கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்கறிஞர் வில்சன் MP அவர்களின் பேட்டி



TET Review Petition filed by our Tamilnadu State Govt : Advocate Wilson 


தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்கறிஞர் வில்சன் MP அவர்களின் பேட்டி



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்கறிஞர் வில்சன் MP அவர்களின் பேட்டி


As far as the TET exam is concerned, the government of Tamil Nadu has decided to file a review petition. Our honorable Chief Minister decided and accordingly, the Honorable Education Minister, school Education Minister, advised us to file a review petition for the Supreme Cour and we had filed a review petition for the Supreme Court. The reason of the court coming to a conclusion that that exam is mandatory due to the stand of the union government. Had the union government taken a stand that the TET exam is not applicable to the existing teachers. We could have saved the jobs of lakhs and lakhs of teachers of the schools because of the stand taken by the union government that TET is mandatory even for the teachers who are there working even before the act came into force. Now this has become miserable. Too many of the teachers in Tamil Nadu, nearly 2 lakhs teachers are there who have not acquired the qualifications of the TET and there is a danger that because of this, You know time limit given by the court, namely 2 years, that if they don't acquire the TET qualification within 2 years, they will lose their jobs and within that 2 years, the teachers had to concentrate to qualify themselves. And the net result would be the right to education is really a challenge to the children because the children cannot be, You know, taken care of during the period when the teachers are going to concentrate on their own qualifications. So this is a challenging issue. The union government has not considered at all, and it is going to lead to a disastrous situation across the country. So, I think that the union government has to come out with a firm stand, and now what stand they have taken in the court, this has led to this problem and the decision of the court.


TET தேர்வைப் பொறுத்தவரை, தமிழ்நாடு அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. நமது மாண்புமிகு முதலமைச்சர் முடிவு செய்தார், அதன்படி, மாண்புமிகு கல்வி அமைச்சர், பள்ளிக் கல்வி அமைச்சர், உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யுமாறு எங்களுக்கு அறிவுறுத்தினார். நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளோம். சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே, அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் TET கட்டாயம் என்ற மத்திய அரசின் நிலைப்பாடு அந்தத் தேர்வு கட்டாயம் என்று நீதிமன்றம் முடிவுக்கு வந்ததற்கான காரணம். TET தேர்வு தற்போதுள்ள ஆசிரியர்களுக்குப் பொருந்தாது என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்திருந்தால், பள்ளிகளின் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் வேலைகளை நாம் காப்பாற்றியிருக்க முடியும். இப்போது இது பரிதாபகரமானதாகிவிட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் TET தகுதிகளைப் பெறவில்லை. இதன் காரணமாக, நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு, அதாவது 2 ஆண்டுகள், 2 ஆண்டுகளுக்குள் TET தகுதியைப் பெறவில்லை என்றால், அவர்கள் வேலையை இழக்க நேரிடும், மேலும் அந்த 2 ஆண்டுகளுக்குள், ஆசிரியர்கள் தங்களைத் தாங்களே தகுதிப்படுத்திக் கொள்ள கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இதன் விளைவாக, கல்வி உரிமை என்பது குழந்தைகளுக்கு ஒரு சவாலாக இருக்கும், ஏனெனில் ஆசிரியர்கள் தங்கள் சொந்த தகுதிகளில் கவனம் செலுத்தப் போகும் காலகட்டத்தில் குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியாது. எனவே இது ஒரு சவாலான பிரச்சினை. மத்திய அரசு இதைப் பற்றி சிறிதும் யோசிக்கவில்லை. மேலும் இது நாடு முழுவதும் ஒரு பேரழிவு சூழ்நிலைக்கு வழிவகுக்கும். எனவே, மத்திய அரசு ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், இப்போது அவர்கள் நீதிமன்றத்தில் எடுத்த நிலைப்பாடு, இந்தப் பிரச்சினைக்கும் நீதிமன்றத்தின் முடிவுக்கும் வழிவகுத்தது.



கல்லுளி மங்கன் : பெயர்க் காரணம்



கல்லுளி மங்கன் : பெயர்க் காரணம் 


 பொதுவாகவே நமது முன்னோர்கள் பின்பற்றிய பழக்கங்களுக்க பின்னால் துல்லியமான அறிவியல் காரணம் இருப்பது போல், இவர்களின் சொல்லும் பெரும் அர்த்தங்கள் பொதிந்தவையாக இருக்கும்.


பெரும்பாலானவர்களை திட்டும் போது சரியாக “கல்லுளி மங்கன்” என்ற வார்த்தையை பயன்படுத்துவதை அவைருமே அறிந்திருக்க கூடும்.அதற்கு உண்மையில் என்ன அர்த்தம் என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா?


என்ன அர்த்தம்?

உண்மையில் “கல்லுளி மங்கன்” என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் கூறப்படுகின்றது. கல்+உளி(உரி)+மங்கன் ஆரம்த்தில் இந்த வார்த்தை கல்லுரி மங்கன் என்று தான் குறிப்பிடப்பட்டது.


அதாவது உரிக்கவே முடியாத கல்லை உரிக்க வேண்டும் என்ற பிடிவாதகுணம் கொண்டவர்களை தான் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.


ஆனால் இது காலப்போக்கில் கல்லுளி மங்கன் என மாற்றம் பெற்றது. இதற்கு அர்த்தம் என்னவென்றால் கல்லை உளியால் செதுக்கி தான் சிலை செய்வார்கள்.


இப்படி கல்லை செதுக்கக்கூடிய கூர்மையான உளியையே மங்கச்செய்யும் அளவுக்கு ( உடைய செய்யும்) அழுத்தம் நிறைந்த கல் போன்ற குணம் கொண்டவர்கள் என்று அர்த்தம்.


அதாவது நீங்கள் எவ்வளவு போராடினாலும் சிலர் அவர்களின் அருத்துக்களில் இருந்து மாறவே மாட்டார்கள் மாறாக அவர்களுடன் போராடும் நீங்கள் தான் சோர்வடையும் நிலை ஏற்படும்.


இப்படிப்பட்டவர்களை தான் கல்லுளி மங்கன் என குறிப்பிட்டுள்ளனர். இனிமேல் இந்த வார்த்தையை சரியான இடத்தில் அர்தத்தை அறிந்து பயன்படுத்துங்கள்.


கரூர் துயர நிகழ்வு : ஒரு நபர் ஆணையம் விசாரிக்க தொடங்கியது




கரூர் துயர நிகழ்வு : ஒரு நபர் ஆணையம் விசாரிக்க தொடங்கியது


கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று நடத்திய பிரசாரத்தில் 40 பேர் பலியானார்கள். பலர் மயக்கமடைந்தனர். இதையடுத்து அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் இன்று விசாரணையை தொடங்கியுள்ளது. 


விஜய் பிரசாரம் செய்த வேலுச்சாமிபுரத்தில் ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். 


அப்போது காவல்துறையினரிடம் சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் கேட்டறிந்தார். மேலும் கள நிலவரம் குறித்து அவரிடம் காவலர்கள் எடுத்துரைத்தனர். இதை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் அங்கு நடந்த அனைத்து நிகழ்வுகளையும் அருணா ஜெகதீசன் கேட்டறிந்தார்.


