: 144, நாள் : 28-06-2024 வெளியீடு...

 


 SMC - மறுகட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ளுதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அனுமதி அளித்தல் - ஆணை வெளியீடு - அரசாணை (நிலை) எண்: 144, நாள் : 28-06-2024 வெளியீடு...


பள்ளி மேலாண்மைக் குழு School Management Committee 2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு 2024 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ளுதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது .

G.O. [MS] No. 144, Dated 28-06-2024 - SMC Reconstitution...


SMC மறுகட்டமைப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண்: 144, நாள் : 28-06-2024 வெளியீடு...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



உயர்தொழில்நுட்ப ஆய்வகப் பயிற்றுநர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள்...

 

 உயர்தொழில்நுட்ப ஆய்வகப் பயிற்றுநர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள்...


Duties and Responsibilities of Hi-Tech Lab Instructors, Administrators and Laboratory Assistants...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கையடக்க கணினி (Tablet) வழங்கப்படும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் - பள்ளி வாரியான பட்டியல் - All Districts...

 


தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் யார் யாருக்கு கையடக்க கணினி (Tablet) வழங்கப்படும் பள்ளி வாரியான பட்டியல் - All Districts...



தமிழ்நாடு அரசின் சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது. யார் யாருக்கு கையடக்க கணினி  வழங்கப்பட உள்ளது என்ற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



சென்ற ஆண்டு எடுக்கப்பட்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை அடிப்படையில் கையெடுக்க கணினி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.👇👇👇



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ரிலையன்ஸ் ஜியோ நிறுவன அலைபேசி கட்டணம் ஜூலை 3 முதல் உயர்கிறது - 12% முதல் 25% வரை உயர்த்துவதாக அறிவிப்பு - ரூ.2999 திட்டம் ரூ.3599 ஆக உயர்வு...


 ரிலையன்ஸ் ஜியோ நிறுவன அலைபேசி கட்டணம் ஜூலை 3 முதல் உயர்கிறது - 12% முதல் 25% வரை உயர்த்துவதாக அறிவிப்பு - ரூ.2999 திட்டம் ரூ.3599 ஆக உயர்வு...



>>> Click Here to Download Reliance Jio Tariff from July 3, 2024...



செல்போன் கட்டணத்தை உயர்த்தியது Jio நிறுவனம்

* நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 12-25 % உயர்த்தியது ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம்

* ரூ.155 ஆக இருந்த மாதாந்திர கட்டணத்தை ரூ.189 ஆக அதிகரித்துள்ளது ஜியோ நிறுவனம்



*

ஜுலை 3 ஆம் தேதி முதல் அமல்...


ரிலையன்ஸ் ஜியோ கட்டணம் உயர்கிறது


செல்போன் கட்டணத்தை 12% முதல் 25% வரை உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவிப்பு


ரூ.155 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் ரூ.189 ஆகவும்; ரூ.399 கட்டணம் ரூ.449 ஆகவும் அதிகரிப்பு; 28 நாள்களுக்கு ரூ.299 (2GB) என்ற மாதாந்திரக் கட்டணம் ரூ.349 ஆக அதிகரிப்பு


புதிய கட்டண உயர்வு ஜூலை 3ஆம் தேதி முதல் அமலாவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Note:

- Unlimited 5G data will be available on all 2GB/day and above plans.

The new plans wil be made effective on 3rd July 2024 and can be opted from all existing touchpoints and channels.


NEW SERVICES:

Building on Jio's core principle of leveraging the power of technology to deliver the best value and services to its users, Jio Platforms Limited is introducing two new applications:

1. JioSafe - Quantum-secure communication app for calling, messaging, file transfer and more (priced at Rs 199 per month)

2. JioTranslate - Al-powered multi-lingual communication app for translating voice call, voice message, text and image (priced at Rs 99 per month).

Jio users will get both these applications (worth Rs 298/month) absolutely free for a year.


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.06.2024...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.06.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம்:கல்லாமை

குறள் எண் :405

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

பொருள்: கல்லாத ஒருவன் தன்னைத் தான் மதித்துக்கொள்ளும் மதிப்பு (கற்றவரிடம்) கூடிப் பேசும்போது அப்பேச்சினால் கெடும்.


பழமொழி :
Every tide has its ebb.

ஏற்றம் உண்டானால் இறக்கம் உண்டு.


