கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 14 வயது இருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருந்தால் வயது தளர்வாணை பெற்று தேர்வு எழுதலாம் - CEO Proceedings...

 


பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 14 வயது இருக்க வேண்டும் அதற்கு குறைவாகவும் இருந்தால் தேர்வு எழுதலாம் அதனுடைய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடப்பு 2020-21ஆம்  கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ , மாணவியர்களில் 14 வயதினை நிறைவு செய்யாத மாணாக்கர்க்கு வயது தளர்வாணை கோரும் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலருக்கு அனுப்பி வயது தளர்வாணை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் / பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 06277/ ஆ3/2020, நாள்: 17-12-2020...

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வயது தளர்வாணை கோரும் படிவம்...

>>> திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 06277/ ஆ3/2020, நாள்: 17-12-2020 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வயது தளர்வாணை கோரும் படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தேர்தல் பணிக்கு புதிய மொபைல் ஆப்...

 தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிக்கு நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழக சட்டசபைக்கு, மே, 25க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, மார்ச்சில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

 பயிற்சி வகுப்பு

கொரோனா காரணமாக, ஒரு ஓட்டுச்சாவடியில், அதிகபட்சம், 1,000 வாக்காளர்கள் மட்டுமே ஓட்டளிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 

எனவே, கூடுதலாக, 23 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், தேர்தல் பணியில் கூடுதல் பணியாளர்கள், போலீசாரை ஈடுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் கூடுதலாக தேவை.இவற்றை மாவட்ட வாரியாக கணக்கிட்டு, தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளன. அவற்றை சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது.

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, நான்கு நாட்கள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது, கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், தேர்தல் வழக்கு வராத வகையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அவர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. விரைவில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் போன்றோருக்கு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

எந்த தேர்தலிலும் இல்லாத வகையில், இந்த தேர்தலில், நவீன தொழில்நுட்பங்களை பயன் படுத்தவும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.

பழுது விவரம்

முதற்கட்டமாக, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்காக, தனி, ‘மொபைல் ஆப்’ உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மொபைல் ஆப் வழியே, எந்த ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவு துவங்கி உள்ளது, எங்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், பழுது ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, எவ்வளவு ஓட்டுகள் பதிவாகி உள்ளன என்ற விபரங்களை, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.ஓட்டுச்சாவடி அலுவலர், ஓட்டுச்சாவடி தொடர்பான தகவல்களை, மொபைல் ஆப் வழியே, உயர் அலுவலர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க முடியும்.இந்த மொபைல் ஆப்பில் எந்த விதமான விபரங்களை சேர்க்கலாம் என, அனைத்து மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரிகளிடம், தேர்தல் கமிஷன் கருத்து கேட்டுள்ளது.

G.O.No.309, Dated: 31-01-2021 - அரசு ஆலோசகராக சண்முகம் இ.ஆ.ப. நியமித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியீடு...

 


G.O.No.307, Dated: 31-01-2021 - தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் இ.ஆ.ப. நியமனம்...

 




ஆறு மாதங்களில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணி வழங்க வேண்டாம் – இந்திய தேர்தல் ஆணையம்...

 


இந்திய தேர்தல் ஆணையம் சின்னம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் அதற்கான ஒதுக்கீடுகளை முன்கூட்டியே செய்யத் தொடங்கிவிட்டது. தமிழக தேர்தல் ஆணையமும் வாக்குச்சாவடிகள், வாக்குப்பட்டியல் மற்றும் இயந்திரங்களை தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சியினர் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். மார்ச் மாதத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்யும் வேலைகளையும் தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது.

இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் தமிழகத்தில் ஓய்வுபெறவிருக்கும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகளை வழங்க வேண்டாம் என தெரிவித்துருந்தது. தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அவர்களது சொந்த மாவட்டங்களில் பணியாற்ற கூடாது என்றும் முந்தைய தேர்தல்களில் ஒழுங்கீன செயல்களில் சிக்கிய அதிகாரிகளை தேர்தல் பணிகளில் நியமிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தலில் நடைபெறும் குழப்பங்களை தவிர்க்க தேர்தல் ஆணையம் இந்த கடிதத்தை எழுதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய செய்திகள் தொகுப்பு... 31.01.2021(ஞாயிறு)...

 


🌹பெற்ற உதவிக்கு நன்றி சொல்லும் பழக்கமும்,செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் பக்குவமும் உள்ளவர்கள் எல்லோருடைய இதயத்திலும் நிரந்தரமாக குடியிருப்பார்கள்.!

🌹🌹பிடிவாதமும்,வறட்டு கவுரவமும் இருக்கும் வரை எந்த உறவும் உண்மையாக இருக்காது.

இருந்தாலும் நிலைக்காது.!!

🌹🌹🌹அன்பால் ஏமாந்தவர்கள் ஒருபோதும் அழிந்ததும் இல்லை.

அன்பை வைத்து ஏமாற்றியவர்கள் இறுதிவரை நன்றாக வாழ்ந்ததும் இல்லை.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ள நிலையில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட வேண்டும்

🌈🌈9 &11, மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்காக கல்வித்துறை ஆயத்தப்பணிகள் துவக்கம்.                                               🌈🌈பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம்: பிப்.1 முதல் ஆன்லைனில் ஆய்வு

🌈🌈தொலைதூர டிப்ளமோ முறையில் பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை கற்பிக்கக் கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ எச்சரிக்கை

🌈🌈தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட முதுகலையாசிரியராக நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித் துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவு.

👉BT to PG Chemistry 

👉BT to PG Panel Botany.                                     👉BT to PG Panel Economics 

👉BT to PG Panel Physics 

👉BT to PG Panel Zoology.                                     👉BT to PG Panel history.                                    👉BT to PG Panel Commerce 

👉PET II to PET I Panel

🌈🌈தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் முக கவசம் அணிவது உறுதிசெய்ய வேண்டும் -பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

🌈🌈தமிழகத்தில் 2020-2021ஆம் கல்வியாண்டிற்கான 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு  பொதுத் தேர்வுகளுக்காகத் தேர்வுக் கட்டணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

🌈🌈ஆசிரியர், அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்த போராட்டத்தை முடிவு செய்ய, ஜாக்டோ - ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம், இன்று திருச்சியில்  நடக்கிறது.

🌈🌈தில்லியில் பிப்ரவரி 5 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை அறிவித்தார் 

🌈🌈பிளஸ் 2 வகுப்பில் கற்றல் சுமை குறையவில்லை.  மாணவர்களுக்கு  மன உளைச்சல்; ஆசிரியர்கள் புகார் - நாளிதழ் செய்தி 

🌈🌈ஜம்மு பிராந்தியத்தில் பிப்ரவரி 1 முதல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுவதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன

🌈🌈பிப்.13-ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

🌈🌈ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை நீக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- மற்ற வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வர்தான் முடிவு செய்வார் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

🌈🌈பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களுக்கு 2 % ஒதுக்கீட்டு அடைப்படையில் பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக நியமனம் வழங்குவது தொடர்பாக பணியாளர்களின் பெயர் பட்டியர் வெளியீடு.இப்பெயர் பட்டியலில் உள்ள பணியாளர்களின் விவரங்களை சரிபார்த்து உறுதி செய்திடவும் , இப்பெயர் பட்டியலில் சேர்க்கை , நீக்கம் மற்றும் திருத்தம் ஏதும் இருப்பின் பார்வையில் காண் அரசிதழின்படி வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி சிறப்பு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி அளித்திடவும் மற்றும் இவ்விதியில் " Must have obtained a Bachelor's degree and Master's degree in the same subjects or their equivalent in respect of which recruitment is made. " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு எந்தப்பாடத்திற்கு முதுகலை ஆசிரியராக பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய பட்டியலில் சேர்க்கப்படுகிறாரோ அப்பணியாளர் அப்பாடத்தில் இளங்கலை மற்றும் முதுகலையில் முதன்மைப் பாடமும் மற்றும் பி.எட் . பயின்றிருக்க வேண்டும்.

