கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி வகுப்பறையில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து ஆசிரியர் காயம்

 


பள்ளி வகுப்பறையில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து ஆசிரியர் காயம்


காஞ்சிபுரம் மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி கட்டடத்தின் மேல் பகுதியில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் ஆசிரியர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. 


காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 18வது வார்டில் சீனிவாசன் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் கட்டடம் கட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், கட்டடத்தின் பல இடங்களில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுவது வாடிக்கையாகிவிட்டது. கூரை பூச்சு பல இடங்களில் பெயர்ந்து விழுந்துள்ளது. 


அதன் தொடர்ச்சியாக, பள்ளியின் கூரை பூச்சு நேற்றும் பெயர்ந்து விழுந்துள்ளது. ஆசிரியர் ஒருவர் மீது விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷடவசமாக மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 


இப்பள்ளியின் பராமரிப்பு பணிகளை, மாநகராட்சி நிர்வாகம் அடிக்கடி மேற்கொள்வதாக கூறினாலும், இப்பள்ளி கட்டடத்தின் தரம் மோசமான நிலையில் இருப்பதாகவே பெற்றோர் தெரிவித்துள்ளனர். 


இப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, 18வது வார்டு கவுன்சிலர் மல்லிகா, மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகிறார்.



தவறான தொடுதல் : உடற்கல்வி ஆசிரியர் POCSO சட்டத்தின் கீழ் கைது

 

 தவறான தொடுதல் புகார் : உடற்கல்வி ஆசிரியர் POCSO சட்டத்தின் கீழ் கைது 


விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை பானாம்பட்டு பாதை பகுதியை சேர்ந்த ஆதி என்ற சிவபாலன் (வயது 48) என்பவர் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் உடற்கல்வி ஆசிரியர் சிவபாலன், உடற்கல்வி பாடவேளையின்போது 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலரை பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச்சென்று தவறான தொடுதலில் ஈடுபட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள், இதுகுறித்து தங்கள் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர்.


இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இதுகுறித்து, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் உடற்கல்வி ஆசிரியர் சிவபாலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அரசு பள்ளி மாணவிகளிடம் உடற்கல்வி ஆசிரியர் தவறான தொடுதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

 

 

கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது


மாணவிக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது


பாலியல் தொல்லை கொடுத்​த​தாக அரசு உதவி​பெறும் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்​டார். திருச்சி மேல​கல்​கண்​டார் கோட்டை மாருதி நகரைச் சேர்ந்​தவர் எஸ்​.​வில்லி​யம் பால்​ராஜ்(52). இவர், புதுக்​கோட்டை மாவட்​டம் விராலிமலை அருகே குன்னத்தூரில் உள்ள அரசு உதவி​பெறும் பள்ளி​யில் முது​நிலை கணித ஆசிரிய​ராகப் பணிபுரிந்து வந்​தார்.


இந்​நிலை​யில், அங்கு பயிலும் ஒரு மாணவிக்கு கடந்த ஓராண்​டாக பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட குழந்​தைகள் பாது​காப்பு அலு​வல​கத்​துக்கு புகார் தெரிவிக்​கப்​பட்​டது. மாவட்ட குழந்​தைகள் பாது​காப்பு அலு​வலர் வசந்​தகு​மார் முதல்​கட்ட விசா​ரணைக்​குப் பிறகு, கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.


இது தொடர்​பாக ஆசிரியர் வில்​லி​யம் பால்ராஜ் மீது போக்சோ உள்​ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்​குப் பதிவு செய்​து, அவரை கைது செய்​தனர். பின்​னர், புதுக்​கோட்டை மகளிர் நீதி​மன்​றத்தில் ஆஜர்படுத்​தி, சிறை​யில்​ அடைத்தனர்​.



தெரு நாய்களைப் பிடிப்பவர்களைத் தடுப்பவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பின் முழு விவரம்



தெரு நாய்களைப் பிடிப்பவர்களைத் தடுப்பவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பின் முழு விவரம்


 தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பது தடை செய்யப்படுகிறது : உச்ச நீதிமன்றம்


தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை - உச்சநீதிமன்றம் தீர்ப்பின் முழு விவரம்


"நாடு முழுவதும் பொருந்தக்கூடிய ஒட்டு மொத்த வழிகாட்டு நெறிமுறைகளை தெரு நாய்கள் விவகாரத்தில் ஏற்படுத்தப் போகிறோம்" - உச்சநீதிமன்றம்


பிடித்த இடத்திலேயே விட வேண்டும்

தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை விதித்தது உச்ச நீதிமன்றம். அதே நேரத்தில் பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தியதற்கு பிறகு அவற்றை பிடித்த இடத்திலேயே விட்டு விட வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கி உள்ளது.




வெறி நாய் கடி விவகாரம்

இந்தியாவில் வெறி நாய் கடி மற்றும் அதனால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், செய்தித்தாள்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து கடந்த வாரம் வழக்கு பதிவு செய்திருந்தது.


ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, டெல்லியில் சுற்றித் திரியும் அத்தனை தெரு நாய்களையும் அடுத்த எட்டு வாரத்திற்குள் பிடிக்க வேண்டும் என்றும், அவற்றை முறையான காப்பகம் அமைத்து பராமரிக்க வேண்டும் என்றும் நாய்களுக்கு தேவையான கருத்தடை செய்வது தடுப்பூசி போடுவது உள்ளிட்டவற்றை அரசு மற்றும் டெல்லி மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தது. 


உத்தரவுக்கு எதிராக மனு

இந்த உத்தரவுக்கு எதிராக சிலர் உச்சநீதிமன்றத்தை நாடி இருந்த நிலையில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்திப் மேத்தா மற்றும் என் வி அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய 3 நீதிபதி அமர்வு அமைக்கப்பட்டது. 


இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 14 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.


மத்திய அரசு வாதம்

அப்போது டெல்லி அரசு சார்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜென்ரல் துஷார் மேத்தா, "ஒரே நாளில் பத்தாயிரம் பேருக்கு மேல் இந்தியாவில் நாய் கடிக்கு ஆளாகி வருகின்றனர்.


ஒரு வருடத்திற்கு 20000 நபர்கள் வரை இந்த தெரு நாய் கடியினால் உயிரிழப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.


 பெரும்பாலும் குழந்தைகள்தான் தெரு நாய்களின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இங்கு யாரும் விலங்குகளை வெறுப்பவர்கள் கிடையாது. அவற்றை யாரும் கொல்ல வேண்டும் என சொல்லவில்லை. அவற்றை மனிதர்களிடமிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று தான் சொல்கிறோம்" என கூறினார்


மூத்த வழக்கறிஞர் கபில் சிபில்

அப்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்த மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், "இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எதிர் தரப்பிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.


