கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 29.11.2024

 

கனமழை காரணமாக 29-11-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools & Colleges on 29-11-2024 due to heavy rain) விவரம்...


கனமழை விடுமுறை அறிவிப்பு - 29.11.2024 


⭕ சென்னை ( பள்ளிகளுக்கு மட்டும் )


⭕ செங்கல்பட்டு ( பள்ளிகளுக்கு மட்டும் )


⭕ விழுப்புரம் ( பள்ளி,  கல்லூரி )


⭕ கடலூர் ( பள்ளி,  கல்லூரி )


⭕ புதுச்சேரி , காரைக்கால் ( பள்ளி,  கல்லூரி )




பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-11-2024

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-11-2024 - School Morning Prayer Activities...



திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: புல்லறிவாண்மை

குறள் எண்: 844

வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.

பொருள்:
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால், 'யாம் அறிவுடையேம்' என்று ஒருவன் தன்னைத்தானே' மதித்துக் கொள்ளும் செருக்காகும்.


பழமொழி :
சிப்பியிலே விழுந்த மழைத்துளி முத்தாகும். அதுபோல , நல்லவர்ககுச் செய்த உதவி நிலை நிற்கும்.

A raindrop that falls on an oyster shell will become a pearl, so a benefit conferred on the virtuous will endure.


இரண்டொழுக்க பண்புகள் : 

  * நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.                      

  *நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.


பொன்மொழி :

உடல்நலத்தை பாதுகாப்பது போல நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்- ஜவஹர்லால் நேரு


பொது அறிவு :

1. ரங்கசாமி கப் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

விடை : ஹாக்கி.

 
2.கூடைப்பந்து விளையாட்டில் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை?

விடை: 5


English words & meanings :

Jolly   -    மகிழ்ச்சியான

Excitement     -    உற்சாகம்


வேளாண்மையும் வாழ்வும் :

பரிந்துரைக்கப்பட்ட பயனுள்ள பூச்சிகளில், மைன்யூட் பைரேட் பக்ஸ் பிக் ஐட் பக்ஸ் மற்றும் குறைந்த அளவில் (பறந்து விடக் கூடிய) லேடி பக்ஸ் ஆகியவையாகும். இவை அனைத்துமே பல வகையான பூச்சிகளைத் தின்னக் கூடியவை.


நீதிக்கதை

நல்லதும், கெட்டதும்

ஒரு சீடன் தன் குருவிடம்,

"நல்லதை படைத்த ஆண்டவன் தானே கெட்டதையும் படைத்துள்ளார். அதனால் நல்லதை மட்டும் ஏற்பதை போல் கெட்டதையும்  ஏற்றால் என்ன?" என்று கேட்டார். 

அதற்கு குரு சிரித்துக்கொண்டே, "அது அவரவர் விருப்பம்" என்றார். பகல் உணவு வேலை வந்தது. அந்த சீடன் தனக்கு அளிக்கப்பட்ட உணவை பார்த்து அதிர்ந்து விட்டான். ஒரு கிண்ணத்தில் பாலும்,மறு கிண்ணத்தில் பசுமாட்டுச் சாணமும் வைக்கப்பட்டு, சீடனிடம் உணவருந்த கொடுக்கப்பட்டது.

குரு புன்முறுவலுடன் சீடனிடம்,

"பால்,சாணம் இரண்டுமே பசு மாட்டிடமிருந்து தானே கிடைக்கிறது. பாலை ஏற்றுக் கொள்வது போல் சாணத்தையும் ஏற்றுக் கொள்ளக் கூடாதா? " என்று கேட்டார். சீடன் விழித்தான். குரு தொடர்ந்தார்.

"பால் போன்ற நல்லவை  நாம் மகிழ்வாய் வாழ,அதனை அப்படியே ஏற்கலாம். சாணத்தை விலக்கி மண்ணில் புதைத்து உரமாக்குவது போல்  கெட்டதை விலக்கி  புதைத்து அது தரும் பாடத்தை வாழ்விற்கு உரமாக்கி உயரும் வல்லமை ஏற்க வேண்டும்" என்றார்.


இன்றைய செய்திகள்

29.11.2024

* புதுச்சேரிக்கு 2 நாட்கள் ‘ரெட் அலர்ட்’ - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.

* 3 ஆண்டுகளில் 1.69 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள்: அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம்.

* தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிடம் மாற்றம் செய்து உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

* அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட கலாம் 4 ஏவுகணை நீர்மூழ்கியில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

* தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு.

* சர்வதேச பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, லக்சயா சென் வெற்றி.

* ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.


Today's Headlines

* Puducherry was on a 'red alert' for 2 days, and precautionary measures intensified.

* 1.69 lakh free agricultural power connections in 3 years: Minister Senthil Balaji is proud of this achievement.

* Home Secretary Dheeraj Kumar has ordered the transfer of 5 IPS officers in Tamil Nadu.

* Kalam 4 missile, capable of carrying out nuclear weapons, was successfully tested from a submarine.

* Earthquake in Tajikistan; recorded at 4.6 on the Richter scale.

* International badminton: Sindhu and Lakshya Sen win in the first round.

* Junior Asia Cup hockey: India won a huge victory by defeating Thailand.



Prepared by

Covai women ICT_போதிமரம்


For Rs 40,000 OLA Scooter - Rs 499 can be booked




 40,000 ரூபாய்க்கு OLA ஸ்கூட்டர் - ரூ.499 முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு


For Rs 40,000 OLA Scooter - Rs 499 can be booked


ரூ.40,000த்துக்கு ஸ்கூட்டரை அறிமுகப்படுத்து ஓலா எலக்ட்ரிக் - ரூ.499 முன்பதிவு செய்யலாம் என அறிவித்ததால் எகிறும் பங்கு விலை


மின்சார வாகன தயாரிப்பு முக்கிய நிறுவனமாக திகழும் ஓலா எலக்ட்ரிக் ரூ.40,000த்துக்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் பங்கு விலை இன்றைய வர்த்தகத்தில் 15 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளன. நவம்பர் 27ம் தேதி காலை பங்கு விலை ரூ. 83.35 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.