🌈🌈பாஜக - அதிமுக இணைந்து தேர்தலை சந்திக்கும்

தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் 

- ஜே.பி.நட்டா

🌈🌈கொரோனா தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் நேற்று மாலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

🌈🌈சசிகலா விவகாரம், ஓபிஎஸ் மகன்க்கு ஒரு நியாயமம் எங்களுக்கு ஒரு நியாயமா? நீக்கப்பட்டோர் கேள்வி

சசிகலாக்கு ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் சமூக வலைத்தளத்தில் பூங்கொத்து படத்துடன் வாழ்த்து கொடுத்துள்ளார்.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, பங்காளி சண்டை முடிந்து இணைந்துவிடுவோம் என்று கருத்து தெரிவித்தார். 

கோகுல இந்திரா சின்னம்மா என வரவேற்றுள்ளார்.

இப்படி பல்வேறு வகையில் ஆதரித்த மற்றவர்களை விட்டுவிட்டு எம்ஜிஆரின் உண்மை தொண்டர்களான என்னை போன்றோரை மட்டும் கட்சியை விட்டு நீக்கியுள்ளனர். தலைவர்களுக்கு ஒரு நியாயம், தொண்டர்களுக்கு ஒரு நியாயமா?  இவ்வாறு அவர்கள் கூறினர்.

🌈🌈அமெரிக்க அரசு, ஐ.நா.,விற்கான தூதரக குழுவில், இந்திய வம்சாவளியினர் இருவரை முக்கிய பொறுப்புகளுக்கு நியமனம் செய்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அரசின் பல்வேறு துறைகளில் அதிக அளவில், இந்திய வம்சாவளியினரை நியமித்து வருகிறார். அமெரிக்காவிற்கான ஐ.நா., தூதரின் மூத்த கொள்கை ஆலோசகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோஹினி சட்டர்ஜி, அதிதி கோரூர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

🌈🌈இஸ்ரோவுக்காக கோவை மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்: பிப். 22-ல் விண்ணில் பாய்கிறது.

🌈🌈44 ஆவது சென்னை புத்தகக் காட்சி வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்குகிறது.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மார்ச் 9 ஆம் தேதி வரை மொத்தம் 14  நாட்கள் நடைபெறும் என பபாசி அறிவிப்பு

காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக காட்சி நடைபெறும்

🌈🌈திமுகவிடம் கேட்டால்தான் அரசின் காதுகளில் விழுகிறது, நாளை அமையும் திமுக அரசு கேட்காமலும் உதவும்

திருவண்ணாமலையில்,தாயை இழந்த பெண் ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்வில் மனு கொடுத்திருந்தார்

பெண்ணின் மனுவிற்கு உடனடியாக திமுக உதவும் என உறுதியளித்த நிலையில் பதறிய அரசு ₨2 லட்சம் வழங்கியுள்ளது.

ஸ்டாலின்

🌈🌈பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார் சசிகலா.

கடந்த 3 நாட்களாக சசிகலாவின் உடல்நிலை சீராக இருந்தது

மருத்துவமனை அறிக்கை

🌈🌈வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவார்கள் என நம்பிக்கை இல்லை என்று டெல்லியில் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு பேட்டியளித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை அமல்படுத்தியதில் கார்ப்பரேட் நிறுவனங்களே பின்புலமாக உள்ளன என்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்

🌈🌈சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் கலைவாணர் அரங்கம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

சென்னை மாநகராட்சி சார்பில் இருக்கைகள்,மேஜை மற்றும் நுழைவுவாயில் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

🌈🌈திமுக ஆட்சிக்கு வந்தால் முழுமையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்

🌈🌈இந்தியாவில் கொரோனா கண்டறியப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவு

சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த கேரளாவை சேர்ந்த மாணவர் நாடு திரும்பியதும் நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

🌈🌈சசிகலா மருத்துவமனையில் இருந்து வந்த உடனே அவரை பார்ப்பேன்; அதுதான் தார்மீகம்"   

கருணாஸ் எம்.எல்.ஏ

🌈🌈தடுப்பூசி போட்டுக் கொள்வதில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தயக்கம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது

ராதாகிருஷ்ணன்

சுகாதார செயலாளர்

🌈🌈இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம்

பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

🌈🌈திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி கடன், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் 

வேலூர் தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் உறுதி

🌈🌈சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் ஆலோசனை

சட்டசபை தேர்தல் குறித்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை

தேமுதிக பொருளாளர் பிரேமலதா மற்றும் மாவட்ட நிர்வாகிகள்  உள்ளிட்டோர் பங்கேற்பு

🌈🌈கடந்த 10 ஆண்டுகளில் தமிழக வளர்ச்சி படுபாதாளத்துக்கு சென்றுவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

🌈🌈நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில் தான் போட்டியிடத் தயார் என்று பாஜகவில் இணைந்த நமச்சிவாயம் சவால் விடுத்துள்ளார்.

🌈🌈சசிகலா தலைமையில் அதிமுக மீட்டெடுக்கப் போவதை இனி எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் கருத்து.

🌈🌈அதிமுகவை சசிகலா மீட்டெடுப்பார் என நமது எம்ஜிஆரில் வெளியான கட்டுரை குறித்த கேள்விக்கு ஜெயகுமார் பதிலளிக்கையில், அதிமுகவில் சசிகலாவை சேர்க்கவோ, அமமுகவை இணைக்கவோ 100 சதவீதம் வாய்ப்பில்லை.

அதிமுக இரும்பு கோட்டை என்பதால் யாராலும் அசைத்து கூட பார்க்க முடியாது.  என்று ஜெயகுமார் கூறினார்

🌈🌈ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

🌈🌈சசிகலா குறித்து ஜெயபிரதீப் மனிதாபிமான அடிப்படையில் அரசியலுக்கு வராமல் அறவழியில் செல்ல வேண்டும் என்று தான் கூறியுள்ளார், இதை அரசியலாக பார்க்க வேண்டாம் - அமைச்சர் ஜெயக்குமார்.

🌈🌈சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் 

போட்டியிட தயார் - "கூட்டணி என்றால் பாமக இல்லாத கட்சியுடன் மட்டுமே கூட்டணி"

- பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக தகவல்

🌈🌈தேமுதிக கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு என தகவல்

அதிமுக கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பளிக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தயாராகுங்கள் : பிரேமலதா விஜயகாந்த்.

🌈🌈தொலைதூரக்கல்வியில் 1980-81 முதல் சேர்ந்த மாணவர்கள் அரியர்ஸ் தேர்வுகளை மே 2021, டிசம்பர் 2021 ஆகிய மாதங்களில் எழுதலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.

🌈🌈கொரோனா பாதுகாப்புகள் காரணமாக 87 ஆண்டுகளில் முதன்முறையாக ரஞ்சி டிராபியை இந்த ஆண்டு நடத்தப்போவதில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ரஞ்சி டிராபி 1934 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது .

🌈🌈சுகாதாரத்துறை  அமைச்சர்  விஜயபாஸ்கரை  தொடர்ந்து,

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா உடன் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ சந்திப்பு

🌈🌈கோவிஷில்ட் கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்த சீரம் நிறுவனம், மற்றொரு கொரோனா தடுப்பு மருந்துக்கான பரிசோதனையை தொடங்க விண்ணப்பித்துள்ளது.

