திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் பெயர்ப் பட்டியல் வெளியீடு
List of winners of Thirukkural competitions
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் பெயர்ப் பட்டியல் வெளியீடு
List of winners of Thirukkural competitions
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
வழக்குகளில் பிரமாணப் பத்திரங்கள் (Affidavits) தாக்கல் செய்யும் போது பின்பற்றப்பட வேண்டியவை தொடர்பாக தலைமைச் செயலாளரின் கடிதம், நாள் : 30-12-2024
Chief Secretary's letter, Dated : 30-12-2024 regarding procedures to be followed while filing Affidavits in cases
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
* TNSED schools App
* What's is new..?
*🎯 Puthiya Bharatha Ezhutharivu Thittam Module Changes....
*🎯Bug Fixes and Performance Improvement....
*_UPDATED ON 30 December 2024
*_Version: Now 0.2.8
Link:
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis
Official app for the teachers by State School Education Department, Tamil Nadu
The app will be used by the teachers, Heads of schools, and other administrative staff to enter student, staff and school data and track the same. The app currently has modules for entering students and staff attendance, modules for screening the health of the students and referring them to the doctors, module for identifying and tracking the out of school students and module for teachers to register for teacher training.
வருமான வரி - TDS - Q1, Q2 & Q3 உடனே தாக்கல் (File) செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள், நாள் : 18-12-2024
Income Tax - TDS - Q1, Q2 & Q3 - Immediate Filing - Proceedings of Director of School Education, Dated : 18-12-2024
Income Tax - 1-வது, 2-வது மற்றும் 3-வது காலாண்டிற்கான வருமான வரி பிடித்த அறிக்கையினை உடனே தாக்கல் (File) செய்ய கோருதல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மற்றவருடைய வாகனத்தை ஓட்டும் பொழுது விபத்து நடந்தால் இழப்பீடு உண்டு - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Compensation for accident while driving another's vehicle - High Court judgment
முன்பு "டெலிவரி பாய்" தற்போது "நீதிபதி"
கேரளா - பாலக்காடு மாவட்டம் விளயூர் பகுதியை சார்ந்த ஜமீலாவின் மகன் யாசீன் ஷான் முஹம்மது,
பள்ளிப்படிப்பு காலத்தில் அதிகாலை வீடுவீடாக பால் பாக்கெட், நீயூஸ் பேப்பர் போடுவது, கேட்டரிங் தொழிலுக்கு செல்வது, கடைசியாக டெலிவரி பாய் வேலை பார்த்தது...
இடையே LLB படிப்பு, பின்னர் கேரள நீதித்துறை தேர்வில் (2024) மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்து நீதிபதியாகி சாதனை படைத்துள்ளார்.
குழந்தை பருவத்தில் தந்தை கைவிட்ட நிலையில் தாயாரின் அரவணைப்பில் சட்டப் படிப்பு முடித்து தற்போது முன்சிஃப் மாஜிஸ்திரேட்டாக சாதித்துள்ளார்.
அன்று டெலிவரி பாய்.. இன்று நீதிபதி - கேரளாவில் சாதனை படைத்த இளைஞர் - சிலிர்க்க வைக்கும் வெற்றிப்பயணம்
2024ஆம் ஆண்டு கேரள நீதித்துறை சேவைகள் தேர்வில் இரண்டாம் இடத்தைப் பிடித்த யாசின் ஷான் முஹம்மதுவின் வெற்றிக் கதைதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் பிறந்தவர், யாசின் ஷான் முஹம்மது. இவருடைய அன்னைக்கு 14 வயதில் திருமணம் நடைபெற்றது. இதனால் அவர், ஆறாம் வகுப்புடனேயே பள்ளியை முடித்துக்கொண்டார். எனினும், அவருடைய 15வது வயதில் யாசின் ஷான் பிறந்தார். அதன்பிறகு அவருடைய 19வது வயதில் தனது கணவரை விவாகரத்து செய்தார். இதனால், சிறுவயது முதல் யாசின் தன் தந்தையைத் தொடர்புகொள்ளவே இல்லை. அவரை, அவரது அன்னையும் பாட்டியுமே வளர்த்தனர்.
மாநில அரசின் வீட்டுவசதி வசதி வாரியம் வீடு ஒன்றை வழங்கியிருந்தது. என்றாலும் வருமானத்துக்காக அவரது தாயார் கூலி வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. இதனால், யாசின் பழைய ஆடைகளையே அணிய வேண்டியிருந்தது. மேலும் புத்தங்கள் வாங்கிப் படிப்பதற்கும் அவரிடம் காசு இல்லை. எனினும், அவருக்குள் படிக்க வேண்டும் என ஓர் ஆசை இருந்ததால், சிறுவயதிலேயே வீடுகளுக்கு பேப்பர் மற்றும் பால் பாக்கெட் போடும் வேலைக்குச் சென்றார். சில நேரங்களில் கட்டட வேலை செய்யும் தொழிலாளியாகவும் இருந்துள்ளார்.
யாசின் ஷான் முஹம்மது success story a delivery boy to a selected on civil judge in kerala
இப்படி, நாட்களைக் கடத்திய அவர் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அடுத்து, எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ படித்து, ஓராண்டு பணிபுரிந்தார். அதைத் தொடர்ந்து பட்டப்படிப்பு முடித்தார். அத்துடன் சட்டம் படிக்க முடிவு செய்த அவர், சட்ட நுழைவுத்தேர்வில் 46வது ரேங்க் பெற்று எர்ணாகுளத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். இங்கிருந்து அவர் எல்.எல்.பி முடித்தார். இந்த காலகட்டத்தில் அவர் குழந்தைகளுக்கும் டியூசன் சொல்லிக் கொடுத்தார். தவிர, டெலிவரி பாய் ஆகவும் பணியாற்றினார். இருப்பினும், கோவிட் காலத்தில் இந்த வேலை நிறுத்தப்பட்டது.