இவற்றைக் காப்பகங்களில் வைக்க வேண்டும் என நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. ஆனால், அந்த காப்பகங்கள் எங்கே இருக்கிறது.


பெரும்பாலான இடங்களில் ஒட்டுமொத்தமாக நூற்றுக்கணக்கான நாய்கள் அடைக்கப்படுகின்றது. அவை ஒன்றுக்கொன்று சண்டையிடும் பொழுது பெரும்பாலானவை இறந்து போகின்றன.



தெரு நாய்களுக்கு உரிய கருத்தடை உள்ளிட்டவற்றை செய்யும் பொழுது அவற்றின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும். ஆனால், அதை விடுத்து இப்படி ஈவு இரக்கமின்றி செயல்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.


டெல்லிக்கு வழங்கப்பட்ட இந்த உத்தரவை பின்பற்றி பிற மாநிலங்களும் நாய்களைப் பிடிக்க தொடங்கியிருக்கின்றன என கூறினார்.

பிறகு வழக்கின் தீர்ப்பு  தேதி குறிப்பிட்டாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.


உச்சநீதிமன்றம் தீர்ப்பு:

இந்த வழக்கில் 22-08-2025 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில்,


"கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், டெல்லியில் உள்ள அனைத்து நாய்களையும் எட்டு வார காலத்திற்குள் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருந்தது.


தற்பொழுது அந்த தீர்ப்பில் நாங்கள் சில மாற்றங்களை மேற்கொண்டிருக்கிறோம். அதன்படி டெல்லியில் பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு அந்த நாய்களை எங்கிருந்து பிடித்தார்களோ அந்த பகுதியிலேயே விட்டுவிட வேண்டும் 


தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையாக தடை

மூர்க்கத்தனமான ராபிஸ் நோயை பரப்புவதற்கான வாய்ப்புகள் உள்ள நாய்களை தொடர்ந்து காப்பகங்களில் அடைத்து வைக்க வேண்டும்.


தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பதை முழுமையாக தடை செய்கிறோம். தெருவோர நாய்களுக்கு உணவளிக்க கூடியவர்கள் அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் தான் உணவளிக்க வேண்டுமே தவிர கண்ட இடங்களில் உணவுகளை போடக்கூடாது .


தெரு நாய்களுக்கு உணவளிக்க தனி இடத்தை உருவாக்க வேண்டும். 


நாய் கடி விவகாரம் தொடர்பாக நாட்டின் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுகிறோம்.


நாடு முழுவதும் பொருந்தக்கூடிய ஒட்டு மொத்த வழிகாட்டு நெறிமுறைகளை தெரு நாய்கள் விவகாரத்தில் ஏற்படுத்தப் போகிறோம்.


தெரு நாய்கள் விவகாரத்தை எவ்வாறு கையாள்வது, இதற்கென்று எத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது என்று இது தொடர்பாக அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கிறோம்.


மாநகராட்சிகள் தெரு நாய்களை பிடிக்க பிறப்பித்த முந்தைய உத்தரவை தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுக்கிறது.


தெரு நாய்களை பிடிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொள்ளலாம் எனவும் அனுமதி வழங்குகிறோம்.


நாய்களைப் பிடிப்போரை தடுப்பவர் மீது 25 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்"  என தீர்ப்பு வழங்கப்பட்டது.


மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த வங்கி மேலாளர்


மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த வங்கி மேலாளர்


 மனைவி கர்ப்பமானது முதல் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லாமல் இருந்த வங்கி மேலாளர்


நேற்று பிரசவம் நடப்பதை அறிந்த வட்டார மருத்துவ அலுவலர், செவிலியர்கள், வருவாய்த்துறையினர் வீட்டுக்குச் சென்ற நிலையில் கதவைப் பூட்டிக்கொண்டு வீடியோ கால் மூலமாக யாரிடமோ பேசிக் கொண்டே பிரசவம் பார்த்த சம்பவம்


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 32). இவர் திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சத்யா (26). இவர்கள் கோபால்பட்டி எல்லை நகரில் வசித்து வருகின்றனர். சத்யா ஓசூரில் உள்ள கல்லூரியில் இளநிலை பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.


கர்ப்பிணியாக இருந்த நிலையில் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அவ்வப்போது உடல் நலம் குறித்து மகப்பேறு டாக்டரிடம் பரிசோதனை செய்து வந்துள்ளார். ஆனால் அவரது கணவர் கஜேந்திரன் இயற்கை முறையில் மட்டுமே குழந்தை பிறக்க வேண்டும். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு செல்லக்கூடாது என தெரிவித்துள்ளார்.


இதனால் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலேயே மனைவியை வீட்டுக்கு வரவழைத்தார். கஜேந்திரன் இயற்கை முறை கருத்தரித்தல் குறித்து வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி அதில் உள்ள நண்பர்களிடம் கருத்துகளை கேட்டு வந்துள்ளார். குழுவில் உள்ளவர்கள் அந்த காலத்தில் 10 குழந்தைகள் கூட வீட்டிலேயே இயற்கை முறையில் பிறந்துள்ளது. ஆனால் ஆஸ்பத்திரிக்கு சென்றால் தாய் மற்றும் குழந்தையின் உடல் நிலை பாதிக்கப்படும் என்று கூறி வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது எப்படி என்பது குறித்து கஜேந்திரனுக்கு தெரிவித்துள்ளனர். இருந்தபோதும் சத்யாவின் பெற்றோர்கள் தனது மகளின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவ்வப்போது ஆஸ்பத்திரிக்கு சென்று வருமாறு கூறியுள்ளனர்.


அதன்படி ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தபோது சத்யாவுக்கு 20 அல்லது 21-ந்தேதி குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் நேற்று சத்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது தனது மனைவிக்கு தானே பிரசவம் பார்ப்பேன் என்றும், டாக்டர்கள் யாரும் வர வேண்டாம் என கஜேந்திரன் உறுதியாக கூறி விட்டார். கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் ரெங்கசாமி, அரசு மருத்துவ அலுவலர் பிவின் ஆரோன், டாக்டர் சந்தானகுமார், செவிலியர்கள், சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், கிராமநிர்வாக அதிகாரி சுப்புராஜ் மற்றும் போலீசார் அவர்கள் வீட்டுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் யார் பேச்சையும் கஜேந்திரன் கேட்பதாக இல்லை.


தனது செல்போனில் வீடியோ கால் செய்து குழுவில் உள்ள அட்மின் தெரிவித்த கருத்தின்படி மனைவி சத்யாவுக்கு கணவர் கஜேந்திரன் பிரசவம் பார்த்தார். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகாவது தாய் மற்றும் குழந்தையின் நிலை குறித்து பரிசீலிப்பதற்காக வீட்டு முன்பு ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் குழந்தை பிறந்த பிறகு கூட கஜேந்திரன் மருத்துவக்குழுவினரை பார்வையிட அனுமதிக்கவில்லை. குழந்தை பிறந்ததை வீடியோ மூலம் எடுத்து குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு அனுப்பி கஜேந்திரன் பெருமிதம் கொண்டார்.