🌈🌈பிப்.1 முதல் பிறதுறையை சார்ந்த முன்களப் பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி; இதுவரை

97,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.

🌈🌈மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தல்.

🌈🌈பொதுமக்களின் குறைகளை தீர்க்க தனி இலாகா ஒதுக்கப்படும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

🌈🌈இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தித்திறன் உலகிற்கே கடவுள் கொடுத்துள்ள மிகப்பெரிய சொத்து என ஐநா புகழாரம் பேசியுள்ளது.

🌈🌈ஹாங்காங் குடிமக்களுக்கு பிரிட்டன் வழங்கியிருந்து 'வெளிநாட்டு' கடவுச் சீட்டு (பாஸ்போா்ட்) செல்லாது என சீனா அறிவித்துள்ளது.

🌈🌈அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற நாளிலிருந்து, அவா் எதிா்க்கட்சிகளை கலந்தாலோசிக்காமல் தொடா்ச்சியாக அரசாணைகளில் கையெழுத்திட்டு வருவது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

🌈🌈அமெரிக்காவில் வசிக்கும் இந்திய அமெரிக்க குடும்பத்தின் சராசரி ஆண்டு வருமானம் 1.20 லட்சம் டாலராக (ரூ.87 லட்சம்) உள்ளது என ஆசிய பசிபிக் அமெரிக்க சமூக மேம்பாட்டுக்கான கூட்டணியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌈🌈தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

பள்ளிக் கல்வித் துறையில் 4 இணை இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து அரசாணை எண்.8, நாள் : 29.01.2021 வெளியீடு...

 


தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிப்பு... 💥 பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி... 💥 அனைத்து இளநிலை, முதுநிலை பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு கல்லூரிகளும் திறப்பு...

 


>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2021-ஆம் ஆண்டின் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்கள்...


 >>> 2021-ஆம் ஆண்டின் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் - PDF கோப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்....



வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்

ஜனவரி 

13.01.2021 – புதன் போகி 

24.01.2021-ஞாயிறு கர்வீன் ஆப் மொய்தின் அப்துல் கதர்

28.01.2021 –வியாழன் – தை பூசம் 

பிப்ரவரி 

17.02.2021- புதன் -விபூதி புதன்

27.01.2021-சனி – மாசி மகம் 

மார்ச்

11.03.2021- வியாழன் –மகா சிவராத்திரி 

11.03.2021- வியாழன்- ஷபே மீரஜ்

27.03.2020 –சனி - ஷபே பரத் 

ஏப்ரல் 

01.04.2021 –வியாழன் –பெரிய வியாழன்

04.04.2021-ஞாயிறு – ஈஸ்டர்

13.04.2021-செவ்வாய்-ரம்ஜான் முதல் நாள் 

14.04.2021-புதன் - அம்பேத்கார் பிறந்த நாள் 

20.04.2021-புதன் –அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் 

26.04.2021-திங்கள்- சித்ரா பெளர்ணமி

மே 

08.05.2021-தங்கள் –ஷபே கதர்

26.05.2021-புதன் –புத்த பூர்ணிமா

ஜுன் 

இல்லை 

ஜூலை 

19.07.2021-திங்கள் –அரபா

ஆகஸ்ட்

03.08.2021-செவ்வாய் –ஆடி பெருக்கு 

09.08.2021-திங்கள் –ஹிஜிரி வருடப்பிறப்பு

20.08.2021-வெள்ளி –வரலட்சுமி விரதம் 

21.08.2021-சனி-ஓணம் 

21.08.2021-சனி- ரிக் உபகர்மா

22.08.2021-ஞாயிறு –யஜுர் உபகர்மா

23.08.2021-திங்கள்-காயத்ரி ஜெபம்

செப்டம்பர் 

16.09.2021-வெள்ளி –சர்ம உபகர்மா

அக்டோபர் 

06.10.2021-புதன் –மகாளய அமாவாசை

நவம்பர் 

02.11.2021-செவ்வாய்- ஆல் சோல்ஸ்டே

04.11.2021-வியாழன் – தீபாவளி நோம்பு 

19.11.2021-வெள்ளி –குருநானக் ஜெயந்தி 

19.11.2021-வெள்ளி-கார்த்திகை தீபம் 

டிசம்பர் 

20.12.2021-திங்கள்-ஆருத்ரா தரிசனம்

24.12.2021-வெள்ளி –கிறிஸ்துமஸ் ஈவ்

31.12.2021-வெள்ளி-நியூ இயர் ஈவ்



Telegram App-ஐ நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி...?

 Telegram இல் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்ய

படத்தில் உள்ளது போல privacy setting களை மாற்றி அமைத்து கொள்ளுங்கள்

Setting - Privacy settings

@கல்வி அஞ்சல் 

1. Phone number - Nobody என்று வைப்பதால் உங்கள் mobile எண் மற்றவருக்கு தெரியாமல் இருக்கும்


2.Calls - Nobody என்று வைப்பதால் telegram இல் இருந்து உங்களுக்கு யாரும் கால் செய்து தொல்லை கொடுக்க முடியாது


3.Groups- இது மிக முக்கியமான setting ஆகும். இதை My contacts என்று மாற்றி கொள்வதால் உங்கள் அனுமதி இல்லாமல் பல தவறான குழுக்களில் உங்களை யாராலும் இணைக்க முடியாது


4.two-step verification - இதை on செய்து கொள்வதால் உங்கள் account மற்றவர்கள் மூலம் தவறான முறையில் பயன்படுத்த முடியாது


5.Archive and mute - இந்த setting இப்போது சில accountகளுக்கு மட்டுமே கொடுக்கபட்டுள்ளது. இதை on செய்வதன் மூலம் உங்களுக்கு வரும் pm/dm அனுமதி இல்லாமல் வரும் personal message அனைத்தும் mute & archive ஆகிவிடும்.

மருத்துவச் சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு (Medical Leave) - திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ள பணியாளர் சீர்திருத்தத் துறை, அரசாணை எண்.6, நாள்.22.01.2021ல் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள்...

 


1. விடுப்பு அனுபவிக்கும் நாளிலிருந்து ஏழு நாள்களுக்குள் விடுப்புக்கான விண்ணப்பம் அளிக்கப்பட வேண்டும்.


2.  "A" மற்றும் "B" பிரிவு ஆசிரியர்/ அரசூழியர்கள் (அதாவது தர ஊதியம் ரூ. 4400ம் அதற்கு மேலும் அல்லது Level 13ம் அதற்கு மேலும் உள்ளவர்கள்) அரசு மருத்துவரிடம் சான்று பெற வேண்டும்.


3.  "C" மற்றும் "D" பிரிவு ஆசிரியர்/ அரசூழியர்கள் (அதாவது தர ஊதியம் ரூ. 4400ம் குறைவாக அல்லது Level 12 வரை உள்ளவர்கள்)  மருத்துவக் கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவரிடம் சான்று பெற வேண்டும்.


4. விண்ணப்பம் பெறப்பட்ட மூன்று தினங்களுக்குள் தேவைப்படின் மருத்துவக் குழுவிற்கு அனுப்பிட வேண்டும்.


5. மருத்துவக் குழுவுக்கு அனுப்பிடும் நேர்வில், அக்குழு வழங்கும் தகுதிச் சான்றின் அடிப்படையில்  பணியில் சேர தவறும் பட்சத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நடத்தை விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு,மருத்துவக் குழு அனுமதித்த நாள்கள் தவிர்த்து மீதியுள்ள நாள்கள் பிற தகுதியுள்ள விடுப்பாக கணக்கில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


>>> Personnel and Administrative Reforms Department G.O.(Ms.)No.6, Dated: 21-01-2021...






முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தலில் கடைபிடிக்கப்படுபவை...