மின்சார வாகன தயாரிப்பு முக்கிய நிறுவனமாக திகழும் ஓலா எலக்ட்ரிக் ரூ.40,000த்துக்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் பங்கு விலை இன்றைய வர்த்தகத்தில் 15 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளன. நவம்பர் 27ம் தேதியான இன்று காலை பங்கு விலை ரூ. 83.35 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.


ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் Gig மற்றும் S1 Z ரேஞ்ச் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்வதாக அறிவித்தது. மிக குறைந்த விலை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளதால பங்கு விலை உயர்ந்துள்ளது. அதாவது மின்சார வாகனங்களின் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் நிலையில், வெறும் ரூ.40,000க்கு மின்சார வாகனத்தை ஓலா எலக்ட்ரிக் வெளியிட உள்ளது.


இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் பங்கு விலை கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. இந்த விலை உயர்வை அடுத்து ஐபிஓ வெளியிட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் வர்த்தகமாகி வருகிறது.


நவம்பர் 26ம் தேதி அன்று ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி ஓலா கிக், ஓலா கிக்+, ஓலா எஸ்1 இசட் மற்றும் ஓலா எஸ்1 இசட்+ ஆகியவற்றை முறையே ரூ.39,999, ரூ.49,999, ரூ.59,999 மற்றும் ரூ.64,999 விலையில் இருக்கும் என தெரிவித்தது. இது எஸ்க் ஷோரூம் விலையாகும்.


இந்த குறைந்த விலை புதிய மாடல் வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு 2025ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் டெலிவரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.


ஓலா எலக்ட்ரிக் நவம்பர் 26 முதல் கிக் மற்றும் S1 Z சீரிஸ் ஸ்கூட்டரை ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. புதிய ஸ்கூட்டர்களின் நீடித்த, நம்பக தன்மை, மலிவு விலை, பிரச்னைகளுக்கான தீர்வு, அதிக நேரம் நீடிக்கும் பேட்டரி வசதி என பல சிறப்பு அம்சங்கள் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கிராமப்புற, நகர்ப்புற வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் வணிக பயன்பாட்டு அதிகளவில் பயன்படும் வகையில் வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


ஓலா கிக் மற்றும் ஓலா எஸ்1 இசட் சீரிஸின் டெலிவரிகள் முறையே ஏப்ரல் 2025 மற்றும் மே 2025 இல் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.



Conducting Practical Exams for Half Yearly Examination - DSE Proceedings


அரையாண்டுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



Proceedings of the Director of School Education for Conducting Practical Exams for Half Yearly Examination



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Half Yearly Exam 2024-2025 - Time Table

 

அரையாண்டுத் தேர்வு 2024-2025 - கால அட்டவணை (6 முதல் 12 ஆம் வகுப்பு)



Half Yearly Examination 2024-2025 - Time Table (Class 6 to 12)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


NAS Exam 2024 - Selected Schools List


 தேசிய அடைவுத் தேர்வு 2024 - தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகள் பட்டியல்


National Achievement Survey Examination 2024 - Selected Schools List



>>> திருச்சி மாவட்டம்....



>>> தஞ்சாவூர் மாவட்டம்...



>>> தேனி மாவட்டம்...



>>> விழுப்புரம் மாவட்டம்...



>>> கோயம்புத்தூர் மாவட்டம்...


TNCMTSE for 10th Standard Students - January 2025 - Notification - Press Release



அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு (TNCMTSE) - ஜனவரி 2025 - அறிவிப்பு - செய்திக் குறிப்பு வெளியீடு


Tamil Nadu Chief Minister's Talent Search Examination (TNCMTSE) for 10th Class Students in Government Schools - January 2025 - Notification - Press Release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரசுப் பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு வரும் ஜனவரி 25ம் தேதி நடைபெற உள்ளது.


இத்தேர்வில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 1000 மாணாக்கர்கள் (500மாணவர்கள், 500 மாணவியர்கள்) தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகையாக மாதம் ₹1000 வழக்கப்படும்.


மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை நவ.30 முதல் டிச.9 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டிசம்பர் 9ம் தேதிக்குள், மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.


Tamil Talent Search Examination , October 2024 - Final Answer Keys

 

  

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு, TTSE அக்டோபர் 2024 - இறுதி விடைக் குறிப்புகள்


Tamil Language Literary Proficiency Test, October 2024 - Final Answer Keys



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


One Year Diploma Course in Epigraphy and Archeology - 2025

 

 கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் ஓராண்டு காலப் பட்டய வகுப்பு (2025) மாணவர் சேர்க்கை 


One Year Diploma Course in Epigraphy and Archeology (2025) - Admission 



Baby girl born to class 9 student - 10th Standard student became Father - Arrested under POCSO Act - Shock in Tanjore

 

 9ஆம் வகுப்பு மாணவிக்கு பிறந்த பெண் குழந்தை - தந்தையான 10ஆம் வகுப்பு மாணவன் - போக்சோ சட்டத்தில் கைது - தஞ்சையில் அதிர்ச்சி...


Baby girl born to class 9 student - 10th Standard student became Father - Arrested under POCSO Act - Shock in Thanjavur 


தஞ்சாவூர் மாவட்டத்தில் ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அதாவது சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அப்போது சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்த போது அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் தான் கர்ப்பத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது.