யாசின் 2023ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்தார். நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரின்கீழ் பணிபுரிந்தபோது, அவரது சக ஊழியர்கள் இருவர் நீதித்துறை சேவைகள் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அவரது மூத்தவர்களும் சக ஊழியர்களும் யாசினை தேர்வெழுத ஊக்கப்படுத்தினர். இதைத் தொடர்ந்து தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினார்.
இந்த நிலையில்தான், கேரள நீதித்துறை தேர்வில் யாசின் இரண்டாம் இடம்பிடித்தார். அவரால், முதல் முயற்சியிலேயே மெயின் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. ஆனால் இரண்டாவது முயற்சியில் இரண்டாம் ரேங்க் பெற்று தனது கனவை நனவாக்கினார். இதையடுத்து, அவர் இணையத்தில் வைரலாகி வருகிறார்.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் 1,00,008 வடை மாலை சிறப்பு அலங்காரத்தில்
On the occasion of Hanuman Jayanthi, Namakkal Anjaneyar in 1,00,008 Vadai Malai special decoration
மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாடு போற்றும் நாமக்கல் நாயகன் அருள்மிகு ஆஞ்சநேயர் பகவான் 1,00,008 வடை மாலை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு இன்று (30-12-2024) அதிகாலை முதல் அருள் பாலித்து கொண்டிருக்கிறார்
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
நவீன கணினி அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ள 175 அரசு மேல்நிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியல், மாணவர் எண்ணிக்கை & கணினிகளின் எண்ணிக்கை வெளியீடு
175 Government Higher Secondary Schools Name List, Number of Students & Number of Computers where modern Computer Science Hi-Tech Labs will be set up as per G.O.(Ms) No: 271, Dated : 20-12-2024
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
175 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நவீன கணினி அறிவியல் ஆய்வகங்கள் - அரசாணை (நிலை) எண்: 271, நாள் : 20-12-2024 வெளியீடு
Modern Computer Science Hi-tech Laboratories in 175 Government Higher Secondary Schools - Ordinance G.O.(Ms) No: 271, Dated : 20-12-2024 Issued
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
லாரி வாடகையை ஆசிரியர்கள் தலையில் கட்டும் கல்வி அதிகாரிகள் - நாளிதழ் செய்தி
Education Officers impose lorry rent on Teachers' - Daily News
அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை வினியோகம் செய்ய லாரி வாடகை, ஏற்று, இறக்கு கூலியை அரசு ஒதுக்குகிறது.
எனவே, *ஆசிரியர்கள் சொந்த செலவில் பாடப்புத்தகம் எடுக்க வேண்டாம் என, ஆசிரியர் சங்கங்கள் அறிவுறுத்தியுள்ளன. இந்த உண்மை தெரியாமல், பல இடங்களில் ஆசிரியர்களை நிர்ப்பந்திக்கும் கல்வி அதிகாரிகள், பாடப் புத்தகங்களை எடுத்துச் செல்ல வலியுறுத்துகின்றனர்.*
தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம், சீருடை உள்ளிட்ட பொருட்களை அரசு வழங்குகிறது.
*நேரடியாக அந்தந்த பள்ளிகளுக்கே வழங்க லாரி வாடகை, ஏற்று, இறக்கு கூலியை, மாவட்ட வாரியாக அரசு ஒதுக்கீடு செய்கிறது.*
*தற்போது, 2024- - 25ம் கல்வி ஆண்டுக்குரிய மூன்றாம் பருவ இலவச பாட புத்தகங்களை பள்ளிகளுக்கு வழங்கி வருகின்றனர். பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லும் லாரி வாடகைக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.*
ஆனால், *பெரும்பாலான மாவட்டங்களில் ஆசிரியர்கள் சொந்த செலவில் வாகனத்துடன் வந்து புத்தகத்தை எடுத்துச் செல்லுமாறு கல்வி அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.*
இது, ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
*லாரி வாடகை, ஏற்று, இறக்கு கூலியாக மாவட்டத்திற்கு, 15 லட்சம் ரூபாய் வரை அரசு ஒதுக்கியுள்ளது. எண்ணும் எழுத்தும் திட்ட புத்தக வினியோகத்திற்கும், 12 - 15 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.*
ஆனால், *கல்வி அதிகாரிகள் இந்த செலவை ஆசிரியர்கள் மீது சுமத்துகின்றனர். எனவே, கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களிடம் தங்களது சொந்த செலவில் புத்தகம் எடுக்குமாறு சொன்னால் புறக்கணிக்குமாறு தெரிவித்துள்ளோம்.*
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டி முடிவுகள்
State Level Thirukkural Quiz Competition Results
முதலிடம் - திருப்பூர்
இரண்டாம் இடம் - தர்மபுரி
மூன்றாமிடம் - திருநெல்வேலி
நான்காம் இடம் - விருதுநகர்
ஐந்தாம் இடம் - தேனி மாவட்டம்
ஆறாம் இடம் - கரூர் மாவட்டம்
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் 28-12-2024 அன்று நடைபெற்ற மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டியில் திருப்பூர் மாவட்டம் கோடாங்கி பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு. கணேசன், கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு ஆனந்த், கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி தமிழாசிரியர் திரு. சக்திவேல் ஆகியோர் கொண்ட குழுவானது மாநில அளவில் முதலிடம் பெற்று ரூபாய் 2 லட்சம் ரொக்க பரிசினைப் பெற்றுள்ளனர். வாழ்த்துகள் 💐💐💐
முதன்மைக்கல்வி அலுவலர், திருப்பூர்
ஜனவரி 2025 - பள்ளி நாட்காட்டி
January 2025 - School Calendar
01-01-2025 - புதன் - ஆங்கில புத்தாண்டு
02-01-2025 - வியாழன் - மூன்றாம் பருவம் வகுப்புகள் தொடக்கம்
04-01-2025 - சனி - வார விடுமுறை
05-01-2025 - ஞாயிறு வார - விடுமுறை
11-01-2025 - சனி - வார விடுமுறை
12-01-2025 - ஞாயிறு - வார விடுமுறை
14-01-2025 செவ்வாய் - அரசு விடுமுறை (பொங்கல் விடுமுறை)
15-01-2025 புதன் - அரசு விடுமுறை (திருவள்ளுவர் தினம்)
16-01-2025 வியாழன் - அரசு விடுமுறை (உழவர் திருநாள்)
18-01-2025 - சனி - வார விடுமுறை
19-01-2025 - ஞாயிறு - வார விடுமுறை
25-01-2025 - சனி - வார விடுமுறை
26-01-2025 - ஞாயிறு (குடியரசு தினம்)
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
2024-2025ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 10-10-2024...