அதனை தொடர்ந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தினார். அப்போது பலர் கதறி அழுதனர்.


கரூரில் நடிகர் விஜய் பரப்புரையில் 40 உயிரிழப்புகள் : யார் யார் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு?



கரூரில் நடிகர் விஜய் பரப்புரையில் 40 உயிரிழப்புகள் : யார் யார் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு?


கரூரில் நடிகர் விஜய் பரப்புரை உயிரிழப்புகள் : த.வெ.க. கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், புஸ்ஸி ஆனந்த், C.T. நிர்மல் குமார் உள்ளிட்டவர்கள் (& Others) மீது வழக்கு பாய்ந்தது


கரூர் நகர காவல் நிலையம்-  u/s 105, 110, 125(b), 223 r/w 3 of TNPPDL Act


A1. மதியழகன் – கரூர் மேற்கு மாவட்ட செயலாளர்

A2. புஸ்ஸி ஆனந்த்

A3. நிர்மல் குமார்

& others.


* BNS பிரிவு 105 – கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை.


* BNS பிரிவு 110 – குற்றமற்ற கொலை செய்ய முயற்சி.


* BNS பிரிவு 125 – மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர/அலட்சிய செயல்களுக்கு தண்டனை


* BNS பிரிவு 223 – பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை குற்றமாக்கப்படுகிறது.


* TNPPDL சட்டம் பிரிவு 3 – பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்


ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு...




நடிகர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை SRM கல்விக் குழுமம் ஏற்கும் : ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர்

நடிகர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை SRM கல்விக் குழுமம் ஏற்கும் :  ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர்


கரூரில் நேற்று நடந்த துர்திஷ்டவசமான சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்


உயிரிழந்தோரின் குடும்பத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்களின் முழு கல்வி செலவையும் எஸ்ஆர்எம் கல்வி குழுமம் ஏற்கும்


அவர்கள் தற்போது படிக்கும் கல்வி நிறுவனங்களுக்கே அவர்களின் கல்வி கட்டணம் செலுத்தப்படும்: ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர்



விஜய் பரப்புரையில் 40 பேர் உயிரிழப்பு - விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் காட்டமான பதிவு


"களத்தில் நிற்காமல் விஜய் உட்பட மொத்த கட்சி நிர்வாகமும் ஓடிப்போய் ஒளிந்தது அரசியல் அரங்கில் இதுவரை நாம் காணாத அவலம்"


விஜய் பரப்புரையில் 40 பேர் உயிரிழப்பு - விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் காட்டமான பதிவு



விஜய்க்கு எதற்கு அரசியல்? ஷா நவாஸ் காட்டம் 

நெருக்கடிகள், சவால்கள், துயரங்களை எதிர்கொள்வதே அரசியல் 

அந்தத் துணிவு சிறிதும் இல்லாத விஜய்க்கு எதற்கு அரசியல் ?

துயரம் நடந்து விட்ட பிறகும் கூட தன் தொண்டர்களை மீட்கவோ, பார்க்கவோ களத்தில் நிற்காமல் விஜய் உட்பட மொத்த கட்சி நிர்வாகமும் ஓடிப்போய் ஒழிந்தது அரசியல் அரங்கில் இதுவரை நாம் காணாத அவலம்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் Road show என்ற concept ஐ தடை செய்யுங்கள்

 


பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அரசியல் கட்சியினரின் Road show என்ற concept ஐ தடை செய்யுங்கள்


# Ban Road Shows


வணக்கம் நண்பர்களே நான் உங்கள் மரு.கு.அரவிந்தன், இப்பதிவை அரசியல் நோக்கத்துடன் யாரும் அணுக வேண்டாம் 🙏🏻 சராசரி மக்கள் நலன் பார்வையில் இப்பதிவை படித்தால் போதும் 👍🏻


முன்பு எல்லாம் அரசியல் தலைவர்கள், கட்சி பரப்புரைகளையோ, கூட்டத்தையோ, மாநாடுகளையோ.. ஒவ்வொரு ஊரிலும் திடல் என்று ஒன்று இருக்கும், மைதானம் என்று ஒன்று இருக்கும், கார்னர் என்று ஒன்று இருக்கும்.. அவ்வாறான ஒரு பெரிய இடத்தில் தான் அவைகளை நடத்துவார்கள் 👍🏻 அதாவது தஞ்சையில் எடுத்தீர்களேயானால் திலர்கள் திடல் என்ற இடத்தில் மட்டும் தான் முன்பெல்லாம் அவ்வாறு நடக்கும்.. மதுரையில் எடுத்தீர்களேயானால் தமுக்கம் மைதானம் என்று இருக்கும்.. திருச்சியில் எடுத்தீர்களேயானால் ஜி கார்னர் என்று இருக்கும்.. அங்கேதான் கூட்டங்கள் நடக்கும்..


இப்பதிவை படிப்பவர்களில், பொதுவாக ரோடு என்றால் எதற்காக உரியது என்று யாரேனும் ஒரு புத்திசாலி விளக்கம் தாருங்களேன்??

ரோடு என்றால் மக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு தானே, இங்கே கூட்டங்கள் நடத்தவோ இல்லை ரோட் ஷோ (Road Show ) நடத்தவோ அனுமதி கேட்கவும், அனுமதி கொடுக்கவும் யாருக்கு இங்கே அதிகாரம் உள்ளது.. நான் ரோட்டில் வந்து கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று ஒரு விளையாட்டு அமைப்பு அனுமதி கேட்டு விட முடியுமா?? விளையாட வேண்டும் என்றால் மைதானங்கள் இருக்கு அங்கே தானே விளையாட வேண்டும் 🙄🙄 


அப்படி இருக்க அரசியல் கட்சிகளுக்கு மட்டும் எவ்வாறு ரோடுகளை கூட்டங்கள் நடத்த அனுமதிக்க இயலும்?? எந்த கட்சியாக இருந்தாலும் சரி அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி இல்ல வேறு சிறிய கட்சிகளாக இருந்தாலும் சரி.. Road show என்று ஒன்றை நடத்துவதே அடிப்படைத் தவறு.. 🙄🙄 சமீப காலமாக இது பெரிதாய் நடந்து கொண்டே தான் போகிறது..  


