கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

29-08-2024 அன்று காணொளி வாயிலாக நடைபெற்ற டிட்டோஜாக் உயர்மட்டக் குழு கூட்ட முடிவுகள்...

 

 29-08-2024 அன்று காணொளி வாயிலாக நடைபெற்ற டிட்டோஜாக் TETOJAC உயர்மட்டக் குழு கூட்ட முடிவுகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TETOJAC சார்பில் 10.09.2024 அன்று நடைபெற உள்ள மாநிலந்தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான 31அம்சக் கோரிக்கைகள் கொண்ட மாதிரி துண்டுப் பிரசுரம்...

 

 டிட்டோஜாக் TETOJAC சார்பில் 10.09.2024 அன்று நடைபெற உள்ள மாநிலந்தழுவிய  ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான 31அம்சக் கோரிக்கைகள் கொண்ட மாதிரி துண்டுப் பிரசுரம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



சமக்ரா சிக்ஷா அபியான் - தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது ஏன்?


சமக்ரா சிக்ஷா அபியான் - தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது ஏன்?


‘தேசியக் கல்விக் கொள்கை தமிழ் சமுதாயத்தையும், தமிழ் கல்வியையும் குழிதோண்டிப் புதைத்துவிடும்’ என்கிறார் தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு.


‘சமக்ரா சிக்ஷா அபியான்' என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு தராதது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.


மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு சமக்ரா சிக்ஷயா அபியான் திட்டத்தின் கீழ் நிதி வழங்க மத்திய அரசு மறுக்கிறது என்று சொல்லப்படும் காரணம்தான் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.


மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதற்கான காரணங்களை முதல்வர் ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.


தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை விளக்கி 2022-ம் ஆண்டு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘அனைவருக்கும் கல்வி என்ற தமிழகத்தின் நிலைப்பாட்டை தேசிய கல்விக்கொள்கை சீர்குலைக்கும் வகையில் இருப்பதால், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அதை தொடர்ந்து எதிர்த்துவருகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.


கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிப்பதற்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் என்பதை தி.மு.க எதிர்க்கிறது. தேசியக் கல்விக் கொள்கையின்படி, மூன்று ஆண்டு பட்டப்படிப்பை முதலாம் ஆண்டுடன் நிறுத்தினால் சான்றிதழ், இரண்டாம் ஆண்டுடன் நிறுத்தினால் பட்டயம், மூன்று ஆண்டுகள் முடித்தால் பட்டம் என்ற முறை தேசியக் கல்விக்கொள்கையில் இடம்பெற்றிருக்கிறது. இத்தகைய முறையால் மாணவர்கள் பாதியிலேயே படிப்பை விடுவதற்கு வழிவகுக்கும் என்பதால், தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது.


நீட் தேர்வை தமிழக அரசு கடுமையாக எதிர்த்துவருகிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசு தொடர்ந்து போராடிவருகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் தேசியக் கல்வி முறை, நீட் தேர்வு முறையைவிடக் கொடுமையானது. நூறு ஆண்டுகாலமாக உழைத்து உருவாக்கிய கல்வி அமைப்பையே இது சீர்குலைத்துவிடும்’ என்பது தமிழக அரசின் நிலைப்பாடாக இருக்கிறது.


இந்த நிலையில், மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு சமக்ரா சிக்ஷயா அபியான் திட்டத்தின் கீழ் நிதி வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது’ என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்திருக்கிறது. 'சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய முதல் தவணையான ரூ.573 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்’ என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.


இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகி இருக்கும் தற்போதைய சூழலில், பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, தேசியக் கல்விக் கொள்கையை விமர்சித்துப் பேசியிருக்கிறார். ‘இந்தியாவில் கல்வியில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான். சமக்ரா சிக்ஷா அபியான் திட்ட நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது.


தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட்டால் தான் நிதி வழங்குவோம் என்று மத்திய அரசு சொல்வது நியாயமா? 5-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடையவில்லை என்றால், உன் தந்தை செய்யும் தொழிலுக்கு நீ சென்றுவிடு என்று சொல்லும் குலக்கல்வித் திட்டத்தைத்தான் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார்’ என்று சபாநாயகர் அப்பாவு பேசினார்.


மேலும், ‘தேசியக் கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்படுகிறது. தன்னாட்சிக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கும் இதுபோன்ற அம்சங்களையும் தமிழக அரசு எதிர்க்கிறது. எனவேதான், தேசியக் கல்விக் கொள்கை வேண்டாம் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது’ என்கிறார்கள்.



பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும் - மத்திய அரசு...



 பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும் - மத்திய அரசு...


பி.எம்.ஸ்ரீ. திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்; பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையொப்பமிடுவதாக 15.03.2024ல் தமிழ்நாடு உறுதி அளித்திருந்தது.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்.


தமிழ்நாடு பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் யோசனையை தேசிய கல்விக் கொள்கை ஆதரிக்கிறது.


அரசியல் வேறுபாடுகளைக் காட்டிலும் குழந்தைகளின் உலகத்தரம் வாய்ந்த கல்விக்கு முன்னுரிமை தருக.


- மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்...


"பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழ்நாடு அரசு பி.எம்.ஸ்ரீ திட்டத்திற்கான வரையறையில் கையெழுத்திடவில்லை" - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்...


சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய முதல் தவணையான ரூ.573 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என இரண்டு நாள்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.


இந்த நிலையில், தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ ஏற்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.


அந்த கடிதத்தில், "மத்திய அரசு மாணவர்கள் தாய்மொழி உட்படப் பல மொழிகளைக் கற்க வேண்டும் என முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேசியக் கல்விக் கொள்கை 2020, மாணவர்களுக்குத் தமிழ் மொழி பயிற்றுவிப்பதை முழுமையாக ஆதரிக்கிறது. நாட்டின் மூலைமுடுக்குகளில் உள்ள குழந்தைகளும் புதிய கல்விக் கொள்கையின் நன்மைகள் சென்றுசேர வேண்டும் என உறுதியாக இருக்கிறது." என எழுதியுள்ளார்.


மேலும், தமிழ்நாடு தொடக்கத்தில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட சம்மதித்ததாகவும், பின்னர் தமிழ்நாடு சார்பிலான வரையறை, தேசியக் கல்விக் கொள்கையை முழுமையாக செயல்படுத்துவதற்காக முக்கிய கடைமைகளைத் தவிர்த்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


"பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழ்நாடு அரசு பி.எம்.ஸ்ரீ திட்டத்திற்கான வரையறையில் கையெழுத்திடவில்லை" எனவும் எழுதியுள்ளார்.


தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் தேசியக் கல்விக் கொள்கையின் பகுதி என்றும் தமிழ்நாடு பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் அழுத்தமாக தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இரு மொழிக் கொள்கை உள்ளிட்ட தமிழக அரசின் கொள்கைகளை தேசியக் கல்விக் கொள்கை கேள்விக்குட்படுத்துவதால் அதனை உறுதியாக எதிர்த்து வருகிறது தமிழ்நாடு அரசு.


 செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, தர்மேந்திர பிரதானின் கடிதத்துக்குப் பதிலளிக்கும் வகையில், "தமிழக முதல்வர் ஒரு குழுவை அமைத்து தமிழ்நாடு கல்விக் கொள்கை என்ற கொள்கையை உருவாக்கியிருக்கிறார். அதை நிச்சயமாகப் பயன்படுத்துவோம்." எனப் பேசினார்.


பள்ளி அளவிலான கலைத்திருவிழா Kalai Thiruvizha - வெற்றி பெற்ற மாணவர்களை EMIS Websitesல் பதிவேற்றம் செய்தல் - வழிகாட்டுதல்கள்...

 

பள்ளி அளவிலான கலைத்திருவிழா Kalai Thiruvizha - வெற்றி பெற்ற மாணவர்களை EMIS Websitesல் பதிவேற்றம் செய்தல் - வழிகாட்டுதல்கள்...


 அனைவருக்கும் வணக்கம்


*பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறுதல் கால அவகாசம் 29.08.2024 முதல் 10.09.2024


*பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி எமிஸ் லாகினில் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 12.09.2024


எனவே அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் எமிஸில் பதிவு செய்த மாணவர்கள் மட்டும் கலந்து கொண்ட போட்டிகளில் வெற்றியாளர்களை இரண்டு விதமாக (சாதாரண குழந்தைகள் & மாற்றுத்திறனுடைய குழந்தைகள் தனித்தனியான வெற்றியாளர்கள்) உரிய நடுவர் குழு கொண்டு தெரிவு செய்து பள்ளி எமிஸ் லாகினில் குறித்த காலத்திற்குள் பதிவேறம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நன்றி🙏


4 மாவட்டங்களில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு SMC Reconstitution நிகழ்வு நடைபெறும் தேதி மாற்றம் - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம்...

