கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2021-22ஆம் கல்வியாண்டிற்கான Inspire Awardக்கு தகுதியான 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் விவரங்களை அக்டோபர்(October) 15க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவு...



2021-22ஆம் கல்வியாண்டிற்கான Inspire Awardக்கு தகுதியான 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின்  விவரங்களை அக்டோபர் 15க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவு...

◆ National Innovation Foundation, India, Coordinator Letter No.132986, Dated: 16-07-2021...

◆ தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் (பொறுப்பு) கடித எண்:2110/P1/2021, நாள்:26-07-2021...

◆ திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 4493/அ6/2021, நாள்: 30-07-2021...





>>> 2021-22ஆம் கல்வியாண்டிற்கான Inspire Awardக்கு தகுதியான 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின்  விவரங்களை அக்டோபர் 15க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவு - National Innovation Foundation, India, Coordinator Letter No.132986, Dated: 16-07-2021, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் (பொறுப்பு) கடித எண்:2110/P1/2021, நாள்:26-07-2021 & திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 4493/அ6/2021, நாள்: 30-07-2021...



+2 துணைத் தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த 313 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி - அரசாணை (நிலை) எண்: 6, நாள்: 31-07-2021 வெளியீடு...

 


+2 துணைத் தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த 313 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி - அரசாணை (நிலை) எண்: 6, நாள்: 31-07-2021 வெளியீடு...


>>> அரசாணை (நிலை) எண்: 6, நாள்: 31-07-2021...


பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு விதிகள் (GPF Rules)...



>>> பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு விதிகள் (GPF Rules)...



அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி பயன்படுத்துதல், EMIS, High Tech Lab மற்றும் ICTஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி அளித்தல் – மாவட்ட அளவில் கருத்தாளர்களுக்கும் மற்றும் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் High Tech Lab-ன் பொறுப்பு ஆசிரியர்களுக்கும் ஐந்து நாள் பயிற்சி அளித்தல் சார்ந்து - கரூர் மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளரின் செயல்முறை ந.க.எண்: 09/ ICT Training/ஒபக/2021, நாள் : 31.07.2021... (Proceedings of Karur Chief Educational Officer Regarding ICT Training...)



 கரூர் மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளரின் செயல்முறை

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலைக் கல்வி) 

 பிறப்பிப்பவர்: திருமதி.கா.பெ.மகேஸ்வரி, எம்.ஏ., பி.எட்., 

ந.க.எண்: 09/ ICT Training/ஒபக/2021, 

நாள் : 31.07.2021

திருவள்ளுவராண்டு: 2052/பிலவ/ஆடி – 15

பொருள்: 2021-22 - கரூர் மாவட்டம் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலைக் கல்வி) -– அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி பயன்படுத்துதல், EMIS, High Tech Lab மற்றும் ICTஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி அளித்தல் – மாவட்ட அளவில் கருத்தாளர்களுக்கும் மற்றும் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் High Tech Lab-ன் பொறுப்பு ஆசிரியர்களுக்கும் ஐந்து நாள் பயிற்சி அளித்தல் – சார்ந்து


பார்வை: சென்னை – 06, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1845/அ11/பயிற்சி/ஒபக/2021, நாள்: 30.07.2021...


>>> கரூர் மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளரின் செயல்முறை ந.க.எண்: 09/ ICT Training/ஒபக/2021, நாள் : 31.07.2021...


+2 துணைத் தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த 313 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 538, நாள்: 31-07-2021...

 +2 துணைத் தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த 313 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு...


செய்தி வெளியீடு எண்: 538, நாள்: 31-07-2021...



கல்வித் தொலைக்காட்சியில் (Kalvi TV) 30-07-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு( I -VII Standard ) வரையிலான சமூக அறிவியல் (Social Science) பாடக் காணொளிகள் (Videos)...



 கல்வித் தொலைக்காட்சியில் 30-07-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடக் காணொளிகள்...



1st Standard - பேசும் ஓவியம் – கதை - நேர்மை, உண்மை பேசுதல், பொய் பேசாதிருத்தல் - https://youtu.be/PGo85tqDSTg?t=3542



2nd Standard - பேசும் ஓவியம் – கதை - சமயோஜித அறிவு - https://youtu.be/9gjLi0oGmzE?t=9120



3rd Standard - அலகு 4 – பாதுகாப்பு- பாகம் 1 - விபத்துக்கான காரணங்கள் - தீ விபத்து - https://youtu.be/aqr2PXlButo



4th Standard - அலகு 3 – மாநகராட்சி மற்றும் நகராட்சி - பகுதி 2 - https://youtu.be/difBtl9X21Q



5th Standard - அலகு 3 – நல்ல குடிமகன் - https://youtu.be/H48l_b4oyH44



6th Standard - அலகு 3 – சிந்துவெளி நாகரீகம் - https://youtu.be/9gjLi0oGmzE?t=5402



7th Standard -  அலகு 1 – இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் - பகுதி 1 - https://youtu.be/6RyCe5t9_X4  




கல்வித் தொலைக்காட்சியில் (Kalvi TV) 30-07-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு (VIII Standard ) காணொளிகள் (Videos)...