இரண்டொழுக்க பண்புகள் :

*மழைநீரே குடிநீருக்கு ஆதாரம் என்பதால் மழை நீரை சேமிப்பேன்.

*தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.


பொன்மொழி :

"உன்னால் முடியாது என பலர் கூறிய வார்த்தைகளே என்னை வெற்றியின் பக்கம் தள்ளியது!"----- ஜாக்கிசான்



பொது அறிவு :

1. “பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர் யார்?


விடை: லாலா லஜபதிராய்

2. இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எது?

விடை: ஆரியபட்டா



English words & meanings :

candor- கள்ளங்கபடமின்மை,

frankness-வெளிப்படையாக


வேளாண்மையும் வாழ்வும் :

உற்பத்தியினை பெருக்கிட விவசாயிகளுக்கு தரமான விதைகள், உரங்கள், உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவற்றை சரியான நேரத்தில் அளிப்பது, ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்ட உயர் தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பது போன்ற முக்கிய பணிகளை இத்துறை செய்து வருகிறது.



ஜூன் 28

பி. வி. நரசிம்ம ராவ்  அவர்களின் பிறந்தநாள்

பி. வி. நரசிம்ம ராவ் (ஜூன் 28, 1921 -டிசம்பர் 23, 2004) இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவராவார். இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.இந்திய அரசியலமைப்பில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்க பாடுபட்டவர்.



நீதிக்கதை

யார் பொறுப்பு

ஒரு குருவும் ஒரு சீடனும் ஒட்டகத்தின் மேல் பயணம் செய்து ஒரு பாலைவனத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். ஒட்டகத்தை பராமரிப்பது சீடரின் பொறுப்பு.

அன்று இரவு  படுக்கைக்கு சென்ற பின் தான் ஒட்டகத்தை கட்டவில்லை என்று ஞாபகம் வந்தது மிகவும் களைப்பாக இருந்ததால்  கடவுளிடம் எனது ஒட்டகத்தை பத்திரமாக பார்த்துக் கொள்வது தங்களின் பொறுப்பு என்று வேண்டினான்.

மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ஒட்டகத்தை காணவில்லை. குரு ஒட்டகத்தை காணவில்லை என்று சீடனை திட்டினார். 

அதற்கு சீடன்,  "நீங்கள் கோபப்படுவதாக இருந்தால் கடவுளிடம் தான் கோபப்பட வேண்டும் ஏனென்றால் நீங்கள் தானே கடவுளை முழுமையாக நம்ப வேண்டும் என்று கூறினீர்கள்,நான் கடவுளை முழுமையாக நம்பி ஒட்டகத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை  ஒப்படைத்தேன்" என்றார்.

அதற்கு குரு கடவுள் உனக்கு உணவை கொடுக்கிறார் அதை எடுத்து உண்பது உன் பொறுப்புதானே! கடவுள் வந்து ஊட்டி விடட்டும் என்று நீ காத்துக் கொண்டிருக்கிறாயா? இல்லைதானே அதுபோல ஒட்டகத்தை கட்டி வைக்க வேண்டியது உனது பொறுப்பு. நமது கடமையை நாம் தான் செய்ய வேண்டும் அதற்கு உதவுவதை மட்டுமே கடவுள் செய்வார் என்றார் குரு.

நமது முயற்சியை  நூறு சதவிகிதம்  கொடுத்தால் அந்த முயற்சி பலனளிக்க கடவுள் நிச்சயம் உதவுவார்.



இன்றைய செய்திகள்

28.06.2024

$ மின்னழுத்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண ரூ.200 கோடி மதிப்பில் 2,500 மின்மாற்றிகள் தமிழகம் முழுவதும் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப் பேரவையில் அறிவித்தார்.

$ கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க இடத்தேர்வு பணி தொடக்கம் - பேரவையில் அமைச்சர் உதயநிதி தகவல்.

$ வெளி மாநில பதிவு எண் கொண்டஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்க கூடாது என்ற தமிழகஅரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

$ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு , புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் நடுத்தர தூர-நுண்ணலை மறைப்பு ராக்கெட்டை இந்தியக் கடற்படையிடம் ஒப்படைத்தது.

$ ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இன்று நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி ஜார்ஜியா அசத்தல் வெற்றி.

$ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு பரிசுத் தொகை அதிகரிப்பு: இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு.