ஆம்புலன்ஸ் போகதானே ரோடே தவிர, கூட்டங்கள் நடத்த இல்லை என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அங்கே கூட்டங்கள் அனுமதி பெற்று நடைபெற்று நடக்கிறப்போ, ஏன் ஆம்புலன்ஸ் இங்கு வருகிறது என்று புத்திசாலித்தனமான கேள்விகள் வேறு.. இப்போது கூட்ட நெரிசல் அதிகமாகி உயிர் சேதங்கள் ஏற்படும் பொழுது உங்கள் தலைவர் மைக்கிலேயே.. எப்பா ஆம்புலன்ஸ் கூப்பிடுங்கப்பா!!! எப்பா ஆம்புலன்ஸ் கூப்பிடுங்கப்பா!!! என்று கதறினாரே இப்பொழுது மட்டும் உங்களுக்கு ஏன் ஆம்புலன்ஸ் கூட்டத்துக்கு நடுவே  தேவைப்படுகிறது 🙄🙄


பெண்கள் இங்கே வாருங்கள், கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு வாருங்கள், ஒருவரை மீது ஒருவர் ஏறி செல்லுங்கள், வெளியூர்களிலிருந்து இங்கே நடக்கும் கூட்டத்திற்கு வாருங்கள் என்று உங்களை ஆளுங்கட்சி அழைத்ததா??போலீஸ் அழைத்ததா?? இல்லை எவர் தான் அழைத்தார்கள்?? நான் தளபதி வெறியன் அப்படி என்று சொல்லிக் கொண்டு உங்களை வரச் சொல்லி யார்தான் அழைத்தார்கள் 🙄


இப்பொழுது இங்கே அரசியல் களத்தில் நடந்த இந்தத் துயர உயிரிழப்புகளுக்கு காரணம் அவன் தான், இவன் தான், நான் இல்லை அவனில்லை என்று "Fingers Pointing Game " ஆரம்பித்துவிட்டது.. ஆனால் இந்த உயிரிழப்புக்கு முழுக்க முழுக்க காரணம் உயிர் இழந்தவர்களே.. முட்டாள்தனமாக ஒருவரை பார்க்கச் சென்று உயிரை விட்டவர்களே.. தனிமனித ஒழுக்கம் என்று ஒன்று இல்லாதவரை நாம் எவரையும் குற்றம் சாட்டி விட முடியாது🙏🏻 


உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் இந்த இறப்புக்களுக்கு பிறகாவது.. தானாக முன்வந்து நீதிமன்றத்தை கூட்டி.. இனி வரும் காலங்களில் இந்தியாவில் எந்த ஒரு இடத்திலும் Road show என்ற concept இருக்கவே இருக்கக் கூடாது என்று உத்தரவு இட வேண்டும்.. பொது மக்களுக்கு இடையூறாகவும் பொது சொத்துகளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் இருக்கும் இந்த road show களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் 🙏🏻 இறந்த இந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் 🙏🏻


... Dr. கு.. அரவிந்தன்....


நடிகர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு : அக்கறையில்லாத தலைமைதான் காரணமா?



நடிகர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு : அக்கறையில்லாத தலைமைதான் காரணமா? (முகநூல் பதிவு)


களத்திலிருந்த நிருபர்கள் கொதித்துப் பேசுகின்றனர்.  


நிகழ்வின் அத்தனை நெறிமுறைகளும் மிக கேவலமாக பின்பற்றப் பட்டிருக்கின்றன, இது நெரிசல் பலி அல்ல, படுகொலைகள் என்று ஆற்றாமையுடன் அவர்கள் வெடித்துப் பேசுவது காட்டப்பட்ட அலட்சியத்தைத்தான் !


காவல் துறை அனுமதித்த உரிய நேரத்திற்கு விஜய் வந்து பேசியிருந்தால் இவ்வளவு நெரிசலுக்கு வாய்ப்பே இல்லை என்கின்றனர்.


இன்னொரு நிருபர் (நியுஸ் தமிழ் 24 × 7) கதறி அழுகிறார்.  தன் கைகளால் பல குழந்தைகளின் உயிரற்ற உடல்களை ஆம்புலன்சில் ஏற்றியதாகச் சொன்னார்.  அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை.  நூற்றுக்கும் மேற்பட்டோர் ஓரிடத்தில் நெரிசலில் சரிந்து கிடந்ததாகச் சொல்கிறார்.  அவர்களைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.  அத்தனைபேரும் விஜய் பேச்சைக் கேட்பதில்தான் ஆர்வம் காட்டினர் என்று குரல் கம்மப் பேசினார்.  


நீங்க சொல்றதுக்கும் பலி எண்ணிக்கைக்கும் தொடர்பே இல்லையே என்றார் அவரிடம் பேசிய நெல்சன்.  அப்போது 11 பேர் பலி என்றுதான் பிரேக்கிங் நியூஸ் வந்திருந்தது.  அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தபோதே அது 25 என்றானது அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது !


கல்வி நல்ல வேலையைத் தந்தது, பணமீட்டியது, வாழ்வின் அனைத்து ருசிகளையும் விரைவாக ருசிக்கச் செய்தது.  அவ்வளவுதான்.  பகுத்தறிவை தரவில்லை.  ஒரு தலைமுறையின் பெரும்பகுதிக்கு பகுத்தறிவு என்றால் என்னவென்றே தெரியவில்லை.  


குழந்தைகளுடைய எந்த ஆசையையும் உடனடியாக நிறைவேற்றுவதுதான் தன் தலையாய கடமை என்று பகுத்தறிவற்ற அந்த மூளை சிந்திக்கிறது.  அதுதான் எதற்கும் துணிகிறது !


இப்படி நடக்கலாமென நாம் முதல் மாநாட்டின் போதிருந்தே சொல்லி வருகிறோம்.  தன் குழந்தைகளை அத்தகைய கூட்டத்திற்கு அனுப்பும் பெற்றோர்களை தொடர்ந்து எச்சரித்தும் வந்தோம்.  அவர்களாலும் என்ன செய்ய முடியும் ?


முழு முட்டாள் ரசிகர்கள் ஆன இவர்களை புயல் காற்று.  மேகவெடிப்பு மழை, பெரு நிலச்சரிவு.  சுனாமி.  யாராலும் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது.  காலம் மட்டுமே திருத்தும் ..


#கரூர்கூட்டநெரிசல்பலி


ஜார்கண்ட் மாநில ஆசிரியர்கள் சங்கம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் TET Review Petition தாக்கல்

 ஜார்கண்ட் மாநில ஆசிரியர்கள் சங்கம் சார்பாக ஆசிரியர் தகுதி தேர்வு Review Petitionஐ உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளனர்



கரூர் துயர நிகழ்வில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதியுதவி விவரம்



கரூர் நடிகர் விஜய் பரப்புரை துயர நிகழ்வில் உயிரிழந்தவர்கள்  குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதியுதவி விவரம்


கரூரில் உயிரிழந்தவர்கள்  குடும்பத்திற்கு தலா 35,50,000 நிதியுதவி


* தமிழ்நாடு அரசு - 10 லட்சம்

* மத்திய அரசு - 2 லட்சம்

* தவெக - 20 லட்சம்

* காங்கிரஸ் - 2,50,000

* கரூர் மாவட்ட பாஜக - 1 லட்சம்


கரூர் துயர சம்பவத்தில் நடந்தது என்ன? - ADGP விளக்கம்

கரூர் துயர சம்பவத்தில் நடந்தது என்ன? - ADGP விளக்கம்


 விஜய் பேசும்போது மின்சாரம் தடை செய்யப்படவில்லை : மின்வாரிய அதிகாரி ராஜலட்சுமி பேட்டி 



