கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜூன் 3 முதல் 5 வரை தடுப்பூசி போடப்படாது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்...



தடுப்பூசி போட பொதுமக்கள் தற்போது அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்


*தடுப்பூசி இல்லாததால், ஜூன் 3 முதல் 5 வரை தடுப்பூசி போட முடியாது


*ஜூன் 6இல் முதல் கட்டமாக 3 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரும்


*இறப்பு சான்றிதழ் ஆய்வுக்கு பின் வழங்கப்படும் - ராதாகிருஷ்ணன்...


தேசிய நல்லாசிரியர் விருது பெற 01-06-2021 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்...

 தேசிய நல்லாசிரியர் விருது பெற 01-06-2021 முதல் 20-06-2021 முடிய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்...




12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யக் கோரும் வழக்கு 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு...




 சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது தொடர்பாக இன்னும் இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  



மூன்று நாளில் கொள்கை முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் கூறியதால் வழக்கு விசாரணையின்போது இத்தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.




சிபிஎஸ்இ, ஐசிஎஸ்ஐ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யக் கோரும் வழக்கு 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ICMR-ன் முக்கிய அறிவுறுத்தல்...



 கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் 102 நாட்களுக்கு RT-PCR- ஆன்டிஜன்  பரிசோதனைகளை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.



கொரோனாவின் சில இறந்த துகள்கள் உடலுக்குள் சில காலம் நீடித்திருக்கும் என்பதே இதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. இவை நோயை பரப்ப முடியாது என்றாலும்,உண்மைக்கு மாறான பாஸிட்டிவ் முடிவை பரிசோதனையில் காட்டக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.




அதே போன்று கொரோனாவில் இருந்து குணமடைந்த நபரிடம் அவசர நிலை இல்லாவிட்டால் ஆறுமாதம் கழித்தே அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



G.O.No.53 - கொரோனாவால் உயிரிழக்கும் செய்தியாளர்களுக்கான இழப்பீடு 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு...

 அரசாணை (நிலை) எண்: 53, நாள்: 31-05-2021 - கொரோனா வைரஸ் நோய் தொற்றால் உயிரிழக்கும் செய்தியாளர்கள் - வாரிசுகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு...



முதல் தவணை கொரானா நிதி ரூ.2000ஐ மே மாதத்தில் வாங்காதவர்கள் ஜூன் மாதம் வாங்கிக் கொள்ளலாம்- தமிழக அரசு...

 


அரசாணை எண் :277, ஆய்வக உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு ஊதிய ஆணை...

 


அரசாணை எண் :277, 4393 ஆய்வக உதவியாளர் மற்றும் 1794 இளநிலை  உதவியாளர் என மொத்தம் 6157 பணியிடங்களுக்கு ஊதிய கொடுப்பாணை...


>>> பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கடித எண். 9226/ ப.க.4(1)/ 2021-1, நாள்: 31-05-2021...



கல்பனா சாவ்லா விருது பெறுவதற்கு துணிவு மற்றும் வீர சாகசச் செயல்கள் புரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு...

 


கல்பனா சாவ்லா விருது பெறுவதற்கு துணிவு மற்றும் வீர சாகசச் செயல்கள் புரிந்த பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - தமிழ்நாடு அரசு...






கொரோனா தடுப்பு பணி - பொறுப்பு அலுவலர்களாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் நியமனம் : மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள்...



 கொரோனா தடுப்பு பணி - பொறுப்பு அலுவலர்களாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் நியமனம் : மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள்...


ஆணை :


திருச்சிராப்பள்ளி மாவட்டம் , திருவெறும்பூர் வட்டம் , துவாக்குடி கிராமம் , தேசிய தொழில்நுட்ப மைய வளாக மாணவ மாணவியர் விடுதியில் COVID - 19 தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பணிபுரிய கீழ்கண்டவாறு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணையிடப்படுகிறது . கீழ்காணும் அலுவலர்கள் தங்களுக்கு சுழற்சி முறைகளில் மேற்கண்ட கொரோனா சிகிச்சை மையத்தில் ஆஜரில் இருந்து பணிபுரிய வேண்டும் . மேலும் , உள்ளாட்சித்துறை அலுவலர்களான திரு.குமரேசன் , நகர திட்டமிடல் செயலாக்க அலுவலர் மற்றும் கார்த்திகேயன் , வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பொறுப்பு அலுவலர்கள் ஆவார்கள்.


>>> திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள்...


Income Tax E-filing / 24Q சார்ந்த சந்தேகங்களுக்கு கேள்வி பதில் வடிவ தகவல் தொகுப்பு...