 கல்வித் தொலைக்காட்சியில்  30-07-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்:



💥  தமிழ் - இயல்1 - இலக்கணம் - எழுத்துக்களின் பிறப்பு - https://youtu.be/DJlmAWvKVok



 💥 ஆங்கிலம் - UNIT 1 - Supplementary - Tha woman on platform 8 - https://youtu.be/ahlEJ27CJ8w



 💥 கணக்கு - அலகு 5- வடிவியல் - நற்கரம் வரைதல் - பகுதி 1-  https://youtu.be/9gjLi0oGmzE?t=1799



💥 அறிவியல் - அலகு 1- நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் - https://youtu.be/KsaN6jYTngU



💥 சமூக அறிவியல் - அலகு 1- குடிமையியல் - மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது - https://youtu.be/2v8sZendTYU



2006-2007ஆம் ஆண்டில் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் SSA திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட 7979 AZ தலைப்பு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூலை-2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை (Pay Authorization Order) - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடித எண்: 12589/பக5(1)/2021-1, நாள்: 28-07-2021......



 2006-2007ஆம் ஆண்டில் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் SSA திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட 7979 AZ தலைப்பு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூலை-2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை...


(1) அரசாணை (நிலை) எண்‌.175, பள்ளிக்‌ கல்வித்‌ துறை, நாள்‌: 18.9.2006.


(2) அரசாணை (1டி) எண்‌.298, பள்ளிக்‌ கல்வித்‌ துறை, நாள்‌: 24.04.2018.


(3) பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌, சென்னை-6 அவர்களின்‌ கடித ந.க.எண்‌ .011658/ எல்‌/இ3/ 2021, நாள்‌: 05.05.2021.


(4) பள்ளிக்‌ கல்வி ஆணையரின்‌ ந.க.எண்‌.011658/எல்‌/இ3/2021, நாள்‌: 14.07.2021



>>> தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடித எண்: 12589/பக5(1)/2021-1, நாள்: 28-07-2021...


58 IEDSS ஆசிரியர் பணியிடங்களுக்கான ஜூலை - 2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை(Pay Continuation Order) - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடித எண்: 13077/பக5(1)/2021-1, நாள்: 27-07-2021......



 58 IEDSS ஆசிரியர் பணியிடங்களுக்கான ஜூலை - 2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை...


(1) அரசாணை (நிலை) எண்‌.28, பள்ளிக்‌ கல்வி [பக5(2)]த்‌ துறை, நாள்‌: 30.01.2015.


(2) அரசாணை (நிலை) எண்‌.371, பள்ளிக்‌ கல்வி [பக5(1)]த்‌ துறை, நாள்‌: 17.09.2019.


(3) பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ கடித ந.க. எண்‌. 000690/எல்‌/இ3/2018, நாள்‌:06.05.2021.


(4) பள்ளிக்‌ கல்வி ஆணையரக இணை இயக்குநர்‌ (நாட்டுநலப்பணித்திட்டம்‌) ந.க.எண்‌.000690/எல்‌/இ3/2021, நாள்: 14.07.2021.


2013-14 ஆம் கல்வியாண்டு தொடங்கப்பட்ட 26 மாதிரிப் பள்ளிகளில் உள்ள 624 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு ஜூலை-2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை (Pay Continuation Order) - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடித எண்: 12593/பக5(1)/2021-1, நாள்: 28-07-2021... ...



 2013-14 ஆம் கல்வியாண்டு தொடங்கப்பட்ட 26 மாதிரிப் பள்ளிகளில் உள்ள 624 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு ஜூலை-2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை...


(1) அரசாணை (நிலை) எண்‌.47, பள்ளிக்‌ கல்வித்‌ துறை, நாள்‌ : 20.03.2013...


(2) அரசாணை (நிலை) எண்‌.52, பள்ளிக்‌ கல்வித்‌ துறை, நாள்‌: 26.02.2016.


(3) அரசாணை (1டி) எண்‌.302, பள்ளிக்‌ கல்வித்‌ துறை, நாள்‌: 26.04.2018. 


(4) பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌, சென்னை-6 அவர்களின்‌ கடித ந.க.எண்‌.011658/எல்‌/இ3/2021, நாள்‌ 05.05.2021


(5) பள்ளிக்‌ கல்வி ஆணையரின்‌ ந.க.எண்‌.011658/எல்‌/இ3/2021, நாள்‌: 14.07.2021.


>>> தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடித எண்: 12593/பக5(1)/2021-1, நாள்: 28-07-2021...


CBSE பன்னிரண்டாம் வகுப்பு (+2) மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள்(Results) வெளியீடு...