* கரூரில் தவெகவினர் முதலில் கேட்ட லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி மிகவும் ஆபத்தான பகுதி, ஒரு பக்கம் பெட்ரோல் பங்க், மற்றொரு பக்கம் அமராவதி ஆறு, பாலம் உள்ளது 


* 2வதாக அனுமதி கேட்ட உழவர் சந்தை பகுதி மிகவும் குறுகலான இடம் 


* 3வதாக அனுமதி அளிக்கப்பட்ட வேலுச்சாமிபுரம் பஸ்ஸ்டாப் ஏற்கனவே அதிமுக பிரச்சாரம் செய்த இடம் என்பதால் பரிந்துரைத்தோம் 


* போலீஸ் பரிந்துரையை ஏற்றுக்கொண்டுதான் வேலுச்சாமிபுரம் பஸ்ஸ்டாப் பகுதியில் தவெகவினர் அனுமதி பெற்றனர் 


* கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் கல்வீச்சு ஏதும் நடைபெறவில்லை 


* நேற்று, விஜய் வந்தபோது 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் 



* அதற்கு முந்தைய நாள், எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தின்போது 137 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் 


* கூட்டம் அதிகம் உள்ளதால் 50 மீட்டர் முன்னதாகவே வாகனத்தை நிறுத்தமாறு காவல்துறை அறிவுறுத்தலுக்கு விஜய் தரப்பு மறுப்பு, 


* குறிப்பிட்ட இடத்தில்தான் பிரச்சாரம் மேற்கொள்வேன் என விஜய் திட்டவட்டம் - சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம் 


* தவெகவினர் அமைத்திருந்த ஃபோக்கஸ் லைட் கீழே விழுந்துவிட்டது 


* விஜய் வருவதற்கு முன்பு தொண்டர்கள் மரம், மின்கம்பம் மீது ஏறி இருந்ததால் அவர்களை கீழே இறக்கவதற்காக சிறிது நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது 


* விஜய் பேசும்போதும் மின்சாரம் தடை செய்யப்படவில்லை - மின்துறை விளக்கம்



கரூரில் 40 பேர் இறந்த இடத்தில் உள்ள CCTV ஆதாரங்களை காவல்துறை கைப்பற்றியதாக தகவல்



கரூரில் 40 பேர் இறந்த இடத்தில் உள்ள CCTV ஆதாரங்களை காவல்துறை கைப்பற்றியதாக தகவல்


*📽️ கரூரில் 40 பேர் இறந்த இடத்தை சுற்றி இருக்கும் கடைகளில் சிசிடிவி ஆதாரங்கள் சேகரிப்பு


*🎥 கடைகளின் சிசிடிவி ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்


*📽️ விஜய் பரப்புரை செய்த பகுதியில் சிசிடிவி ஹார்ட் டிஸ்க்களை காவல்துறையினர் கைப்பற்றியதாக தகவல்


*📽️ வேலுச்சாமிபுரத்தில் பதிவான சிசிடிவி ஆதாரங்களை போலீசார் மொத்தமாக கைப்பற்றியுள்ளதாக தகவல்


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர உதவி மைய எண்கள்

 

கரூரில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில்  பாதிக்கப்பட்டவர்கள் குறித்தான விபரங்களை தெரிந்து கொள்ள,  தொடர்பு கொள்ள வேண்டிய கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர உதவி மைய எண்கள்


# DOT 04324 256306

# Whatsapp 7010806322




நோகாமல் வாங்கும் சம்பளத்தில் ஆசிரியர்கள் மாதம் 2% ஐ வழங்க வேண்டும் - மறை மாவட்ட ஆயரின் பேச்சால் கொந்தளித்த ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு


 நோகாமல் வாங்கும் சம்பளத்தில் ஆசிரியர்கள் மாதம் 2% ஐ வழங்க வேண்டும் - மறை மாவட்ட ஆயரின் பேச்சால் கொந்தளித்த ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




கரூரில் நடிகர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாய், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்சம் ரூபாய் - தவெக தலைவர் விஜய் அறிவிப்பு


கரூரில் நடிகர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாய், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்சம் ரூபாய் - தவெக தலைவர் விஜய் அறிவிப்பு


என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.


கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.


நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.


என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன். 


நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.


அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்.



"நிபந்தனைகளை தவெக பின்பற்றவில்லை : ஆம்புலன்ஸ் குறித்து ஈபிஎஸ் தவறான மன ஓட்டத்தை உருவாக்கியதால்தான் இவ்வளவு பெரிய பாதிப்பு " - மா.சுப்பிரமணியன் விமர்சனம்



 "நிபந்தனைகளை தவெக பின்பற்றவில்லை : ஆம்புலன்ஸ் குறித்து ஈபிஎஸ் தவறான மன ஓட்டத்தை உருவாக்கியதால்தான் இவ்வளவு பெரிய பாதிப்பு " - மா.சுப்பிரமணியன் விமர்சனம்


"ஆம்புலன்ஸை வழிமறித்து ஒட்டுமொத்தத் தமிழகத்திற்குத் தவறான மன ஓட்டத்தைப் புகுத்தியவர் எடப்பாடி பழனிசாமிதான் என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.


"காவல் துறை நிபந்தனைகள் எதனையும் தவெக பிரசாரத்தில் கடைப்பிடிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவர்கள் எல்லை மீறி நடக்க எதிர்க் கட்சித் தலைவரின் செயல்பாடுகளும் காரணமாக அமைந்துவிட்டது" எனவும் அவர் விமர்சித்துள்ளார்.


இது தொடர்பாக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:


"கரூர் சம்பவத்தில் தமிழ்நாடே துயரத்தில் இருக்க, பொறுப்புள்ள எதிர்க் கட்சித் தலைவராக இருக்க வேண்டிய எடப்பாடி பழனிசாமி அதிலும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அரசியல் பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எத்தனையோ வாய்ப்புகள் இருக்கிறது. பேரிடரிலுமா செய்ய வேண்டும்?


’’முந்தைய கூட்டங்களின் நிலையை ஆய்வு செய்து, அதற்கேற்ப முழு பாதுகாப்பை அரசு, காவல்துறை தந்திருக்க வேண்டும்’’ என்கிறார் பழனிசாமி. முந்தைய கூட்டங்களிலிருந்து ஆய்வு செய்த பிறகுதான் அதற்கு ஏற்ப கூடுதல் கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் காவல் துறை போட்டது. உடனே நீதிமன்றத்திற்குச் சென்று தவெகவினர் முறையிட்டார்கள்.


திருச்சி பிரச்சாரத்துக்குக் கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, த.வெ.க. துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். த.வெ.க சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ’’எந்த வழியாக சென்னை திரும்ப வேண்டும். எத்தனை வாகனங்கள் வர வேண்டும் என்றெல்லாம் நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள் த.வெ.க.வுக்கு விதிக்கப்படுகிறது. கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வரக்கூடாது என நிபந்தனைகளை விதிக்கிறார்கள். அவர்களை வர வேண்டாம் என நாங்கள் எப்படிச் சொல்ல முடியும்?’’ எனக் கேள்வி எழுப்பினார். விஜய் பிரசாரத்திற்கு வருபவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க அரசு எப்படியெல்லாம் முயன்றது என இதில் இருந்தே பழனிசாமி தெரிந்து கொள்ளலாம்.