நன்றி : TNPGTA மாநில சட்ட செயலாளர்
திரு.க.செல்வக்குமார்...



இன்றைய (31-05-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மே 31, 2021




விவசாயம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். தவறிப்போன சில பொருட்களை பற்றிய விபரங்களை அறிந்து கொள்வீர்கள். நுணுக்கமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் வழியில் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கேற்ப பொறுமையுடன் செயல்பட வேண்டும். தாய்வழி உறவினர்களின் மூலம் மேன்மையான சூழ்நிலைகளும், உதவிகளும் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



அஸ்வினி : லாபம் மேம்படும். 


பரணி : உதவிகள் கிடைக்கும்.


கிருத்திகை : பொறுமை வேண்டும்.

---------------------------------------




ரிஷபம்

மே 31, 2021




மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்களின் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமும், அதற்குண்டான அங்கீகாரமும் கிடைக்கும். சிலருக்கு கனவு தொடர்பான விஷயங்கள் ஏற்பட்டு நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : தன்னம்பிக்கை அதிகரிக்கும். 


ரோகிணி : சாதகமான நாள்.


மிருகசீரிஷம் : அங்கீகாரம் கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

மே 31, 2021




குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு உதவிகளை செய்யும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். விதண்டாவாத சிந்தனைகளையும், முடிவுகளையும் தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். வாகனப் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது விதிகளை மதித்து நடப்பது நன்மையை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மிருகசீரிஷம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும். 


திருவாதிரை : விட்டுக்கொடுத்து செல்லவும்.


புனர்பூசம் : விதிகளை மதிக்கவும். 

---------------------------------------





கடகம்

மே 31, 2021




அரசியல் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயமான சூழ்நிலைகள் ஏற்படும். உடற்பயிற்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மற்றவர்களை குறை சொல்லும் பழக்கத்தை குறைத்துக்கொள்வது நல்லது. ஆரோக்கியம் தொடர்பான எண்ணங்கள் படிப்படியாக குறையும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் மதிப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : ஆதாயமான நாள். 


பூசம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


ஆயில்யம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




சிம்மம்

மே 31, 2021




தாய்மாமன் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். கட்டி தொடர்பான பிரச்சனைகள் விலகும். எதிர்பாராத உதவிகளின் மூலம் கடன் தொடர்பான மனவருத்தங்கள் குறையும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் சோர்வுடன் காணப்படுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மகம் : மகிழ்ச்சியான நாள்.


பூரம் : மனவருத்தங்கள் குறையும். 


உத்திரம் : சோர்வு உண்டாகும்.

---------------------------------------




கன்னி

மே 31, 2021




பிள்ளைகளுக்கு தேவையான சுபகாரியங்களை செய்வதற்கான சூழ்நிலைகள் அமையும். விவேகமான சிந்தனைகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மனஉறுதியுடன் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இலக்கியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளும், மதிப்புகளும் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



உத்திரம் : பாராட்டுகள் கிடைக்கும்.


அஸ்தம் : ஈடுபாடு அதிகரிக்கும்.


சித்திரை : தீர்வு காண்பீர்கள். 

---------------------------------------




துலாம்

மே 31, 2021




உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பாசன வசதிகள் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய விஷயங்களில் இருந்து தெளிவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பால் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வீடு மற்றும் மனை சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



சித்திரை : மகிழ்ச்சியான நாள். 


சுவாதி : தெளிவு பிறக்கும்.


விசாகம் : லாபம் அதிகரிக்கும்.

---------------------------------------




விருச்சகம்

மே 31, 2021




உங்களின் தனிப்பட்ட செயல்களை செய்வதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். உடல் வளர்ச்சி மற்றும் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். காதுகள் தொடர்பான இன்னல்கள் குறையும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆபரண பராமரிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உடனிருப்பவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



விசாகம் : சாதகமான நாள். 


அனுஷம் : ஆலோசனைகள் கிடைக்கும். 


கேட்டை : புரிதல் ஏற்படும்.

---------------------------------------




தனுசு

மே 31, 2021




வேலையாட்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். திடமான சிந்தனைகளில் சிறு மாற்றங்கள் ஏற்படும். பணிவான பேச்சுக்கள் உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான ஆர்வம் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் சில செயல்களை செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மூலம் : கருத்து வேறுபாடுகள் மறையும். 


பூராடம் : நம்பிக்கை மேம்படும். 


உத்திராடம் : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

மே 31, 2021




மனதில் சுதந்திர உணர்வு அதிகரிக்கும். நடுநிலையான முடிவுகளின் மூலம் தெளிவு ஏற்படும். நகைச்சுவையான பேச்சுக்களின் மூலம் அனைவரிடத்திலும் பிரபலம் அடைவீர்கள். ஆடைகள் தொடர்பான விஷயங்களில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ற முன்னேற்றம் காலதாமதமாக கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



உத்திராடம் : சுதந்திரம் அதிகரிக்கும். 