Today's Headlines

$ Minister Thangam Thennarasu announced in the  Legislative Assembly that 2,500 transformers will be set up across Tamil Nadu at a cost of Rs 200 crore to solve the power problem.

$ Site selection for cricket stadium in Coimbatore begins - Minister Udayanidhi informed in assembly.

$ The Supreme Court has placed an interim stay on the Tamil Nadu government's order not to operate  Omni buses with out-of-state registration numbers in Tamil Nadu.

$ The Defense Research and Development Organization handed over the medium-range-microwave cloaking missile to the Indian Navy at a ceremony held in New Delhi yesterday.

$ European Football Championship: Georgia thrashes Portugal in today's match

$ Increase in prize money for Olympic medal winners: Indian Olympic Association decision.


Prepared by

Covai women ICT_போதிமரம்
.


EMIS TNSED Mobile App இணையதளத்தின் வாயிலாக மாணவர்களுக்கு Bus Pass Apply செய்யும் வழிமுறை...


 EMIS TNSED Mobile App இணையதளத்தின் வாயிலாக மாணவர்களுக்கு Bus Pass Apply செய்வது எப்படி?



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

 

பேருந்து பயண அட்டை பெற EMIS தளத்தில் ஒரு வார காலத்திற்குள் விண்ணப்பிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு...


 பேருந்து பயண அட்டை Bus Pass பெற EMIS தளத்தில் ஒரு வார காலத்திற்குள் விண்ணப்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> EMIS TNSED Mobile App இணையதளத்தின் வாயிலாக மாணவர்களுக்கு Bus Pass Apply செய்வது எப்படி? 

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல்...

 

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பழைய & புதிய பங்களிப்பு ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுக் கால நன்மைகளும் குறித்த முழுமையான தகவல்கள் - தமிழ்நாடு அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு 2024-2025 அறிக்கை - நிதித்துறை மானியக் கோரிக்கை எண்: 50...



 பழைய & புதிய பங்களிப்பு ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுக் கால நன்மைகளும் குறித்த முழுமையான தகவல்கள் - தமிழ்நாடு அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு 2024-2025 அறிக்கை - நிதித்துறை மானியக் கோரிக்கை எண்: 50...


Complete Information on Old Pension & New Contributory Pensions and Other Retirement Benefits - Government of Tamil Nadu Policy Note 2024-2025 Report - Finance Department Grant Request No: 50...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.06.2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.06.2024 - School Morning Prayer Activities...



திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம் :கல்லாமை

குறள் எண்:404

கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும்
கொள்ளார் அறிவுஉடை யார்.

பொருள்: கல்லாதவனுடைய அறிவுடைமை ஒருகால் மிக நன்றாக இருந்தாலும்
அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக் கொள்ள மாட்டார்.


பழமொழி :


Hitch your wagon to a star. 

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.



இரண்டொழுக்க பண்புகள் :

*மழைநீரே குடிநீருக்கு ஆதாரம் என்பதால் மழை நீரை சேமிப்பேன்.

*தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.



பொன்மொழி :

" கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு மனிதரும் அவரது இலட்சியத்தை அடைய முடியாது!"---- காமராஜர்.



பொது அறிவு :

1. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?


விடை: ஞானபீட விருது

2. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?

விடை: ஐரோப்பா



English words & meanings :

accusation-குற்றச்சாட்டு,

reproach-கண்டித்தல்



வேளாண்மையும் வாழ்வும் :

நமது அரசாங்கம் உழவையும் உழவர்களையும் மேம்படுத்த அதற்கென்று ஒரு தனி துறையை உருவாக்கி வேளாண்மையை பல வழிகளில் ஊக்குவித்து வருகிறது.



ஜூன் 27

பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களின் பிறந்த நாள்

பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay ( ஜூன் 27, 1838[1] – ஏப்ரல் 8, 1894)[2] ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார்.[3] இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.

ஹெலன் கெல்லர் அவர்களின் பிறந்தநாள்

ஹெலன் கெல்லர் (Helen Adams Keller) (ஜூன் 27, 1880 - ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண்மணி ஆவார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே இருந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாகக் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்

ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904 ஆம் ஆண்டு தன்து 24 ஆவது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி காதும் கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார். 1903 இல் 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார். 