இதனிடையே சத்யாவின் தாய் எப்படியாவது தனது மருமகனை பிரசவம் பார்ப்பதில் இருந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்று சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்தார். ஆனால் அதற்குள் குழந்தை பிறந்த விபரம் தெரியவரவே போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. மதியம் முதல் இரவு வரை யாரையும் அனுமதிக்காமல் கஜேந்திரன் வீட்டை பூட்டிக் கொண்டு குழுவில் உள்ள நபர்களிடமே பேசிக் கொண்டு இருந்தார்.


இன்று காலை அவரது வீட்டுக்கு சென்ற சுகாதாரக்குழுவினர் சத்யா மற்றும் அவரது குழந்தையை பார்வையிட்டு சோதனை செய்தனர். அப்போது இருவரும் நலமாக இருப்பதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர். இச்சம்பவம் கோபால்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து திண்டுக்கல் மாவட்ட சுகாதாரக்குழு அதிகாரி டாக்டர் செல்வக்குமார் தெரிவிக்கையில், தமிழகம் முழுவதும் இயற்கை உணவுகள், இயற்கை வாழ்வியல் முறை, இயற்கை முறையில் பிரசவித்தல் குறித்த புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இயற்கை முறையில் டாக்டர்கள் இல்லாமல் பிரசவம் பார்ப்பது குறித்த பரப்புரையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி தமிழகம் முழுவதும் ஒருவித செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது மக்களிடையே அதிகரிக்கும் பட்சத்தில் விபரீத விளைவுகள் ஏற்படும். எனவே மாவட்ட கலெக்டருக்கு இது குறித்து தெரிவித்து அவரது பரிந்துரையின் பேரில் மக்களை தவறான முறையில் வழிநடத்தும் வாட்ஸ்அப் குழுவின் அட்மின் மற்றும் அதில் இடம்பெற்றுள்ளவர்கள் யார்? யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.


இனி வரும் காலங்களில் இது போன்று நடைபெறாமல் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.




2025 ஆம் ஆண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு நாள்கள்


Tamil Nadu RL List 2025 - RH leave List 2025 - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் 2025 - Restricted Leave Days 2025 (RL / RH List 2025)...


2025 ஆம் ஆண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு நாள்கள் (RL / RH)


ஆகஸ்ட்

26.08.2025 செவ்வாய் சாம உபகர்மா


செப்டம்பர்


05-09-2025 - வெள்ளி - ஓணம் (  அன்று மிலாடி நபி அரசு விடுமுறை.. RL   எடுக்க முடியாது )


அக்டோபர்


03-10-2025 - வியாழன் - கர்வீன் ஆப் மொய்தீன் அப்துல் கதர்



டிசம்பர்


04-12-2025 - வியாழன் - கார்த்திகை தீபம்



>>> வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் 2025 - Restricted Leave Days 2025 ( RL / RH List 2025) - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Future Ready பயிற்சி வினாக்கள் தயாரித்தல் தொடர்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள்



1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாதாந்திர " Future ready ' பயிற்சி மாணவர்களுக்கான வினாக்கள் - வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வினாக்கள் வழங்குதல் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக SCERT Director Proceedings


Monthly Assessment - Future Ready - DSE and DEE-1602118 G4-1-1


1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Future Ready பயிற்சி வினாக்கள் தயாரித்தல் தொடர்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-08-2025

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-08-2025 : School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கருணை அடிப்படையிலான பணி நியமனம் - விதிகளில் திருத்தங்கள் : அரசாணை வெளியீடு


Compassionate Ground Basis Appointment


 கருணை அடிப்படையிலான பணி நியமனம் - தமிழ்நாடு குடிமைப் பணி விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு அரசாணை வெளியீடு


G.O. Ms. No. 41 , Dated : 04-08-2025 - Compassionate Grounds Appointment 


1. இணைய வழியில் விண்ணப்பம் செய்தல்

2. மாநில அளவிலான முன்னுரிமையை பின்பற்றுதல்

3. அரசு ஊழியர் இறந்த மூன்றாண்டுகளுக்குள் பணி நியமனம் வழங்குதல்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



குறைந்தபட்ச எண்ணிக்கை இல்லையெனில் ஆங்கிலப் பிரிவு மாணவர்கள் வேறு அரசுப் பள்ளிக்கு மாற்றம்



குறைந்தபட்ச எண்ணிக்கை இல்லையெனில் ஆங்கிலப் பிரிவு மாணவர்கள் வேறு அரசுப் பள்ளிக்கு மாற்றம் - நாளிதழ் செய்தி 


அரசுப் பள்ளிகளின் ஆங்கிலப் பிரிவு வகுப்புகளில் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இல்லாவிட்டால் அவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்' என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன்படி நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.


அதாவது, 1 முதல் 5-ம் வகுப்புக்கு 60 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும், 61 முதல் 90 வரை 3 ஆசிரியர்களும், 91 முதல் 120 வரை 4 ஆசிரியர்களும், 121 முதல் 200 வரை 5 ஆசிரியர்களும் இருக்க வேண்டும். இதேபோல், ஒவ்வொரு 40 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் கூடுதலாக அனுமதிக்கப்பட வேண்டும்.


இது தவிர 6 முதல் 8 வகுப்பு வரை குறைந்தபட்சம் 3 பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும். ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் இருப்பின் ஒரு பிரிவாக கணக்கில் கொண்டு ஒரு ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும். மாணவர் எண்ணிக்கை 50-க்கு அதிகமாக இருந்தால் குறிப்பிட்ட அந்த வகுப்பை இரு பிரிவுகளாக பிரித்துவிட வேண்டும்.


அதேபோல், 6 முதல் 10-ம் வகுப்பு வரை 150-க்கும் குறைவாக மாணவர் எண்ணிக்கை இருப்பின் 6 ஆசிரியர்கள் (ஒரு பாடத்துக்கு ஒருவர் வீதம்) அனுமதிக்க வேண்டும். மேலும், 9, 10-ம் வகுப்பில் தலா 40 மாணவர் இருப்பின் (1:40) ஒரு பிரிவாக கணக்கில் கொள்ள வேண்டும்.