 பள்ளியில் பணிபுரியும் ஒரு பட்டதாரி ஆசிரியர் எந்த பாடத்தில் பணிபுரிந்தாலும் இவர் முதுகலை ஆசிரியராக செல்ல விரும்பும் பாடத்தில் முதலில் இளங்கலையும் பிறகு முதுகலையும் முடித்திருந்தால் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல தகுதியுடையவராகிறார். எனவே பணிபுரியும் பாடத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். எந்த பாடத்திற்கு PGயாக செல்ல விரும்புகிறாரோ அந்த பாடத்தில் முதலில் UG முடித்துவிட்டு பிறகு PG முடித்திருக்க வேண்டும். மேலும் UG முதலில் முடிக்காமல் PG முடித்து, பிறகு UG முடித்திருந்தால் Same Majorக்கு தகுதியில்லை என பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது.மேலும் 10ம்  வகுப்பு, 11ம் வகுப்பு, 12 ம் வகுப்பு, பிறகு இளங்கலை, பி.எட் அல்லது முதுகலை பிறகு பி.எட் முடித்திருந்தாலும் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில்  செல்லலாம். தற்போது Cross Major எந்த பாடத்திற்கும் கிடையாது என்று  பள்ளிக் கல்வித்துறை இறுதியாகவும், உறுதியாகவும் முடிவு செய்து உள்ளது.


முதுகலை வேதியியல் ஆசிரியர் பணிக்கு, 313 பேர் நியமனம்...

 அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, வேதியியல் ஆசிரியர் பணிக்கு, 313 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே, இரண்டாண்டுகளுக்கு முன், தேர்வு நடத்தப்பட்டது. இதில், பங்கேற்றவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தேர்ச்சி பட்டியல் தயாரிக்கப்பட்டது.இந்நிலையில், பல்வேறு நீதிமன்ற வழக்குகளால், அவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.


வழக்குகள் முடிவுக்கு வந்ததை அடுத்து, இரண்டு வாரங்களுக்கு முன், பணி நியமன கவுன்சிலிங் நடத்தப்பட்டது.இதை தொடர்ந்து, 313 முதுநிலை பட்டதாரிகளுக்கு, வேதியியல் ஆசிரியர் பணிக்கான பணி நியமன உத்தரவு, நேற்று வழங்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டவர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், பணி நியமன ஆணைகளை வழங்கினார். புதிய ஆசிரியர்கள், நாளை பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

20% ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிமாறுதல் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்...

 20% ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிமாறுதல் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 018438/ சி5/ இ5/ 2020, நாள்: 30-01-2021...

>>> தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 018438/ சி5/ இ5/ 2020, நாள்: 30-01-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TRB மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு (முதுகலை ஆசிரியர் - பொருளியல் ) 03.02.2021 அன்று பணி நியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

 


TRB மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு ( முதுகலை ஆசிரியர் - பொருளியல் ) 03.02.2021 அன்று பணி நியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின்  செயல்முறைகள் ந.க.எண்: 6365/ டபிள்யு3/ இ2/ 2019, நாள்: 29-01-2021...

>>> பள்ளிக் கல்வி இயக்குநரின்  செயல்முறைகள் ந.க.எண்: 6365/ டபிள்யு3/ இ2/ 2019, நாள்: 29-01-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




இன்றைய (31-01-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


 மேஷம்

ஜனவரி 31, 2021


தை 18 - ஞாயிறு

சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி மனம் மகிழ்வீர்கள். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். புத்திரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அஸ்வினி : எண்ணங்கள் ஈடேறும்.


பரணி : உதவிகள் கிடைக்கும்.


கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஜனவரி 31, 2021


தை 18 - ஞாயிறு

உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களிடம் புரிதல் உண்டாகும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களின்போது உடைமைகளில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.


ரோகிணி : புரிதல் உண்டாகும்.


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஜனவரி 31, 2021


தை 18 - ஞாயிறு

உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கலை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். வாரிசுகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.


திருவாதிரை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


புனர்பூசம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




கடகம்

ஜனவரி 31, 2021


தை 18 - ஞாயிறு

குடும்ப பெரியவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். பயணங்களின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் தனவரவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



புனர்பூசம் : அனுகூலமான நாள்.


பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.


ஆயில்யம் : அன்பு அதிகரிக்கும்.

---------------------------------------




சிம்மம்

ஜனவரி 31, 2021


தை 18 - ஞாயிறு

சுயதொழில் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உத்தியோகத்தில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவு ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : முயற்சிகள் ஈடேறும்.


பூரம் : தாமதங்கள் அகலும்.


உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




கன்னி

ஜனவரி 31, 2021


தை 18 - ஞாயிறு

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த சுபகாரியங்களில் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.


அஸ்தம் : அனுகூலமான நாள்.


சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

ஜனவரி 31, 2021


தை 18 - ஞாயிறு

ஆன்மிகம் தொடர்பான அஞ்ஞான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மற்றவர்களின் கருத்துக்களில் உள்ள உட்பொருளை கவனித்து முடிவுகளை எடுப்பது நன்மையளிக்கும். உறவினர்களிடம் பொறுமையை கையாளுவது நல்லது. கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாற்றமான சிந்தனைகளும், வாய்ப்புகளும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.


சுவாதி : பொறுமை வேண்டும்.


விசாகம் : மாற்றமான நாள்.

---------------------------------------




விருச்சகம்

ஜனவரி 31, 2021


தை 18 - ஞாயிறு

சிறு தொழில் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். நண்பர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். சங்கீதம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



விசாகம் : முயற்சிகள் ஈடேறும்.


அனுஷம் : பயணங்கள் சாதகமாகும்.


கேட்டை : ஆதரவான நாள்.

---------------------------------------




தனுசு

ஜனவரி 31, 2021


தை 18 - ஞாயிறு

உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நன்மையளிக்கும். குடும்ப உறுப்பினர்களின் உதவியால் சேமிப்புகள் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கும், பொருளாதாரமும் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



மூலம் : அனுசரித்து செல்லவும்.


பூராடம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


உத்திராடம் : மனம் மகிழ்வீர்கள்.

---------------------------------------




மகரம்

ஜனவரி 31, 2021


தை 18 - ஞாயிறு

பணியில் இருப்பவர்கள் மற்றவர்களின் பணியை கூடுதலாக பார்க்க நேரிடும். எடுத்த செயல்களை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் அமைதி வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



உத்திராடம் : காலதாமதம் உண்டாகும்.


திருவோணம் : கவனம் வேண்டும்.


அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------




கும்பம்

ஜனவரி 31, 2021


தை 18 - ஞாயிறு

ஆன்மிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். தொழில் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அவிட்டம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


சதயம் : நம்பிக்கை பிறக்கும்.


பூரட்டாதி : முதலீடுகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மீனம்

ஜனவரி 31, 2021


தை 18 - ஞாயிறு

செய்யும் முயற்சிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். வழக்கு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். நவீன தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும். 


உத்திரட்டாதி : காலதாமதங்கள் குறையும்.


ரேவதி : முயற்சிகள் ஈடேறும்.

---------------------------------------

அரசு ஊழியர்களை மோசடி செய்யும் தமிழக அரசு (நன்றி : நக்கீரன்)...

ஆட்சியில் இருப்பவர்கள் தங்களை மிகப்பெரிய அதிகாரம் கொண்டவர்களாக காட்டிக்கொள்ள என்ன செய்வார்கள் தெரியுமா?

 

தங்களுக்குக் கீழ் உள்ள ஊழியர்களை சவட்டி எடுப்பார்கள். தங்களைப் பார்த்து பயப்பட வேண்டும் என்பதற்காக தண்ணியில்லாத காடு, வேலையில்லாத இலாகா என்பவற்றை உருவாக்கி வைத்து ஊழியர்களை பழிதீர்ப்பார்கள்.