அந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவனை தான் காதலிப்பது ஆகவும், அவர்தான் குழந்தைக்கு தந்தை எனவும் சிறுமி கூறியுள்ளார். இது தொடர்பாக வல்லம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்துள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவன் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். மேலும் 9-ம் வகுப்பு சிறுமி தாயான நிலையில் அதற்கு தந்தை 10-ம் வகுப்பு சிறுவன் என்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-11-2024

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-11-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

"பால் பொருட்பால் அதிகாரம்:

புல்லறிவாண்மை

குறள் எண்:843

அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.

பொருள்: அறிவில்லாதவர் தம்மைத் தாமே துன்புறுத்தும்
துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்ய முடியாத அளவினதாகும்."


பழமொழி :
சிநேகம் செய்யுமுன் ஆராய்தல் செய், செய்தபின் ஐயப்படாதே. 

Form friendships after due deliberation, having done so do not give place to doubt.


இரண்டொழுக்க பண்புகள் : 

  * நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.                      

  *நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.


பொன்மொழி :

நேர்மறை எண்ணங்களே சாதனைக்கு வழிகாட்டும்.- ஹெலன் கெல்லர்


பொது அறிவு :

1. மீன்கள் இல்லாத ஆறு எது? 

விடை: ஜோர்டான் ஆறு.         

2. இந்தியாவில் உயர்கல்வியில்  அதிக மாணவர் சேர்க்கை கொண்ட மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

விடை : தமிழ்நாடு 


English words & meanings :

Hungry -  பசி

Interest. -  விருப்பம்


வேளாண்மையும் வாழ்வும் :

மேலும், நன்மை பயக்கக் கூடிய நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கக் கூடிய பூச்சிகள் ஆகியவற்றைத் தங்க வைத்து அவை செயல்பட ஊக்கமளித்து, செடிகளை பூச்சிகளில் இருந்து பாதுகாக்கலாம்


நீதிக்கதை

எறும்பு

ஒரு ஆசிரமத்தில் குரு ஒருவர் தனது சீடர்களுக்கு துன்பம் வந்தால் எப்படி தன்னம்பிக்கையுடன் மனதை தளர விடாமல் வைத்திருக்க வேண்டும் என்பதை ஒரு எறும்பு கதையின் மூலமாக  கூறி புரிய வைக்க நினைத்தார்.

"ஒரு நாள் ஓர் எறும்பு  சற்று நீளமான உணவுப் பொருளை தன் வாயில் தூக்கிக்கொண்டு செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது.அந்த விரிசலை தாண்டி உணவுப்பொருளை எடுத்து செல்ல முடியாமல் தவித்தது.

சிறிது நேரம் கழித்து, அந்த எறும்பு தனது உணவை அந்த விரிசலின் மீது வைத்து,அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலை கடந்து பின்பு தனது உணவுப் பொருளை எடுத்துக்கொண்டு தன்னுடைய இருப்பிடம் நோக்கிச் சென்றது" என்று சீடர்களிடம் கூறினார்.

மேலும் "நாமும் நம்முடைய வாழ்வில் வரும் துன்பத்தை பாலமாக வைத்து நம் வாழ்வில் முன்னேறி செல்ல வேண்டும். அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நம்மிடம் இருந்தாலே நமது வாழ்வின் துன்பங்களை எளிதில் கடந்து செல்லலாம்"என்று கூறி கதையை முடித்தார்.


இன்றைய செய்திகள்

28.11.2024

* “ஸ்வச் பாரத் 2.0 திட்டத்தைப் பயன்படுத்தி கடந்த 3 ஆண்டுகளாக திடக்கழிவு மேலாண்மையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது”

* ‘விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது’ - மத்திய அரசிடம் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்.

* நாகை 3-வது நாளாக கனமழையால் தத்தளிப்பு; டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் சேதம்.

* எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: 2-வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின.

* நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால் பூமி அச்சு 31.5 அங்குலம் சாய்ந்தது: புவி இயற்பியல் ஆய்வில் தகவல்.

* உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: 2-வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் டிரா.

* டெஸ்ட் தரவரிசை: பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த பும்ரா.


Today's Headlines

* “Tamil Nadu has been leading in solid waste management for the last 3 years using the Swachh Bharat 2.0 program”

* ‘Tamil Nadu government will not implement the Vishwakarma program’ - Chief Minister Stalin's firm response to the Central government.

* Nagai  reels under heavy rain for the 3rd day; crops damaged in delta districts.

* Opposition parties continue to create chaos: Both houses of Parliament adjourned for the 2nd day.

* Earth's axis has tilted by 31.5 inches due to excessive groundwater absorption: information from Geophysical survey data.

* World Chess Championship: Indian player Kukesh draws in the 2nd round.

* Test rankings: Bumrah once again tops the bowlers' list.


Prepared by

Covai women ICT_போதிமரம்


The teacher who wrote the caste name in the student's book was suspended



 மாணவரின் புத்தகத்தில் சாதி பெயரை எழுதிய ஆசிரியர் பணியிடை நீக்கம் - வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு


The teacher who wrote the caste name in the student's book was sacked - Registration of case under Prevention of Atrocities Act


திருப்பத்தூர்: குனிச்சி மோட்டூர் அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு மாணவரின் புத்தகத்தில் சாதிப் பெயரை எழுதிய ஆசிரியர் விஜயகுமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு.


விஜயகுமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.


'தீண்டாமை என்பது ஒரு பாவச்செயல், அது ஒரு பெருங்குற்றம், மனித தன்மையற்ற செயலும் கூட' என்பதை குழந்தைகள் பள்ளிகளிலிருந்து தான் கற்கின்றனர். இந்த போதனைகள் மாணவர்களுக்கானது மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கானதும்தான். ஆனால், சாதிய பாகுபாடுகளற்ற சமூகத்தை வளர்த்தெடுக்க வேண்டிய ஆசிரியர்களே, சில நேரங்களில் சாதியத்தை உயர்த்தி பிடிப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தாங்கி பிடிப்பது சாதியத்தை மட்டுமல்ல, எதிர்கால சீரழிவையும்தான். வேலூரை அடுத்த திருப்பத்தூர் மாவட்டத்திலும் இப்படியான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.