நிபந்தனைகள் பிரசாரத்தில் கடைப்பிடிக்கவில்லை

இந்த விஷயங்கள் எதையும் அறிந்து கொள்ளாமல் எதிர்க் கட்சித் தலைவர் உளறிக் கொட்டியிருக்கிறார். காவல் துறை நிபந்தனைகள் எதனையும் தவெக பிரசாரத்தில் கடைப்பிடிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவர்கள் எல்லை மீறி நடக்க எதிர்க் கட்சித் தலைவரின் செயல்பாடுகளும் காரணமாக அமைந்துவிட்டது.


சாலைகளில் பிரசார வேனில் நடக்கும் கூட்டங்களில் இதுவரை தமிழ்நாட்டில் இப்படியொரு சம்பவம் நடந்த வரலாறு இல்லை. நடுரோட்டில் பஸ்ஸை நிறுத்தி கூட்டம் நடத்திவிட்டு, அவசரத்திற்கு அவ்வழியே ஆம்புலன்ஸ் வந்தால், அரசாங்கம் இடையூறு செய்கிறது என்று சொல்லி அங்கிருந்த தொண்டர்களுக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்தத் தமிழகத்திற்குத் தவறான மன ஓட்டத்தைப் புகுத்தியவர் எடப்பாடி பழனிசாமிதான். ’’ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநரே நோயாளியாக அனுப்பப்படுவார்’’ என பழனிசாமி சொன்ன பிறகுதான் அவருடைய கூட்டங்களில் அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தாக்கப்பட்டனர்.


பழனிசாமி போட்ட புதிய அரசியல் எண்ணத்திற்கு ஆட்பட்டுத்தான், தவெக கூட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் வந்தபோது அதை அனுமதிக்க மறுத்து, தாக்குதல் நடத்தினார்கள் தவெக தொண்டர்கள். தொண்டர்களை இந்த மனநிலைக்கு மாற்றிய பழனிசாமியும் தார்மீக பொறுப்பேற்க வேண்டியவர்தான்.


காவல்துறை விதித்த நிபந்தனைகளைக் கடைப்பிடிக்காத காரணத்தால் ஏற்பட்ட துரதிர்ஷ்டமான சம்பவம் இது. சம்பவம் நடந்த உடனேயே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் துரிதமாகக் களத்தில் இறங்கி நடவடிக்கை மேற்கொண்டார். அமைச்சர்களை கரூருக்கு அனுப்பினார்; உடனடியாகத் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் கலந்தாலோசித்து நிவாரண உதவிகளையும் விசாரணை ஆணையத்தையும் அமைத்தார். நள்ளிரவிலும் கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் உடன் இருக்கிறார். திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. துபாயிலிருந்து துணை முதல்வர் உதயநிதி அவசரமாகத் தமிழ்நாடு திரும்புகிறார்.


தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த பழனிசாமியை போல் இல்லாமல், உடனே களத்தில் இறங்கிச் செயல்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆனால், பழனிசாமியோ சிறிது கூட மனசாட்சியே இல்லாமல் முதலமைச்சர் மீதும் காவல்துறை மீதும் பழி போடுகிறார்.


அனுமதி தராவிட்டால் அதிலும் அரசியல் செய்வது, அனுமதி அளித்தால் அந்த நிபந்தனைகளை மீறுவது, நிபந்தனைகளை மீறும் ரசிகர்களை ஊக்குவிப்பது என தவெக மோசமான அரசியலுக்கு மாறி வருகிறது. அதனை அதிமுக ஆதரிக்கிறது. நகருக்கு வெளியே பிரசாரத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்று காவல்துறை கேட்டுக் கொண்டால், முடியாது நாங்கள் கூட்டத்தைக் காட்டுவதற்கு முட்டுச் சந்துதான் தேவை என்று அப்பாவி பொதுமக்களை அலைக்கழிப்பதுதான் பழனிசாமி போன்றவர்களின் கேவலமான அரசியலாக இருக்கிறது.


தவெக கூட்டத்திற்கு முழுமையான பாதுகாப்பு காவல்துறையால் வழங்கப்பட்டது. அதனை தவெக தலைவர் விஜய்யே பிரசாரத்தில் ஒப்புக்கொண்டு பேசும் காட்சியை எல்லாம், வழக்கம் போலவே டிவியில் பார்க்கும் எடப்பாடி பழனிசாமி பார்க்கவில்லையா?


ஆளுங்கட்சியின் மீது பழி போடவும் அரசியல் செய்யவும் எந்தக் காரணமும் இல்லை என்றால் மக்களுடன் நின்று மக்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுத்து நல்ல அரசியலைச் செய்யுங்கள். அதை விடுத்து இதுபோன்ற மோசமான நாடகங்களை அரங்கேற்றி அவற்றுக்கு ஆளுங்கட்சியின் மீது பழி போட்டு அரசியல் செய்வது மனசாட்சியே கிஞ்சித்தும் இல்லாதவர்கள் செய்யும் செயல். மக்களின் மனங்களின் மீது அரசியல் செய்யுங்கள். பிணங்களின் மீது அல்ல. அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் வதந்தியைப் பரப்பும் நோக்கோடு பேசுவது தமிழ்நாடு அரசு இதுவரை கண்டிராதது. எடப்பாடி பழனிசாமி பொறுப்பற்ற முறையில் மக்கள் மத்தியில் வதந்திகளையும், கற்பனைக் கதைகளையும் பரப்பித் தனது சுய அரசியல் ஆதாயம் தேடுவது அரசியல் அநாகரிகம்." என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பள்ளி குழந்தைகளை பார்த்த பிறகு கதறி அழுத பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பள்ளி குழந்தைகளை பார்த்த பிறகு கண்ணீர் விட்டு கதறி அழுத பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




கரூர் துயரம் - மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 111 பேரில் ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளதாக கரூரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

 கரூர் துயரம் - மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 111 பேரில் ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளதாக கரூரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்  



கரூர் விஜய் பரப்புரையில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதில் கரூர்  மாவட்டத்தைச் சேர்ந்தவகள் 28 பேர், ஈரோடு,  திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 பேரின் உடல்கள் அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 பேரும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 61 பேரும் என மொத்தம் 111 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் அடையாளம் காணப்பட்டுள்ள 34 பேரின் விவரங்கள்

 கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் அடையாளம் காணப்பட்டுள்ள 34 பேரின் விவரங்கள்


கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று இரவு தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 37 பேரின் பெயர் விவரங்கள் தெரியவந்துள்ளன. அந்த விவரங்கள் பின்வருமாறு:

1. தாமரைக்கண்ணன்(வயது 25) த/பெ.முருகேசன். ஒத்தப்பட்டி காலனி, பாகநத்தம், கரூர்.