திருவோணம் : பிரபலம் அடைவீர்கள். 


அவிட்டம் : காலதாமதம் உண்டாகும்.

---------------------------------------




கும்பம்

மே 31, 2021




தேவையற்ற சிந்தனைகள் மற்றும் கவலைகளின் மூலம் தூக்கமின்மை உண்டாகும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இடமாற்றம் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும். 


சதயம் : நெருக்கம் அதிகரிக்கும். 


பூரட்டாதி : இடமாற்றம் சாதகமாகும்.

---------------------------------------




மீனம்

மே 31, 2021




மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். முழங்கால் தொடர்பான பிரச்சனைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சாமர்த்தியம் வெளிப்படும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சமையல் சார்ந்த பணிகளில் லாபம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



பூரட்டாதி : ஆசைகள் உண்டாகும்.


உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும். 


ரேவதி : சாமர்த்தியம் வெளிப்படும்.

---------------------------------------


கொரோனாவால் இறந்த அரசு ஊழியருக்கு ரூ.25 லட்சம் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இணைக்க வேண்டியவை - ஊரக வளர்ச்சி ஆணையரின் கடிதம்...

 கொரோனாவால் இறந்த அரசு ஊழியருக்கு ரூ.25 லட்சம் பெறுவதற்கான  விண்ணப்பப் படிவம் மற்றும் இணைக்க வேண்டியவை குறித்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் கடிதம்...


>>> விண்ணப்பப் படிவம் மற்றும் இணைக்க வேண்டியவை குறித்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் கடிதம்...


அரசு ஊழியர் ஓய்வு வயது குறைக்கப்படுமா? - கோரிக்கை மனு...

 அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை பழையபடி மாற்ற வேண்டும்' என, தமிழ்நாடு வேலையில்லா பட்டதாரிகள் நலச்சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


சங்கத்தின் தலைவர் சோமசுந்தரம், செயலர் முகேஷ் ஆகியோர், தலைமை செயலர் இறையன்புக்கு அனுப்பியுள்ள மனு: வேலைவாய்ப்பற்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படாமல், அ.தி.மு.க., ஆட்சியில், கடைசி நேரத்தில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58ல் இருந்து 59; பின் 60 என உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது. இதனால், அரசு வேலையை எதிர்பார்த்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு தகர்ந்துள்ளது.


ஏற்கனவே, பதவி உயர்வு தேக்க நிலையில் இருந்த அரசு ஊழியர்களின் பதவி உயர்வு பறிபோனதால், அவர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இந்தியாவில் ஒரு சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்கள் அனைத்திலும், ஓய்வு வயது 58 ஆகவே உள்ளது. தற்போது, 60 வயதில் ஓய்வு என்ற உத்தரவால் 2020, 2021ல் ஓய்வு பெற்றிருக்க வேண்டிய, ஆயிரக்கணக்கான ஊழியர்கள், அடுத்த ஆண்டு ஒட்டு மொத்தமாக ஓய்வு பெறுவர். அப்போது, அரசுக்கு கடும் நிதிச்சுமை ஏற்படும். ஓய்வு வயது நீட்டிக்கப்பட்டதால் இரண்டு ஆண்டுகளில் அவர்கள் பெறும் மாத சம்பளத்தை கணக்கு போட்டு பார்த்தால், அவர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வூதிய பலன்களை விட அதிகமாகவே இருக்கும். எனவே, தாங்கள் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, பழையபடி 58 ஆக குறைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


துறை தேர்வுக்கான முடிவுகள் தேதி மற்றும் விண்ணப்பிக்கும் தேதி மற்றும் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது...



 2021 - ஜூன் மாதம் நடைபெறவிருந்த துறைத் தேர்வுகள் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு...



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் 08.06.2021 முதல் 11.06.2021 வரை நடைபெறவிருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை- II , தமிழ்நாடு போக்குவரத்து சார் நிலைப் பணிகள் 2013-2018 , பணிக்கான நேர்முகத் தேர்வு , தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது . மேற்படி பதவிக்கான நேர்முகத் தேர்வின் மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் . 