Revised Calendar for Academic Year 2024-2025 - Proceedings of Director of School Education, Dated : 10-10-2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
28.12.2024 அன்று சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்கள்
TETOJAC State General Body Meeting Resolutions held at Chennai on 28.12.2024
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் (டிட்டோஜாக்) மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் (28.12.2024 அன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்றது கூட்டத்தில் மார்ச் மாதம் ஏழாம் தேதி (07.03.2025) வெள்ளிக்கிழமை கோட்டை முற்றுகை போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் சென்னை, விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, கோவை, சேலம் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பிப்ரவரி 1, 8, 15 போராட்ட ஆயத்த கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது .
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தென் கொரியாவில் 181 பேருடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது
An Aeroplane carrying 181 people crashed in South Korea
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
தென் கொரியாவில் 175 பயணிகள், 6 விமான பணியாளர்களுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
பாங்காக்கில் இருந்து தென் கொரியா சென்ற விமானம், முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.
உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் தீவிரம்.
சியோல்,
தென் கொரிய நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் விமானம் தீப்பிடித்ததில் பயணிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரியாவில் 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது. முவான் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறாது. பாங்காக்கில் இருந்து தென் கொரியாவின் யோன்ஹாப் நோக்கி சென்ற போது இந்த விபத்து ஏற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாங்காக்கில் இருந்து 181 பேருடன் புறப்பட்ட விமானம், தென்மேற்கு கடற்கரை விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9:07 மணிக்கு தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையில் இருந்து விலகி வேலியில் மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானத்தில் இருந்து பயணிகளை அகற்ற மீட்பு அதிகாரிகள் முயற்சித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யோன்ஹாப் செய்தி நிறுவனம் இறப்புகளை உறுதி செய்துள்ளது. ஆனால் அவசர அலுவலகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. மற்ற தென் கொரிய ஊடகங்களும் இதேபோன்ற உயிரிழப்புகளை தெரிவித்துள்ளன.
உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள் விமானத்தில் இருந்து அடர்த்தியான கறுப்பு புகையின் வெளியாவதையும், விமானம் தீப்பிடித்து எரிவதைக் காட்டும் காட்சிகளை ஒளிபரப்பின.
தென் கொரியா விமான விபத்து நேரலை புதுப்பிப்புகள்: தென் கொரியா விமான நிலையத்தில் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகியதை அடுத்து, 2 பேரைத் தவிர மற்ற அனைவரும் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
தென் கொரியா விமான விபத்து நேரலை புதுப்பிப்புகள்: தென் கொரியா விமான நிலையத்தில் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகியதை அடுத்து, 2 பேரைத் தவிர மற்ற அனைவரும் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
தென் கொரியா விமான விபத்து செய்தி நேரலை புதுப்பிப்புகள்: ஞாயிற்றுக்கிழமை காலை தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானதில் இருவரைத் தவிர மற்ற 181 பேரில் பாங்காக்கில் இருந்து ஜெஜூ ஏர் விமானத்தில் பயணம் செய்த 179 பேர் இறந்திருக்கலாம் என்று தீயணைப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.
தென் கொரியா விமான விபத்து
தென் கொரியா விமான விபத்து நேரலை: தலைநகர் சியோலில் இருந்து சுமார் 288 கிமீ தொலைவில் உள்ள தெற்கு ஜியோல்லா மாகாணத்தில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஜெஜு ஏர் விமானம் தரையிறங்கும் போது காலை 9 மணியளவில் (உள்ளூர் நேரம்) விபத்து ஏற்பட்டது. (X/Yonhanp செய்தி நிறுவனம்)
தென் கொரியா விமான விபத்து நேரலை புதுப்பிப்புகள்: ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்திற்கு பாங்காக்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் இரண்டு பணியாளர்களைத் தவிர விமானத்தில் இருந்த அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை 120 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்த எண்ணிக்கை இறுதியானது அல்ல என்று விமான நிலைய தீயணைப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. அமைச்சின் தரவுகளின்படி, ஏறக்குறைய மூன்று தசாப்தங்களில் தென் கொரிய விமான நிறுவனம் சம்பந்தப்பட்ட மிக மோசமான விமான விபத்து இதுவாகும்.
தென் கொரியா விமான நிலையத்தில் நடந்தது என்ன? விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்குப் பிறகு சிறிது நேரத்தில் தரையிறங்கிய ஜெஜு ஏர் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி, விமான நிலையத்தில் உள்ள சுவரில் மோதியதால் தீப்பந்தமாக வெடித்தது. உள்ளூர் செய்தி நிறுவனங்களால் பகிரப்பட்ட வீடியோக்களில், இரட்டை என்ஜின் விமானம் வெடிப்பில் சுவரில் இடிப்பதற்கு முன், வெளிப்படையான தரையிறங்கும் கியர் இல்லாமல் ஓடுபாதையில் சறுக்குவதைக் காணலாம்.