பி. டி. உஷா அவர்களின் பிறந்தநாள்

பி. டி. உஷா கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார். 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார். இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் "இந்தியத் தட களங்களின் அரசி"எனக் குறிப்பிடப்படுகிறார். இவர் பய்யோலி எக்சுபிரசு என்றும் அழைக்கப்படுகிறார். 1985இலும் 1986இலும் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



நீதிக்கதை

அன்பை விதையுங்கள்

ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்கி செல்வார். பழங்களை எடை போட்டு அதற்குரிய தொகையை செலுத்திய பின்பு அதிலிருந்து ஒரு பழத்தை எடுத்து பிரித்து வாயில் வைத்துவிட்டு  "என்ன பழங்கள் புளிப்பாக இருக்கிறது"  என்று புகார் கூறி அந்த பழத்தை பாட்டியிடம் கொடுத்து சாப்பிடக் கூறுவார்.

உடனே பாட்டி ஒரு  சுளையை எடுத்து வாயில் போட்டுவிட்டு  "இல்லை தம்பி சுவையாக தானே இருக்கிறது" என்பார். உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த  அவரது மனைவி அவரிடம்  "ஏங்க! பழம் இனிப்பாக தானே இருக்கிறது ஏன்? அந்தப் பாட்டியிடம் தினமும் குறை கூறுகிறீர்கள்"? என்று கேட்டார்

அதற்கு அந்த இளைஞன்  சிரித்துக் கொண்டே மனைவியிடம் அந்தப் பாட்டி சுவையான பழங்களை தான் விற்கிறார்கள் ஆனால் ஒரு பழத்தைக் கூட அவர்கள் சாப்பிட்டு இருக்க மாட்டார்கள் தற்போது  நான் குறை கூறுவதால் அதை வாங்கி  காசு இழப்பின்றி  சாப்பிடுகிறார்கள் என்று கூறினார்.

அருகில் இருந்து இதனைப் பார்த்துக் கொண்டிருந்த காய்கறி வியாபாரி அந்த இளைஞன் தினமும் உங்கள்  பழத்தைக் குறை கூறுகிறார்  இருந்தும் நீங்கள் ஏன் எடை அதிகமாக போட்டு அவருக்கு பழத்தை கொடுக்கிறீர்கள் என்றார்.

  அதற்கு அந்தப் பாட்டி புன்னகையுடன், "அவன் என்னை ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காக தினமும் குறை கூறுகிறான்.  மேலும் நான் எடையை அதிகமாக போடவில்லை அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்து விடுகிறது அவ்வளவுதான்"  என்றார் அன்போடு.

அன்பை விதையுங்கள் அன்பையே அறுவடை செய்யுங்கள் .



இன்றைய செய்திகள்

27.06.2024

# அரசுப் பள்ளிகளுக்கான வங்கிக் கணக்குகள் பராமரிப்பு தொடர்பாக தொடக்கக் கல்வித் துறையின் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

# டிஎன்பிஎஸ்சி குரூப் 1-ல் அடங்கிய துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 95 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

# தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு:  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

# ஜம்மு காஷ்மீர் தலைநகரமான ஸ்ரீநகர், ‘உலக கைவினை நகரம்’ என்று அங்கீகரிக்கப்படுவதாக உலக கைவினை கழகம் அறிவித் துள்ளது.

# தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பு: காவிரி மேலாண்மை ஆணையம் முடிவெடுப்பதில் தாமதம்.

# கென்யாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள வன்முறை போராட்டம் காரணமாக இந்த அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

# பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய ஆண்கள் ஆக்கி அணி அறிவிப்பு.

# கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: சிலி அணியை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி.

# டி20 தரவரிசை: சூர்யகுமார் யாதவை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறிய ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்.


Today's Headlines

# The instructions of the Department of Elementary Education regarding the maintenance of bank accounts for government schools have been published.

# Chief Minister Stalin issued appointment orders to 95 candidates selected for various posts including Deputy Collector, Deputy Superintendent of Police in TNPSC Group 1.

# Chance of heavy rain in 6 districts of Tamil Nadu today: Chennai Meteorological Center Information.

# Srinagar, the capital of Jammu and Kashmir, has been recognized as the 'World Handicraft City' by the World Handicrafts Association.

#  Karnataka refuses to release water to Tamil Nadu: Cauvery Management Authority delay in taking decision.

# The Indian Embassy in Kenya has advised Indians in Kenya to be cautious.  This alert has been given due to the violent protest there.