ஒரு குறிப்பிட்ட வகுப்பில் மாணவர் எண்ணிக்கை 60-க்கு அதிகமாக இருந்தால் அந்த வகுப்பை இரு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும். பணி நிர்ணயம் செய்யும்போது ஓர் ஆசிரியருக்கு வாரத்துக்கு 28 பாடவேளை ஒதுக்கப்பட வேண்டும். பாடவேளை குறைவாக உள்ள ஆசிரியர்களை கீழ்நிலை வகுப்புக்கு இறக்கம் செய்யாமல் அருகேயுள்ள பள்ளிக்கு மாற்றுப் பணியில் அனுப்பலாம்


இது தவிர ஆங்கில வழிப் பிரிவுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும். 15-க்கும் குறைவாக இருந்தால் அந்த மாணவர்களை அருகே உள்ள வேறு பள்ளியில் ஆங்கில வழிப் பிரிவில் சேர்க்க வேண்டும். கூடுதல் தேவையுள்ள பணியிடங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் நிர்ணயம் செய்யப்பட்ட விவரங்களை வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்துக்குள் இயக்குநரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


வருமான வரி புதிய வரி விதிப்பு : ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்கு எப்போதும் வரி விலக்கு கிடைக்காது - ஏன்?


வருமான வரி புதிய வரி விதிப்பு : ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்கு எப்போதும் வரி விலக்கு கிடைக்காது - ஏன்?


 புதிய வரி விதிப்பில் ஒரு ட்விஸ்ட்: ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்கு எப்போதும் வரி விலக்கு கிடைக்காது; ஏன்?


2025-26 பட்ஜெட்டில், புதிய வரி முறையில் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையிலான வருமானம் (ரூ.75,000 நிலையான விலக்குடன் ரூ.12.75 லட்சம்) முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்ததன் மூலம் வரி செலுத்துவோருக்கு அரசாங்கம் ஒரு பெரிய நிவாரணத்தை வழங்கியது. இந்த அறிவிப்பைக் கேட்டதும் பலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர், ஆனால் 'வரி விலக்கு' என்ற இந்த வார்த்தைக்குப் பின்னால் ஒரு பெரிய சிக்கல் மறைந்துள்ளது - மேலும் இந்த சிக்கல் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம்.


உண்மையில், இந்த விலக்கு அனைத்து வகையான வருமானங்களுக்கும் பொருந்தாது. குறிப்பாக, உங்கள் வருமானத்தில் மூலதன ஆதாயம் இருந்தால், விஷயங்கள் மாறும்.


பிரிவு 87A என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?


பிரிவு 87A இன் கீழ், வரி விதிக்கக்கூடிய வருமானம் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை இருந்தால் முழு வரியும் தள்ளுபடி செய்யப்படுகிறது.


பழைய வரி முறையில்: ரூ.5 லட்சம் அல்லது அதற்கும் குறைவான வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.12,500 வரை வரிச் சலுகை கிடைக்கும்.


புதிய வரி முறையில் (நிதியாண்டு 2025-26 முதல்): ரூ.12.75 லட்சம் அல்லது அதற்கும் குறைவான வரிவிதிப்பு வருமானம் உள்ளவர்கள் ரூ.60,000 வரை வரிச் சலுகையைப் பெறலாம், இதனால் அவர்களின் வரி பூஜ்ஜியமாகக் குறையும்.


புதிய வரி முறையில் 87A விலக்கு வரம்பு பல ஆண்டுகளாக படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது - முதலில் அது ரூ. 5 லட்சம், பின்னர் ரூ. 7 லட்சம், மற்றும் 2025 பட்ஜெட்டில், அது ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டது (நிலையான விலக்குடன் ரூ. 12.75 லட்சம்).


ஆனால் மூலதன ஆதாயங்களின் விளையாட்டு வேறுபட்டது


2025 பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரிவு 87A இன் விலக்கு என்பது குறுகிய கால மூலதன ஆதாயம் (STCG) போன்ற 'சிறப்பு வருமானத்திற்கு' பொருந்தாது என்று தெளிவுபடுத்தினார்.


அதாவது, உங்கள் ஆண்டு சம்பளம் ரூ. 12 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், ஆனால் அதில் பங்குகள், பரஸ்பர நிதிகள் அல்லது பிற சொத்துக்களிலிருந்து குறுகிய கால மூலதன ஆதாயம் அடங்கும் என்றால், அந்த மூலதன ஆதாயத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படாது.


உதாரணமாக:


உங்கள் சம்பளம் ரூ. 11.5 லட்சமாகவும், குறுகிய கால மூலதன ஆதாயம் ரூ. 1 லட்சமாகவும் இருந்தால்.


உங்கள் மொத்த வருமானம் ரூ.12.5 லட்சமாக மாறும்.


சம்பளப் பகுதிக்கு 87A விலக்கு அளிக்கப்படலாம், ஆனால் குறுகிய கால மூலதன ஆதாயமான ரூ.1 லட்சத்திற்கு 15% வரி செலுத்த வேண்டும்.


அதாவது, ரூ.12 லட்சத்தின் மொத்த வருமானம் மூலதன ஆதாயம் போன்ற சிறப்பு வருமானப் பகுதி இல்லாவிட்டால் மட்டுமே 'வரி இல்லாதது'.


நிலையான விலக்கிலும் வரைவுப் பிழை ஏற்பட்டது


பட்ஜெட் 2025 இல், புதிய வரி முறையில் நிலையான விலக்கை ரூ.50,000 இலிருந்து ரூ.75,000 ஆக அரசாங்கம் உயர்த்தியது, இதன் காரணமாக ரூ.12.75 லட்சம் வரை சம்பள வருமானம் உள்ளவர்களுக்கு வரி விதிக்கப்படாது.


ஆனால், 1961 வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 115BAC(1A) இன் பிரிவு (iii) இல் உள்ள வரைவுப் பிழை காரணமாக, இந்த அதிகரிப்பு காகிதத்தில் ரூ.50,000 ஆகவே இருந்தது.


இந்தத் தவறு ஆகஸ்ட் 2025 இல் திருத்தம் மூலம் சரி செய்யப்பட்டது, இப்போது ரூ.75,000 நிலையான விலக்கு நடைமுறைக்கு வந்துள்ளது. 


"புதிய வருமான வரி முறையில் சம்பளம் வாங்கும் வரி செலுத்துவோருக்கு ரூ.75,000 நிலையான விலக்கு அமல்படுத்தப்படுவது குறித்து தெளிவு அளிக்கப்படுகிறது," என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 13, 2025 அன்று மக்களவையில் கூறினார்.


சுருக்கமாக


புதிய வரி முறையில் ரூ.12.75 லட்சம் வரையிலான வருமானம் (சம்பளம் + ரூ.75,000 நிலையான விலக்கு) வரி விலக்கு அளிக்கப்படுகிறது.


மூலதன ஆதாயங்கள் போன்ற சிறப்பு வருமானங்கள் 87A விலக்குக்கு தகுதியற்றவை, அதாவது அந்த வருமானத்திற்கு வரி விதிக்கப்படும்.