 

இப்போது, அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்தப் போராட்டத்தையும் பல கட்ட முயற்சிகள் தோற்றதால்தான் நடத்துகிறார்கள். ஆனால், அவர்களுடைய போராட்டத்தை சம்பள உயர்வு போராட்டமாக திசைதிருப்ப ஆட்சியாளர்கள் திட்டமிட்டு பிரச்சாரம் செய்கிறார்கள்.

 

உண்மை அதுவல்ல என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை ஊடகங்களுக்கு உண்டு. அந்த வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை கொஞ்சம் விரிவாக பார்க்க வேண்டியது அவசியம்.

 

தமிழக அரசாங்கத்தை இனிமேல் தனியார் நிறுவனங்களைப் போல காண்ட்ராக்ட் அடிப்படையில் வேலைக்கு ஆள் எடுத்து நடத்த ஒரு மாபெரும் சதித்திட்டத்தை அரசாணை 56 மூலமாக  அரசு நிறைவேற்றி இருக்கிறது.

 

இந்த அரசாணை 56 என்ன சொல்கிறது தெரியுமா? தற்போது மூன்றரை லட்சம் அரசு ஊழியர் காலியிடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களையும்,  இனிமேல் காலியாகிற பணியிடங்களையும் அவுட்சோர்சிங் முறையில் தினக்கூலி அடிப்படையில் ஆட்களை சேர்த்து நிரப்ப வழி அமைக்கிறது.

 

இது, அடுத்த தலைமுறையினரை படுபாதாளத்தில் தள்ளிவிடும். வேலை வாய்ப்புகளை அழித்துவிடும் என்பதால் அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும் என்று போராடுகிறார்கள்.

 

அதுபோல, அரசாணை 100 மற்றும் 101 ஆகியவைகளும் ஆபத்தான அரசாணைகள்தான்.  ஒரே வளாகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகளுடன் இணைக்க இந்த அரசாணைகள் வழி செய்கின்றன. இப்படி இணைப்பதன் மூலம், 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்கள் மூடப்படும் அபாயம் இருக்கிறது என்பதாலும், பள்ளிகளில் ஆட்குறைப்பு செய்ய நேரும் என்பதாலும் இந்த ஆணைகளையும் ரத்து செய்யும்படி போராடுகிறார்கள்.

 

புதிதாக மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்ற முடிவு நல்லதுதான். ஆனால், அந்த வகுப்புகளை எடுப்பதற்காக மாண்டிசோரி பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களை விடுத்து, இடைநிலை ஆசிரியர்களை அந்த வகுப்புகளுக்கு நியமிக்கும் அரசு முடிவையும் எதிர்த்து போராடுகிறார்கள்.

 

சம்பள உயர்வுக்காக போராடுகிறார்கள் என்று எப்படி சொல்கிறார்கள்? அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் சம்பள உயர்வுக்காக போராடவில்லை. தங்களுக்கு சேரவேண்டிய 21 மாத சம்பள நிலுவைத் தொகையைத்தான் கேட்கிறார்கள். அது என்ன நிலுவைத் தொகை?

 

7 ஆவது சம்பளக் கமிஷன் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க பரிந்துரை செய்தது. அதன்படி, 1.1.2016 முதல் புதிய சம்பள விகிதம் ஏற்கப்படுவதாக அரசு அறிவித்தது. ஆனால், அந்த சம்பள விகிதத்தை 1.10.2017 வரை, 21 மாதங்களாக கொடுக்காமல் பிடித்தம் செய்து வைத்திருக்கிறது. எங்களுக்குச் சேர வேண்டிய சம்பளத்தைத்தான் கேட்கிறோம்.

 

இப்போதும் 21 மாதங்களாக எந்த முடிவும் சொல்லாமல் எங்களுக்குச் சேரவேண்டிய நிலுவைத் தொகையை இழுத்தடிக்கிறது அரசு என்கிறார்கள்.  இருக்கிறதா இல்லையா என்பதைக்கூட சொல்ல மறுக்கிறது அரசு.

 

இதேபோல்தான் 1.7.2003-லிருந்து 5 லட்சத்து 4 ஆயிரம் ஊழியர்களிடம் பென்சனுக்காக பிடித்தம் செய்த 10 சதவீத சம்பளம் 28 ஆயிரம் கோடி ரூபாய் வைத்துக்கொண்டு பென்சன் திட்டத்தையே ரத்து செய்துவிட்டார் ஜெயலலிதா. பழைய பென்சன் திட்டத்துக்கு பதிலாக புதிய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதாக உறுதி அளித்தார்.

 

அதாவது புதிய பென்சன் திட்டம் என்பது ஊழியர்களிடம் பிடித்தம் செய்த 28 ஆயிரம் கோடி ரூபாயுடன் அரசு தனது பங்கிற்கு 28 ஆயிரம் கோடி ரூபாய் சேர்த்து இபிஎஃப்பில் செலுத்த வேண்டும். இப்படிப்போடப்படும் தொகையில் ஒரு பகுதி பணிக்கொடையாகவும், மீதமுள்ள தொகை பென்சனாகவும் கிடைக்கும்.

 

ஆனால், அந்தத் தொகையை கட்ட அரசிடம் பணம் இல்லை என்கிறார்கள். இபிஎஃபில் கட்ட வேண்டும் என்றால் 28 பிளஸ் 28 – 56 ஆயிரம் கோடி ரூபாயும், அதற்கு வட்டியாக 14 ஆயிரம் கோடி ரூபாயும் வேண்டும். அதாவது 70 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டும். அரசுக்கு அந்த சிரமம் வேண்டாம் என்றுதான் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தும்படி கேட்கிறோம். பழைய பென்சன் திட்டத்திற்கு அரசு சார்பில் பணம் போட வேண்டியதில்லை. வட்டியும் 7 ஆயிரம் கோடி இருந்தால் போதும். அதாவது, மொத்தத்தில் 35 ஆயிரம் கோடி ரூபாய் இருந்தால் போதும். இதன்மூலம் அரசுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சம்தான்.


ஆனால், இதைக்கூட செய்ய முடியாது என்று அரசு பிடிவாதம் பிடிக்கிறது என்பதுதான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்துக்கு சொல்லப்படும் விளக்கம்.

 

இனியாவது இத்தகைய போராட்டங்களில் உள்ள நியாயங்களை உணரவேண்டும். வெறுமனே போராட்ட உணர்வுகளை எதிர்த்தால், நமது பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும். நிரந்தர வேலைவாய்ப்புகளை ஒழித்துவிட்டு, கார்பரேட் கம்பெனிகளைப் போல அரசுகள் மாறவும், கார்பரேட் நிறுவனங்களின் ஊழியர்களைப் போல பணிப்பாதுகாப்பு இல்லாத அடிமைகளாக எதிர்கால சந்ததிகள் மாறவும் வழி அமைத்துவிடும் என்பதை உணர்ந்தால் சரி.


>>> இச்செய்தியை முழுமையாக நக்கீரன் வலைதளத்தில் வாசிக்க...


இனி சார்ஜ் போட கூட போனை கீழே வைக்க வேண்டாம் - வருகிறது புதிய தொழில்நுட்பம்...

 வயர்லெஸ் முறையில் பல சாதனங்களை சார்ஜ் செய்யக்கூடிய ஒரு புதிய சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதாக mi xiaomi நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.