விமானத்தில் இருந்த அனைவரும் யார்?
175 பயணிகளில் இரு தாய்லாந்து பிரஜைகளும் அடங்குவதாகவும், மீதமுள்ளவர்கள் தென் கொரியர்கள் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெஜு ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் போயிங் 737-800 ஜெட் விமானம். விபத்தின் உயிர்கள் மற்றும் காரணம் உள்ளிட்ட விவரங்களை விமான நிறுவனங்கள் தேடி வருவதாக விமானச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தென் கொரியாவின் செயல் தலைவர் சோய் சாங்-மோக் முழு மீட்புப் பணிகளுக்கு உத்தரவிட்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
தென் கொரியா பட மூலாதாரம்,Reuters
தென்கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சாங்-மோக் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அவர் முவானில் இந்த பகுதியை "ஒரு சிறப்பு பேரிடர் மண்டலமாக" அறிவித்துள்ளார்.
"இந்த விமான விபத்தில் ஏற்பட்ட இழப்புகள் காரணமாக கடுமையான சூழல் நிலவி வருகிறது. உயிரிழந்தவர்வர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்", என்று அவர் கூறினார்.
உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆதரவளிக்க அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஜேஜூ ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
செய்தியாளர் சந்திப்பில், இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிம் இ-பே மற்றும் பிற அதிகாரிகள் தங்கள் தலையை தாழ்த்தி மணிப்பு கேட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதே தற்போது தங்களின் முன்னுரிமை என்று கிம் இ-பே கூறினார்.
மேலும் இந்த விமான நிறுவனம், அதன் இணையதளத்தை கருப்பு நிறத்திற்கு மாற்றி ஆன்லைனில் மன்னிப்பு கோரியது.
முவான் தென் கொரிய தலைநகர் சோலில் இருந்து 288 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
விமான பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகத் தென் கொரியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கருதப்படுகிறது.
ஜேஜூ விமான நிறுவன வரலாற்றில் இதுவே முதல் உயிரிழப்புகளைக் கொண்ட மோசமான விபத்தாகும். தென் கொரியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான இது 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
முன்னதாக அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகுவில் இருந்து கடந்த 25-ந்தேதி ரஷியாவின் குரோஸ்னி நகருக்கு 67 பேருடன் சென்று கொண்டிருந்த விமானம் கஜகஸ்தான் நாட்டின் அக்தாவ் நகரில் அவசரமாக தரையிறங்கும்போது வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 38 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 29 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த நிலையில் அடுத்த சில தினங்களிலே இந்த கோர விபத்து நடந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆசிரியர்களின் மின்னணு பணிப்பதிவேடு eSR ஐ IFHRMS இணையதளத்தில் தரவிறக்கம் செய்தல் மற்றும் சரிபார்த்தல் வழிமுறை - வட்டாரக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள், நாள் : 26-12-2024
Procedure for Downloading and Verification of Teachers' Electronic Service Register eSR on IFHRMS Website - Proceedings of Block Education Officers, Dated : 26-12-2024
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
2025-ஆம் ஆண்டிற்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு - ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு
Pongal Gift Package Notification for 2025 to All Rice Family Card Holders - Government of Tamil Nadu orders to provide one kg of rice, one kg of sugar and one whole sugarcane - Press Release No. 2354, Dated: 28-12-2024
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அனைத்து வகுப்புகளுக்கும் வீடியோ பாடம் தயாரிக்க நடவடிக்கை - ஆர்வம் உள்ள ஆசிரியர்களுக்கு அழைப்பு
பாடப்பகுதிகளில் சிக்கலான தலைப்புகளை எளிமையாகவும், சுவாரசியமாகவும், மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், விளக்கும் திறன் கொண்ட ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பாக, கேமராவின் முன் காணொளி நிகழ்த்துவதில் முன் அனுபவம் இருப்பது கூடுதல் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
புதிய அணுகுமுறைகளை கற்றுக்கொள்ளும் ஆர்வமும், அதனை கற்றல், கற்பித்தலில் செயல்படுத்தும் திறனும் உள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம், என, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விருப்பமுள்ள ஆசிரியர்கள் சிறிய புதுமையான, கற்றல், கற்பித்தல் வீடியோக்களை அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் கூறுகையில், 'தற்போது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர்தர ஆய்வகங்கள், ஆசிரியர்களுக்கு தொழில்நுட்ப உபகரணங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
அடுத்தடுத்த கல்வியாண்டில், இணையம் வாயிலாக பாடங்களுக்கு காணொளியில் மாணவர்களுக்கு எளிமையான விளக்கம் அளிப்பதற்கு இவ்வாறு தயாரிக்கப்படுகிறது.
கல்வி தொலைகாட்சியிலும் இந்த காணொளிகள் ஒளிப்பரப்படும்' என்றனர்.
டீச்சர் ஆப் (The Teacher App) என்ற செயலியைத் தொடங்கி வைத்தார் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் - செய்தி வெளியீடு
Union Education Minister Mr. Dharmendra Pradhan launched The Teacher App - Press Release
>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
கல்வியாளர்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 உடன் இணைவதற்கான ஒரு படியாக, பாரதி ஏர்டெல் அறக்கட்டளை உருவாக்கிய புதுமையான டிஜிட்டல் தளமான தி டீச்சர் செயலியை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தினார் .
தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் "கர்மயோகிகள்" என்ற ஆசிரியர்களின் முக்கிய பங்கை பிரதான் வலியுறுத்தினார். “அடுத்த தலைமுறையின் உண்மையான கட்டிடக் கலைஞர்கள் ஆசிரியர்கள். NEP 2020 இன் உணர்வில் ஆசிரியர்களின் தொடர்ச்சியான திறன் மேம்பாட்டிற்காக நாங்கள் புதுமை மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம், ”என்று அவர் கூறினார், அறிவொளி பெற்ற ஆசிரியர்கள் அறிவொளி பெற்ற மாணவர்களை உருவாக்குகிறார்கள் மற்றும் ஆசிரியர்கள் வாய்ப்புகளைக் கண்டறிந்து நமது இளைஞர்கள் வளர்ச்சிக் கதையை வழிநடத்துவதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிப்பார்கள்.
டீச்சர் ஆப் என்பது கல்வியாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு இலவச, பயனர் மையப்படுத்தப்பட்ட தளமாகும். கற்பித்தல் நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் , மாணவர் ஈடுபாட்டை வளர்ப்பதற்கும், எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் கற்றல் சூழல்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இது நவீன தொழில்நுட்பத்துடன் நடைமுறைக் கருவிகளை ஒருங்கிணைக்கிறது. இணையம், iOS மற்றும் ஆண்ட்ராய்டு வழியாக அணுகக்கூடியது, பாடநெறிகள், கற்றல் பைட்டுகள், குறுகிய வீடியோக்கள், பாட்காஸ்ட்கள் மற்றும் வெபினர்கள் உட்பட 260 மணிநேரத்திற்கும் மேலான க்யூரேட்டட் உள்ளடக்கத்திற்கான தடையற்ற அணுகலை ஆசிரியர்களுக்கு வழங்கும்.
திட்ட அடிப்படையிலான செயல்பாடுகள், பணித்தாள்கள், பாடத் திட்டங்கள் மற்றும் கேள்வி வங்கிகள் போன்ற 900 மணிநேர ஆதாரங்களை வழங்கும் கற்பித்தல் கருவிகள் அதன் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாகும். பயன்பாடு நேரலை நிபுணர் அமர்வுகளையும் சமூகம் சார்ந்த உள்ளடக்கத்தையும் வழங்குகிறது, இது நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்களிடமிருந்து தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை எடுத்துக்காட்டுகிறது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட மாணாக்கர்கள் விகிதாசாரப்படி தகுதி பெறும் பள்ளிகளில் பணியாற்றிட விருப்பமாறுதல் - திருத்திய மாறுதல் முன்னுரிமையில் பணியில் சேர்ந்த நாள் - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம், நாள் : 24-12-2024
Part-time teachers preferring to work in schools where students are proportionately eligible - Date of joining service on revised transfer priority norms - State Project Director's letter, dated : 24-12-2024
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பகுதி நேர ஆசிரியர்களுக்கான விருப்ப மாறுதல் கலந்தாய்வு (30.12.2024 அன்று நடைபெறுதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், மாறுதல் முன்னுரிமை & விண்ணப்பப் படிவம்
Part-Time Teachers Transfer Counselling - To be held on 30.12.2024 - Proceedings of State Project Director, Priority & Application Format
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
SSLC பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலில் மாணவர்களின் பெயரை சேர்த்தல் / நீக்கம் செய்வதற்கு வாய்ப்பு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் DGE செயல்முறைகள்
Opportunity for Addition / Deletion of Student's Name in SSLC Public Examination Roll - Proceedings of Directorate of Government Examinations
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
எண்ணும் எழுத்தும் - 1-3ஆம் வகுப்பிற்கான 3ஆம் பருவ ( 2024 - 2025 ) ஆசிரியர் கையேடுகள்
Ennum Ezhuthum - 3rd Term (2024-2025) Teacher's Manuals for Class 1-3
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்பிற்கான 3ஆம் பருவ ( 2024 - 2025 ) ஆசிரியர் கையேடுகள்
Ennum Ezhuthum - 3rd Term (2024-2025) Teacher's Manuals for Class 4 & 5
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
இணையவழி பட்டா மாறுதல் சேவை - 31.12.2024 வரை தற்காலிகமாக நிறுத்திவைப்பு - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு
Online Patta Exchange Service - Temporarily Suspended till 31.12.2024 - Tamil Nadu Government Press Release
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
6-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
State Level Kalai Thiruvizha Competitions for Class 6-8 Students - Proceedings of the Chief Education Officer
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
State Level Kalai Thiruvizha Competitions for Class 1-5 Students - Proceedings of the Chief Education Officer
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
2025-2026ஆம் ஆண்டிற்கான மாவட்டக் கல்வி அலுவலர் DEO பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 27-12-2024
01.01.2025 அன்று உள்ளவாறு, 2025-26ஆம் ஆண்டிற்கு மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவி உயர்வுக்கு பரிசீலிக்க கருதப்படும் அரசு உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் முன்னுரிமை பட்டியல்...
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
2025-26 ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு முதல் பருவத்திற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள் வழங்குவதற்கான உத்தேசத் தேவைப் பட்டியல் 27.12.2024 அன்றைய நிலவரப்படி EMIS-லிருந்து பெற்று வழங்குதல் - தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் (உதவிபெறும் பள்ளிகள்) செயல்முறைகள் ந.க.எண். 028459 /கே1/2024, நாள் 24. 12.2024.
2025-26 - Free Note Books Requirement List Issued from EMIS as on 27.12.2024 - Proceedings of Tamil Nadu Joint Director of Elementary Education (Aided Schools)
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் (உதவிபெறும் பள்ளிகள்) செயல்முறைகள், சென்னை -6.
ந.க.எண். 028459 /கே1/2024, நாள் 24. 12.2024.
பொருள்: தொடக்கக் கல்வி - விலையில்லா நலத்திட்டங்கள் - 2025-26 ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு முதல் பருவத்திற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள் வழங்குவதற்கான உத்தேசத் தேவைப் பட்டியல் EMIS-லிருந்து பெற்று வழங்குதல் - தொடர்பாக.