 *சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கான ரிசல்ட் வெளியானது 


* https://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில் மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் 


* https://www.digilocker.gov.in/dashboard ஆகியவற்றிலும் மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம் 


*தேர்ச்சிக்கான சான்று, மதிப்பெண் சான்றை இணையத்தளத்திலும் டிஜிலாக்கர் தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்


*10 ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் 30%, +1 மதிப்பெண்ணில் 30%, +2 அலகுத் தேர்வின் அடிப்படையில் 40% மதிப்பெண் கணக்கீடு


இன்றைய (31-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 31, 2021



மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். வியாபார வளர்ச்சிக்கான உதவிகளும், ஆலோசனைகளும் கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



அஸ்வினி : அலைச்சல்கள் உண்டாகும்.


பரணி : பொறுமை வேண்டும்.


கிருத்திகை : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 31, 2021



கூட்டுத்தொழிலில் வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கை பற்றிய கண்ணோட்டங்களில் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். பழமையான விஷயங்களின் மீது ஈடுபாடு ஏற்படும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும்.


ரோகிணி : அனுகூலமான நாள். 


மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 31, 2021



உடலளவிலும், மனதளவிலும் புதுவிதமான பொலிவுடனும், தன்னம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் லாபம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



மிருகசீரிஷம் : தன்னம்பிக்கையான நாள். 


திருவாதிரை : லாபம் உண்டாகும்.


புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

ஜூலை 31, 2021



வியாபாரம் தொடர்பான பொருளாதார நெருக்கடிகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமையான சூழ்நிலைகள் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 



புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.


பூசம் : குழப்பங்கள் நீங்கும்.


ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 31, 2021



ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தனவரவுகளின் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் ஏற்படும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வேலைவாய்ப்புகள் மற்றும் அதை சார்ந்த எண்ணங்கள் மேம்படும். திறமைக்கேற்ற உயர்வுகள் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். கால்நடைகளின் மூலம் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



மகம் : திருப்தியான நாள். 


பூரம் : உயர்வுகள் ஏற்படும்.


உத்திரம் : மேன்மையான நாள்.

---------------------------------------




கன்னி

ஜூலை 31, 2021



தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது மேன்மையை ஏற்படுத்தும். செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்வது நல்லது. நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். உங்களின் மீது அவ்வப்போது சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திரம் : அனுசரித்து செல்லவும்.


அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


சித்திரை : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

ஜூலை 31, 2021



சுபகாரியங்கள் தொடர்பான செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தெய்வீக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களின் வகையில் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். புதிய நபர்களின் நட்புகள் மற்றும் அறிமுகங்கள் ஏற்படும். கடன் தொடர்பாக இருந்துவந்த சிக்கல்கள் குறையும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



சித்திரை : ஆரோக்கியம் மேம்படும்.


சுவாதி : உதவிகள் கிடைக்கும். 


விசாகம் : சிக்கல்கள் குறையும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 31, 2021



பங்காளி வகை உறவுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளினால் சரியான முடிவினை எடுக்க முடியாமல் காலதாமதம் உண்டாகும். மற்றவர்களின் மீது உங்களது எண்ணங்களை திணிப்பதை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதிகளை அளிப்பதில் சிந்தித்து செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



விசாகம் : மகிழ்ச்சியான நாள். 


அனுஷம் : காலதாமதம் உண்டாகும்.


கேட்டை : மேன்மையான நாள்.

---------------------------------------




தனுசு

ஜூலை 31, 2021



குடும்ப பெரியோர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மூலம் : விவாதங்களை தவிர்க்கவும்.


பூராடம் : அனுபவம் கிடைக்கும். 


உத்திராடம் : எண்ணங்கள் மேம்படும்.

---------------------------------------




மகரம்

ஜூலை 31, 2021



உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவினர்களின் ஆதரவும், அன்பும் மனதிற்கு புதுவிதமான நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். பலதரப்பட்ட மக்களின் தொடர்பும், ஆதரவும் உண்டாகும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த கவலைகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 



உத்திராடம் : கலகலப்பான நாள். 


திருவோணம் : நம்பிக்கை உண்டாகும்.


அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 31, 2021



சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய மனை மற்றும் அதை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். சிறு வியாபாரங்களின் மூலம் புதிய அத்தியாயத்தை உருவாக்குவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.


சதயம் : மாற்றங்கள் உண்டாகும்.


பூரட்டாதி : புதுமையான நாள். 

---------------------------------------




மீனம்

ஜூலை 31, 2021



செய்கின்ற முயற்சிகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வும், முடிவுகளும் கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.


உத்திரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


ரேவதி : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (பணி நிபந்தனைகள்) மசோதா, 2016 (தமிழ்)- அரசிதழ் எண் .197A, தேதி: 01-09-2016 ...The Tamil Nadu Government Servants (Conditions of Service) Bill, 2016(Tamil) - Gazette No.197A, Dated: 01-09-2016...



 The Tamil Nadu Government Servants (Conditions of Service) Bill, 2016(Tamil) - Gazette No.197A, Dated: 01-09-2016...


>>> தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (பணி நிபந்தனைகள்) மசோதா, 2016 (தமிழ்)- அரசிதழ் எண் .197A, தேதி: 01-09-2016 ...