இந்த புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் நீங்கள் விளையாடும்போது அல்லது வீடியோக்களைப் பார்க்கும்போது சார்ஜ் தீர்ந்துவிட்டால், நீங்கள் வயர்டு அல்லது வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்ய போனை ஒரே இடத்தில் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்காக, சியோமி அறிமுகம் செய்துள்ள தொழில்நுட்பத்தின் பெயர் என்ன? இது எப்படி செயல்படுகிறது? என்பதையெல்லாம் இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம் வாங்க.


எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் ஸ்மார்ட் சாதனங்களை சார்ஜ் செய்ய ரிமோட் வயர்லெஸ் சார்ஜிங் நுட்பமான ‘Mi ஏர் சார்ஜ்’ எனும் தொழில்நுட்பத்தை சியோமி அறிமுகம் செய்துள்ளது.


இந்த தொழில்நுட்பம் செயல்பட, நீங்கள் உங்கள் தொலைபேசியை ஒரே இடத்தில் வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் சார்ஜருக்கு அருகில் இருக்க வேண்டுமென்பது அவசியம், இதனால் உங்கள் தொலைபேசியை வயர் ஏதும் இல்லாமல் சார்ஜ் செய்யலாம். ரிமோட் சார்ஜிங் நுட்பத்தைப் பற்றி நிறைய நிறுவனங்கள் பேசியுள்ளன, ஆனால் அதை முதலில் நிஜமாகியுள்ளது சியோமி நிறுவனம் தான்.


80W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங், 120W வயர்டு சார்ஜிங் போன்ற பல முதன்மையான தொழில்துறை நுட்பங்களை முதன் முதலில் அறிமுகம் செய்யும் OEM ஆக சியோமி தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த வகையில் சீன உற்பத்தியாளரான சியோமி இப்போது இந்த புரட்சிகர புதிய வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் முதலில் அறிமுகம் செய்துள்ளது.


தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து விரிவான விவரங்கள் பகிரப்படவில்லை என்றாலும், சிலவற்றை வெய்போவில் சியோமி நிறுவனத்தின் நிறுவனர் பகிர்ந்து கொண்டார், இது சார்ஜிங் நிலையத்திலிருந்து ஓரிரு மீட்டர் தூரத்திற்கு 5W மின்சக்தியை வழங்கும் அம்சம் கொண்டது என்று தெரிவித்துள்ளார்.


5-phase இன்டர்ஃபெரன்ஸ் ஆண்டெனா மூலம் உங்கள் சாதனத்தின் நிலையை தீர்மானித்த பிறகு, ஒரு phase control வரிசையை உருவாக்கும் 144 ஆண்டெனாக்கள் மில்லிமீட்டர்-அலை அதிர்வெண்களில் பீம்ஃபார்மிங் மூலம் ஆற்றலை அனுப்புகின்றன.


சியோமி எப்போது இந்த தொழில்நுட்பத்தை வணிகமயமாக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இப்போதைக்கு இல்லை, ஆனால் எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் உலகின் முதல் நிறுவனமாக Xiaomi இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Housing loan Principal amount, Interest and House Rent Allowance - Regarding RTI letter...

 


>>> Click here to Download Housing loan Principal amount, Interest and House Rent Allowance - Regarding RTI letter...


ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை நீக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - மற்ற வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வர்தான் முடிவு செய்வார் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்...

 


சிவகங்கை அருகே சக்கந்தியில் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தியதற்கான விழா நடந்தது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, முதன்மைக் கல்வி அலுவவலர் பாலுமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவிற்குப் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’’அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னோடியாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார். தமிழகத்தில்தான் கல்வி முறை சிறப்பாக உள்ளது எனக் கல்வியாளர்கள், மற்ற மாநிலத்தவர் தெரிவித்துள்ளனர். 742 அடல் டிங்கரிங் லேப் திட்டம் அடுத்த மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும். பள்ளிகளில் 7,500 ஸ்மார்ட் வகுப்புகள், 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை வழங்க மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும் ஷூ, சாக்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும். காலத்திற்கு ஏற்ப ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை நீக்கி விட்டோம். ஏற்கனவே 7,100 பேர் உபரி ஆசிரியர்களாக உள்ளனர். அவர்களைக் காலிப் பணியிடங்களில் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு ரூ.1,400 கோடி நிதித் சுமை ஏற்படும்.

மேலும் சிலர் வழக்குத் தொடர்ந்துள்ளதால் ஆசிரியர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒத்துழைத்தால் பிப்.13-ம் தேதிக்குள் பட்டியல் வெளியிட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். மற்ற வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை நீக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ’’.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

IFHRMS - அடிப்படை நுட்பங்கள் - அரசு அலுவலர் பணி ஏற்பு முதல் பணி ஓய்வு வரை - FULL GUIDE - PART - I...


IFHRMS - அடிப்படை நுட்பங்கள் - அரசு அலுவலர் பணி ஏற்பு முதல் பணி ஓய்வு வரை - FULL GUIDE - PART - I (தயாரிப்பு - DRPGTA)...


1. IFHRMS - ஒரு பார்வை

2.அலுவலக நடைமுறை

3. DDO Template 

4. DATA Validation 

5. HRMS & FINANCE 

6. NEW EMPLOYEE CREATION 

7. EX.EMPLOYEE CREATION 

8. NEW EMPLOYEE POST UPDATE 

9. TRANSFER PROCESS 

10. EASY WAY TO TRANSFER 

11. PROMOTION ENTRY 

12. BILL GROUP CREATION 

13. BILL GROUP ADD/UPDATE 

14. EX EMPLOYEE க்கு தனி BILL GROUP வேண்டுமா? 

15. SALARY BILL PREPARATION 

16. WEBADI SETTINGS 

17. BULK DUES AND DEDUCTION PROCESS 

18. HOUSE RENT ALLOWANCE - ஒரு பார்வை

19. ADVANCE UPLOAD - பயன்பாடு 

20. GPF ADVANCE CORRECTION செய்வது எவ்வாறு ? 

21. ELEMENT ENTRY DELETE செய்வது எவ்வாறு? 

22. SALARY BILL FLOW 

23. SALARY BILL FORWARD செய்யும்பொழுது வரும் Errors 

24. RETURN ECS 

25. ARREAR BILL PREPARATION 

26. EX EMPLOYEE ARREAR BILL PREPARATION 

27. SLS - SURRENDER 

28. DA ARREAR 

29. PONGAL BONUS 

30. FESTIVAL ADVANCE 

31. GPF ADVANCE 

32. GPF PART FINAL 

33. GPF 90 % WITHDRAWAL 

34. ADVANCE NUMBER DELETE செய்வது எவ்வாறு ? 

35. HOUSE LOAN ADVANCE 

36. SUBSISTANCE ALLOWANCE 

37. ADDITIONAL CHARGE ALLOWANCE 

38. RETIREMENT, DEATH., VRS ENTRY 

39. RE EMPLOYEMENT PAY 40. NOMINEE UPDATE செய்வது எவ்வாறு ?

41. GPF FINAL SETTLEMENT 

42. GPF REVISION 

43. DCRG 

44. DCRG REVISION 

45. CPS FINAL SETTLEMENT 

46. SPF 1984 

47. SPF 2000 

48. EL & UEL ENCASHMENT 

49. EL & UEL ARREAR 

50. FSF (DEATH CLAIM) 

51 ISSUE REGISTRATION - TICKET ID என்றால் என்ன? 

52. PROVISIONAL PENSION 

53. INTIATOR & APPROVER CHANGE செய்வது எவ்வாறு ? 

54. DSC REGISTRATION 

55. PASSWORD CHANGE செய்வது எவ்வாறு ?

56. PAY SLIP எடுப்பது எவ்வாறு ?

போன்ற தகவல்களை உள்ளடக்கிய கையேடு...