> அறிவிக்கை எண் 18/2019 , நாள் 29.05.2019 - இல் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் , 2008-2019 , 1. உதவி மின் ஆய்வாளர் 2. உதவி பொறியாளர் ( மின்சாரம் ) ( பொதுப் பணித் துறை ) மற்றும் 3. தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் பதவிகளுக்கான கலந்தாய்வு ( Counselling ) தேதியும் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் . 22.06.2021 முதல் 30.06.2021 வரை நடைபெறவிருந்த துறைத் தேர்வுகள் , மே -2021 தள்ளி வைக்கப்படுகிறது , மேலும் முடிவுகள் வெளியிடப்படாத 14 துறைத் தேர்வுகளின் முடிவுகள் 20.07.2021 அன்று வெளியிடப்படும்.



விண்ணப்பதாரர்களின் நலன் கருதி , துறைத் தேர்வுகள் , மே - 2021 - க்கு விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 31.07.2021 என மாற்றம் செய்யப்படுகிறது , இத்தேர்வானது ஆகஸ்டு 2021 ல் நடத்தப்படும். மேற்படி தேர்வுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


>>> தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணைய செய்தி வெளியீடு எண்: 20/ 2021, நாள்: 29-05-2021...




புதிய வருமானவரி இணையதளம் ஜூன் 7 ஆம் தேதி முதல் செயல்படும்...

 


சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு - விரைவில் அறிவிப்பு...

 


பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் எத்தனை பேர்? ஜூன் 30க்குள் கணக்கெடுக்க திட்டம்...

 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் எத்தனை பேர்? ஜூன் 30க்குள் கணக்கெடுக்க கிராம அளவில் குழு அமைக்க திட்டம்...




வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் 28.05.2021 முதல் 27.08.2021 வரை புதுப்பிக்கும் முறை - அரசின் செய்தி வெளியீடு...

 வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் 28.05.2021 முதல் 27.08.2021 வரை புதுப்பிக்கும் முறை - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்: 181, நாள்: 30-05-2021...


>>> தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்: 181, நாள்: 30-05-2021...


>>> வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவினைப் புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு - அரசாணை வெளியீடு...






கொரோனா தொற்றால் மறைந்த செய்தியாளர்களின் வாரிசுகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை விண்ணப்பம்...


 கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மறைந்த செய்தியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை பெறுவதற்கான விண்ணப்பம்...


>>> விண்ணப்பப் படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தேசிய அளவிலான உதவி எண்களை தனியார் தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும் - மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம்...

 தேசிய அளவிலான முக்கிய உதவி எண்களை தனியார் தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும் என மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.



SBI வங்கியின் பிற கிளைகளில் பணம் எடுக்கும் உச்சவரம்பு அதிகரிப்பு...

 பொதுவாக நாம் வங்கிகளில் தொடங்கிய சேமிப்பு கணக்கில், கணக்கு தொடங்கிய கிளையில் பணம் எடுத்தும் கொள்ளும் வசதி உண்டு.  வாடிக்கையாளர் அதே வங்கியின் வேறு கிளைகளில் பணம் எடுத்தால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். அதோடு பணமும் குறைவாகத் தான் எடுக்க முடியும்.


 


உச்ச வரம்பு அதிகரிப்பு 

ஆனால் கொரோனா காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளது.


 

 கணக்கு தொடங்கிய கிளை தவிர மற்ற கிளைகளிலும் பணம் எடுக்கும் உச்ச வரம்பினை அதிகரித்துள்ளது.

 


 நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, Self Cheque மூலம் எடுக்கும் தொகை வரம்பினை, ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. 


Withdrawal Form மூலம் எவ்வளவு? 

 மற்றொரு ஆப்சனான வித்ட்ராவல் பார்ம் மூலமாக ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரையில் எடுத்துக் கொள்ளலாம்.


 


 மூன்றாம் தரப்பு நபர் செக் மூலமாக பணம் எடுக்கும் வரம்ப்பானது 50,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல பார்ம் மூலமாக மூன்றாம் தரப்பினர் பணம் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதற்காக மூன்றாம் தரப்பினரின் கே ஒய் சி விவரங்கள் தரப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 


எப்போது வரையில் அமல்

 எஸ்பிஐயின் இந்த மாற்றங்கள் செம்டம்பர் 30, 2021 வரையில் அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 







முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள்...

 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள்...


#COVID19 சிகிச்சைப் பணிகளுக்காக #Donate2TNCMPRF நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி!


நன்கொடை- செலவினங்கள் பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன. இச்செயல் தொடரும்!


விரைவில் தமிழகம் மீளும்!


இணையசேவை-கடன் அட்டை மூலம் வழங்க:

https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html


UPI- VPA ID: tncmprf@iob







முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பெறப்பட்ட நன்கொடை குறித்த செய்தி வெளியீடு...

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பெறப்பட்ட நன்கொடை குறித்த செய்தி வெளியீடு...


 இன்று வரை #Donate2TNCMPRF-க்கு ரூ 186.15 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டிருக்கிறது. 