பழைய வரி முறையில், ரூ.5 லட்சம் வரை வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ளவர்களுக்கு 87A விலக்கு ரூ.12,500 வரை மட்டுமே இருந்தது.


புதிய வரி முறையில், 87A விலக்கு வரம்பு பல ஆண்டுகளாக கடுமையாக அதிகரித்துள்ளது, ஆனால் நிபந்தனைகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

அஞ்சலகங்களில் கல்வி உதவித்தொகை திட்டம் : செப்டம்பர் 1க்குள் விண்ணப்பிக்கலாம்

 

அஞ்சலகங்களில் கல்வி உதவித்தொகை திட்டம் : செப்டம்பர் 1க்குள் விண்ணப்பிக்கலாம்


 தபால் நிலையங்களில் கல்வி உதவித்தொகை திட்டம் செப்டம்பர் 1க்குள் விண்ணப்பிக்க அவகாசம்!


தபால் நிலையங்கள் மூலம் 'தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா' என்ற பெயரில் கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


இந்தியாவில் தபால் துறை மூலம் தபால் தலை சேகரிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 'தீன்தயாள் ஸ்பார்ஷ் யோஜனா' என்ற பெயரில் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்துள்ளனர். இத்திட்டத்தில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறலாம். 


இம்மாணவர்கள் கட்டாயம் தபால் தலை சேகரிப்பு சங்க உறுப்பினராகவோ அல்லது தபால் தலை சேகரிப்பு கணக்கு வைத்திருப்பவராகவோ இருக்க வேண்டும். இத்தகுதியுள்ள மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 


கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு ஆண்டுக்கு ரூ.6,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு அளவில் உள்ள மாணவர்கள் இக்கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, தமிழ்நாடு அளவில் உள்ள மாணவ, மாணவிகள் அந்தந்த தபால் துறை மண்டல தலைவர் அலுவலகங்களுக்கு செப்., 1க்குள் அனுப்பி வைக்க வேண்டும். 


தென்மண்டல அளவிலான பள்ளி மாணவ, மாணவிகள் தாங்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தென்மண்டல தபால் துறை தலைவர், மதுரை மண்டலம், மதுரை - 625 002 என்ற முகவரிக்கு செப்டம்பர் 1 க்குள் கிடைக்கும் விதமாக அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அந்தந்த தபால் கோட்ட கண்காணிப்பாளர் மூலம் மாவட்ட வாரியாக வெளியிட்டு வருகின்றனர். 


இந்த வாய்ப்பை 6 முதல் 9 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு முறை தேர்வு செய்த மாணவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அடுத்த ஆண்டில் தேர்ச்சி பெற்றால் அந்த ஆண்டிற்கான உதவித்தொகை வழங்கப்படும் என தபால் துறை தெரிவித்துள்ளது.


A Good Education : A Good Teacher

 நல்ல கல்வி & நல்ல ஆசிரியர்


A Good Education : A Good Teacher




Noon Meals TNSED Schools App Entry : DSE Proceedings


சத்துணவு உண்ணும் மாணவர்களின் விவரங்களை உடனடியாக EMIS - TNSED Schools செயலியில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு


Noon Meals TNSED Schools App Entry : DSE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-08-2025

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-08-2025 :  School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



TNEA 2025 மாணவர் சேர்க்கை அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல்

 


TNEA 2025 Ranking list of Engineering colleges in Tamil Nadu based on student admissions


TNEA 2025 Analysis After Round 3 : Based on Maximum No. of Seats and Percentage of Seats Filled



TNEA 2025 மாணவர் சேர்க்கை அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் 



TN Engineering Colleges Rank List - Analysis Based on % and Total Filled



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


50க்கும் மேற்பட்ட சேவைகளை இனி WhatsApp மூலம் பெறலாம் - தமிழ்நாடு அரசு அசத்தல் நடவடிக்கை



50க்கும் மேற்பட்ட சேவைகளை இனி WhatsApp மூலம் பெறலாம் - தமிழ்நாடு அரசு அசத்தல் நடவடிக்கை


‘வாட்ஸ்-அப்’ மூலம் 50 அத்தியாவசிய சேவைகள் : ‘மெட்டா’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் - தமிழ்நாடு அரசு முடிவு


இதனை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் திறனை மேம்படுத்துதலில் ஒரு முக்கியமான அடியை எடுத்து வைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு, ‘வாட்ஸ்-அப்’ மூலம் அரசின் சேவைகளை செயல்படுத்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘மெட்டா’ நிறுவனத்தின் இந்திய வர்த்தக மெசேஜ் பிரிவு இயக்குனர் ரவி கார்க் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த ‘வாட்ஸ்-அப்’ ‘சாட்பாட்டினை’ தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயன்படுத்தலாம். அதன் மூலம் ‘வாட்ஸ்-அப்’பில் புகார்கள் அளிப்பது, மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களை செலுத்துவது, மாநகராட்சி வரிகளை கட்டுவது, மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது போன்றவற்றை எளிதாக செய்ய முடியும். இதனால், அரசு சேவைகள் மக்களின் கையடக்கத்தில் நேரடியாக கிடைக்கின்றன. சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பல முறை செல்வதற்கான தேவையும் நீங்குகிறது.


முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் 50 அத்தியாவசிய அரசு சேவைகளை எந்த நேரத்திலும், எங்கிருந்தும் ‘வாட்ஸ்-அப்’ மூலம் பெறலாம்.


இந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் அரசின் முதன்மை செயலாளர் பிரஜேந்திர நவ்னித், தமிழ்நாடு மின் அளுமை முகமை முதன்மை செயல் அதிகாரி ஆல்பி ஜான் வர்கீஸ், இணை முதன்மை செயல் அலுவலர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், இணை இயக்குனர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சேவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அரசு சேவைக்கான கட்டணங்களை செலுத்துவது உள்ளிட்ட 50 சேவைகளை, இனி தமிழ்நாடு மக்கள் வாட்ஸ்-ஆப் மூலமே பெறும் வகையிலான ஒப்பந்தம் தமிழக அரசுக்கும் மெட்டா நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தானது.


தமிழ்நாடு அரசு, தன்னுடைய சேவைகளை மிக விரைவாக மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.


ஒரே ஒரு எண் மூலம் அணுகக்கூடிய இந்த சாட்பாட் உருவாக்கப்பட்டு, முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள தமிழக மக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்தும் தமிழக அரசு வழங்கும் 50 அத்தியாவசிய சேவைகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் முதற்கட்டமாக இந்த சேவை வழங்கப்படும். அதிகபட்ச வார்த்தைகளை எழுதி மக்கள் தேவைகளை கேட்டறியலாம். அது மட்டுமல்லாமல் மின் மற்றும் குடிநீர் போன்ற கட்டணங்களை செலுத்துவது,வரி செலுத்துவது, மெட்ரோ டிக்கெட் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே சாட்பாட்டின் மூலம் பெற முடியும்.


ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு அலுவலகத்துக்கு மக்கள் அலைவதைத் தடுக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவிருக்கிறது.


மக்களை மையமாகக் கொண்ட, வெளிப்படையான மற்றும் உறுதியான நிர்வாகத்தை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை வழிநடத்தும் தொலைநோக்குப் பார்வையை தமிழக அரசு கொண்டிருக்கிறது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.



தற்போது மெட்டா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருப்பது, அந்தப் பயணத்தில் ஒரு முக்கியப் படியாகும். மாநிலத்தின் முக்கிய சேவைகளை, வாட்ஸ்அப்பின் எளிமை மற்றும் அதிகமானோர் பயன்படுத்தும் சமூக வலைத்தளத்துடன் இணைப்பதன் மூலம் தமிழக அரசு மக்களுக்கான சேவைகளை எளிமையாகக் கிடைப்பதுடன், அதில் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒருங்கே ஏற்படும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.


இந்தியாவுக்கான மெட்டாவின் வணிகப் பிரிவு இயக்குநர் ரவி கார்க் கூறுகையில், வாட்ஸ்ஆப் என்பது இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு நன்கு தெரிந்த ஒரு சமூக வலைத்தளமாகும், மேலும் அதன் எளிமை மற்றும் பயன்பாட்டு வசதி அரசு சேவைகளுக்கு டிஜிட்டல் பயன்பாட்டை வழங்குவதற்கான சிறந்த தளமாக அமையும் என்றார்.


An agreement has been signed between the Tamil Nadu government and Meta, under which the people of Tamil Nadu will now be able to access 50 services, including payment of government service fees, through WhatsApp.


பணியில் சேர்ந்த 4 மாதங்களில், ₹6,000 கையூட்டு பெற்று கைதான VAO

 பணியில் சேர்ந்த 4 மாதங்களில்,  ₹6,000 கையூட்டு பெற்று கைதான VAO 


TNPSC Group IV மூலம் பணியில் சேர்ந்த 4 மாதங்களில், பட்டாவில் பெயர் மாற்றம் தொடர்பான சேவையை பெற ₹6,000 கையூட்டு பெற்ற கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் (இருக்கையில் அமர்ந்திருப்பவர்) கைது.


பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.6,000 லஞ்சம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வாக்கூர் கிராமத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.


வாக்கூர் மேலத்தெருவை சேர்ந்த தேர்விஜயன், தரசூர் கிராமத்தில் உள்ள தனது அண்ணன் நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்திருந்தார். அதற்கு வாக்கூர் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமாரும், உதவியாளர் ரமேஷும் 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால், அதிர்ச்சியடைந்த தேர்விஜயன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தேர் விஜயன் (வயது 50). இவருக்கும், இவரது அண்ணன் அருள்பிரகாசத்திற்கும், மற்றொரு அண்ணன் வேல்முருகன் என்பவர் தானமாக தரசூர் கிராமத்தில் உள்ள நிலத்தை வழங்கினார். அந்த நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய தேர் விஜயன், விண்ணப்பித்திருந்தார். மேலும் அவர் பட்டா மாற்றம் தொடர்பாக வாக்கூர் கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகினார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் (28), பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் கேட்ட பணத்தை கொடுத்து விடுமாறு, அங்கிருந்த கிராம உதவியாளர் ரமேஷ் (49), தேர்விஜயனிடம் கூறினார்.


ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத தேர் விஜயன், கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரத்தை சதிஷ்குமாரிடம் கொடுப்பதற்காக தேர் விஜயன் நேற்று வாக்கூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்த சதிஷ்குமார், லஞ்ச பணம் ரூ.6 ஆயிரத்தை கிராம உதவியாளர் ரமேஷ் மூலமாக வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையிலான போலீசார், அவர்கள் 2 பேரையும் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், பணியில் சேர்ந்து 4 மாதங்கள் மட்டுமே ஆவது குறிப்பிடத்தக்கது.


NDA குறித்த தகவல்

 




NDA குறித்த தகவல் 


🎓 NDA

       National Defence Academy


🏛 *நிறுவனம் அறிமுகம்* 


 *National Defence Academy (NDA)* என்பது இந்தியாவின் மூன்று படைப் பிரிவுகளுக்கும்

 *(Army, Navy, Air Force) இணைந்த*

 ஒரே நிறுவனம். இது Union Public Service Commission (UPSC) நடத்தும் தேர்வின் மூலம் மாணவர்களைத் தேர்வு செய்கிறது.


முதலில் எழுத்துத் தேர்வு, அதன் பின் SSB Interview மற்றும் Medical & Fitness Test மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் NDA-யில் சேர்ந்து 3 வருட கல்வி மற்றும் பயிற்சி பெறுகிறார்கள். பின்னர் தங்கள் விருப்பம் மற்றும் திறமையைப் பொறுத்து IMA (Dehradun), INA (Kerala), AFA (Hyderabad) போன்ற சிறப்பு அகாடமிகளில் இறுதி பயிற்சி பெற்று அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.


📚 *வழங்கப்படும் Degree Courses* 


🎓 B.A. (Bachelor of Arts) – 3 வருடம் (10+2 எந்த Stream ஆனாலும்)


🎓 B.Sc. (Bachelor of Science) – 3 வருடம் (10+2 with Physics/Chemistry/Maths/Biology)


🎓 B.E. (Bachelor of Engineering) – 4 வருடம் (10+2 with Physics, Chemistry, Maths)



✈️ *பயிற்சி மற்றும் கால அளவு* 


🔹 Army Cadets → 3 வருடம் NDA, பின் 1 வருடம் IMA, Dehradun


🔹 Navy Cadets → 3 வருடம் NDA, பின் 1 வருடம் INA, Kerala


🔹 Air Force Cadets → 3 வருடம் NDA, பின் 1.5 வருடம் AFA, Hyderabad



🎯 *தகுதி (Eligibility)* 


📌 வயது: 16 ½ – 19 வயது


📌 *கல்வித் தகுதி:* 


Army → 10+2 எந்த stream ஆனாலும்


Navy & Air Force → 10+2 with Physics & Mathematics



👉 12ம் வகுப்பு படித்து கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.