# Paris Olympics: Indian Men's Hockey Team Announced

# Copa America: Argentina beat Chile and won

# T20 rankings: Australian player Travis Head overtakes Suryakumar Yadav to the top .


Prepared by

Covai women ICT_போதிமரம்


மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல்...

 

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடில் புதிதாக மூன்று தனியார் சட்டக் கல்லூரிகள் தொடக்கம் - ஏற்கனவே உள்ள எட்டு சட்டக்கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 11 சுயநிதி சட்டக் கல்லூரிகள் உள்ளன...

தமிழ்நாடில் புதிதாக மூன்று தனியார் சட்டக் கல்லூரிகள் தொடக்கம் - ஏற்கனவே உள்ள எட்டு சட்டக்கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 11 சுயநிதி சட்டக் கல்லூரிகள் உள்ளன....


TNDALU. 

தமிழ்நாடு Dr அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்.

2024-25ம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட மூன்று சுயநிதி சட்ட கல்லூரிகள்

18.06.2024 அன்று Bar Council of India (BCI) மூலம் அங்கீகரிக்கப்பட்டு Councilling-ல் சேர்க்கப்பட்டுள்ளது.

1.  SIR ISSAC NEWTON LAW COLLEGE. NAGAPATTINAM.

2.  S. K. P. LAW COLLEGE.

    THIRUVANNAMALAI.

3.  ANANDAM LAW COLLEGE       

      THANJAVUR.

சட்டபடிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடு செய்து புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மூன்று சட்டக் கல்லூரிகளையும் Choice filling-ல் சேர்க்கலாம்.

ஏற்கனவே எட்டு சட்டக்கல்லூரிகள் புதிதாக சேர்த்த மூன்று சட்டக் கல்லூரிகள் என மொத்தம் 11 சுயநிதி சட்டக் கல்லூரிகள் உள்ளன.


NOTIFICATION

Subject: Inclusion of Newly Approved Private Law Colleges for the Academic Year

Ref:

2024-25.

1. Letter No. BCI: D: 673: 2024 (LE/Std. 16.06.2024) dated 18/6/2024 of the

Bar Council of India.

2. Letter No. BCI: D: 674: 2024 (LE/Std. 16.06.2024) dated 18/6/2024 of the

Bar Council of India

3. Letter No. BCI: D: 675: 2024 (LE/Std. 16.06.2024) dated 18/6/2024 of the

Bar Council of India.

4.C. No. 3139/Regr/Acad/A4/2024 dated 18/6/2024

This notification is issued to update the list of private law colleges affiliated to the University

for the academic year 2024-2025.

Existing list: The previously published list of private law colleges for admissions 2024-2025 did not

include the following newly approved colleges:

1 Sir Issac Newton Law College. Nagapattinam -611 102.

2. S.K.P. Law College. Tiruvannamalai -606 611.

3 Anandam Law College, Thanjavur -613 402.

Updated list:

Following the approval granted by the Bar Council of India vide order BCI: D: 673: 2024(LE/Std. 16.06.2024), BCI: D: 674: 2024 (LE/Std. 16.06.2024), and BCI: D: 675: 2024 (LE/Std.16.06.2024) dated 18/6/2024, and the subsequent ratification by the 188th Syndicate Meeting held on 30.03.2024, the aforementioned colleges are now included in the list of private law colleges accepting admissions for the academic year 2024-2025.

Updated List of Private Law Colleges (2024-2025):

SI. No.

Affiliated Private Law College(s)

1. Saraswathy Law College (Private). Tindivanam -604 307 

2. Mother Terasa Law College (Private), Pudukottai -622 102 

3. KMC College of Law (Private), Tiruppur -641 605

4. Erode College of Law (Private). Erode -638 453

5. G.T.N. Law College (Private), Dindigul-624 005

6. S. Thangapazham Law College (Private), Tenkasi -627 758

7. Thulasi College of Law for Women (Private), Tuticorin -628 252

8. Mugil College of Law (Private), Kanyakumari -629 172

9. Sir Issac Newton Law College, Nagapattinam - 611 102

10.S.K.P. Law College, Tiruvannamalai - 606611

11. Anandam Law College, Thanjavur - 613 402

Those who are interested in giving preference to the three newly added private colleges shall use the link provided in the Admission portal and update your preference by including these three colleges.The above mentioned updated list of private law colleges affiliated to the University is for the academic year 2024-2025.