 

 


4 மாவட்டங்களில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு SMC Reconstitution நிகழ்வு நடைபெறும் தேதி மாற்றம் - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பத்திரப் பதிவுக் கட்டணம் இல்லாமல் 5 ஏக்கர் வரை வாங்க "நன்னிலம்" - மகளிர் நில உடைமைத் திட்டம் - நிபந்தனைகள்...



பத்திரப் பதிவுக் கட்டணம் இல்லாமல் 5 ஏக்கர் வரை வாங்க "நன்னிலம்" - மகளிர் நில உடைமைத் திட்டம் - நிபந்தனைகள்...


"Nannilam" to buy up to 5 acres without deed registration fee - Women's Land Tenure Scheme - Conditions...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30-08-2024...

 

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30-08-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: இடுக்கண் அழியாமை

குறள் எண்:623

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

பொருள் :துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர் அந்த் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர்.


பழமொழி :
A tree is known by its fruit.

நல்லார் பொல்லாரை செய்கையால் அறியலாம்.


இரண்டொழுக்க பண்புகள் : 

*கல்வி அறிவோடு கலைத்திறனும் மேம்பட எம் பள்ளியில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன்.

* எனது பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் பெருமை தேடித் தரும் வகையில் நல்ல மாணவனாக நடந்து கொள்வேன்.


பொன்மொழி :

வெற்றி என்பது சிறிய முயற்சிகளின் கூட்டுத்தொகையாகும், நாள்தோறும் மீண்டும் மீண்டும்." - ராபர்ட் கோலியர்


பொது அறிவு :

1. சோப்பு தயாரிக்கப் பயன்படுவது

விடை: சோடியம் ஹைட்ராக்சைடு

2. இந்து என்னும் ஆங்கில நாளிதழைத் தோற்றுவித்தவர்

விடை: ஜி.சுப்பிரமணியம்


English words & meanings :

swift-விரைவான,

brisk-விறுவிறுப்பான


வேளாண்மையும் வாழ்வும் :

அறிவியல் கணக்குபடி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சிடும். ஆக எத்தனை “பதினு” மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்கு தயாராவார்கள்.



ஆகஸ்ட் 30

வாரன் எட்வர்ட் பஃபெட் அவர்களின் பிறந்தநாள்

வாரன் எட்வர்ட் பஃபெட் (Warren Edward Buffett, பிறப்பு: ஆகஸ்ட் 30. 1930) ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளரும், தொழிலதிபரும், பொதுக் கொடையாளரும் ஆவார். உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான இவர் "பெர்க்சயர் ஹாதவே"[4] என்ற நிறுவனத்தில் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ளதோடு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். இவர் 2008 ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் மிகப் பெரிய பணக்காரராய் இடம்பெற்றார். அவருடைய சொத்தின் மொத்த மதிப்பு $62 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது



நீதிக்கதை

செய்த தவறு 

ஒரு ஊரில் மன்னர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வேட்டையாடுவதில் அதிக இன்பம். அவர் தமது ஆயுதங்களுடன் காட்டில் கொடிய மிருகங்களை வேட்டையாடி விட்டு நகருக்கு எல்லையில் உள்ள கோயில் மரத்தின் நிழலில் சிறிது நேரம் ஓய்வாக உறங்கிக் கொண்டிருந்தார்.

திடீரென்று எங்கிருந்தோ ஒரு கல் வந்து மன்னரை காயப்படுத்தி, அவர் தூக்கத்தை கலைத்தது. சுற்றி இருந்த காவலர்கள் நாலா பக்கமும் சென்று, ஒரு நடுத்தர வயது பெண்ணை பிடித்து, அழைத்து வந்து மன்னர் முன் நிறுத்தினார்கள்.

மன்னர் அந்த பெண்மணியை பார்த்து, “ஏனம்மா என் மீது கல்லை எறிந்தாய்?” என்றார்.

அதற்கு அந்த பெண் அரசரை பார்த்து, “மன்னர் பெருமகனே, நான் காட்டில் விறகு வெட்டியும், அவைகளை பொறுக்கியும், நாட்டில் விலைக்கு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் என் குழந்தைகளுக்கு உணவு அளிக்கிறேன்.

வரும் வழியில் மரத்தில் பழங்கள் இருப்பதை பார்த்தேன். என் குழந்தைகளின் நினைவு வந்தது. பிள்ளைகளின் பசியை போக்குவது பெற்றவள் கடமை அல்லவா?.

அந்த பழங்களை பறிப்பதற்காக ஒரு கல்லை எடுத்து மரத்தில் எறிந்தேன். தாங்கள் மர நிழலில் உறங்கிக் கொண்டிருந்தது தூரத்தில் இருந்து எனக்கு தெரியவில்லை.

நான்  எறிந்த அந்த கல்லானது உங்கள் மீது பட்டு உங்கள் தூக்கத்தை கலைத்ததுடன், உங்களையும் காயப்படுத்தி விட்டது. இந்த தவறுக்கு நான் தான் காரணம் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” என்று வேண்டி நின்றாள்.

மன்னர் அந்த பெண்மணியை பார்த்து, “பெண்ணே, நீ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கின்றாய். அது உன் சிறந்த பண்பு. உன்னை மன்னித்து விட்டேன்”, என்று கூறியதோட அப்பெண்ணுக்கு இரண்டு பசுக்களையும், கை செலவுக்கு பணத்தையும் கொடுக்க ஆணையிட்டார்.

சுற்றி இருந்த காவலர்கள் மன்னரை நோக்கி, “அரசே, தங்களை கல்லால் அடித்தவளை மன்னித்ததுடன் அவளுக்கு பரிசும் தருகிறீர்கள் இச்செயல் எங்களுக்கு வியப்பு அளிக்கிறது” என்றனர்.

காவலர்களை பார்த்து மன்னர், “காவலர்களே, அவள் வேண்டுமென்று என்னை கல்லால் அடிக்கவில்லை.

பழங்களை உதிர்க்கவே கல்லால் அடித்தால் அது தவறுதலாக என் மீது பட்டு என்னை காயப்படுத்தியது. அவள் தான் செய்த தவறுக்கு வருந்தி என்னிடம் மன்னிப்பு கேட்டாள்.

அது மட்டுமல்ல அவள் தன் பிள்ளைகளின் பசியை போக்கவே மரத்தின் மீது கல் எறிந்தாள். அது தாயாகிய அவள் கடமை அல்லவா?. அவள் அவளுடைய பிள்ளைகளுக்காக அவ்வாறு செய்தாள்.

நான் என் குடிமக்களுக்காக  பரிசு வழங்கினேன்” என்றார். காவலர்கள் மன்னரின் விளக்கம் கேட்டு பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

நீதி : செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பது சிறந்த குணமாகும்.



இன்றைய செய்திகள்

30.08.2024

* அனைத்து கட்டண உயர்வும் வாபஸ்: பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவு.

* பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் 3,000 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2025 ஜனவரி மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

* சென்னையில் வரும் ஆகஸ்ட்-31 முதல் செப்டம்பர்-1-ம்


தேதி வரை ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளது.

* ரூ.873 கோடி மதிப்புக்கு 73,000 துப்பாக்கிகள் வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்: பாதுகாப்பு துறை தகவல்.

* குஜராத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், கடந்த 4 நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

* டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவ் பல்வேறு குற்றஞ் சாட்டு காரணமாக பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற தடை.

* இங்கிலாந்து வீரர் டிவைன் ஐஹேம் 100மீ ஓட்டப்பந்தய தூரத்தை 10.30 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

* ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.

* அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செர்பியா வீரர் ஜோகோவிச் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்.


Today's Headlines

* Potential fee hikes for engineering colleges have been rolled back by Anna University

* A government order has been issued to pay the salaries of 3,000 temporary postgraduate teachers working in the school education department until January 2025."

* The Formula 4 street race will be held in Chennai from August 31 to September 1, 2024.

*  India signs a deal with US to buy 73,000 guns worth Rs 873 crore: Ministry of Defense Information

* As heavy rain continues in Gujarat, the death toll has increased to 28 in the last 4 days.

*  Pavel Durov, the CEO of Telegram, has been banned from leaving France due to multiple charges against him

* England's Dwayne Ihem has set a world record for 100m in 10.30 seconds.

* Indian Team was Announced for Asia Champions  Hockey Series

* US Open Tennis: Serbian Djokovic advances to 3rd round

Prepared by

Covai women ICT_போதிமரம்


"கூட்டுறவு" செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறலாம் - தமிழ்நாடு அரசு நடவடிக்கை...