12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 31-07-2021 காலை 11 மணி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் (Hall Ticket Download) செய்துகொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் கடிதம் ந.க.எண்: 012923/எச்1/2021, நாள் : 30.07.2021......


 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 31-07-2021 காலை 11 மணி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் கடிதம் ந.க.எண்: 012923/எச்1/2021, நாள் : 30.07.2021...


>>> அரசுத் தேர்வுகள் இயக்கக கடிதம் ந.க.எண்: 012923/எச்1/2021, நாள் : 30.07.2021... 

காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை - வார ஓய்வு நாளில் விருப்பத்துடன் பணியாற்றும் காவலர்களுக்கு மிகைநேர ஊதியம் - பிறந்த நாள், திருமண நாள் அன்று வாழ்த்து & விடுமுறை - தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) சுற்றறிக்கை குறிப்பாணை ந.க.எண்: 1322702/ஊ.த.பி.II(2)/2021, நாள்:30-07-2021...


 காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை - வார ஓய்வு நாளில் விருப்பத்துடன் பணியாற்றும் காவலர்களுக்கு மிகைநேர ஊதியம் -  பிறந்த நாள், திருமண நாள் அன்று வாழ்த்து & விடுமுறை - தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) சுற்றறிக்கை குறிப்பாணை ந.க.எண்: 1322702/ஊ.த.பி.II(2)/2021, நாள்:30-07-2021...


>>> தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) சுற்றறிக்கை குறிப்பாணை ந.க.எண்: 1322702/ஊ.த.பி.II(2)/2021, நாள்:30-07-2021...



31.07.2021 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு குறித்த அரசாணை (G.O.Ms.No.466, Dated: 30-07-2021) - இவ்வரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் / தளர்வுகள் 09.08.2021 வரை அமலில் இருக்கும்...



 31.07.2021 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு குறித்த அரசாணை (G.O.Ms.No.466, Dated: 30-07-2021) - இவ்வரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் / தளர்வுகள் 09.08.2021 வரை அமலில் இருக்கும்...


>>> Click here to Download G.O.Ms.No.466, Dated: 30-07-2021...


பள்ளிக்கு வருகை புரிவதில் இருந்து விலக்கு (Exemption) அளிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள்...

 



தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சிகள் மூலமாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் 02.08.2021 முதல் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என பள்ளிக் கல்வி ஆணையர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 


ஆனால்  மாற்றுத்திறன் ஆசிரியர்கள் புற்றுநோய் மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆசிரியர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்ட உரிய ஆவணங்களை மாவட்ட முதன்மை அலுவலரிடம் சமர்ப்பித்தால் நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.


>>> தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் 02.08.2021 முதல் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு...




தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒருவாரம் (ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை) நீட்டிப்பு...



செய்தி வெளியீடு எண்: 529, நாள்: 30-07-2021...


தமிழகத்தில் மேலும் ஒருவாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்.


தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிப்பு.


தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், 9ஆம் தேதி வரை நீட்டிப்பு.


விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறைக்கு அறிவுரை. 


அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.


அதிக அளவில் கூட்டம் சேர்ந்தால், குறிப்பிட்ட பகுதியை மூட நடவடிக்கை எடுக்கலாம் - அரசு உத்தரவு.


>>> செய்தி வெளியீடு எண்: 529, நாள்: 30-07-2021...


02.08.2021 முதல் ஆசிரியர்களுக்கு நடைபெறவிருந்த அடிப்படை கணினி பயிற்சி ஒத்திவைப்பு - திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணை விரைவில் வெளியிடப்படும் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 1845/அ11/பயிற்சி/ஒபக/2021, நாள்: 30-07-2021...



 02.08.2021 முதல் ஆசிரியர்களுக்கு நடைபெறவிருந்த அடிப்படை கணினி பயிற்சி ஒத்திவைப்பு - திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணை விரைவில் வெளியிடப்படும் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு...


02-08-2021 முதல் 06-08-2021 முடிய கருத்தாளர்களுக்கு மீண்டும் பயிற்சி...




6029 உயர் நுட்ப ஆய்வகத்தின் பொறுப்பாசிரியர்கள் விபரத்தை 31.08.2021க்குள் பதிவு செய்ய வேண்டும் என்பதற்கு பதிலாக  31.07.2021 என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது...



மாணவர்களுக்கு வருமானச் சான்றிதழ் (Income Certificate), சாதிசான்றிதழ் (Community Certificate) காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் : அமைச்சர் இராமச்சந்திரன் உத்தரவு - செய்தி வெளியீடு எண்: 516, நாள்: 29-07-2021......

 பள்ளி மற்றும் கல்லூரி  மாணவ / மாணவியர்களுக்கு வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிசான்றிதழ் காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.


செய்தி வெளியீடு எண்: 516, நாள்: 29-07-2021...


மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுடமிருந்து, வருமான சான்றிதழ் / சாkதி சான்றிதழ் கோரி பெறப்படும் மனுக்கள் மீது எவ்வித கால தாமதமின்றி உடனடியாக பரிசீலித்து, அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க வட்டாட்சியர்கள் மற்றும் கோட்டாட்சியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தற்போது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு இருப்பதால் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து இ-சேவை  மையங்களிலும் மாணவர்கள் சான்றுகளை  கூட்ட நெரிசல் இன்றி பெற்று செல்ல ஏதுவாக குறிப்பிட்ட நாட்களை அதற்கென ஒதுக்கி, எவ்வித இடையூறு இன்றி சான்றிதழ்கள் வழங்கபட வேண்டும்.


சான்றுகளை வழங்குவதில் தேவையற்ற கால தாமதத்தினை தவிர்த்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தவறாது சான்றுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், தேவையின்றி மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது எனவும் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.



தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை நீட்டிப்பு...


தமிழகத்தில் கிராமப்புற பெண் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்குவது 10ம் வகுப்பு வரை நீட்டிக்க அரசு பரிசீலனை செய்துள்ளது. இதன் மூலம் பெண் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி கல்வி கற்பது உறுதி செய்யப்படும்.


கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு உதவும் வகையில் அரசு சார்பில் 3 முதல் ஆறாம் வகுப்பு வரை ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இதனை நீட்டிக்க அரசு திட்டமிட்டு உள்ளது.


3 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளை சார்ந்த பெண் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 500 ரூபாயும், 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியருக்கு ஆண்டுக்கு தலா 1000 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அரசு கிராமப்புற பெண் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்குவதை 6ம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை நீட்டிக்க பரிசீலனை செய்து வருகிறது. இதன் மூலம் பெண் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி கல்வி கற்பது உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.


அனைத்து பள்ளிகளிலும் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு (Awareness to Girls) ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு 10 மாணவிகளுக்கும் Incharge ஆக ஒரு ஆசிரியை வீதம் நியமனம் செய்ய உத்தரவு...



Awareness to Girls

     அனைத்து பள்ளிகளிலும்  8 ஆம்  வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும்  மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு  10 மாணவிகளுக்கு  Incharge  ஆக ஒரு  ஆசிரியை  வீதம் நியமனம் செய்து கீழ் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து karurc3ceo@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு  அனுப்புமாறும் தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்ட copy ஐ முதன்மை கல்வி அலுவலகத்தில்   ஒப்படைக்குமாறும்   தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்  கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.


குறிப்புகள்:

1. ஒருவர் கூட விடுபடாமல் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியைகளையும் incharge ஆக நியமனம் செய்ய வேண்டும்.

2. ஒவ்வொரு 10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை வீதம் incharge நியமனம் செய்யும் போது மாணவிகள் பயிலும் வகுப்பு incharge ஆசிரியை கற்பிக்கும் வகுப்பு எனவும் மேல் நிலை வகுப்பு , உயர் நிலை வகுப்பு,  நடுநிலை வகுப்பு, தொடக்க நிலை வகுப்பு எனவும்  பேதம் பிரித்து  பார்க்க வேண்டியதில்லை.

3. ஒவ்வொரு 10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை வீதம் incharge நியமனம் செய்ய வேண்டி  இருப்பினும் மாணவிகளின் எண்ணிக்கை ஆசிரியைகளின் எண்ணிக்கை  ஆகியவற்றைக்  கணக்கிட்டு சமமாக பிரித்தல் வேண்டும். 

4.ஒரே படிவத்தில் அனைத்து மாணவிகளின் பெயர்களையும் வகுப்பு வாரியாக type செய்து incharge ஆசிரியைகளின்  பெயருடன்  அனுப்பவும்.

5. சந்தேகங்களுக்கு 7373003103 என்ற எண்ணில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரைத் தொடர்பு கொள்ளலாம்.

பள்ளியின் பெயர் மற்றும் முகவரியை படிவத்தின்  முதல் பக்கத்தின் மேலும்  கடைசி பக்கத்தின் அடியிலும் ( Top & Bottom ) type செய்து அனுப்பவும்.

 மாணவிகளுக்கு ஆண் ஆசிரியர்களை incharge ஆக நியமனம் செய்யக் கூடாது.

பள்ளியின் பெயர் மற்றும் முகவரியை படிவத்தின்  முதல் பக்கத்தின் மேலும்  கடைசி பக்கத்தின் அடியிலும் ( Top & Bottom ) type செய்து அனுப்பவும்.

நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்


படிவம்👇👇

https://drive.google.com/file/d/1LrNsp0cUAbG7fxfYno1tkBBXdFFi9GDj/view?usp=drivesdk




ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் (Samagra Shiksha) மற்றும் மாநில ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) மூலம் ஆசிரியர்களின் புதுமையான (Innovative Teachers Forum)படைப்புகளைப் பதிவிட Google Sheet இணைப்பு (Link) வழங்கப்பட்டுள்ளது...



ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் (Samagra Shiksha) மற்றும் மாநில ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) மூலம் ஆசிரியர்களின் புதுமையான படைப்புகளைப் பதிவிட Google Sheet இணைப்பு (Link) வழங்கப்பட்டுள்ளது...