திருப்பத்தூர் மாவட்டத்தில் மாணவரின் புத்தகத்தில் சாதி பெயரை எழுதிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


திருப்பத்தூர் அருகே மாணவனின் புத்தகத்தில் சாதி பெயரை எழுதிய ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.



திருப்பத்தூர் மாவட்டம், குனிச்சிமோட்டூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.


அந்தவகையில், அந்தப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிறுவன் ஒருவர், 7ம் வகுப்பு படித்துவருகிறார். இதே பள்ளியில், விஜயகுமார் என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி ஆங்கில வகுப்பு எடுக்க ஆசிரியர் விஜயகுமார் வந்துள்ளார். அப்போது, பாடத்தில் இருக்கும் இசைக் கருவிகள் தொடர்பான பாடத்தை அவர் எடுத்துள்ளார். அந்த நேரத்தில், இசைக் கருவியை வாசிப்பவர்கள் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லி பாடம் எடுத்ததாகத் தெரிகிறது. இது மட்டுமின்றி, வகுப்பு அறையில் இருந்த அந்த 7ஆம் வகுப்பு மாணவரின் பாடப்புத்தகத்தில், அந்த மாணவரின் சமூகப் பெயரையும் எழுதியுள்ளார்.


இது குறித்து மாணவன், தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கடந்த 19ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற பெற்றோர்கள், ஆசிரியரின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். ஊர் பொதுமக்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் இதுதொடர்பாக கேட்டபோது, அவர் முறையான பதில் அளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. பள்ளி தரப்பில் சரியான விளக்கம் அளிக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த அந்தச் சிறுவனின் பெற்றோர் மற்றும் விசிகவினர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.


குனிச்சி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவரின் சாதி பெயரை புத்தகத்தில் எழுதிய ஆசிரியரை பணி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.


இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, திருப்பத்தூர் தாசில்தார் நவநீதம், கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.


முற்றுகைப் போராட்டம் குறித்து அறிந்த மாவட்டக் கல்வி அலுவலர் உள்ளிட்டோர் பள்ளிக்கு நேரடியாகச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பிறகு ஆசிரியர் விஜயகுமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.


 

இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஆசிரியர் விஜயகுமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுலவர் உத்தரவிட்டுள்ளார். 


மேலும், ஆசிரியர் விஜயகுமார் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...

Tamil Nadu government will not implement caste-based Vishwakarma scheme - Chief Minister M.K.Stalin






சாதி அடிப்படையிலான விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


Tamil Nadu government will not implement caste-based Vishwakarma scheme - Chief Minister M.K.Stalin


விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது -  மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது. இத்திட்டம் சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் என்பதால் தற்போதைய வடிவில் அதனை செயல்படுத்திட இயலாது.


சமூக நீதி அடிப்படையில் கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டுக்கு விரிவான திட்டம் உருவாக்க முடிவு என கடிதம்.


5 IPS Officers Transfer

 

 

 தமிழ்நாட்டில் 5 இந்திய காவல் பணி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு...


5 இ.கா.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம்


5 IPS Officers Transfer 



6,967 crore worth of Rs 2,000 notes are yet to be returned to RBI




 6,967 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னமும் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வரவில்லை 


6,967 crore worth of Rs 2,000 notes are yet to be returned to RBI


கடந்த 1ம் தேதி வரை, 3.48 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்துள்ளன


- மக்களவையில் மத்திய அரசு தகவல்


Due to rain in Pudukottai today (November 26) schools will be closed from 3 pm - District Collector

புதுக்கோட்டையில் மழை காரணமாக இன்று (நவம்பர் 26) மாலை 3 மணியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்


Due to rain in Pudukottai today (November 26) schools will be closed from 3 pm - District Collector


மாணவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதி செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அறிவுரை



Heavy rain - Emergency center numbers

 


கனமழை - அவசரகால மைய எண்கள் அறிவிப்பு


Heavy rain - Emergency center helpline numbers 


மாநில அவசரகால கட்டணமில்லா தொலைபேசி எண் 1070 


Whatsapp 94458 69848



மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள்:


நாகப்பட்டினம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 1800-233-4233 


Whatsapp 84386 69800


மயிலாடுதுறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04364-222588


திருவாரூர் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 


Whatsapp 94885 47941


கடலூர் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 


Whatsapp 94899 30520


பொது மக்கள் TN Alert செயலி மூலமாகவும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.


Opportunity to work in Oman - Tamil Nadu Government Press Release

 


ஓமன் நாட்டில் பணிபுரிய வாய்ப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு


Opportunity to work in Oman - Tamil Nadu Government Press Release


ஓமன் (Oman) நாட்டில் பணிபுரிய Foundry Industry Background, மற்றும் Electrical Maintenance ஆகிய பணிகளுக்கு பணியாளர்கள் தேவைபடுகிறார்கள்.

விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.