Plastic Tiffen Box, Plastic Water Bottle போன்றவற்றை பயன்படுத்தினால் Cancer வரும் என்பதால் இது குறித்த விழிப்புணர்வை சுற்றுச்சூழல் மன்றம் வாயிலாக மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு...

 


Plastic Tiffen Box, Plastic Water Bottle போன்றவற்றை பயன்படுத்தினால் Cancer வரும் என்பதால் இது குறித்த விழிப்புணர்வை சுற்றுச்சூழல் மன்றம் வாயிலாக மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அரசின் கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளது - சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு...

 "பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அரசின் கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளது - சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு..."


அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட குழு, ஓய்வூதிய ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது.


இது குறித்த அரசின் கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளது- சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...








ஆய்வக உதவியாளர் பணியிடங்களை பணிநிரவல் செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை (நிலை) எண்: 141, நாள்: 26-06-2024 வெளியீடு...


 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை பணிநிரவல் செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை (நிலை) எண்: 141, நாள்: 26-06-2024 வெளியீடு...


Guidelines for Deployment of Laboratory Assistant Posts Ordinance G.O. (Ms) No: 141, Dated: 26-06-2024 issued...



>>> அரசாணை (நிலை) எண்: 141, நாள்: 26-06-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (டிட்டோஜாக்) சார்பில் சென்னையில் 26.06.2024 அன்று நடைபெற்ற மாநில உயர்மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்...


 தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் ( டிட்டோஜாக் - TETOJAC ) சார்பில் சென்னையில் 26.06.2024 அன்று நடைபெற்ற மாநில உயர்மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



   *💥டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம் நடைபெற்றது:*


       *🔥டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம் இன்று சென்னையில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது.*


*🔥அரசாணை 243 ஐ நடைமுறைப்படுத்தி  கலந்தாய்வை நடத்துவதால் ஆசிரியர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் எனவே அரசாணை 243 ஐ ரத்துசெய்யவேண்டும் என டிட்டோஜாக் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,கல்வித்துறை செயலாளர்,தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரை நேரில் சந்தித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதாலும் கல்வித்துறை சார்பில் அரசாணை 243 ஐ நடைமுறைப்படுத்தமாட்டோம் விரைவில் ரத்துசெய்வோம் என வாய்வழியாக உத்தரவாதம் கொடுத்தார்கள் ஆனால் உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டு தற்போது அரசாணை 243 அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வு நடத்த கல்வித்துறை சார்பில் அட்டவணை வெளியிட்டுள்ளனர்.*


       *🔥இந்த அரசாணை 243 ரத்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி இன்றைய டிட்டோஜாக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.*


*💥கூட்ட முடிவுகள்:*


*🔥(1)28.6.202024 - மாவட்டத்தலைநகரில் முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகம் முன் மாலை நேர ஆர்ப்பாட்டம்.*


*🔥(2)29.6.2024,1.7.2024, 2.7.2024 வரை ஆசிரியர்கள் சந்திப்பு இயக்கம்.*


*🔥(3)3.7.2024 மாவட்டத்தலைநகரில் கலந்தாய்வு நடைபெறும் மையத்தின் முன் மறியல் போராட்டம்.*


*🔥(4)4.7.2024 - மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சென்னையில் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றிய ஆலோசனைக்கூட்டம்.*


இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான மாநில முன்னுரிமை பட்டியல் வெளியீடு...

 

 இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான மாநில முன்னுரிமை பட்டியல் வெளியீடு...



Secondary Grade Teachers - State Level Priority List of Applicants for District to District Transfer...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




பட்டதாரி ஆசிரியர்கள் - மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்தோரின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல்...

 

 ஆங்கிலம், கணிதம், அறிவியல் & சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் - மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்தோரின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல்...


Graduate Teachers - English, Mathematics, Science & Social Science B.T.Assistants State Level Priority List of Applicants for District to District Transfer...



>>> மொத்தமாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் - மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்தோரின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல்...



>>> ஆங்கிலம் பட்டதாரி ஆசிரியர்கள் - மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்தோரின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல்...



>>> கணிதப் பட்டதாரி ஆசிரியர்கள் - மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்தோரின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல்...



>>> அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் - மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்தோரின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல்...