பார்வை: 1. அரசாணை (நிலை) எண்.116, பள்ளிக் கல்வித் (க்யு)த் துறை, நாள்.14.05.2012.
2. அரசு கடிதம் எண்.5987;தொக3(1)2018, பள்ளிக் கல்வித் துறை நாள்.09.07.2018.
பார்வை (1)-ல் காணும் அரசாணையின்படி, 2012 - 2013 ஆம் கல்வியாண்டு முதல் தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள அரசு: அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
2025-2026 - ஆம் கல்வியாண்டிற்கு தொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவமாணவியர்களுக்கு முதல் பருவத்திற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள் வழங்குவதற்கான உத்தேசத் தேவைப்பட்டியல், அனைத்து மாவட்டக்கல்வி அலுவலகங்களுக்கும் (தொடக்கக்கல்வி) கல்வி மேலாண்மைத் தகவல் மையத்தின் (EMIS) மூலம் 27.12.2024 அன்றைய நிலவரப்படி மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை பெறப்பட்டு. சென்னை-32, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது.
எனவே, 2024-25 ஆம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவமாணவியர்களின் எண்ணிக்கை, கல்வி மேலாண்மைத் தகவல் மையத்தின் (EMIS-ல்) மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக்கல்வி) தெரிவிக்கப்படுகிறது.
பெறுநர் ்
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்
(மின்னஞ்சல் மூலமாக)
இணையதள பயிற்சி இணைப்பு கிடைக்காதால் ஆசிரியர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி
Teachers suffer as online training links are not available - Daily News
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மாற்றுத்திறனாளி மாணவர்களையும் மற்ற மாணவர்களைப் போல் வழி நடத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு உள்ளடக்கிய கல்வி பயிற்சி இணைய வழியில் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிக்கான இணைப்பு கிடைக்காததால் ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்ற மாணவர்களுடன் இணைந்து கல்வி கற்கும் முறை தான் உள்ளடக்கிய கல்வி முறையாகும். மாற்றுத்திறனாளி மாணவர்களையும் மற்ற மாணவர்களைப்போல் வழி நடத்த ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் உள்ளடக்கிய கல்விக்கு இணைய வழியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி டிச.14 முதல் ஜன.10 வரை ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கட்டங்கள் முடித்த பின் அடுத்த கட்டங்களுக்கு ஆசிரியர்கள் செல்லலாம்.
பயிற்சி நிறைவு செய்த பின் ஆசிரியர்கள் எல்.எம்.எஸ்., என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தால் பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ்களை டவுன் லோடு செய்து கொள்ளலாம்.
இதற்காக எமிஸ் தளத்தில் உள் உழைந்து ஆசிரியர்கள் தங்கள் பயனர் கணக்கு மூலம் இந்த பயிற்சியை செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் ஆசிரியர்கள் இந்த பயிற்சிக்காக நுழைவதால் இணையதள இணைப்பு கிடைக்கமால் தவிக்கின்றனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை இந்த இணையதள பிரச்னையை சரி செய்து ஆசிரியர்கள் ஆன் லைன் மூலம் பயிற்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநரின் DSE செயல்முறைகள்
From 01.01.2025 applications for pension schemes and all types of leave through Kalanjiyam App only – Director of School Education Proceedings
பள்ளிக்கல்வி துறை அனைத்து அலுவலகங்கள் மற்றும் அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் களஞ்சியம் செயலி மூலம் விடுப்பு / ஓய்வூதிய திட்டம் / பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் / கடன் / Pay Slip போன்றவற்றிற்கு களஞ்சியம் செயலியை இனி வரும் காலங்களில் முழுமையாக பயன்படுத்த வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
நமது அடுத்த நாட்காட்டி ஆண்டு 2025 ஒரு கணித அதிசயம்
சுவாரஸ்யமான 2025
1) 2025, ஒரு முழு வர்க்க எண் 45²
2) இது இரண்டு வர்க்கங்களின் பெருக்கற்பலன், அதாவது. 9² x 5² = 2025
3) இது 3 வர்க்கங்களின் கூட்டுத்தொகை, அதாவது. 40²+ 20²+5²= 2025
4) இது 1936 க்குப் பிறகு முதல் வர்க்க எண்
5) இது 1 முதல் 9 வரையிலான அனைத்து ஒற்றை இலக்க எண்களின் கனங்களின் கூட்டுத்தொகை, அதாவது. 1³+2³+3³+4³+5³+6³+7³+8³+9³= 2025.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த 2025 நமது அடுத்த வருடமாக இருக்கும். 😊
Our next calender year 2025 is a mathematical wonder
Interesting 2025
1) 2025, itself is a square
2) It's a product of two squares,
Viz. 9² x 5² = 2025
3) It is the sum of 3-squares,
viz. 40²+ 20²+5²= 2025
4) It's the first square after 1936
5) It's the sum of cubes, of all the single digits, from 1 to 9,
viz. 1³+2³+3³+4³+5³+6³+7³+8³+9³= 2025.
This is going to be our NEXT YEAR. 😊
ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் சிறந்த 40 ஆசிரியர்கள் தேர்வு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
மணற்கேணி செயலி மூலம் மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்பினை நல்கியுள்ள 40 ஆசிரியர்களை ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் தேர்வு செய்து அனுப்பிட தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு...