2. ஹேமலதா(வயது 8) க/பெ.ஆனந்த்ஜோதி, 1/17, விஸ்வநாதபுரி, கரூர்

3. சாய்லெட்சனா(வயது 8) த/பெ.ஆனந்த்ஜோதி. 1/17, விஸ்வநாதபுரி. கரூர்

4. சாய்ஜீவா(வயது 4) த/பெ.ஆனந்த்ஜோதி, 1/17, விஸ்வநாதபுரி, கரூர்

5. சுகன்யா(வயது 33) க/பெ.தேவேந்திரன், வடிவேல்நகர் காவலர் காலனி, கரூர்

6. ஆகாஷ்(வயது 23) த/பெ.மாணிக்கம், காமராஜ்புரம், கரூர்

7. தனுஷ்குமார்(வயது 24) த/பெ.இளங்கோவன், காந்திநகர், காந்திகிராமம், கரூர்

8. வடிவழகன் (எ)வடிவேல்(வயது 54) த/பெ.முத்துசாமி 61. மேங்காட்டுதெரு. பசுபதிபாளையம், கரூர்

9. ரேவதி(வயது 52) க/பெ.முருகேசன், கொடுமுடி வட்டம், ஈரோடு.

10. சந்திரா(வயது 40) க/பெ.செல்வராஜ், ஏமூர், புதூர், கரூர்.

11. குருவிஷ்னு(வயது 2) த/பெ.விமல். வடிவேல் நகர், வேலுச்சாமி புரம், கரூர்.

12.ரமேஷ்(வயது 32) த/பெ.பெருமாள். கோடங்கிபட்டி, கரூர்.

13. சனுஜ்(வயது 13) த/பெ.ரகு காந்திகிராமம். தாந்தோனி கிராமம். கரூர்.

14. ரவிகிருஷ்ணன்(வயது 32) த/பெ.மருதாசலம், பாரதியார் தெரு, எல்.என்.எஸ் கிராமம், கரூர்.

15. பிரியதர்ஷ்ணி(வயது 35) க/பெ.சக்திவேல், ஏமூர் கிராமம், கரூர்.

16. தரணிகா(வயது 14) த/பெ.சக்திவேல், ஏமூர் கிராமம், கரூர்.

17. பழனியம்மாள்(வயது 11) த/பெ.பெருமாள். கே.எ.நகர். 2 வது தெரு 37/2டி, கோதூர் ரோடு, வேலுச்சாமிபுரம். கரூர்.

18. கோகிலா(வயது 14) த/பெ.பெருமாள், கே.எ.நகர், 2 வது தெரு 37/2டி. கோதூர் ரோடு, வேலுச்சாமிபுரம், கரூர்.

19. மகேஷ்வரி (வயது 45) க/பெ.சக்திவேல், 9E லெட்சுமிநகர் அரசுகாலனி, அருகம்பாளையம், மண்மங்கலம்.

20. அஜிதா(வயது 21) த/பெ.மணி (எ) புகழேந்தி, தொக்குப்பட்டி, புதூர், அரவக்குறிச்சி, கரூர்

21. மாலதி(வயது 36) க/பெ.கிருஷ்ணமூர்த்தி 86/5, பாரதியார் நகர், ராயனூர் வடக்கு, கரூர்.

22. சுமதி(வயது 50) க/பெ.மணி (எ) சுப்பிரமணி, 80 அடி ரோடு, 24, ரெத்தினம்சாலை, கரூர்.

23. மணிகண்டன்(வயது 33) த/பெ.பாலாஜி, தீர்த்தம்பாளையம், தாராபுரம் மெயின் ரோடு, வெள்ளக்கோயில் காங்கேயம் வட்டம், திருப்பூர்.

24. சதீஷ்குமார் (வயது 34) த/பெ.துரைசாமி, ஆவுடையார்பாளயம். காந்திநகர், கொடுமுடி, ஈரோடு

25. கிருத்திக்யாதவ்(வயது 7) த/பெ.சரவணன். கருப்பாயி கோவில் தெரு, 5 ரோடு, கரூர்.

26. ஆனந்த்(வயது 26) த/பெ.முருகன், அரூர் மெயின் ரோடு, சுக்காம்பட்டி, சேலம்.

27. சங்கர் கனேஷ்(வயது 45) த/பெ.பால்ராஜ், வடக்கு தாளிபட்டி, குஜிலியம்பாறை வட்டம், திண்டுக்கல்.

28. விஜயராணி (வயது 42) க/பெ.சக்திவேல், தாழைப்பட்டி, பிச்சம்பட்டி, கரூர்.

29. கோகுலபிரியா(வயது 28) க/பெ.ஜெயபிரகாஷ், செம்மாண்டபாளையம், வெள்ளகோவில், காங்கேயம் வட்டம், திருப்பூர்.

30. பாத்திமாபானு(வயது 29) க/பெ.பிரபாகரன், கொள்ளப்பட்டி, ஒட்டன்சத்திரம் வட்டம், திண்டுக்கல்.

31. கிஷோர் (வயது 17) த/பெ.கனேஷ். வடக்கு காந்திகிராமம். அன்பு நகர், கரூர்.

32. ஜெயா(வயது 55) க/பெ.சுப்பிரமணி, ரெட்டிகடை தெரு. வெங்கமேடு, கரூர்.

33. அருக்காணி(வயது 60), ஏமூர் கிராமம், கரூர்.

34. ஜெயந்தி(வயது 43) க/பெ.சதீஷ்குமார், மாரியம்மன் கோவில் தெரு. வேலாயுதம்பாளையம், புகளூர்.

35. ஸ்ரீநாத்(வயது 16), மேட்டூர், சேலம்.

36. மோகன்(வயது 19), ஜம்பை பவானி, ஈரோடு.

37. பிரித்திக்(வயது 10), ஏமூர். கரூர்









கரூர் விஜய் பரப்புரையில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


இதில் கரூர்  மாவட்டத்தைச் சேர்ந்தவகள் 28 பேர், ஈரோடு,  திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 பேரின் உடல்கள் அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தற்போது கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 பேரும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 61 பேரும் என மொத்தம் 111 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.


கரூரில் விஜய் நடத்திய பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36ஆக உயர்வு - உடனடியாக கரூர் செல்கிறார் முதலமைச்சர்



கரூரில் விஜய் நடத்திய பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36ஆக உயர்வு - உடனடியாக கரூர் செல்கிறார் முதலமைச்சர்




8 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 36 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தகவல்.


*🔴 ரூ. 10 லட்சம் நிவாரணம்*


விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 36 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


*🔴 விசாரணை ஆணையம்*


“கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்படும்”


- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



*🔴 இன்றே கரூர் செல்லும் ஸ்டாலின்!*


முதல்வர் ஸ்டாலின் நாளை கரூர் செல்வதாக இருந்த நிலையில், கோட்டையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்துவிட்டு, இன்று இரவே கரூர் புறப்படுகிறார்.