"கூட்டுறவு" செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறலாம் - தமிழ்நாடு அரசு நடவடிக்கை...



>>> செய்தி வெளியீடு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


திருப்பதி லட்டுக்கு ஆதார் கட்டாயம்...

 திருப்பதி லட்டுக்கு ஆதார் கட்டாயம்...



3 பேரூராட்சிகள் நகராட்சிகளாகத் தரம் உயர்வு...

 புதிய 3 நகராட்சிகள் ஆணை- அறிவிக்கை வெளியீடு...


3 பேரூராட்சிகள் நகராட்சிகளாகத் தரம் உயர்வு...



பி.எட்., படிப்புக்கான வினாத்தாள் கசிவு - வினாத்தாளை திரும்ப பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு - 10 மணிக்கு முன் புதிய வினாத்தாள்...



பி.எட்., படிப்புக்கான வினாத்தாள் கசிவு - வினாத்தாளை திரும்ப பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு - 10 மணிக்கு முன் புதிய வினாத்தாள்...


இரண்டாம் ஆண்டு B.Ed., படிப்புக்கான 4வது செமஸ்டர் வினாத்தாள் லீக்கான விவகாரம்...


வெளியான வினாத்தாளை திரும்ப பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு...


தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. நடத்தும் creating an inclusive school என்ற பாடத்துக்கான வினாத்தாள் லீக்கானது


இன்று காலை 10 மணிக்கு தேர்வு துவங்கும் முன்பாக இணையதளம் வாயிலாக புதிய வினாத்தாள் அனுப்பப்படும் எனவும் உயர் கல்வித் துறை அறிவிப்பு


கடந்த 27ம் தேதி தொடங்கிய பி.எட் படிப்புக்கான தேர்வுகள் வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.


ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெறுவதற்கு (BRTE to BT Conversion) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

 

ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெறுவதற்கு (BRTE to BT Conversion) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு - W.P. No. 7639 of 2023 and WP Nos.7796, 7797 and 7799 of 2023...



>>> சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED : 19.08.2024

CORAM

THE HONOURABLE MR. JUSTICE N. ANAND VENKATESH

W.P. No. 7639 of 2023 and WP Nos.7796, 7797 and 7799 of 2023..


7. In the facts of the present case, there is no scope for interfering with the action taken by the respondents in transferring BRTEs to the post of B.T. Assistants for those who were all recruited between 2002 to 2010 and were selected to the respective post before 23.08.2010. The problem arises only in those cases where such appointment/promotion/transfer has been made after 29.07.2011. The learned Government Advocate appearing on behalf of the respondents relied upon the adhoc arrangement that was made under G.O.Ms.52 dated 30.03.2006. This adhoc arrangement that was made will not override the judgment of the Division Bench which categorically holds that any appointment made to the post of B.T.Assistant after 29.07.2011, whether by direct recruitment or promotion or by way of transfer, must necessarily pass TET. In view of the same, when a BRTE is interchanged and transferred as a B.T.Assistant after 29.07.2011, to hold the position of the B.T. Assistant, the concerned candidate must have passed TET.


8. Even though the post of BRTE and B.T.Assistant are interchangeable, it is not as if the same person will be holding a dual post. At any given point of time, the concerned person may be holding the post as BRTE or as B.T.Assistant. Therefore, when the person is adorning the role of BRTE and is intended to be changed as B.T.Assistant, it involves a transfer to the post of B.T.Assistant. Once that happens, automatically the mandate prescribed by the Division Bench will come into operation and for all those transfers made after 29.07.2011, for holding the post of B.T.Assistant, TET becomes mandatory.


9. The above clarification will suffice and the same is to be kept in mind by the official respondents when they undertake the exercise of interchangeability between BRTEs and B.T.Assistants.


10. This Writ Petition is disposed of with the above observation. There shall be no order as to costs. Consequently, the connected miscellaneous petitions are closed.


19.08.2024

பேருந்தில் படியில் பயணித்த மாணவன் விபத்தில் இறப்பு - ரூ.49 லட்சம் இழப்பீடு கேட்ட குடும்பம் - எதிர்பாரா தீர்ப்பு கொடுத்த நீதிபதி...



பேருந்தில் படியில் பயணித்த மாணவன் விபத்தில் இறப்பு - ரூ.49 லட்சம் இழப்பீடு கேட்ட குடும்பம் - எதிர்பாரா தீர்ப்பு கொடுத்த நீதிபதி...

 

பேருந்து படிக்கட்டில் பயணித்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க முடியாது என சென்னை மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை கொளத்துரை சேர்ந்த ஒரு  மாணவர் டந்த 2019 ம் ஆண்டு பள்ளிக்கு செல்ல பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்த போது, தவறி விழுந்து உயிரிழந்தார். இதற்கு அரசு பேருந்து ஓட்டுனரின் அலட்சியமை காரணம் என்றும் 49 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரியும் மாணவனின் குடும்பத்தினர்  சென்னை மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் அறிவுறுத்தியும்  கேட்காமல்,  ஜன்னல் கம்பியை பிடித்தவாறு பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணித்ததே மாணவன் உயிரிழப்பிற்கு காரணம் என்று  சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, மாணவரின் கவனக் குறைவு தான் அவரின் உயிரிழப்பு காரணம் எனக் குறிப்பிட்டு, இதற்காக மாநகர போக்குவரத்து கழகத்திடம் இழப்பீடு கோர முடியாது என்றும்  உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.



18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு வாகனங்களை இயக்கக் கொடுப்பவர்களுக்கு தண்டனை, அபராதம், வாகனப் பதிவு நிறுத்தம் உறுதி - நீதிமன்றத் தீர்ப்பின் நகல்...

 

 18 வயது கீழ் மகன், மகளுக்கு வாகனம் வாங்கித்தரும் அல்லது ஓட்ட தரும் பெற்றோர்களே இனி கவனமாக இருங்கள்..


 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு  இருசக்கரவாகனம், நான்கு சக்கர வாகனம் ஓட்ட அல்லது வாங்கிக்கொடுக்கும் பெற்றோருக்கு தண்டனை உறுதி. இதோ நீதிமன்ற தீர்ப்பின் நகல். கவனம் தேவை பெற்றோர்களே...


18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு வாகனங்களை இயக்கக் கொடுப்பவர்களுக்கு தண்டனை, அபராதம், வாகனப் பதிவு நிறுத்தம் உறுதி - நீதிமன்றத் தீர்ப்பின் நகல்...



>>> நீதிமன்றத் தீர்ப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29-08-2024...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29-08-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: இடுக்கண் அழியாமை

குறள் எண்:622

வெள்ளத்து அனைய இடும்பை அறிவு உடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.

பொருள்: வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும் அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத்துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.


பழமொழி :
A good reputation is a fair estate.

நற்குணமே சிறந்த சொத்து.


இரண்டொழுக்க பண்புகள் : 

*கல்வி அறிவோடு கலைத்திறனும் மேம்பட எம் பள்ளியில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன்.

* எனது பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் பெருமை தேடித் தரும் வகையில் நல்ல மாணவனாக நடந்து கொள்வேன்.


பொன்மொழி :

இது ஒரு கடினமான பணியின் தொடக்கத்தில் உள்ள நமது அணுகுமுறை, எல்லாவற்றையும் விட, அதன் வெற்றிகரமான முடிவை பாதிக்கும்." - வில்லியம் ஜேம்ஸ்


பொது அறிவு :

1. நுண்ணோக்கியை முதன் முதலில் பயன்படுத்தியவர் _________

விடை : லியூவன் ஹுக்.

2. மரபுப் பண்புகளைக் கடத்துதலில் முக்கியப் பங்கு வகிப்பது______

விடை : DNA


English words & meanings :

mantis - an insect looks like as it is praying, noun. மான்டிஸ். பெயர்ச் சொல்



வேளாண்மையும் வாழ்வும் :

மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை “செவி” அல்லது “பதினு” எனப்படும். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்றனர்.


ஆகஸ்ட் 29

தியான் சந்த் அவர்களின் பிறந்தநாள்

தியான் சந்த் (Dhyan Chand, இந்தி: ध्यान चंद); பிறப்பு: அலகாபாத்தில் ஆகத்து 29, 1905 – இறப்பு:திசம்பர் 3, 1979), என்பவர் இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார். வளைதடிப்பந்தாட்ட வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார் [1] 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும் 1932 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலசிலும் [2] 1936ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் [3] தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார். [4] 1928 முதல் 1964 வரையிலான காலங்களில் நடந்த எட்டு ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இவர் இடம்பெற்றிருந்த ஆடவர் வளைதடிப் பந்தாட்டத்தில் ஏழு போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.