1 to 8th standard best 40 trs (8×5=40) (each class 5 trs) from each block to be selected - BEO's prepare the trs list
The Director of Elementary Education directed to select and send 40 teachers from each union who have made the best contribution to the learning progress of the students through TNSED Manarkeni App
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்பினை நல்கியுள்ள ஆசிரியர்களை ஓர் ஒன்றியத்திலிருந்து ஒவ்வொரு வகுப்பிற்கும் 5 ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் 40 ஆசிரியர்களை கண்டறிந்து தெரிவு செய்திடவும் அத்தகைய சிறந்த ஆசிரியர்களின் விவரங்களை ஆங்கிலத்தில் மட்டும் Excel படிவத்தில் பின்வரும் தகவல்களின் அடிப்படையில் பூர்த்தி செய்து மாவட்டவாரியாக தொகுத்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் ஒன்றியத்திற்கு 40 சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்ய உத்தரவு (அதாவது ஒரு வகுப்பிற்கு 5 ஆசிரியர்கள்)
🟢 மணற்கேணி செயலியை ஆசிரியர்கள் வகுப்பறைகளில் பயன்படுத்த வேண்டும்.
🟢 மணற்கேணி App பயன்படுத்துவது பற்றி பள்ளி மேலாண்மை குழுவில் பெற்றோர்களுக்கு விளக்க வேண்டும்.
🟢 ஒவ்வொரு ஒன்றியத்திலும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்பை நல்கியுள்ள ஆசிரியர்களில் - ஒரு வகுப்பிற்கு 5 ஆசிரியர்கள் என மொத்தம் 40 ஆசிரியர்களை வரும் 08.01.2025 க்குள் தேர்வு செய்ய வேண்டும்.
தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு
2024-25ஆம் கல்வி ஆண்டு - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பிற்கான இரண்டாம் பருவத் தொகுத்தறி மதிப்பெண்கள் - TNSED செயலியில் உள்ளீடு செய்தல் - வழிகாட்டி நெறிமுறைகள் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 24-12-2024...
Academic Year 2024-25 - Second Term Summative Assessment Marks for Class 1 to 5 in Government and Government Aided Schools - Input in TNSED App - Guidelines - Proceedings of Director of Elementary Education, Dated: 24-12-2024
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் (ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை) - TN SED School app செயலியில் உள்ளீடு செய்தல் - சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்...
ரயில் வரும் பொழுது தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய நபர் - வைரலாகும் காணொளி
Man survives by lying in the middle of the tracks when the train arrives - video goes viral
கேரளா: கண்ணூர், சிராக்கல் பகுதியைச் சேர்ந்த நடுத்தர வயது நபர் ரயில் வரும் போது தண்டவாளத்தின் நடுவில் படுத்து ஒருவர் அதிசயமாக உயிர் தப்பினார்.
நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, ரயில் நெருங்கியபோது அவர் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு எந்த காயமும் ஏற்படாமல் அவரை ரயில் கடந்து சென்ற பின் எழுந்து சென்றார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஸ்ரீஜித் என்பவர் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இந்தச் செயல் தற்செயலானதா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க அதிகாரிகள் இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
Kerala Kannur Viral Video Latest News:
பேஸ்புக், ட்விட்டர், யூ-ட்யூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தினந்தினம் பல்வேறு வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் வீடியோக்கள் அவ்வப்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆகும். அதிர்ச்சியளிக்கும் வீடியோக்கள், விழிப்புணர்வு வீடியோக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களில் வீடியோக்கள், வினோதமான வீடியோக்கள் என பல்வேறு வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி மக்கள் மத்தியில் பேசுப்பொருளாக இருக்கும்.
தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடும் அதிகரித்துவிட்டது. ஸ்மார்ட்போனில் வீடியோ, புகைப்படங்கள் எடுக்கும் பழக்கங்களும் அதிகரித்துவிட்டது. யூ-ட்யூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் வீடியோக்கள் பதிவிட்டு இன்டர்நெட் பிரபலமாகிவிட நினைக்கின்றனர். இதனால், எந்த இடமானாலும் சரி, எந்த நேரமானாலும் சரி ஸ்மார்ட்போனை வைத்து புகைப்படம், வீடியோ எடுப்பதை பலரும் ஒரு வேலையாகவே வைத்திருக்கின்றனர். தினமும் குறைந்தபட்சம் ஒரு வீடியோ அல்லது ஒரு புகைப்படத்தையாவது பதிவிட்டு தங்களின் இருப்பை இணையத்தில் பதிவு செய்துகொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.
வைரலாகும் கேரள வீடியோ
அப்படியிருக்க, உங்களின் கண் முன்னே எதாவது அசம்பாவிதம் நடந்தாலோ, குற்றச்செயல்கள் நடந்தாலோ அது தட்டிக்கேட்கிறார்களோ இல்லையோ தங்களின் ஸ்மார்ட்போனை வைத்து பதிவுசெய்துவிடுகின்றனர். இது ஒரு வகையில் நல்லதுதான், ஏனென்றால் அவை குற்றவாளிகளுக்கு எதிரான ஆதரமாகிவிடுகிறது. மறுபுறம் யாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களையும் இதேபோல் சில வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில், கேரளாவில் ஒருவர் தன் கண்முன் நடந்த ஒரு வியப்பான சம்பவத்தை வீடியோ எடுத்து இணையத்தில் உலாவாவிட்டார், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வைரல் வீடியோ எதை பற்றியது, எதனால் அது இவ்வளவு தூரம் வைரலானது ஏன் என்பது குறித்து இங்கு காணலாம்.
வைரல் வீடியோ: திக் திக் காட்சிகள்
ரயில் வருவதை பார்க்காமல் தண்டவாளத்தை கடக்க நினைத்த ஒருவர், திடீரென தனது அருகே ரயில் வருவதை பார்த்து நொடிப்பொழுத்தில் தண்டவாளத்தில் அப்படியே படுத்து, உயிர்தப்பிய வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கேரளாவின் சிராக்கல் - கண்ணூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பன்னென்பாறை பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது.