மருந்துகள் வாங்குவதற்கும், ஆக்சிஜன் தேவைகளுக்காகவும் ஏற்கனவே ரூ.100 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் ஆக்சிஜன் உருளைகள்- செறிவூட்டிகள், மருத்துவக் கருவிகள் வாங்குவதற்காக ரூ 41.40 கோடி ஒதுக்கப்படுகிறது.







கொரோனா வார்டுக்குள் சிகிச்சை பெறுவோரை PPE Kit அணிந்து சென்று நலம் விசாரித்தார் முதலமைச்சர்...

 கொரோனா வார்டுக்குள் சிகிச்சை பெறுவோரை PPE Kit அணிந்து சென்று நலம் விசாரித்தார் முதலமைச்சர்...


இது குறித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ட்விட்டர் பதிவு:


Covid19 வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்!


இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்...


Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.


மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். 


தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!








நிவாரண நிதி வழங்கிடும் குழந்தைளுக்கு திருக்குறள் நூல் அனுப்பி வைக்கப்படும் - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்...

நிவாரண நிதி வழங்கிடும் குழந்தைளுக்கு திருக்குறள் நூல் அனுப்பி வைக்கப்படும் - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்...

இது குறித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ட்விட்டர் பதிவு:

 தங்களின் சின்னஞ்சிறு கனவுகளுக்காக சிறுகச் சேமித்ததையும் #Donate2TNCMPRF-க்கு வழங்கிடும் பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணை நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது!


தமிழ் மண்ணில் அறம் தழைக்கட்டும்!


பிள்ளைச்செல்வங்களுக்கு திருக்குறள் நூலொன்று அன்புடன் அனுப்பி வைக்கப்படும்!


ஈதல் இசைபட வாழ்தல்...




இன்றைய (30-05-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மே 30, 2021



 

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தனவரவுகளை மேம்படுத்துவதற்கான சிந்தனைகளும், அதற்கான ஆலோசனைகளும் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.


கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------




ரிஷபம்

மே 30, 2021



 

சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். கலைத்துறை சார்ந்த செயல்பாடுகளில் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனை மற்றும் வீடு தொடர்பான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



கிருத்திகை : காரிய வெற்றி உண்டாகும்.


ரோகிணி : ஆரோக்கியம் மேம்படும்.


மிருகசீரிஷம் : சிந்தனைகள் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

மே 30, 2021



 

எதிர்பார்த்த பணிகள் நிறைவடைய காலதாமதம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்பாராத வாக்குவாதங்கள் உண்டாகும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் மனதில் நிம்மதி ஏற்படும். இளைய சகோதரர்களிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மிருகசீரிஷம் : காலதாமதம் ஏற்படும்.


திருவாதிரை : வாக்குவாதங்கள் உண்டாகும்.


புனர்பூசம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

---------------------------------------




கடகம்

மே 30, 2021



 

மாணவர்கள் கல்வி தொடர்பான பாடங்களில் திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு சாதகமாக அமையும். எந்தவொரு செயலிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்பட வேண்டும். வாழ்க்கைத்துணைவருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். செயல்பாடுகளில் புத்திக்கூர்மை வெளிப்படும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு முடிவுகளை எடுப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : திட்டமிட்டு செயல்படவும்.


பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


ஆயில்யம் : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------




சிம்மம்

மே 30, 2021



 

மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற மனவருத்தங்களை தவிர்க்க இயலும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களிடம் நிதானமான பேச்சுக்களின் மூலம் லாபம் மேம்படும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மகம் : சிந்தனைகள் தோன்றும்.


பூரம் : லாபம் மேம்படும்.


உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கன்னி

மே 30, 2021



 

உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தை வழியில் எதிர்பாராத சுபச்செய்திகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். செயல்களின் தன்மைகளை அறிந்து அதற்கான முடிவுகளை எடுப்பீர்கள். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.


அஸ்தம் : சுபமான நாள்.


சித்திரை : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------




துலாம்

மே 30, 2021



 

குடும்ப உறுப்பினரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான தொழில் வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். மறைமுகமான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்களை அறிந்துகொள்வீர்கள். நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.


சுவாதி : தனவரவுகள் ஏற்படும்.


விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------




விருச்சகம்

மே 30, 2021



 

வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கான சிந்தனைகளும், முயற்சிகளும் அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கையுடன் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். கோபமான பேச்சுக்களை குறைத்துக்கொண்டு சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது மேன்மையை ஏற்படுத்தும். தொழில் தொடர்பான முதலீடுகளில் ஆலோசனைகளை பெற்று மேற்கொள்ளவும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



விசாகம் : முயற்சிகள் அதிகரிக்கும்.