         ஆசிரியர்களின் புதுமையான படைப்புகளை கீழ்காணும் Linkல் பதிவிடலாம். இப்பதிவுகள் மூலம் சிறந்த ஆசிரியர்களை இனம் காண இயலும் என இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட பாடம் அல்லது குறிப்பிட்ட தலைப்பில் தான் பதிவிட வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை. ஆகவே சிறந்த படைப்புகளை பதிவிட தடையேதும் இல்லை. அனைத்து ஆசிரியர்களுக்கும் Link ஐ அனுப்புமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.


Link...

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScdEclzovxH2GTUjLxzNiW9XmE2MSkwvUoIV1iPye4CVt-_9g/viewform?usp=sf_link



முன்னதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் பட்டியல்...

Samagra Shiksha and SCERT - Tamil Nadu are jointly inviting all teachers to showcase their teaching talent through YouTube videos for compensating the learning loss of Tamil Nadu students during COVID-19 lockdown.


The list of teachers who are selected for this exercise is attached herewith.

https://docs.google.com/spreadsheets/d/1U7IaSKsXym4yta-0fHE4KdzN6wpLaoWokz4XLwFOhhk/edit?usp=sharing

But, those who are interested to join their hands with this Government initiative are most welcome to participate by submitting their own subject-relevant YouTube videos.

 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் இணை இயக்குனர் நிலையில் பணியிட மாறுதல் அரசாணை (வா) எண்: 188, நாள்: 27-07-2021 வெளியீடு...


JD Transfer - G.O.No.188 RD & PR dt.27.07.2021...


 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் இணை இயக்குனர் நிலையில் பணியிட மாறுதல் அரசாணை (வா) எண்: 188, நாள்: 27-07-2021 வெளியீடு...


>>> அரசாணை (வா) எண்: 188, நாள்: 27-07-2021...


கொரோனா விதிமுறைகளை மீறும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு...

 கொரோனா விதிமுறைகளை மீறும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு...



அரசுப்பள்ளிகள் 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உறுதி...



 தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை அடுத்த கள்ளபெரம்பூர் செங்கழுநீர் ஏரியை  நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: 

9வது முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவு செய்வார். 

பள்ளிகளில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நிரவல் செய்யப்பட்ட பின்னர் தான் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும். 

அரசுப்பள்ளிகள் இன்னும் 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும். அரசு பள்ளிகளில் சேர சிபாரிசு வரும் நிலையும் ஏற்படும். 

அரசு பள்ளிகளில் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை கற்றுத்தர முயற்சிக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.


புதிய கல்வி கொள்கையால் நாட்டின் தலைவிதி மாறும்: பிரதமர் மோடி நம்பிக்கை...

 


நமது நாட்டின் தலைவிதியை புதிய கல்விக் கொள்கை மாற்றி அமைக்கும்,’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு கடந்தாண்டு கொண்டு வந்தது. இதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி மூலமாக கலந்துரையாடினார். 


பின்னர், உயர் கல்வியை சர்வதேச மயமாக்குவதற்கான, ‘கல்வி கடன் வங்கி’யை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: 

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு ஏராளமானோர்  கடுமையாக பணியாற்றி உள்ளனர். மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்றப்படிதான், புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது. இது மிகப்பெரிய தொலைநோக்கு திட்டம் மட்டுமின்றி, நாட்டையும் அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும்.


நமது இளைஞர்கள் மாற்றத்திற்காக முழு அளவில் தயாராக உள்ளனர். கல்வியை பொறுத்தே நமது எதிர்காலம் அமையும். நமது நாட்டின் தலைவிதியை மாற்றும் கொள்கையாக இது அமையும். நமது நாட்டின் விடுதலைக்கு முன்பாக,  சிறந்த கல்வியை பெறுவதற்காக வெளிநாடுகள்  சென்றோம். தற்போது, வெளிநாட்டினர் நமது நாட்டிற்கு வந்து படிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.


அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இந்தாண்டு முதல் மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC) மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் EWS (OC) 10% இடஒதுக்கீடு...

 


சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நடப்பு ஆண்டு முதல் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பு பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கான முக்கிய முடிவை எடுத்துள்ளது.


இதுதொடர்பாக கடந்த 26ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த பிரச்சினைக்கு ஒரு பயனுள்ள தீர்வை அளிக்க சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, இந்த முடிவு அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, எம்.பி.பி.எஸ், எம்.டி, எம்.எஸ், டிப்ளமோ, பிடிஎஸ், எம்டிஎஸ் படிப்புகளில் நடப்பு கல்வியாண்டு முதல் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த முடிவால் ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை மருத்துவப் படிப்பில் கிட்டத்தட்ட 1,500 இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், முதுகலை பட்டப்படிப்பில் 2,500 இதரபிற்படுத்தப்பட்ட மாணவர்களும், இளங்கலை மருத்துவப் படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சுமார் 550 முன்னேறிய வகுப்பு மாணவர்களும், முதுகலைப் பட்டப்படிப்பில் சுமார் 1,000 பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பு மாணவர்களும் பலன் பெற உள்ளனர்.