IPL Auction: Teams and Players Prices



"IPL ஏலம் : அணிகளும், வீரர்களின் விலைகளும் "


IPL Auction: Teams and Players Prices


1. சென்னை சூப்பர் கிங்ஸ் 

டெவோன் கான்வே (6.25 கோடி), ரவிச்சந்திரன் அஸ்வின் (9.75 கோடி), ரச்சின் ரவீந்திரா (4 கோடி), நூர் அஹமத் (10 கோடி), கலீல் அகமது (4.80 கோடி), ராகுல் திரிபாதி (3.40 கோடி), விஜய் சங்கர் (1.20 கோடி), சாம் கர்ரன் (2.40 கோடி), ஷேக் ரஷீத் (30 லட்சம்), அன்ஷுல் கம்போஜ் (3.40 கோடி), முகேஷ் சவுத்ரி (30 லட்சம்), தீபக் ஹூடா (1.70 கோடி), குர்ஜப்னீத் சிங் (2.20 கோடி), நாதன் எல்லிஸ் (2 கோடி), ஜேமி ஓவர்டன் (1.50 கோடி), கமலேஷ் நாகர்கோடி (30 லட்சம்), ராமகிருஷ்ணா கோஷ் (30 லட்சம்), ஸ்ரேயாஸ் கோபால் (30 லட்சம்), வன்ஷ் பேடி (55 லட்சம்), ஆண்ட்ரே சித்தார்த் (30 லட்சம்)



2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்


வெங்கடேஷ் ஐயர் (23.75 கோடி), குயின்டன் டி காக் (3.60 கோடி), அன்ரிச் நார்ட்ஜே (6.50 கோடி), ரஹ்மானுல்லா குர்பாஸ் (2 கோடி), அங்கிரிஷ் ரகுவன்ஷி (3 கோடி), வைபவ் அரோரா (1.80 கோடி), மயங்க் மார்கண்டே (30 லட்சம்), ரோவ்மேன் பாவல் (1.50 கோடி), மணீஷ் பாண்டே (75 லட்சம்), ஸ்பென்சர் ஜான்சன் (2.80 கோடி), லுவ்னித் சிசோடியா (30 லட்சம்), அஜிங்க்யா ரஹானே (1.50 கோடி), அனுகுல் ராய் (40 லட்சம்) மொயின் அலி (2 கோடி), உம்ரான் மாலிக் (75 லட்சம்)



3. மும்பை இந்தியன்ஸ்


டிரென்ட் போல்ட் (12.50 கோடி), நமன் திர் (5.25 கோடி), ராபின் மின்ஸ் (65 லட்சம்), கரண் ஷர்மா (50 லட்சம்), ரியான் ரிக்கெல்டன் (1 கோடி), தீபக் சாஹர் (9.25 கோடி), அல்லா கஜான்ஃபர் (4.80 கோடி), வில் ஜாக்ஸ் (5.25 கோடி), அஷ்வனி குமார் (30 லட்சம்), மிட்செல் சான்ட்னர் (2 கோடி), ரீஸ் டாப்லி (75 லட்சம்), ஸ்ரீஜித் கிருஷ்ணன் (30 லட்சம்), ராஜ் அங்கத் பாவா (30 லட்சம்), சத்தியநாராயண ராஜு (30 லட்சம்), பெவோன் ஜேக்கப்ஸ் (30 லட்சம்), அர்ஜுன் டெண்டுல்கர் (30 லட்சம்), லிசாட் வில்லியம்ஸ் (75 லட்சம்), விக்னேஷ் புத்தூர் (30 லட்சம்)



4. பஞ்சாப் கிங்ஸ்


அர்ஷ்தீப் சிங் (18 கோடி), ஸ்ரேயாஸ் ஐயர் (26.75 கோடி), யுஸ்வேந்திர சாஹல் (18 கோடி), மார்கஸ் ஸ்டோனிஸ் (11 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (4.20 கோடி), நெஹால் வதேரா (4.20 கோடி), ஹர்ப்ரீத் பிரார் (1.50 கோடி), விஷ்ணு வினோத் (95 லட்சம்), விஜய்குமார் வைஷாக் (1.80 கோடி), யாஷ் தாக்கூர் (1.60 கோடி), மார்கோ ஜான்சன் (7 கோடி), ஜோஷ் இங்கிலிஸ் (2.60 கோடி), லாக்கி பெர்குசன் (2 கோடி), அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் (2.40 கோடி), ஹர்னூர் பன்னு (30 லட்சம்), குல்தீப் சென் (80 லட்சம்), பிரியன்ஷ் ஆர்யா (3.80 கோடி), ஆரோன் ஹார்டி (1.25 கோடி), முஷீர் கான் (30 லட்சம்), சூர்யன்ஷ் ஷெட்கே (30 லட்சம்), சேவியர் பார்ட்லெட் (80 லட்சம்), பைலா அவினாஷ் (30 லட்சம்), பிரவீன் துபே (30 லட்சம்)


5. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு


லியாம் லிவிங்ஸ்டன் (8.75 கோடி), ஃபில் சால்ட் (11.50 கோடி) ஜிதேஷ் சர்மா (11 கோடி), ஜோஷ் ஹேசில்வுட் (12.50 கோடி), ரஷிக் தார் (6 கோடி), சுயாஷ் சர்மா (2.60 கோடி), க்ருனால் பாண்டியா (5.75 கோடி), புவனேஷ்வர் குமார் (10.75 கோடி), டிம் டேவிட் (3 கோடி), ஸ்வப்னில் சிங் (50 லட்சம்), ரொமாரியோ ஷெப்பர்ட் (1.50 கோடி), நுவான் துஷாரா (1.60 கோடி), மனோஜ் பண்டாகே (30 லட்சம்), ஜேக்கப் பெத்தேல் (2.60 கோடி), தேவ்தத் படிக்கல் (2 கோடி), ஸ்வஸ்திக் சிகாரா (30 லட்சம்), லுங்கி என்கிடி (1 கோடி), அபிநந்தன் சிங் (30 லட்சம்), மோஹித் ரதீ (30 லட்சம்)


6. ராஜஸ்தான் ராயல்ஸ்


ஜோப்ரா ஆர்ச்சர் (12.50 கோடி), மகேஷ் தீக்ஷனா (4.40 கோடி), வனிந்து ஹசரங்கா (5.25 கோடி), ஆகாஷ் மத்வால் (1.20 கோடி), குமார் கார்த்திகேயா (30 லட்சம்), நிதிஷ் ராணா (4.20), துஷார் தேஷ்பாண்டே (6.50 கோடி), சுபம் துபே (80 லட்சம்), யுத்விர் சிங் (30 லட்சம்), ஃபாசல்ஹக் ஃபரூக்கி (2 கோடி), வைபவ் சூர்யவன்ஷி (1.10 கோடி), குவேனா மபாகா (1.50 கோடி), குணால் ரத்தோர் (30 லட்சம்), அசோக் சர்மா (30 லட்சம்)


7. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்


முகமது ஷமி (10 கோடி), இஷான் கிஷன் (11.25 கோடி), ஆடம் ஜம்பா (2.40 கோடி), ராகுல் சாஹர் (3.20 கோடி), ஹர்ஷல் படேல் (8 கோடி), அதர்வா டைடே (30 லட்சம்), அபினவ் மனோகர் (3.20 கோடி), சிமர்ஜீத் சிங் (1.50 கோடி), ஜீஷன் அன்சாரி (40 லட்சம்), ஜெய்தேவ் உனட்கட் (1 கோடி), பிரைடன் கார்ஸ் (1 கோடி), கமிந்து மெண்டிஸ் (75 லட்சம்), அனிகேத் வர்மா (30 லட்சம்), எஷான் மலிங்கா (1.20 கோடி), சச்சின் பேபி (30 லட்சம்)


8. குஜராத் டைட்டன்ஸ்


ககிசோ ரபாடா (10.75 கோடி), ஜோஸ் பட்லர் (15.75 கோடி), முகமது சிராஜ் (12.25 கோடி), பிரசித் கிருஷ்ணா (9.50 கோடி), நிஷாந்த் சிந்து (30 லட்சம்), மஹிபால் லோம்ரோர் (1.70 கோடி), குமார் குஷாக்ரா (65 லட்சம்), அனுஜ் ராவத் (30 லட்சம்), மானவ் சுதர் (30 லட்சம்), வாஷிங்டன் சுந்தர் (3.20 கோடி), ஜெரால்டு கோட்ஸி (2.40 கோடி), அர்ஷத் கான் (1.30 கோடி), குர்னூர் ப்ரார் (1.30 கோடி), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் (2.60 கோடி), சாய் கிஷோர் (2 கோடி), இஷாந்த் சர்மா (75 லட்சம்), ஜெயந்த் யாதவ் ( 75 லட்சம்), கிளென் பிலிப்ஸ் (2 கோடி), கரீம் ஜனத் (75 லட்சம்), குல்வந்த் கெஜ்ரோலியா (30 லட்சம்)


9. டெல்லி கேப்பிடல்ஸ்


மிட்செல் ஸ்டார்க் (11.75 கோடி), கே எல் ராகுல் (14 கோடி), ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் (9 கோடி), டி.நடராஜன் (10.75 கோடி), ஹாரி புரூக் (6.25 கோடி), கருண் நாயர் (50 லட்சம்), சமீர் ரிஸ்வி (95) லட்சம்), அசுதோஷ் சர்மா (3.80 கோடி), மோஹித் ஷர்மா (2.20 கோடி), ஃபாஃப் டு பிளெசிஸ் (2 கோடி), முகேஷ் குமார் (8 கோடி), தர்ஷன் நல்கண்டே (30 லட்சம்), விப்ராஜ் நிகம் (50 லட்சம்), துஷ்மந்தா சமீரா (75 லட்சம்), டோனோவன் ஃபெரீரா (75 லட்சம்), அஜய் மண்டல் (30 லட்சம்), மன்வந்த் குமார் (30 லட்சம்), திரிபுரானா விஜய் (30 லட்சம்), மாதவ் திவாரி (40 லட்சம்)


10. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்


ரிஷப் பண்ட் (27 கோடி), டேவிட் மில்லர் (7.50 கோடி), ஐடன் மார்க்ரம் (2 கோடி), மிட்செல் மார்ஷ் (3.40 கோடி), அவேஷ் கான் (7.75 கோடி), அப்துல் சமத் (4.20 கோடி), ஆர்யன் ஜுயல் (30 லட்சம்), ஆகாஷ் தீப் (8 கோடி), ஹிம்மத் சிங் (30 லட்சம்), எம் சித்தார்த் (75 லட்சம்), திக்வேஷ் சிங் (30 லட்சம்), ஷாபாஸ் அகமது (2.40 கோடி), ஆகாஷ் சிங் (30 லட்சம்), ஷமர் ஜோசப் (75 லட்சம்), பிரின்ஸ் யாதவ் (30 லட்சம்), யுவராஜ் சவுத்ரி (30 லட்சம்), ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் (30 லட்சம்), அர்ஷின் குல்கர்னி (30 லட்சம்), மேத்யூ பிரீட்ஸ்கே (75 லட்சம்


Instructions for updating details of students benefiting from Chief Minister's Breakfast Scheme in TNSED SCHOOLS app



முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களின் விவரங்களை TNSED SCHOOLS செயலியில் UPDATE செய்வதற்கான வழிமுறைகள்


Instructions for updating details of students benefiting from Chief Minister's Breakfast Scheme in TNSED SCHOOLS app



Breakfast scheme updation process



>>> PDF தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...




       LOGIN WITH INDIVIDUAL ID

                 

                 ⬇️

         SCHEMES


                 ⬇️


         SELECT CLASS


                  ⬇️


        SELECT YES OR NO

 

                  ⬇️


                 SAVE

 



Constitution of Union of India

 




இந்திய ஒன்றியத்தின் 75வது அரசமைப்புச் சட்ட தின வாழ்த்துகள்


Happy 75th Constitution Day of Union of India


இந்திய ஒன்றிய அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் தலைவராகச் செயற்பட்ட டாக்டர்.அம்பேத்கரை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும், மேலும் இந்திய அரசமைப்புக்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும், அரசமைப்புச் சட்டம் இறுதி செய்யபட்டு அரசியல் நிர்ணய சபையின் தலைவரான இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்ற நாளான நவம்பர் 26-ஐ அரசமைப்புச் சட்ட தினமாகக் கொண்டாட இந்திய ஒன்றிய அரசால் 2015-ஆம் ஆண்டு அறிவித்தது.