கரூரில் நடிகர் , தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரை கூடத்திற்கு சென்ற 31 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு

 


கரூரில் நடிகர் , தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரை கூடத்திற்கு சென்ற 31 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு என கூறப்படுகிறது 



 இறந்தே வரும் உடல்கள்! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேதனை


"கரூர் அரசு மருத்துவமனைக்கு 31 பேரின் உடல்கள் இறந்த நிலையிலேயே கொண்டு வரப்பட்டுள்ளன. இவர்கள் பிரசாரக் கூட்டத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் உள்ளவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. 45 க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் இருந்து இன்னும் சடலங்கள் வரலாம் என்றும் அச்சத்தில் உள்ளோம்". 


- மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.


கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழப்பு: குழந்தைகள் உள்பட 25 பேருக்கு தீவிர சிகிச்சை


தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 31 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், பெண்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தகவலை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி செய்தார்.


தவெக தலைவர் விஜய் இன்று இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரக் கணக்கானோர் திரண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக மக்கள் பலர் மயக்கமடைந்தனர். விஜய் பேசிக்கொண்டிருந்த போதே மயக்கமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


இந்நிலையில், விஜய் பரப்புரையில் மயக்கமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. தற்போது கரூர் அரசு மருத்துவமனையில் மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். மயக்கமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் சிலருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.


கரூர் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் வருகை தந்து, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தனர்.


முதல்வர் ஸ்டாலின் உத்தரவு: இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர்

செந்தில் பாலாஜி, மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.



அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ஏடிஜிபி-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.






கரூரில் நடிகர் , தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரை கூடத்திற்கு சென்ற 31 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார். 



கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.

கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி,
முன்னாள் அமைச்சர் @V_Senthilbalaji, மாண்புமிகு அமைச்சர் @Subramanian_Ma அவர்களையும் - மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.

அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் @Anbil_Mahesh அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன்.

பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.


பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு "அன்புக் கரங்கள் திட்டம்" செயல்படுத்துதல் - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை 3 அரசாணைகள் வெளியீடு



பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு "அன்புக் கரங்கள் திட்டம்" செயல்படுத்துதல் - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை 3 அரசாணைகள் வெளியீடு


1. அரசாணை (நிலை) எண்: 78, நாள் : 17-07-2025


2. அரசாணை (நிலை) எண்: 91, நாள் : 09-09-2025


3. அரசாணை (ப) எண்: 218, நாள் : 09-09-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


LPG Cylinder, Petrol & Diesel : Actual Price, Commission & Taxes Details

 



எல்பிஜி சிலிண்டர், பெட்ரோல் & டீசல்: உண்மையான விலை, கமிஷன் & வரி விவரங்கள்


LPG Cylinder, Petrol & Diesel : Actual Price, Commission & Taxes Details as on 01-08-2025



>>> Click Here to Download 



 

Will the Minister of PETROLEUM AND NATURAL GAS be pleased to state: 

(a) whether the Government is aware of the financial burden on common households due to the 

continuous rise in prices of domestic LPG cylinders, petrol and diesel and if so, the details 

thereof; 

(b) whether the Government is likely to consider placing in the public domain a detailed cost 

structure and pricing formula used to determine the retail prices of cooking gas, petrol and diesel, 

if so, the details thereof; 

(c) whether the increase in prices of petrol and diesel is directly linked to global crude oil rates, if 

so, the details thereof and if not, the other contributing factors; 

(d) whether the Government has a breakup of taxes levied by the Union and State Governments, 

dealer commission, transportation and profit margins included in the retail price of petrol, diesel 

and LPG and if so, the details thereof; and 

(e) whether the Government has reduced subsidies on domestic LPG cylinders during each of the 

last five years and the amount of subsidies disbursed and if so, the details thereof? 

ANSWER 

पेटŌोिलयम और Ůाकृ ितक गैस मंũालय मŐराǛ मंũी

(ŵी सुरेश गोपी) 

MINISTER OF STATE IN THE MINISTRY OF PETROLEUM AND NATURAL GAS 

 (SHRI SURESH GOPI) 

(a) to (e): LPG: 

India imports about 60% of the domestic LPG consumed. Price of LPG in the country is linked to its price in the international market. While the average Saudi CP (international benchmark for LPG pricing) rose by 51% (from US$ 385/MT in July 2023 to US$ 582/MT in June 2025), the effective price for Pradhan Mantri Ujjwala Yojana (PMUY) consumers for domestic LPG was reduced by 38% (from Rs. 903 in August 2023 to Rs. 553 in July 2025). 

Globally, PMUY is the biggest program of its kind that provides Domestic LPG to more than 10 crore poor households at an effective price of just about Rs. 39/Kg. The retail selling price of a 14.2 Kg domestic LPG cylinder is currently Rs. 853 in Delhi. After a targeted subsidy of Rs. 300/cylinder to PMUY consumers, Government of India is providing 14.2 Kg LPG cylinders at an effective price of Rs.553 per cylinder (in Delhi). This is available to about 10.33 crore Ujjwala beneficiaries, across the country.


The details of price build up of RSP of Domestic LPG (including taxes levied by Central and State Government) as on 01.08.2025 at Delhi are given below: 

Elements Rs./14.2 kg Cylinder 

Price Charged to Distributors 739.30 

Distributors Commission 73.08 

Central GST @ 2.50% 20.31 

State GST @ 2.50% 20.31 

Retail Selling Price 853.00 

Source: Petroleum Planning & Analysis Cell (PPAC) 

After a targeted subsidy of Rs. 300/cylinder to PMUY consumers, Government of India is providing 14.2 Kg LPG cylinders at an effective price of Rs.553 per cylinder (in Delhi).

The details of subsidy on domestic LPG since 2020-21 are given below: 

Financial Year Subsidy^ (Rs. in Crore) 

2020-21 11896#

2021-22 1811 

2022-23 6965@

2023-24 11444 

2024-25 13640 

Note: This includes fiscal subsidy and under-recovery to Oil Companies in domestic LPG 

^ This includes expenditure on connections given under Pradhan Mantri Ujjwala Yojana (PMUY) 

# This includes Pradhan Mantri Garib Kalyan Package subsidy. 

@ In addition, Government paid a one-time compensation of Rs.22000 crore to OMCs for under-recoveries on the sale of domestic LPG. 

Source: Petroleum Planning and Analysis Cell (PPAC) 


Petrol & Diesel:

Prices of petrol and diesel are market determined and Public Sector Oil Marketing Companies (OMCs) take appropriate decision on pricing of petrol and diesel. 

The prices of petroleum products in the country are linked to the price of respective products in the international market. India imports more than 85% of its crude oil requirements. Crude oil prices (Indian basket) increased from $55/bbl (March 2015) to $113/bbl (March 2022) and further to $116/bbl (June 2022) and have continued to fluctuate due to various geopolitical and market factors, whereas domestically, Petrol and Diesel prices have come down to Rs. 94.77 and Rs. 87.67 per litre respectively (Delhi prices) from Rs. 110.04 and Rs. 98.42 per litre in November 2021 as a result of various steps taken by Government and PSU OMCs. 