இதனால், மொத்தமாக கிட்டதட்ட 5,550 மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் பின்தங்கிய பிரிவினருக்கும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய, முன்னேறிய வகுப்பு பிரிவினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக  சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



இன்றைய (30-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 30, 2021




மனதில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் மூலம் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத தேவையற்ற செலவுகள் ஏற்படும். தாயின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பணியாட்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அஸ்வினி : குழப்பங்கள் நீங்கும்.


பரணி : செலவுகள் ஏற்படும்.


கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 30, 2021



சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சில அனுபவங்களின் மூலம் புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : தனவரவுகள் கிடைக்கும்.


ரோகிணி : இன்னல்கள் குறையும்.


மிருகசீரிஷம் : புதுவிதமான நாள்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 30, 2021



உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் வழியில் ஆதரவான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்கள் நீங்கி தெளிவுடனும், புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.


திருவாதிரை : முன்னேற்றம் உண்டாகும்.


புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------




கடகம்

ஜூலை 30, 2021



உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும்.  தம்பதிகளுக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சில சலுகைகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



புனர்பூசம் : எண்ணங்களை அறிவீர்கள்.


பூசம் : உதவிகள் கிடைக்கும்.


ஆயில்யம் : ஆதரவான நாள்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 30, 2021



உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


பூரம் : விழிப்புணர்வு வேண்டும்.


உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




கன்னி

ஜூலை 30, 2021



மனதில் இனம்புரியாத குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காலதாமதமாக கிடைக்கும். புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தகவல் தொடர்புத்துறைகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



உத்திரம் : நெருக்கடியான நாள்.


அஸ்தம் : காலதாமதம் உண்டாகும்.


சித்திரை : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




துலாம்

ஜூலை 30, 2021



குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும். எதிர்பாராத செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



சித்திரை : திருப்தியான நாள்.


சுவாதி : நெருக்கம் அதிகரிக்கும்.


விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 30, 2021



தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான உதவிகள் கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் சிலருக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



விசாகம் : ஆதாயம் உண்டாகும்.


அனுஷம் : நிதானம் வேண்டும்.


கேட்டை : அனுகூலமான நாள். 

---------------------------------------




தனுசு

ஜூலை 30, 2021



தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். மாணவர்கள் பாடங்களை கவனத்துடன் படிக்கவும். கொடுக்கல், வாங்கலில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். பிள்ளைகளால் அலைச்சல்களும், சிறு சிறு விரயங்களும் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



மூலம் : தனவரவுகள் கிடைக்கும்.


பூராடம் : முதலீடுகள் மேம்படும்.


உத்திராடம் : விரயங்கள் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

ஜூலை 30, 2021



தந்தையின் எண்ணங்களை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



உத்திராடம் : ஆதாயமான நாள்.


திருவோணம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.


அவிட்டம் : ஆரோக்கியம் மேம்படும்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 30, 2021



மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இழுபறியான பிரச்சனைகளுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதரர்களின் வகையில் அனுசரித்து செல்வதன் மூலம் மேன்மை உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அவிட்டம் : தன்னம்பிக்கையான நாள்.


சதயம் : மேன்மை உண்டாகும்.


பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மீனம்

ஜூலை 30, 2021



உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும்.

வாழ்க்கைத்துணையின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



பூரட்டாதி : அனுகூலமான நாள்.


உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.


ரேவதி : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------


கல்வித் தொலைக்காட்சியில் (Kalvi TV) 29-07-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு (VIII Standard) காணொளிகள்...

 


கல்வித் தொலைக்காட்சியில்  29-07-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்:


💥  தமிழ் - இயல்1 - பகுதி 1- விரிவானம் - சொற்பூங்கா அறிமுகம் - https://youtu.be/ulhlR4xhOoE



 💥 ஆங்கிலம் - UNIT 1 - GRAMMAR 

Types of nouns, pronouns verbs - 

https://youtu.be/93RwgqwjZmg



 💥 கணக்கு - அலகு 1- பகுதி 1- எண்கள் - விகிதமுறு எண்களை அறிதல் - எண் கோட்டில் குறித்தல் - தசம எண்ணாக எழுதுதல் - https://youtu.be/Ayc-J2KHPPk



💥 அறிவியல் - அலகு 1- நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் - https://youtu.be/2rSx94jRsjI



💥 சமூக அறிவியல் - அலகு 1- புவியியல் - பாறை மற்றும் மண் - https://youtu.be/KqUvgBsGzg8


கல்வித் தொலைக்காட்சியில் (Kalvi TV) 29-07-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான அறிவியல் பாடக் காணொளிகள் (Science Videos)...



 கல்வித் தொலைக்காட்சியில் 29-07-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான அறிவியல் பாடக் காணொளிகள்...