பிரித்தானியாவின் ஆட்சியிலிருந்தே 1934-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியத் துணைக்கண்டத்திற்கு அரசியல் நிர்ணயசபை அமைக்க ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பிறகு 1936 & 1939-ல் இருமுறை இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.


அதன்படி, 1942-ஆம் ஆண்டு மார்ச்சில் கிரிப்ஸ் தூதுக்குழு அரசியல் நிர்ணய சபையை உருவாக்கப் பரிந்துரைத்தது. அதன்பின்பு 1946 மே-இல் அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டு, 1946 சூலையில் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடைபெற்றது. 11.12.1946-ல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு அச்சபையின் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்வு செய்யப்பட்டார்.


பிரித்தானியாவின் ஆளுகையின் கீழிருந்த இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த 500-க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்கள் 1947-ல் விடுதலை பெற்ற போது இந்தியா & பாக்கிஸ்தான் என்று இருவேறு பிராந்தியங்களாகப் பிரிந்ததால் சுதந்திர இந்தியப் பிராந்தியத்தின் அரசியலமைப்புச் சாசனத்தை மட்டும் உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணயசபை குழு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.


இந்திய நாட்டிற்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணி 29 ஆகஸ்ட் 1947 அன்று இந்திய அரசமைப்பு நிர்ணய சபையால் தொடங்கப்பட்டு, அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பீ.இரா.அம்பேத்கர் தலைமையில் ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது. கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம்.முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி.பி.கைதான் ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர்.


இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21-ல் ஒப்படைத்தது. நவம்பர் 4-ல் அரசியல் நிர்ணய சபையிடம் ஒப்படைக்கப்பட்ட இவ்வறிக்கை, முழு வடிவம் பெற்று, 1949 நவம்பர் 26-ல் அரசியல் நிர்ணய சபையின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தால் கையொப்பம் இடப்பட்டது.


இந்த அரசமைப்புச் சட்டமே 'இந்தியா' என்ற நாட்டை 'சமயச்சார்பற்ற இந்திய ஒன்றியம்' என்று வரையறுத்தது. பிரித்தானிய ஆளுகையின்கீழ் இருந்து விடுதலையான 500-க்கும் மேற்பட்ட தனி மன்னராட்சி நாடுகளை அதன்பின் ஒன்றிணைக்கப்பட்டு  தற்போதைய இந்திய ஒன்றியம் உருவானது. 


மேலும், இச்சட்டமானது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள், மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கி, இதுவரை உலக நாடுகளில் எழுதப்பட்டதிலேயே மிக நீண்ட அரசமைப்புச் சட்ட்டமாக உள்ளது.


இன்று இதில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 101 திருத்தங்கள், 465 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. இது ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு அதிகாரப்பூர்வ இந்தி மொழி பெயர்ப்பினையும் கொண்டுள்ளது.


உரிமைகளை உணர்வோம்!

கடமைதனைத் தவறோம்!!


நன்றி : விக்கி & கவுன்டர்வ்யூ


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-11-2024

 

   

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-11-2024 - School Morning Prayer Activities...



திருக்குறள்:

"பால் :பொருட்பால்

அதிகாரம்: புல்லறிவாண்மை

குறள் எண்:842

அறிவிலான் நெஞ்சுஉவந்து ஈதல் பிறிதுயாதும்
இல்லை பெறுவான் தவம்.

பொருள்: அறிவில்லாதவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்குக் காரணம், வேறொன்றும் இல்லை;
அந்தப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்."


பழமொழி :
Learning is youth is an engraving on a rock.

இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து


இரண்டொழுக்க பண்புகள் : 

  * நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.                      

  *நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.


பொன்மொழி :

உன்னால் முடியாது என பலர் என்னிடம் கூறிய வார்த்தைகளை என்னை வெற்றியின் பக்கம் தள்ளியது - ஜாக்கிசான்


பொது அறிவு :

1. அணிலின் அறிவியல் பெயர் என்ன ?

ரோடன்ஷியா ஸ்குயிரஸ்.

2. பாம்புகளிடம் சுரக்கப்படும் விஷத்திற்கு என்ன பெயர் ?

வெனம்.(Venom)


English words & meanings :

Happy - மகிழ்ச்சி

Hot -  சூடான


வேளாண்மையும் வாழ்வும் :

பூச்சிக் கொல்லிகளின் உபயோகத்தைத் தவிர்ப்பதற்கு, இயற்கையிலேயே எதிர்ப்பு சக்தி உடைய தாவரங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.


நவம்பர் 27

லீ ஜூன் ஃபேன் புரூஸ் (Lee Jun-fan) (நவம்பர் 27, 1940 – ஜூலை 20 1973) இவரின் திரைப்படப் பெயரான புரூஸ் லீ என பரவலாக அறியப்படும். இவர்  ஆங்காங் மற்றும் அமெரிக்கத் திரைப்பட நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தற்காப்புக் கலைஞர், தற்காப்புக் கலைகள் பயிற்றுநர், மெய்யியலாளர்கள், ஜீத் குன் தோ எனும் உஷூ அல்லது சீன சண்டைக் கலையைத் தோற்றுவித்தவரும் ஆவார். இவரின் பெற்றோர் கன்தோனிஸ் ஆபரா , லீ ஹோய் சுன். இவர் ஊடகவியலாளார்கள், விளக்கவுரையாளர்கள், விமர்சகர்கள், மற்றும் தற்காப்புக் கலைஞர்களால் அனைத்துக் கால தற்காப்புக் கலைகளில் சக்திவாய்ந்த ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார்.

 
நீதிக்கதை

முடிவு

ஒரு நாள் ஒரு சிறுத்தை பசியுடன் உணவை தேடியது. அப்போது ஒரு கருப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.