🌟 *பதவிகள் (Career Prospects)* 


NDA முடித்த பிறகு அதிகாரிகளாக பணியாற்றும் வாய்ப்பு –


 *Indian Army 🪖* 


Lieutenant → Captain → Major → Lt. Colonel → Colonel → Brigadier → Major General → Lt. General → General



 *Indian Navy ⚓* 


Sub Lieutenant → Lieutenant → Lt. Commander → Commander → Captain → Commodore → Rear Admiral → Vice Admiral → Admiral



 *Indian Air Force ✈️* 


Flying Officer → Flight Lieutenant → Squadron Leader → Wing Commander → Group Captain → Air Commodore → Air Vice Marshal → Air Marshal → Air Chief Marshal



📝 *தேர்வு விபரங்கள்* 


📌 தேர்வு: NDA (National Defence Academy Exam) – UPSC மூலம் வருடத்திற்கு 2 முறை நடத்தப்படும்.


📌 இணையதளம்: 🔗 https://www.upsc.gov.in


👩‍🎓 *முக்கிய அறிவிப்பு* 


2021 முதல் பெண் மாணவிகளும் NDA தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். முன்பு இது ஆண் மாணவர்களுக்கே மட்டும் இருந்தது.


🌿 இந்தியா முழுவதும் படைவீரர் வாழ்க்கையை விரும்பும் இளைஞர்களுக்கு NDA மிகச் சிறந்த வாய்ப்பு. 

NDA வழியாக அதிகாரி பதவிக்கு செல்வது பெருமைமிகு  வாழ்க்கை பாதையாகும்.


பணி நிரவல் கலந்தாய்விற்கு பின் இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட வேண்டிய ஆசிரியர் பணியிடங்கள்



2024 - 2025 ஆம் கல்வியாண்டில் பணி நிரவல் மாறுதல் கலந்தாய்விற்கு பின் தொடக்க கல்வி இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட வேண்டிய ஆசிரியர் இன்றி உபரி காலிப் பணியிடம் (Surplus post without Teacher - இடைநிலை ஆசிரியர்) உள்ள பள்ளியின் பெயர் , ஒன்றியம், மாவட்டம் மற்றும் பணியிடம் அனுமதிக்கப்பட்ட அரசாணை எண் மற்றும் நாள் 



Name of the Schools, Union, District and Posts, G.O. & Date in the Surplus Post without Teacher - Surplus Post without Teacher - Secondary Grade Teacher 




Name of the school, union, district and Government Order number and date of sanction of the post, where there is a surplus vacancy without a teacher to be handed over to the general collection of the Director of Elementary Education after the surplus transfer counselling.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


திருக்குறள் பேச்சுப் போட்டி: ரூபாய் 3 லட்சம் வரை பரிசு

 

 

யான் அறக்கட்டளையின் சர்வதேச திருக்குறள் பேச்சுப் போட்டி: ரூபாய் 3 லட்சம் வரை பரிசு


யான் அறக்கட்டளை, சர்வதேச திருக்குறள் பேச்சுப் போட்டியை அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 31 என தெரிவிக்கப்பட்டுள்ளது.


“குறளின் குரல்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த ஆன்லைன் பேச்சுப் போட்டி, திருக்குறளின் உலகளாவிய மதிப்புகளை பரப்பும் நோக்கில், 10 முதல் 60 வயது வரையிலான பங்கேற்பாளர்களை அழைக்கிறது. வெற்றியாளர்களுக்கு மொத்தம் 3 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்.


போட்டி மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது:


இளையோர் பிரிவு (வயது 10–13): முதல் பரிசு ரூ.25,000; இரண்டாம் பரிசு ரூ.10,000; மூன்றாம் பரிசு ரூ.5,000.


மூத்தோர் பிரிவு (வயது 14–18): முதல் பரிசு ரூ.50,000; இரண்டாம் பரிசு ரூ.25,000; மூன்றாம் பரிசு ரூ.10,000.


பொது பிரிவு (வயது 19–60): முதல் பரிசு ரூ.1,00,000; இரண்டாம் பரிசு ரூ.50,000; மூன்றாம் பரிசு ரூ.25,000.


பங்கேற்க விரும்புவோர், யான் தமிழ் யூடியூப் சேனலில் இடம்பெற்ற எந்த ஒரு திருக்குறளையும் தேர்ந்தெடுத்து, அதைப் பற்றி குறைந்தபட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை பேச வேண்டும். வீடியோக்கள் மொபைலில் கிடைமட்டமாக ( horizontal) பதிவு செய்யப்பட வேண்டும், வீடியோ எந்தவித எடிட்டிங்கும் இல்லாமல் இருக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 31-க்குள், யான் அறக்கட்டளை பக்கத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தோ அல்லது Yaan.live இணையதளம் வழியாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த நிகழ்வை யான் இன்ஃப்ரா, யான் தமிழ் யூடியூப் சேனல், புதுக்கோட்டை சுதர்சன் கல்வி குழுமம் மற்றும் திருவண்ணாமலை எஸ்கேபி கல்வி குழுமத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.


பணியில் உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் (TET for Promotion) என்ற எந்த அறிவிப்பாணையும் வெளியிடவில்லை - தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) தகவல் உரிமைச் சட்ட பதில் (RTI Reply)



பணியில் உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் (TET for Promotion) என்ற எந்த அறிவிப்பாணையும் வெளியிடவில்லை - தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) தகவல் உரிமைச் சட்ட பதில் (RTI Reply)



தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (NCTE) பணியில் உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற எந்த அறிவிப்பாணையும் வெளியிடவில்லை என்பது தகவல் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட பதிலில் உறுதி செய்யப்பட்டுள்ளது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-08-2025



 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-08-2025 : School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Upgradation of 14 Middle Schools to High Schools - DSE Proceedings - Attachment: G.O. (Ms) No.: 193, Dated: 13-08-2025



 14 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 19-08-2025 - இணைப்பு: அரசாணை (நிலை) எண் : 193 , பள்ளிக்கல்வித் (அகஇ 1) துறை, நாள் : 13-08-2025 


Upgradation of 14 Middle Schools to High Schools - Proceedings of the Director of School Education, Dated: 19-08-2025 - Attachment: Government Order G.O. (Ms) No.: 193, School Education (SSA 1), Department, Dated: 13-08-2025


Upgradation of 14 Middle Schools to High Schools - DSE Proceedings - Attachment: G.O. (Ms) No.: 193, Dated: 13-08-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


List of Middle schools to be upgraded to High schools in 2025-2026 AY

 


2025-2026ஆம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியல்


List of middle schools to be upgraded to high schools in the 2025-2026 academic year


அரசாணை (நிலை) எண் : 193 பள்ளிக்கல்வித் (அகஇ 1) துறை, நாள் : 13-08-2025இன் இணைப்பு 


நடுநிலைப் பள்ளிகள்  to உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் விவரம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


August 2025 SMC Meeting - Agenda & Instructions - SPD Proceedings


 SMC : ஆகஸ்ட் 2025 மாதத்திய பள்ளி மேலாண்மை குழு கூட்டம் - 29.08.2025 - கூட்டப் பொருள் மற்றும் வழிகாட்டுதல்கள் -  மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 19-08-2025 வெளியீடு