1st Standard - அலகு 1 – உயிருள்ள, உயிரற்ற பொருட்கள் - https://youtu.be/yBcy1o_kaIQ



2nd Standard - அலகு 1 – நமது சுற்றுச்சூழல் -  https://youtu.be/BfDT7xOwfk0



3rd Standard - அலகு 3 – விசை - பாகம் 2 - https://youtu.be/jxapbBsO-V4?t=2929



4th Standard - அலகு 3 – பருப்பொருள் மற்றும் பொருள்கள் - ஒளி கசியும், ஒளி புகும், ஒளி புகாப் பொருள்கள் - ஒளி எதிரொளிப்பு - பகுதி 3 - https://youtu.be/jxapbBsO-V4?t=4732



5th Standard - அலகு 4 – அன்றாட வாழ்வில் அறிவியல் - https://youtu.be/MS1lGii02m4



6th Standard - அலகு 2 – விசையும் இயக்கமும் - https://youtu.be/V-6OBmRJZjU



7th Standard -  அலகு 2 – விசையும் இயக்கமும் - வரைபடங்களில் குறித்தல் மற்றும் விளக்குதல் - பகுதி 2 - https://youtu.be/hl3AUTG__rk?t=31



தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் 02.08.2021 முதல் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் இணை செயல்முறைகள் ந.க.எண்: 004010/ஜெ1/2020, நாள்: 26-07-2021...



தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் 02.08.2021 முதல் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளிக் கல்வி  ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு (All Teachers Come to School from 02.08.2021 School Education Commissioner & Elementary Director Proceedings)...


>>> பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் இணை செயல்முறைகள் ந.க.எண்: 004010/ஜெ1/2020, நாள்: 26-07-2021...



தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் 02.08.2021 முதல் 100% பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்


பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளில் 2021-22ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மாணாக்கர் சேர்க்கைப் பணிகளை அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள பொதுவான நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளைப் ( SOP ) பின்பற்றி அனைத்து தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மாணாக்கர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக , ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய தெரிவிக்கப்பட்டு இருந்தது. 


பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகளில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை மாணவர்கள் பயன்படுத்துவதற்கான அறிவுரைகள் , ஒப்படைப்புகள் வழங்குதல் மற்றும் ஒப்படைப்புகளை மதிப்பீடு செய்து பதிவேடுகளில் பதிவு செய்து பராமரிப்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.


 இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் , பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளுடன் , தாமே தன்னார்வத்துடன் தமது பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டினை மேம்படுத்திடும் வகையில் Google Meet , Zoom , Teams , Whatsapp , Telegram போன்ற இணைய வழி கற்பித்தல் முறையினை கையாண்டு வருவது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகும் . இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் பாராட்டுக்குரியவர்கள் ஆவர்.


தற்போது மாணவர்கள் சேர்க்கைப் பணி , பள்ளிக் கால அட்டவணை தயாரித்தல் , விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான நலத்திட்டங்கள் வழங்குதல் , பள்ளி வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களை தூய்மை செய்தல் , மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ஒப்படைப்புகள் ( Assignments ) வழங்கி அவற்றை மதிப்பீடு செய்தல் மற்றும் மதிப்பீடு செய்த விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்து பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 02.08.2021 முதல் நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிந்து பணிபுரிவதற்கு தேவையான அறிவுரைகளை அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் மாற்றுத்திறனாளிகள் , புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் , இருதய நோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளவர்கள் , மற்றும் Covid-19ஆல் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருப்பவர்கள் முதலான ஆசிரியர்கள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு உரிய ஆவணங்களை அளிக்கும் பட்சத்தில் , சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே சார்ந்த ஆசிரியர் பள்ளிக்கு தினமும் வருகை புரிவதிலிருந்து விலக்கு அளித்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


 >>> பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் இணை செயல்முறைகள் ந.க.எண்: 004010/ஜெ1/2020, நாள்: 26-07-2021...



பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களின் பெற்றோருக்கு "சேர்க்கை ஒப்புகைச் சீட்டு (Admission Acknowledgement)" வழங்கும் வசதி - EMIS Websiteல் சேர்ப்பு...

 பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களின் பெற்றோருக்கு "சேர்க்கை ஒப்புகைச் சீட்டு (Admission Acknowledgement)" வழங்கும் வசதி - EMIS Websiteல் சேர்ப்பு...


EMIS Students Admission Reg :  

Students --> Students admission வாயிலாக  மாணவர்களுக்கு New entry Create செய்தபின் (அல்லது) மாணவர்களது விபரத்தை எமிஸ் தளத்தில் Common Pool பகுதியில் இருந்து Admit செய்தபின், மேற்கண்டவாறு தோன்றும் Admission Acknowledgement படிவத்தை பதிவிறக்கம் செய்து பெற்றோர் மற்றும் தலைமையாசிரியர் கையொப்பமிட்டு, பெற்றோருக்கு அளிக்க வசதி தரப்பட்டுள்ளது.  - TNEMIS






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

How to Update General Profile, Enrollment Profile & Facility Profile of Students on UDISE + Site

 மாணவர்களின் General Profile, Enrolment Profile & Facility Profile விவரங்களை UDISE + தளத்தில் Update செய்யும் வழிமுறை Procedure to Updat...