நீதிக்கதை

மணியோசையும் மக்கள் அச்சமும்

ஒரு கிராமத்தின் எல்லையில் ஒரு காடு இருந்தது. கிராமத்திலிருந்த ஒரு கோவிலில் உள்ள கதவில் ஒரு வெள்ளி மணி கட்டப்பட்டிருந்தது. ஒரு நாள் ஒரு திருடன் மணியைத் திருடிக் கொண்டு காட்டிற்குள் ஓடி விட்டான்.

கோவிலுக்கு சொந்தமான வெள்ளி மணி காணாமல் போனதில் கிராம மக்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர். அன்று இரவு அந்த மணி அடிக்கும் சத்தம் கேட்டது. பல பக்கங்களிலிருந்தும் மணி ஓசை கேட்பது போல் அவர்களுக்கு தோன்றியது. இதைக் கேட்டு அம்மக்கள் பயந்துவிட்டனர். கோவில் மணியை திரும்பப் பெறுவதற்கு கிராம மக்கள் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை என்று கோவிலில் இருந்த தெய்வம் கோபித்துக் கொள்வதாக அந்த மக்கள் எண்ணி பயந்து போனார்கள்.

மறுநாள் கிராம மக்கள் சிலர் மணியைத் தேடி காற்றுக்குள் சென்றனர். ஆனால் மணி எங்கிருக்கிறது என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை; ஊருக்கு திரும்பினர்.

அந்த இரவும் அவர்களுக்கு மணியோசை கேட்டது. ஒருமுறை ஒரு திசையில் இருந்தும் அடுத்த முறை வேறு திசையில் இருந்தும் மணியோசை கேட்பது போல் அவர்களுக்கு தோன்றியது.  உண்மையிலேயே அந்த மக்கள் மிகவும் நடுங்கிப் போனார்கள்.

மறுநாள், அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவன், உண்மையில் என்னதான் நடக்கிறது என்பதை கண்டறிய காட்டிற்குப் புறப்பட்டான். தனியாக காட்டுக்குள் சென்றான். சிறிது நேரத்திற்கு பிறகு முரசு அடிக்கும் சத்தமும் மணியோசையும் கேட்டது. அவன் தைரியமாக சத்தம் வந்த திசையை நோக்கி சென்றான். அங்கு ஒரு குரங்கு கூட்டம் ஒரு முரசு , ஒரு மணி, சில உடுப்புகள் இவற்றை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருப்பதை கண்டான்.

குரங்குதான் மணியை அடித்து ஓசையை எழுப்பி இருக்கிறது; மரத்திற்கு மரம் தாவுவதால் மணியோசை வெவ்வேறு திசைகளில் இருந்து கேட்கிறது என்பதையும் சிறுவன் உணர்ந்து கொண்டான். அவன் அங்கேயே பொறுமையாக காத்துக் கொண்டிருந்தான். ஒரு குரங்கு மணியை வைத்து  விளையாடியவாரே அந்தக் கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்தது ஒரு மரத்தில் உட்கார்ந்தது.

இதற்காக காத்திருந்த சிறுவன், குரங்கின் எதிரே சில பழங்களையும் கொட்டைகளையும் வீசி எறிந்தான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு குரங்கு பழங்களையும் கொட்டைகளையும் பார்த்தது. அவற்றை எடுப்பதற்காக மரத்திலிருந்து இறங்கியது.  சிறுவன் விரைந்து சென்று மணியை எடுத்துக் கொண்டான். கிராமத்திற்கு ஓடிவந்தான்.  காட்டில் உண்மையில் என்ன நடந்தது என்பதை கிராம மக்களிடம் விவரமாக எடுத்துக் கூறினான். சூழலை உணர்ந்து சிந்தித்து செயல்பட்ட சிறுவனை அனைவரும் பாராட்டினார்கள்.

நீதி:  எதையும் தீர விசாரித்து உண்மையை அறிந்து கொள்வதே நன்று.


இன்றைய செய்திகள்

29.08.2024

* காளான் வளர்த்தல் மற்றும் பயிரிடுதலை வேளாண் செயல்பாடுகளின் கீழ் சேர்த்து தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

* பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் இணையாததால் பள்ளி வளர்ச்சிப் பணிகளுக்கான நிதியுதவியை மத்திய அரசு  நிறுத்தியுள்ளது. எனவே மானியத்தை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்.

* மத்திய அரசு தடை செய்த 156 மருந்துகளை தமிழகத்தில் விற்றால் நடவடிக்கை: மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரிக்கை.

* பொதுமக்கள் குறைகளை 21 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும்: புகார் மனுக்கள் குறித்து புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.

* கொழும்பு துறைமுகத்தில் ஒரே நேரத்தில் இந்திய, சீன போர் கப்பல்கள் முகாம்: இலங்கை கடற்படையுடன் தனித்தனியாக கூட்டுப் பயிற்சி.

* மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி பாரீஸில் நேற்று தொடங்கியது.

* அமெரிக்க ஓபன் டென்னிஸ்; ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

* 3-வது டி20 போட்டி; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்.


Today's Headlines

* The Tamil Nadu government has issued a notification including mushroom growing and cultivation under agricultural activities.

* As Tamil Nadu did not join the PM Sri scheme, the central government has stopped funding for school development works.  Hence CM Stalin's letter to PM Modi requesting release of subsidy.

* State Drug Control Department warns of action if  they sell the 156 banned drugs by the central government.

* Public grievances to be resolved within 21 days: Central government issues new rules on grievance petitions.

*  Indian, Chinese warships focked at Colombo port for Separate joint exercise with Sri Lanka Navy.

* The Paralympic Games for the differently- abled started in Paris yesterday

* US Open Tennis;  Spanish player Algarez advances to the next round.

* West Indies beat South Africa and won the series completely in 3rd T20.

Prepared by

Covai women ICT_போதிமரம்


உலகின் கடைசி சாலை...

 உலகின் கடைசி சாலை...


ஐரோப்பாவில் உள்ள E- 69 நெடுஞ்சாலை நார்வேயில் அமைந்துள்ளது. 


இதுதான் உலகின் கடைசி சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த அரிய இடத்தைக் காண ஏராளமான பயணியர் வருகை தருகின்றனர்.


 உலகின் கடைசி சாலையான நார்வேயில் உள்ள இந்த E- 69 நெடுஞ்சாலையில் ஒரு முறையாவது நடக்க பலரும் விரும்புகின்றனர். 


அதாவது, பூமத்திய ரேகைக்கு மேல் வடதுருவத்தின் அருகில் இந்த சாலை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


வடக்கு ஐரோப்பாவிலுள்ள Norkapp ஐ நார்வேயின் Oldefevoord ல் உள்ள கிராமத்துடன் இணைக்கும் இந்த சாலை 129 கிலோ மீட்டர் தொலைவைக் கொண்டது.


இவற்றில் மிக நீளமான சுரங்கப்பாதை, நார்த் கேப் ஆகும். நார்த் கேப் 6.9 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. 


இந்த நார்த் கேப் சுரங்க பாதை கடல் மட்டத்திலிருந்து 212 மீட்டர் கீழே உள்ளது.


 முடிந்த வரை வட துருவத்துக்கு அருகில் அழைத்துச் செல்லும் சாலை இது என்பதாலே இதனை பூமியின் கடைசி சாலை என்கிறார்கள். 


இந்த சாலையில் செல்ல விதிமுறைகள் பின்பற்றப்படுவது கட்டாயமாகும். 


ஒருவேளை நீங்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் உங்களால் அந்த வழியில் செல்ல முடியாது.


இந்த சாலையில் காற்று பயங்கர வேகத்தில் வீசுவதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


 கோடைக்காலத்தில் கூட இந்த சாலையில் பனி பொழியும் என்று கூறப்படுகிறது. 


வானிலை முன்னறிவிப்புகள் இந்தப் பகுதியில் வேலை செய்யாது என்பதால் எந்த நேரத்திலும் இயற்கை சீற்றம் இந்த இடத்தில் நடைபெறும்.


 இங்கு யாரும் தனியாகச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. 1934ம் ஆண்டு அமைக்க தொடங்கப்பட்ட இந்த நீண்ட சாலை முழுமை பெற 62 ஆண்டுகளானது.


 1992 ல் நிறைவு பெற்ற பிறகு இந்த சாலையில் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ✨



கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம்...

 கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம்...



மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை...


மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை...



TNPSC - 17ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியாகும்...


 TNPSC - 17ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியாகும்...



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28-08-2024...