>>> சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் - மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்தோரின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல்...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.06.2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.06.2024 - School Morning Prayer Activities...



திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம்:கல்லாமை

குறள் எண்:403

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின்.

பொருள்: கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப்பெற்றால், கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவர்.


பழமொழி :
Honesty is the best policy.

நேர்மையை சிறந்த பண்பாகும்.



இரண்டொழுக்க பண்புகள் :

*மழைநீரே குடிநீருக்கு ஆதாரம் என்பதால் மழை நீரை சேமிப்பேன்.

*தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.


பொன்மொழி :

" உழைப்பின் சக்தியே உலகில் மிக உன்னதமானது, அதை வெற்றி கொள்ளும் ஆற்றல் வேறு எந்த சக்திக்கும் கிடையாது!"------ ஆபிரகாம் லிங்கன்.



பொது அறிவு :

1. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?

விடை: கங்கை


2. இந்திய அரசியமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு?

விடை: 1950



English words & meanings :

careful-கவனமாக,

wary-கவனமாக நடந்து கொள்கின்ற



வேளாண்மையும் வாழ்வும் :

ஏறத்தாழ 40 சதவீத மக்களுக்கு குறிப்பாக பெரும்பாலான கிராமப்புற மக்களுக்கு வேளாண்மைத் தொழிலே பிரதான தொழிலாக வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.



நீதிக்கதை

பேசிய வார்த்தைகள்

ஒரு கிராமத்தில் குருவை பார்க்க ஒருவர் வந்தார். அவர் முகம் வாடி இருந்தது. "என்னவாயிற்று"? என்று கேட்டார் குரு.  அதற்கு அவர் " ஒருவரை கோபத்தில் கண்டபடி திட்டி விட்டேன். அவர் மிகவும் மனம் ஒடிந்து போய்விட்டார். இப்போது எனக்கு வருத்தமாய் இருக்கிறது.

"அப்படியா"? என்றார் குரு.

"ஆமாம் குருவே, இப்போது நான் திட்டியதற்கு  நிவர்த்தி செய்ய விரும்புகிறேன் என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டார்

மெலிதாக சிரித்த குரு,"போ,ஒரு

மூட்டை பஞ்சை வாங்கி ஏதாவது ஒரு இடத்தில் கொட்டு. பின்பு  கொட்டிய பஞ்சை எல்லாம் ஒன்று விடாமல் எடுத்து மூட்டை கட்டி கொண்டு வா சொல்கிறேன்" என்றார்.

போனவர் ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தார்." குருவே பறந்து போன பஞ்சை எல்லாம் சேகரிக்க இயலவில்லை" என்றார்.

"வாயிலிருந்து வரும் வார்த்தைகளும் இது போல் தான். கொட்டிவிட்டால் திரும்ப எடுக்க முடியாது. எப்போதும் கவனமாக பேச வேண்டும்"என்றார் குரு.



இன்றைய செய்திகள்

26.06.2024

* 2026 ஜனவரிக்குள் 75,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

* அரசு சட்டக் கல்லூரிகளில் 'சட்டத்தமிழ்' எனும் புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சட்டப்பேரவையில் நேற்று அறிவித்தார்.

* சென்னானூரில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணியில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான புதிய கற்கால வெட்டுக்கருவி கண்டெடுப்பு.

* தொலைத் தொடர்பு சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

* ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.7 ஆக பதிவு.

* தேசிய தடகள போட்டிக்கான தமிழக அணி அறிவிப்பு.  65 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

* கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பராகுவேவை வீழ்த்தி வெற்றி பெற்ற கொலம்பியா.


Today's Headlines

* 75,000 government jobs will be filled by January 2026: CM Stalin announced.

* Law Minister S. Raghupathi announced yesterday in the Legislative Assembly that a new course called 'Chatta Thamizh' will be introduced in government law colleges.

* 4,000-year-old neolithic cutting tool is found in ongoing excavation site at Chennanur.

*  Central government has started spectrum auction for telecom services.

* Earthquake in Japan;  registered as 5.7 on the Richter scale.

*  Tamil Nadu Team Announcement for National Athletics Tournament   65 male and female players have been placed.

* Copa America: Colombia beat Paraguay and won.


Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Government Relief Application Form for Storm Damaged Crops

 புயலில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு நிவாரண விண்ணப்ப படிவம் மாதிரி Government Relief Application Form for Storm Damaged Crops