>>> IFHRMS - அடிப்படை நுட்பங்கள் - அரசு அலுவலர் பணி ஏற்பு முதல் பணி ஓய்வு வரை - FULL GUIDE - PART - I - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


NMMS தேர்வு - பிப்ரவரி 2021 - தேர்வு மையங்கள் மற்றும் அதற்கான பள்ளிகளின் பட்டியல் (தர்மபுரி மாவட்டம்)...

 சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி 21.02.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வுக்கு , இணைப்பில் உள்ள பள்ளிகள் தேர்வு மையங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது . எனவே மேற்படி தேர்வின் பொருட்டு தேர்வறைகள் , தளவாடங்கள் மற்றும் இதர தேர்வு முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்யுமாறு சார்ந்த தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப் படுகிறது. 21.02.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தேர்வு மைய விவரங்கள் மற்றும் காலை 9.00 மணிக்கு தேர்வு தொடங்கி பகுதி I – மனத்திறன் தேர்வு ( Mental Ability Test ) ( MAT ) , பகுதி II படிப்பறிவுத் தேர்வு ( Scholastic Aptitude Test ) (SAT) நடைபெறும் என தெளிவாக தெரிவிக்குமாறும் , தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்களை தொடர்பு கொண்டு தங்கள் பள்ளியில் இருந்து தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்களை சரிப்பார்த்துக் கொள்ளுமாறும் இணைப்பு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப் படுகிறது. 

இணைப்பு : தேர்வு மைய விவரம் மற்றும் இணைப்பு பள்ளிகள் விவரம் :

>>> Click here to Download NMMS EXAM FEB 2021 CENTER LIST AND CLUBING SCHOOLS LIST…


அரசாணை எண்.16, நாள்: 25-01-2021 - அனுமதியற்ற தனி மனை மற்றும் மனைப்பிரிவு ஆகியவற்றை வரன்முறைப்படுத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு...

 


G.O.No.16, Dated: 25-01-2021

அனுமதியற்ற தனி மனை மற்றும் மனைப்பிரிவு ஆகியவற்றை வரன்முறைப்படுத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு தமிழக அரசால் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னர் இருந்த வாய்ப்புகளை பயன்படுத்தாமல் தவறவிட்டவர்களும் வரன்முறைப்படுத்தல் பற்றிய தகவல் தெளிவாக தெரியாமல் இருந்தவர்களுக்கும் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பினை மறவாமல் பயன்படுத்திக் கொள்ளவும்.. இனியும் ஒரு தேதி நீட்டிப்புத் தவணை கிடைக்கும் என்று காத்திராமல் இதுவரை வரன்முறை செய்திடாத வீட்டு மனைகள் மற்றும் வீட்டு மனைப் பிரிவுகளை வரும் பிப்ரவரி 28 (28-02-2021) க்குள் தமிழக அரசின் DTCP (DIRECTORATE OF TOWN & COUNTRY PLANNING) யில் முறையாக விண்ணப்பித்து அத்துறையின் அனுமதி உத்தரவினை(APPROVAL) பெற்றிடுங்கள்..... 

இதுகுறித்த 25-01-2021 நாளில் வெளியிடப்பட்ட தமிழக அரசின் அரசாணை  PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.... 

>>> அரசாணை எண்.16, நாள்: 25-01-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


9, 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - ஓரிரு நாளில் அறிவிப்பு...

 ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு, இரண்டு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழகத்தில், கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி, கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. இந்நிலையில், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் துவங்கி உள்ளன.


மாணவ - மாணவியர் முக கவசம் அணிந்து, வகுப்புகளில் பங்கேற்கின்றனர். இதையடுத்து, ஒன்பது மற்றும் பிளஸ் 1மாணவர்களுக்கும், பிப்., முதல் வாரத்தில், நேரடி வகுப்புகளை துவங்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இந்த வகுப்புகளுக்கான குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் ஒப்புதல் கிடைத்ததும், இன்று அல்லது நாளை, இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா குறைவதால் 9,11ம் வகுப்புகள் திறக்க வாய்ப்பு? சத்துணவு மையங்களை பராமரிக்க நெறிமுறைகள் அறிவிப்பு...

 


மருத்துவச் சான்றின் அடிப்படையில் ஈட்டா விடுப்பு (Medical Leave) - அடிப்படை விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு... (அதன் படி மருத்துவ அடிப்படையிலான விடுப்புக்கு விண்ணப்பிக்கப்படும் ஒவ்வொரு விண்ணப்பமும் ஏழு நாட்களுக்குள் மருத்துவ வாரியத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்ற திருத்தம் இணைக்கப்பட்டுள்ளது.) - Personnel and Administrative Reforms Department G.O.(Ms.)No.6, Dated: 21-01-2021...

 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசாணை(நிலை) எண்: 6, நாள்: 22-01-2021...

திருத்தங்கள்.

கூறப்பட்ட அடிப்படை விதிகளில், பின் இணைப்பு I இல், இணைப்பு II- பகுதி I இல், அடிப்படை விதி 74 இன் கீழ் உள்ள விதிகளில், "அரசு ஊழியர்களின் விஷயத்தில் விடுப்பு நடைமுறை" என்ற தலைப்பில், - (1) விதி 3 க்குப் பிறகு, பின்வரும் விதி செருகப்பட வேண்டும், அதாவது: - '3 (அ). மருத்துவ அடிப்படையில் விண்ணப்பிக்கப்படும் விடுமுறைக்கு அல்லது அத்தகைய விடுப்பை நீட்டிப்பதற்கான ஒவ்வொரு விண்ணப்பமும், அத்தகைய விடுப்புக்குள் நுழைந்த அல்லது நீட்டிக்கப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் தகுதிவாய்ந்த அதிகாரத்திற்கு அனுப்பப்பட வேண்டும். (குரூப் சி மற்றும் டி அரசு ஊழியர்கள்,  பதிவுசெய்யப்பட்ட மருத்துவரிடம் சான்று பெற வேண்டும் மேலும் குரூப் ஏ மற்றும் பி அரசு ஊழியர்களின் விஷயத்தில் அரசு மருத்துவர் அல்லது ஒரு உத்தியோகபூர்வ மருத்துவ உதவியாளர் ஆகியோரால் பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளர் வழங்கிய சான்றிதழுடன்.


(2) விதி 9 ஏ , துணை விதி (iii) க்குப் பிறகு, பின்வரும் துணை விதி செருகப்படும், அதாவது: - '(iii-அ) துணை விதிகளின் (i), (ii) மற்றும் (iii) மேலே வரும் சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட விடுப்பு விண்ணப்பத்தைப் பெற்ற அல்லது நீட்டிப்பு செய்த நாளிலிருந்து மூன்று நாட்களுக்குள் மருத்துவக் குழு அல்லது அரசு மருத்துவர்க்கு அனுப்பப்பட வேண்டும்  '; 


(3) விதி 24 க்குப் பிறகு, பின்வரும் விதி செருகப்படும், அதாவது: - '24-ஏ. பரிந்துரைக்கப்பட்ட தேதியில் மருத்துவ வாரியம் அல்லது குழுவில் கலந்து கொள்ளாத அல்லது மருத்துவ வாரியம் அல்லது குழுவிலிருந்து உடற்தகுதி சான்றிதழைப் பெற்ற பின்னர் பணியில் சேராத அரசு ஊழியர், தமிழ்நாடு சிவில் சர்வீசஸ் (ஒழுக்கம் மற்றும் மேல்முறையீடு ) இத்தகைய குறைபாடுகளுக்கான விதிகள் மற்றும் துறைசார் நடவடிக்கைகளின் முடிவில், மருத்துவ வாரியம் அல்லது குழு பரிந்துரைத்த காலம் தவிர, மருத்துவ அடிப்படையிலான விடுமுறை தவிர வேறு தகுதியான விடுப்பாக குறிப்பிட்ட விடுப்புக் காலம் கட்டுப்படுத்தப்படும்.