கண்ணுார் : ரயில் வருவது தெரியாமல், தண்டவாளத்தில் நடந்து சென்ற முதியவர் சிக்கி, காயமின்றி உயிர் தப்பினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரயில் வருவதை பார்க்காமல் தண்டவாளத்தை கடக்க நினைத்த ஒருவர், திடீரென தனது அருகே ரயில் வருவதை பார்த்து நொடியில், தண்டவாளத்தில் அப்படியே படுத்து, உயிர்தப்பிய வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ நேற்று மாலை கேரளாவின் சிராக்கல் - கண்ணூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பன்னென்பாறை பகுதியில் எடுக்கப்பட்டது.
ரயில் வேகமாக சென்றுகொண்டிருக்க அதன் அடியில் ஒருவர் படுத்துக்கொண்டிருப்பதும், ரயில் கடந்து சென்ற பின்னர் அந்த நபர் எதுவும் நடக்காதது போல் சற்று தள்ளாடியபடியே தண்டவாளத்தை கடந்து செல்வதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. நல்லவேளையாக, அந்த நபருக்கு காயம் ஏதும் இல்லை என்பதையும் காண முடிந்தது. வீடியோ வைரலானதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த வீடியோவில் ரயில் அடியில் படுத்துக்கிடந்த நபர் யார் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது. கண்ணூர் பன்னென்பாறை பகுதியை சேர்ந்த பவித்ரன் என்பது உறுதியாகி உள்ளது.
விபத்து குறித்து பவித்ரன் கூறுகையில், நான் மொபைல் போனை பார்த்துக்கொண்டே,தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, ரயில் வருவதைப் பார்த்தேன். என்னால் ஓட முடியவில்லை. அதனால் நான் தண்டவாளத்தில் அப்படியே படுத்துவிட்டேன். ரயில் கடந்து சென்றதும் நான் எழுந்து வந்துவிட்டேன்.
நான் பள்ளி வாகன கிளீனராக உள்ளேன்.அந்த சம்பவத்தின் போது, நான் மதுபானம் எதுவும் அருந்தவில்லை. அந்த வீடியோவை பார்த்ததும் உள்ளுக்குள் பயமாக இருந்தது. தான் தொடர்ந்து இவ்வழியே செல்வதாகவும், இதுதான் எனது முதல் அனுபவம்.
இவ்வாறு பவித்ரன் கூறினார்.
செய்யும் தொழில் மனத்திருப்தி - இன்றைய சிறுகதை
Job satisfaction - Today's Short Story
இன்று ஒரு சிறு கதை
செய்யும் தொழில் மனத்திருப்தி
..................................
ஒரு கோவிலில் கல் தச்சர்களின் முயற்சியால் சிற்பங்கள், சிலைகள், விக்ரகங்கள் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
ஒரு கல் தச்சர் ஒரு சிலையை உருவாக்கிக் கொண்டு இருந்தார். அவரின் அருகில் ஒரே மாதிரியான இரண்டு சிலைகள் இருந்தன.
எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்தன. அதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர்,
“ஒரே விக்ரகத்திற்கு இரண்டு சிலைகளை உருவாக்குகிறீர்களா அய்யா?” என்றார்.
கல் தச்சர் சொன்னார்,
“எங்களுக்கு ஒரே ஒரு சிலையே போதுமானது. ஆனால் முதலில் செய்யப்பட்ட சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இரண்டாவது சிலையை உருவாக்குகிறேன் என்றார்..
வழிப்போக்கர் நன்றாக இரண்டு சிலைகளையும் உற்றுக் கவனித்து விட்டுச் சொன்னார் -
எந்தச் சேதமும் எனது கண்ணுக்குத் தெரியவில்லையே” அய்யா..
தனது வேலையில் கவனத்துடன் இருந்த கல் தச்சர் சொன்னார்
“அந்த சிலையின் மூக்கின் அருகில் ஒரு சிறிய சேதம் உள்ளது. ”என்றார்.
இந்தச் சிலையை எங்கே நிர்மாணிக்க இருக்கிறீர்கள்?”
- வழிப்போக்கர்.
“50 அடி உயரத்தில் மேலே நிர்மாணிக்க இருக்கிறோம்” ,,
ஐம்பதடி உயரத்தில் இருக்கப் போகிற சிலையின் மூக்கு அருகில் இருக்கும் இந்தச் சிறிய சேதத்தை யார் கவனிக்கப் போகிறார்களா?” என்ன என்றார் வழிப்போக்கர்.
தனது வேலையைச் சற்று நிறுத்தி விட்டு வழிப்போக்கரிடம் புன்னகையுடன்
கல்தச்சர் சொன்னார்,
“யார் கவனிக்கப் போகிறார்கள்? - எனக் கேட்கிறீர்கள்.
அய்யா,வேறு யாருக்கும் அந்தச் சேதம் தெரிவதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.
எனது கடமையில் இப்படி ஒரு சேதத்தை நான் உருவாக்கியதை அடுத்தவரிடம் மறைப்பது எனக்குப் பிடிக்கவில்லை.
சேதம் சிறியதா? , பெரியதா? என்பது பற்றிக் கவலை இல்லை. செய்யும் தொழிலில் பிழை ஏற்படலாம். ஆனால் பிழையை மறைக்காமல் வெளிப்படையாக இருக்கவே விரும்புகிறேன்”. என்றார் அந்தக் கல் தச்சர்..
ஆம்,நண்பர்களே.,
உயர்ந்த தரம் என்பது அடுத்தவரின் பார்வையில் இருந்து வர வேண்டியது இல்லை.
அது தனக்குள்ளேயே இருந்து வர வேண்டும்.
அடுத்தவருக்காக வேலை செய்வதில் கிடைக்கும் இன்பத்தை விட, தன் மனத்திருப்திக்காக வேலை செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம்…
மகப்பேறு காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் Husband should be given leave to look after wife durin...