 

  

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28-08-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம்: இடுக்கண் அழியாமை

குறள் எண்:621

இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்.

பொருள்: துன்பம் வரும்போது (அதற்காக்க் கலங்காமல்) நகுதல் வேண்டும்.அத் துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்ல வல்லது அதைப்போன்றது வேறு இல்லை.


பழமொழி :
Many hands make work light.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.


இரண்டொழுக்க பண்புகள் : 

*கல்வி அறிவோடு கலைத்திறனும் மேம்பட எம் பள்ளியில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன்.

* எனது பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் பெருமை தேடித் தரும் வகையில் நல்ல மாணவனாக நடந்து கொள்வேன்.


பொன்மொழி :

வெற்றி என்பது மகிழ்ச்சிக்கான திறவுகோல் அல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்கான திறவுகோல். நீங்கள் செய்வதை நேசித்தால், நீங்கள் வெற்றியடைவீர்கள்." - ஆல்பர்ட் ஸ்விட்சர்


பொது அறிவு :

1. ஈஸ்ட் என்பது ஒரு______

விடை: பூஞ்சை

2. தேனீக்கள் வளர்க்கும் முறை______

விடை : ஏபிகல்சர்


English words & meanings :

amiable-நட்பு,

  affable-நட்புணர்வுள்ள


வேளாண்மையும் வாழ்வும் :

முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்.


நீதிக்கதை

ஆணவத்தின் முடிவு.

ஒரு காலத்தில் வடக்கிலிருந்து வீசும் வாடைக் காற்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த வருடத்துக் குளிர் காலம் நீண்டதாகவும் அதிக குளிருடனும் இருந்ததால் வாடைக்காற்று மிக கர்வம் அடைந்தது. ‘உலகம் முழுவதையும் என்னால் கடும் குளிரில் உறைய வைக்க முடிந்தது. பூமியிலேயே மிகவும் வலிமை வாய்ந்த சக்தியாக நான் விளங்குகிறேன். என்னை விட வலிமையானவர் யாரும் இல்லை, என்று காற்று, அதிகமாக பெருமைப்பட்டுக் கொண்டது.

அதிக நேரமாக இதனுடைய பேச்சை கேட்ட பிறகு சூரியனுக்கு அலுத்துவிட்டது. மேகங்களுக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்த சூரியன், வாடைக்காற்றை கூப்பிட்டது. “வலிமையும் பலமும் பொருந்திய இயற்கை சக்தியான நீ இவ்வாறு பெருமைப்பட்டுக் கொள்வது நல்லதன்று. நம் ஒவ்வொருவருக்கும் செய்ய வேண்டிய ஒவ்வொரு வேலை உண்டு,” என்று சூரியன் கூறியது.

வாடைக்காற்று மிக மிக அதிகமாக தன் வலிமையை நினைத்து கர்வப்பட்டு,

“என்னளவு பலம் உனக்கு இல்லாததால், நீ இவ்வாறு என்னிடம் சொல்கிறாய். இந்த பூமியில் எதை வேண்டுமானாலும் சாதிக்க என்னால் முடியும்,” என்று மிக அலட்சியமாக பதில் கூறியது வாடைக்காற்று.

இதை கேட்டதும் சூரியனுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது

” உனக்கு ரொம்ப வலிமை இருப்பதாகவும் இந்த பூமியில் உன்னால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றும் நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால், உன்னால் சிலவற்றை தான் செய்ய முடியும்,” என்று சூரியன் சொன்னது.

இதை கேட்டு சிரித்த காற்று, “என்னால் செய்ய முடியாதது என்ற ஒரு விஷயத்தை நீ கூறு, பார்க்கலாம்,” என்று சவால்விட்டது.

சூரியன் கீழே குனிந்து பார்த்தது. பூமியில் ஒரு மனிதன் சாலையில் போய்க்கொண்டிருந்தான். மிகவும் குளிராக இருந்ததால் அவன் தன்  மேலங்கியை கழட்டி தன்னை சுற்றி இறுக்கி போர்திக் கொண்டான்.

சூரியனுக்கு ஓர் எண்ணம் உதித்தது, வாடைக்காற்றிடம் சொல்லிற்று, “கீழே சாலையில் நடந்து செல்லும் அந்த மனிதனைப் பார். அங்கு நீ மிகவும்  குளிர்ச்சியாக செய்திருப்பதால் அவன் தன்னுடைய மேலங்கியை இழுத்துப் போர்த்திக் கொண்டிருக்கிறான். உன்னுடைய வலிமையை நீ உபயோகி; மேலங்கியை அவன் எடுத்து விட்டால் நீ தான் மிகவும் வலிமையானவன் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்றது.

இது மிகவும் எளிமையான பணி என்று வாடைக்காற்று எண்ணியதால் சவாலை ஏற்றுக் கொண்டது. காற்று வேகமாக வீசிற்று. சாலையில் அந்த மனிதன் இருந்த இடத்தில் இன்னும் அதிகவேகமாக வீசிற்று. மேலங்கியை அவன் கழற்றவில்லை.

குளிர் தாங்காமல் அந்த மனிதன் தன் மேலங்கியை இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டான். வாடைக் காற்றால் சவாலில் வெற்றி பெற முடியவில்லை. சூரியனை முயற்சி செய்யுமாறு காற்று கேட்டுக் கொண்டது.

சூரியன் மிகவும் பிரகாசமாக வெளிவந்தது, திடீரென்று வெப்பமாக இருப்பதை உணர்ந்த அந்த மனிதன், “என்ன வேடிக்கை! சற்று முன் கடுங்குளிராக இருந்தது; இப்போது வெப்பமாக இருக்கிறதே,” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். சூரியன் மேலும் வெப்பத்தை அதிகரித்தது.

சகிக்க முடியாத வெப்பத்தால் தன் மேலங்கியை கழற்றினான்;

இவற்றையெல்லாம் பார்த்த காற்று  தன் தோல்வியை ஒப்புக் கொண்டது. அதன் பிறகு  வாடைக்காற்று கர்வத்தை விட்டொழித்து,தன்னுடைய கடமையை தவறாமல் செய்து வந்தது.

நீதி : தற்பெருமை அவமானத்தை ஏற்படுத்தும்.


இன்றைய செய்திகள்

28.08.2024

* கூட்டுறவு சங்கங்களின் சேவைகளை அறிய 'கூட்டுறவு’ என்ற செயலி சேவையை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

* இளைய தலைமுறையினரிடம் நடக்கும் பழக்கம் குறைந்து வருவதால், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘விறு விறு நடையால் ஏற்படும் 20 நன்மைகள்’ குறித்தசெயல் திட்டத்தை தமிழக பொது சுகாதாரத்துறை தொடங்கியுள்ளது.

* பொதுமக்களுக்கு பெரும் சுமையாகும் சுங்க கட்டணத்தை உயர்த்தக் கூடாது: அரசியல் தலைவர்கள், வணிகர் சங்கம் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.

* ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (யுபிஎஸ்) மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்புகள் வலியுறுத்திய நிலையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக இத்திட்டத்தை ஏற்பதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

* விடியவிடிய தாக்குதல் நடத்திய ரஷ்யா: ஏவுகணை, ட்ரோன் தாக்குதலால் நிலைகுலைந்த உக்ரைன்.

* அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லோரென்சோ முசெட்டியும், பெண்கள் ஒற்றையர் பிரிவில்  சபலென்காவும்


அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

* மகளிர் டி20 உலகக்கோப்பை: ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு.


Today's Headlines

* Minister K.R. Periyakarupan inaugurates 'Cooperative' mobile app to know the services of cooperative societies.

* Tamilnadu public health department launches a project to raise awareness about the 20  benefits of regular walking among the younger generation.

* Central government was urged not to increase customs duty, which is a burden on the general public insisted by political leaders and trade associations.

*  Maharashtra government has announced that it will be the first state in the country to implement the Unified Pension Scheme (UPS) as the Unions of Central Government Employees have urged the state governments to implement the scheme.

* Russia launches massive attack: Ukraine has been destabilized by missile and drone strikes."

* US Open Tennis: Lorenzo Musetti and Sabalenka advance to the next round in men's and women's singles respectively.

*  Women's T20 World Cup: India   announced the team headed by Harmanpreet Kaur.