அனுஷம் : இழுபறிகள் அகலும்.


கேட்டை : ஆலோசனைகள் வேண்டும்.

---------------------------------------




தனுசு

மே 30, 2021



 

பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். திறமைக்கேற்ப செல்வாக்கும், பாராட்டுகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மூலம் : சாதகமான நாள்.


பூராடம் : பாராட்டுகள் கிடைக்கும்.


உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

மே 30, 2021



 

நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த கவலைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பங்காளி வகையில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பணியாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதன் மூலம் லாபம் மேம்படும். உணவு சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : தெளிவான நாள்.


திருவோணம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


அவிட்டம் : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------




கும்பம்

மே 30, 2021



 

சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான ஆசைகள் தோன்றும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். நண்பர்களின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆசைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அவிட்டம் : சாதகமான நாள்.


சதயம் : மேன்மை உண்டாகும்.


பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




மீனம்

மே 30, 2021



 

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணங்களின்போது தேவையான ஆவணங்களை எடுத்து செல்வது மேன்மையை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றங்களும், ஆதரவுகளும் ஏற்படும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் லாபம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



பூரட்டாதி : கவனம் வேண்டும்.


உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.


ரேவதி : லாபம் அதிகரிக்கும்.

---------------------------------------



இந்திய அரசின் விதிகளுக்கு இணங்கிய கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப்: தனி அதிகாரியை நியமித்து புகார்களை கையாள சம்மதம்...

 


இந்திய அரசின் விதிகளுக்கு இணங்கிய கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப்: தனி அதிகாரியை நியமித்து புகார்களை கையாள சம்மதம்..


மத்திய அரசின் புதிய ஒழுங்குமுறை விதிகளுக்கு கட்டுப்பட கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.


விதிகளின்படி புகார்களை விசாரிக்க தனி அதிகாரியை நியமிக்கவும் சம்மதம் தெரிவித்திருக்கின்றன.


ஆனால், ட்விட்டர் மட்டும் இதுவரை விதிகளுக்கு கட்டுப்பட ஒப்புதல் தெரிவிக்கவில்லை.


புதிய விதிகளின்படி குறைதீர்ப்பு, ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை கையாள ஒவ்வொரு சமூகவலைதளமும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும், அந்த அதிகாரிகள் இந்தியர்களாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பள்ளிக் கல்வித்துறை ஊழியர்களுக்கு ஊதிய நீட்டிப்பு: அரசாணைகள் வெளியீடு...

 பள்ளிக் கல்வித்துறையில் 6156 தற்காலிக பணியிடங்களுக்கும், ஆசிரியர் பணியில்லா பணியிடங்களில் பணியாற்றும் 5000 பேருக்கும் மே மாத ஊதியம் வழங்க கொடுப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கவித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு, நகராட்சி, உதவி பெறும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் உள்ள 6156  தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பணியல்லாத பணியிடங்களுக்கு இறுதியாக 2018 முதல் 2020 வரை உள்ள 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.



மேற்காணும் இந்த பணியிடங்களில் 1.1.2021 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக் கல்வி  இயக்குநர் அரசுக்கு கருத்துரு  அனுப்பியுள்ளார். மேலும் ஏப்ரல் மாதத்துக்கான ஊதிய கொடுப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.


இந்த பணியிடங்களுக்கு 2021 மே மாதத்துக்கு ஊதியம் பெறத்தக்க வகையில் ஊதிய கொடுப்பாணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் கருத்துரு அனுப்பியுள்ளார். தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்ட தற்காலிக பணியிடங்களுக்கு 1.1.2021 முதல் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு வழங்குவது குறித்த பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், 6156 பணியிடங்களுக்கு 2021 மே மாதத்துக்கான ஊதியம் பெற்று வழங்க வசதியாக ஊதிய கொடுப்பாணை வழங்கப்படுகிறது.  



மேலும்,   பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு 31.12.2020ல் முடிவடைந்த நிலையில் அந்த பணியிடங்களில் பணியாற்றி வரும் 778 துப்புரவாளர்கள், 494 இரவுக்காவலர்கள் என மொத்தம் 1272 பணியாளர்களின் பணியிடங்களுக்கு மட்டும் 1.1.2021 முதல் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு  ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கோரிக்கையை ஏற்று  அரசாணை 47ன் தொற்றுவிக்கப்பட்ட 2999 துப்புரவாளர் பணியிடம் மற்றும் 2001 காவலர் பணியிடம் என மொத்தம் 5000 பணியிடங்களில் 1270 பணியாளர்கள் 2021 மே மாதம் ஊதியம் பெறத் தக்க வகையில்  ஊதிய கொடுப்பாணை வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



>>> 5000 ஆசிரியரல்லா பணியிடங்களில் தற்போது பணிபுரியும் 1272 பணியிடங்களுக்கு (778 துப்புரவாளர் மற்றும்  494 இரவு காவலர்) மே -2021 மாதத்திற்கான  ஊதிய நீட்டிப்பு ஆணை...