அவை இரண்டும் ஒரு மலை அடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகவும் கவனத்துடன் மலை அடிவாரத்திற்கு அருகே சென்றது.

ஆனால் எந்த மானை தாக்குவது என்று அது முடிவு செய்யவில்லை. அதே நேரத்தில் சிறுத்தையை பார்த்த இரண்டு மான்களும் ஓட துவங்கின. பிறகு அவை இரண்டும் ஓர் இடத்தில் வலதும் இடதுமாக ஓடத் தொடங்கின.

சிறுத்தை அந்த இடத்திற்கு வந்ததும் எதை துரத்தலாம்? என்று யோசித்தது. பின்பு, "கருப்பு மானை துரத்தலாம் கருப்பு மானின் இறைச்சி தான் வெகு ருசியாக இருக்கும்" என்று கூறிக் கொண்டே கருப்பு மானை துரத்தியது.

ஆனால் அதற்குள் கருப்புமான்  வெகு தூரம் ஓடிவிட்டது. பின்பு சிறுத்தை, "இது வேகமாக ஓடக்கூடிய மான் இதை நாம் நம்மால் பிடிக்க இயலாது. எனவே, நாம் புள்ளிமானை துரத்துவோம்" என்று திரும்பி வந்து,

எதிர்பாதையில் ஓடத் தொடங்கியது. ஆனால்

புள்ளிமானோ ஏற்கனவே வெகு தூரம் ஓடிவிட்டது.

சிறுத்தை, முடிவெடுப்பதில் சிறிது  தயக்கம் காட்டியதால் எந்த மானையும் பிடிக்க இயலவில்லை.

நீதி : எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டாமல்,  விரைந்து முடிவெடுத்து,எடுத்த முடிவில் நிலையாக இருக்க வேண்டும்.


இன்றைய செய்திகள்

27.11.2024

* நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுவதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு உணவு பாதுகாப்புத் துறை சார்பில் ‘ஈட் ரைட் கேம்பஸ்’ என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

* ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு. இன்று 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்.

* சூரியனைப் பற்றிய ஆய்வுக்காக, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கிய உலகின் முதல் இணை செயற்கைக்கோள்களை, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் டிசம்பர் 4-ம் தேதி  விண்ணுக்கு அனுப்புகிறது இஸ்ரோ.

* மியான்மரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு.

* ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: கஜகஸ்தானை வீழ்த்தியது இந்தியா.

* ஆசிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் அல்-நாசர் அணி வெற்றி.


Today's Headlines

* Rajiv Gandhi Government General Hospital, Chennai has been awarded the ‘Eat Right Campus’ certificate by the Food Safety Department for providing quality food to patients.

* Deep depression likely to turn into a cyclone. Very heavy rain warning for 10 districts today: Meteorological Department information.

* ISRO will launch the world’s first co-satellites developed by the European Space Agency to study the Sun on December 4 using PSLV rocket.

* Mild earthquake in Myanmar: 4.4 on the Richter scale.

* Asian Cup basketball qualifiers: India defeats Kazakhstan.

* Al-Nassr team wins today’s match of the Asian Champions League football tournament.



Prepared by

Covai women ICT_போதிமரம்


Literary Club Block Level Competition - Instructions for Entry in the EMIS Portal - Reg - DSE Joint Director Letter



பள்ளிக் கல்வி - 2024-25 - இலக்கிய மன்றம் - வட்டார அளவிலான இலக்கிய மன்றப் போட்டியை நிறைவு செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் EMIS போர்ட்டலில் நுழைவதற்கான வழிமுறைகள் - தொடர்பாக - பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநரின் கடிதம்


School Education - 2024-25 - Literary Club Block Level Competition - Instructions for Completion of the Literacy Competition and entry in the EMIS Portal - Reg - School Education Department Joint Director Letter



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கனமழை விடுமுறை அறிவிப்பு - 27.11.2024

 

கனமழை காரணமாக 27-11-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools & Colleges on 27-11-2024 due to heavy rain) விவரம்...


Leave Update: ..


கனமழை 


 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில்  - பள்ளிகளுக்கு மட்டும் இன்று (;27.11.2024 ) விடுமுறை



அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 27) விடுமுறை


கனமழை எச்சரிக்கை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (27.11.2024) விடுமுறை அறிவிப்பு





ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 27) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு




திருச்சி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 27) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு






*கனமழை விடுமுறை :*


🌧️ கனமழை காரணமாக இன்று (27.11.2024) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

*அரியலூர்* (பள்ளிகள்) 
*சென்னை* (பள்ளிகள்) 
*செங்கல்பட்டு* (பள்ளிகள்) 
*காஞ்சிபுரம்* (பள்ளிகள்) 
*புதுக்கோட்டை* (பள்ளிகள்) 
*சிவகங்கை* (பள்ளிகள்) 
*கடலூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
*விழுப்புரம்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
*தஞ்சாவூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
*திருவள்ளூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
*திருவாரூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
*மயிலாடுதுறை* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
*நாகப்பட்டினம்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
*திருச்சிராப்பள்ளி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
*இராமநாதபுரம்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
*புதுச்சேரி/காரைக்கால்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 






பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

1. திருவாரூர்

2. நாகப்பட்டினம் 

3. மயிலாடுதுறை

4. கடலூர்

5. புதுச்சேரி

6. காரைக்கால் 

7. தஞ்சாவூர் 

8. திருவள்ளூர் 

9. விழுப்புரம் 

10. திருச்சி





 

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை  அறிவிப்பு

 1. சென்னை

 2. செங்கல்பட்டு

3. காஞ்சிபுரம்

4. புதுக்கோட்டை

5. சிவகங்கை

 




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 29.11.2024

  கனமழை காரணமாக 29-11-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools &am...