August 2025 SMC Meeting - Agenda & Instructions -  SPD Proceedings 


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - பள்ளி மேலாண்மை குழு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட்-2025 மாதத்திய பள்ளி மேலாண்மை குழு கூட்டம் - 29.08.2025, வெள்ளிக்கிழமை நடத்துதல் - கூட்டப்பொருள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 19-08-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


01.08.2025 நிலவரப்படி B.T. Assistant Post Fixation செய்தல் : DSE Proceedings


01.08.2025 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 05-08-2025


இணைப்பு: படிவங்கள் PDF & Excel வடிவில்



>>> செயல்முறைகள் & PDF படிவங்கள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> Excel படிவங்கள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் ரூ.1,000 - பள்ளிக் கல்வி இயக்குநா்



பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் ரூ.1,000 - பள்ளிக் கல்வி இயக்குநா்


அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு ஜேஇஇ, நீட் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக 236 வட்டார உயா்கல்வி வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் உயா்கல்விக்குச் செல்ல ஏதுவாக பள்ளிக் கல்வி இயக்ககத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக உயா்கல்விக்கான போட்டித் தோ்வுகள் எழுத விருப்பமுள்ள மாணவா்களுக்கென வட்டார அளவில் உயா்கல்வி வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


விருப்பத்துக்கு ஏற்ப பயிற்சிகள்

இத்தோ்வுகளுக்கு தயாா்படுத்துவதற்காக இந்த ஆண்டு 38 மாவட்டங்களிலிருந்து உயா் தொழில்நுட்ப ஆய்வக வசதியுள்ள 236 வட்டாரங்களில் உயா்கல்வி வழிகாட்டி மையங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இங்கு மாணவா்களின் உயா்கல்வி விருப்பத்துக்கு ஏற்ப உரிய பயிற்சிகள் வழங்கப்படும்.


இதேபோல, கிளை பள்ளி (ஸ்போக் ஸ்கூல்) தலைமை ஆசிரியா்களின் மூலம் அப்பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவா்களும் விருப்பத்தின் அடிப்படையில் வட்டார உயா்கல்வி வழிகாட்டி மையங்களில் சனிக்கிழமைகளில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். அவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கைக்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.


ரூ.1,000 மதிப்பூதியம்

இந்த மையங்களில் நடைபெறும் பயிற்சியில் இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், வணிகக் கணிதம் ஆகிய முதுநிலைப் பாட ஆசிரியா்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுவதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.


பயிற்சிகள் தடையின்றி நடைபெறும் வகையில், அந்தந்த வட்டாரத்திலுள்ள மையப் பள்ளித் தலைமை ஆசிரியா் அல்லது உதவித் தலைமை ஆசிரியா் ஒவ்வொரு வாரமும் பணிபுரிவதையும் உறுதி செய்ய வேண்டும். சனிக்கிழமைகளில் இப்பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள், உதவித் தலைமை ஆசிரியா்களுக்கு மதிப்பூதியம் ரூ.1,000 மாதிரிப் பள்ளிகள் வழியாக வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அனைத்து மாவட்டங்களிலும் உயா்கல்வி வழிகாட்டும் மையங்கள், பள்ளி அளவில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-08-2025

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-08-2025 : School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Kalai Thiruvizha Competitions - 2025-2026 : All Formats in single file

 

கலைத் திருவிழா 2025-2026 


Kalai Thiruvizha Competitions - 2025-2026 நடத்துவதற்கு தேவையான All Formats in single file ( Exel & Word File )


⛱️  கலைத் திருவிழா போட்டிகள் -2025-26

***************************


🌸 குறுவள மையம், வட்டாரம் & மாவட்ட அளவில் போட்டிகள் நடத்துவதற்கு தேவையான அனைத்து படிவங்களும் ஒரே தொகுப்பாக ( Exel & Word File ) வழங்கப்பட்டுள்ளது.


🔅 Attendance 

🔅 Student Registration Format 

🔅 Judge Format 

🔅 Winners Format

🔅 Badges and Token Sheet

🔅 How to Token No.

🔅 EB & Police Station Letter

🔅 CRC level Committee Format

🔅 Teams Format 

🔅 Model Date Schedule

🔅 Judge Model Certificate 

🔅Baamini Font


https://drive.google.com/drive/folders/1Rg7dvly4GArjaPadZLRJe7l7TMwdrZy-?usp=drive_link


ஆகஸ்ட் 2025 மாத சிறார் திரைப்படம் The White Balloon திரைப்படம் & திரைப்பட விளக்கத்திற்கான இணைப்பு

 


📽️  ஆகஸ்ட் 2025 மாத சிறார் திரைப்படம் The White Balloon திரைப்படம் & திரைப்பட விளக்கத்திற்கான Youtube இணைப்பு



August 2025 Month Children Film " The White Balloon " திரைப்படம் & திரைப்பட விளக்கத்திற்கான Youtube இணைப்பு



https://drive.google.com/drive/folders/1va4Jv1-2pCi1W8L3ZPukS35OjJmYUv1G



அன்புடன்.,

பெ. அலெக்ஸ் பாண்டியன்,

BRTE, BRC - சேடபட்டி,

99433 311042





>>> The White Balloon திரைப்படம் காணொளியை காண இங்கே சொடுக்கவும் 





>>> The White Balloon திரைப்படம் கதைச் சுருக்கம் காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




>>> The White Balloon திரைப்படம் தமிழ் விளக்கம் காணொளியை காண இங்கே சொடுக்கவும் 


குரூப் 2 மற்றும் 2A பதவிகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறும் : TNPSC அறிவிப்பு

 

குரூப் 2 மற்றும் 2A பதவிகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறும் : TNPSC அறிவிப்பு


ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II-ல் (தொகுதி-II மற்றும் தொகுதி-IIA பணிகள்) அடங்கிய பதவிகளுக்கு (அறிவிக்கை எண்.08/2024, நாள் 20.06.2024) – மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு (இரண்டாம் கட்டம் ) நாள் குறித்த செய்தி வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 





Procedure for obtaining NOC for TET and competitive examinations by teachers / officers : CEO Proceedings

 

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் / அலுவலர்கள் அரசு நடத்தும் தகுதித் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தடையின்மைச் சான்று பெறும் முறை : முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


Procedure for obtaining a No Objection Certificate for government-conducted qualifying examinations and competitive examinations by teachers / officers working in government schools: Proceedings of the Chief Education Officer


அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் / அலுவலர்கள் அரசு நடத்தும் தகுதித் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தடையின்மைச் சான்று பெறும் முறை குறித்து விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி வகுப்பறையில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து ஆசிரியர் காயம்

  பள்ளி வகுப்பறையில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து ஆசிரியர் காயம் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி கட்டடத்தின் ம...