Prepared by

Covai women ICT_போதிமரம்


ஒரு ஆசிரியர் தன் பணியை ஆத்மார்த்தமாக செய்தால் எத்தனை நபர்களை அது ஊக்குவிக்கும் என்பதற்கும், அப்படி ஊக்குவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேரின் வாழ்க்கை தரத்தை மாற்றுபவர்களாக அவதாரம் எடுப்பார்கள் என்பதற்கும் ஒரு சிறிய எடுத்துக்காட்டு மாவட்ட ஆட்சியரின் இந்த முகநூல் Facebook பதிவு... ‌

 


ஒரு ஆசிரியர் தன் பணியை ஆத்மார்த்தமாக செய்தால் எத்தனை நபர்களை அது ஊக்குவிக்கும் என்பதற்கும், அப்படி ஊக்குவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேரின் வாழ்க்கை தரத்தை மாற்றுபவர்களாக அவதாரம் எடுப்பார்கள் என்பதற்கும் ஒரு சிறிய எடுத்துக்காட்டு மாவட்ட ஆட்சியரின் இந்த முகநூல் Facebook பதிவு... ‌


விருதுநகர் மாவட்ட ஆட்சியர் @jeyaseelan_vp  அவர்கள் பேஸ்புக் பதிவிலிருந்து..


எங்கள் கிராமத்துப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு நான்காம் வகுப்பு படிக்கும் போது ஒரு டீச்சர் வந்தார், ஜூலியா மிஸ். மற்ற டீச்சர்கள் எல்லாம், "ஏய் கையகட்டி வாயில விரலவை, லைன்ல நில்லு, பேசாம மனசுக்குள்ள படி" இப்படி மர அடிஸ்கேலோடு சுற்றி வர ஜூலியா மிஸ் மட்டும், கண்ணுங்களா வாங்க நம்ம ஸ்கூல சுத்தி இருக்கிற ஒவ்வொரு பொருளுக்கும் நான் இங்கிலீஷ் பெயர் சொல்லி தரேன் என்று பள்ளியை சுற்றிக் காட்டி  ஆங்கில வகுப்பு நடத்துவார். நாளைக்கு நம்ம நாட்டுல இருக்கிற எல்லா மாநிலங்கள் பெயர்களையும் எழுதிட்டு வந்தீங்கன்னா உங்களுக்கு சாக்லேட் கொடுப்பேன் என்று மகிழ்விப்பார். ஆங்கில நாளிதழ்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொடுத்து வகுப்பில் வாசிக்கச் செய்வார்.‌ இப்படி, இன்னும் அவர் என்னவெல்லாம் செய்தார் என்று நினைவில் இல்லை, ஆனால் படிப்பதை ஜாலியாகவும் படித்தால் பெருமையும் பாராட்டும் கிடைக்குமென புரிய வைத்தார் என்பது மட்டும்‌ என்  நினைவில் இப்போதும் இருக்கிறது.‌‌ 


என்னை அந்த டீச்சருக்கு மிகவும் பிடிக்கும். வீட்டில் அப்பாவிடம் கேட்டு தெரிந்து கொண்டு பொது அறிவு கேள்விகளுக்கு நான் தான் அவரிடம் பதில் சொல்லி பரிசும் பாராட்டும் வாங்குவேன். ஒரு நாள் ஏதோ மன்னரின் அரசவைப் பற்றி ஒரு பாடம் இருந்தது. அதை நாடகமாக போடலாம் என்று சொல்லி மாணவர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு ரோல் கொடுத்தார், எனக்கு மந்திரி வந்தது. 'மிஸ் நான் மந்திரியாக எல்லாம் நடிக்க மாட்டேன் எனக்கு ராஜாவா தான் நடிக்கணும்' என்று அவரிடம் அடம் பிடித்தேன். 'இல்லடா மந்திரிக்கு தான் நிறைய டயலாக் இருக்கும் அதனால மந்திரியா நடி' என்று சொன்னார். டேய் டீச்சர் சொன்னால் கேளுடா என்றார், நான் கேட்கவில்லை அடம்பிடித்து ராஜாவாகத்தான் நடித்தேன்.‌‌ ஆனால் கோபிக்காமல் அந்த நாடகத்தை நன்றாக செய்ய வைத்தார்.‌ 


நான்காம் வகுப்பில் ஒரு நாள் எங்கள் வகுப்பை மதுரைக்கு சுற்றுலா அழைத்துச் செல்கிறேன் என்றார். அதுவரை இப்படி எல்லாம் நாங்கள் கேள்வி கூட பட்டதில்லை. ஐந்து ரூபாய் சுற்றுலாக் கட்டணம் தின்பண்டங்கள் வாங்குவதற்கு ஐந்து ரூபாய் என பத்து ரூபாய் கட்டணத்தில் மதுரைக்கு சுற்றுலா சென்றது என் மனதில் மங்கிய காட்சிகளாக சிலவும், அழுத்தமான காட்சிகளாக சிலவும் நினைவில் இன்றும் இருக்கிறது இருக்கிறது. திருமலை நாயக்கர் மஹால், 'இங்கதான் பெரிய அரசர் வாழ்ந்தார் நம்ம கிளாஸ்ல படிச்சிருக்கோம்ல புக்குல அது மாதிரி' என்று சொல்லிவிட்டு காந்தி மண்டபத்திற்கு சென்று காந்தியடிகளை சுட்டுக் கொன்ற போது அவர் அணிந்திருந்த  ரத்தக்கரை படிந்த‌ வேஷ்டியை காண்பித்ததும் நினைவில் இருக்கிறது. கடைசியாக வாங்க வேகமா போகணும் என்று எங்களை வேகமாக அந்த வேனில் ஏற்றிக்கொண்டு மதுரை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.‌ அப்போது தூரத்திலிருந்து அங்கே ஒரு விமானம் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பது சிறிதாக தெரிந்தது, கொஞ்சம் லேட்டா வந்திருந்தா இந்த பிளைட் கிளம்பி இருக்கும் என்று மிஸ் சொன்னார், எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது பிளைட் பாத்தீங்களா நீங்களும் பெரிய பசங்களாகி இதுல பறக்கணும் என்று சொல்லிவிட்டு நிறைய தின்பண்டங்கள் வாங்கித் தந்தார், சாப்பிட்டுவிட்டு இரவு ஊருக்கு திரும்பினோம்.‌‌ 


இப்படி ஜூலியா மிஸ் எப்போதும் ஆக்டிவாக வகுப்பை வைத்திருந்தார்.‌ ஒருநாள் ஆரம்பப் பள்ளி முடிந்து நான் அருகில் உள்ள ஊரில் ஆறாம் வகுப்பு சேர்ந்து விட்டேன். ஜூலியா மிஸ்ஸை கடைசியாக அவர் பஸ் ஏறுவதற்கு பள்ளிக்கு அருகில் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்ததை மட்டும்தான் பார்த்த நினைவு, அந்த ஆண்டே அவர் வேறு ஊருக்கு மாறுதலாகி சென்று விட்டார்.‌ ஆனால் மிஸ் என் நினைவுகளில் அடிக்கடி வந்து கொண்டே இருந்தார். ஆறாம் வகுப்பில் கணக்கு பாடம் மிகவும் கஷ்டமாக இருந்தது அப்போது ஜூலியா மிஸ்ஸை நினைத்துக் கொள்வேன். அப்படி ஒரு மிஸ் வந்து இந்த கணக்கை எளிதாக சொல்லித் தர மாட்டார்களா என்று. 


காலங்கள் உருண்டோடி கடைசியில் ஜூலியா மிஸ் எங்கிருக்கிறார், எந்த ஊரில் என்ன செய்கிறார் என்று எதுவும் எனக்கு தெரியவேயில்லை. யாரிடம் கேட்பது என்றும் புரியவில்லை. பிறகு பள்ளி முடித்து கல்லூரி முடித்து ஐஏஎஸ் தேர்விற்கு தயாரான போதும் இந்த மிஸ்ஸை நினைத்திருக்கிறேன். என்னை பாதித்த உருவாக்கிய சில நல்லாசிரியர்களில் ஜூலியா மிஸ் தான் லிஸ்டில் முதல் இடம். 


ஒரு நாள் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் ஆன பிறகு என் ஆசிரியர்களை எல்லாம் சென்று பார்த்தேன். அதில் ஜூலியா மிஸ்ஸை மட்டும் என்னால் பார்க்க முடியவில்லை. பல ஆண்டுகள் கழித்து பின்னொரு நாள் அவரை சந்தித்தேன், சினிமாக் கதைகளின் சுவாரசியத்தைப் போலிருக்கும் அவரை நான் சந்தித்தது. சிலப்பதிகாரத்தில் காப்பிய முதன்மைக் கதையைவிட சில கிளைக் கதைகள்‌ இன்னும் சுவாரசியமாக இருப்பதைப் போல், அவரை சந்தித்த ஆச்சரியமூட்டும் ‌அந்த கிளைக் கதையை நான் சொல்லியாக வேண்டும்.