For instance, Central Excise duty was reduced by the Central Government by a total of Rs. 13/litre and Rs. 16/litre on petrol and diesel respectively in two tranches in November 2021 and May 2022, which was fully passed on to consumers. Some State Governments also reduced state VAT rates to provide relief to citizens. In March, 2024, OMCs reduced the retail prices of petrol and diesel by Rs. 2 per litre each. In April 2025, excise duty on Petrol and Diesel was increased by Rs. 2 per litre each but this was not passed on to consumers.


PSU OMCs also carried out an intra-state freight rationalisation. This has benefitted consumers located at remote areas, far from Petroleum Oil & Lubricants (POL) Depots in the form of reduced Petrol and Diesel prices in remote parts within the states. This initiative has also reduced the difference between the maximum and minimum retail prices of Petrol or Diesel within a state. 

Government also took several other steps to insulate common citizens from high international prices, which included diversifying the crude import basket, invoking the provisions of Universal Service Obligation to ensure availability of petrol & diesel in domestic market, increasing the blending of ethanol in petrol, etc. 

The Government has taken several steps to control the impact of rising crude prices including augmenting domestic exploration and production of crude oil, ethanol blending program, improving the share of renewable sources in Indian energy basket etc. 

The details of price build up of RSP of Petrol and Diesel (including taxes levied by Central and State Government) as on 01.08.2025 at Delhi are given below: 

Elements Petrol Diesel 

Rs./ Ltr. % in RSP Rs./ Ltr. % in RSP 

Price before taxes and dealer 

commission 

52.09 54.97% 52.92 60.36% 

Customs duty 0.98 1.10 

Excise Duty 21.90 17.80 

Total Central Taxes 22.88 24.15% 18.90 21.55% 

Price Charged to customer - Depot Price 74.98 71.81 

VAT (Including VAT on dealer 

commission) 

15.40 12.83 

Total State Taxes 15.40 16.25% 12.83 14.63% 

Total Taxes 38.28 40.39% 31.72 36.19% 

Dealer Commission 4.40 4.64% 3.03 3.45% 

RSP per litre (Rounded up) 94.77 100.00% 87.67 100.00% 

Source: Petroleum Planning and Analysis Cell (PPAC) 

*****


கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு Dividend வழங்குதல் குறித்து பதிவாளர் கடிதம்



கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத் தொகை Dividend வழங்குதல் குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம்


Registrar of Cooperative Societies Instructions reg Cooperative Society Dividend



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



TETOJAC மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் : முக்கிய முடிவுகள் அறிவிப்பு




TETOJAC மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் : முக்கிய முடிவுகள் அறிவிப்பு


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்)

மாநில அமைப்பு

நாள் : 27.09.2025

*********************

 சென்னையில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம்

முக்கிய முடிவுகள் அறிவிப்பு


* மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சர், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அரசு துறைகளின் முதன்மைச் செயலாளர்களுடன் டிட்டோஜாக் சந்திப்பு.


* ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மீது தமிழ்நாடு அரசு மறுசீராய்வு மனு தாக்கல்


* சென்னையில் மூத்த வழக்கறிஞருடன் சந்திப்பு


* டிட்டோஜாக் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மீது  மறுசீராய்வு மனு தாக்கல்

*********************

 * தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் 25.09.2025 அன்று சென்னையில்  தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் திரு இரா.தாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் பொதுச்செயலாளர்கள் பங்கேற்றனர்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு


* தீர்மானம் எண்:1

 * ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் இந்தியா முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேசம் முழுவதும் தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசே மறுசீராய்வு மனு தாக்கல் செய்திடக் கோரியும், பாராளுமன்றத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 இன் பிரிவு 23இல் திருத்தம் செய்து பணியில் இருக்கும் ஆசிரியர்களைப் பாதுகாத்திடக் கோரியும் வலியுறுத்தி ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக 08.10.2025 புதன்கிழமை மாலை டிட்டோஜாக்  பேரமைப்பின் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திட மாநில உயர்மட்டக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.


* தீர்மானம் எண்: 2

 * ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் நாடு முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியில் உள்ள ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு அவர்களைப் பாதுகாக்கும் வகையில், பாராளுமன்றத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009இன் பிரிவு 23இல் திருத்தம் மேற்கொள்ள ஒன்றிய அரசுக்கு அழுத்தம் அளித்திட ஏதுவாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் டிட்டோஜாக் மாவட்டப் பொறுப்பாளர்கள்  ஒரு வாரத்திற்குள் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்திட ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது


* தீர்மானம் எண்: 3

 * ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மீது டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதெனவும், மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்வதெனவும் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.


* தீர்மானம் எண்: 4

 * டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கான செலவினங்களை டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்கள் பகிர்ந்து கொள்வதெனவும், டிட்டோஜாக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மறுசீராய்வு மனுவில் ஒவ்வொரு இணைப்புச் சங்கத்தின் சார்பிலும் 100  ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதெனவும் ஏக மனதாகத் தீர்மானிக்கப்பட்டது.


* மாநில உயர்மட்டக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து சென்னையில் தலைமைச் செயலகத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு டாக்டர். சந்தரமோகன், இ.ஆ.ப அவர்களை நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களிடம் விரிவாக எடுத்துக் கூறியதோடு, இன்று (25.09.2025)  அல்லது நாளைக்குள் (26.09.2025) தமிழ்நாடு அரசின் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சார்ந்து மறுசீராய்வு மனு  தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்கள். மதிப்புமிகு. பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளரின் கருத்துகள்  தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு அரசு கொண்டுள்ள அக்கறையை உணர்த்துவதாகவும், மிகுந்த நம்பிக்கை அளிப்பதாகவும் இருந்தது.


 * இதனைத் தொடர்ந்து டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் தலைமைச் செயலகத்தில்  நிதித்துறைச் செயலாளர் மதிப்புமிகு. உதயச்சந்திரன், இ.ஆ.ப அவர்களை நேரில் சந்தித்து தமிழ்நாடு முழுவதும் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு நிலைக்குப் பெற்ற தர ஊதியம் தொடர்பான  தவறான தணிக்கைத் தடைகள் உள்ளிட்ட பல்வேறு தணிக்கைத் தடைகள் சார்ந்தும் முறையிட்டனர்.


* அதனைத் தொடர்ந்து மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திட மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாகவும் விரைந்து ஆணைகளை வழங்கிடக் கேட்டுக் கொண்டனர்.


* அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு. தங்கம் தென்னரசு அவர்களை அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்த மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான தவறான தணிக்கைத் தடைகள் உள்ளிட்டவை மீது தீர்வுகாண வேண்டி கோரிக்கை மனுவை அளித்தனர்.


* அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு. சங்கரன் அவர்களை மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதித்தனர்.

*********************

 இப்படிக்கு

மாநில உயர்மட்டக் குழு

டிட்டோஜாக்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்கறிஞர் வில்சன் MP அவர்களின் பேட்டி

TET Review Petition filed by our Tamilnadu State Govt : Advocate Wilson  தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்...