>>> 6156 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா தற்காலிகப் பணியிடங்களுக்கான மே-2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை...



தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான NHIS Re-Imbursement - CLAIM FORM...



 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான NHIS Re-Imbursement - CLAIM FORM...


கொரானா சிகிச்சை காப்பீடு தொகை திரும்ப பெற கடித மாதிரிகள்...


1 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காப்பீடு தொகை பெறாதவர்களுக்கு முதல் கடிதம்


2  காப்பீட்டு திட்டத்தில் அங்கீகாரம்  இல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் காப்பீடு தொகை பெற இரண்டாவது கடிதம்


3) காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று குறைவான தொகை பெற்றவர்கள் கூடுதல் தொகை பெற 3 வது கடிதம்...


இணைக்க வேண்டியவை:

  • NHIS card xerox
  • Estimation xerox copy
  • Bill summary xerox copy
  • Discharge summary xerox copy
  • All Other Bill xerox copy 

இணைத்து அனுப்பி மருத்துவ காப்பீடு தொகை பெறலாம்.


>>> Click here to Download NHIS Reimbursement Model Letter...



>>> G.O.No:391, Dated: 10.12.2018 - NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற்கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம்...


+2 & ITI முடித்தவர்களுக்கு CIPET நிறுவனத்தில் பட்டயம் பயில விண்ணப்பிக்கலாம்...




மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் CIPET பிளாஸ்டிக் அச்சு (டிபிஎம்டி), பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தின் டிப்ளமோ   பயில அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.06.2021


கல்வித் தகுதி: 10 / +2 / ITI


தேர்வு முறை: மதிப்பெண்கள் அடிப்படையில்


கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள PDF LINK👇


https://www.cipet.gov.in/centres/cipet-haldia/downloads/07-05-2021-001/Advertisement.pdf


தமிழகத்தில் தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு – 3378 காலிப்பணியிடங்கள்- அறிவிப்பு...

 


தமிழகத்தில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தம் 3378 பணியிடங்கள் காலியாக உள்ளன. ரயில்வே வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தெற்கு ரயில்வே தொழில் பழகுநர் வேலைகளில் சேரலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 01.06.2021 முதல் 30.06.2021 வரை விண்ணப்பிக்கலாம்.


>>> முழு விவரங்கள் அறிய இங்கே சொடுக்கவும்...


கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி உத்தரவு...

 



கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி உத்தரவு...


“வைப்பு தொகையாக வழங்கப்படும் நிதி, 18வது வயதில் முதிர்வுத் தொகையாக பெறலாம்"


கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கவும் உத்தரவு.


தனியார் பள்ளியில் படித்தால் பிஎம் கேர் நிதியில் இருந்து பணம் வழங்கப்படும் எனவும் மோடி உத்தரவு.


புத்தகங்கள், பள்ளி உடைகள் செலவையும் மத்திய அரசே ஏற்கும் எனவும் மோடி உத்தரவு.BREAKING: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி உத்தரவு


“வைப்பு தொகையாக வழங்கப்படும் நிதி, 18வது வயதில் முதிர்வுத் தொகையாக பெறலாம்"


கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கவும் உத்தரவு.


தனியார் பள்ளியில் படித்தால் பிஎம் கேர் நிதியில் இருந்து பணம் வழங்கப்படும் எனவும் மோடி உத்தரவு.


புத்தகங்கள், பள்ளி உடைகள் செலவையும் மத்திய அரசே ஏற்கும் எனவும் மோடி உத்தரவு.



கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5லட்சம் வைப்பீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (முழுமையான தகவல்கள்)...

 


கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5லட்சம் வைப்பீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...


கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம்  வைப்புத் தொகையாக வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக  வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பு தொகையாக அவர்களது வங்கிக் கணக்கில் வைக்கப்படும். அந்த குழந்தைகள் 18 வயதை நிறைவு செய்யும் போது அந்த தொகை வட்டியோடு சேர்த்து வழங்கப்படும்.



பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை அரசே ஏற்கும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு விடுதிகளில் தங்க வைக்க முன்னுரிமை வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரனோ தொற்றினால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு உடனடியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும்...


>>> செய்தி வெளியீடு எண்: 180, நாள்: 29-05-2021...


நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதில் சித்த மருத்துவத்தின் பங்கு என்ன? - மருத்துவர் கு.சிவராமன் அவர்களின் ஆன்லைன் நிகழ்ச்சி...




 நாணயம் விகடன், ஹெச்.டி.எஃப்.சி பேங்க் இணைந்து `நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் சித்த மருத்துவத்தின் பயன்கள் மற்றும் செய்யக்கூடாதவை.’ என்கிற தலைப்பில் ஆன்லைனில் கட்டணமில்லா கருத்தரங்கை நடத்துகின்றன.



2021 மே 29, மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை நடக்கும் இந்தக் கருத்தரங்கில் சித்த மருத்துவர் கு.சிவராமன் சிறப்புரையாற்றுகிறார்.



கொரானா வேகமாக பரவி வரும் இந்தக் கால கட்டத்தில், நம்மை நோய் தாக்குதலிருந்து பாதுகாக்கும் கவசமாக நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. இதனை அதிகரிப்பதில் சித்த மருத்துவத்தின் பங்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்து சித்த மருத்துவர் கு.சிவராமன் விரிவாக பேசுகிறார்.



ஹெச்.டி.எஃப்.சி பேங்க்-ன் மூத்த துணைத் தலைவர் ராம்தாஸ் பரதன் இந்தக் கூட்டத்தில் வங்கிச் சேவைகள் குறித்து பேசுகிறார்.


இது கட்டணமில்லா கருத்தரங்கம். அனுமதி இலவசம். ஆனால், முன் பதிவு அவசியம்.


முன் பதிவு செய்ய: https://bit.ly/3v5E75E


கருப்பு பூஞ்சை தொற்றுக்கு மருந்து விலையை குறைத்தது Genetics Life Science நிறுவனம்...

 கரும்பூஞ்சை  தொற்றுக்கு மருந்து விலையை குறைத்தது Genetics Life Science நிறுவனம் 


▪️ ரூ.7000க்கு விற்கப்பட்ட அம்போ டெரிசின் - பி மருந்தை ரூ.1200 க்கு விற்க ஒப்புதல்...






ஐ.சி.எப்.ரெயில்வே பணி வடமாநிலத்தவர்கள் விண்ணப்பிக்க அனுமதி இல்லை - தமிழக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்ய முடிவு...

 ஐ.சி.எப்.ரெயில்வே பணி வடமாநிலத்தவர்கள் விண்ணப்பிக்க அனுமதி இல்லை - தமிழக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்ய முடிவு...




+2 பொதுத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படமாட்டாது - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி...



தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு  நிச்சயம் ஆன்லைனில் நடத்தப்படமாட்டாது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி...


*12ம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயமாக நடைபெறும்* 


*கொரோனா பரவலை கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும்.* 


*மாணவர்களின் படிப்பு எவ்வளவு முக்கியமோ உடல்நலமும் அவ்வளவு முக்கியம்.*


*கொரோனா தொற்று எப்போது குறைகிறதோ, அப்போது தேர்வு நடத்தப்படும்*


*மாநில அரசே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியை முடிவு செய்யும்.*


*தேர்வு நேரம் வழக்கம் போல் 3 மணி நேரம் நடத்த வேண்டும், பள்ளியிலேயே தேர்வு நடத்த வேண்டும் என்று பலர் வலியுறுத்தியுள்ளனர்.*


*ஆதனால் மாணவர்கள் வகுப்பறைக்கு வந்தே தேர்வு எழுத வேண்டும்*


*விருப்பமுள்ள ஆசிரியர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

NHIS 2016 - கூடுதல் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் & சில மருத்துவமனைகளை நீக்குதல் - அரசாணை வெளியீடு...

 


புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் - 2016 - அரசுத் துறைகள் மற்றும் பிற நிறுவனங்களின் ஊழியர்களுக்கான சிகிச்சை - 52 கூடுதல் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல், 1 மருத்துவமனைக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கை, பெயர் மாற்றம் 1 மருத்துவமனை, மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் 5 மருத்துவமனைகளை நீக்குதல் - அரசாணை வெளியீடு...


>>> Click here to Download G.O.(Rt) No.325, Dated 27th May 2021...


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவினைப் புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு - அரசாணை வெளியீடு...



 அரசாணை எண்:204, நாள்.28.05.2021 - வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 2017, 2018 & 2019 ஆம் ஆண்டுகளில் பதிவினைப் புதுப்பிக்கத் தவறிய மனுதாரர்கள் பயன் பெறுவதற்கு சிறப்பு சலுகை குறித்த அரசாணை வெளியீடு...


>>> அரசாணை எண்: 204, நாள்: 28-05-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...