ஒரு நாள் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த ‌திரு நடராஜன் அவர்கள் என்னை பல்கலைக்கழகத்திற்கு போட்டி தேர்வுகள் குறித்து மாணவர்களிடம் பேச அழைத்திருந்தார்.‌ அந்த நிகழ்ச்சியில் ஒரு மாணவர் என்னிடம் 'நீங்கள் பள்ளிலிருந்து நன்றாக படிப்பீர்களா' என்று கேட்டார் அதற்கு பதில் சொல்லும் போது எனக்கு படிக்கும் ஆர்வத்தை ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் தான் ஏற்படுத்தினார் என்று ஜூலியா மிஸ்ஸின் பெயரைச் சொல்லி குறிப்பிட்டு பதில் சொன்னேன். அந்த நிகழ்ச்சி முடிந்தபின் அங்கு படித்த முதலாம் ஆண்டு மாணவன் வந்து, சார் நீங்கள் குறிப்பிட்ட ஜூலியா மிஸ்ஸின் மகன் தான் நான், இங்கு தான் படிக்கிறேன் என்று சொன்னவுடன் எனக்கு மிகுந்த ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஆக இருந்தது. அதன் பிறகு ஜுலியா மிஸ்ஸை வீட்டிற்கு சென்று சந்தித்தேன். பிறகு தொலைக்காட்சியிலோ செய்திகளிலோ என்னை பார்த்தால்‌ குறுஞ்செய்தி அனுப்புவார் எப்போதாவது பேசுவார்.


ஜூலியா மிஸ் கடந்த வாரம் போனில் அழைத்து தம்பி நான் மாணவர்களை அப்போதிருந்து இப்போது வரை எங்காவது சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்று கொண்டிருப்பேன். வெளியிடங்களை பார்க்கின்ற போது அவர்களுக்கு ஒரு உத்வேகமும் நம்மைச் சுற்றி என்னென்ன நடக்கிறது, நாம் எதிர்காலத்தில் எப்படி உருவாக வேண்டும் என்றெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வார்கள், இப்போதும் மதுரை விமான நிலையத்திற்கு மாணவர்களை அழைத்துச் செல்கிறேன், நீ‌ இப்ப கலெக்டரா இருக்கிறதுனால, சொல்லி கொஞ்சம் உள்ளே சென்று பார்ப்பதற்கு அனுமதி வாங்கி தர முடியுமா என்று கேட்டார். விமான நிலைய அதிகாரிகளிடம் பேசி வேண்டுகோள் விடுத்தவுடன் அனுமதி தந்தார்கள். 


ஜூலியா மிஸ் மாணவர்களுடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்த அன்று, நானும் உத்தரகாண்ட் மாநிலம் முசெளரியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி அகாடமியில் உரையாற்ற‌ச் செல்வதற்காக விமான நிலையம் வந்தேன். 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலியா மிஸ்ஸை அதே விமான நிலையத்தில் பார்த்தேன்.‌‌ விமான நிலைய அதிகாரிகளிடம் 28 ஆண்டுகளுக்கு முன்பாக இதே விமான நிலையத்திற்கு சிறுவனாக என்னை இந்த டீச்சர் தான் அழைத்து வந்தார் என்று சொன்னவுடன் மிகுந்த ஆச்சரியமாக டீச்சரை பாராட்டினார்கள்.


பல இலக்கிய படைப்புகளில் காலம் ஆச்சரியமானது,இனிமையானது அபூர்வ தருணங்களைத் தரவல்லது என்று பல கவித்துவமான புனைவு எழுத்துக்களில் வருவதைப் போல் நடந்த இந்த நிகழ்வு மகிழ்வையும் நெகிழ்வையும் தருகிறது. 


ஜூலியா மிஸ் தனிப்பட்ட வாழ்வில் நிறைய நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் சந்தித்தவர். ஆனால் தான் விரும்பிய ஆசிரியப் பணியில் மாணவர்களை உருவாக்குவதற்கும் எதிர்காலத்தில் அவர்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் நடக்க வேண்டுமோ அதற்குரிய நாற்றங்காலாய் மாணவப் பருவத்தை பயன்படுத்துவதையும் பக்குவப்படுத்துவதையும் மிகுந்த மெனக்கெடலோடு செய்பவர். 


புறநானூற்றில் சொன்னதைப்போல 'தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர்” உள்ளதால் தான் இவ்வுலகம் நிலைபெற்று இயங்கிக் கொண்டிருக்கிறது.‌ ஜூலியா மிஸ்ஸை போன்ற ஆசிரியர்கள் தான்‌ ஏழை எளிய கிராமத்து குழந்தைகளையும், முதல் தலைமுறையாக பள்ளி கல்லூரிகளில்  படிக்க வருபவர்களையும் கரையேற்றிக் கொண்டிருக்கிறார்கள். 


யார் சிறந்த ஆசிரியர் என்று கேள்விக்கு நிறைய பதில் இருக்கலாம் ஆனால் 'கற்கும் விருப்பத்தை தோற்றுவிப்பவரே' சிறந்த ஆசிரியர் என்பேன் நான்.‌ எங்கள் ஜூலியா மிஸ் சிறந்த ஆசிரியர் !


இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும்போது விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறப்பதாக விமானி அறிவிக்கிறார், 28 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலியா மிஸ் மதுரைக்கு அழைத்துச் சென்று காட்டிய போது தூரத்தில் ஓடுதளத்தில் ஓடிய விமானம் இன்று மேலெழும்பி 30 ஆயிரம் அடி உயரத்தில் என் மனதில் பறக்கிறது..



"Samagra Shiksha" திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு, முதலமைச்சர் கடிதம் - செய்தி வெளியீடு எண்: 1298, நாள்: 27-08-2024...

 

"Samagra Shiksha" திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு, முதலமைச்சர் கடிதம் - செய்தி வெளியீடு எண்: 1298, நாள்: 27-08-2024...



>>> செய்தி வெளியீடு எண்: 1298, நாள்: 27-08-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


UPSC நடத்தும், 2024-2025ஆம் ஆண்டின் அனைத்து ஒன்றிய அரசு பணியாளர்கள் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு...



 UPSC நடத்தும், 2024-2025ஆம் ஆண்டின் அனைத்து ஒன்றிய அரசு பணியாளர்கள் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு...



தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் National Teachers' Award 2024 வெளியீடு...

 

50 பேர் கொண்ட தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் National Teachers' Award 2024 வெளியீடு...


தமிழ்நாட்டில் இரண்டு பேர் தேர்வாகியுள்ளனர், ராஜாகுப்பம் கோபிநாத் அவர்கள், மதுரை முரளி அவர்கள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


EMIS பணியினை ஆசிரியரல்லாத பணியாளர்களைக் கொண்டு மட்டுமே முடிக்க வேண்டும் - JD(V) Instructions...

 

 EMIS பணியினை ஆசிரியரல்லாத பணியாளர்களைக் கொண்டு மட்டுமே முடிக்க வேண்டும் - முதன்மை கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை ) நேர்முக உதவியாளர் (இடைநிலை)  இணைய வழிக் கூட்டக குறிப்புகள் - JD(V) Instructions...


முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை ) மற்றும் நேர்முக உதவியாளர் ( இடைநிலை ) இணையவழிக் கூட்ட குறிப்புகள் :


 முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை மற்றும் நேர்முக உதவியாளர் ( இடைநிலை ) இணையவழிக் கூட்டம் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( தொழிற்கல்வி ) அவர்களால் 23.08.2024 மாலை 5.00 மணிக்கு நடத்தப்பெற்றது . கூட்டத்தின் போது கீழ்க்காண் விவரங்கள் குறித்து ஆலோசணையும் , அறிவுரைகளும் இணை இயக்குநர் அவர்களால் வழங்கப்பட்டது.


PA TO CEOs 23.08.24 MEETING MINUTES👇👇👇





UPS, NPS ஓய்வூதியத் திட்டம் - எது சிறந்தது?

 UPS, NPS ஓய்வூதியத் திட்டம் - எது சிறந்தது?




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலமாகிறது மகாராஷ்டிரா...


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சனிக்கிழமை ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) அறிமுகப்படுத்திய 24 மணிநேரத்தில் முதல் மாநிலமாக  இத்திட்டத்தைத் தனது மாநில அரசு ஊழியர்களுக்கு ஏற்றுக்கொள்ள உள்ளதாக மகாராஷ்டிர மாநில அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது. மத்திய அரசின் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்த பின்னர், புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்த சில மணி நேரத்தில் மகாராஷ்டிரா அரசின் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது...


ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலமாகிறது மகாராஷ்டிரா... 


மத்திய அரசின் அறிவிப்பு வெளியான ஒரு நாள் கழித்து, மாநில ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மாறுவதாக மகாராஷ்டிர அரசு அறிவித்தது. 

