பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27-08-2024 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27-08-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம்: காலம் அறிதல் குறள் எண்490 கொக்குஒக்க கூம்பும் பருவத்து; மற்று அதன் குத்து ஒக்க சீர்த்த இடத்து. பொருள்: பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப்போல அமைதியா இருக்க வேண்டும்; காலம் வாய்த்தபோது அதன் குத்துப் போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும். பழமொழி : Better to bend the neck than bruise the forehead. தாழ்ந்தது நின்றால் வாழ்ந்து நிற்பாய். இரண்டொழுக்க பண்புகள் : *கல்வி அறிவோடு கலைத்திறனும் மேம்பட எம் பள்ளியில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன். * எனது பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் பெருமை தேடித் தரும் வகையில் நல்ல மாணவனாக நடந்து கொள்வேன். பொன்மொழி : கல்வி என்பது ஒரு செலவு அல்ல. அது ஒரு முதலீடு என்று நாங்கள் நம்புகிறோம். –லிண்டன் பெய்ன்ஸ் ஜான்சன் பொது அறிவு : 1. சிவப்பு இரத்தச் செல்களின் ஆயுட் காலம்: விடை:100 - 120 நாட்கள். 2.மாமரத்தின் சிற்றினப் பெயரைக் குறிப்பிடுக. விடை: இண்டிகா English wo