Personnel and Administrative Reforms Department G.O.(Ms.)No.6, Dated: 21-01-2021...

AMENDMENTS

In the said Fundamental Rules, In Appendix I, in Annexure II-Part I, in the Rules under Fundamental Rule 74, under the heading "Leave Procedure in the case of Government Servants', -

(1) after rule 3, the following rule shall be inserted, namely:-'3(A). Every application for leave on medical grounds or for extension of such leave should be sent to the competent authority within a period of seven days from the date of entering on or extending of such leave, along with the certificate issued by a Registered Medical Practitioner in the case of Group C and D Government Servants and by a Government Doctor or an Official Medical Attendant in the case of Group A and B Government servants.'; 

(2) In rule 9A, after sub-rule (iii), the following sub-rule shall be inserted, namely:- '(Ill-a) In cases falling under sub-rules (i), (ii) and (iii) above, the reference to the Medical Committee or the Government Doctor shall be made within a period of three days from the date of receipt of leave application or extension therefor.'; 

(3) after rule 24, the following rule shall be Inserted, namely:-'24-A. The Government servant, who has not attended the Medical Board or Committee on the prescribed date or who does not Join duty after obtaining fitness certificate from the Medical Board or the Committee, shall be proceeded against departmentally under the Tamil Nadu Civil Services (Discipline and Appeal) Rules for such lapses and on conclusion of the departmental action, the period in question shall be regulated as eligible leave other than leave on medical grounds except the period recommended by the Medical Board or the Committee, If any.'. (BY ORDER OF THE GOVERNOR) 


>>> Click here to Download Personnel and Administrative Reforms Department G.O.(Ms.)No.6, Dated: 21-01-2021...



>>> மருத்துவச் சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு (Medical Leave) - திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ள பணியாளர் சீர்திருத்தத் துறை, அரசாணை எண்.6, நாள்.22.01.2021ல் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள்...





பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை...

 தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா விதிகளை பின்பற்றி மாணவர்கள் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் சில மாணவர்கள் இந்த அறிவிப்பை மீறி முகக்கவசம் அணியாமல் பள்ளிக்கு வருவதாகவும், சிலர் முகக்கவசத்திற்கு பதிலாக கை குட்டைகளை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியான நிலையில் அது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் மிக முக்கிய நடவடிக்கையான முகக்கவசம் அணிவது மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் அந்த விதியை மீறி முகக்கவசம் அணியாமல் பள்ளிக்கு வருவதாக புகார் எழுந்துள்ளது. அவர்கள் முகக்கவசத்திற்கு பதிலாக கை குட்டைகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பெரம்பலூர் அரசு உயர்நிலை பள்ளிகள், மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிகளில் முகக்கவசம் அணியாமல் மாணவர்கள் பள்ளிக்கு வருவதாக அடிக்கடி புகார் எழுந்துள்ளது.

எனவே அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளும் இதில் கூடுதல் கவனம் செலுத்தி மாணவர்களை கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர செய்ய வேண்டும். மேலும் பள்ளிகளில் கொரோனா விதிகள் சரியான முறையில் பபின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

முக கவசத்துக்கு பதில் கைக்குட்டை – பள்ளி கல்வி இயக்குநர் எச்சரிக்கை...

 


பள்ளி மாணவர்கள் முக கவசம் அணிவதற்கு பதில், கைக்குட்டைகளை முகத்தில் சுற்ற, பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது.

தமிழகம் முழுதும், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜன., 19ல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. பள்ளிகளில், மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்காத வகையில், தடுப்பு விதிகளை பின்பற்ற, அரசு அறிவுறுத்தியுள்ளது. சில இடங்களில் முக கவசம் கூட அணியாமல், மாணவர்கள் பள்ளிக்கு வருவதாக, புகார்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பள்ளிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றவும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், முதன்மை கல்வி அலுவலர்கள் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும், தனியார் பள்ளிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை, கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.

இந்நிலையில், பெரம்பலுார் அரசு உயர்நிலை பள்ளி உள்பட, பெரம்பலுார் மாவட்ட பள்ளிகள், அரியலுார், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளில், மாணவர்கள் முக கவசம் அணிவதில்லை என, தெரியவந்துள்ளது.மேலும், முக கவசத்துக்கு பதில், மாணவர்கள் தங்கள் முகத்தில் கைக்குட்டைகளை வைத்து மூடியபடி வருகின்றனர்.

எனவே, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளும், இதுகுறித்து உரிய கவனம் எடுத்து, அரசின் விதிகளை மாணவர்கள் கட்டாயம் பின்பற்றவும், மாணவர்கள் முக கவசம் அணிந்து வரவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிகளில் இளநிலை உதவியாளர்களுக்கு சனிக்கிழமை விடுப்பு – முதன்மை கல்வி அலுவலருக்கு கோரிக்கை...

 தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயரத்தின காந்தி, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கொடுத்த மனு விபரம்: மாவட்டத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும், அலுவலக பணியாளர்கள் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுவதாக, பல்வேறு பள்ளிகளில் இருந்து எங்களது சங்கத்திற்கு புகார்கள் வந்துள்ளன. ஆனால், முதலமைச்சரின் குறைதீர்க்கும் மனுவிற்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும், இளநிலை உதவியாளர்கள் சனிக்கிழமைகளில் பணிக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளார். சில தலைமையாசிரியர்கள் சனிக்கிழமைகளில் பள்ளிக்கு வராத, இளநிலை உதவியாளர்களுக்கு தற்செயல் விடுப்பும் வழங்கி உள்ளனர். அதை ரத்து செய்ய வேண்டும். அரசு விடுமுறை நாட்களில் அவர்கள் பணிக்கு வர பணிக்கப்பட்டால், அவர்களுக்கு பிறிதொரு வேலை நாளில், விடுப்பு வழங்கலாம் என்ற உத்தரவின்படி, வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள், விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வர வேண்டும் என, கட்டாயப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

போலியோ சொட்டு மருந்து முகாம் 31-01-2021 அன்று நடைபெறுதல் - கடைபிடிக்க வேண்டியவை - அரசு அறிவிப்பு வெளியீடு...

 Press Release - Pulse Polio Immunization (PPI) Campaign on 31st January 2021 - Tamil & English Version...

>>> போலியோ சொட்டு மருந்து முகாம் 31-01-2021 அன்று நடைபெறுதல் - அரசு அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஒருங்கிணைந்த கல்வி ( Samagra Shiksha )- பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தின் (Hi Tech Lab) தற்போதைய நிலை குறித்த விவரம் கோரி மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம்...

 


தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் பொருளியல் மற்றும் வணிகவியல் பாட முதுகலையாசிரியராக நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித் துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவு...


அரசிதழ் 36, நாள்: 30.01.2020ஐ பின்பற்றி செயல்பட உத்தரவு...

>>> வணிகவியல் பாட முதுகலையாசிரியராக நியமனம் செய்ய  தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) அவர்களின்  செயல்முறைகள், ந.க.எண். 002813 / டபிள்யு2 / இ1 / 2020,  நாள்.    29.01.2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> பொருளியல் பாட முதுகலையாசிரியராக நியமனம் செய்ய  தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) அவர்களின்  செயல்முறைகள், ந.க.எண். 002814 / டபிள்யு2 / இ1 / 2020,  நாள்.    29.01.2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Government Relief Application Form for Storm Damaged Crops

 புயலில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு நிவாரண விண்ணப்ப படிவம் மாதிரி Government Relief Application Form for Storm Damaged Crops