மாநில அரசுகள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (யுபிஎஸ்) அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்களின் அமைப்புகள் கோரிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, தேர்தலைச் சந்திக்கும் மகாராஷ்டிரா ஞாயிற்றுக்கிழமை தனது ஊழியர்களுக்கு மாறுவதற்கான வாய்ப்பை வழங்கிய முதல் மாநிலமாக மாறியது, 

இதனை மற்றவர்கள் குறிப்பாக என்டிஏவால் ஆளப்படுபவர்கள் பின்பற்றுவார்கள். 2004 மற்றும் அதற்குப் பிறகு சேர்ந்த அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய பணவீக்க சரிசெய்தல் மற்றும் பிற விஷயங்களுடன், கடைசி 12 மாதங்களில் ஒரு ஊழியரின் சராசரி சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த 24 மணிநேரத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. 


ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் (யுபிஎஸ்) 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறும் நிலையில், அனைத்து மாநிலங்களும் அதை வழங்கினால் எண்ணிக்கை 90 லட்சமாக உயரும். இத்திட்டத்தை அமல்படுத்துமாறு மாநிலங்களை வலியுறுத்திய மத்திய அரசு ஊழியர்களின் உயர்மட்ட பிரதிநிதிகள், இந்த விவகாரத்தை அரசியல் கட்சிகள் அரசியலாக்கக் கூடாது என்றார். 


ஊழியர்கள் எந்தப் பங்களிப்பும் செய்யத் தேவையில்லை என்பதால், ஓபிஎஸ்தான் சிறந்த வழி என்று அவர்கள் கூறினாலும், அவர்கள் யுபிஎஸ்ஸில் திருப்தி அடைந்துள்ளனர். "நாம் எதைப் பெற முடியும் மற்றும் அரசாங்கம் வழங்க முடியும் என்பதைப் பார்ப்பதற்கு நாம் நடைமுறையில் இருக்க வேண்டும். OPS இன் 90% விதிகளை UPS உள்ளடக்கியுள்ளது, அதனால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். UPS-ன் கீழ் உள்ள ஊழியர்கள் ஓய்வுபெறும் போது அவர்களின் மாதாந்திர பங்களிப்பிலிருந்து பெறக்கூடிய மொத்தத் தொகையை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது, ”என்று அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு மற்றும் JCM இன் தேசிய கவுன்சில் செயலாளரும் (பணியாளர் தரப்பு) ஷிவ் கோபால் மிஸ்ரா கூறினார். 


தற்போதைய சூழ்நிலையில், யுபிஎஸ்ஸை விட வேறு எதுவும் சிறந்த தீர்வாக இருக்க முடியாது என்று மிஸ்ரா கூறினார். ஜனவரி 2004 முதல் பணியமர்த்தப்பட்ட அனைவருக்கும் நியாயமான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக மாநில அரசு ஊழியர்களும் அவர்களது சங்கங்களும் உள்ளதால், இதை விரைவாக செயல்படுத்த மாநில அரசுகளையும் தொடர்வோம் என்றார். 

கேபினட் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.வி.சோமநாதன், NPS மதிப்பாய்வு மற்றும் பணியாளர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவிற்கு தலைமை தாங்கினார், சனிக்கிழமையன்று மையத்தின் UPS வார்ப்புருவை மாநிலங்களால் பிரதிபலிக்க முடியும் என்று கூறினார். NPS இன் கீழ் உள்ள 99% க்கும் அதிகமான ஊழியர்கள் UPS க்கு மாறுவது நன்மை பயக்கும் என்று அவர் கூறியிருந்தார்.

ஜே.சி.எம் தலைவர் எம்.ராகவய்யா கூறுகையில், பல மாநிலங்கள் யுபிஎஸ் செயல்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் அமைப்பு எதிர்பார்க்கிறது மற்றும் 25 ஆண்டுகளுக்குப் பதிலாக 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு சம்பளத்தில் 50% ஓய்வூதியத்தை உத்தரவாதம் செய்ய மத்திய மற்றும் மாநிலங்களை வலியுறுத்தினார். 

ஓய்வுபெறும் போது வழங்கப்படும் மொத்தத் தொகை கடைசி ஆறு மாத ஊதியத்தில் நான்கில் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்றார். கடந்த 20 ஆண்டுகளில் பணியில் சேர்ந்த 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் UPS மூலம் பயனடைவார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 



Maharashtra Becomes 1st State To Offer Unified Pension Scheme To Employees...


The Maharashtra government announced a switch to the Unified Pension Scheme (UPS) for state employees just a day after the Union Government announcement...


Hours after central government employees' organisations demanded that state governments implement the Unified Pension Scheme (UPS), poll-bound Maharashtra on Sunday became the first state to offer a switch to its employees amid expectation that others, especially those governed by NDA, will follow suit.


The decision came 24 hours after Union cabinet approved UPS to offer 50% of an employee's average salary for the last 12 months as pension, along with inflation adjustment and other sweeteners to address the demands of govt employees who joined in 2004 and later.


While 23 lakh central govt employees stand to benefit from Unified Pension Scheme (UPS), the number may rise to 90 lakh if all states offer it. Urging states to implement the scheme, top representatives of central govt employees said political parties should not politicise the issue. Though they said OPS is the best option as it did not require employees to make any contribution, they are satisfied with UPS.


“We should be practical to see what best we can get and govt can provide. UPS incorporates 90% of the provisions of OPS and so we are happy. Govt is working on a lump sum amount that employees covered by UPS will get at the time of their retirement from their monthly contribution,” said Shiv Gopal Mishra of All India Railwaymen’s Federation and secretary (staff side) of national council of JCM.


Mishra said in the current scenario, nothing could be a better solution than UPS. He said since state govt employees and their associations are also part of the agitation to get a fair deal for all those recruited from Jan 2004 onwards, they will also pursue state governments to implement this quickly.


Cabinet secretary-designate T V Somanathan, who headed the panel to review NPS & held negotiations with staff organisations, said on Saturday that Centre’s UPS template can be replicated by states. He had said that over 99% of the employees covered under NPS would find it beneficial to shift to UPS.


JCM chief M Raghavaiah said staff body expected more states to implement UPS and urged Centre and the states to guarantee pension of 50% of the salary for those who have served 20 years in place of 25 years. He said the lump sum amount to be paid at the time of retirement should be one-fourth of monthly pay of past six months.


Sources said UPS will benefit over eight lakh railways employees who have joined service in past 20 years. 

EMIS தளத்தில் பதிவேற்றும் பணியை ஆசிரியர்களுக்கு வழங்க கூடாது - பள்ளிக்கல்வி துறை உத்தரவு...

 

எமிஸ் EMIS தளத்தில் பதிவேற்றும் பணியை ஆசிரியர்களுக்கு வழங்க கூடாது - பள்ளிக்கல்வி துறை உத்தரவு...


தமிழக பள்ளிக்கல்வி துறையில் பணிபுரியும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) மற்றும் நேர்முக உதவியாளர் (இடைநிலை) இணையவழிக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் நேர்முக உதவியாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.அதன் விவரம் வருமாறு:



தமிழகத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து குறை, நிறைகளை தலைமை ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசித்து தேவையான விவரங்களை முதன்மைக் கல்விஅலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.


முக்கியமாக கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றும் பணிகளை ஆசிரியர்கள் செய்யும்போதுகற்றல் - கற்பித்தல் பணிகளுக்குபெரும் இடையூறு ஏற்படுவதாகதெரியவருகிறது. எனவே, ஆசிரிய ரல்லாத பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து எமிஸ் பணிகளை பணியாளர்களை கொண்டு மட்டுமே மேற்கொள்ள வேண்டும். 2023-24 மற்றும் 2024-25 கல்வியாண்டுக்கு நலத்திட்டங்கள் பெற்று வழங்கிய விவரம் அவ்வப்போது எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என பலமுறை அறிவுறுத்தப்பட்டு வருகிறது.



அதேநேரம் இதுவரை 100 சதவீதம் முழுமையாக விவரங்கள் பதிவேற்றம் செய்யவில்லை. இதனால் அரசு செயலரின் கூட்டத்துக்கு முழுமையான சரியான அறிக்கையினை சமர்ப்பிக்க இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே நேர்முக உதவியாளர்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி நலத்திட்டங்கள் வழங்கியவுடன் எமிஸ் தளத்தில் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது...



>>> EMIS பணியினை ஆசிரியரல்லாத பணியாளர்களைக் கொண்டு மட்டுமே முடிக்க வேண்டும் - JD(V) Instructions...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Husband should be given leave to look after wife during maternity - High Court

மகப்பேறு காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் Husband should be given leave to look after wife durin...